Skip to content
58 / 100 SEO Score

அத்தியாயம்-3

சத்ரியன் இந்த ஒருவாரமாக எவ்விதமான வேலையிலும் கவனம் செலுத்தவில்லை.
கோர்ட் வாசல் வரை சென்று வந்ததால் முதலில் தன்‌ மனதிற்கு உல்லாசம் தேவைப்படுவதாக டீலிங்கை எல்லாம் வினோத்தை பார்க்க கூறிவிட்டான்.

மது, மாது, இவர்களோடு புகைமண்டலத்தை உருவாக்கியபடி, வண்ண விளக்கும், பஞ்சு மெத்தைகளுமாக சல்லாபித்திருந்தான்.

இன்று மும்பையில் உள்ள பேமஸ் மேக்கப் சாதனத்திற்கென்று மாடலாக இருக்கும் அழகியுடன், உல்லாசமாக இருக்க, அவளும் வந்தாள்.

உதட்டில் இளஞ்சிவப்பு, கண்ணில் கள்ளுறும் போதை, அங்கங்கள் எல்லாம் அழகின் வனப்பாக இருக்க, மெத்தையில் துகிலுரித்தான் துரியோதனனாக.

தன் பெண்மையை தானமாக தந்து கடவுளை ஆராதிக்கும் மனதுடன் சத்ரியனோடு கூடலில் கலந்த பெண், சத்ரியனின் அழகில் சொக்கி போயிருந்தாள்.

“யார் நீ? இவ்ளோ அழகா ஆண்மையுடன், கவர்ச்சியா இருக்க. என்னை கல்யாணம் செய்துக்கறியா?” என்று அழகின் கர்வத்தில் அப்பெண் ஆங்கிலத்தில் கேட்க, மதுவை ஊற்றி அவளை பார்த்து, “என் பெயர் தெரியுமா? நான் யார்னு தெரியுமா? இங்க எப்படிப்பட்ட இடத்துக்கு வந்திருக்கனு தெரியுமா?” என்று அடுக்கினான்.

அப்பெண்ணோ உதடு பிதுக்கி, “தெரியலை.. எதுவும் தெரியாது. ஆனா உன்னை பார்த்ததும் உன்னோடவே வாழணும்னு ஆசை அதிகமாயிருக்கு. நான் மும்பையில் மாடலிங் பண்ணறேன்.
உன் பெயர் என்ன?” என்றாள்.

சத்ரியனோ மதுவை தொண்டையில் சரித்து, சிகரெட்டை வாயில் வைத்து, தன் நெஞ்சில் பதிந்திருந்த சூரிய டாலரை சரிப்படுத்தி, ”சத்ரியன்” என்றான்.

தெனவெடுத்து மெத்தையில் கிடந்தவள், முதுகில் சூடுவைத்தது போல எழுந்தாள்.
“இப்ப ரீசண்டா…” என்று எச்சி விழுங்கி பேச முடியாது ஸ்தம்பித்தவளுக்கு மதுவை வழங்கி, “எக்ஸாட்லி” என்றான்.

அவனோடு சல்லாபிக்க வந்த அழகியோ, கைகள் நடுங்க, “யார் கூட படுக்க வந்தனு யாரும் சொல்லியிருக்க மாட்டாங்க. ஐ நோ.. இதை குடிச்சிட்டு வினோத்திடம் பணத்தை வாங்கிட்டு கிளம்பு. எப்படியும் எனக்கு ஒரு தடவை ருசி பார்த்த பண்டம், மீண்டும் சுவைக்க பிடிக்காது.” என்றான்.

அந்த அழகியோ அவசரமாக ஆடையை அணிந்தாள். மும்பையில் விளம்பர மாடலாக இருந்தவளுக்கு சென்னையில் உள்ள விஐபியுடன் டீலிங் பேசப்பட்டது என்று எண்ணினாள். ஆனால் பலதரப்பட்ட தொழில்களின் சாம்ராஜியத்தில் ஊறிய சத்ரியன் என்று அவள் அறியாதது. அவனால் தற்போது பலரும் இறந்து போனதாக  கேள்விப்பட்டிருந்தாள்.

“ஆமா… இப்ப என்னை மணக்க சம்மதமா?” என்று கேலி செய்தான். அவன் கேட்பதே அச்சுறுத்தும் விதமாக தெரிய, இல்லை என்று‌ மறுத்தாள்.

“ஏன் கை தந்தியடிக்கு? வாட் ஹாப்பன்” என்றான் சத்ரியன்.

“இல்லை… சத்ரியன் கேஸ் முடிந்து, இல்லம் திரும்பியதும், அனைவருக்கும், விருந்து உபசரித்து சரிக்கட்டி‌ அனுப்பியதா எங்க மாடலிங் மீடியேட்டர் பேசிக்கிட்டாங்க. அப்ப எங்களோட மாடலிங்ல இருந்த பெண் உங்களை சந்தோஷப்படுத்த வந்து, அவ உங்களை கொல்ல முயற்சிக்க, நீங்க அவளை… கொன்றுட்டதா கேள்விப்பட்டேன்.” என்று பயந்தாள்.

“எஸ்.. என்னை கொல்வதற்கு,  என் எதிரி அனுப்பினான். இவளுக்கு என்னோட தான் இரவு ஒப்பந்தமாகியிருப்பது தெரிந்தும் துணிச்சலா வந்து என்னோட கட்டில் கலந்தா.
காலையில் கொல்லலாம்னு சைனட் எல்லாம் கலக்க ரெடியா இருந்தா. பட்.. அவளை நான் கண்டுபிடிச்சிட்டேன் அதனால கழுத்தை அறுத்து கொன்னுட்டேன்” என்றான் அலட்சியமாக.

தற்போது சத்ரியனை மகிழ்வித்த பெண் அறைக்கதவை தட்டி, வெளியே ஓட முயன்று கத்த துவங்கினாள்.
“ஹே.. இப்ப எதுக்கு கத்தற? உன்னை கொல்ல ட்ரை பண்ணறேன்னா?” என்று அதட்டவும், இல்லையென்று கூறியவளுக்கு தன்னையும் கொன்றுவிட்டால்?

“என்னையும் கொன்றுடுவிங்களா? சார்.. சத்தியமா நீங்க யாருனு எனக்கு தெரியாது. எப்பவும் போல ஒரு பணக்கார பார்ட்டி என்று நினைச்சிட்டேன்.” என்று நடுங்கினாள்.

“கூல் வேதிகா… அன்னிக்கு வந்த பொண்ணு, என்னோட உடலுறவில் இருந்தப்ப என் பெயரை அவளை அறியாம உச்சரித்தா. அப்ப அவளுக்கு நான் யார்னு தெரிந்ததை புரிந்துக்கொண்டேன். அதோட ஹாண்ட் பேக்ல சைனட் வச்சதை பார்த்துட்டேன்.
ஆனா உனக்கு நான் யார்னே தெரியாதுனு புரியுது.
நான் யார்னு தெரிந்திருந்தா… என்னை நீ கல்யாணம் பண்ணறது பத்தி என்னிடமே பேசியிருப்பியா?” என்று அவ்வறை அதிர சிரித்தான்.

வேதிகாவுக்கு எச்சி விழுங்க இயலாத அளவுக்கு தொண்டை வறண்டது.

வேதிகா அவளது பெயர். எப்பொழுது மாடலிங் துறைக்கு வந்தாளோ அப்பொழுதே பெயரை மாற்றி இருந்தவளுக்கு, தனது உண்மையான பெயரை கூறியதும் ஆடிப்போனாள். தனது ஆதிமுதல் அந்தம் வரை அறிந்தே அழைத்திருப்பதை அறிந்துக் கொண்டாள்.

“சார்.. நான் போகணும்.” என்று கெஞ்ச, “இன்னும் பத்து நிமிஷத்துக்கு பிறகு நீயே கேட்டாலும் நான் இங்க தங்க விடமாட்டேன்.” என்று வாசலை கைகாட்ட, அறையும் குறையுமாக உடையை அள்ளிக்கொண்டு  ஓடினாள் வேதிகா.

இன்று டீலிங் மல்கோத்ராவுடன் நடக்கவிருக்க, சத்ரியன் அதற்கு தயாராகிக் கொண்டிருந்தான். அவர்கள் உலகமாக மதிக்கப்படும் சத்ரியனின் ஹோட்டலில் நிகழப்போகின்றது. அந்த ஹோட்டல் ஹாலில் எது நடந்தாலும், எதுவும் வெளி உலகத்துக்கு போகாது. போக விடமாட்டான் சத்ரியன். அது அவனுக்காக இந்த இல்லீகல் தொழில் பேச ஏற்பாடு செய்த தனி ராஜாங்கம்.

வினோத்தோ, ”சார் மல்கோத்ரா தங்ககட்டியை வைரத்தை இல்லீகலா நம்மிடம் வாங்கறான். ஆனாலும் நேரிடையா வாங்கி நமக்கு தர்ற கமிஷனை கட் பண்ண பார்க்கறான்.‌
அதுமட்டுமில்ல… உங்களை தீர்த்துக் கட்ட பிளான் போட்டவங்களில் அவரும் ஒருத்தர்” என்று கூறினான்.

சத்ரியன் சோம்பல் முறித்தவனாக, “மல்கோத்ரா எப்ப ரிதுராஜோட பார்ட்டில தனியா போய் பேசினானோ அப்பவே தெரியும் வினோத். மல்கோத்ராவுக்கு நமக்கு தர்ற கமிஷன் பிடிக்கலைன்னு. இன்னிக்கு நேர்ல பேசிடலாம்” என்று கூற, சத்ரியன் அறிந்திருக்க, வினோத் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

டார்க் நேவி ப்ளூ பேண்ட் வித் கோட் அணிந்து ஷூ கால்கள் தரை அதிர நடந்தவன் முன்னும் பின்னும் பாடிகார்ட்ஸ் வரிசையாக வந்தனர்.

கார் ஒட்டுபவனை கண்டு, “சங்கர்.. உனக்கு இங்க எல்லாவிதமான சௌகரியமும் கிடைக்கும் அதை தாண்டி ஏதாவது ஆர்வம் காட்டினா..” என்று சத்ரியன் பார்க்க, “சார்.. நான் உங்களோட எட்டு வருஷமா வேலை பார்க்கறேன். பைரவனை போல எந்த தப்பும் செய்யமாட்டேன்.” என்று அஞ்சினான்.

“என்னை காட்டி கொடுத்து நீ முன்னேற நினைச்சாலும் பரவாயில்லை. நான் என் தரப்புல செய்ய வேண்டிய மாலை மரியாதை நிச்சயம் உனக்கு கிடைக்கும்” என்றான் சத்ரியன்.

பைரவன் சிறையில் கம்பியில் முட்டி தற்கொலை செய்ததாக கேள்விப்பட்டான்.

உண்மையில் தற்கொலையா?அல்லது கொலையா என்று சத்ரியனை அறிந்தவர்களே அறிவார்கள். சங்கர் அறியாதவனா?!

நெஞ்சில் திகிலோடு அந்த ஹோட்டலின் பார்ட்டி ஹாலுக்கு வந்தார்கள்.

சத்ரியனை நாற்படை சூழ்ந்தது போல வந்தவன், “காயிஸ்… கூடவே வரணும்னு எந்த அவசியமும் இல்லை. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்.” என்று மிடுக்காய் கூறவும், வினோத்தோ, “இல்லை பாஸ்.. இப்ப நிலைமை சரியில்லையே.” என்று இழுத்தான்.‌

“எந்த நிலைமையையும் என் கட்டுப்பாட்டை மீறி நடக்கலையே. அப்படி நடந்தா இந்த பாதுகாப்பு தேவைப்படலாம் வினோத். ஆனா இந்த சத்ரியனுக்கு இந்த அவசியம் என்னைக்கும் நேராது.” என்றான்.

கோர்ட் வளாகத்தில், போலீஸ் முன்னிலையில் நடந்தவையும் சத்ரியன் கட்டுப்பாட்டில் நடந்தேறிதே தவிர, அவன் கையை மீறிய செயல் இல்லை என்று பலரும் அறிவார்கள். அதனால் பாதுகாப்பை தவிர்த்து எப்பொழுதும் போல வந்தான்.

ஆளாளுக்கு கைகுலுக்கி அமர, மல்கோத்ராவும் பகையை மறைத்து நரியை போல வாழ்த்தினார்.

“சத்ரியன் யாரையும் நெருங்க விடலை. எங்க இந்த பிசினஸை அரசாங்கத்துக்கு பயந்து விட்டுடுவிங்களோனு நினைச்சேன்.” என்றார் மல்கோத்ரா.

“அதெப்படி அரசாங்கமே நம்ம கையில தான் இருக்கே.” என்று பேசியபடி எதிரே இருந்த உயர்தர மதுவை பருகினார்கள்.

“என்னயிருந்தாலும் ஆப்ட்ரால் இன்ஸ்பெக்டர் ராகவன் உங்களை நிதிமன்றத்தில் நிறுத்திட்டாரே.” என்று மல்கோத்ரா வாயை விட்டார்.

சத்ரியன் பார்வை கூர்ந்து நோக்கி, “இப்ப ராகவன் எங்கயிருக்கார்னு தெரியலை. தெரிந்திருந்தா… யார் அவரிடம் வந்து என்னை பற்றிய தகவலை தெரிவிச்சதுனு கேட்டிருக்கலாம்‌. மிஸ்டர் மல்கோத்ரா.. உங்களுக்கு ராகவன் எங்க போனார்னு தெரியுமா?” என்று கேட்டு நிற்க, மல்கோத்ரா விழித்து துப்பாக்கியை எடுக்கும் நேரம், வாயில் ரத்தம் வழிய தடுமாறினார்.‌

“சாரி மல்கோத்ரா… ராகவன் எங்க இருக்கார்னே தெரியலை. ஆனா நான் கேள்விப்பட்டதுல ராகவன் கடைசியா உச்சரித்த பெயர் நீங்க தான். பரலோகத்தில போய் வியாபாரத்தை பாருங்க. உங்க பிசினஸ் கணக்கு இன்னியோட முடிந்தது.” என்று‌ வருத்தம் தெரிவிக்க, அங்கே பதட்டம் சூழ்ந்தது.

“என்ன பண்ணற சத்ரியன். மல்கோத்ரா நமக்கு தங்க கட்டிய கை மாத்தி தந்திட்டு இருந்தார். இப்படி பண்ணிட்ட. இனி கோல்டை எப்படி மார்க்கெட்ல கொண்டு போறது” என்று தனஞ்செயன் கேட்க, “அதுக்காக அந்த நாயை விட சொல்லறியா. இவன் இல்லைன்னா இன்னொரு நகை வியாபாரி. கருப்பு பணத்தை வெள்ளையா மாற்றதுக்குன்னு, நம்மிடம் பிசினஸ் பேச, பிசினஸ் ஆட்கள் வரிசையில் நிற்கறாங்க தனஞ்செய்ன. ஆப்ட்ரால் என்னை அழிக்க இன்ஸ்பெக்டர் உதவியை நாடினான்.

ஏன் மேலிடத்துல உதவி கேட்க முடியலையா? மேலிடம் எல்லாம் என் ஆட்கள் இருப்பதும், நீதி நேர்மைனு பேசிய இன்ஸ்பெக்டர் ராகவன் நிறுத்தியிருக்கான்.” என்று சத்ரியன் ஆங்காரமாய் சிரித்துவிட்டு, “அதுக்கு தான் அதே நீதி நேர்மைனு வியாக்கியானம் பேசிய திவாகரை வழக்கறிஞராக நிறுத்தி வெளியே எடுக்க கூறியது.

என்ன… திவாகர் உயிரும் போயிடுச்சு‌. அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. அவர் செத்ததுக்கு எல்லாம் பாவக்கணக்கு என் தலையில் விழாது. நானா சாகடிக்கற கணக்கு மட்டும் தான் என் தலையில் விழணும்.” என்று கூறியவன் மல்கேத்ரா துடிதுடித்து ரத்தம் கக்கி கண்கள் மேலோக்கி சொருகி உயிர் துறந்ததை அங்கிருந்தவர்கள் பார்வையிட்டனர்.

இப்பொழுதே தடுக்க சென்றால் அவர்கள் நிலையும் அதுவே என்று தனித்து சொல்ல வேண்டியதில்லை.

அப்பொழுதே திவாகரை கொல்ல நினைத்தவனிடம் சொல்லியிருந்தார் மல்கோத்ரா. திவாகர் இறப்பு எல்லாம் சத்ரியன் கவலைப்பட நேரமின்றி கடந்திடுவானென. யார் கேட்டது? திவாகரை கொன்றது யார்? என்று தனஞ்செயன் மல்கோத்ராவை கண்டார்.

மல்கோத்ராவிற்கு மட்டுமே திவாகரை கொல்ல நினைத்த அந்த நபர் தெரிய இன்று அந்த விஷயமும் மண்ணோடு மண்ணாக புதைந்தது.

ரிதுராஜ் அங்கு பார்வையாளராக இருந்தவன், சத்ரியனிடம், “கடத்தல் தங்கத்தை மார்கெட்டில் சந்தைப்படுத்திய மல்கோத்ராவை கொண்ணுட்ட. இப்ப அவரை தவிர வேற யாரிடம் பிசினஸ் பேசியிருக்க?” என்றான்.

‌சத்ரியனோ “கஸான் நகை ஓனர், ஆல்ரெடி கடத்திய தங்கத்தை மார்க்கெட்ல வாங்கிட்டார். இனி அவருக்கு கீழ் தங்க கட்டிகள் பரிவர்த்தனை போகும்” என்றான்.

ரிதுராஜோ ‘கஸான்.. பச் இதுவும் சத்ரியனோட நாய்’ என்று கோபத்தை கட்டுப்படுத்தி கைகுலுக்க, சத்ரியனோ, ரிதுராஜனின் முகத்தில் ஏற்பட்ட சிறு மாற்றத்தை குறித்தபடி, வினோத்திடம் கை காட்ட, ஆளாளுக்கு சேர வேண்டிய பங்குகள் பிரிக்கப்பட்டது.

கட்டுக்கட்டாக பணம் பிரித்து முடித்து, நிற்க மூச்சு முட்டியது வினோத்திற்கு
மல்கோத்ராவிற்கு கடைசியாக சேர வேண்டிய பங்கு அங்கே அவரது பிணத்திற்கு முன் இருந்தது.

“சார்.. இது?” என்று வினோத் கேட்க, ”பிணத்தோட அந்த பணத்தையும் கொண்டு போய் அவன் வீட்ல கொடுத்திடு. நாம யாரோட உழைப்பையும் திருடி வச்சிக்க கூடாது.” என்று கூற வினோத் மென்னகைத்தான்.

ஒவ்வொருவரும் தங்கள் சல்லாபத்தில் முழ்கியிருக்க, பணத்தை அவரவர் காரில் ஏற்றப்பட்டதும் மதுவும் மாதுவும் அவ்விடத்தில் நிரம்பியிருந்தது. யாருக்கு எந்த மங்கையோ என்று அள்ளிக்கொண்டு சென்றனர்.

சத்ரியனோ தனக்கான சாம்ராஜ்ஜியம் இருக்கும் இடத்திற்கு நகர்ந்தான்.

வினோத்தோ, “சார்… மல்கோத்ரா இறக்கும் போதே தனஞ்செயனையும் கொன்று இருக்கலாம். ஏன் சார் விட்டுட்டிங்க.” என்று கேட்க, “எல்லாரையும் கொன்றுட்டு யாரிடம் பிசினஸ் பண்ணறது. நாம போற பாதையில் நாளைக்கு நீயே எனக்கு குழிப்பறிக்கலாம். ஆனா… எனக்கு நீ குழித்தோண்டற வரை தான் உன்னை விட்டு வைப்பேன். முதல் குழியை தோன்டுறப்பவே உன்னை புதைச்சிடுவேன்.

இப்ப மல்கேத்ராவை செய்தது போல. ஏன்னா.. மல்கேத்ரா பேசிய ஆடியோ வீடியோ இரண்டுமே நம்மிடம் இருந்தது.
தனஞ்செயன் பேசியதுக்கான ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை. வக்கீல் திவாகர் சொன்னாரே‌ ஆதாரமில்லாம யாரும் யாரையும் தண்டிக்க முடியாது வினோத். அதோட இங்க நான் ஒருத்தனை கொன்றதுக்கு மத்தவங்க கேள்விக்கேட்கலை. ஏன்னா ஆதாரம் காட்டுவேன்னு அவங்களுக்கும் தெரியும். சும்மாவே கொன்று நின்றா, பிறகு யார் வேண்டுமென்றாலும் கேள்வி கேட்டுடுவாங்க’ என்று கூற, வினோத்திற்கு ஏன் கேட்டோமென்றானது.

“வினோத்.. அந்த திவாகரோட பொண்ணுக்கு செட்டில் பண்ணி தூக்கிட்டியா? ரொம்ப சின்ன பொண்ணா..” என்று கேட்டவன், சிறிது இடைவெளியிட்டு “நைட் ஏற்பாடெல்லாம் முடிந்ததா?” என்று சத்ரியன் கேட்க, குழப்பமாய் தலையை சொரிந்து, “எஸ் சார்.” என்றான்.

”ம்ம் குட்” என்றவன் இமை மூடினான். வினோத்தோ திவாகர் மகளை கேட்கின்றாரோ என்று தவறாக புரிந்துக்கொண்டு, உடனடியாக அவளை தூக்கும் ஏற்பாட்டிற்கு சத்தமில்லாமல் வேலையை பார்த்தான். ஏனெனில் சத்ரியனுக்கு எப்பொழுதும் ஒரு பெண்ணிற்காக அவன் காத்திருக்க மாட்டான்.

அதன் பலன்… யோகேஷிடம் ஷ்ரத்தா விவரத்தை கூறிட, விரல் சொடக்கிடும் நேரத்தில் ஷ்ரத்தாவை நான்கு பேர் இழுத்து கொண்டு சத்ரியன் சல்லாபிக்கும் இடத்தில் தள்ளி விட்டு சென்றனர்.

ஷ்ரத்தாவோ, ”யார் நீங்க? என்னை ஏன் கூட்டிட்டு வந்திங்க? என்னை விடுங்க நான் போகணும்.” என்று கூச்சலிட, அதை கேட்க யாருமின்றி சப்தமற்று காட்சியளித்தது அவ்வறை.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “The leader-3 ”

  1. Super sis nice epi 👍👌 evan enna bayangaramana villian ah erupan polaye🙄🙄 paavam eppo endha pilla vera vandhu maatikichi😕

  2. தீ லீடர்…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 3)

    அட ராமா..!இவன் என்ன போற இடத்துல எல்லாம் போட்டுத் தள்ளிட்டே போறான்…? இப்படியே போனால் எவனும் மிஞ்ச மாட்டாங்க போலவே..?
    இதுல நியாயமான அயோக்கியன் என்கிற மாதிரி, சத்ரியனுக்கு எதிரா தப்பு செஞ்சவங்களுக்கு, அதுவும் சரியான ப்ரூப்பை வைச்சுக்கிட்டுத் தான் மரண ஓலையே எழுதுவான் போல
    சூப்பர்.

    இதுல ஷர்த்தாவை வேற தூக்கியாச்சு, இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

    😌😌😌
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!