பிரியமானவரே என் தேவதூதனே!
அத்தியாயம்-1
கேரளாவின் ஈரமான காற்று தேவாலய வளாகத்தை மெதுவாக வருடியது.
பழமையான வெள்ளை சர்ச், உயர்ந்த மணி கோபுரத்தின் மேலிருந்த சிலுவை, சூரிய ஒளியில் மின்னியது.
வெள்ளை லில்லி பூக்களின் வாசனை முழு தேவாலயத்தையும் நிரப்பியிருந்தது.
சார்லஸ் சூட் அணியாத நிலையில், வெள்ளை சட்டை ப்ளு பேண்ட் போட்டபடி வெளியே நின்றான்.
அவனது கையில் ஒரு சிறிய பைபிள் இருக்க, கண்ணில் பதட்டம்.
சர்ச் வளாகத்திற்கு வெளியே ஒரு கார் வந்து நின்றது.
அதிலிருந்து சார்லஸின் முன்னால் காதலி துகிரா இறங்கினாள்.
துகிரா வேறு யாருமில்லை. சார்லஸின் தங்கை மெர்ஸியின் தோழி. அவளை ஒருதலை பட்சமாக காதலித்தவன், துகிராவை மணக்க கேட்டான். ஆனால் துகிரா தாயற்ற தனது அக்கா குழந்தை அமுல்யாவுக்கு தாயாக மாற முடிவெடுத்து, அக்கா கணவரான இஷானையே மணந்துவிட்டாள். அது வேறு கதை.(வேண்டுமின்னா கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே கதையை பிரதிலிபி மற்றும் ப்ரீமியம் சைட்ல இருக்கு)
அதனால் சார்லஸ் காதல் படுதோல்வி அடைந்துவிட்டது. இத்தனைக்கு அமுல்யாவுக்கு அன்னையாக, துகிரா இருப்பது நல்லதென துகிராவுக்கும், இஷானுக்கும், ஒரு மனநல மருத்துவனாக பாடமெடுத்து சேர்த்து வைத்ததில் பெரும்பங்கு சார்லஸ் தான். அந்தளவு நல்லவனே.
இன்று முன்னால் காதலி துகிரா வந்திருப்பது சார்லஸின் திருமணத்திற்கு தான்.
ஒரே சர்ச்சில் தோழி மெர்ஸிக்கு மேத்யூ என்பவருடனும், சார்லஸுக்கு மேத்யூவின் தங்கை சாரா என்பவளுடனும், பொண்ணு எடுத்து பொண்ணு கொடுத்து மணக்க போவதால், அத்திருமணத்திற்கு துகிரா வந்திருந்தாள். தனித்தனியாக தான் திருமணம் நடத்திட நினைத்தார்கள். அதிலும் ஒரு சிறு பிரச்சனை இருந்தது. சார்லஸ் எங்கே மணப்பதற்கு பதிலாக மறுப்பானோ என்று மேத்யூ தான் தங்கை மீது இருக்கும் அக்கறையில் இன்றே வைத்திட முடிவெடுத்தார்கள்.
சார்லஸ் இவ்வளவு நேரம் துகிராவுக்காக தான் காத்திருந்தான். அவளை வரவேற்க எண்ணி அவளை கண்டான். துகிரா இஷானின் மனைவி என்ற ரீதியில், அவள் அக்கா குழந்தையை அவள் குழந்தையாகயாகவே எண்ணி அழைத்து வருவதை கண்டு மனதார வரவேற்றான்.
“வாங்க இஷான்… சென்னையிலிருந்தே கார்ல வந்துட்டிங்களா? தங்கை மெர்ஸி இப்ப வரை இங்க தான் இருந்தா. பிரைடல் மேக்கப் பண்ணிட்டு இருந்தவங்க சடனா கூப்பிடவும் அவசரமா போனா. உள்ள வாங்க.
நீ எப்படியிருக்க துகிரா? ஹேய் அமுல்யா குட்டி? எப்படி இருக்கிங்க? நீங்க இப்ப பஸ்ட் ஸ்டாண்டர்ட் எக்ஸாம் எல்லாம் முடிச்சதா கேள்விப்பட்டேன்.” என்று மூவரையும் வரவேற்றான். இஷான் மகளை தூக்கியிருக்க,”ஆமா அங்கிள்..” என்று சிரித்தாள்.
துகிராவும் இஷானும் முகமலர்ந்து, “யா… லாங்க டிராவல்னா எனக்கு பிடிக்கும். அதான். உங்களுக்கு கல்யாணம் நீங்க என்ன இங்க வரவேற்க நிற்கறிங்க” என்றதும், “உங்களை வரவேற்க தான் வந்தேன்” என்றான் சார்லஸ்.
துகிராவோ “ஓ சார்லஸ்.. இந்த மெர்ஸி பண்ணின வேலையா? ஏன் இப்படி பண்ணறா. நீங்க ஆகவேண்டியதை பாருங்க. நாங்க என்ன வேற்று ஆளா. அதெல்லாம் வந்துடமாட்டோமா?” என்றாள் துகிரா.
“இல்லை.. மெர்ஸி சொல்லலை. நான் தான்… உங்களை வரவேற்க நின்றேன்.” என்றான். இஷான் பார்க்கவும், “மேரேஜிக்கு இன்னமும் நேரமிருக்கு” என்று கைகடிகாரத்தை பார்த்து முடித்தான்.
துகிராவோ “நான்... அவங்களை பார்க்க முடியுமா? உங்க மனைவியாக போறவங்களை?” என்று ஆர்வமாய் கேட்டாள்.
சார்லஸிற்கு துகிரா கேட்டதும் மறுக்க முடியுமா? “இந்த சர்ச்க்கு பக்கத்துல ஒரு ஹால் அங்க தான் மணமகள் ரூம்.” என்று சுட்டிக்காட்டியவன், ஒரு நிமிடம் தயங்கி, “வாங்க… நானே அழைச்சிட்டு போறேன்” என்று முன்னே நடந்தான்.
இஷான் மகளை தூக்கி நடக்க, துகிரா பின்தொடர்ந்தாள். “ஆக்சுவலி நானும் மேத்யூவும் தயாராகிட்டோம்.
மெர்ஸி கூட ஆல்மோஸ்ட் கிளம்பியிருப்பா.” என்று நடக்க, “சார்லஸ் வெட்டிங் கோர்ட் போடில்லா” என்று மலையாளம் மிக்ஸ்டு தமிழில் ஒருவர் கேட்க, “கொஞ்ச நேரம் கழிச்சு போட்டுக்கறேன்.” என்று பதில் தந்தான்.
அதற்குள் கடந்து வந்தவர்கள் எல்லாம் புன்னகைத்து கை குலுக்கி நடந்து வர, அங்கே ஒரு அறை இருந்தது.
கதவை தட்ட முனைய, அதுவோ திறந்திருந்தது.
“எண்டே அம்மே… நான் பிரைடல் டிரஸ் வாங்கும்போ என்கு அந்த ஸ்டோன் வச்ச க்ரவுன் வேண்டுமின்னு பரஞ்சதே? அந்த ஆள் தலையதலைய ஆட்டி இப்போ இப்படி கொடுத்திட்டு நான் எந்து செய்யு?
எண்டே ஜீவிதத்தில் நான் கல்யாணம் கழிச்சிடுவது ஒரு தடவை மட்டும் அல்லே… எண்டே விவாகம் எனக்கு ஹாப்பி மெமரி இருக்கணுமே?
எனிக்கு இஷ்டம் போலே அதே ஸ்டோன் க்ரவுன் பதிஞ்சில்லிலே, என்ட மனசு எந்தி வேதனைக்கும். ப்ளீஸ் அம்மே… இப்ப உடனே இங்க அந்த க்ரவுன் வேண்டி பறையு” என்று மணமகள் சாராவின் குரல் ஒலித்தது.
“வரேன் ஏட்டி(மாப்பிள்ளை வந்திருக்கார்) என்று குரல் தர, சாரா திரும்பாமல் நின்றாள்.
“இங்கன நான் சம்சாரிக்கறதை மாத்த முயற்சி பண்ண… கேட்டோ… அவரா இங்க வரில்லே” என்றாள் சாரா.
சார்லஸ் தொண்டைமை செருமவும், திரும்பியவள் “அச்சோ… நீங்களேண்ணோ வந்தே? இங்கயெல்லாம் வரில்லே அல்லே?” என்று இங்கல்லாம் நீங்க வரமாட்டிங்களே என்ற ஆச்சரியத்தில் கேட்டாள்.
அப்படியே துகிராவை கண்டதும், “ஓ… துகிரா சேச்சி” என்று சாரா மகிழ்ந்தாள். அந்த ஒரு வார்த்தையிலேயே சாராவிற்கு துகிராவை பற்றி கூறியிருப்பது புரிந்தது.
சாரா உடனடியாக துகிராவை கட்டியணைத்து நின்றாள்.
” என்னை பத்தி சொல்லியிருக்கிங்களா சார்லஸ்?” என்று துகிரா சார்லஸிடம் கேட்டாள்.
சார்லஸ் பேச வாய்த்திறக்கும் முன் “ஓ.. துகிரா சேச்சி. உங்களே பத்தி மெர்ஸி அண்ணி பறைஞ்சது. இவரெங்கிலும் என்னிட சம்சாரிக்கில்லா?” என்று புகார் தந்தாள். சார்லஸ் எல்லாம் தன்னிடம் கூறவில்லை மெர்ஸி தான் உரைத்தது என்று கூறியது மட்டுமில்லாமல் மணப்பெண்ணிடம் சார்லஸ் பேசாததை இங்கே பொதுவில் கூறிவிட்டாள். இல்லையில்லை… போட்டு கொடுத்து நின்றாள் சாரா.
சார்லஸ் விழித்தபடி நிற்க, “நீ எறிக்கு. கல்யாணத்தின்னு சமையமாயி. பின்னே நீ நின்னிட்டே பாரதவிட்டே கூடி ஆயிருக்கு” என்று ‘சார்லஸிடம் பிறகு பேசு, தற்போது திருமணத்திற்கு தயாராகு’ என்று ஒரு பெண்மணி கூற, சார்லஸோ வெளியே இருப்பதாக கூறி வந்தான். துகிரா மற்றும் இஷான் புன்னகையுடன் வெளியேறினார்கள்.
“என்ன சார்லஸ்… சாராவோட பேசவேயில்லையா?” என்று துகிரா கேட்க, இஷான் அவர்கள் பேச்சை வேடிக்கை பார்த்தான்.
“நீ வேற.. பேச விட்டா தானே. இப்ப கூட பாரு. கல்யாணத்துக்கு நான் மேத்யூ மெர்ஸி தயாராகிட்டோம். ஏதோ அவ இஸ்டத்துக்கு ஸ்டோன் வச்ச க்ரவுன் கேட்டிருந்தா போல. அது லேசா மிஸ் ஆகுதுனு அதே வேண்டும்னு அடம் பண்ணிட்டு இருக்கா. என்னை பேச விடறதில்லை. இதுல நான் பேசறதேயில்லைனு எனக்கு நெருக்கமா இருக்கறவங்களிடப் எல்லாம் புகார். இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னா அம்மா அப்பா கேட்கலை. மெர்ஸி வேற முறைக்கற. இதுல மேத்யூ வேற… என் தங்கையோட நீங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சா, நான் உங்க தங்கையை மேரேஜ் பண்ணுறேன்னு சொல்லிட்டார். ஒரே டைம்ல இரண்டு கல்யாணம் இடைவெளியிட்டு நடத்தலாம்னு இந்த பெரிய சர்ச்ல வந்தாச்சு.” என்று புலம்பாத குறையாக கூறினான்.
“சோ ஸ்வீட் தெரியுமா? பொண்ணு போட்டோவுல விட நேர்ல அழகா இருக்காங்க. நல்லா ஜாலியான டைப்பா தெரியுது. உங்க லைப் இன்ட்ரஸ்டிங்கா மாறும் சார்லஸ்.” என்று வாழ்த்தினாள் துகிரா.
இஷானோ கிடைத்த கேப்பில் “எனக்கென்னவோ நீங்க பேசலை என்றது தான் உண்மை. இல்லைன்னா வந்ததும் வராததும் இதுக்கு முன்ன பேசி பழகாத எங்களிடம் புகார் தருவாங்களா? அட்வைஸ் எல்லாம் ஆப்போசிட் ஆட்களுக்கு மட்டும் தானா சார்லஸ்? உங்களுக்கு இல்லையா?” என்று இஷான் கொட்டு வைத்தான். இஷான் வாழ்வில் சார்லஸ் பக்கம் பக்கமா பேசி, துகிராவை மணக்க வைத்தது சார்லஸ் வேலை தானே.! அந்த கொடுக்கல் வாங்கலை இஷான் சந்தர்ப்பம் பார்த்து சொல்லி அடித்தான். (அவனும் வகடாக்கண்டன்ல)
“இஷான்.. சும்மா இருக்க மாட்டிங்க?” என்று துகிரா பதற, “சொல்லட்டும் துகிரா.. நான் சாராவிடம் இதுவரை சரியா பேசலை. அதான் உண்மை. இஷானுக்கு அட்வைஸ் பண்ணறப்ப, யார் வேண்டுமென்றாலும் யாருக்கும் அட்வைஸ் கொடுக்க முடியுது. ஆனா அந்த இடத்துல நிற்கறப்ப எவ்ளோ தடுமாற்றம் ஆகுதுனு பீல் பண்ண முடியுது.” என்று மனம் திறந்தான்.
இஷானிடமிருந்து துகிராவின் கையை பிடித்து அமுல்யாவை இறங்கிக்கொண்டே இஷான் சார்லஸிடம், “மனசு விட்டு பேசுங்க.. எதிர்தரப்புல இருப்பது உங்களோட பாதி. அதனால புரிஞ்சிப்பாங்க. ஏற்கனவே உங்க தங்கை துகிராவை பத்தி பேசியதால உங்க காதல் தோல்வி அவங்களுக்கு தெரிந்தும், இயல்பா வரவேற்குது அந்த பொண்ணு. சோ… புரிதல் இயல்பா அமையும். எனக்கென்னவோ நீங்க தான் ஸ்டெப் எடுக்கணும். கல்யாண வாழ்க்கை எல்லாத்தையும் மாத்திடும் சார்லஸ்” என்று அனுபவசாலியாக சிரித்தான் இஷான்.
சார்லஸோ மெதுவா சிரிக்க முயன்றான்.
பிறகு இஷானிடம் “தேங்க்யூ இஷான். மேரேஜிக்கு துகிராவை அழைச்சிட்டு வந்ததுக்கு.” என்றான்.
“அவ வராம இருந்தா நீங்களும் உங்க தங்கை மெர்ஸியும் கோபப்படுவிங்களே?” என்று கூறினான் இஷான்.
“மெர்ஸி கோபப்படுவா. நான் வருத்தப்படுவேன். நீங்களும் துகிராவும் ஒன்னா சேர்ந்து வாழ ஆரம்பிச்சதா கேள்விப்பட்டேன். எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா” என்றான்.
இஷான் புன்னகைத்தான். இவர்கள் பேசிக்கொண்டிருக்க, அமுல்யா துகிராவை இழுத்து மெர்ஸியை காண சென்றியிருக்க, மெர்ஸியுடன் துகிரா மனம்விட்டு பேசி சிரித்தனர். மெர்ஸி சேலை தான் அணிந்திருந்தாள். தலையில் மட்டும் கீரிடம் ரீத் அலங்கரித்தது.
அந்த நேரத்தில் சர்ச் கதவு திறந்தது.
சாரா வெள்ளை கவுனில் நடந்து வந்தாள்.
ஒரு நிமிடம் அங்கே அமைதி சூழ, சார்லஸ் அவளை பார்த்தான்.
வெள்ளை லில்லி, பச்சை இலைகள் அலங்காரம் செய்த வுட்டன் பியூஸ் மற்றும் மெழுகுவர்த்தி வாசனை அவ்விடத்தை ஒளிமயமாக்கியது. கூடுதலாக அங்கே கிறிஸ்தவ பாடல் ஒலித்தது. அதெல்லாம் பார்க்க மனதகற்குள் நாயகி வருகையாக பாவித்தான் சார்லஸ்.
பாதர் முன்பு, இரண்டு ஜோடிக்கான இருக்கைகள் இருந்தது. அதில் இடதுபக்கம் சார்லஸ்-சாராவும், வலதுபக்கம் மேத்யூ-மெர்ஸியும் அமர்ந்திருந்தார்கள்.
இரண்டு குடும்பத்தின் பிரார்த்தனை அங்கே ஹாலில் நிரம்பி வழிந்தது.
இஷான் துகிராவை அழைத்து ஒரமாய் அமர்ந்து வேடிக்கை பார்க்க, அவ்விடத்தில் மின்னு கட்டும் தருணம் ஆரம்பமானது.
தேவாலயத்தின் உள்ளே ஒரு ஆழ்ந்த அமைதி.
சோர் மெதுவாக பாடிக் கொண்டிருந்த கீதம் மெதுவாக தாழ்ந்தது. மெழுகுவர்த்தியின் ஒளி மட்டும் அசைந்தது. லில்லி பூவின் வாசனை காற்றில் கலந்திருந்தது.
பிரைஸ்ட் குரல் மெதுவாக ஒலித்தது.
அங்கே மோதிரம் மாற்றி ஓயினில் அப்பத்தை தொட்டு ஊட்டி, இருவரிடமும் ஒப்புதல் பெற்றதெல்லாம் கனவு போல நிகழ்ந்தது.
“இப்போது மின்னு கட்டும் சடங்கு” என்றதும் மெர்ஸி தலைக்குனிந்து நின்றாள்.
சாராவின் தலையோ சார்லஸை குறுகுறுவென பார்த்தது. அவள் பார்க்கவும் சார்லஸின் கைகளில் சிறிய நடுக்கம். வெள்ளை கவுன் மேல் விழுந்திருந்த வெயில் மெதுவாக அசைந்தது.
சாராவின் அம்மா முன்னே வந்து, ஏழு நூல்களால் பின்னப்பட்ட அந்த மின்னு நூலை சார்லஸின் கையில் வைத்தார்.
அதே போலவே மெர்ஸி வீட்டில் அவளது தாயும் செய்தனர்.
அந்த நூல் வெறும் நூல் இல்லை.
அவர்கள் வளர்த்த பெண்ணின் முழு வாழ்க்கை.
மேத்யூ அந்த நூலை வாங்கி மெர்ஸியின் கழுத்தில் கட்டினார். தங்க சிலுவை போட்டது நெஞ்சில் உரசியது.
சார்லஸும் அவனது மின்னு நூலை வாங்கும்போது அவன் விரல்கள் சற்று நடுங்கின.
ஒரு நொடி அவன் பார்வை சாராவைத் தொட்டது.
வெயில் பின்னால் இருந்தாலும், அவள் கண்கள் மூடியிருந்தன.
அவள் உள்ளத்தில் ஒரு ஜெபம் செய்திருக்க வேண்டும்.
‘கர்த்தரே… இவன் என் மனிதன் ஆகட்டும்.’ என்றதே.
சோர் குரல் உயர்ந்தது. சார்லஸ் மெதுவாக மின்னுவை சாராவின் கழுத்தில் வைத்தான்.
அந்த சிறிய தங்க சிலுவை அவள் மார்பின் மேல் தொட்ட நொடி,
அவள் மூச்சு சற்று தடைபட்டது.
அவன் நூலை மூன்று முடிச்சாக கட்டினான்.
முதல் முடிச்சு நம்பிக்கை.
இரண்டாவது பொறுப்பு.
மூன்றாவது என்றும் பிரியாத பந்தம்.
அந்த நொடியில்தான் சாராவின் கண்கள் ஒரு துளி கண்ணீர் கலக்கத்துடன் அவனை விழுங்குவது போல பார்த்தாள்.
சார்லஸ் அந்த கலக்கத்தை கவனித்தான்.
பிரைஸ்ட் குரல்களோ “இனி நீங்கள் கணவன்-மனைவி” என்று கூற,
சர்ச் பெல் வெளியே ஒலித்தது.
அதே போல இரண்டு பிரைட்டின் திருமணத்தையும் ரெஜிஸ்டர் செய்து கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்.
அதன் பின் தேவாலய பாடலை இசைக்க விட்டு, மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.
அதற்குள் அமுல்யாவிற்கு போரடித்திருக்க வேண்டும். இஷானை மகள் அழைத்து வெளியே வந்திருந்தாள்.
துகிரா மட்டும் தன் தோழி மெர்ஸி-மேத்யூ ஜோடியையும், சார்லஸ்-சாரா ஜோடியையும் பார்த்து ரசித்தாள்.
மெர்ஸி மிதமான அடக்கத்தில் இருக்க, மேத்யூவை இயல்பாக பார்த்து முறுவலிட்டாள்.
சாராவோ யாரும் கவனிக்காத நேரத்தில், சார்லஸை கண்டு உதடு கோணித்து, நாக்கை துருத்தி, விளையாட்டு காட்டிவிட்டு உடனடியாக யாரும் காணத வகையில் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்து பிளஸ் குறியிட்டை போட்டு முடிக்க, துகிராவுக்கு சிரிப்பு வந்தது.
ஏனெனில் சார்லஸ் கண்ணை விழித்து மிரண்டு மற்றவர்கள் பார்த்தார்களா என்று கழுத்தை சுற்றி முற்றி பார்த்து, துகிரா காணவும் பதறிக் கொண்டு தலைகுனிந்தான்.
‘கர்த்தரே.’ என்று ஓரவிழியில் சாராவை காண, சார்லஸ் திருமண வாழ்க்கை எதிரே ஒளிமயமாக தெரிவது போல கண்ணை கட்டியது அவனுக்கு.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
ஹாய்…
இந்த கதை என்னுடைய 101 வது கதை.
இன்னிக்கு ஈஸ்டர் என்பதால் புதுக்கதை பதிவிடறேன். ஏன்னா நம்ம சார்லஸ் கிறிஸ்டியன் அதனால நல்ல துவக்கமான நாளாக இன்று பதிவிடறேன்.
100 நாவலில் 100 வது நாவல் நேரிடை புத்தகமாக கொடுத்திருக்கேன். எப்ப பதிப்பாங்கனு தெரியலை. சில கதை மேகஸினுக்கு அனுப்பியிருக்கேன். Premium site la 90 கதைகள் இருக்கும். பாருங்க. பிரதிலிபிலயும் இலவசமா வாசிக்கலாம்.
புதிதாக வாசிக்க வந்த வாசகர்களாக இருந்தா கமெண்ட்ஸ் செய்து சியர் அப் பண்ணுங்கப்பா. நான் இப்பவும் புதியவளாக தான் உங்களுக்கு அறிமுகமாக இருப்பேன்.
ஹாப்பி ஈஸ்டர்.
அப்பறம் இந்த கதை ஞாயிறு மட்டும் பதிவிடப்படும். கதை முடிச்சா தினபதிவு போடுவேன். இது மலையாளம் கலந்து எழுத ட்ரை பண்ணறேன்.
ஏதாவது தப்பும் தவறும் இருந்தா சொல்லுங்க. மாத்திப்பேன். நான் சமத்து பொண்ணு தான். அப்பறம் இந்த தலைப்பு மாத்துனு ஒரு லேடி வந்து சொன்னாங்க. சாரிம்மா… அதெல்லாம் மாத்த முடியாது.
நான் கதையில் லாஜிக் உதைச்சா தப்பான விஷயத்தை எழுதியிருந்தா மாத்திப்பேன். தலைப்பு இந்த கதைக்கு சரியா இருக்கும். அதை மாத்த மாட்டேன்.
லாஜிக் மிஸ்டேக் அல்லது தவறான விஷயம் எழுதினா மட்டும் மாத்திப்பேன்.
ரைட்டா… ரைட்.✅

Nice starting
Amazing start
Wonderful start sis. Very happy to see Ishan and thukira. Charles and sara good pair. Mercy good sister. Awesome narration of Christianity wedding sis. Very intresting sis.
பிரியமானவரே என் தேதூதனே…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 1)
அட, ரொம்ப நாளைக்கப்புறம்
துகிரா & இஷானை திரும்பவும் மீட் பண்றதுல ரொம்ப சந்தோஷம், கூடவே குட்டிப் பொண்ணு அமுல்யாவையும்.
பாவம் சார்லஸ் அந்த குழந்தைக்காக தன் காதலையே விட்டுக் கொடுத்து இருந்தாலும், இன்னமும் அதுலயிருந்து மீண்டு வரலைன்னு நினைக்கிறேன், அதன் சாரா கிட்ட பேசாம டிமிக்கி கொடுத்திட்டு திரியுறான் போல, அதான் சாரா போட்டுக் கொடுத்திட்டாப் போல.
அது சரி, இந்த பிரியமானவரே தேவதூதனே டைட்டில் யாருக்காக..?
மெர்ஸி மேத்யூவுக்காவா, இல்லை சார்லஸ் சாராவுக்கா? ஐ திங்க், சார்லஸ் சாராவுக்காத் தான்னு நான் நினைக்கிறேன் கரெக்ட்டா ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
ஆரம்பம் சூப்பர்