Skip to content

தாரமே தாரமே வா-15

58 / 100 SEO Score

அத்தியாயம்-15

அடுத்த நாள் கல்லூரிக்கு அமைதியாக போனாள் ஐஸ்வர்யா. ரித்தீஷ்யிடம் வம்பு எல்லாம் செய்யவில்லை அதிகமாக பேசவும் இல்லை ரித்தீஷ் இதை முதல் நாள் கவனிக்கவில்லை ஆனால் இரண்டாம் நாள் அவனுக்குள் ரியா நார்மலாக இல்லை என கணித்துவிட்டான்.

அதே நேரம் ஐஸூ தாலியை சரியாக மறைத்து பின் கூட குத்தாமல் போக மாலையில் மற்றவர்கள் பார்வைக்கு ரித்தீஷ் அணிவித்த தாலி கண்ணில்பட்டது.

”ஏய் வாட் இஸ் திஸ்? என லேகா அவளை அறியாமல் அருகே போய் சத்தமாக கேட்க ஐஸ்வர்யா குனிந்து கழுத்தை பார்த்தவள் தாலி என்றதும் சுற்றி ஒரு பார்வை பார்த்தவள் குழம்பி தவித்தது ஒரு கணம் தான், அடுத்த நொடி நிதானித்து கொண்டாள்.

”ஏன் பார்த்தா தெரிலை.. தாலி… உங்க அம்மா கழுத்திலே இருக்குமே அதே போல தான் இருக்கு.. புது விதமா இருக்கா?” என நக்கலாக பதிலை தர

”அது தெரியுது எப்போ கல்யாணம் ஆனது? இங்க யாரையும் இன்வைட் பண்ணலையே… நான் உன் ஃப்ரெண்ட் எனக்கே தெரிலை” என அவளும் நக்கலாய் பதில் கேட்டாள்.

”டியரெஸ்ட் ஃப்ரெண்ட் ஆஹ் அப்போ நீ இல்லனு அர்த்தம் லேகா” என்று பதிலடி தர லேகா முறுக்கிட்டு சென்றாள்.

”இவ ரொம்ப நல்லவ.. இவளுக்கு வெற்றிலை பாக்கு பழம் வச்சி பத்திரிக்கை நீட்டனும்…” என்று முனங்க பூர்வீ அருகே வந்து

”ஏன் ஐஸூ நானும் அவளை போல தானா.? உன்னை மாதிரி எனக்கும் அவளோட கேரக்டர் அதிர்ச்சி… உனக்காவது பரவாயில்லை என்னை யோசிச்சியா நான் திலீபை விரும்பினேன்… ஆனா அவன் இப்டி என்று தெரிந்து எவ்ளோ கஷ்டபட்டேன் தெரியுமா? நம்ம விரும்பிய உள்ளம் கெட்டவன் என்று தெரிந்து மறக்கறது அவ்ளோ சுலபம் இல்லை…” என அழுதாள்.

”சாரி பூர்வீ எனக்கு இருந்த மனநிலையில் நானும் யாருக்கும் சொல்லலை.. இங்க எல்லாருமே செல்ஃபிஷ்.. உண்மையா பழகலை அதான் எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு… ஒவ்வொருத்தருக்கும் காலேஜ் பிரிண்ட்ஷிப் தான் தொடரும்… ஆனா இப்படி இருப்பாங்க என்றதும் வெறுப்பு வந்துடுச்சு.. அதனால யாரிடமும் என் கல்யாணம் முடிந்ததை சொல்லலை..” என்றாள் ஐஸ்வர்யா.

”சரி விடு யாரை கல்யாணம் செய்திருக்க? பெயர் என்ன?” என்று கேட்டதும் லேகா காதினை கூர்மையாக்கினாள்.

”எங்க மாமா ரித்திஷ்வரன்…” என்று கூறியதும் அவளை அறியாமல் முகம் சிவப்பாக மாறியது.

”ஐஸூ… அவரா? அவரை உனக்கு பிடிக்காது தானே? அப்போ..?” என்று அதிர்ந்தாள். எல்லாம் அன்று நடந்த குழப்பத்தால் நிகழ்ந்ததா?

”ஆமா அன்னிக்கு எனக்கு எதுவும் ஆகலை அது ரித்தீஷ் மாமாவுக்கு நல்லாவே தெரியும் ஆனா மாமா நம்பிய அளவுக்கு அப்பா நம்பலை டி.. அப்படியே நம்பினார் என்று மனசு சொன்னாலும் அவருக்கு சமூகத்தில இருக்கறவங்க என்ன சொல்வாங்க என்று சிந்திச்சு, ரித்தீஷ் மாமா கூட கல்யாணம் பண்ணி வச்சிட்டார்” என்று முடிக்க லேகா ரித்தீஷ் கணவன் என்றதுமே அதனை திலீப், வெங்கட், இருவரிடம் பகிர போனில் எண்ணை அழுத்தினாள்.

பூர்வீயோ ”அப்போ ரித்தீஷ் கூட..” என்றதும் ஐஸூ பார்வை கூர்ந்து தாக்க உடனே பூர்வீ ”உங்க மாமாவை கணவனா அக்சப்ட் பண்ணிடியா?” என்று கேட்க அதற்குள் வகுப்பு எடுக்கும் பேராசிரியர் வர வகுப்பு துவங்கியது.

அதோடு வகுப்பு முடிய எல்லோரும் வெளியே சென்று கொண்டிருக்க பூர்வீ ”ஐஸூ அவனுங்க வர்றாங்க… கூட அந்த லேகாவும்” என கிசுகிசுக்க ஐஸூவோ எவன் வந்தா எனக்கு என்ன? என்ற ரீதியில் நடந்தாள்.

”என்ன ஐஸூ கடைசியில் அவனை போய் கல்யாணம் செய்திருக்க.. இதுக்கு என் கூடவே அங்கயிருந்து ஜமாய்ச்சு இருக்கலாம்” என வெங்கட் கேலி பேசி சிரிக்க திலீப், பிரபு கூடவே சிரிக்கவும் ஐஸூ அதே கூலாக நின்றாள்.

”ரித்தீஷ்க்கு என்ன குறைச்சல்… ஓஹ் ஆட்டோ ஓட்டறார் அதானே… அவர் எம்‌.பி‌.ஏ படிச்சிருக்கார், சொந்தமா அவரோட உழைப்பில் வண்டியை ஒட்டி சொந்த காலில் நிற்கறார்… உன்னை மாதிரி அப்பா உழைச்சதில நீட்டா டிரஸ் பண்ணிட்டு வந்து, கூட படிக்கிற பெண்களை தவறா பார்கலை.. லவ் பண்றேனு பொய் சொல்லி ஏமாற்றலை” என திலீபை கண்ணால் சாடினாள்.

”ஹ்ம் இவ்ளோ பேசறவா முன்ன மட்டும்‌ என்ன மாமானா சொன்ன? அவன் இவனு தானே சொன்ன? அப்போ தெரிலையா? இவன் நல்லவனு” என்று பிரபு நக்கலாக கேட்டான்.

”ஆமா டா.. தெரிலை தான்.. என் அப்பா காசுல அவரை படிக்க சொன்னப்பா படிக்கமா அப்பாவை கொடுத்த காசையும் மறுத்துட்டு போறப்ப அவரை பிடிக்கலை திட்ட செய்தேன் ஆனா என் கல்யாணத்துல தான் என் மாமா சொந்தமா அவரே படிக்க ஆசைப்பட்டு இருக்கார் சுய காலில் நிற்க தவிர்த்து இருக்கார்னு தெரிஞ்சுது. அதான் அவருக்கு கொடுக்கற மரியாதையை இப்ப சரியா கொடுக்கறேன்.

அதுவும் இல்லாமல் எனக்கு மட்டமா புத்திமதி சொல்லற நட்புகள் தான் இப்போ இல்லையே, அதனால கூட சரி தவறு புரிந்து இருக்கும்” என்று சளிக்காமல் அவர்களை போலவே முறைத்து உதாசீனம் செய்து நகர்ந்தாள்.

அவள் பேசிவிட்டு வெளியே வர அப்பொழுது தான் ரித்தீஷ் வந்து சேர்ந்தான். இவள் பேசியது எல்லாம் அவன் கேட்கும் வாய்ப்பு அவனுக்கு அமையவில்லை. ஆனால் தூரத்தில் வெங்கட், திலீப், பிரபு மற்றும் லேகா நின்று இவளையும் அவனையும் பார்க்க கண்டவன்

”ஏதாச்சும் பிரச்சனையா ரியா?” என்று கேட்க அவளோ அவனை பார்த்து, “மாமா வண்டியை எடு” என கத்தினாள். அவள் கத்தியது இவள் அவனை மாமா என்ற வார்த்தை இவர்கள் நால்வர் காதில் விழ வேண்டும் என்ற நோக்கத்தில்…. ஆனால் ரித்தீஷோ அவள் கழுத்தில் வெளிப்படையாக தொங்கிய தாலியும் இவர்களையும் இவள் கத்துவதையும் சரியாய் தவறாக எண்ணி கொண்டான்.

‘போச்சு இன்னிக்கு அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்று கிளாஸ்ல தெரிந்துடுச்சா, அதனால மேடம் கோபம இருக்காளா? ஏற்கனவே அக்கா மகள் எதுக்கு சிடுசிடுனு இருக்கானு தெரியாது இதுல இவனுங்க வேற, ஆனா அவனுங்க இவளிடம் வாங்கி கட்டி இருப்பாங்க போல நல்லா பேயறைந்தது போல தான் நின்றுகொண்டு இருந்தாங்க.’ என்று கண்ணாடியில் ஐசுவை காண அவளோ இந்நேரம் வரை ரித்திஷை கண்ணாடியில் பார்த்தவள் இவன் பார்க்க உடனே ரோட்டில் கண்களை திருப்பினாள்.

ஆஹா செம கோபத்தில இருக்கா நாம பார்த்ததும் முகத்தை திருப்பிக்கிட்டு போறா.’ என்று யாருக்கு என்னவோ என வண்டியை ஓட்டினான்.

இங்கு ஐஸூ தான் இரு வேறு மனநிலையில் அல்லாடினாள்.

எதுக்கு எனக்கு இவ்ளோ கோவம் ரித்தீஷ் மாமா பற்றி அவனுங்க பேசியதும், இந்நாள் வரை வராத கோவம் இன்னிக்கு பொசுக்குனு வருது. சப்போர்ட்டுக்கு கூட என்ன என்னவோ பேசினேன். ஆனா அது எல்லாமே உண்மை தான் பொய் இல்லை… அப்போ இவ்ளோ நாள் ரித்தீஷ் மாமா அப்பா படிக்க வைக்கறேன் என்று சொன்னப்ப, வேண்டாம் மாமா ஆட்டோ ஒட்டறேன் சொன்னது எனக்கு வருத்தமா இருந்து, அது தான் அவர் அப்பா சொல்லியதை கேட்காம இப்படியாகிட்டார் என கோவமா வளர்ந்துடுச்சா.?

என்னோட அறியாத வயசில், அப்பா சொல்லியும் இப்படி படிக்கமா போனாரே இந்த மாமாவுக்கு ஓவர் திமிரு, அப்படி நினைச்சிட்டேன். அப்பாவும் அம்மாகிட்ட அப்படி தானே பேசினார்.

‘உன் தம்பி என்னை அவமானம் படுத்தவே ஆட்டோ ஒட்டறான். படிக்க மாட்டாறான் சொன்னது எல்லாம், அந்த வயசில் எனக்கு அவர் மேல நல்ல அபிப்ராயம் இல்லாமல் பண்ணிடுச்சு. இப்போ அவரோட இந்த எண்ணம் பண்பு எல்லாம் என்னை என்னவோ செய்யுது. அதனால என்னை அறியமா அவரை பற்றி பேசினவங்க முகத்தில எடுத்தெறிந்து பேசினேன்.

 

இதெல்லாம் எதுக்கு? ரித்தீஷ் மாமானு நான் இதுவரை அவரை சொன்னதில்லை ஆனா அவர் படித்தவர் பண்பா இருக்கார் என்றதும் என்னை அறியமா மாமா சொல்றேன். அம்மா சூடு வைத்தும் வாராத மாமா என்ற அழைப்பு என்னை எதுவும் செய்யாம எப்படி இவர் சொல்ல வைத்துவிட்டார்.

அதை விட முக்கியம் இந்த இலா இவரிடம் பேசும் பொழுது எனக்கு ஏன் எரிச்சலா இருக்கு? எனக்கு ஏன் அப்டி ஆகுது ஏன் மாமா என்கூட தான் பேசணும் நினைக்க தோணுது? இது எல்லாம் தான்………… காதல்லா…? என திகைத்தாள்.

ரித்தீஷோ ”என்ன மனக்கோட்டை கட்டிட்டு இருக்க இறங்கு எனக்கு ஸ்கூல் சவாரி கூப்பிட போகணும்” என ரித்தீஷ் சொல்ல இறங்கியவள் முறைத்தவாறே சென்றாள்.

”ரியா… இந்தா.. பிரட் சண்ட்வெச் அப்பறம் இதுல மாதுளை இருக்கு உரிச்சு சாப்பிடு” என்று கவரை நீட்டினான்.

வாங்கியவள் மாடிக்கு செல்ல படியேறினாள்.

‘என்ன நினைக்கறானு தெரிலை…. ரித்தீஷ் நீ பாவம் டா தினம் தினம் பூகம்பம் இவளோடு’ என்று கிளம்பினான்.

ரியாவோ எனக்கு என்னாச்சு? நிஜமா மாமா மேல எனக்கு லவ் தானா? ஆனா இந்த லவ் எனக்கு மாமா தாலி கட்டும் முன்ன வரை வரலையே. இப்போ வந்து இருக்கு… இலா மாமா மேல வச்சியிருக்கற காதலில் தான் எனக்கு மாமா மேல இருக்கற காதல் வெளியே வந்துச்சா? ஆனா இது குழந்தைத்தனமா இருக்குமே? நாம விரும்பற பொருளை ஒருத்தங்க எடுக்கும் பொழுது நமக்கு அந்த பொருள் பிடிக்கவில்லை என்றாலும் வேணும் என்று தோணும் அப்படியா மாமா மேல எனக்கு வந்திருக்கும்.

அப்படி வந்திருந்தா இலா போனதும் எனக்கு மாமா மேல முன்பு இருந்த வெறுப்பு மறுபடியும் வருமா? இல்லை இதே காதல் கடைசி வரை இருக்குமா? நிஜமாவே இது காதல் தானா? அப்படி காதல் என்றால் ரித்தீஷ் மாமாவுக்கு என் மேல காதல் வருமா? அவரை இந்நாள் வரை பொருட்டா மதித்தது இல்லை, அப்படிருக்க அவருக்கு என் மேல காதல் வர வாய்ப்பேயில்லை…

ஏதோ அக்கா மகள் என்ற பாசம் இருக்கும் அந்த பாசம் எத்தனை நாள்? அவரோட காலம் முழுக்க அக்கா மகள் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக தான் என் மேல அவருக்கு அன்பு வருமா? எனக்கே எனக்காக அவரோட அன்பு செலுத்த மாட்டாரா?’ என்றவள் முகம் கழுவி கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தாள்.

‘எனக்கு என்ன குறை? இந்த ரித்தீஷ் மாமா எதுக்கு ஆசையா பேச மாட்டேங்குது.’ என்று அங்கேயிருந்த சாண்ட்வெச் எடுத்து உண்டபடி நீரை குடித்தவள் போனில் அம்மாவிற்கு அழைத்து பேச அலைப்பேசியை எடுத்தாள்.

 

-தொடரும்.

 

வாசித்து கருத்து அளிக்கும் அனைவருக்கும் நன்றி. டெய்லி எபிக் கேட்ட தோழி… தினமும் வந்துடும். உங்க கருத்தை முன் வையுங்க‌ 😊

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!