Skip to content

The leader-10

53 / 100 SEO Score

அத்தியாயம்-10

 

சத்ரியனின் வீட்டிலிருந்து ஷ்ரத்தா வெளியே வந்தபோது, மாலை ஒளி மெதுவாக இருளோடு கலந்துகொண்டிருந்தது.

 

அவள் சத்ரியன் வைத்திருக்கும் ஒரு காரில் ஏறி, ஜன்னல் வழியாக பார்த்தாள்.

சாலையோர விளக்குகள் ஒன்றுக்கொன்று மாறி ஒளிர,

அவளது மனசு மட்டும் ஒரே கேள்வியில் சிக்கிக் கொண்டிருந்தது

 

“இவன் என்னை ஏன் சும்மா விட்டான்? இதுவரை கேள்விப்பட்ட வரை ஏதாவது சத்ரியனுக்கு எதிரா ஒரடி எடுத்து வச்சாலே அவங்களோட இடம் தெரியாம அழிச்சிடுவதா வினோத் அண்ணா சொல்லியிருக்கார்.  அப்படியிருக்க…

 

ஏன்…? என்னோட கார்டியன் என்ற இடத்துல அவன் பெயர் இருக்கு என்ற ஒரே காரணத்துக்காக இன்னிக்கு சீனியரை ரத்த வெள்ளத்தில அடிச்சி துவைச்சதே சாட்சி. அப்படியிருக்க, அவன் கன்னத்துலயே நான் அடிச்சிட்டேன். ஒருமையில் பேசியிருக்கேன். மரியாதை தரலை. ஆனா ஏதோ என்னை ஆராயற பார்வை பார்த்தானே தவிர பெருசா ஒன்னும் எதிர்வினை ஆற்றலை’ ஒருவித நக்கல் எகத்தாளம் இதுலயே அனுப்பிட்டான்’ இந்த கேள்வியே ஷ்ரத்தா மனதில் வண்டாக குடைந்தது.

 

சத்ரியன் பதிலுக்கு அறைந்து தள்ளி வெளியேற்றி கத்தி கூச்சலிட்டு இருந்தால் கூட நிம்மதியாகியிருப்பாள்.  ஷ்ரத்தாவுக்கு இத்தனை நேரம் சும்மா விட்டதே கூடுதலாக அச்சம் பரவியது.

 

எப்படியோ அவளிடம் வரவும் கார் நிற்க, இறங்கி ஹாஸ்டலுக்கு நடந்தாள்.

 

அங்கிருந்த சீனியர் எல்லாம் இவளை கண்டு கிசுகிசுப்பது செவியில் விழுந்தது.

இதில் ஹாஸ்டல் மேடமும் மாணவியரை போல எட்டிநின்று வேடிக்கை பார்க்கவும், அறைக்குள் பதுங்க ஓடினாள்.

 

சரியாக அறைக்கதவு திறந்து உள்ளேவந்து மெத்தையில் அமர, வினோத்திடமிருந்து அழைப்பு வந்தது.

 

“ஷ்ரத்தா மேடம், ஹாஸ்டல் போயிட்டிங்களா?” என்று கேட்க, “ஏன் அந்த சத்ரியன் அக்கறையா கேட்க சொன்னானா அண்ணா?” என்று வினவினாள்.

 

“ஷ்ரத்தா… அப்படியில்லைம்மா. அவர் எதுவும் கேட்கலை. நானா தான் விசாரிக்க போன் போட்டேன்.” என்றான் வினோத்.

 

“அய்யோ சாரிண்ணா..” என்றாள் உடனடியாக.

 

“ஷ்ரத்தா… இந்த அண்ணா என்ற அழைப்புக்காக சொல்லறேன் சொன்னதை நினைவில் வச்சிக்கோ.. சத்ரியன் சாரிடமிருந்து முடிந்தளவு தூரம் இருப்பது தான் உனக்கு நல்லது.” என்றான். அதற்கு ஷ்ரத்தா சிரித்தாள்.

அது சிரிப்பு இல்லை, தோல்வியை மறைக்கும் முயற்சி.

“அண்ணா… எவ்ளோ தூரம் போனாலும் நம்ம நிழல் நம்மளை தான் துரத்தும். அது போல தான், அவன் செய்த பாவத்துக்கு அவனை நிழலா படையெடுப்பேன்.” என்றாள்.

 

வினோத் பதில் சொல்லவில்லை.

அவனுக்கும் தெரியும்

சத்ரியனும் இவளது நிழல் போல அல்லவா விரட்டுவான். இவளும் தப்பிக்க முடியாத நிலையில் இருக்கின்றாள்.

 

“ஏதோ சொல்ல தோணுச்சு. கவனமாயிரும்மா” என்று கூறி அணைத்துவிட்டான்.

 

ஷ்ரத்தாவோ தலையை தாங்கி, வீற்றியிருந்தாள். இன்று நடந்தவையை எல்லாம் நினைத்து பார்த்தாள்.

 

சத்ரியன் வீட்டிலும் அன்று, எல்லோரும் அமைதியாக நின்றிருந்தனர்.

யாரும் பேச அஞ்சினார்கள். சத்ரியனையே ஒரு சிறு பெண் அடித்தது அங்கே பரவலாக சொல்லாவிட்டாலும், மேற்பார்வையாளராக இருந்ததால்  ஷ்ரத்தா செய்கை பலருக்கும் அதிர்ச்சியே.

 

சத்ரியன் வினோத் சென்று வரும் வரை, ஒரே இடத்தில் நின்றிருந்தான்.

 

சத்ரியன் கை மெதுவாக கன்னத்தைத் தொட்டது.

அவள் அடித்த இடம்.

சிறு பெண்ணிற்கு இத்தனை கோபமா? அதைவிட வேறொரு உணர்வு சத்ரியனை ஆட்டிப்படைத்தது.

 

இன்று இரவு பிரேசில் நாட்டு அழகி ஒருத்தி சத்ரியனுக்காக காத்திருந்தாள்.

சத்ரியனின் தேவையை தீர்த்து வைக்க ஏற்பாடு செய்து பேசி வரவழைக்கப்பட்டவள்.

 

தன் எண்ணம் போன திக்கை களைத்து, தன் மனமாற்றத்திற்காக அவ்வறை வந்தான் சத்ரியன்.

 

முக்கியமாக ஷ்ரத்தா பேசியதை, அவளை மறக்க நினைத்தான்.

 

உலகத்திலேயே உடல் வனப்பான கவர்ச்சியான நங்கைகள் பிரேசில் இருப்பார்களாம். இன்று அப்படி தன் முன் அழகி இருந்தும் சத்ரியன் வெறுப்புடன் அவளை பார்வையிட்டான்.

 

பிரேசில் அழகியோ சத்ரியனை சுற்றி சுற்றி வந்து மதுவை புகட்ட, மதுவை தொண்டையில் நனைத்த சத்ரியனுக்கு பிரேசில் நாட்டு அழகியின் விரல்கள் அமிலமாக தோன்றியது.

 

அதை மீறி முத்தமிடும் நேரம் ‘அழகான பொண்ணுங்க உன் படுக்கைக்கு வரலாம். ஏன்னா… உன் படுக்கைக்கு வர்ற பொண்ணுங்க எல்லாமே ஏதோவொரு விதத்தில பணத்தேவைக்கு தானே இருப்பாங்க.

 

ஆனா தைரியமான பொண்ணுங்கன்னா உன்னை கொல்ல தான் வருவாங்க. அவங்க குடும்பத்து பெண்ணா இருப்பாங்க. அவங்களை மாதிரி ஆட்களோட நிழலை கூட உன்னால தொட முடியாது.

 

பெருசா ஸ்டேடஸ், சாம்ராஜ்ஜியம், சத்ரியன்னு ஒரு கோட்டையை உருவாக்கியதா பேசிட்டு இருக்க, உன் இச்சையை தீர்க்க ஆப்ட்ரால் பணத்தை தேடி வர்றவளுங்க தானே. அதுவே உன்னோட தராதரத்தை சொல்லலை. நீ எந்தளவு கீழ்த்தரமான நிலையில இருக்கனு. உன் பக்கத்துல ஒரு கூட்டம் இல்லைன்னா… நீ எல்லாம் ஜீரோ மட்டும் தான்’ என்ற ஷ்ரத்தா பேச்சு சத்ரியனின் நிம்மதியை பறித்தது.

 

“வினோத்” என்று அவ்வறையும் அந்த வீடும் அலறும் விதமாக சத்ரியன் கத்த, வினோத் அப்பொழுது தான் உறக்கம் வந்து விழிமூடியவன், விழுந்தடித்து ஓடிவந்தான்.

 

“டோண்ட் டச் மீ” என்று சத்ரியன் கூற, பிரேசில் அழகி குறைந்த உடையுடன், குழப்பமாய் நிற்க, வினோத் வந்ததும், முன்பக்க மார்ப்பகத்தை சரிப்படுத்தி உடையை அணிய நேரம் கடத்தினாள்.

 

வினோத்திற்கு பிரேசில் அழகியின் தோற்றத்தில் திக்குமுக்காடி நிற்க, “பா..பாஸ்ஸ்.” என்று வந்தான்.

 

“என் நிம்மதி போயிடுச்சு வினோத்.” என்று சத்ரியன் கூறினான்.

 

“எ..என்னாச்சு பாஸ்?” என்று கேட்க, “இந்த ப்யூட்டியை பணம் தந்து அனுப்பிடு. எனக்கு இப்ப இன்ட்ரஸ்ட் இல்லை” என்றான்.

 

“பாஸ்… கஷ்டப்பட்டு பிளைட்ல வரவழைச்சிருக்கேன் பாஸ்.. கோடி கணக்கில் பணம் அனுப்பியிருக்கு.” என்று கூறினான்.

 

“இடியட்… இன்ட்ரஸ்ட் இல்லைனு சொல்லறேன் புரியலை‌.

 

எனக்கு அவ.. அவ பேசியதே மைண்ட்ல இருக்கு. அது டிஸ்டர்பா இருக்கு வினோத்” என்றான் சத்ரியன்.

 

“பாஸ்….. யூ மீன்.. ஷ்ரத்தா?” என்று கேட்டான்.

 

“எஸ்..” என்றான் சத்ரியன்.

 

“பாஸ் அந்த திவகரோட பொண்ணு அடிச்சதுக்கா?” என்று கேட்டான்.  ஒரு சின்ன பெண் அடித்து விட்டதால் அவளை பழித்தீர்க்க முனைகின்றானா? என்று தான் வினோத் பயந்துக் கேட்டான்.

 

“அடிச்சதுக்காக இல்லைடா… அவ அடிச்சது ஏதோ ரோஜா பூ மோதிய உணர்வு. நான் அதை மைண்ட்ல கொண்டு போகலை.

ஆனா அவ பேசினாளே… ஏதோ.. ‘உனக்கென்ன… நீ பணம் தர்ற பொண்ணுங்குன் காலடில விழலாம். ஆனா குடும்ப பெண்கள் உன்னை தேடி வருவாங்களா? நோ வே’ என்ற ரீதியில சொன்னா.

 

நான் என் படுக்கைக்கு அழைச்சிட்டு வர்ற பெண்கள் வெவ்வேறு நாட்டுல பாப்புலரா இருக்கற அழகிகள், ஆனா வர்றவளுங்க பணத்துக்காக தானே வர்றாங்க. எனக்காக என்னை விரும்பி நல்ல குடும்பத்து பெண்கள் வரமாட்டாங்களா?” என்று கேட்டான். பேசியபடியே பிரேசில் நாட்டு அழகியை வெளியேற்றி விட்டான்.

 

வினோத்திற்கு குழப்பமும் பயமும் வந்தது. இவர் ஷ்ரத்தா பேசியதில் அவளை பழிவாங்க நினைக்கின்றாரா? அல்லது குடும்ப பெண்களை மெத்தையில் அலங்கரிக்க வரவைக்க ஆசைக் கொள்கின்றாரா?

 

“பாஸ்… உங்க மேல பைத்தியமா நிறைய பேர் இருக்காங்க பாஸ்.. ஷ்ரத்தா சொன்னது போல மட்டும் இல்லையே. நீங்க இப்ப ஓகே சொன்னா உங்களுக்கு கீழே இருக்கற ஆட்களோட பிஸினஸ் வீட்டு பெண்களை கட்டி தர நான் நீனு போட்டி போடுவாங்க பாஸ். ஏன்… நீங்க இதே போல ஆப்டர் மேரேஜ் இருந்தாலும் அப்ஜெக்ஷன் சொல்லாத செலிபிரெட்டி பெண்கள், நடிகைகள், உங்க மடில விழ தயாரா இருக்காங்க. நீங்க என்ன பா இப்படி சொல்லறிங்க.” என்று கேட்டான்.

 

சத்ரியனோ ‘அந்த மாதிரி இல்லீகல் ரிலேஷன்ஷிப் இருந்தாலும் ஓகேனு வந்து மடில விழுவாளுங்களா? ஏன்… என் பணமும், இப்ப இருக்கற பெயரும்‌ அவளுங்களுக்கு பெருமையா சொல்லிக்கவா?” என்று கேட்டான்.

 

வினோத் இப்படி கேட்டால் எப்படி பதில் தருவான். உண்மையில் ஆமென்றோ இல்லையென்றோ கூற இயலாதே. காரணம் என்று ஏதாவது உரைக்க வேண்டுமே.

 

“பாஸ் அது வந்து” என்று பொய்யுரைக்க தயங்க, “நீ போ வினோத்… ஷ்ரத்தாவை பத்தி ஆழமான டீட்டெயில் எனக்கு வேண்டும். அவ கேரக்டர்..” என்று கட்டளையிட்டான்.

 

வினோத்துக்கு இதற்கு தான் கூறியது. இதோ கேட்டுவிட்டாரே. இனி ஷ்ரத்தாவின் மானத்திற்கு பங்கம் தான் என்று மனதோடு புலம்பினான்.

 

வெளியே “சரிங்க பாஸ் ஷ்ரத்தா மேடத்தோட டீட்டெயிலோட வர்றேன்..” என்று அகன்றான்.

 

ஷ்ரத்தாவுக்காக காலேஜ் வாசல் வரை வந்து சீனியரை வகுந்தெடுத்த போதே, தன்னை அறியாமல் ஷ்ரத்தாவை ‘மேடம்’ என்று கூறியது வினோத்திற்கும் புரிந்தது.

 

புலி மானை வேட்டையாடாமல் விடாது. மான் தானாக வந்து புலியிடம் அதன் பழிவாங்கும் திட்டத்தை சிரத்தையுடன் கூறியிருக்க கூடாது. இதோ.. நிலைமை அவளை சுற்றியே சத்ரியன் பார்வை வட்டத்தில் வைத்திருக்கும் நாளும் வந்துவிட்டதே.

 

படித்து படித்து பேசியும் அந்த ஷ்ரத்தா வார்த்தைகளை அள்ளி வீசி விட்டு நேரிடையாக சவாலிட்டு, சத்ரியனையே கன்னத்தில் அடித்திருக்க கூடாது. இனி சத்ரியன் சும்மாவா விடுவான். இதோ எதற்காகவும் தன் தேக தேவையை தட்டிக் கழிக்காதவன், இன்று பிரேசில் நாட்டு அழகியை அப்படியே வழியனப்பி விட்டான்.

 

இந்த நேரம் ஷ்ரத்தா பேசிய பேச்சை சிந்திக்கின்றார்.

 

ஷ்ரத்தா வாழ்வும், இனி மழையில் அடித்து செல்லப்படும் காகித கப்பலாக தான் மாலுமி இல்லாத கப்பலாக மாறப்போவதை எண்ணினான்.

 

சத்ரியனோ இதற்காகவே ஒரு பெண்ணை மணந்து, ஷ்ரத்தா முகத்தில் கரியள்ளி பூச நினைத்தான். ஆனால் வாழ்க்கையில் தன்னை மணக்க வருபவளுக்கு, தன் எதிரிகளால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புண்டு என்ற விஷயம் அறியாமலா போவார்கள். தன்னை மணக்க அதை மீறி யாரும் உண்மையாக வரமாட்டார்களோ? பணத்திற்காக வரலாம்’ என்று புத்தி அதற்கும் குட்டு வைத்தது.

 

அவள் பேசி விட்டாள். தனக்கு இங்கு நிம்மதி இழந்துவிட்டோமே? இனி ஷ்ரத்தா பேச்சுக்கும் பதில் அளிக்காவிட்டால் உறக்கம் கிஞ்சித்தும் அருகே வராது என்று புரிந்தது சத்ரியனுக்கு. அங்கும் இங்கும் நடந்து நடந்து அவனது அறைகளில் அவன் செல்லாத இடமில்லை.

 

இதுவரை மெத்தை தாண்டி  அறையில் உலாத்தாதவன், மணி இரண்டு, ஜன்னல் புறம் வந்து நின்றான்.

 

யாரோ தன் நெஞ்சை துளைப்பதற்கு குறிப்பார்க்க, ஜன்னல் புறம் அதே நேரத்தில் வந்து நிற்கவும், சத்ரியனை கண்டதும் துப்பாக்கி வெடிக்க, சத்ரியன் மயிரிழையில் சுதாரித்தான்.

 

சத்தம் கேட்டு மெய்காப்பாலர்கள் ஓடிவர, தோட்டத்தில் யாரோ இருப்பதை உரைத்தான்.

 

நாய்கள் சங்கிலியால் கட்டவிழுத்து விட, அங்கே பாடி கார்ட்ஸ் செல்லும் முன் துப்பாக்கிகளை அப்படியே போடப்பட்டு ஓடியிருந்தான் சத்ரியனை கொல்ல வந்தவன்.

 

வினோத்தோ “என்ன இது? இதுக்கு முன்ன இந்தளவு நடந்ததில்லை. எல்லாமே வழக்கத்துக்கு மாறாக நடக்கு.” என்று அவ்விடத்தை கலவரமாக்கி நள்ளிரவு ஆட்கள் மூலை முடுக்கெல்லாம் தேடினார்கள்.

 

சத்ரியனோ “அவனை தேடி என்ன செய்யப் போற வினோத். ஒருத்தி என்னை வீடு தேடி வந்து அடிச்சிட்டு போயிருக்கா. அதுக்கே அவளுக்கான தண்டனைகள் தீர்க்கப்படலை. இதுல இது வேற” என்று கூறவும் வினோத்தோ, “ஷ்ரத்தாவை கொல்ல யோகேஷை அனுப்பவா பாஸ்” என்று மனமின்றி கேட்டான்.

 

“இதென்ன கேள்வி அவளை கொல்ல அனுப்பு வினோத்” என்றாள் யாமினி.

 

சத்ரியனோ

“வேண்டாம்.” என்று நிதானமாக கூறினான். யாமினிக்கும் வினோத்திற்கும் இதை எப்படி எடுத்துக் கொள்வதென்ற ரீதியில் இருந்தார்கள்.

 

-தொடரும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!