Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-3

90’s பையன் 2k பொண்ணு-3

ரி-ஷி-வா-3

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அங்கிருந்த மாடியில் ஒருவித வெட்கமும் தயக்கமுமாய் வந்தான் ரிஷிவேந்தன்.

மாடியில் சந்தியா கையை கட்டி நேரெதிராய் காண, ரிஷி வேந்தனோ முட்செடிளாக காட்சியளிக்கும் செடிகளை கண்டான்.

“என்னங்க இது? வெறும் முட்செடியா வளர்த்து இருக்கிங்க. இதெல்லாம் ஒரு வகை கள்ளிச்செடி தாங்க. இதை போய் வளர்க்கறிங்க. நம்ம கண்ணுக்கு குளிர்ச்சியா ரோஜா, மல்லி, செம்பருத்தி, முல்லைனு போடுங்க. காலையில மாடிக்கு வந்தா இந்த முட்செடியெல்லாம் பார்த்தா மனசு எப்படிங்க ரிலாக்ஸ் ஆகும்.” என்று வந்தது எதற்காக என்று மறந்து பேசினான்.

“அது என் தங்கை ஷிவாலி வளர்க்கறது.” என்று விட்டேந்தையாக கூறினாள்.

‘ஓ… அந்த பொடி டப்பியா…’ என்று மனதில் எண்ணி சந்தியாவை காண ஆரம்பித்தான்.

அவளோ எதிர் வீட்டை கண்டு கண்ணீர் உகுத்தி எட்டி எட்டி பார்த்தாள்.

“யாராவது தெரிஞ்சவங்க பார்க்கறாங்களா. ஷையா இருந்தா கீழே போயிடலாம். எனக்கு பெரிசா என்ன பேசறதுனு தெரியலை. கல்யாணத்துல ஓகேனா நாம பொறுமையா பேசி பழகலாமே?” என்று அவளுக்கு தான் ஓகேவா இல்லையா என்ற பதிலை மறைவாய் கேட்டான்.

“என்னங்க ஓகே வா.. நான் ஓகேயில்லையா?” என்று இழுத்து கேட்டான்.

இம்முறையும் பதில் இல்லை. கடவுளே ஒருவேளை ஆமானு முன்ன மண்டைய மண்டைய ஆட்டியிருப்பாளோ.?’ என்று தலை சொறிந்து சுற்றி முற்றி பார்த்து, “ஏங்க… என்னங்க பேச இவ்ளோ தயக்கம்.” என்று முன்னே வர, தாரை தாரையாய் கண்ணீர் வெளிவர, நின்றதை கண்டான்.

“அய்யோ அழுவறிங்களா… நான் ஏதோ காதலிச்சு ஏமாத்தின மாதிரி புசுபுசுனு அழுவுறிங்க. இங்க பாருங்க நான் எதுவும் பேசலை. கீழே போயிடலாம். அப்பா அம்மா பேசி முடிச்சி எங்க வீட்டுக்கு வந்தப்பிறகே பேசிக்கறேன்” என்றதும் சந்தியா கூடுதலாக அழுதாள்.

“இங்க பாருங்க வந்ததிலருந்து பேசலை. அழுவறிங்க… சொல்லிட்டாவது அழுங்க” என்று கத்தவும், “அய்யோ கத்தாதிங்க.” என்று சந்தியா அமைதியானாள்.

“அப்ப சொல்லிட்டு அழுவுங்க” என்று ரிஷி டென்ஷன் ஆனான்.

“எதிர் வீட்ல ஹரிகரன் என்று ஒருத்தர் இருக்கார். பேட்சுலர் தான். அவரை நான் லவ் பண்ணறேன். அப்பா அம்மா என்னை அதட்டி உருட்டி இந்த கல்யாணத்துக்கு ஒப்புக்க சொன்னாங்க.

இல்லைனா கரனை போலிஸ்ல கம்பிளைன் பண்ணி சூசைட் பண்ணிடுவோம்னு அப்பா மிரட்டறார். எனக்கு அப்பறம் ஷிவாவை யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்களாம். என்னென்னவோ பிளாக்மெயில் பண்ணறார்.

என்னால ஒன்னும் பண்ண முடியலை.” என்று கூறவும் ரிஷி அதிர்ந்தான்.

எதிரேயிருந்த வீட்டில் ஹரிகரன் ஜன்னல் அருகே தவம் இருப்பதை கண்டான்.

“ஏன்க… அதுக்கு என்னை கல்யாணம் பண்ண தலையாட்டிட்டிங்களா? என்னங்க நீங்க அவர் என்ன ஜன்னலில் இருந்து உங்களுக்கு நான் மேட்சிங்கானு ஜோடிப்பொருத்தம் பார்க்கறாரா?

அவரை லவ் பண்ணிட்டு என்னை கல்யாணம் பண்ண எப்படிங்க முடியும்.” என்று கூறினான்.

“என்னால ஒன்னும் பண்ண முடியாது. அப்பாவா புரிஞ்சிக்கணும். இல்லை நானா வீட்டை விட்டு போய் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி ஓடிப் போகணும்.” என்று விசும்ப, ரிஷியோ வேகமாக கீழே வந்தான்.

ராமமூர்த்தியோ ரிஷி பேரண்ட்ஸோடு பேசினாலும் பதட்டமாய் இருக்க ரிஷி வேகமாய் வரவும், எழுந்து விட்டார்.

“என்ன தம்பி?” என்று பேச, “சார்… உங்க பொண்ணு லவ் பண்ணறா தெரியும் தானே. பிறகெதுக்கு என்னை போன்றவனை வரச் சொல்லறிங்க.

என்னை தரகர் தானே போட்டோ கொடுத்து இங்க தெரிய வச்சது. அந்த தரகரை நம்பி கட்டி வைக்கிறிங்க. உங்க பொண்ணு அவளா பேசி பழகி மனசால அவன் தான் லைப் பாட்னர் என்று முடிவெடுக்க ஏன் அதை அக்சப்ட் பண்ண முடியலை.

செத்துடுவேன்னு பிளாக் மெயில் பண்ணறிங்களாம். ஏன் சார் மனசுல ஒருத்தனை சுமந்து என்னோட எப்படி சார் குடுத்தனம் பண்ணுவா? போலியா சிரிக்கணுமா? போலியா ஆத்மார்த்த தம்பதியா நடிக்கணுமா?

வேண்டா விருப்பமா ஒரு பொண்ணை தொட்டா அது பாலியல் வன்முறைக்கு சமம் சார்.

மரியாதையா அவ விரும்பின பையனுக்கு கட்டி வையுங்க.” என்று பெண் வீட்டாரிடம் கூறினான்.

“அம்மா போலாம் மா. எத்தனையோ முறை மேரேஜ் டிராப் ஆகியிருக்கு. கண்ணுக்கு தெரியாதா ராகு கேது சனிபகவான் கட்டம் அதுயிதுனு விளையாடிச்சு. இப்ப கண்ணுக்கு தெரிந்து இவர் விளையாடியதா நினைச்சிக்கறேன்” என்று கூறி வெளிநடப்பு செய்ய மனோகரி வேதாச்சலம் என்று மாறி மாறி வியப்பாய் சந்தியாவையும் மகன் மருமகளையும் பார்த்து நின்றனர்.

வெளியே வந்ததும் மூன்று ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர்.

“ரொம்ப ஆசையா போனேன். இந்த முறை ஜாதகம் பொருந்தி நல்லபடியா செட்டாகுதுனு. இப்படி ஆகிடுச்சு.

ஆனா ஒன்னு டா. நீ பேசியது சரி. பெருமையா இருக்கு” என்று சரண்யா தோளை தட்டி மகிழ, கண்ணபிரானோ, ஆமா டா.. எல்லாம் சரி.” என்று கூறினார்.

“அடப்போங்க மாமா எப்படியும் அந்த பொண்ணுக்கு வேற வரன் பார்த்து அடுத்த முறை மாப்பிள்ளையோட பேசாம கட்டி வைப்பாங்க.

அதே போல நாளைக்கு இன்னொரு பெண்ணும் ரிஷிக்கு பார்த்தா அவளும் லவ் பண்ணிருக்கலாம் யார் கண்டா. இப்பெல்லாம் லவ் பண்ணாத பொண்ணுங்களே இல்லை.” என்று குமார் கூற, கவிதாவோ மகன்கள் இருவரையும் அறையில் விளையாட கூறியதால் அவர்கள் காதில் விழாத வண்ணம் எட்டி பார்த்துக் கொண்டார்.

ஹரிஷோ சரிகாவிடம் தண்ணிர் கேட்க எடுத்து வர சென்றாள். “ஓகே மாமா நான் கிளம்பறேன்.” என்று எவ்வித கருத்தும் கூறாது சென்றார்.

   சாப்பிட்டு போக கூற, “நீ குழம்பு மட்டும் எடுத்துட்டு வா” என்று செல்ல முடிவெடுத்தான்.

    கவிதா குமார் இருவரும் தேனீ மாவட்டம் என்பதால் பிள்ளைகளுக்கும் விடுமுறை என்பதால் தங்கினார்கள்.

      ரிஷிவேந்தனோ, இதுக்கு முன்ன பார்க்காமலே தட்டி கழிச்சது. இப்ப போய் வந்து தட்டி கழியுது. இனி இந்த சொந்தமும் சுற்றமும் உன்னை ஒதுக்கி வைக்க போறாங்க’ என்று கவலையாய் கண்ணாடி பார்த்தான்.

      சாப்பிடாமல் வயிறு காட்டு கத்தல் விடுத்தது.

     “ம்மா.. பசிக்குது.” என்று கூற தோசை வார்த்திட செய்தார் சரண்யா.

    ரிஷிக்கு முன்னே வருண் வாசு இருவரும் “ஆச்சி எனக்கும் பசிக்குது” என்று ஆளாளுக்கு தட்டை உருட்ட, பேரன்களுக்கு முதலில் உணவை வைத்தார்.

    2k kids கூட கல்யாணம் ஆகிடும் 90’s தோசை கொடுக்க கூட அல்லல் பட வைக்குறிங்களே டா’ என்று புலம்பினான். வாழ்க்கை முழுவதும் புலம்பலாக போயிவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் அழுத்தியது. சாப்பிட்ட தோசைகள் ஒரு பக்கம் வயிற்றில் நிரம்ப, ‘அப்பாடா.. பசிச்சா முதல்ல சாப்பிட்டடுணும் இல்லை தலை வெடிச்சிடும். இனி எதுக்காகவும் சோறை தட்டிக் கழிக்க கூடாது’ என்று டிவி பார்க்க ஆரம்பித்தான்.

      கவிதா குமார் தூங்க சென்றனர், வருணும் வாசுவும் கண்ணபிரானிடம் கதை கேட்க அறையில் சென்றனர்.

  சரண்யா மகனின் அறையில் நுழைந்து, “என்னடா கண்ணா கவலையா இருக்கா.” என்று கேட்டார்.

     “சேசே இல்லை மா. இன்னமும் இப்படியெல்லாம் இருக்கறவங்களை நினைச்சா வேதனையா இருக்கு.

    பாவம் அந்த பொண்ணு. நான் யாரு எவனோ ஒருத்தன், என்னிடம் அவ காதலை சொல்லி அழுவறா. கேட்கற எனக்கு கஷ்டமாயிருக்கே அவங்க அப்பா அம்மாவுக்கு கஷ்டமாயில்லை?” என்று கேட்டான் ரிஷி.

     “பாவம் தான். ஆனா அவங்க அப்பா அம்மா பொண்ணு ஆசையை முட்டுக்கட்டையா நின்னு உயிரை வச்சி மிரட்டி கல்யாணம் பண்ணறாங்கனா அவங்க நிலை என்னவோ.

   இந்த ஊர் உலகம் சொந்தம் பந்தம் வாயுக்கு வந்ததை பேசும் யா? உனக்கு தெரியாது நாக்கு இருக்கே வாளை விட கூர்மையானது.

     இதயத்தை குத்தி கிழிக்குற மாதிரி கேள்வி கேட்பாங்க. அந்தந்த வயசுல அந்த அந்த வலி புரிப்படும். நாளைக்கு அந்த பொண்ணு அம்மாவா ஆனா அவங்க அப்பா அம்மா சமூகத்துக்கு ஏன் பயப்படறாங்கனு புரியும்.” என்று பேசவும் ரிஷி தாய் மடியில் படுத்து கொண்டான்.
  
    “ஏன் மா அந்த ஏஜ் வந்தா தான் அந்த வலி புரியும். இந்த ஏஜை கடந்து போன அவங்களுக்கு இந்த வலி புரியாதா?” என்று கேட்டு விட்டான்.

      “அப்படி புரிந்துக்கறவங்க தான் இப்ப காதல் கல்யாணத்தை ஆதரிக்கறாங்க. இப்ப எல்லாம் காதல் கல்யாணம் அதிகரிக்குதே.

   நீயும் லவ் பண்ணி மேரேஜ் பண்ணுவனு நினைச்சேன். நீ இன்னமும் அம்மா முந்தானையே பிடிச்சிட்டு இருக்க” என்று சரண்யா சிகை கோத “போங்கம்மா… நான் எல்லாம் அவுட்டாப் ஸ்டாக் ஆகிட்டேன்.” என்றதும் அவன் வாயிலே போட்டார்..

     “அதெல்லாம் என் பையனை கட்டிக்க ஒருத்தி வானத்துல இருந்து குதிப்பா” என்று சரண்யா கூறி மகனை சாந்தப்படுத்தினார்.
  
    “ஆமா ஆமா குதிச்சிட்டாலும் போ மா காமெடி பண்ணாம, இன்னிக்கு ஒருத்தி குண்டு தூக்கிப் போட்டுட்டு போயிருக்கா. அந்த ஒருத்தி வருவதற்குள்ள நான்… கிழவ.. வேணாம் விடு” என்று உறங்கினான் ரிஷி வேந்தன்.

-சட்னி சாஸ் அலப்பறைகள் தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “90’s பையன் 2k பொண்ணு-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!