Skip to content

தாரமே தாரமே வா-18

63 / 100 SEO Score

தாரமே தாரமே வா-18

அத்தியாயம்-18

காலையில் கிளம்பி கொண்டு இருக்க வேண்டுமென்றே தமாதப்படுத்திக் கொண்டிருந்தாள்.

”ரியா எனக்கு இன்னிக்கு வெளியே போகணும் மா… கொஞ்சம் சீக்கிரம் கிளம்பு.” என்று அவரசாரப்படுத்த, அவளோ ஆடி அசைந்து அரை மணி நேரம் லேட்டா கிளம்பி முன் வந்து நின்றாள்.

ரித்திஷோ என்றும் இல்லாமல் அயர்ன் செய்து, இன் பண்ணிய சட்டை ஷூ என்றிருக்க இமைக்காமல் பார்த்தாள்.

”என்னடா கிளம்பலாமா?” எனரித்தீஷ் கேட்க தலையை தலையை அசைத்து ஆட்டோவில் அமர்ந்தாள்.

இம்முறையும் அவனையே பார்க்க கண்ணாடியில் ஐஸ்வர்யா தன்னையே பார்ப்பதை பார்த்தவன் ஒரு இடம் நிறுத்தி

”என்னாச்சு ரியாவுக்கு எதுக்கு என்னையே பார்த்துட்டு வர்றிங்க” என்று குழந்தையிடம் கேட்பது போல கேட்டான்.

”ஒன் ஒன்னுமில்லை … நீங்க இப்போ ஒரு ஆஃபிஸ்ல இருக்கற மாதிரி இருக்கிங்க, அப்போ ஏன் டெய்லி இப்படி டிரஸ் பண்ணக்கூடாது?” என ஐயத்தை கேட்க

”ஒவ்வொருதருக்கு ஒரு ஸ்டைல் இருக்கு ரியா… ஆட்டோ ஒட்டறவங்க இதுக்கு மேல ட்ரெஸ்ஸிங் முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க… டெய்லி ஆட்டோ ஓட்டும் போழுது ஆயில், சேர், கிரிஸ், பெட்ரோல், வேர்வை, அழுக்கு இப்படி ஏதாவது டிரஸ்ல படும் அப்படியிருக்க டெய்லி இப்படி போட முடியுமா ? அதுக்கு தான் போடறது இல்லை… இன்னிக்கு எனக்கு இன்டர்வியூ 11 ஓ கிளாக் அதான் என ஆட்டோ ஓட்ட, இவளோ மனதில் அப்போ 11க்கு தான் இன்டர்வியூ இப்போ லேட் பண்ணியது வேஸ்ட்டா.?’ எண்ண, அவளை கல்லூரியில் விட்டுவிட்டு சென்றான்.

‘இலா ரெகமண்டடேஷன்ல மாமா ஜாப் போக கூடாது என்ன பண்ணலாம்?’ என யோசிக்க மணி பத்தை நெருங்கியது.

யோசிச்சு யோசிச்சு மண்டை தான் வலிக்குது… தலை சுத்துது… என்று மேஜையில் தலை வைத்தவள் இதே யோசனை உதிக்க போனை எடுத்து ரித்தீஷிற்கு அழைப்பை தொடுத்து

”ஹலோ மாமா நான்… நான்… ஐஸூ … எனக்கு வாமிட் வந்துடுச்சு இப்ப தலை சுத்தி ஒரே கேர்ரா இருக்கு, கொஞ்சம் வந்து என்னை கூட்டிட்டு போ… ப்ளிஸ்” என சொல்ல, அவனோ இருந்த நிலை எல்லாம் மறந்து காலேஜ் வந்து சேர்ந்தான். நெற்றியில் வேர்வை துளிகள் பூத்து, ரித்தீஷ் வர, ஐஸூ லேசாக தள்ளாட்டதுடன் வகுப்பில் இருந்து கிளம்பினாள்.

ஆட்டோவில் சாய்ந்து கண் சொருகி அமர்ந்திருக்க இவனோ ‘காலையில் அவ்ளோ அழகா என்னை பார்த்து பேசிட்டு வந்தா… இப்போ வாடிய மலர் போல இருக்கா… நேற்று சாப்பிட்ட உணவில் ஏதாவது புட் பாய்ஸன் ஆகியிருக்குமோ’ என வீட்டுக்கு வந்தான். மருத்துவமனை செல்ல இருந்தவனை கஷ்டபட்டு வேண்டாம் என்று வீட்டுக்கே அழைத்து வந்தாள்.

வாசலில் இலா கோவத்தோடு நிற்க ரித்தீஷ் ஆட்டோவில் இருந்து இறங்கினான். ”டேய் ரித்தீஷ் உனக்கு தான் இன்னிக்கு இன்டர்வியூ சொன்னேன் இப்போ இந்த நேரத்துக்கு இங்க இருக்க?” என்று இலா கேட்க ரித்தீஷ்ஷோ, ”ஐஸூவுக்கு உடல்நிலை சரியில்லை” என்றான் ஒரே வார்த்தையில்.

”டேய் கொஞ்ச நேரம் காலேஜ்லயே படுத்து தூங்கியிருந்தா சரி ஆகியிருக்கு.. இதுக்கு போய் இன்டர்வியூ அட்டேன் பண்ணாம போயிட்ட? போடா… எவ்ளோ கஷ்டப்பட்டு உனக்கு ரெகமெண்ட் பண்ணினேன் தெரியுமா?” என இலா கோவதோடு திட்டினாள்.

 

ரித்தீஷ் பொறுமையாக ”பரவாயில்லை இலா எனக்கு என் திறமைக்கு கிடைக்கட்டும். அது எவ்ளோ நாள் ஆனாலும் பரவாயில்லை… ஐஸூவுக்கு ஒன்னு என்றால் மாமா அங்க அவ்ளோ பெரிய வியாபாரம் என்றாலும் பணம் போனாலும் இவளுக்காக ஓடி வருவார். நான் ஜஸ்ட் இன்டர்வியூ தானே” என்று ஐசுவை பூப்போல தூக்கி அவன் வீட்டுக்கு செல்ல மாடிக்குப் போனான்.

‘மாமா நிஜமா எனக்காக இப்படி வந்துட்ட…. சாரி” என்றாள் ஐஸ்வர்யா.

”நேற்று நீ அரைகுறையா சமைக்கும் பொழுதே யோசிச்சு இருக்கணும் உனக்கு புட் பாய்ஸன் ஆகிடுச்சு, சரி ரெஸ்ட் எடு…” என்று கூடவேயிருந்து பார்த்து கொண்டான்.

மாமா அருகே இருக்க நன்றாக அவனை சைட் அடித்து கொண்டு இருந்தாள். அவனோ உடை கூட மாற்றாமல் அவள் தேவையை பார்க்க ஐஸூவுக்கு நிஜமாகவே குற்ற உணர்வு வந்தது. அவனிடம் சொல்லலாமா? என யோசித்தாள்.

‘சொன்னா இப்போ கிடைக்கும் பாசம் எனக்கு கிடைக்காம போயிடுச்சுனா… என் மேல கெட்ட அபிப்ராயம் வந்துடுமே’ என்று அவனை பார்க்க, இதுவரை இல்லாத தலைசுற்றல் வந்து சேர தலையை பிடித்து கண்களை மூடினாள்.

அவனோ ”ஐசு ஹாஸ்பிடல் வர்றியா?” என்றான் அக்கறையோடு.

”வேணாம் மாமா… உன் மடியில் படுத்துக்கவா?” என்று கேட்க அவனோ அவளின் கட்டிலில் முதல் முறையாக அமர்ந்தான்.

”படுத்துக்கோ…” என்று அவள் தலையை மடியில் வைத்தான் இவளுக்கு அக்கா வைதேகி நினைவு வந்துவிட்டது போல என்றெண்ணி கொண்டான்.

மாமா தனது தன்மானம் தகர்த்தும் விதமாக என்னவெல்லாம் பேசி வீட்டோடு மாப்பிள்ளையாக நிறுத்த நிணத்தார்.

அப்பொழுது எல்லாம் வாராத கோவம் ஐஸூவை வெங்கட்டோடு சேர்த்து பேசியதில் கோவம் கடந்தது.

அதுவும் ‘எல்லாம் இங்க நம்ம வீட்டோட இருந்தா தான் ஒழுங்கா, ஒழுக்கமா இருப்பா.. இல்லை ஊர் மேய போவா” என்ற ஒற்றை சொல் இத்தனை நாள் எதிர்த்து பேசாத ரித்திஷை தணிகாசலத்திடம் எதிர்த்து பேச வைத்து விட்டது.

‘உங்க பெண்ணை அப்போ பேசினிங்க… இப்போ அவள் என் மனைவி என் மனைவியை அப்படி பேசதிங்க’ என வார்த்தை தடிக்க ‘இனி அவள் என் பெண் இல்லை’ என்று நின்றது. ரித்திஷும் ‘அவள் இனி என் மனைவி இனி உங்க மகளாக இனி இங்கே வர மாட்டாள்’ என்று சொல்லி விட்டான்.

‘தம்பி… இந்நாள் மருமகன் அந்த பக்கம் கணவன்’ என்றிருக்க வைதேகி தவிக்க தணிகாசலமும் வைதேகியிடம் ‘இனி நீ மகள் அதுயிது என்று பேசு உனக்கு அடுத்து என் கையால தான் சாவு’ என்றார்.

இத்தனை நாள் ரித்தீஷ் அவன் அக்கா வைதேகியிடம் பேசவில்லை.. அதே போல ஐஸூவிடமும் மற்றவர்கள் பேசவில்லை… ‘இதுவரை ஐஸூவும் விவரம் அறியாது பேசாமல் இருந்தாள். நேற்று பேசியது கேட்டு இவள் என்ன நினைத்து இருக்கின்றாள் என கண்டறிய முடியவில்லை அவனால்… இன்று மடியில் படுக்க செய்தவுடன் ஐஸூவுக்கு அக்காவிடம் பேசணும் தோணுதோ’ என அவளை மெல்ல கட்டிலில் கிடத்திவிட்டு போனை எடுத்து மாமாவிடம் அழைப்பை தொடுத்தான்.

நலன் விசாரிப்பு எதுவுமின்றி ”நாம பேசியது ஐஸூவுக்கு தெரியாது… அவளுக்கு அக்காவையும், உங்களையும் பார்க்க விருப்பபடறாளோ என்னவோ அமைதியாயிருக்கா…உங்களுக்கு பிடிக்கலை என்றால் விடுங்க, அவளை அக்காவை பார்க்க விடுங்க” என கேட்க போன் துண்டானது.

மாலையில் ஐஸ்வர்யா கண் விழிக்க, ‘இலா இலா ப்ளீஸ் இலா…என்கூட பேசு இலா” என ரித்தீஷ் கெஞ்ச, இலா பேசாமல் வீட்டுக்குள் செல்ல ஐஸ்வர்யா கொதிநிலையில் சென்றாள். அங்கே வீட்டுக்கு திரும்ப செருப்பினை தட்டி விட்டாள். கீழே அவளிடம் பேசலாம் என்றே எண்ணி சுடிதார் ஷாலை அணிவித்து சென்றவள் கோவத்தில் ஷாலை ஒரு மூலைக்கு தூர எறிந்தாள்.

அதற்குள் ஐஸூவுக்கு பிடிக்குமென்று கரும்பு ஜூஸ் இஞ்சி பிழிந்து வாங்கி வந்தான்.

ஆட்டோ நிறுத்தி திரும்ப காரில் இருந்து தணிகாசலம் இறங்கினார்.

”பொண்ணை கட்டி கொடுத்து மறுவீட்டுக்கு அழைக்கல உங்க அக்கா சொல்லி விட்டு இருக்கா… மாப்பிள்ளை என்றால் வீட்டுக்கு வந்து தானே அழைக்கணும்” என்றார்.

”அப்படி எல்லாம் இல்லை மாமா நீங்க போன்ல சொன்னாலே வந்திருப்போம் வாங்க மாமா” என்று வரவேற்று அழைத்து சென்றான்.

அறைக்கு முன் வரும் பொழுதே இவனது செருப்பு ஷூ எல்லாமே செருப்பு ஸ்டாண்டில் இருக்க, மகளது ஒரு செருப்பு மட்டும் எடக்குடமாக இருந்தது.

ரித்தீஷ் உள்ளே நுழையும் பொழுதே, ”ரியா மாமா வந்திருக்கார் மா” என்று குரல் கொடுக்க கட்டிலில் இருந்தவள் எழுந்தமர்ந்தாள். கால் மேலே காலை போட்டு கொண்டு அமர்ந்து நக பாலிஷ் வண்ணம் பார்த்தபடி இருந்தாள்.

தனிகாசலமும் மகளுக்கு சளைத்தவர் அல்ல என்பது போல வீட்டை நோட்டமிட்டார். முன்பு திருமணம் ஆகாத அன்று வீட்டோடு வர சொல்லி பேச வந்த அன்று இருந்த நிலையும், இப்பொழுது மகளுக்காக இருக்கும் பொருட்களும், அவர் கண்ணில்படாமல் இல்லை, சொந்த உழைப்பில் வளரும் இவனை கண்டு முதல் முறையாக மகிழ்ந்து கொண்டார்.

 

ரித்தீஷ் எப்பொழுதும் தனக்கு கொடுக்கும் மரியாதையிலும் என்றுமே குறைவு இல்லை… ஐஸூவை கூட அவர் அப்படி பேச காரணம்.. மகள் தனியாக இருக்க இவன் ஏதேனும் பேசி அவளை வருத்திடுவானோ என்று அஞ்சி தான் மகளை கூடவே இருக்க கேட்டார். மறுத்ததும் அவளின் குறையாக இதை சொல்லி கூட இருக்க நினைத்தார். அக்கா எதிரில் எப்படியும் ரித்தீஷ் நல்விதமாக நடத்துவான்… கூடவே தொழில் முறையில் அவனை உள்ளே எப்படியாவது அழைத்து கொள்ளலாம் என கணக்கு போட்டார்.

அவனோ வர மறுத்து அப்படி பேசியதும் கொஞ்சம் கஷ்டமாக போனது.

கட்டிலில் எங்கோ ஒரு இடத்தில் ஷாலை கண்டவர் ஐஸூவை முறைக்க அவளோ ‘முறைத்தா முறைத்துகோங்க’ என்றிருந்தாள். அவள் வாங்க என்றும் அழைக்காமல் இருந்தாள். அதற்குள் ரித்தீஷ் காபி போட்டு கொண்டு வந்து நீட்டினான்.

”இன்னிக்கு நீ வேலைக்கு போகலையா? இவளும் காலேஜ் போகாம இருக்கா?” என்று அப்பொழுது தான் ரித்திஷை முழுதும் பார்த்தார். அயர்ன் செய்து, இன் பண்ணிய தோற்றம், ஷூ கழட்டியதால் சாக்ஸ் காலில் இருக்க கண்டார்.

அவரின் பார்வை பொருள் உணர்ந்தவன்.

எனக்கு பதினொன்று மணிக்கு இன்டர்வியூ அதனால ரெடியானேன். பட் சடனா ரியாவுக்கு கொஞ்சம் வாமிட் தலைசுற்றல்னு போன் பண்ணினா, அதனால வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன் இன்டர்வியூ போக முடியலை… ஹாஸ்பிடல் வர சொன்னா வரலை” என சொல்லி முடித்தான்.

தலை சுற்றல் வாந்தி என்றதும் தந்தை மனம் தானாக நாட்க

ளை கூட யோசிக்காது.. சந்தோஷத்தில் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!