ஆலி-30
சைதன்யன் தன் ஓட்டு வீட்டின் அமைதியில் வந்து வசந்திடம் பேசிக் கொண்டிருந்தான்.
திடீரெனத் தன் இடையைக் கட்டிக்கொண்ட கையைக் கண்டதும் சைதன்யன் முகத்தில் வெற்றியும் நிம்மதியும் அளவில்லா சந்தோஷமும் அடைந்தான்.
“என்ன டா.” என்றான் ருத்ரேஷை பார்த்து, “சாரி அண்ணா… உனக்கு எவ்ளோ வலித்திருக்கும். தருணேஷ் அண்ணா மனசு காயப்படக் கூடாதுனு மறைத்திருப்ப, ஆனா அதுவே உன்னைக் காயப்படுத்த நிறைய விஷயத்தை ஏற்படுத்திடுச்சு.
உன் இடத்துல நானோ தருணேஷ் அண்ணாவோ இருந்தா நிச்சயம் இப்படி யோசிக்க மாட்டோம். தவறாக நடந்து அன்றைக்கே காயப்படுத்தி அனுப்பியிருப்போம். யூ ஆர் ரியலி கிரேட் அண்ணா.” என்று அழுதான்.
“டேய் இங்க பாரு அழறியா… எங்க அவன் அறிவுகெட்டவன். ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணியிருக்கறப்ப இப்படித் தான் சொல்வாங்களா? முதலில் அழுவறதை நிறுத்து.” என்று பயந்தான்.
“எனக்கு ஒன்றும் ஆகலை. ஐ அம் கம்பிளிட் ஆல்ரைட். ” என்றான்.
“இல்லை டா கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கணும். இந்த டிராவலே பண்ண கூடாது. நீ கல்யாணத்துக்குத் தான் வரமுடியாம சூழ்நிலை பண்ணிடுச்சு. அதான் இந்த விஷேசத்திற்கு அழைத்து வந்தேன்.
இங்க பாரு… நான் உன்னை ஏற்றுக்கொண்டது நிஜமாவே எனக்குத் தம்பி இருந்தா நல்லாயிருக்கும் பீல் பண்ணியிருக்கேன். அதனால தான் உன்னைப் பார்த்ததும் எனக்குப் பிடிச்சது.”
“அப்போ தருணேஷ் அண்ணாவை ஏற்றுக்க மாட்டிங்களா?” என்றதும்.
“வயசில் நீ சின்னவன் சில விஷயம் இலகுவாக அதுவொரு காரணமா மறக்க முடியும். அவன் என்னோட ஏஜ். எங்களுக்குள் அண்ணன் தம்பி என்பதை விடப் போட்டி தான் இருக்கும். உனக்குச் சொன்னா புரியாது. பட்.. சண்டையெல்லாம் வராது போதூமா.” என்று சைதன்யன் விளக்கம் கொடுத்தான்..
அம்மாவையும் கூப்பிட மாட்டிங்க அப்படித் தானே?” என்றான்.
இம்முறை அகமேந்தி மல்லிச்செடி அருகே நடந்தவள் காதில் விழவும் “ருத்… நீ ஏன் அடிக்கடி ஐ லவ் யூ அம்மா.. ஐ லவ் யூ அண்ணி… ஐ லவ் யூ அண்ணா.. இப்படிச் சொல்லற…?” என்றாள்.
“அது தருண் அண்ணா சொல்வார். அப்படியே பாலோவ் பண்ணிட்டேன். ஏன் அண்ணி…?” என்று பேச அதே நேரம் கல்பனா பாட்டி ப்ரியங்கா தருணேஷ் வருணியை அழைத்து ஓட்டு வீட்டுக்கு மலர்ச்செடியை எல்லாம் பார்வையிட வந்தார்கள்.
“உனக்கு எப்படி ஐ லவ் யூ சொல்லற பழக்கமோ இங்க சில சைத்தானுக்கு அம்மாவை பெயரிட்டு அழைப்பது வழக்கம்.
எங்க பெரியத்தைப் பார்க்க சீதா மாதிரி இருப்பாங்க. பெயர் தேவி. அவங்க பையன் எப்பவும் தேவி தேவி என்று தான் அழைப்பார்.” என்று கூறி ப்ரியங்காவை பார்த்தாள்.
“சரியா அத்தை…? மாமா எப்பவாது சொல்லியிருப்பாரே…?” என்று கேட்டதும் நினைவுகள் தோன்ற கண்கள் ஆனந்த கண்ணீர் சுரக்க ஆம் என்று தலையசைத்தார்.
“நீங்க லேட் பிக்கப் அத்தை நீங்களே இப்படின்னா சிலர் எல்லாம் எப்பவோ…?” என்று சைதன்யன் தருணேஷை பார்த்து வைத்தாள்.
ருத்ரேஷ் சைதன்யனின் கன்னத்தில் ஏக்கி முத்தம் வைத்து லவ் யூ அண்ணா.” என்று ஓடினான்.
ப்ரியங்கா “நீ என்றைக்கும் பெரியவன் தான். வயசுல இல்லை. பையனா…” என்று மகிழ்ந்து செல்ல வருணிகா பின்னாடியே சென்றாள்.
வருணி சென்றதும் தருணேஷ் தனக்கென்ன வேலை என்பதாய் பின் தொடர்ந்தான்.
கல்பனா ஆச்சி தங்கள் வீட்டிலே மற்ற எல்லோரும் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.
வித்யாதரன் தான் மாப்பிள்ளைக்கு அந்த ஓட்டு வீடு பிடிச்சிருக்கு அங்கயே தங்கிடுவார்.” என்று விளக்கமளித்துச் சென்றார்.
“வருணி மாடிக்கு வாயேன்” என்று தருணேஷ் அனுப்ப, “இடியட் கூட ருத்ரேஷ் அங்க தானே இருக்கான். இங்க அத்தை என்னோட பேசிட்டு இருக்காங்க. மரியாதையா தொந்தரவு பண்ணாம தூங்குடா.” என்று அனுப்பி விட்டு ப்ரியங்காவுக்குத் தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தாள்.
சைதன்யனோ மெத்தையில் அமர்ந்து அகமேந்தி பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளோ மேஜை டிராயரை திறந்து ஓட்டியாணம் கண்ணாடி வளையலும் அணிந்து கொண்டிருந்தாள்.
“இப்ப என்ன பண்ணற” என்றான்.
“இல்லை அன்னிக்கு அந்தக் கிழவி இதெல்லாம் செட் பண்ணி போயும். உனக்கும் எனக்கும் ஒன்றுமே நடக்கலைனு சொல்லி ஒரே அட்வெய்ஸ். தம்பி நல்ல பையனா இருக்கு. நீ என்னவோ கோபமா கிடக்க, எதுவாயிருந்தாலும் பொருத்து போ அவன் உன்னை உள்ளங்கையில தாங்குறாப்ல தெரியுதுனு கிழவி சொல்லிச்சு. அது எப்படி நான் அவ்ளோ ப்ரிப்பர் பண்ணியும் கண்டுபிடிச்சது. அதான் இன்னிக்கு டெஸ்ட் பண்ணிடணும்.” என்றாள்.
“நம்ம வயசு அவங்க அனுபவம் ஸ்வீட்ஹார்ட். புரியாம போகுமா. பட் இன்னிக்கு தூக்க மாத்திரை இல்லாமலே தூக்கம் வருது.. குட் நைட்” என்று மெத்தையில் உருண்டான்.
“அடேய் சைத்தான்… எழுந்திரு… உனக்கு இந்த அட்மாஸ்பியர்ல தூக்கம் வருதா.. சுத்தி மல்லிச்செடி வாசம் இழுக்கலை.” என்று அவன் நெஞ்சில் அடிக்கத் துவங்கினாள்.
அவளிடம் செல்லமாக அடிகளை வாங்கியப்பின் அவளைத் தனக்குக் கீழ் கொண்டு வந்தவன் பார்வை அதரத்தில் நோக்கியது.
வானத்தில் இவர்களை நிறைமதி எட்டி பார்க்க, நிலவை மேகம் திரையிட்டு மூடியது.
2 வருடங்களுக்குப் பிறகு….
தருணேஷ் அந்த அலுவலகத்தில் சுழல் சேரில் அமர்ந்து கணிணியை விடுத்துப் போனில், “ஆமா என்கேஜ்மெண்ட் இப்பனா… கல்யாணம் எப்போ டி. நீ தான் மனத்தத்துவம் படிக்கிறயே என் மனநிலை என்னனு சொல்லு” என்றான்.
வருணிகாவோ சிரித்துக் கொண்டே மறுமுனையில், “ம்ம்ம் எப்படா எங்கண்ணா கட்டிக்கொடுப்பார். என்னை உங்க வீட்ல உரிமையா தீண்டலாம்னு காத்திருக்க. அது உன் வயசு கோளாறு. நம்ம கல்யாண கனவு கண்டு என்னைக் கிஸ் பண்ணற மாதிரி இமேஜினேஷனில் இருப்ப, சரியா உன் ஆபிஸ்ல சைதன்யன் சார் ஒரு வேலையை ஏவிவிடுவார். எங்கண்ணா வசந்த் அதைச் சொல்ல வந்து உன்னைச் செக் பண்ணுவார். நீ அய்யோ முறைச்சா இந்த வருணிகாவை கட்டி கொடுக்க மாட்டாரேனு ரொம்ப நல்லவனா சீன் போடுவ.” என்றாள்.
வருணிகா ஆசைப்பட்டது போல நர்ஸ் வேலையை விடுத்து மனத்தத்துவம் படிக்க ஆரம்பித்தாள்.
அதற்கான கால நேரம் கடந்தது. அதே நேரம் சைதன்யன் தனது அலுவலகத்தில் முன்பு போலவே பணியில் அமர்த்தினான். அவனின் வேலையைப் பொருத்து திருமணத்துக்குப் பரிசாகத் தனது கம்பெனியின் மற்றொரு கிளையைப் பரிசாக வழங்கவே இந்தப் பணிப்பொறுப்பு.
அதுவும் வசந்த் மேற்பார்வையில் சில நேரம் முனங்கினாலும் வருணிகா சொல்லியது போல வருணி கிடைக்க வேண்டுமென்று தன் மது பப் என்று ஒதுக்கி சைட் அடிப்பதை கூட நிறுத்தி விட்டுப் போனில் தற்காலத்திற்குக் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றான்.
“என்ன பண்ணிட்டு இருக்க, அப்பத்திலருந்து சேரில் இராட்டினம் மாதிரி சுத்தற… அங்க பாரு அந்தப் பொண்ணு உன்னைப் பார்த்து சிரிக்கிறா” என்று வசந்த் கூறவும் எதிர்பக்கம் எந்தப் பொண்ணு என்ற நோக்கில் எட்டிப்பார்க்க, வசந்த் கையைக் கட்டி குறுகுறுவெனப் பார்க்க, கண்களைக் கணிணியில் பதித்தான்.
வாயோ, என்னைக் கண்காணிக்க இவன் தனிச் சிசிடிவி வைச்சிருக்கான் சைத்தான் என்று என்றும் போல முனங்கி பார்வையைத் தேடினான்.
அண்ணன் தம்பி என்பது முறையிட்டு அழைப்பதை விட இவர்கள் அக்னி நட்சத்திரமாகத் தனித்து இருந்தும் காட்டிக் கொண்டனர். தருணேஷ்கு முன்பை விடச் சைதன்யன் மேல் ஏதோ ஒர் மதிப்புக் கூடுதலாக அவனுமே விரும்பி எட்டியிருந்து பழக ஆரம்பித்தான். கொஞ்சி குழையவும் வேண்டாம். சண்டையிடவும் வேண்டாம். இதே புரிதல் போதுமெனக் கடந்தான்.
வருணி படிப்பு முடிய என்கேஜ்மெண்ட் மற்றும் அடுத்த மாதத்தில் திருமணம் என்ற வரிசையில் சைதன்யன் சொல்ல வசந்த் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான். இவனுக்குத் தான் காதலிக்க நேரம் கிடைத்த வாய்ப்பாக எண்ணினான்.
ருத்ரேஷ் தனது பனிரெண்டாம் வகுப்பில் பரீட்சை எழுதி அதன் ரிசல்டிற்காகக் காத்திருக்கின்றான்.
முன்னவிடச் சற்று வளர்ந்து சைதன்யனின் சிறுவயது உருவமாக நின்றான்.
அகமேந்தியோ தற்போது ஆறுமாத சிசுவை வயிற்றில் ஏந்தி, அலுவலகத்ததில் மற்றவரை ஏவி பணியை நியமிக்கும் சைதன்யனை அகமேந்தி ஏவிக்கொண்டு தனக்குப் பிடித்த உணவை தயாரிக்கச் சொன்னாள்.
தன்னவளுக்காக வீட்டில் சேவகனாக மாறவே இந்தக் காதல் உள்ளமும் தவிக்க அவளுக்காக ஆப்பிளை தோல் சீவி, நீட்ட வாக்கில் ப்ரெஞ்சு ப்ரை பொட்டேட்டோ போல ஆப்பிளை அறிந்து நீட்டினான்.
வித்யாதரன் அடுத்த மாதம் மகளுக்கு வளைகாப்பு வைக்கலாமா என்று சைதன்யன் வீட்டுக்கு வர இந்தக் கண் கொள்ளா காட்சியில் அகம் மகிழ்ந்தார்.
மழையானது எப்படியும் முத்தமிட பூமிக்கு வந்து தனது தடத்தை, ஒர் தூறலில் மண்ணில் சுவடு பதிப்பது போல இவர்கள் வாழ்விலும் மகிழ்ச்சி என்ற மழை சுவடு பதிக்கும்.
-முற்றும்-
*தருணேஷ் வருணிகா மேரேஜ் எழுதினா எப்பவும் போல இருக்கும். அதான். எப்படியும் வருணி படிப்பு முடிய திருமணம். அதே மாதிரி ருத்ரேஷ் அடுத்துக் காலேஜ் சேருவான். இப்ப ஆறுமாதமா இருக்கிற அகமேந்திக்குப் பையனா பொண்ணா ஏதொவொன்று பிறக்கும். 😜
ஓகே நாம பேசலாம். யாரெல்லாம் தருணேஷை திட்டினீங்க… யாரெல்லாம் சைதன்யனை திட்டினிங்க. இப்ப மாறியதா…? எல்லாருடைய பாயிண்ட் ஆப் வியூல எல்லோருமே நல்லவங்க தான். என்ன நமக்கு அவங்க என்ன காரணத்தில் இப்படி நடக்கறாங்கனு தெரிந்தா புரிந்துக்கொள்வோம். தெரியவில்லையென்றால் தவறானவர்களாகப் புலப்படு
வாங்க. அவ்ளோ தான். 😌
நிறை குறை இருந்தா சொல்லுங்க.
🙏😊.
நன்றி
பிரவீணா தங்கராஜ்.

Yes really a very good story. Dharunesh I scold very much. Sainthu cool hero. Unique way of narration sis. Agi cutie pie. Ruthresh little kid with cute emotions. Altogether very intresting story sis. Another diamond to ur crown sis. Keep rocking sis.
Really superb story padichi konja naal aanathum maranthuten again Niyabagam vanthuduchi. S crt avanga avanga point of view avanga panrathu crt kathai vera mari strat twist vachi last la alaga ellaraium serthu vachitinga superb . Mostly yaraium pirikama serurathu tha unga kathaila high light next difference irukum oru oru kathaikum .
Superb sisy congratulations 👏🏻👏🏻👏🏻👏🏻
Nice ending sis… O
Yetho oru soolnilai thaaa oruthavangala nallavanavum kettavanavum kaatum…. So ithula villan ah thitturathula thappu illaiye.. Avanoda sollnilai avan villan avlothaaa