Skip to content

தாரமே தாரமே வா-2

54 / 100 SEO Score
அத்தியாயம்-2
 
               மாலையில் ஐசுவின் கல்லூரி வாசலில் ரித்தீஷ் அவளை அழைத்து செல்ல காத்திருக்க, காலை போலவே நேரம் கழித்தே வந்து சேர்ந்தாள். அதுவும் அவளின் தோழமை கூட்டதோடு அதில் ஆண்களும் அடக்கம்.
”என்ன ஐசு…. என் கூட வரலாம்ல பைக்ல நானே கூட்டிட்டு போயி உன் வீட்டில் விட்டுடுவேன்.. எதுக்கு தேவையே இல்லாமல் ஒரு ஆட்டோ” என பிரபு ஐசு அருகே ரித்தீஷ் கேட்க வேண்டும் எனறு பேசினான்.
”என்ன செய்ய என் அப்பா ஏற்பாடு பண்ணியது… நானும் தினமும் லேட்டா வந்தாலாவது ஆட்டோ கிளம்பியிருக்கும்னு பார்ப்பேன் கொஞ்சம் கூட ரோஷமே இல்லாமல் வெயிட் பண்றார். நான் என்ன செய்வேன்… சரி பிரபு பை.. பை பூர்வீ… பை லேகா…” என சத்தமாக கூறி அதிருப்தியாக ரித்தீஷ் கடமையே கண்ணாக ஆட்டோ எடுத்தான்.
நேரம் கடத்தாமல் வீட்டில் அவளை இறக்கிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டான்.
‘இவ்வளவு பேசியும் நாளைக்கு ட்ராப் பண்றேனு நிற்கட்டும் அப்பறம் இருக்கு’ என பற்களை கடித்தபடி உள்ளே சென்றாள் ஐசு.
ஆனால் அடுத்த நாட்களும் அதே போல தான் கடமை தவறாதவனாக வந்து நின்றான் ரித்திஷ்வரன்.
ஐசுவும் அதே போல திட்டிக்கொண்டே ஏறினாலே தவிர வராமல் இல்லை.. பின்ன அதுக்கு பிறகு அவ அப்பாகிட்ட என்ன சொல்வது?
இப்படியாக அவனின் வாழ்வில் நாட்கள் கழிய…
அன்று தணிகாசலம் ஒரு திருமணதிற்கு செல்ல நேர்ந்தது. அங்கே அவரின் தோழமைகள் எல்லோரும் அவர்களது பசங்க பெண் திருமணம் முடித்தமையை பற்றி பேசிக்கொண்டிருக்க, அங்கே ஒருவரால் தணிகாசலம் மகள் ஐசு வரனில் பேச்சு வந்து நின்றது.
”தணிகாசலம் எதுக்குயா வேற பையனை பார்க்கணும் அதான் அவனின் அவுட் ஹவுஸ்ஸில் மாப்பிள்ளை பையன வச்சியிருக்கான்.” என்றார்.
மற்றொருவரோ “அவன் எல்லாம் தணிகாசலம் சொத்துக்கு ஈடாயா?” என்றார்.
”என்னருந்தாலும் மனைவியோட தம்பி… காட்டிக்கற முறை தானே.” என்றதும் அங்கே இருக்க பிடிக்காமல் நழுவி வீட்டுக்கு வந்து சேர்ந்தார் தணிகாசலம்.
நெடுநேரம் யோசிக்க ரித்தீஷ் இதுவரை இருந்தது மற்றவர் பார்வைக்கு வேண்டுமென்றால் யாருமில்லாமல் இருக்கும் அவனுக்கு, அடைக்கலம் கொடுத்தது போல தோன்றலாம். ஆனால் இனி கல்லூரி வயது முடிக்கும் பெண் இருக்கும் இடத்தில் அவனும் இருக்க இது போன்ற பேச்சு இனி வர தான் செய்யும் அதற்குள் ரித்தீஷ்வரனை இங்கிருந்து அகற்றணும்’ என்றெண்ண ரித்தீஷ் அவர் முன்னே நின்றான்.
”மாமா உங்ககிட்ட பேசணும்… காலையில் பார்க்க முடியலை” என்றான் பவ்யமாக
”என்ன சொல்லு?” என்று சலிப்பாய் கேட்டார்.
”அது வந்து மாமா… இங்கயிருந்து ஆட்டோ ஸ்டண்ட் ரொம்ப தூரமா இருக்கு, அங்க ஆட்டோ ஸ்டண்ட் பக்கத்தில ஒரு அறை இருக்கு அங்க தங்கலாம்னு…” என்று எண்ணத்தை வெளியிட்டான்.
வைதேகி காதில் விழுந்து ”அக்கா மாமா இருக்கறது உன் கண்ணுக்கு தெரிலையா… எதுக்கு அங்க போகணும்? கொஞ்ச தூரம் இருக்குமா அரை நாழிகை அதுக்கு இங்க இருந்து போவியா?” என குதித்தார்.
  தணிகாசலம் எண்ணம் ரித்தீஷ் இங்கிருந்து செல்ல வேண்டும் அதேபோல அவனே போவதை அறிந்து சந்தோஷத்தோடு இருந்தாலும், மனைவிக்காக அமைதியாக இருவரை பேச விட்டு வேடிக்கை பார்த்தார்.
”இல்லை அக்கா நைட் நேரம் அங்க வந்து, மறுபடியும் இங்க வர லேட்டா ஆகுது அதான்… நீயும் எனக்காக முழிச்சுட்டு இருக்க, எதுக்கு உனக்கும் உடல்நிலை பாதிக்கு” என்றான்.
”என்னடா பேசற.? அப்பா அம்மா இருந்தா இப்படி தான் அவங்களை விட்டு போவியா?” என்று குறைப்பட்டார்.
”அக்கா நான் உன்னையும் மாமாவையும் அந்த இடத்தில தான் வச்சியிருக்கேன் ஆனாலும் இனி இருக்க முடியாது.” என்று அழுத்தம் திருத்தமாக மொழிந்தான்.
”அதான் அவனே முடிவு எடுதுட்டானே அப்பறம் என்ன? இனி நாம சொன்னா கேட்பானா? படிப்பு மாதிரியே இதையும் முடிவு எடுத்துட்டான்… அவன் இஷ்டம் விடு.. எப்போ போறானாம்” என எங்கோ பார்த்து கேட்டார் தணிகாசலம்.
”நாளைக்கு மாமா” என்றான் ரித்தீஷ்.
”எல்லாம் பார்த்துட்டு தான் முடிவோட சொல்லற? அப்படி தானே டா” என வைதேகி கண்ணீரோடு கேட்டார்.
      ”அப்படி இல்லை அக்கா.. அது வந்து…” என்று பேச தணிகாசலம் இடைவெட்டி, ”வைதேகி.. எதுக்கு இப்படி முட்டு கட்டையா இருக்க போகட்டும்… அப்போ தான் உலகம் தெரியும்… எங்க போக போறான்” என்றார்.
 வைதேகி கண்ணில் துளித்த நீரை துடைத்தபடி அமைதியாக தம்பியிடம் வேறேதும் கேட்க இயலாமல் நின்றார்.
”நேரமாச்சு தூஙகுங்க  அக்கா” என்றும், “வர்றேன் மாமா” என பணிவோடு நடையிட்டான்.
‘மனதில் என்ன செய்ய சொல்ற அக்கா? ஐசுவுக்கு அவ காலேஜுக்கு நான் கூட்டிட்டு போக வர்றது பிடிக்கமா பேசறா… இங்க இருந்தா நான் தான் கூட்டிட்டு போகணும் வரணும். நான் இங்க இல்லை என்றால் எப்படியும் மாமா வேற கார் கூட அரெஞ்சு பண்ணி கொடுப்பார்’ என்றெண்ணி தனது அவுட் ஹவுஸ் சென்றான்.
அடுத்த நாள் தனது பொருட்களை சின்ன யானை வண்டியில் ஏற்றி கொண்டிருக்க குளித்து முடித்து எட்டி பார்த்த ஐசு, ‘எதுக்கு இதெல்லாம் ஏற்றிட்டு இருக்கார்… ஒரு வேலை புதுசா வாங்கிட்டாரோ.?’ என்று எண்ணியதை அன்னையிடம் ”என்னம்மா உன் தம்பி எங்க இதையெல்லாம் விற்க அனுப்புறார்.” என கேட்க, வைதேகி முறைக்க கண்டு, ‘ஐய்யோ உன் தம்பி சொல்லிட்டேனே.’ என்று “மாமா என்ன செய்யறார் அம்மா” என ஐஸ் வைத்தாள்.
”அவனுக்கு என்ன இங்க இருந்து ஆட்டோ ஸ்டண்ட் தூராமாம், அதுக்கு அங்க பக்கத்தில இருக்கற இடமா வீடு பார்த்து போறான்” என்றதும் ஐசு மனதில் ‘ஐ ஜாலி’ என்று சொல்லி கொள்ள வெளியே அமைதியாக இருந்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து ரித்தீஷ் எல்லா பொருட்களை ஏற்றி முடித்து அனுப்பிய பிறகு, ஐசு காலேஜ் கிளம்பி வந்து நிற்க அவனோ சவகாசமா இருநதான்.
”ஹலோ ஆட்டோ எடுக்க வாங்க காலேஜுக்கு டைம் ஆச்சு” என்றாள்.  அவனோ வைதேகி கொடுத்த டீயை ருசித்தபடி ”போன் செய்து பிரபுவை கூப்பிடு வருவான்.. இனி நான் இங்க இருந்து உன்னை கூப்பிட்டு போக முடியாதுல” என அன்று பேசியதற்கு திருப்பி கொடுக்க, ஐசு தான் அன்று சொன்னதில் இவனுக்கு இத்தனை ரோஷமா அதுக்காகவா காலி செய்து போகின்றான் என வியந்தாள்.
”என்னடி யோசிச்சுட்டு இருக்க நேரம் ஆகுது போ” என வைதேகி சொன்னதும் அடித்து பிடித்து அங்கே இருந்த வேறொரு ஆட்டோவில் சென்றாள்.
போகும் பொழுது அந்த ஆட்டோகாரன் அவளை கண்ணாடியில் பார்த்து வழிந்து கொண்டே செல்ல ‘சே ரித்தீஷ் மாமா ஒரு முறை கூட இப்படி செய்தது இல்லை… இவன் ஒரு நொடிக்கு இப்படி செய்து என்னை எரிச்சலை கிளப்புறான் எப்போ தான் கல்லூரி வருமோ என்றிருக்க நொந்துக்கொண்டே போனாள்.
இதில் பணம் கொடுக்கும் பொழுது அவன் தொட செய்ய எண்ணெயிலிட்ட கையாக வெடுக்கென இழுத்து நடந்து சென்றாள்.
இதுநாள் வரை எத்தனை முறை ரித்தீஷ் மாமா என்னிடம் புத்தகம் , லஞ்ச் பாக்ஸ், டீ டம்பளர் என்று கொடுத்திருப்பார் ஒரு முறை கூட இப்படி தொட்டது இல்லை சே ரித்தீஷ் மாமா கூடவே வந்திருந்தா பாதுகாப்பா தான் இருந்தது.’ என அவளை அறியாமல் தினமும் திட்டும் அவனை எண்ணி கொண்டே வந்து லேகா மீதே மோதி நின்றாள்.
”எந்த ஊர் ராஜாகுமரன் நினைச்சுட்டு வந்த ஐசு… இல்லை நம்ம சினிமா ஹீரோவா?” என்று கேட்க ரித்தீஷ் முகம் தோன்றியது.
அவள் சிறு வயதில் அவளோடு சிரித்து பேசிய ரித்தீஷ்.
”ராஜாகுமரன் தான் தோணுது ஆனாலும் அவன்… ” ஏதோ கூற எண்ணி தானாக தடங்கள் செய்யும் பேச்சில் தான் ரித்திஷை ராஜகுமரன் என்றா எண்ணி இருந்தோம்…. அம்மாவின் தம்பி என்று கூட அவனை நான் மதிக்கவில்லை பின்ன எப்படி? என்றெண்ணம் செல்ல,
”நிஜமா ஹீரோ வசியம் தான் இப்படியா ஐசு திணறி நிற்பா?” என லேகா இழுத்து சென்றாள்.
இங்கு ரித்தீஷ் தனது மாமா-அக்கா இருவரிடமும் விடை பெற்று ஆட்டோ ஒட்டும் சண்முகம் அண்ணாவின் வீட்டில் எல்லா பொருட்களையும் அடுக்கி முடித்தான்.
சண்முகம் அவனின் கல்லூரி நாட்களில் ஆட்டோ ஓட்ட இவரிடம் தான் வந்து நின்றான். இவர் அந்த பகுதியில் ஆட்டோவை வாடகைக்கு விற்பவர். இப்பொழுது டிராவல்ஸ்‌ நடத்திக் கொண்டிருக்கின்றார்.
இவன் சொந்த ஆட்டோ வாங்கி ஓட்டுகின்றான். சண்முகம் மகள் இலக்கியா இவனின் வயதை சேர்ந்தவள்… இவனோடு 2 மாதம் பெரியவள்.. என்ன கொஞ்சம் மாற்று திறனாளி அவள். கால் சற்றே தாங்கி  நடப்பாள். ரித்தீஷிற்கு நல்ல தோழி மொத்ததில்.
அவன் இங்கு வந்தது யாருக்கு கஷ்டமோ நஷ்டமோ இலக்கியா சந்தோஷமாக வரவேற்றாள். காலையில் பால் காய்ச்சி அவனுக்கு பொருட்களை எடுத்து கொடுத்து உதவி புரிந்தாள்.
மாலையில் ஐசு ஆட்டோ வரும் என்று எண்ணியிருக்க அதன் பிறகு அவன் இனி வர மாட்டான் என்ற உண்மை புரிய அவளுக்குள் ஏதோ ஒரு அழுத்தம் வந்தது. பிரபு பைக்கில் ஏற சொல்லியும் ‘அப்பா திட்டுவார்’ என மறுத்துவிட்டாள்.
வீட்டுக்கு வந்த பின்னும் அப்படியே ஒரு வித வருத்ததில் கடந்தாள்.
இரவு ஆட்டோ சத்தம் கேட்க மகிழ்ச்சியோடு ஜன்னலில் எட்டி பார்த்தாள் அதுவோ வெளியே ஒரு ஆட்டோ பழுதின் காரணமாக நின்றது. அது ரித்தீஷ் இல்லை என்றதும் அவன் இருந்த அவுட் ஹவுஸ் வெறித்தவள் அது மின்விளக்கு இல்லாமல் ஒளியிழந்த தோற்றம் மனதை என்னவோ செய்ய உறங்க போராடினாள்.
-தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!