Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே-24

53 / 100 SEO Score

அத்தியாயம்-24

 

மெர்ஸியின் கன்சீவ் ஆனதை தன் வீட்டிலும் தன் புகுந்த வீட்டிலும் ஒரே நேரத்தில் கூறி, தோழி துகிராவிடம் பேசி சிரித்து அணைத்துவிட்டாள்.

 

அன்றைய இரவு அம்மா வீட்டில் நிர்மலா கை பக்குவத்தில் நிறைய விதவிதமான கேரள உணவை சுவைத்து முடித்து பேசி சிரித்தார்கள்.

 

நீண்ட நாட்களுக்கு பிறகு, மெர்ஸி மேத்யூவும் அன்னை வீட்டில் இருக்க, சார்லஸ் சாரா இருவரும் அந்த வீட்டில் இருந்தார்கள்.

 

சார்லஸ் தான், “நம்ம வீட்டுக்கு கிளம்பலாமா?” என்று கேட்க, “அய்யடா.. டாக்டர் சாரே… அத்தை உங்களை இ நல்ல நாளில் இருக்க சொல்லி ரெக்வஷனஸ்ட் வெச்சு. நிங்கள் இப்படி நம்ம வீட்டுக்கு ஓடினால் சரியாகுமோ.” என்று கூறி அங்கேயே தங்கினார்கள்.

 

நிர்மலா கூடுமானளவு மற்றவர்கள் எதிரில் சாராவை நன்றாக பேசி சிரித்து மகிழ்ந்தார். தனித்து மாட்டும் நேரம், ‘ஏதோ குழந்தையே பிறக்காதது போல சாடல் பேச்சு நாசூக்காய் கொளுத்தி விட்டார். சாரா அதற்கேற்றது போல முகம் வாடாமல் இருக்க மெனக்கெட்டாள்.

 

சார்லஸ் அப்படியிருந்தும், “கல்யாணம் முடிந்து பத்து மாசம் கூட ஆகலை. அதுக்குள்ள குழந்தை குட்டினு. ஓகே.. மெர்ஸி மேத்யூவுக்கு கடவுள் சீக்கிரமா குழந்தை தந்துட்டார். அதுக்காக நமக்கு இல்லைனு அர்த்தமில்லை சாரா.

இங்க பாரு… நமக்கும் சீக்கிரம் குழந்தை பிறக்கும். நான் உன்னை சந்தோஷமா தானே பார்த்துக்கறேன். ஏதும் குறை வைக்கலையே.” என்று சார்லஸ் தான் மிகவும் கவலையாய் கேட்டான்.

 

“டாக்டர் சாரே… எந்து இப்படி சம்சாரிக்கறது எனிக்கு கஷ்டமாயி.

எனிக்கு நிங்களோடு விவாகம் ஏற்பட்ட கூட அச்சத்தில் இருந்தே. பட்சே… நிங்களிடம் மனசுவிட்டு பேசி நான் எந்த சந்தோஷமாயி. நிங்கள் எவ்வட சந்தேகமாய் கேட்டு. நிங்களை விவாகம் செய்து நான் குறை கண்டில்லா. நான் ஆனந்தமாய் வாழ்வதை எங்கனம் நான் ப்ரூப் செய்யும். முதலில் டாக்டர் சாரே.. டாக்டராய் யோசிங்கள்.” என்று அவனை கட்டியணைத்து கொண்டாள்.

 

குழந்தை போல தன் மீது சாய்ந்து, தன் தோளில் இரண்டு கைகளையும், போட்டு நின்றவளை கண்டு நிம்மதியானான்.

 

அடுத்த நாளே சார்லஸ் சாராவை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

 

“சார்லஸ்… கவனமா போடா…” என்று மகனை பார்த்து வாஞ்சையாக பேசினார் நிர்மலா.

ஆனால் சாராவிடம், ஒரு நொடிக்கு கூட நிர்மலா பேசவில்லை.

பேசாமலேயே ஒரு பார்வை வீசினார்.

 

சார்லஸ் எதிரில் கேள்வி கேட்கவில்லை. குற்றம் சுமத்தவில்லை. அப்படியிருந்தும் ‘குழந்தை பாக்கியம் எல்லாம் இல்லாமல் போனதற்கு நீயே காரணம்’ என்று சொல்லாமலேயே சொன்னது அப்பார்வை.

 

சாரா அங்கேயே நின்றாள்.

அவள் சிரிக்க முயற்சித்தாள். உதடுகள் மட்டும் விரிந்தது‌.

இதயம் மெதுவா சுருண்டது.

சார்லஸ் பைக்கை ஸ்டார்ட் பண்ணிக் கொண்டிருந்தான். அதனால் அவன் சாரவை கவனிக்கவில்லை.

 

மெர்ஸி மட்டும் தாய் வீட்டில் தங்கினாள். அந்த நாளில்

சின்ன சின்ன சிரிப்புகளுக்கு பஞ்சமின்றி இருந்தாள்.

 

மரியம், அந்தோனி இருவரும் மெர்ஸியை தாய் வீட்டில் சில காலம் இருந்து கவனித்துக் கொள்ள இருக்க கூறிவிட்டார்.

 

மேத்யூ அவளை ஒருபடி கூட தனியா விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். மாமனார் வீட்டில் இருக்க தயங்கவில்லை‌.

“சாப்பாடு ஒழுங்கா சாப்பிடணும்.  நேரத்துக்கு ரெஸ்ட் எடுக்கணும்”

என்று அவன் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் தனக்கானவளுக்கான அன்புடன் இருந்தது. அங்கே வந்திருந்த நிர்மலாவும் அந்த சூழ்நிலையில்…

ஒரு அம்மாவாக மட்டும் மெர்ஸியிடம் நடந்துக் கொண்டார்.

 

சம்பந்தியோடு சுமூகமாக பேசினார், சிரித்தார். மருமகளை கவனித்துக்கொள்ள.

அனைத்தும் சரியானதாக  தான் இருந்தது. சாப்பாடு முடிந்து,

மெர்ஸியாக, “அத்தை… இன்னும் கொஞ்சம் இருந்துட்டு போங்க…” என்றாலும் மரியம் மெதுவாக சிரித்தார்.

 

“நீ ரெஸ்ட் எடு மொளே… நாங்க போறோம்…” வீட்டு வாசலில்…

நிர்மலா, மரியத்தையும் அந்தோனியையும் மிகுந்த அன்போடு வழியனுப்பினார்.

“பாதுகாப்பா போங்க சம்பந்தி கவனமா இருங்க” என்றவர் குரலில் உண்மை இருந்தது

 

அந்த இரவு சார்லஸ் சில கேஸ்கள் பற்றிய அக்கறையில் இருந்தான்.

சாரா… சமையலறையில் இருந்தாலும் அவள் மனசு வேறங்கோ இருந்தது.

“சாரா…” என அவன் அழைத்தான்.

“ஹ்ம்…?” என்றாள்.

 

“என்னாச்சு… இவ்வளவு சைலண்டா இருக்க?” என்று கேட்டான்.

 

“ஒன்னுமில்லை” என அவள் சிரிக்க முயற்சித்தாள்.

சார்லஸ் அவளை கூர்ந்து பார்த்தான். அவனாக காரணம் கேட்கவில்லை. சார்லஸிற்கு தான் அவளை புரிந்துவிட்டதே.

 

ஒரு வாரம் ஒடியிருக்கும்… அந்த நேரத்தில்… அவனுடைய போன் ஒலித்தது. தங்கை மெர்ஸி தான் போனில் அழைத்தாள்.

“ஹலோ… மெர்ஸி…” என்று அட்டன் செய்த மறுகணம், அவன் முகம் மெதுவா மாறியது.

“அப்படியா.. அட சூப்பர்.. வளைகாப்புக்கு தானே… சரி… சரி… நீ கேர்புல்ல இரு. பார்க்கலாம்..” என்று போனை வைத்தான்.

 

“என்னாச்சு டாக்டர் சாரே…?” என்று சாரா கார்லஸ் முகத்தை கூர்ந்து பார்த்து கேட்டாள்.

 

“துகிராவுக்கு ஒன்பதாம் மாதம்  பிறந்துருக்காம். வளைகாப்பு விழா வச்சியிருக்காங்க. மெர்ஸியிடம் இன்வெயிட் பண்ணிருக்கா. மெர்ஸி அம்மா வீட்டுக்கு வந்திருக்கா என்றதும், நானும் அங்க ஒன்னா இருப்பதா நினைச்சி என்னிடம் சொல்ல சொல்லியிருக்கா.” என்றவன் ஒரு நொடிக்கு சாரா அமைதியா நின்றாள்.

“ஓ… துகிரா சேச்சி நிங்களிடம் போன் செய்து கதைக்கலையோ?” அவள் மெதுவா கேட்டாள்.

 

“என்னிடம் நேரிடையா எப்படி சொல்வா. துகிரா தயங்கியிருக்கலாம்” என்று தோட்டத்துக்கு நடந்தான்.

 

சாரா இரண்டு நொடி ஹாலில் அங்கும் இங்கும் உலாத்தி, சார்லஸ் அருகே ஓடி வந்தாள்.

“நாம வளைகாப்பு விழாவுக்கு போகலாமா…?” என அவள் கேட்டாள்.

சார்லஸ் உடனே பதில் சொல்லவில்லை. “வேண்டாம் சாரா…” என்று மறுத்து நின்றான்

 

“ஏன்…?” என்று அவன் திரும்ப, முன்னே முன்னே வந்தான்.

 

“நாம போய் பார்த்தா… நீ அன்னெஸ்சரியா யோசிப்ப. தேவையில்லாத கஷ்டம். ஆல்ரெடி அம்மா ஏதாவது சொல்லியிருக்க, நீ ஏதாவது மனசுல நினைச்சா கஷ்டம் தானே” என்று சார்லஸ் நேராகவே சொன்னான்.

 

“நான் அப்படிப்பட்டவளா டாக்டர் சாரே…?” என்றவள் குரல் மெதுவா மாறியது.

 

“நீ இல்லை… ஆனா நம்ம மனசு… மனசு எந்த நேரம் எப்படி நினைக்கும்னு யாருக்கும் தெரியாது.” என்று சார்லஸ் சொல்லி நிறுத்தினான்.

 

சாரா சில நொடிகள் அமைதியா நின்றாள். “நான் போய் துகிரா சேச்சியை பார்க்கணும்…” என்று

இந்த முறை அவள் முடிவு எடுத்தது போல பேசிட, சார்லஸ் அவளை பார்த்தான்.

 

அவள் கண்களில் பயம் இல்லை.

தீர்மானமாக சார்லஸிடம் கேட்பதாக இருந்தது.

 

”ஹனிமூனுக்குனு நாம எங்கிலும் காணலா. அட்லீஸ்ட், துகிரா சேச்சியை காண நாம சென்னைக்கு போயி.” என்றாள்‌.

 

“சென்னைக்கு போயி… புது சி.எம்மை பார்க்கவா?” என்று லேசான கோபத்தில் கேட்டான்.

 

“ஆஹஹ.. டாக்டர் சாரே… புது சி.எம். நம்மட ஊராக்கும். மலையாளி. இன்னொன்னு கவனிச்சேளா… சி.எம் நம்மட ஜோஸப்” என்று மகிழ சார்லஸ் இடுப்பில் கையை வைத்து முறைத்தான்.

 

அந்த நேரத்தில்… சார்லஸ் மொபைல் மீண்டும் ஒலித்தது.

துகிரா தான் சார்லஸிற்கு அழைத்து வளைகாப்பிற்கு வருவதற்கு அழைம்பை விடுத்தாள். போதாத குறைக்கு இஷானின் அம்மாவைமுறைப்பஞி அழைத்தாள்.

 

சார்லஸ் வருவேன் என்றோ வரமாட்டேன் என்றோ இரண்டையும் உரைக்காமல் போனை துண்டித்தான்.

 

”போனில் இப்ப யாராக்கும்?” என்று சாரா கேட்க, மீண்டும் போன் மணி சிணுங்கியது.

 

“ஹலோ டாக்டர்…

சென்னையில் அடுத்த வாரம் கான்பரன்ஸ் இருக்கு…” என்ற குரலுடன், சார்லஸ் பேசிக்கொண்டிருந்தான்.

சாரா மெதுவா அவனை பார்த்தாள். சார்லஸ் போனை வைத்து மறுபுறம் திரும்பினான்.‌

 

அவன் போன் வைத்ததும்

“சென்னையா…?” என்று அவள் கேட்டாள்.

 

“ஹ்ம்… இரண்டு நாள்…”

“நானும் வர்றேன்.”

சார்லஸ் உடனே புரிய்மல் பார்த்தான்.

“சாரா… இது மெடிக்கல் பீல்டுல நடக்கற மீட்டிங்…”

“எனக்கு தெரியுது” அவள் மெதுவா சொன்னாள். ”பட்சே.… நான் நிங்களோட சென்னை வரணும். எனிக்கு துகிரா சேச்சியை நேரில் காணணும்” என்று அடம் பிடித்தாள். அந்த சிறுகுழந்தையின் அடம் போல சாரா செய்கை இருக்க, சார்லஸ் மறுக்க முடியாத வகையில் இருந்தது.

சில நொடிகளுக்கான யோசனை இருக்க, அவன் அவளை கூர்ந்து பார்த்தான்.

“சரி சென்னை கூட்டிட்டு போறேன்” என்று சிரித்தான்.

 

வீட்டில் நிர்மலாவுக்கும் மெர்ஸிக்கும் இவ்விஷயம் தெரிய, மேத்யூவோ “நீ தான் துகிராவுக்கு பிரெண்ட். நீயே இந்த மாதிரி கன்சீவா இருக்கறப்ப போக வேண்டாம்னு விட்டாச்சு. ஏன் உங்கண்ணா பாஸ்ட் லவ்வரை தேடி போறான்” என்று சற்று கோபமாக கேட்டான்.

 

மொர்ஸியோ “ஏன்னா… சார்லஸ் துகிராவும் பிரெண்ட்ஸ்.

லவ் பண்ணறதுக்கு முன்னயிருந்தே அவன் அவளை நல்ல தோழியா பார்த்திருக்கான் மேத்யூ. அதை மீறி அண்ணாவை துகிராவை பார்க்க போகாதனு  அவனோட பெர்சனல் லைப்ல, நான் மூக்கை நுழைக்க முடியாது. நீங்க வேண்டுமின்னா உங்க தங்கை சாராவை கேளுங்க. சொல்லப்போனா துகிரா சேச்சியை பார்க்கணும்னு அடம் பிடிக்கறது உங்க தங்கை சாரா தான். எங்கண்ணா சார்லஸ் சென்னையில நடக்கற மெடிக்கல் மீட்டிங்கு தான் போறான்.” என்று திருப்பி தந்தாள்.

 

மேத்யூ சாராவிற்கு போன் போட்டு பேச, அவளுமே ‘அய்ய சேட்டா… சார்லஸ் மெடிக்கல் மீட்டிங் நடக்குன்னு பறைஞ்சது. நான் தான் எங்கயும் போகாம வீட்டில் இருக்க போரடிக்குன்னு சென்னையில் துகிரா சேச்சியை காண ஆவலா போறது.” என்று கூற, மேத்யூவோ போனை அணைத்தான்.

‘அவனே விட்டாலும், இவ துகிராவை பிடிச்சிட்டு தொங்கறா. பைத்தியம்’ என்று முனங்கினான்.

 

பஸ் ஜன்னல் வழியே நகரம் கடந்து போனது.

சாரா இந்த முறை அமைதியாக இல்லை. அவள் சார்லஸ் தோளில் சாய்ந்திருந்தாள்.

 

“டாக்டர் சாரே…”

“ஹ்ம்…?” என்று கண் திறவாமலேயே பஸ்ஸில் இமை மூடியிருந்தான்.

 

“துகிரா சேச்சியை பார்க்க போறேன் அல்ல. அங்கே… நிர்மலா அத்தை போல யாரேனும் என்னை ஏதேனும் பறையுமோ?” என்று சுணக்கத்தில் கேட்டாள். அன்னையால் சாரா லேசாக காயம்பட்டதில் அவன் அவளை பார்த்தான்.

 

“ஏன் இப்படி கேட்கற.” என்று தோளில் கையை போட்டான்.

 

“நான் ரிலாக்ஸுக்கும், தமிழ் லெர்னிங்கும், சில தமிழ் படம் பார்த்தில்லா. அதில் படத்தில் கர்ப்பமாக இருக்கும் ஸ்திரிக்கு மத்த ஸ்திரிகளும் வளையல் போட போகும். அங்கே.. விழாவில் சிலர் பேபி இல்லா ஸ்திரியை வளையல் போட விடாது தடுத்து ஏசும். அது போல் சீன் நடந்துட்டுல் நான் எந்து செய்யும்” என்று சோகமாய் கேட்டாள்.

 

சார்லஸோ “துகிரா அப்படி பண்ணமாட்டா. பண்ணறவங்களை கூட வச்சியிருக்க மாட்டா.” என்று ஆணித்தரமாக கூறினான்.

 

சாராவோ “டாக்டர் சாரே… எந்திக்கு இத்தனை நம்பிக்கையாய் பறையுதே. துகிரா சேச்சி அந்தளவு நல்லவங்களோ?” என்று கேட்டான்.

 

“இல்லையா பின்ன. அவ லைப் ஸ்பாயில் ஆகும்ன்னு தெரிந்தும் அக்கா பொண்ணை தான் பொண்ணுனு உலகுக்கு அடையாளப்படுத்தி வாழ்ந்தவ. இஷான் மட்டும் வரலைன்னா. இப்பவரை அவ மேரீட் ஆகி தனித்து வாழறவளா தானே நான் நினைச்சிருப்பேன்.

ஓகே.. துகிராவை விடு. நீ ரொம்ப சமத்து பொண்ணாம். அங்க போய் கொஞ்ச நேரம் தலைக்காட்டிட்டு உடனே கிளம்பிடணும். அம்மா ஏதாவது சொன்னாலும், ஏன் வேற யாராவது ஏதாவது சொன்னாலும், மைண்ட்ல ஏத்தாம என்னை லவ் பண்ணுவியாம். நானும் நிறைய நிறைய லவ் பண்ணுவேனாம்” என்று கூற, சாரா மீண்டும் அவன் தோளில் தலை சாய்த்தாள்.

 

பிரைவேட் பேருந்து என்றதால் இவர்கள் பேச்சு கிசுகிசுப்பாய் பேசி சிரித்து இதமான பயணத்தில் தொடர்ந்தார்கள்.

 

சார்லஸிற்கு சாரா எவ்விதமான மனகசப்பையும் சந்திக்க கூடாது. சென்னை செ

ன்று திரும்பும் வரை, துகிராவால், துகிராவை சார்ந்தவர்களால், தன்னால் எந்த கஷ்டமும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென முடிவெடுத்தான்.

 

-தொடரும்.

 

1 thought on “பிரியமானவரே என் தேவதூதனே-24”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!