அத்தியாயம்-20
ஐஸ்வர்யாவின் பேச்சே ஏதோ சரியில்லை என்று உணர்த்த வெளியேறவும் முடியாமல் விழித்தவன் ‘அடேய் அவ சின்ன பொண்ணு அவளுக்கு போய் பயப்படற…. தைரியமா போ’ என்று அவன் மனசாட்சி தைரியமூட்ட இரண்டு அடியெடுத்து வைத்தவன். கண்களை சுழல விட்டான்.
”மடக்கு கட்டில் இங்கயில்லை… இருந்த சின்ன சோபாவில் ஐஸ்வர்யா ஐஸ்.. தண்ணீர் ஊற்றிட்டா.. அங்க எல்லாம் உட்கார முடியாது இங்க வாங்க” என்று பொரிந்து தள்ளும் நோக்கத்தில் அழைத்தாள்.
”இப்போ எதுக்கு என் மேல கோவமாயிருக்க… நான் எதுவும் செய்யலை.. உங்க அப்பவா ஏதேதோ பேசினார்…கேட்டார்… நான் சிவனேனு தானே இருந்தேன்” என்றான்.
”அதானே நீ தான் என்ட்ரில இருந்தே அமைதியின் சொரூபமா இருக்கியே… ஒரு வார்த்தை என்கிட்டயோ என் அப்பாகிட்டயோ எதிர்த்து பேசியிருக்கியா?” என்றாள்.
”இப்போ என்ன?” என்றான் சின்ன பெண்ணிடம் என்ன அச்சம்.
”அவர் தான் லூசு தனமா கேட்கறார் உடனே பதில் சொல்ல வேணாம்… இல்லைனு நீ பாட்டுக்கு சோறை விழுங்கமா தொண்டை குழியிலே குருவி மாதிரி வச்சிக்கிட்டு முழிக்கிற, தண்ணீரை எடுத்து குடிக்கணும் கூட தோணலை… நீ என்ன குழந்தையா தண்ணீர ஜக்கு கூட எடுத்து கொடுக்கற வரை அப்படியே புரையேறிட்டு இருக்க… இதுல உங்க அக்கா வேற எப்போ தலைக்கு ஊத்தின அதுயிதுனு…” என முனங்கினாள்.
ரித்திஷூக்கு நிஜமாகவே தலைச்சுற்றிட இவன் குழந்தையாக எண்ணி கொண்டிருக்கும் ஐஸ்வர்யா வாய் கிழிய பேசி கொண்டிருந்தாள்.
”நான் இங்க பேசிட்டே இருக்கேன் நீ என்ன என் வாயை பார்த்துகிட்டு இருக்க” என்றதும் முகத்தை திருப்பி கொண்டான்.
”போகற போக்கை பார்த்தா நான் தான் ரேப் பண்ணனும் போல..” என மெல்ல முனங்கினாள்.
”அஹ் என்ன சொன்ன…” என ரித்தீஷ் கேட்டான். அக்கா மகள் என்னவோ முணங்குகின்றாள் என்று புரிந்து,
”கேட்க கூடாது என்று தான் மெதுவா முணங்குவது” என்று அதே போல உதட்டசைத்தாள்.
‘ஏய் ரியா கொஞ்சம் தெளிவா பேசு” என்றான். ‘தெளிவா தானே இரு” என்று எழுந்து வந்தவள் அவனை இறுகி இதழில் முற்றுகையிட ரித்தீஷ் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தானாக பின் நகர அவளோ சேர்ந்து அவனோடு நகர சுவற்றில் மோதி நின்றான் ரித்தீஷ்.
கைகள் தானாக மேல் எழும்பி அவளின் இடையில் கைகள் பதிய அதன் அழுத்ததில் ஐஸூ இன்னும் இதழை விடுவிக்க மறந்து நின்றாள். இவள் தொடங்கியதை அவன் தொடர அவளின் இமைகள் சொருகிய நொடி அங்கே லைட் எரிந்தது.
யாரென்று இருவருமே விலக அறையில் இவர்கள் இன்றி யாருமில்லை ரித்தீஷ் சுற்றி சுற்றி லைட் எப்படி ஒளிர்ந்தது’ என்று அறையை நோட்டமிட்டான்.
ஐசுவோ ”மக்கு மாமா நீ தான் நகர்ந்து போய் சுவற்றில் இருக்கற ஸ்விட்ச் ஆன் பண்ணியிருக்க” என்றாள்.
அவனோ பின்னால் திருப்பி பார்க்க அங்கே ஸ்விட்ச் போடுகள் இருக்க திரும்பி ஐஸூவை பார்க்க அவளோ கிடைத்த இடைவெளியில், மெத்தையில் போய் சுருட்டி படுத்து போர்வையில் ஒளிந்தாள்.
‘போச்சு ஒரு ஃப்லோல போய் சட்னு கிஸ் பண்ணிட்டேன்… இந்த மாமா என்ன நினைக்குமோ?’ என்று அவள் இதயம் படபடத்து கொண்டிருந்தது. அவளின் இதயம் வேகமாக துடிப்பதை போல அங்கே ஒருவனின் இதயமும் அவன் கட்டுபாட்டில் இல்லை.
எப்படியும் சோபாவில் உட்கார கூட முடியாது என்று விழித்தவன் முதலில் அங்கே இருந்த லைட்டை அணைத்தான். கட்டிலில் படுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவனின் மனம் ‘அடேய் படுக்கலை அப்பறம் எழுந்து அவ மறுபடியும் கிஸ் பண்ணாலும் பண்ணுவா’ என்று பயந்து படுத்து கொண்டான்.
இருவரும் வெவ்வேறு மனநிலையில் சென்றார்கள்.
ரியா இப்படி செய்வாள் என்று அறியாத ரித்தீஷ் தான் அதிகமாக பயந்தது என்று சொல்லலாம். ஆனால் அவனுக்குள் ரியாவை தான் முதல் முறையாக அணைத்து இருக்கின்றோம் என்று விளங்கியது. அவளாக வந்து அணைத்த பொழுது எல்லாம் கூட அவளின் வாசம் மட்டுமே அவனை வசப்படுத்தி இழுக்க, இன்றோ அவளின் முத்தம் அவனுக்குள் பித்தம் கொள்ள வைத்தது.
ஆனாலும் அவன் கொஞ்சம் விலகியே இருந்தான்.
ஐஸ்வர்யா தான் கொஞ்ச நேரம் உறங்காமல் அதே நிலையில் இருந்தாள். எங்கே அசைந்தால் மாமா உறங்கவில்லையா என்று ஏதேனும் கேள்வி கேட்டுவிடுமோ என அஞ்சி போர்வையில் ஒளிந்தாள்.
அவளின் வெட்கம் அந்த இருட்டுக்கு புரிந்ததும் நேரம் விரைவாக போனது. அவளின் வெட்கத்தினை வானத்திற்கு தெரிவிக்க விடிந்தது.
கைகளை தலைக்கு வைத்து படுத்திருந்த ரித்தீஷ் அதன் அருகே யு டர்ன். போட்டு கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா.
போர்வை எங்கோ ஒரு திசையில் இருந்தன.
ரித்தீஷ் எழுந்தவன் குளித்து முடித்து வெளியே செல்ல போனவன் கதவருகே வந்தவன் நேராக ஐஸூ உடலில் ஆங்காங்கே இடை கால் தெரிய, போர்வையை போர்த்தி விட்டு அவள் முகத்தினை கண்டான்.
அந்த பால் முகம் அவனுள் குழந்தை முகமும் குறும்பு குமரியை வெளிபடுத்த அவனின் பார்வை அவளின் இதழில் நின்றது.
‘நேற்று தானே டா என்னை சுவைத்தாய்…. என்ன பார்வை? மீண்டும் வேண்டுமா? என கேள்வி கேட்பதாய் அந்த உதடு சொல்ல வருவதாய் கற்பனை செய்தவன் வேகமாக வெளியேறினான்.
வைதேகி கொடுத்த காபி பருகியவன். ”அக்கா அவுட் ஹவுஸ் சாவி வேணும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வர்றேன்” என்றான்.
”அதை ஏன் என்கிட்ட கேட்கற அதோ இருக்கு எடுத்துட்டு போ” என்றதும் எடுத்து கிளம்பினான். அவன் வளர்த்த செடிகள் எல்லாம் பூத்திருந்தது.
வீட்டை திறக்க அங்கே கொஞ்சம் தூசி இருந்தது. அவன் எப்பொழுதும் ரசிக்கும் ஜன்னல் பக்கம் வந்து கையை கட்டி நின்றான். அதன் ஜன்னல் வழியே வந்த காற்று அவனின் கேசத்தோடு விளையாடி மகிழ, அவனும் அதன் இதத்தினை விரும்பியே ஏற்றான்.
தணிகாசலம் அவன் அவுட் ஹவுஸ் செல்லும் பொழுதே பார்த்து அவனிடம் பேச வந்தார். அவனின் தோற்றம் ஆறடி உயரம் ஜன்னல் அருகே கம்பீரமாக இருக்க கண்டவர். மனதில் மகளுக்கு இவனை விட பொருத்தமானவன் இருக்க முடியாது என்பதை ஆழமாக பதிய வைத்தார்.
தனது பின் யாரோ வர உணர்வு தெரிய ஐஸ்வர்யா என்றெண்ணி ”ரியா நேற்று மாதிரி பண்ணிடாதே போதும் ” என்று அவள் நேற்று போல எங்கே முத்தம் கொடுக்கவோ அல்லது கட்டி பிடித்து விடுவாளோ என்று பயந்தான். எப்படியும் வைதேகி தன்னையே பார்த்து கொண்டு இருப்பார்கள் என்று அப்படி சொல்ல தணிகாசலதிற்கு நேற்றைய பேச்சு துவங்க இலகுவானது.
”எப்படி இருக்கா உங்க மனைவி… ரொம்ப திமிரா வளர்த்திருக்கேன்… பார்த்தாலே தெரியுது… அவள் ஒழுங்கா படிக்கிறாளா?” என்று கேட்டார்.
”அவ அதே குறும்பா தான் மாமா இருக்கா பார்க்கின்ற பார்வைக்கு தான் திமிரா தோணலாம்…. நல்லா படிக்கிறா… நேற்று ஒரு நாள் தான் லீவு” என்று பேசிவிட்டு தலை கவிழ்ந்தான்.
”சாப்பிட்டது ஒத்துக்கலை என்று அவ வீட்டில் இருப்பானு நினைச்சு பார்க்கலை… சராசரி அப்பா மாதிரி கல்யாணம் ஆனதும் பேரன் எடுக்க ஆசைப்பட்டுட்டேன்…” என்றார் தணிகாசலம்.
அவனை பார்த்து ”அவ உன்கூட சந்தோஷமா தானே இருக்க இல்லை எங்க முன்னாடி நடிக்கிறாளா? எதுக்கு கேட்கறேன் என்றால் நான் வரும் பொழுது மகாராணி செருப்பு எல்லாம் ஏறுக்கு மாறா இருந்துச்சு கோவம இருந்தா தான் அப்படி செருப்பை விசிறி போடுவா… நான் வந்தேனு கூட ஒரு மரியாதை இல்லை… அவ அப்போ உன்கூட பேசினது மாதிரி தெரியலை அவ இஷ்டதுக்கு இருந்தது மாதிரி இருந்தது… ” என்று தணிக்காசலம் குறை சொல்ல ஆரம்பித்தார்.
”மாமா தயவு செய்து அவளை எதுவும் சொல்லிடாதிங்க.. அவள் அவளா தான் இருக்கா… நீங்க மனசில் பயபடற மாதிரி எதுவுமில்லை.. புரிஞ்சுகோங்க… அவ இன்னும் கள்ளம் கபடமில்லாமல் தான் சுத்திட்டுயிருக்கா… உங்களால் எப்படி அவளை தப்பா பேச முடியுது? நீங்க அவள் மேல எப்படி பாசம் வைத்திருந்திங்கனு எனக்கு தெரியும். அப்படியிருக்க எதுக்கு இப்படி பேசறிங்க?” என்றான்.
”அவள் சொன்ன ஒரே பொய் என் மொத்த நம்பிக்கையையும் இழந்துட்டா அவளுக்கு எந்த குறையும் தெரியாம பார்த்து பார்த்து வளர்த்தேன்… இப்படி பேசுவானு நினைக்கலை.. அவளுக்கு நான் தண்டனை கொடுக்காமல் போனா இதுவே தொடரும் அதனால் தான் இந்த தண்டனை அவளுக்கு இப்போ என் மேல வெறுப்பு வந்தாலும் இனி பொய் பேசவே மாட்டா… உனக்கு உன் அக்காவை எவ்ளோ பிடிக்கும்னு தெரியும். நீ நான் என்ன பேசினாலும் அதனை மககிட்ட காட்ட மாட்ட… எனக்கும் என் மகளை என்கூடவே வச்சிக்க ஆசைபட்டேன்.. இப்படி ஏதாவது சொன்னாவது நீ, சரி மாமா உங்களுக்கு அவ உங்க கண்ணெதிரில் இருக்கட்டும்னு சொல்ல நினைச்சேன் ஆனா என் மகளை கொஞ்சமும் அப்படி பேசாம கோவிச்சுக்கிட்டு போவனு எதிர்பார்க்கலை… அவள் மேல எல்லாம் எனக்கு ஒரு துளி கூட சந்தேகம் இல்லை அப்படி பேசினா தான் கல்யாணம் செய்வா அதுவும் உன்னை கட்டிப்பானு பேசினேன். இல்லை ஏதாவது பேசி கல்யாணத்தை நிறுத்துவா.. நான் என் மகள் மேல வச்சி இருக்கற நம்பிக்கை எல்லாரும் வைக்க மாட்டாங்க” என்று கொஞ்சம் தயங்கி
”நீ இங்க மறுபடியும் வந்துடு…. உனக்கு அவுட் ஹவுஸ் தங்கிக்கனும் என்றாலும் தங்கிக்கோ.. ” என்றார்.
”வேண்டாம் மாமா.. நான் அடிக்கடி ரியாவை கூட்டிட்டு வர்றேன். உங்களுக்கு பார்க்கணும் என்றால் போன் செய்யுங்க நானே கூட்டிட்டு வந்து விட்டுட்டு போறேன் ஆனா நான் இனி தங்கமாட்டேன்” என்று அவனும் தயங்கி மறுத்தான்.
கொஞ்ச நேரம் அமைதி அதனை தணிகாசலம் கலைத்தார்.
”எங்களுக்கு நீங்க சந்தோஷமா இருந்தாலே போதும் அதுல குறை இல்லையே… ஐசு உன்னை அலட்சியபடுத்தலையே…..” என்றே கேட்க ஐசு நேற்று கொடுத்த முத்தம் வந்தது அவன் மனகண்ணில்
”இல்லை மாமா” என்று சொல்ல இருவரும் நடந்து வந்தார்கள். ஒரே நேரத்தில் இப்படி இருவரும் வருவதே அபூர்வம் என்று வைதேகி இமைக்காமல் பார்த்தாள்.
இங்கு தனது தாயை தொந்தரவு செய்து சேலை கட்டி இருந்த ஐஸூவோ அதற்கு தோதானா ஆபரணங்கள் அணிந்து கொண்டிருந்தாள்.
”ஏன் டி சேலை கட்டற… வெளியே எங்கயாவது போறியா?” என்று வைதேகி கேட்க
”உன் தம்பி சுடிதார் போட்டும் கண்டுக்கலை அதனால சேலை கட்டிட்டு உன் தம்பியை மயக்க போறேன்” என்றாள் ஐஸ்வர்யா. பேச ”அடியாத்தி” என்றே வைதேகி வாய் பிளந்து நின்றார்.
”டோர் குளோஸ் மா சமைக்க தான் தெரியலை உன் தம்பி செய்யுது… சேலையும் கட்ட தெரியலை என்று உன் தம்பி எனைக்காவது சொல்லறதுக்கா அதான்… பேசாம சேலை கட்ட சொல்லி தா..” என்றாள்.
அதனால் மகளுக்கு சேலை மட்டுமாவது கட்ட சொல்லி தந்து விட்டார் வைதேகி.
”உன் போனில் அடிக்கடி வெட்டியா பார்க்காமல் சமைக்க கத்துகோ”
”யுட்யூப் சமைக்க தான் பார்த்தேன்..” என்று இன்று அவளே சமைத்தாள்.
செய்யும் பொழுது அம்மாவை அருகே விடவில்லை சுவைக்கவும் விடவில்லை ரித்தீஷ் தான் முதலில் சாப்பிட்டு சொல்லணும் என்ற பிடிவாதம் பிடித்திட…அவர்கள் உண்ண காத்திருந்தார்கள்.
வைதேகி சமைத்ததை சேர்த்து அவள் சமைத்ததையும் பரிமாறி அவனின் பதிலுக்காக ஆவலாக இருந்தாள்.
தணிகாசலம் பரத் ரித்தீஷ் மூவரும் சாப்பிட, முதல் சுவையிலே சிரித்து கொண்டான். அவரை பொரியல் அக்கா வைத்தது அல்ல என்று அவளை பார்த்து திரும்ப முயன்றான் ஆம் முயன்றான் அவளின் பார்வையோ என்னையே பார் என்றே அர்த்தம் சொல்ல இமைக்காது பார்த்தவன், பரத்தின்
”தூ… து.. சே அம்மா இதுல ஏன் இவளோ காரம் அள்ளி போட்டுயிருக்க உப்பே இல்லை.. ” என்றான்.
ரியா ”டேய் அது நல்லா இல்லை…” என்று அவனிடம் கேட்க
”நல்லாவே இல்லை…” என்று அவரையை தள்ளி விட்டான்.
”அப்போ இது உனக்கு கிடையாது” என்று ரித்தீஷ் தட்டில் வைத்து ”இது உங்களுக்கு மட்டும் தான்” என்றாள்.
அவனோ அக்கா மாமா முன்னால் எதுவும் சொல்லாமல், சொல்லவும் முடியாமல் அப்படியே உண்டான்.
அடிக்கடி மட்டும் அவன் கண்கள் ஐஸூவின் சேலையை தழுவி சென்றது. இவ எதுக்கு இப்போ வீட்டில் சேலை கட்டி இருக்கா? என புரியாமல் குழம்பினான்.
தணிகாசலம் கொஞ்சம் சாப்பிட்டு உடனே மனைவியை பார்க்க ‘அவளே செய்தது’ என்று குறிப்பால் சொல்ல தணிகாசலம் ரித்தீஷ் முகம் சுழிக்காமல் சாப்பிடுவதை கண்டு அவரும் அவருக்கு வைத்த பங்கை மட்டும் கடினபட்டு சாப்பிட்டார்.
ரித்தீஷ் தான் மொத்த அவரைக்காயும் புன்னகை குறையாமல் சுவைக்க வைதேகிக்கே ஆச்சரியமாக போனது.
ரித்தீஷ் முகத்தில் ரியா முகத்தில் இருக்கும் சிரிப்பு நாளை இதே போல குடியிருக்குமா? என விதி அவர்களை பார்த்து சிரித்தது.
-தொடரும்
