அத்தியாயம்-7
உங்க இஷ்டம் மாமா என்ற வார்த்தை ரித்தீஷ் மிக கஷ்டத்தோடு தான் சொன்னான். அவனுக்கு இதுவரை தணிகாசலம் கட்டளையிட்டு பேசி பார்த்தவன் தன்னிடம் கேட்க மறுக்க முடியாமல் தான் அப்படி சொல்லிவிட்டான். அதன் பின் ஐஸ்வரியா வேகமாக வந்து
”எனக்கு எதுவும் ஆகலை என்று இவருக்கு நல்லா தெரியும் அப்படியிருக்க சொத்தோட நானும் வந்தேனா கசக்குமா? ரொம்ப நல்லவரா அவர் காட்டிக்கலாம்… எனக்கு வேண்டாத கல்யாணம் எதுக்கு இப்படி செய்யறிங்க…. என் மேல நம்பிக்கை இல்லை…. அப்டி தானே… இவர் ஒண்ணும் நல்லவர் இல்லை… இவரும் ஒரு பெண்ணை விரும்பறார் நீங்களே கேளுங்க…. இப்படி பெத்தவங்க இருக்கறதால் தான் இப்ப இருக்கற ஜெனரேஷன் கூட உண்மையா இருக்க முடியலை … நீங்க மட்டும் என்னிடம் இயல்பா பேசி பழகி இருந்தா நானே ஹோட்டலில் பார்ட்டி என சொல்லி இருப்பேன் நம்ம காரிலே நீங்க அனுப்பி வைத்து இருப்பிங்க நான் அந்த காரில் உடனே வந்திருப்பேன். அப்போ நம்பி இருப்பிங்க…. இப்போ எல்லாம் என்னை நம்பாமல் இருக்கிங்க இவர் விரும்பற பெண்ணை விடுத்து என்னை கல்யாணம் செய்தா இவருக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்” என்றாள்.
”உனக்கு என் தம்பியை பிடிக்கலை என்றால் கல்யாணம் பண்ணாதே… அதுக்காக அவனை இப்படி பேசாதே… அவன் என்னிடம் எதையும் மறைக்க மாட்டான்” என சொல்ல ரித்தீஷ் மனம் அக்கா ‘எதையும் மறைக்க மாட்டான்’ என்ற சொல்லிலே சுழன்றது.
”ஓஹ் அவரை அப்போ சொல்ல சொல்லு” என்றாள் ஐஸ்வர்யா.
”நிறுத்தறியா நீ இப்படி போனது தப்பு உன் தப்பை மறைக்க பொய் பேசாதே…” என்றார் தணிகாசலம்.
”நான் என்னைக்கும் பொய் பேசியதில்லை” என ஐஸ்வர்யா வீராப்புடன் சொல்ல
”பார்ட்டி வீட்ல என்று சொன்னதே பொய், பிறந்த நாள் பொண்ணுக்கு சொன்ன ஆனா பையனுக்கு… எத்தனை பொய் கேட்டும் பொய் தானே சொன்ன உன்கிட்ட என்ன பேச்சு.. நீ சம்மதம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கல்யாணம் நடக்கும்…” என்றவர் ரித்திஷை பார்த்து
”கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யவா வேண்டாமா அதை மட்டும் சொல்லு இல்லை நீயும் ஏதாவது சொல்ல இருக்கா” என கேட்க அவனோ “ஒன்னுமில்லை மாமா, எனக்கு அப்பா அம்மா ஸ்தானம் எல்லாம் நீங்களும் அக்காவும் தான் அதனால உங்க இஷ்டம் போல செய்யுங்க” என்றான்.
ஐஸ்வர்யாவுக்கு பற்றி கொண்டு வந்தது. எவளோ ஒருத்தியை கையை பிடிச்சு கேட் வரை கொண்டு விட்டான். இப்போ உங்க இஷ்டம் என்று சொல்லி எப்படி நாடகம் ஆடறான் சே ஆண்களே இப்படி தானா? என்றெண்ணியவள்.
”எனக்கு படிப்பு முடியும் வரை கல்யாணம் வேண்டாம். இவர் தான் படிக்காமல் இருக்கார் நானும் படிக்க கூடாதா? படிக்கமா இவர் இருப்பார் ஆனா எனக்கு படிப்பு வேணும்” என்றாள்.
”நீ படித்து கிழிக்க வேண்டாம் பேசாம போறியா?” என்றார் ஐஸூவை பார்த்து அவளோ அப்பாவின் பிடிவாதம் அப்படியே இருப்பவள் போல
”கல்யாணத்துக்கு கூட பெயருக்கு பின்னால போட ஒரு படிப்பு வேணும் அது கூட எனக்கு இல்லையா… இல்லை இவரை போல மொட்டையா ரித்தீஷ்வரன் போட்டா போதும் நினைச்சுக்கிட்டீங்களா? எனக்கு பி.பி.ஏ கம்ப்ளிட் பண்ணனும்” என சொல்ல பொறுமையாகவே நின்றான் ரித்தீஷ்.
”அவள் காலேஜ் போறதில் உனக்கு பிரச்சனை இல்லைனா கல்யாணம் ஆன பிறகும் அவளை அனுப்பு” என தணிகாசலம் சொல்லிட ரித்தீஷ் அதே மௌனத்தில் தலை ஆடினான்.
”நானும் கிளம்பபறேன் அக்கா ஸ்கூல் சவாரி இருக்கு” என நகர்ந்தான்.
ஐஸ்வர்யாவுக்கோ இவனிடம் எல்லாம் படிக்க நாம ஒபினியன் கேட்கும் நிலைக்கு வந்து விட்டோமே’ என்ற கோவம் மட்டுமே வந்தது. சே இந்த லேகா வெங்கட்டால என் வாழ்க்கையே போச்சு என அறைக்குள் அடைந்தாள்.
இவளோ மனதில் அப்பா படிக்க வைக்கறேன் சொன்னப்போ, வேண்டாம் எனக்கு எல்லாம் படிப்பு ஏறாது சொல்லி படிப்பை கை கழுவினார். எனக்கு ஆட்டோ ஒட்டனும் நானே என்னை பார்த்துக்கறேன் சொல்லி தனியா அவுட் ஹவுஸ் போயிட்டார்…. இங்க இருந்தாலாவது அப்பாவோட தொழிலில் ஒரு வேலை போட்டு இருப்பார் இப்போ இங்க இருந்து தனியா போயிருக்கார்… எதுலயும் முன்னுக்கு வரணும் என்ற எண்ணமே இல்லை இதுல காதல் வேற… ஒருத்தி கையை தாங்கி புடிச்சு கூட்டிட்டு போகற அளவுக்கு இருக்கார்.. அதையும் சொல்லறாரா…

அதானே அவருக்கு நல்லா கட்டிக்க பொண்ணு காரு பங்களா வருது… என் தம்பி பரத் இன்னும் ஸ்கூல் படிக்கின்றான் என் சொத்தை பாதி போகும் இதெல்லாம் விடுத்து லவ்வுக்காக அவளை கட்டிப்பானா? அப்பா முதல் வெங்கட் வரை இல்லை இந்த ரித்தீஷ் கூட ஆண் வர்க்கம் என்பது காட்டிட்டான்… என்னால இப்போ எந்த முடிவு எடுக்க முடியவில்லை…. அப்பா என்னை நம்பவும் மாட்டார்… பேசாம எங்கயாவது காசு எடுத்து கொண்டு போய் தங்கி இவர்களை பயமுறுத்தி செய்தா என்ன? சே சே இதுக்கே அப்பா என்கிட்ட பேசல.. அப்படி செய்தேன் தலை முழுகி செத்துட்டேனு நினைத்துப்பார்.
ஒன்றும் செய்ய முடியாமல் ஐஸ்வர்யா அடுத்த நாள் கல்லூரி செல்ல ரித்தீஷ் தான் அழைக்க வந்தான்.
போகும் பொழுது ”நீங்க தான் ஒரு பொண்ணை விரும்பறிங்கல அப்பறம் எதுக்கு கட்டிக்க சம்மதம் சொன்னிங்க?” என்று கேட்க அவனோ பாறையை தின்றவன் போல அமைதியாக இருக்க, காலேஜி வர அவனோ இறங்கி எங்கோ பார்ப்பது போல பார்க்க அவளோ அவனின் ஆட்டோ சாவியை எடுத்து தூக்கி எறிந்து வகுப்பை நோக்கி சென்றாள்.
ரித்திஷோ திமிரு கொஞ்ச நஞ்ச திமிரு இல்லை உடம்பு முழுக்க திமிரு என புலம்பி அவள் வீசி எறிந்த சாவியை எடுத்து ஆட்டோ எடுத்து கிளம்பினான்.
பூர்வீயிடம் மட்டும் தனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தார்கள் அதுவும் இந்த வெங்கட் சனியானால் என சொல்லி கவலை கொண்டாள்.
தினமும் என்ன திமிராக பேசியும் மதிப்பு கொடுக்காமல் போனாலும் ரித்தீஷ் அதனை கண்டு கொண்டதாகவே இல்லை…. அவன் ஏதோ அமைதியின் சிகரமாக வண்டி ஓட்டும் பணியை மட்டும் செவ்வேன செய்தான்.
ஞாயிறு அதுவும் எதற்காக மாமா அழைக்கின்றார் ஏற்கனவே ஐஸூ என் மேல கொலை வெறியில் இருக்கா.. நான் வேற அங்க போனோமா? என கிளம்பினான்.
மதியம் உணவு உண்ண வைதேகி தம்பிக்கு பார்த்து பார்த்து பரிமாறிட தணிகாசலம் மாடியில் இருந்து இறங்கி வந்தார்.
”இது கல்யாண பத்திரிகை ஏதாவது போட மறந்திருக்கா என்று நீயும் ஒரு முறை பாரு… உனக்கு இந்த டிசைன் பிடிச்சுருக்கா? உனக்கு எத்தனை பத்திரிக்கை வேணும் அதுவும் சொல்லிடு” என தணிகாசலம் கொடுத்து சோபாவில் அமர அவனோ உடனடியாக சாப்பிட்டு கை அலம்பி, பார்த்து முடித்தவன் அங்கு இருந்த பெண் ஸ்டாண்ட்டீல் இருந்து பென்சிலை எடுத்தவன் அவனின் பெயருக்கு பின்னால் எம்.பி.ஏ என எழுதி, மேலே கொடுபோட்டு இருந்தான். பின்னர் அதனை கொடுத்து விட்டு
”எனக்கு 50 போதும் மாமா தனி தனியா எல்லாம் கொடுக்க மாட்டேன்… போதும்.. கிளம்பறேன் மாமா” என்றவன் வைதேகியிடம் தலையசைப்புடன் நகர
”நீ எம்.பி.ஏ படிக்கறியா?” என தணிகாசலம் அதிர்ச்சியாக கேட்க, ஐஸூவோ மனதில் ‘ஆமா ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் கூட கண்டுப்பிடிக்க தெரியாது.. இதுல இங்கிலீஷ்ல வேற இருக்கற பக்கத்தினை புரட்டி பார்க்குறது’ என முனங்க தந்தை, ரித்திஷிடம் கேட்ட கேள்வியில் அவனையே பார்க்க அவனோ
”ஆமா மாமா இன்னும் ஒன் மந்த்ல ரிசல்ட் வரும்..” என்றான் அமைதியோடு.
”எப்போ டா படிக்க ஆரம்பிச்ச? படிக்க பணம்?” என்று வைதேகி கேட்டு மலைத்தார்.
”மன்னிச்சுடு அக்கா உன்கிட்ட மறைக்கணும் நினைக்கலை… உனக்கு ஆனந்த அதிர்ச்சியா கொடுக்க நினைச்சேன்.. ரிசல்ட் வந்ததும் சொல்ல நினைத்தேன் ஆனா இன்னிக்கு பத்திரிகையில் போட எழுதிட்டேன்… இலக்கியா தான் ஃபார்ம் கொடுத்து வற்புறுத்தி சேர்த்து விட்டா…. அவர் அப்பா சம்பளத்தில் படிக்க அவளே எடுத்து வைக்க சொல்லி அதிலே கட்டிட்டேன்…” என முடிக்க ஐஸ்வர்யா மனதில் ‘அவ யாரு இலக்கியா?’ என்று இப்பொழுதே ஓடி கொண்டு இருந்தது.
”ஏன் டா படிக்கற என்று சொன்னா மாமா படிக்க வைக்க நினைக்கும் பொழுதே படித்து இருக்கலாம் தானே?” என்றே வைதேகி கேட்டார்.
”அது…. அப்போ தோணலை அக்கா. முதலில் தனியா என் சுயகாலில் நிற்க தான் நினைச்சு ஆட்டோ ஒட்டினேன். அதுல வரும் பணம் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்க படிக்க சொல்லவும் சரியா தோணுச்சு அதனால படிச்சேன். ” என்றான்
தணிகாசலத்திற்கு இந்த விஷயம் முகத்தில் அடித்தது போல இருந்தது. இவனை படிக்க வைக்க பெரிதாக வைதேகியிடம் சொல்ல செய்தவர் தான்.. ஆனால் வெளியே சிலரிடம் சுயகாலில் நிற்க தெரியாதவனுக்கு நாம கல்வியாவது கொடுக்கணுமே அதுக்காகவாது படிக்கட்டும்…. ஏற்கனவே சோறு தங்க இடம் துணிமணி அதுயிது செய்துட்டு இருக்கேன் படிப்பும் கொடுக்க செய்துடுவோம்… எவனோ ஒரு அனாதைக்கு செய்யறதா நினைச்சுக்க வேண்டியது தான்” என்று ஒரு முறை யாரிடமோ சொன்ன அன்று ரித்தீஷ் அதற்கு பின் ஒரு வாரம் கழித்து தான் படிக்க மறுத்தான். கல்லூரியில் செல்ல பிடிக்காமல் ஆட்டோ ஓட்ட போனான் என்பதே இப்பொழுது புரிய தலைக்குனிய, ரித்தீஷ் நிமிர்ந்து கிளம்பி சென்றிருந்தான்.
ஐஸ்வர்யா திகைத்து போனாள். அடுத்த நாள் அவனை பார்க்கும் பொழுது இவன் எம்.பி. ஏ படிக்கின்றான் நாம இன்னும் பி.பி.ஏ இன்னும் படிச்சுட்டு இருந்துட்டு என்னஎன்னமோ பேசிட்டோம்… ஏன் அப்பா படிக்க வைக்கும் பொழுது படிக்கவில்லை என கேட்க துடித்தாள் ஆனால் இலக்கியா யாரு என்ற அதிமுக்கிய கேள்வி தான் அவளால் கேட்க முடிந்தது.
”யாரது இலக்கியா?” என கேட்டு அவனை கண்ணாடியில் பார்க்க அவனோ ஒரு பார்வை மட்டும் பார்த்து விட்டு ரோட்டில் கவனம் செலுத்தி ஓட்ட
”உங்களை தானே கேட்கறேன்…” என சிடுசிடுக்க கல்லூரி வர இறங்க
”ஹ்ம்ம… என் லவ்வர்..போதுமா” என்று சொன்னவன் ஆட்டோவை திருப்பி கிளம்பியிருந்தான்.
ஐஸ்வர்யாவுக்கு அதன் பின் எதுவும் கேட்கவில்லை என்பதே நிஜம்… அன்றைய நாளில் எப்படி வகுப்புக்கு போனாள். எப்படி வீட்டுக்கு திரும்பினாள் இதோ இரவு என்ன உண்டாள் என்பது வரை அவள் அறியாதது.
மனம் முழுதும் ஒருவித பாரத்தோடு தலையணையில் இறுக்க பற்றி இருந்தாள்.