அத்தியாயம்-6
அடுத்த நாள் காலை நேரம். வீட்டிற்கு வெளியில் பனித்துளிகள், இன்னும் இலைகளின் முனையில் தொங்கிக் கொண்டிருந்தன. கேரளாவின் அந்த ஈரமான குளிர் காற்று ஜன்னல் வழியாக மெதுவாக உள்ளே வந்து அறையை நிரப்பியது.
சார்லஸ் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தான். முழு உறக்கம் களைந்து அரை உறக்கத்தில் சோர்வாக கண்களை திறந்தான்.
அவன் பார்வையில் முதலில் விழுந்தது. படுக்கையில் சாரா இருந்த இடத்தில் தற்போது காலியான இடமாக காட்சியளித்தது.
“சாரா” என்று சற்றே புருவம் சுருக்கியவன் எழுந்து அமர்ந்தான். அப்போது தான் அறையின் மூலையில் மெதுவான ஓசை முனுமுனுப்பு கேட்டது.
‘கர்த்தரே..’ என்று ஆரம்பித்து ஏதேதோ பேச சார்லஸ் முற்றிலும் சோம்பல் முறித்து செவியை அவளது மென்குரலுக்கு தாரை வார்த்து பார்த்தான்.
சாரா, தரையில் மண்டியிட்டு, இரு கைகளையும் ஒன்றாக இணைத்து, கண்களை மூடி ஜெபித்துக் கொண்டிருந்தாள்.
அவள் தலைமுடி சற்றே தளர்ந்து தோள்களில் விழுந்து இருந்தது. காலை ஒளி ஜன்னல் வழியாக அவள்மேல் விழுந்து, அவளை ஒரு அமைதியான உருவமாக காட்டியது.
‘இன்னலே சமாதான பறையுமாயி போர்த்திக்யாக்கன், என்னே அனுமதிச்சேனுக்கு நன்றி.
இனி எந்த சம்பவிச்சாலும் சாந்தியாக்கும் எந்தே சாகாயுக்கும் ஆன்டவரே’ என்றவள் குரல் மெதுவாக இருந்தாலும், அதில் இருந்த உண்மை உணர்வு தெளிவாக இருந்தது.
சார்லஸ் அவளது வேண்டுதல் புரியாமல் விழித்து அசைவின்றி பார்த்துக் கொண்டிருந்தான்.
‘இவ்வளவு காலைலேயே… இவ்வளவு நம்பிக்கையோட பிரேயர் பண்ணறா” என்றது மட்டுமே அவன் மனதில் ஒரு சிறிய வியப்பு.
ஜெபத்தை முடித்த சாரா, சிலுவை இட்டுக் கொண்டு மெதுவாக எழுந்தாள்.
திரும்பியவள் அவன் விழித்திருப்பதை பார்த்ததும் சற்று தடுமாறினாள்.
சார்லஸாகவே “குட் மார்னிங்” என்றான்.
‘மோர்னிங்” என்றாள். சார்லஸ் பார்வை இன்னும் சாரா மேல் தங்கியிருந்தது.
சாரா அதைக் கவனித்தாள்.
‘ஜெபம் பண்ணிட்டு இருந்தேன். உங்களுக்கு டிஸ்டப்பாயி? மன்னிப்பு பறையேன்’ என்றாள்.
“நோநோ.. மார்னிங் ஆகிடுச்சு. இன்னும் எழுந்துக்கலைன்னா எப்படி. இது டிஸ்டர்ப் இல்லை” என்று சுருக்கமாகச் சொன்னான்.
ஒரு நொடிக்கு அமைதி எழுந்தது.
“டாக்டர் சாரே… சாயா குடிக்குமோ?” என்று அவள் கேட்டாள்.
“சாயாவை பெட்ல கொண்டு வந்தா கூட குடிப்பேன். பட் அம்மா விடமாட்டாங்க. மெர்ஸியும் சண்டைக்கு வருவா.” என்றான்.
“ஓ… நிங்கள் ப்ரஷ் பண்ணி ரெடியாகி. நான் சாயா கொண்டு வந்தே’ என்று புறப்பட்டாள்.
“முத்து படத்துல வர்ற மாதிரி ஒரு நேரம் புரியுது. ஒரு நேரம் புரியலை. ஸப்பா கர்த்தரே… நான் என்ன பண்ணறது?” என்று தனியாக புலம்பினான்.
சாயாவை கொண்டு வந்து கொடுக்க, பருகி முடித்த சார்லஸ்,
டைனிங் மேசையில் நியூஸ் பேப்பரை வாசித்தான்.
நிர்மலா ஏற்கனவே அங்கே அமர்ந்திருந்தார்.
“சார்லஸ் டிபன் சூடா இருக்கும்போதே சாப்பிடு.” என்று காலை உணவு உண்ண அழைத்தார்.
ஏற்கனவே தாமதமாக எழுந்ததால் சாயா குடித்துவிட்டு உணவை ஸ்கிப் செய்ய நினைத்தான். அன்னை நிர்மலா கூறவும் சாப்பிட அமர்ந்தான்.
மேசையில் இடியப்பம், ஸ்ட்யூ, குருமா, தேங்காய் பால், அனைத்தும் அழகாக அமைத்து இருந்தது.
சாரா அமைதியாக பரிமாற ஆரம்பித்தாள்.
“கொஞ்சம் கூடுதலா குருமா வைமா. சார்லஸ் குழம்பு அதிகமா ஊத்தி தான் சாப்பிடுவான். தேங்காய் பால் எப்பவாது. அவனுக்கு குருமா தான்” என்று நிர்மலா சிரித்தார்.
சார்லஸ் சிரித்தபடி தட்டையை பார்த்தான். சாரா குருமாவை ஊற்றினாள்.
அவள் சாப்பிடும் விதம், மெதுவாக, கவனமாய் சாப்பிட்டான்.
“சார்லஸ் இன்னிக்கு சர்ச் போறீங்களா?” என்று நிர்மலா கேட்டார்.
சாரா சற்று தயங்கி சார்லஸை பார்த்தாள்.
“ஏன்மா?” என்றான்.
“புதுசா கல்யாணம் செய்து நம்ம சர்ச்சுக்கு முதல் முறை சாராவை அழைச்சிட்டு போயிட்டு வந்துடு இன்னிக்கு சண்டே வேற” என்றார்.
சார்லஸுக்கும் அதுவே சரியென்று தோன்றவும் சாராவிடம் கிளம்பி ரெடியாயிரு. என்றான். ‘சாராவும் புன்னகையுடன் தலையாட்டினாள்.
ஒரு சில மணி நேரத்தில் உடனடியாக தயாராகி வந்தாள்.
சார்லஸ் வீட்டின் பின்புறம் நீண்ட கால்வாய்.
அதன் நீர் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. இருபுறமும் பச்சை மரங்கள் நீரில் பிரதிபலித்து நின்றன.
சிறிய மரப்படகு கரையில் கட்டப்பட்டிருந்தது.
“இங்கிருந்து சர்ச் போக இதுதான் வழி” என்றார் நிர்மலா.
சாரா அவற்றை பார்த்தாள்.
“போட்டா?” என்று கேட்டாள்.
“ம்ம்” என்றதும் சாரா மகிழ்ந்தாள்.
இங்க எல்லாருக்கும் இது தான் வழக்கம் என்பதால் மூவரும் படகில் ஏறினார்கள்.
படகு மெதுவாக நகர ஆரம்பித்தது.
நீரின் சலசலப்பு, தூரத்தில் பறவைகளின் குரல், காற்றின் ஈரம்
சாரா அந்த காட்சியை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் முகத்தில் ஒரு சின்ன சுதந்திரம் தெரிந்தது.
சார்லஸ் அவளை கவனித்தான்.
அன்னை தந்தை சற்று எதிரே அமர்ந்திருக்க, சாராவிடம், “போட் பயணம் பிடிச்சிருக்கா? பயமாயில்லையா?” என்று கேட்டான்.
“பயமில்லா” என்றவள் முகமலர்ச்சியுடன் “நான் போட்டில் மாத்திரமே ஸ்கூலுக்கு போயி. கிரேஸ் மரிச்சு போனப்பின்னே நான் போட்டில் போயிட்டில்லா. நான் ஸ்கூலுக்கும் போர்டிங் மாறி. காலேஜிம் அங்கிலே படிச்சே.” என்றாள்.
சார்லஸ் புருவம் உயர்ந்தது.
“சீரியஸ்லி.. நீ அப்ப எங்க படிச்ச?” என்றான்
“மங்களூரு” என்றாள்.
“ஓ… அதான் உங்க வீட்ல மத்தவங்க தமிழ் மலையாளம் கலந்து ஆளுக்கு தகுந்த மாதிரி தமிழ்ல ரிப்ளை பண்ணறாங்க. நீ மலையாளம் மட்டும் பேசறியா?” என்றான்.
“அதே… நான் முழுக்க இங்கிலிஷே படிச்சது. எனிக்கு நன்னாயி சம்சாரிக்க ஒரு மலையாள சிநேகிதி அங்கிள் உண்டு. நானும் அவளும் அதில் சம்சாரிக்கும்.
நிங்கள் தமிழில் சம்சாரிச்சால் எனிக்கு விளங்கும். பட்சே என்னால சம்சாரிக்க ஆரில்லோ.
அம்மே மெர்ஸி ஆனி ஆன்டே எல்லாம் கூட போக போக சரியாகிடும்னு பறைஞ்சது. பட்சே அப்பவும் விளங்கில்லா இங்கிலிஷில் பேசி சம்சாரிக்க சொல்லி” என்றாள்.
“ஓ… எனக்கு கூட நீ பேசற மலையாளம் ஓரளவு நல்லாவே புரியுது. ஆனா எனக்கு மலையாளம் பேச தெரியாது. ம்ம்.. இது நல்லா இருக்கு.” என்றவன் சாராவின் பேச்சில் தானும் இயல்பாக பேசுவதில் துள்ளல் உண்டானது.
“சார்லஸ்.. இறங்குடா” என்ற நிர்மலா குரலில் படகு வரவேண்டிய இடம் வந்துவிட்டதை கவனித்தான்.
சாரா இறங்க தள்ளாட, நிர்மலா தான் “சாரா சார்லஸ் கைப்பிடிச்சு இறங்கு” என்று கூறவும் கையை நீட்டி நின்றாள்.
சார்லஸும் கை நீட்டி அவளுக்கு உதவினான்.
சாரா இறங்கவும், லேசாக சார்லஸ் சிரிக்கவும், “என்டே சிரிப்பு” என்றாள்.
“ஆங்… பழைய படம் எல்லாம் நினைவு வருது. யூ நோ டேரக்டர் சேரன். அவர் படம் ஆட்டோகிராப். அதுல பையன் தமிழ். பொண்ணு மலையாளம். இரண்டு பேரும் லவ் பண்ணுவாங்க. அதுல இது போல சீன் வரும். ஆனா ஹீரோ தான் தடுமாறி வருவான். இங்க ஹீரோயின்.” என்றதும் சாரா அவனை வினோதமாக பார்த்தாள்.
“என்ன லுக்கு?” என்றான்.
“டாக்டர் சாருக்கு நிங்கள் ஹீரோ நான் ஹீரோயின் என்ட அளவுக்கு ஹன்டர்ஸ்டான்ட் ஆயி.” என்று கூறவும், சார்லஸோ ஏன்டா சொல்லி நோஸ் கட் ஆகின்றதென அமைதியாக, சிறிய வெள்ளை சர்ச். சுற்றிலும் பச்சை நிறத்தில் இருக்க, மக்கள் மெதுவாக உள்ளே செல்ல ஆரம்பித்தனர்.
சாரா தலை குனிந்து உள்ளே சென்றாள். சார்லஸ் அவளுக்கு அருகில் நடந்தான்.
ஆலயத்தினுள்ளே மெதுவான நுழைய வெளியே இருந்தவர்கள் சார்லஸ் சாரா புதுமண தம்பதி என்று கிசுகிசுப்புவந்தது.
தேவாலயத்தில் ஸ்தோத்திர பாடல்கள் முடிந்திருந்தன.
பாதர் கர்த்தரை பற்றி பேசி முடிக்க, ஆமேன் என்ற சப்தம் முழு இடத்தையும் நிரப்பியது. இன்று துவங்கிய கொஞ்ச நேரத்தில் தான் வந்திருந்தனர்.
அதனால் ஆளாளுக்கு மென்னகை உதித்திட, சாரா சார்லஸ் அருகே கண்களை மூடி அமைதியாக சர்ச்சில் அமர்ந்தாள்.
சார்லஸ் கர்த்தரை துதித்தபடி, நடுவே சாராவை பார்த்தான்.
‘இவளுக்கு இந்த இடம், என்னோட பேசறது, எல்லாம் கம்பர்டபிளா இருக்கு. நான் தான் இஷான் சொன்னது போல பேச ஸ்டெப் எடுக்கணும்.’ என்று மனதில் மனைவி என்ற உணர்வு முதன்முறையாக தெளிவாக பதிந்தது.
“ஆமேன்” என்ற குரலில் மீண்டும் சுற்றம் உணர்ந்துவிட்டு சிலுவையிட்டு முடித்தான்.
ஒரு அரை மணி நேரத்தில் பிரேயர் முடிய பாதரிடம் ஆசி பெற்று வெளியே வந்தார்கள். சிலர் சார்லஸ் சாராவை பார்த்து நலம் விசாரித்து கொண்டார்கள். திருமண வாழ்வு எப்படி போகின்றதென்ற சம்பிரதாய பேச்சும் கேட்டிருந்தார்கள்.
சார்லஸ் அவர்களிடமெல்லாம் பேசினான். சிலர் திருமணத்திற்கு வரயியலாமல் போனதால் அவர்கள் எல்லாம் சாராவை பார்த்து வாழ்த்தி கை குலுக்கினார்கள்.
மீண்டும் திரும்பி போட்டில் பயணம் செய்ய, நிர்மலாவோ “சார்லஸ் நானும் அப்பாவும் எஸ்தர் வீட்டுக்கு போறோம். நீயும் சாராவும் வெளியே எங்கயாவது போயிட்டு மதியம் நல்ல ஹோட்டலில் சாப்பிட்டு மெதுவா ஊரை சுத்தி பார்த்துட்டு வாங்க.” என்றார்.
சார்லஸோ ”என்ன ஊரை சுத்திட்டு இருக்கணும். வீட்டு சாவி கொடுங்க. நாங்க வீட்டுக்கு போறோம்” என்றான்.
”டேய்… அம்மா சொல்லறதை கேளு.” என்றார் மோஸஸ்.
சாரா குறுகுறுப்பாய் சார்லஸை காண சார்லஸும் இதற்கு மேல் மறுத்து பேசாமல் சம்மதித்தான்.
நிர்மலா மோஸஸ் ஒரு பாதையில் பயணிக்க, சார்லஸ் சாரா மற்றொரு போட்டை கையசைத்து பக்கம் வரவழைத்தான்.
“எப்படில்லாம் சிக்க வச்சிட்டு போறாங்க” என்று கூற சாரா முறைத்துவிட்டு பின்னர் சிரித்துவிட்டாள்.
எங்கே செல்வதென்ற எந்த எண்ணமும் வராததால், சார்லஸ் சாராவிடம் கேட்க, “யான் பெயருக்கு தான் கேரளா குட்டி. பதினொன்னு வயசுலயிருந்தே ஸ்கூல் காலேஜ் எல்லாம் வெளியூருல்லோ. நான் விவரம் தெரியற வயசிலே இங்கிருந்தா இந்தயிடத்துக்கு பிரமாதாமாயிட்டு உண்டு பறையும்” என்று மொழிந்திருந்தாள்.
“பட்சே.. இந்த போட் பிரயாணம் நன்னாயிட்டு” என்றாள்.
சார்லஸாக “அப்ப போட்லயே ரவுண்ட் அடிப்போம்.” என்று பிரைவேட்டாக ஒரு போட்காரனிடம் நீண்ட பயணத்தை கூறி பேரம் பேசி கொண்டான்.
சாராவுக்கு சார்லஸ் இயல்பாக பேசுவது பிடித்திருந்தது.
மர்யம் ஏதேதோ சொல்லி பயமுறுத்தி விட்டாரே. உன் மனதில் உள்ளதை கூட உரைக்க இயலாது. திருமணத்தில் உன் பேச்சை கேட்க யாருமிருக்க மாட்டாரென சொல்லியிருந்தார்.
இங்கே சார்லஸ் அப்படி அல்ல. பழக பேச இனிமையாக இருந்தான். ஏன் கிரேஸ் பற்றி கூட விவாதிக்கலாமா என்று சாரா மனதில் எண்ணம் உதித்தது.
ஆனால் இரண்டு நாளில் அப்படியென்ன அவசரம் என்ற தடையும் மனதில் ஒட்டிக்கொண்டது. அதுவும் அன்னை தந்தை படித்து படித்து எதையும் பேசி பைத்தியாக்காரத்தனத்தில் இழுத்து விடாதே என்று எச்சரிக்கை செய்திருந்தனரே.
“போட் டிராவல் பிடிக்கும்னு சொல்லிட்டு என்னையும் உன்னோட உள்ளங்கையும் மாறி மாறி பார்க்கற. நேச்சர் பார்க்கற தாட்ஸ் போயிடுச்சா?” என்றான்.
“அதெல்லோ” என்று மறுக்க, சார்லஸ் “வேற” என்று கேட்க, “அதெங்கில்.. நான் சம்சாரிக்கறது நிங்களுக்கு மனசில்யெல்லோ, பட்சே சேட்டனுக்கு அறியும். நான் எந்து செய்யும்” என்றாள்.
சார்லஸோ “இது வேறயா?” என்று படகுகாரனை பார்த்துவிட்டு, “ஏன் சாரா.. நீ யாரையாவது விரும்பியிருக்கியா?” என்றான்.
“ம்ம்ம். துல்கர்னா எனிக்கு இஷ்டம்” என்றாள்.
“யூ மீன்… ஆக்டர் துல்கர்” என்று கேட்டான்.
“அல்லா… இது.. என்னட சிநேகிதியோட சேட்டன்” என்றாள்.
சார்லஸோ அதிர்ச்சியில் திடுக்கிட்டவனாய் தள்ளாடினான்.
-தொடரும்.

Interesting waiting for nxt epi 😍
Nee ketathuku thana da ans panna athuku yen ivlo shock neeum thana love pana atha sportive ah eduthu kitta la. But intha jodi pesurathu kekum pothu oru Mari nalla feel ah iruku