அத்தியாயம்-29
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
பாரதியிடம் சௌந்திரராஜன் மணிமேகலை இருவருமே தன் பக்கத்தில் அமர்த்தி, “ஒரு வேளை சரவணன் ஆப்டர் மேரேஜ் ஏதாவது குத்தி காட்டி பேசி, கேரக்டரை தப்பா பேசினா என்ன செய்வ? ஏன்னா… ரஞ்சித் உன்னை விரும்பியதா சொன்ன பையன். ஆனா பிரஷாந்த் உன்னை பொண்ணு பார்த்துட்டு போனதும் கோபத்துல மடத்தனத்தை பண்ணினான்.
பிரஷாந்த் நல்லவனா வந்து பொண்ணெல்லாம் பார்த்துட்டு பிறகு உனக்கு நடந்ததை கேட்டு திரும்பி போயிட்டு, திரும்பி வந்தான்.
இந்த சரவணனுக்கு உன்னை பத்தி தெரியும். நாளைப்பின்ன ஏதாவது காரணத்தால சண்டை வந்து உன்னை பேசிட்டா.” என்று கேட்டதும், பாரதி இருவரை கண்டு, “ஏம்மா… எனக்கு நல்லதே நடக்காதா?
சொல்லிக் கொள்ளற மாதிரி வேலையில் இருக்கறவங்க எல்லாம் கெட்டவங்களா மாறி கொச்சையா வார்த்தை விடுவாங்கன்னு நினைக்கறிங்களா?
இந்த இடத்துல தான் மா இந்த அழகான காதல் பூக்குது.
உங்களுக்கு சரவணன் மேல வராத நம்பிக்கை. எனக்கு வருதுன்னா… அது தான் காதல். எனக்கு தெரியும் அவன் அப்படி நடந்துக்க மாட்டான்.
சப்போஸ்… உங்களுக்கு அந்த பயம் இருக்குன்னா… கவலையேப்படாதிங்க.. சரவணனை மட்டும் நம்பி என் வாழ்க்கை இல்லை. படிப்பு இருக்கு. நான் நல்ல வேலையில் இருக்கேன். என்னை நான் பார்த்துப்பேன். அந்த தெளிவு இருக்கு. அப்பறம்… சரவணன் மேல நம்பிக்கை இல்லாம நீங்க பேசியதுக்கு, நான் உங்களுக்கு தர்ற திருப்திக்கரமான பதில். மத்தபடி சரவணன் என் மனசுக்கு ரைட் சாய்ஸ்” என்று இமை மூடி ஆத்மார்த்தமாக உரைத்திடவும் பெற்றவர்கள் மனம் சமாதானம் அடைந்தது.
இந்த யுகத்தில் பெண்கள் தனித்து நின்று கூட வாழ்ந்து காட்டுவார்கள். சரவணன் அவதூறு சொற்கள் வீசினாலே, அல்லது அவளை ஏதாவது பேசினால் கூட மகள் அதற்கேற்றவாறு தாங்கும் வல்லமை உண்டென முடிவெடுத்தார்கள்.
முடிவெடுத்தப்பின் மனம் மாறிடுமோ என்ற அச்சத்தில் பாரதியே வெகு விரைவில் திருமணத்தை வைக்க அவளாகவே கூறினாள்.
சரவணனோ “பாரதி கையில கொஞ்சம் காசு சேர்த்து வச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கறேனே. இப்ப அனிதாவை வேற காலேஜில சேர்க்கணும்” என்று கூறியவனிடம், “எனக்கு ஆடம்பரமா கல்யாணம் வேண்டாம் சரவணா. திருப்பதில கல்யாணம் பண்ணிக்கலாம். அவ்ளோ தூரம் வேண்டாம்னா இங்க வடபழனி முருகன் கோவில்ல பண்ணிப்போம். ரிசப்ஷன் மட்டும் வச்சிக்கலாம் ப்ளீஸ்.” என்றாள்.
“முருகன் கோவிலிலேயே கல்யாணம் பண்ணிப்போம். உனக்கு தான் முருகனை பிடிக்குமே.” என்றான். திருமணத்திற்கு சம்மதம் என்று பேச்சில் உரைத்தான்.
“அய்யோ சரவணா… முருகனுக்கு சரவணன் என்ற பெயரை வச்சி அன்னிக்கு உதாரணம் சொன்னேன். மத்தபடி முருகன் தான் என் பேவரிட் காட்னு அர்த்தமில்லை. எனக்கு எல்லா கடவுளும் ஒன்னு தான். எல்லா மதமும் ஒன்னு தான். இந்த சாதி-மதம், பணக்காரன்-ஏழை, கருப்பு-சிவப்பு எந்த வேறுபாடு எனக்கில்லை. உனக்கிருந்தா.. சொல்லு. ப்ரைன் வாஷ் பண்ணிடறேன்” என்று சிரித்தாள்.
“ம்கூம்… அக்கா… அதுக்கு அண்ணனுக்கு ப்ரைன்னு ஒன்னு இருக்கணுமே.” என்று அனிதா வந்து சேர்ந்தாள்.
“ஏய்.. அனிதா.. காலேஜ் போகவும் வாய் நீள்துல உனக்கு” என்றான் சரவணன்.
பாரதி பார்க்கவும், “ஏன் நீயும் காலேஜிக்கு போ. உனக்கும் வாய் நீளட்டும்.” என்று கல்லூரி படிவம் ஒன்றை எடுத்து தரவும், “இன்னா விளையாடறியா. நான் சரிப்பட்டு வரமாட்டேன்.” என்று ஓடப்பார்த்தவனை, அழவைத்து ஃபார்மை பூர்த்தி செய்ய வைத்தாள்.
“இது எதுக்காம்?” என்று கேட்க, ப்யூட்சர்ல எதுக்காவது யூஸ் ஆகும் சரவணா. ஒரு பொண்ணு நான். எந்த கஷ்டம் வந்தாலும், பேஸ் பண்ண நிற்கறேன்னா முக்கிய காரணம் என் படிப்பு, என் வேலை, என் சம்பளம் முக்கிய காரணம். அப்படியிருக்க கஷ்டப்பட்டு யாராயிருந்தாலும் ஒரு டிகிரி முடிக்கறதுல தப்பில்லையே.
உன் தங்கச்சி B.com எடுத்திருக்கா. நீயும் இப்பவே கரஸ்ல போட்டா, அவ உனக்கு சொல்லி தருவா. அப்படியே படி. எப்ப பாரு அவளை படின்னு அதட்டுற, நீயும் படிச்சு பாரு” என்றாள்.
“அவ சொன்னா புரியாது.” என்று மறுக்க, “அவ சொல்லி தரலைன்னா நான் டீச் பண்ணறேன்” என்று கூற, “அப்ப சரி” என்றான்.
திருமணத்திற்கு கோவிலில் பதிவு செய்தபடி, இதற்கும் அனுப்பிவிட்டு மணநாளிற்காக காத்திருந்தார்கள்.
இதோ அதோ என்று நாட்கள் வேகமாய் நடையிட்டு திருமண நாளும் வந்தது. அதுவரை போனில் காதலித்தார்கள்.
சொந்தக்காரர்களில் பாதி பேர் பையன் பார்க்க சரிதான்.
ஆனா படிப்பு இல்லையா?
வேலை ஏதோ க்ளினிங் டிப்பார்மெண்ட் கவர்மெண்ட் உத்தியோகமா?
அதென்ன உத்தியோகம்?
அவங்க சாதி என்ன?
நம்மாளு இல்லையா?
லவ் மேரேஜா?
ஏன் மதினி இதெல்லாம் சரிவராதுன்னு சொல்லலையா?
அட… எப்படி சம்மதிச்சிங்க?
பையன் அம்மா பேசற பாஷை லோக்கலா இருக்கு?
என்னது சொந்த வீடு இல்லையா?
என்ன சித்தி பாரதிக்காவுக்கு இன்னும் நல்லதா பார்த்திருக்கலாம்.
பாரதிக்கு ஏன் இந்த டேஸ்ட்?
இப்பலாம் பெத்தவங்க பேச்சை யாரு கேட்கறா?
கட்டிக்கலைன்னா வீட்டை விட்டு போறேன்னு சொல்லிருப்பா.
எல்லாம் பணத்துக்காக தான் அந்த பையன் கல்யாணம் பண்ணறான்.
நீங்க எழுதி வச்சிக்கோங்க எண்ணி ஆறு மாசத்துல இது விவாகரத்துல தான் போய் நிற்கும்.
இப்பலாம் வீட்டுக்கு ஒரு காதல் கல்யாணம் பண்ணிக்கறாங்க. நாம என்ன நாட்டாமை பண்ணறது.
கல்யாண சாப்பாடு போட்டா போய் சாப்பிட்டுட்டு வந்துடறது தான்.” என்று திரும்பும் திசையெல்லாம் பேச்சு ஒலித்தது.
அதையெல்லாம் மீறி சொற்ப நபர்கள் சிலரே நிறைவாய் வாழ்த்தினார்கள்.
பாரதிக்கு திருமணம் என்றதே பெற்றவர்களுக்கு நிறைவை தர எல்லாவற்றையும் மனதாங்கலோடு ஏற்றார்கள்.
பாரதி செவிக்கு கூட சென்றடையாமல் மனதை தயார்படுத்தி நின்றாள்.
சரவணன் கூட, அடிக்கடி உம்மென்று இருக்க, “ஹலோ க்ளீன்… நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இனி சோகமா இருந்தா இதெல்லாம் நடக்காம போகாது. சிரிங்க க்ளீன்.” என்றாள்.
அவன் தொழிலை வைத்து க்ளீன் சொல்வதாக எண்ணிக் கொண்டான்.
விமலாவிடம் கூட சிலர், ‘பெரிய இடத்து பொண்ணை பிடிச்சிட்டான். இனி வீட்டுப்பக்கம் தலை வைக்க மாட்டான்’ என்றார்கள். அதற்கு விமலாவோ ‘தலை வைக்கலைன்னா போவுது. கால் மட்டும் வச்சிட்டு போட்டும். பையன் நல்லா இருந்தா சரி’ என்று மூக்கை உடைத்தார்.
சிலர் எல்லாம் ‘எதுக்கு சொல்லறேன்னா அனிதா இப்ப தான் படிக்குது. இனி வீட்டை சரவணன் பார்க்கலைன்னா பாவம் அவளுக்கும் உனக்கும் யார் கஞ்சி ஊத்துவா’ என்று உச்சு கொட்டினார்கள்.
‘ம்கூம் அனிதா படிக்கறதே அந்த பொண்ணு பாரதி துட்டு தருது. இப்ப இன்னாவாம். இதுங்க வூட்டான்ட போய் நிற்க போறேன்னா. என்ன டி இது. பேசாதவளுங்க கூட நம்ம மேல அக்கறை செலுத்தறாளுங்க.’ என்று தான் திட்டி தீர்த்து கருவினார்.
ஒருவழியாக புகைப்படங்கள் சில எடுத்து ஓய்வுப் பெற்று அமர்ந்தனர்.
சரவணன் தான் “உன் ஆபிஸ் பிரெண்ட்ஸ் ஏதாவது சொன்னாங்களா?” என்று கவலையாக கேட்டான்.
“ஹலோ க்ளீன்… என்ன பிரச்சனை உங்களுக்கு.” என்று கேட்டு நின்றாள். சற்று நேரமெடுத்து, “ஒன்னும் தெரியாதவளா அமைதியா இருந்து லவ் பண்ணிருக்கா பார்றேன்னு சொன்னாங்க.’ அப்பறம்… சரவணன் நல்லா தான் இருக்கார்னு சொன்னாங்க. காதலிச்சு கல்யாணம் என்மதால் சிலர் மட்டும் என்ன ஜாப் அதுயிதுனு கேட்டிருப்பாங்க. சொல்லி வச்சது போல க்ளீனிங் டிபார்ட்மெண்ட்ல மட்டும் சொல்லிருக்கு” என்று கூறி சிரித்தாள்.
“நீ தான் ப்யூட்டி பார்லர் கூட்டிட்டு போய் முகத்துல என்னென்னவோ போட்டு வாஷ் பண்ணினாங்களே. லேசா கலர் கொடுத்திருப்பேன்.” என்றதும் பாரதி சிரிக்க, சரவணன் மெதுவாக, “ஆனா என்னயிருந்தும் இந்த அழகு வரலை அப்படியே கோவில் சிலை மாதிரி, அப்படியே டைல்ஸ் மொழு மொழுனு பாலீஸா இருக்குமே.” என்றதும் பாரதி பார்வையால் சரவணனை ரசிக்க, “ஸப்பா… என்ன பார்வை இது. அப்படியே கொக்கி போட்டு இழுக்கு. தொபக்கடீர்னு விழுந்துட்டேன். எந்திரிக்கவே முடியலை.” என்றவன் உதட்டை கண்டு தடுமாற, பாரதி வெட்கப்பட்டு பார்வையை தாழ்த்தினாள்.
“அண்ணா… அண்ணியை கூப்பிட்டுட்டு சாப்பிட சொன்னாங்க ராஜன் மாமா” என்றுரைத்தாள் அனிதா.
படிக்கட்டில் நடந்தேறி செல்ல, கலாவோ அப்பொழுது தான் சாப்பிட்டு கீழேயிறங்கி வந்தார்.
“சாப்பிட்டிங்களா அக்கா.” என்று கேட்க, இருவரையும் ஒருசேர பார்த்து, யாருமில்லை என்றதும், பாரதி மேவாயை தொட்டு, “தங்கத்துல ஒரு குறை இருந்தா கூட அதோட தரத்துல ஒரு குறையும் இருக்காது. நீ அந்த தங்கம் மாதிரி. இந்தா இந்த சரவணன் தங்கத்தை வடிவமைக்க கூட என்னத்தையோ கலப்பாங்களே…??? ஆஹ் துத்த.. இல்லை.. தாமிரம்”
“ம்ம்ம தாமிரம் தான்” என்று பாரதி எடுத்து தர, “ஆஹ்… அது மாதிரி தான். தங்கத்தை கடினமா மாத்தி நகையா மாத்த உதவும்.
நீங்க இரண்டு பேரும் சேர்ந்ததால ஒருத்தர் ஒருத்தருக்கு குறைஞ்சிட மாட்டிங்க. கூடுதலா மெருக்கேற தான் செய்விங்க. என்ன இந்த ஊரும் சமுதாயமும் தான் நீங்க வாழ்ந்து முடிக்கற வரை ஏதாவது சொல்லிட்டே இருக்கும். அதுக்கு எல்லாம் நின்னு நிதானமா பதில் சொல்லி வருந்திட்டு இருக்காதடி செல்லம். திரும்பி பார்க்காம வாழ்க்கையை பார்த்துட்டு போயிட்டே இருக்கணும். அப்ப தான் பேசினவங்க எல்லாம் உன்னை திரும்பி பார்த்து பெருமைப்படற மாதிரி இருப்பிங்க.
ஏதோ… எனக்கு தெரிந்த விதத்துல உங்களை வாழ்த்திட்டு, வாழ சொல்லறேன்.
ஏன்னா என்னை இப்படி பேசற கூட்டம் இந்த சமுதாயத்துல நிறைய இருந்தது. ஆனா நல்லா தான் இருக்கேன். நிம்மதியா இருக்கேன். இங்க நம்ம வாழற வாழ்க்கை நிம்மதியா இருக்கான்னு மட்டும் பார்த்துக்கோ. நிம்மதிய இழந்து எப்படி வாழ்ந்தும் பிரோஜனம் இல்லைடி கண்ணு.” என்று கூறினார்.
“எக்கா… அதெல்லாம் தெரியாதா.” என்று சரவணன் கட்டிப்பிடிக்க, “அக்கா… நான் ஒரு வாட்டி.. கட்டிப்பிடிக்கவா?” என்று பாரதி கேட்டு முடிக்க கலாவே கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.
“எக்கா… இன்னா பண்ணற நீ.” என்று சரவணன் பதற, “இன்னாடா முத்தம் கொடுக்க கூடாதா? ஏதே..நீ மட்டும் தான் தரணுமா என்ன?” என்று பேச, பாரதி சிரிப்புடன் வெட்கத்துடன் லேசான நடுக்கத்துடன் சரவணனை ஏறிட்டாள்.
“அய்யோ… அக்கா.. பெரிய கும்பிடு. நாங்க சாப்பிட போறோம். வெத்தலபாக்கு பையை வாங்கிட்டு கிளம்பு. முத்தம் வச்சப்ப வெத்தலை போட்டியோனு தான் தடுக்க பார்த்தேன்.” என்றான்.
“அட… அது இனி தான் போடணும். இந்தா பீடா கையில வச்சியிருக்கேன் பாரு.” என்று கூறி சாப்பிட அனுப்பினார்.
சரவணனோ முத்தம் கித்தம்னு என்ன பேசுது. இதுல கன்னத்துல வேற” என்றவன் பார்வை பாரதியை காண அவளோ வெட்கம் தயக்கம் என்று காதலுடன் அமர்ந்திருந்தாள்.
‘முருகா… முருகா.. முருகா…’ என்று யாமிருக்க பயமேன் என்னும் சரவணனே உச்சரிக்க துவங்கினான்.
உள்ளத்துடன் போராடும் உணர்வுகள் இருவரின் மனதை வெளிச்சமிட்டு காட்டுகின்றதே.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2perum Nala purichchu nadanthupanga interesting
Wow happy married life to the. Couples. Fantastic narration sis
Interesting
மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 29 Pre-Final)
அப்பாடா.. ! எல்லாருடைய பேச்சுக்களையும், தடைகளையும் மீறி ஒருவழியா கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு.
இனி அடுத்து என்ன ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 eppdiyo marriage mudinjachu yaar enna pesinaal enna evanga nalla vaazdhu kaatradhula dhan eruku super 😘
Super super super super super super super super super super super super ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
Super super 👏
Nice going
Super super super super super super super super super super super super
கலா கா, நீ சூப்பர் கா!!..
oru valiya kalyanam mudinchiduchi santhosam . kala akka solra mari yar pechaium kathula vangama neenga unga vazhkaiya nalla padiya vazhunga