Skip to content

தாரமே தாரமே வா-13

57 / 100 SEO Score

அத்தியாயம்-13

 

இவளை என்ன செய்ய என்றே கடுப்பில் ஐஸ்வர்யா இருந்தாலும் அவளுக்கும் கல்லூரி செல்ல மனம் ஏங்கியது. ஆனால் அங்கே போனால் தான் திருமணம் ஆனவள் என்று எல்லொருக்கும் தெரிந்து விடும். அதுவும் இது பிரைவேட் காலேஜ் கேட்காத கேள்விகள் எல்லாம் கேட்பார்கள். ஐஸூ இன்று போகலாமா இன்னும் நேரமிருக்கு என்று பார்க்க அவளின் கையில் பணம் என்பதே இல்லை அவள் வரும் பொழுதே ஆட்டோவில் உட்கார சொல்ல அவளும் அப்படியே வந்து விட்டாள்.

‘சே அம்மாகிட்ட பணம் வாங்கிட்டே வரலை… இப்போ போகணும் என்று நினைச்சாலும் போக முடியாது’ என அறையில் சுற்றி பார்க்க ஒரு பீரோ அதுவும் அவள் வந்த அன்று ரித்தீஷே அடுக்கி வைத்தது. அவளின் ஆடைகள் தான் ஆனால் வீட்டில் அவள் ஏனோ தானோ என்று சுற்றி வைக்கும் தனது ஆடைக்கும், இங்கே ரித்தீஷ் அழகாக அடுக்கி வைத்து இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

செட் சுடிதார் எல்லாம் ஒரு செல்ஃபிலும் வெறும் டாப் லேகின்ஸ் ஒரு செல்ஃபிலும் இருந்தன. அதிலும் டாப் தனித்து லேக்கின்ஸ் தனித்து வைத்து இருந்தான் அதுவும் ஒன்று அடிக்கும் கலர் என்றால் அதற்கு அடுத்து லைட் கலர் அடுக்கி வைத்து இருந்தான் எளிதில் கண்டு பிடிக்கும் விதமாக… நடுவில் இன்னவர் வேறு, அது கூட டவல் கொண்டு மறைத்து இருந்தது.

அடுத்த செல்ஃபில் நைட்டி, த்ரீ-பை-போர்த் இருந்தது. வீட்டில் அணியும் ஆடைகள். அதற்கு கீழே குர்தி ஜீன் என்றிருக்க நான்கு செல்ஃபிலும் அவளின் ஆடைகள் நிறைந்து வழிந்தன.

இவனின் டிரஸ் எல்லாம் எங்கே என்று தேட அங்கே ஒரு சுவரோடு இருக்கும் கபோர்ட் இருக்க திறந்தாள். அங்கே திறந்ததும் புத்தகம் தான் கண்ணில் பட்டது. கூடவே அவன் அக்காவோடு எடுத்த புகைப்படம் அதில் அவன் சிறுவனாக இருக்க வைதேகி கையில் ஐசு குழந்தையாக இருந்தாள். எடுத்து பார்த்து அதனை மீண்டும் அங்கே வைத்து விட்டு கீழே பெரிய பெரிய எழுத்தாளர்கள் புத்தகமாக இருந்தன. சில ஆங்கில புத்தகமும்… அதன் கீழ் செல்ஃபில் எம்‌பி‌ஏ புத்தகமும் இருந்தன. அதன் கீழே ஒரு செல்ஃபில் மட்டுமே அவனின் ஆடைகள் இருந்தன. அவள் முகம் வாடியது.

வெளியே எல்லாம் அவள் அறை போல பெரிதாக இல்லை ஆடம்பரமாகவும் இல்லை… ஆனால் இருக்கும் இடம் எல்லாம் நேர்த்தி அவளின் கண்ணிற்கு பட்டது.

கிச்சன் போய் பார்த்தால் அங்கே சாம்பார் உருளை பொரியல் செய்து மூடி வைத்திருந்தான். ஹாட் பாக்ஸ்சில் சாதத்தை கண்டவள் அப்படியே வைத்து அவளின் ரீடிங் டேபிளில் அமர அங்கு அவளது புத்தகமும் அழகா அடுக்கி இருக்க கண்டாள். வீட்டில் இருந்து துணிமணிகளும் புத்தகமும் மட்டும் எடுத்து வந்திருப்பதை கணித்தாள்.

அறைக்குள்ளே போர் அடிக்க அவன் வைத்திருந்த புத்தகம் எடுத்து படித்தாள் கால் மணி நேரத்திலே கண்கள் சொருக உறங்கினாள்.

மதியம் எழுந்தவள் எங்கோ கதவு தட்டும் ஓசையில் அறையின் கதவு திறக்க ஓடினாள்.

”ஒரு மணி நேரம தட்டிட்டு இருக்கேன் ஈஸ்வர் திறக்கவே இல்லை நீ வந்து பத்து நிமிஷம் கூட ஆகலை புண்ணியவதி திறந்துட்டா… வர்றேன் ஈஸ்வர்” என மகாலட்சுமி கீழே போனார்.

”சாப்பிட்டியா இல்லையா?” என ரித்தீஷ் கேட்க

”அச்சச்சோ மறந்தே போயிட்டேன்…” என முகம் அலம்பியவள் வேகமாக எடுத்து உண்ண செய்தாள்.

இவனோ பாத் ரூமில் முகம் கை கால் என கழுவி வந்து நிற்க

”என்ன சாப்பாடு இது ஆறி போயி இருக்கு… ஏதோ சாப்பிடற மாதிரி இருக்கு” என்று பேசியபடி நன்றாக தின்று கொண்டு இருக்க அவள் மனமோ அம்மா செய்யறதும் ஆறி தான் போயி இருக்கும் அச்சச்சோ அதை திரும்ப கேட்டுடுவானோ என்று பார்வையிட, அவனுக்கு ஐசு தனது பங்கு மிட்டாய் எடுத்து தின்று விழிக்கும் குழந்தை ஐசுஸூவாகவே தெரிய சிரிப்புடன் கடந்தாலும் ஹாட் பாக்ஸ் எப்படி ஆறியிருக்கும் என அருகே வந்து பார்க்க அங்கே மூடி இல்லை.

”ஆமா இதோட மூடி எங்கே?” என்றான்.

”அச்சச்சோ அதுவா புத்தகம் எடுக்க போனேனா.. அங்கயே வச்சிட்டேன்” என்றாள் ரித்திஷோ ‘ஹாட் பாக்ஸ் மூடாமல் இருந்தா சாதம் எப்படி சூடா இருக்கும்” என்றான் அவளை பார்த்து.

”ஆமா எந்த புக் படிச்ச?” என்றான்.

கட்டிலில் இருக்கும் இடம் சுட்டி காட்டா ”ஓஹ் நைஸ் 4த் சாப்டர் படிச்சியா ரொம்ப நல்லா இருக்கும்” என்றான்.

”ஒன் அண்ட் ஆப் பேஜ் படிச்சேன் தூங்கிட்டேன்” என்றாள்.

”நீயும் இலா மாதிரியேவா அந்த குரங்கு தான் படிக்கும் பொழுதே தூங்கிடும்” என ரியா மறந்து இருந்ததை எடுத்து கொடுக்க,

”ஆமா இலா உனக்கு என்ன வேணும் அவள் உன்னை விரும்பறாளா நீயுமா?” என்று கீழே விழுந்த டேப்ரெக்கார்டர் போல கேட்க கைகளை கழுவி துடைத்து வந்தவன் பேச ஆரம்பிக்க போன் அலறியது.

”அண்ணா ஸ்கூல் டைம் ஆச்சு சாப்பிட்டிங்களா?” என்று கேட்க ரித்தீஷ் வந்துட்டேன் மா” என்று அணைத்தவன்

”ரியா வந்து பேசறேன்.. இப்போ ஸ்கூல் சவாரி இருக்கு எக்ஸாம் வேற அதனால போறேன்… முடிஞ்ச படி இல்லை தூங்கு..” என்றவன் திரும்பி இரண்டும் ஒன்னு தானோ?’ என்று சிரிக்க அவனின் மந்தகாச சிரிப்பிலும் அவன் மாடி படிக்கட்டில் ஓடும் அழகும் ரசித்து கொண்டிருந்தாள்.

இரவு வந்ததும் அவனிடம் கேட்கணும் என்றே எண்ணியபடி சுற்றி கொண்டிருந்தாள்.

8 ஆக ரித்தீஷ் ஆட்டோ கண்டு மாடி படியில் கால் வைக்க இலா வீட்டிலோ இலா கை நரம்பை அறுத்து ரத்த வெள்ளத்தில் துடிப்பதை கண்டு ரித்தீஷ் ஆட்டோவில் ஏற்றினான். ரியா வீட்டில் இருக்கேன் என்று பயந்து சொல்ல மகாலட்சுமி ஏறினாள்.

இந்த இலா எதுக்கு இப்படி பண்ணினா? மாமா மேல இருக்கற லவ்வா? என்று அதிர்ந்து போனாள்.

ரியா இது போல எல்லாம் கையை அறுத்து உண்மை காதலை எல்லாம் கண்டதில்லை. ஒருவருக்கொருவர் பிடித்து இருந்தால் ஊரை சுற்றி பார்பார்கள் ஸ்டேட்டஸ் ஓகே என்றால் லவ் ஜெயிக்கும் அப்படி இல்லை என்றால் இருவருமே இலகுவாக பிரிந்து செல்வார்கள் அதில் காதல் ஜோடி இருவருக்கும் வலி தெரியாது. அப்படி தான் அவள் கண்டது. கேள்வி பட்டது. ரியாவுக்கு இலா மேல் கொஞ்சம் மரியாதை வந்தது.

அங்கே மருத்துவமனையில் சிகிச்சை அளித்து ஓரளவு எல்லாம் சரி ஆகும் நிலையில் மஸ்தான் வந்தான் கூடவே பாத்திமாவும் தான். மஸ்தான் இலா அறையில் மண்டியிட்டு

”இலா உனக்கு நான் என்னம்மா பண்ணினேன்… எதுக்கு என் மேல இவ்ளோ காதலை வளர்த்த… உன் காதலுக்கு துளி கூட தகுதி இல்லாதவன் மா நான்.. எனக்காக எதுக்கும்மா இப்படி செய்த?” என கதறி அழுபவனை கண்டு பாத்திமா சிலை போல நின்றாள்.

 

சண்முகம் தான் “மகாலட்சுமி அவனை எழுப்பி வெளியே வர சொல்லு.. பாரு அந்த புள்ள முகம் சுணங்குது.. அதுவும் பெண் தானே கஷ்டமா இருக்கும்” என சொல்வதை கேட்டு பாத்திமா யோசித்தாள்.

 

அதற்குள் இங்கு வந்த ரித்தீஷ் தோசை ஊற்ற போக ”அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு” என்றாள் ஐஸ்வர்யா.

 

”பரவாயில்லை சரி ஆகிட்டா… நீ தோசை சாப்பிடு… சட்டினி வைக்க முடிலை” என இட்லி பொடி எடுத்து கொடுத்தான்.

”வேண்டாம் எனக்கு சாப்பிட தோணலை” என அவள் ரித்தீஷ்-இலாவை எண்ணி சொல்ல, அவனோ ரத்தம் கண்டு உண்ண மறுகின்றாள் என்று அவளுக்கு ஊட்ட துவங்கினான்.

 

அவன் ஊட்ட ஊட்ட அவளாக மறுப்பின்றி உண்டாள்.

 

”ஐஸூ நீ தூங்கு எனக்கு கொஞ்சம் சோர்வா இருக்கும்மா” என படுத்திட ரியாவோ அப்போ மாமாவுக்கு இலா இப்படி செய்ததில் கஷ்டமா இருக்கு போல… அதான் என்றெண்ணி உறங்க போனாள்.

 

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!