அத்தியாயம்-8
ஷ்ரத்தா கல்லூரிக்கு அடியெடுத்து வைத்து இன்றோடு, இரண்டு மாதம் ஆகவும், தன்னை சுற்றியுள்ள மாணவ மாணவிகளை கவனித்தாள்.th
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் ஆனந்தமாக நடமாடுவதை பாடி லாங்வேஜ் மூலமாக அறிந்தாள்.
முன்பு இந்த வெள்ளை சட்டை ஸ்டெதஸ்கோப் எல்லாம் ஏக்கமாய் பார்த்து, படிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று துவண்டுயிருந்தாள். இன்று கிடைத்தும் மகிழ்ச்சிக்கு குறைதான்.
இதை தான் ஒன்று பெற நினைத்தால் மற்றொன்றை இழக்க நேருமென தந்தை மூலமாக புரிய வைத்தது.
படிப்பில் கவனமெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தந்தை நினைவும், இழப்பும், அவர் இறப்புக்கு காரணம் யார் என்றும் அறிவதற்கு வழியை சிந்திக்கவே நேரங்கள் சரியாக இருந்தது. இதில் போதாத குறைக்கு வந்ததும் சீனியர் ஜானிடம் ராகிங்கில் எதிர்த்து எதிர்த்து பேசி, அவனோ அவளை பார்க்கும் பொழுதெல்லாம் கண்ணால் துளையிட தவறவில்லை.
இதில் ஒரு சீனியர் நிரோஷ் என்பவனோ காதலிப்பதாக கூறி அர்ஜூன்ரெட்டி போல தன்னை உரிமைக் கொண்டாடும் விதமாக பேச, பட்டென்று இருக்குமிடமெல்லாம் பாராமல் கத்தி விட்டாள்.
‘ஒரு முறை சொன்னா புரியாது. பெருசா வந்துட்டான் இந்த காலேஜ் ரோமியோனு’ என்று கடித்து குதறாத குறையாக கத்தவும் ஷ்ரத்தா பக்கம் கூட யாரும் அதன்பின் நெருங்கவில்லை. ஏன் நட்பென்று தோழிகள் கூட நிலையானவர்களை இந்த இடைப்பட்ட காலத்தில் பெறாமல், தனியாக தனித்து அமர்ந்து இருக்க, நெஞ்சே அடைத்தது.
இதில் யாரோ அவளை பற்றி டீனிடம் தப்பும் தவறுமாய் புகார் அளித்திருக்க, அவரோ அறிவுரையை அள்ளி தெளித்துவிட்டார். அடிக்கடி கம்பிளைன் வந்தா பெற்றவர்களை வரவழைப்பதாக வார்னிங் தந்தார்.
பெற்றவர் தான் இறைவனை நாடி சென்றுவிட்டாரே.
அப்படி திவாகரை வரவழைத்தால் ஷ்ரத்தா சந்தோஷமாக டீனுக்கு கோவில் கட்டுவாள். தந்தை வரமுடியாத இடத்தில் சென்றதை அவரிடம் கூறயியலாது, பாதி வகுப்பிலிருந்து எழுந்து, மனிஷாவை சந்தித்து பேச நினைத்தாள்.
அதனால் அதற்கேற்றவிதமாக நேரத்தை ஒதுக்கி அமைத்து மனிஷா வீட்டுக்கு புறப்பட்டாள்.
தந்தை பணத்திற்கு எல்லாம் பஞ்சமின்றி பேங்கில் போட்டுவிட்டார். அன்புக்கு பாசத்திற்கும் தான் பஞ்சமானது.
மனிஷாவோ தோழியை கண்டதும், வரவேற்று உபசரித்து, சாப்பிட வைத்து கதை பேசினாள்.
முன்பெல்லாம் ஷ்ரத்தா மனிஷா இடைவிடாமல் பேசுவார்கள். இன்று ஷ்ரத்தா பேச ஆசைப்பட்டாலும் வார்த்தைகளுக்கு பஞ்சமாக வந்தது.
அப்படியிருந்தும், மனதை பகிர, மனிஷா தோழியை ஆறுதல்படுத்தினாள்.
சத்ரியனை சந்தித்ததும் அவன் வீட்டில் இருந்துவிட்டு வந்ததும், வைத்து, கல்லூரி வரை தெரிந்துள்ளதாக கூறினாள்.
இதில் சத்ரியன் கார்டியனாம்’ என்று ஏளனமாக சிரித்தாள்.
மனிஷாவோ “என்னயிருந்தாலும் உங்கப்பாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமா அவர் மெடிக்கல் சீட் வாங்கி தந்துட்டார். உனக்கு கார்டியனா இருக்கார். போதாத குறைக்கு அங்கிள் இறந்தப்ப கடைசியா சத்ரியன் சாருக்கு தான் போன் பேசியதா சொல்லற. ஒருவேளை உங்கப்பாவுக்கு தெரிந்திருக்கு சத்ரியன் சார் தான் உன்னை பத்திரமா பார்த்துப்பார்னு” என்று கூறவும், ஷ்ரத்தா இல்லையென்று மறுத்தாள்.
”அவனை மாதிரி அயோக்கியனை காப்பாத்தியது தான் அப்பா செய்த பெரிய தப்பு. அவனால தான் அப்பா இறந்திருக்கணும். ஆயிரம் கெட்டது செய்தவனால, ஒரு நல்லது செய்துட்டு நல்லவன்னு பெயர் வாங்கிட்டு போக முடியாது மனிஷா” என்றாள்.
மனிஷாவோ “ஆனா ஆயிரம் நல்லது செய்தவன் ஒரு கெட்டது செய்து கெட்டவன்னு பெயர் எடுத்திடுவான். செய்யற கெட்டது தான் கண்ணில் உறுத்தும்.” என்றாள் மனிஷாவும்.
ஷ்ரத்தாவோ சத்ரியனுக்கு மனிஷா இப்படி பரிந்துரைத்து பேசுவதில் எரிச்சலுண்டானது. ஆனால் மனிஷா சொல்வதிலும் ஏதோ புரிந்திட துவங்கியது.
மனிஷாவோ “ஆமா… உனக்கு ஏதாவதுன்னா கார்டியன் இடத்துல சத்ரியன் வந்து நிற்பாரா?” என்று சந்தேகத்தை கேட்டதும் ஷ்ரத்தா மறுப்பாய் தலையாட்டி, “அவரோட பி.ஏ வினோத்தை அனுப்பலாம். இல்லையா.. போன்லயே பேசி க்ளியர் பண்ணலாம். சத்ரியன் எனக்காக வருவது வாய்ப்பில்லை. ஏதோ கேஸ்ல வாதாடி வெளியே கொண்டாந்ததுக்கு சீட் கிடைச்சது. மத்தபடி அவனெல்லாம் வரமாட்டான்” என்றாள்.
மனிஷா வீட்டில் கதை பேசவும், நேரம் செல்வதே தெரியாமல், ஷ்ரத்தா இருந்தாள்.
மனிஷா தாயார் செய்த உணவை விழுங்கி, குடும்பத்தின் அருமையை ரசித்தவளாக மகிழ்ந்தாள். மனிஷாவும் அவள் தந்தையும் பேசி சிரிக்க, தந்தை திவாகரை எண்ணி அடிக்கடி கண்ணீரை வேறு கட்டுப்படுத்தி மறைத்தாள்.
“சரி நான் கிளம்பறேன்” என்று ஷ்ரத்தா எழவும், மனிஷா வழியனுப்பினாள். இன்று ஷ்ரத்தா நேரமோ என்னவோ மனிஷாவும் கல்லூரிக்கு விடுமுறை எடுத்து வீட்டிலிருந்தாள். இன்று அவளது தாய் தந்தையருக்கு மணநாளென குடும்பமே வீட்டிலிருந்தனர். அதை ஸ்டேடஸில் பார்த்து தான் ஷ்ரத்தாவுமே மனிஷாவை சந்திக்க பரிசுப்பொருளோடு வந்து இதோ திரும்புகின்றாள்.
ஆட்டோவில் காலேஜிற்கான இடத்தை கூறி வந்து சேர, அங்கே எறும்பு போல வரிசையாக பல கார்கள் படையெடுத்திருந்தது.
ஷ்ரத்தா ஒவ்வொரு காரையும் பார்த்து புருவ முடிச்சுடன் வர, அவளுக்கு சந்தேகத்தை எழுப்பிய காரும் அங்கேயிருந்தது.
அங்கிருந்த பல்வேறு உயர்ரக காரை விட, அந்த கார் அவளுக்கு பிரசித்தம். ஏனெனில் அந்த கார் சத்ரியன் உபயோகித்து அவள் கண்டது. அந்த வண்டி எண் கூட boss என்று எழுதியிருக்கும்.
தவறு.. அது ஆங்கிலத்தை குறிக்கும் பாஸ் இல்லை. வண்டியின் எண் 6055 அதை தான் சத்ரியன் அப்படி எழுதி boss என்று சீனை போட ஏதுவாக அமைந்தது.
அந்த வண்டி ஏன் இங்கேயிருக்கின்றது?’ என்ற யோசனையில் வந்தவள் ஒருயிடத்தில் அவளிடம் வாலாட்டிய சீனியர் ஜான் ரத்த வெள்ளத்தில் நின்றுயிருக்க அவளை அவன் தான் துவைத்திருந்தான்.
அவன் தான் சத்ரியன். இவன் என்ன செய்கின்றான்?’ என்று வந்தவளின் பாதத்தை சீனியர் ஜான் பிடித்து கொண்டான்.
“ஷ்ரத்தா… ஐ அம் சாரி. இனி உன்னை அசிங்கமா பேசமாட்டேன். என் உயிரை காப்பாத்து. இனி டீனிடம் கம்பிளைன் கூட பண்ண மாட்டேன்” என்று கதறினான்.
ஷ்ரத்தாவுக்கு அங்கு நடப்பதை புரிய சில நொடிகள் தேவைப்பட்டது.
இதில் டீனோ “ஏம்மா.. எங்கப் போன?” என்று வந்தார்.
“என்ன டாக்டர் நடக்கு?” என்று கேட்க, “உன்னை சீனியர் பசங்க கேலி கிண்டல் செய்தா இனி என்னிடம் சொல்லும்மா. இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம் சத்ரியன் சார் காதுல போக விடலாமா?” என்றார்.
கம்பிளைன் தந்த ஜானால் டீன் தான் சத்ரியனுக்கு அழைத்து, விஷயத்தை கூறினார்.
ஆனால் அவரே அறியாது சத்ரியனின் நேரிடை தரிசணம்.
சத்ரியன் சிபாரிசு என்றது மட்டும் நினைவில் வந்து செல்ல, சத்ரியன் மட்டுமே கார்டியன் என்று தாமதமாய் தான் டீனுக்கு மண்டையில் உரைத்திருக்க, அதற்கு முன்பே அவரே ஜானால் வந்த புகாரும், அதே நேரம் ஷ்ரத்தா இல்லாததால் போனில் அழைத்துவிட்டார். அதன் பலன் நிகழ்வதே.
அதற்கு தான் சீனியரை சத்ரியன் வெளுத்துக் கொண்டிருந்தான்.
“காலேஜிக்கு படிக்க சீட் வாங்கி தந்தா? நீ எங்க போன?” என்று சத்ரியன் உறுமும் சத்தம் கேட்க, ஷ்ரத்தா காலை பிடித்த சீனியரும், அவளருகே இருந்த டீனும் சற்று தள்ளி நகர்ந்து கொண்டார்கள்.
சத்ரியன் மிக நெருக்கமாக வந்து சேர, “எங்க போனா உனக்கென்ன? உன்னை யாரு இங்க வரச்சொன்னது? எதுக்கு என் சீனியரை அடிச்ச?” என்று ஜானுக்கு எழ உதவ, அவனோ சத்ரியன் பார்வைக்கு இன்னமும் தள்ளி சென்றான்.
“உன்னை தான் கேட்கறேன்.” என்று சத்ரியன் கத்த, அங்கிருந்தவர்கள் உறைந்து போனார்கள். இதுவரை சத்ரியனை பற்றி கேள்விப்பட்டே கதிகலங்கியவர்களுக்கு நேரிடையாக தரிசணம் தந்ததே அதிசயமென்றால், ஷ்ரத்தா ஒருமையில் பேசுவது அடுத்த அதிர்ச்சி… அதிசயம்.
வினோத்தோ “உங்களை காணோம்னு பாஸுக்கு டீன் போன் போட்டார். நான் தான் அவரோட நம்பரை அட்டன் பண்ணினேன். உங்களை காணோம்னு சொன்னேன். பாஸ் ரௌத்திரமா மாறிட்டார்.
டீனிடம் நான் விசாரிக்க, உங்க மேல யாரோ புகார் தந்ததும், இப்ப காணோம் என்றதால் கால் பண்ணியதா சொல்ல, பாஸ் இங்க வந்துட்டார். யார் புகார் தந்தானு கேட்டார். அப்ப தான் இந்த பையன் உங்களை காயப்படுத்தியதா தெரிந்தது. அதனால அவனை பொலந்துட்டார்.
நீங்க எங்க மேடம் போனிங்க?” என்று கேட்டான் வினோத்.
‘இதற்கு முன் வினோத் மேடம் என்று அழைக்கவில்லையே. இதென்ன புதிதாக? அதோடு இந்த மரியாதை ஒட்டாத தன்மையாக அல்லவா உள்ளது.
இதற்கு ஏன் சத்ரியன் நேரில் வரவேண்டும் என்று குழம்பினாள்.
“வினோத்… இவளை கூட்டிட்டு நம்ம இடத்துக்கு வந்துடு.” என்று விறுவிறுவென நடந்தான்.
வினோத்தோ “பாஸ் உங்களிடம் பேச நினைக்கறார். நீங்க வாங்க மேடம்” என்று கையை முன்னே காட்டி அழைத்து செல்ல, ஷ்ரத்தா விலகாத குழப்பத்துடன் நடந்தாள்.
சத்ரியன் ஏறிய காரில் கதவை திறந்து ஷ்ரத்தாவை ஏற்றிவிட்டு வினோத்தும் காரில் ஏறினான்.
“என்னிடம் பேச என்னயிருக்கு? என்னை எங்க கூட்டிட்டு போறிங்க?
இவரோட பேசறதுக்கு ஒன்னும் இல்லை. அதோட இவர் கூட பேசவும் எனக்கு பிடிக்கலை.
என் சீனியரை அடிச்சதுல ஏதோவொரு பதட்டத்துல கார்ல வந்துட்டேன். காரை நிறுத்துங்க… நான் இறங்குறேன்.” என்று வீம்பு செய்தாள்.
சத்ரியன் ஷ்ரத்தா பேசியதை துளியும் பொருட்படுத்தாமல் நெருப்பை விழுங்கிய மலையாக அமர்ந்திருந்தான்.
“வினோத் சார்… காரை நிறுத்த சொல்லுங்க” என்று ஷ்ரத்தா கூற, “மேம்… பாஸ் உங்களோட பேசணும்னு..” என்று முடிக்கும் முன்ன “வினோத் சார்… இதென்ன புதுசா மேடம்னு கூப்பிடறிங்க. கேட்கவே எரிச்சலா இருக்கு. இவரோட பேசறதுக்கு எனக்கு ஒன்னுமில்லை. நிறுத்த சொல்லுங்க. இல்லை கதவை திறந்து குதிச்சிடுவேன்” என்று மிரட்டினாள்.
சத்ரியன் ஓடும் கார் கதவை திறந்தவன், “குதி” என்று கூற, ஷ்ரத்தா அந்த காரின் வேகத்தையும் கார் கதவு திறந்திருக்கவும், பயத்தில் மறுபக்கம் ஒன்றினாள். ஓட்டுனர் வினோத் இருவரும், நிகழ்வதை பார்த்து எச்சியை விழுங்கினார்.
சத்ரியனோ கார் கதவை அறைந்து சாத்தியவன், “எல்லாம் வாய் சவடால்” என்று ஏளனமாக முனங்கிவிட்டு, சாய்ந்தமர்ந்தான்.
ஷ்ரத்தா வினோத்தை கண்டு மனம் படபடவென அடிக்க பயத்தில் காணவும், வினோத் தலைகவிழ்ந்து நின்றான்.
நெஞ்சை அழுத்தும் உணர்வுடன், ஷ்ரத்தா சத்தமின்றி வீற்றிருந்தாள்.
சத்ரியனை எல்லாம், இனி காண மாட்டோமென நிம்மதியாக இருந்தவளுக்கு, அவனது காரில் ஏறி, எங்கே அழைத்து செல்கின்றான். என்ன பேச போகின்றான் என்று நினைக்க தொண்டை வறண்டது. இதில் ஓடும் காரை திறந்து குதி என்றதும் உயிர் பயம் வேறு வந்துச் சென்றது.
அதிலிருந்து வீடு வந்து சேரும் வரை ஷ்ரத்தா மூச்சடைத்தவளாக பேச்சிழந்து இருந்தாள்.
ஷ்ரத்தாவுக்கு தெரிந்த அதே வீடு என்றதும், நிதானமானாள்.
ஏதாவது பேசிடும் தைரியம் லேசாக துளிர்த்தது.
-தொடரும்.

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 evan enna pudhusa pandran yetho planoda dhan vandhurupano🙄🤔
தீ லீடர்…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 8)
எனக்கென்னவோ.. இவளே அவனை சீண்டி விட்டு, சீண்டி விட்டு அடிக்கடி கடுப்பேத்துறாளோன்னுத் தோணுது.
இவளுக்கு கார்டியன்னா சத்ரியன் வராமல் வேற யார் வருவாங்களாம். அந்த ஜான் இனிமேல்ட்டு இவ இருக்கிற பக்கம் தலை திருப்புவான்கறிங்க.? அந்த பயம் இருக்கணும்.
இப்ப இவளை எதுக்கு கூட்டிட்டுப் போறான்…?
ஓருவேளை, அவனோட சீக்ரெட் இடம் தெரிஞ்சிட்டதால இவளுக்கும் ஏதாவது ஆபத்து வந்துடும்ன்னு, இனி காலேஜ்க்கு இங்கயிருந்தே போகச் சொல்வானோ..?
😀😀😀
CRVS (or) CRVS2797
Chathriyan what thinking? Still confusing. Very intresting sis.