Skip to content

தாரமே தாரமே வா-11

57 / 100 SEO Score

அத்தியாயம்-11

 

ஒரு மணி நேரம் கதவை கதவை பார்த்தாள். ரித்தீஷ் வருவதாக இல்லை என்றதும் பசி வேறு அவளை வாட்ட ஏற்கனவே பசி பொறுக்காத ஐஸ்வர்யா அவன் பார்த்த நினைவை ஒதுக்கி மெல்ல மெல்ல வெளியே வந்து இரண்டு பக்கமும் பார்க்க அங்கே இடம் இருந்தே ரோட்டில் நடப்பது எல்லாம் தெரிந்தது. கீழே யாரோ அடிவாங்கும் சத்தம் கேட்க படியில் இறங்கினாள்.

படியில் இருந்து பார்க்கும் பொழுது சரியாக இலா அடிவாங்கி கீழே விழுவது மட்டும் புலப்பட அதற்குள் அடித்த நபரை ரித்தீஷ் தடுத்து நிறுத்தினான்.

”அண்ணாச்சி நீங்களே இப்படி செய்தா நல்லா இருக்கா?” என்று கேட்க

”பின்ன என்னடா.. அவ பேசியதை நீயும் தானே கேட்ட… தப்பா தெரிலை.. சொல்றதுக்கே கூசுது… இவ இரண்டாதாராமா போவாளா? என்ன கொழுப்பு” என பெல்ட் எடுக்க ரித்தீஷ், அதனை எடுக்க விடாமல் தடுக்க சண்முகம் அப்பொழுது தான் ஐஸூவை பார்த்து அமைதியானார்.

”உள்ள வா மா” என்றதிலே ஐஸ்வர்யாவிற்கு அவரை பார்த்ததும் கிலி தான். தனது தந்தையிடம் எப்படி எல்லாம் பேசி இருக்கின்றாள். ஆனால் அப்பா ஒரு முறை கூட அடித்தது இல்லை. இவர் என்ன இப்படி பெல்ட் எல்லாம் எடுத்து அடிகின்றார் என பயந்து போக மகாலட்சுமி கண்கள் கலங்கியது.

”அப்பா பொண்ணு இப்படி தான் நீ உட்காரும்மா சாப்பிட” என்றதும், அவளோ ரித்திஷை பார்க்க அவனோ “உட்கார்” என்றான்.

ஐஸ்வர்யாவிற்கு இப்படி யாரோ ஒருவரின் வீட்டில் உண்ண பிடிக்கவில்லை.. இருந்தும் பசி வாட்ட அமைதியாக அமர்ந்தாள்.

”சாரிம்மா உன்னை முதலில் பார்க்கறேன் ஆனா இப்படி ஒரு சூழ்நிலை.. ரித்தீஷ் சொல்லி இருப்பான் நினைக்கறேன்…. ”

”அண்ணாச்சி ரியாவுக்கு எதுவும் தெரியாது.. நான் இன்னும் எதுவும் சொல்லலை” என்றான்.

”முதலில் சாப்பிடுங்க” என மகலட்சுமியிடம் பரிமாற சொல்ல உணவை விழுங்கினாள்.

இலா அங்கிருந்து எழ பிடிக்காமல் அப்படியே இருந்தாள்.

சுட சுட இட்லி சட்டினி விழுங்க மூன்று விழுங்கியது தான் ஐஸ்வர்யா மற்றவையை ஒழுங்காக பார்த்தாலே. ஒரு குரூப் படம் மற்றும் அதில் ரித்தீஷ் கையை பற்றி இலா இருக்க கண்டவள் எதுவும் பேச முடியாமல் மீண்டும் சினம் மட்டுமே வாய்க்க, அதனை இங்கே காட்டவும் முடியாது நின்றாள்.

ரியா இங்கு உண்பதே அதிசயம் என்பது போல எண்ணிய ரித்தீஷ் அவளை மேல போய் ரெஸ்ட் எடுக்க சொல்லி அவளை அனுப்பி வைத்தான். திரும்பி திரும்பி பார்த்து அவளும் சென்றாள்.

ரித்தீஷ் ரியா சென்றதை அறிந்து கொண்டு ”இலா சொல்றதில் என்ன அண்ணாச்சி தப்பு? அவள் சரியா தானே சொல்றா? கல்யாணம்.. ஹ்ம்” என சலிப்போடு சொன்னவன் ”அது ஒரு கட்டாயத்தில் தானே… உங்களுக்கு தெரியாததா? எனக்கு இலா மனசு புரியுது… அவ எண்ணத்திலே எந்த தப்பும் இல்லை” என்று சொல்ல சண்முகம் திடுக்கிட்டு அவன் முகத்தை கண்டார்.

”இது சமுதாயத்திலே ஏற்றுக்க மாட்டார்கள் ஈஸ்வர்… நீயா இப்படி பேசற?”

”சமுதாயமா அண்ணாச்சி அந்த கல்யாணம் தேவையா இல்லையா கேட்டு இருந்தது… அதுவா பண்ணி வச்சாங்க அதுவா போகணும்.. என்ன கொஞ்ச நாள் மட்டும் இருந்து விட்டு அனுப்ப செய்யனும் நாம நடந்து கொள்வதிலே அவங்க செய்தது தப்பு என்று உணரனும்.. அப்போ தான் இப்படி ஒரு சூழ்நிலையில் நம்மளை திணிக்க மாட்டாங்க அதே சமயம் நம்ம வாழ்க்கை ஒன்னும் அதோட முடியறதில்லையே… இலா கல்யாணம் ஆனா பின்ன உங்களுக்கும் மனதில் சந்தோஷம் கிடைக்குமே அது போதாதா?” என்று கேட்க

சண்முகம் மனமும் ஏதோ சாய ”சரி… பார்க்கலாம்.. கொஞ்ச நாள் போகட்டும்….” என்றார்.

ரித்தீஷ் ”நன்றி அண்ணாச்சி” என புன்னகையோடு கிளம்பினான்.

”ஏலே… அது என்ன மகா மட்டும் அக்கா? என்னயே அண்ணாச்சி சொல்லுதே” என்று கேட்க

”அது பழகிடுச்சு அண்ணாச்சி” என மாடிக்கு விரைந்தான். இலா இம்முறை எழுந்துகொள்ள சிரமப்பட சண்முகம் அவரே சென்று உதவிப்புரிய போனார்.

”மன்னிச்சுடு டா.. உன் ஆசை தான் முக்கியம் என்று நினைக்கறியேனு தப்பா நினைச்சிட்டேன். ஆனா அந்த பொண்ணுக்கும் அவனை பிடிக்கமா தான் வந்திருக்கா என்று எனக்கு தெரியாது… இனி உனக்காக யோசிச்சு முடிவெடுக்கறேன். அதுவரை கொஞ்சம் பொறுமையா இருடா” என்று சொல்ல இலா கண்களை துடைத்து கொண்டே சண்முகம் ஊட்ட உண்டாள்.

தன்னை அடித்ததும் தந்தை இப்படி தான் உணவை புகட்டுவார் என அறிந்த இலா ”அப்பா அவன் நல்லவன் தானே அப்பா அவன் கட்டாயத்தில தானே தாலி கட்டினான் தவிர அவனுக்கு விருப்பம் இல்லைப்பா.. நீங்க தானே அடிக்கடி சொல்லுவிங்க. அவன் எல்லாம் நல்லா வருகின்ற ஆளு. அப்பா அம்மா இருந்தா இன்னும் நல்லா முன்னேறி இருப்பார் என்று…” என்றதும்

”அப்படி இல்லை இலா அவன் வேற… நாம வேற…” என்றவரிடம்

”நீங்க சாதி மாதம் பார்க்கற ஆளா அப்பா… எனக்கு தெரியாதா?” என ஏக்கத்துடன் கேட்டாள்.

”ஊரில் அப்படி பேச மாட்டாங்க ம்மா நம்ம வீட்டில் இருந்து இப்படி செய்துட்டானு”

”சொல்லட்டும் பா… ஊருக்கு என்ன? எது நடந்தாலும் பேசும்…. இதுவரை எனக்கு கல்யாணம் பேசும் பொழுது எல்லாம் நொண்டி ஊனம் என்று சொல்லி எத்தனை பேர் வேண்டாம் சொன்னாங்க.. ஆனா இந்த குறை தெரியாம அவன் என்னை பார்த்துக் கொள்ளும் பொழுது எனக்கு சந்தோஷமா இருந்தது ப்பா… அப்படிபட்டவன் மேல பாசம் வைக்கின்ற அந்த காதல் தப்பா?”

”காதல் தப்பு இல்லை டா ஆனா கல்யாணம் ஆனா பின்னே ஒருத்தருக்கு ஒருத்தர் பாசம் வந்துடும் சிலருக்கு… அது போல் மாறினா அதானால தான் கல்யாணம் ஆனவன் வேண்டாம் சொன்னேன். அவன் ரொம்ப நல்லவன் தான் உன்னை விரும்பி ஏற்றுக்க எண்ணும் பொழுதே எனக்கு புரிந்துடுச்சு… அதனால தான் அவனை இன்னும் அனுப்பாமல் இருக்கேன்” என வருடி கொடுத்தார்.

மகாலட்சுமி ‘பகவானே அந்த பொண்ணு சீக்கிரம் அவன் லைஃப்ல இருந்து போகணும் அப்போ தான் என் மகள் வாழ்வு செழிக்கும்.. இது சுயநலம் தான் ஆனா மாற்று திறனாளி மகளுக்கு நடக்கும் ஒரு நல்ல விஷயம் என்றே மனசுக்கு படுது” என்று வேண்டினார்.

ரித்தீஷ் மேலே வந்ததும் ஐஸ்வர்யாவோ ”அங்க என்ன நடக்குது? எதுக்கு அவர் பொண்ணையே அடிச்சார்…இங்க பாரு எனக்கு அங்க எல்லாம் சாப்பிட பிடிக்கலை.. இனி கீழே வர மாட்டேன்’ என்றாள்.

ரித்தீஷ் கையை கட்டி அவளை பார்க்க அவளோ ”மாமா உன்கிட்ட தான் சொல்றேன் எப்ப பாரு இடிச்சபுளி மாதிரி நிற்காதே சரியா” என்றாள். அவள் கொஞ்ச நேரம் முன் அணிந்த டவலை அவன் மீது தூக்கி எறிந்தாள்.

அதில் வாசம் பிடித்தவன் அவனுக்குள் ஒரு சொல்ல முடியா உணர்வை தர டவலில் அவள் நின்ற நிலை கண்ணில் தெரிய வாசம் நுகர்ந்தவன் அவள் கட்டி இருந்த பகுதி தவிர இருந்த அவள் மேனியில் நினைவு செல்ல, அவனுள் என்னானவோ வேதியல் மாற்றம் உருவானது. அதையே எண்ணியவன் காலில் பார்வை பதிந்து மீள அவளின் கணுக்காலில் போக அவன் அக்கா சுடு வைத்த தழும்பு எண்ணி பார்த்தவன் திடுக்கிட்டு போனான்.

அவளை இதுவரை குழந்தையாக எண்ணி இருந்தவனின் பார்வை ஏன் மாறியது என தோன்ற ரித்தீஷ் அவனின் மனதை வெறுத்தான்.

தானா? தானா அப்படி ரியாவை அப்படி கழுத்தின் வளைவில் கண்களை பதித்து பார்த்தது. இந்நாள் வரை என் பார்வை அவள் கண்களை தவிர்த்து போயிருக்குமா? இன்று எனக்கு என்னாச்சு? அவள் நின்ற நிலையா? அப்படி என்றால் அந்த இடத்தில் யார் இருந்தாலும் அப்படியா பார்த்து இருப்பேன் சே நான் கேடு கெட்ட பிறவியாகவா மாறிவிட்டேன்.

அவனின் மனமே அவனுக்கு எதிராக நடக்க இடத்தினை விட்டு வெளியேறினான்.

ஆட்டோ சவாரி சென்றால் என்றுமே அவன் மற்றவைகளை மறப்பான் அதில்சாலையில் ஓட்டும் கவனம் மட்டுமே செல்லும் என்றதும் அப்படியே செல்ல நேராக ஆட்டோ ஸ்டண்ட் சென்றான்.

அங்கே எல்லோரும் ஈஸ்வரை கேலி கிண்டல் செய்ய அதிலே கொஞ்சம் கவலை மறந்தான்.

மதியம் உணவு உண்ண அங்கே இருக்கும் நபர்கள் அழைக்க அவனோ மறுக்க என்னப்பா இப்படி மஸ்தான போல பீகு பண்ணற ஈஸ்வர்.. அவனும் இப்படி தான் இரெண்டு நாளா சாப்பிட கூப்பிட்டா ரொம்ப பண்றான்.” என்றதும் ரித்தீஷ் மனதில் ஐயோ இப்போ ரியா சாப்பிட செய்யனுமே என்று நல்ல உயர் தர ஹோட்டலில் சென்றவன் பார்சல் வாங்கி கொண்டு மாடிக்கு ஓடினான்.

அங்கே ரியாவோ இவனை பார்த்து அழுதபடி அருகே வந்தவள் ”நான் பசி தாங்க மாட்டேன் என்று உங்களுக்கு தெரியும்ல அப்படி இருக்கும் பொழுது எதுக்கு இப்படி லேட்டா வாங்கி வந்திங்க” என சொல்லி பிடுங்கி உணவுபெட்டியினை பார்க்க அது அவளுக்கு பிடித்த உணவகத்தின் பெயராக இருக்க திறந்து பார்த்தாள்.

அதில் அவளுக்கு பிடித்த பிரான் ஃப்ரைடு ரைஸ் இருக்க ரித்திஷை கட்டி பிடித்து ”தாங்க்ஸ் எனக்கு இந்த ஹோட்டலில் பிரான் ஃப்ரைடு ரைஸ் ரொம்ப பிடிக்கும்..” என அவளின் அம்மா அவளுக்கு பிடித்ததை கொடுத்தால் அவர்களை கட்டி அணைப்பது போல இவனையும் அணைத்து விடுவித்து உணவினை சாப்பிட்டாள்.

ரித்தீஷை அவள் அணைத்த பிறகு அவன் மனம் தீயாய் பற்றி கொண்டது. அவனுக்குள் அவள் குழந்தை இல்லை குமரி என்ற எண்ணம் அவனின் மனதிலே காலையிலே பதிந்து போனாலும் மனம் ஏற்க மறுத்து குழப்பத்தில் கிடந்தவனுக்கு அவளின் அணைப்பில் அவன் மனம் தடுமாற செய்ததும் உணர்ந்து விட்டான். ‘ஐஸூ குழந்தையாக இருக்கலாம் ஆனால் இந்த ரியா குழந்தை அல்ல இவள் குமரிடா’ என மேலும் பதிந்து போனது.

 

-தொடரும்.

1 thought on “தாரமே தாரமே வா-11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!