அத்தியாயம்-14
கடந்த முறை தந்தை வாங்கி தந்த உடை வெள்ளை நிறம். அந்த கடிதத்தில் இருந்த நலம் விரும்பி அணிய கூறியதும் வெள்ளை உடை. வாசல் தாண்டவும்தான் ஷ்ரத்தாவுக்கு அதுவே புத்திக்கு உரைத்தது.
ஆனால் அந்த லெட்டரை பார்த்தா, ‘நான் அதை நம்பணும்னு தோணுதே’ எப்படிய இருந்தாலும் இந்த டிரஸை சேஞ்ச் பண்ண மாட்டேன். அடுத்த லெட்டர் வந்தா பார்த்துப்போம்’ என்று தெனாவட்டாக எண்ணினாள்.
வழியில் சிலர் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள். ‘இவங்களுக்கு எப்படி என் பிறந்தநாள் தெரியும்?’ என்று முழித்தபடி வந்தவளிடம் வாட்ச்மேன் கூட வாழ்த்து கூறினான்.
“என் பிறந்தநாள் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.
“ஹாஸ்டல்ல உங்க பிறந்த நாளை முன்னிட்டு மூன்று வகை டிபன் போட்டாங்களேம்மா. காலையில கூட பூங்கொத்தா வந்து டெலிவெரி பாய் இறக்கினானே. அதை வச்சி சொன்னேன்மா. ஏன்மா?” என்று பயந்து கேட்டார்.
“ஒ… ஒன்னுமில்லை” என்று நடந்தாள்.
தன் பிறந்தநாளுக்கு மூன்று வகை உணவா? ஹாஸ்டல் கேண்டீன் சென்றியிருந்தால் தெரிந்திருக்கும். இன்று தந்தை இல்லாத துக்கத்தில் சாப்பிடவும் தோன்றாமல் காலை உணவை நிராகரித்து விட்டாள் ஷ்ரத்தா.
மனிஷா தான் மாலை சந்திப்பதாக கூறியிருக்க, அந்த நொடிக்காக காத்திருந்தாள். கனிமொழியை மட்டும் பார்த்து தனக்கு பதினெட்டு பூர்த்தி ஆனதை தெரிவித்தாள்.
“ஓ சூப்பர் ஷ்ரத்தா. மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப்திடே” என்றாள்.
“சந்தோஷமா? எனக்கா? நீ வேற காமெடி பண்ணாத கனிமொழி” என்றாள்.
தந்தை இல்லாத பெண், கிட்டத்தட்ட யாருமில்லாத பெண், பிறந்தநாளுக்கு சந்தோஷம் ஏது?
“சாரி ஷ்ரத்தா” என்றாள்.
“இட்ஸ் ஓகே” என்றவள் கேன்டீன் சென்றனர். இங்கு இன்று யார் எதை சாப்பிட்டாலும் இலவசம் என்ற போர்ட் இருந்தது.
ஆனாலும் ஷ்ரத்தா சாப்பிட்டதற்கு பணத்தை தந்துவிட்டு நகர்ந்தாள்.
“சத்ரியன் சார் நேர்ல வந்து வாழ்த்து சொல்வாரா?” என்று கேட்டாள்.
“எனக்கு அவன் வாழ்த்து எதுவும் வேண்டாம். காலையில பூங்கொத்துல டிரஸ் பேக்கிங் செய்ததில என்ன எழுதியிருக்கான் தெரியுமா?” என்று கத்தி எழுதியதை கூறினாள்.
“அச்சோ… அப்ப.. சத்ரியன் ஏதாவது வலுக்கட்டாயமா இழுத்துட்டு போயிடுவாரா?” என்று பயந்து கேட்டாள்.
“நான் செத்துடுவேனே தவிர என்னை இழுத்துட்டு போக முடியாது.” என்றாள்.
“ஜாக்கிரதையா இரு ஷ்ரத்தா. எனக்கு என்னவோ சரியில்லைனு மனசுக்கு படுது.” என்றாள்.
கனிமொழி பேசியதை புறம் தள்ளியவளாக, ஷ்ரத்தா வகுப்பில் நுழைந்து பாடத்தை கவனிக்க, ஷ்ரத்தாவுக்கு லேசாக பயமும் இருந்தது.
இந்த சத்ரியன் இன்று ஏதாவது வம்பு செய்ய வந்து தூக்கிக்கொண்டால் கூட யாரும் தனக்காக பேச நிற்க மாட்டார்களென துடித்தாள்.
இதில் சத்ரியன் வருவது போலவே பிரம்மை அடிக்கடி தோன்றி மறைய, ஷ்ரத்தா பாடு திண்டாட்டாம் ஆனது.
ஆனால் காலையிலிருந்து கல்லூரி முடியும் வரை சத்ரியன் வரவில்லை.
ஷ்ரத்தா பயந்து பயத்து தன் அருகே யாராவது திடுகிட்டு வந்தாலே அவனாக தான் இருக்குமென்று பயந்து நிற்க அது வேறொருவராக மாறிய கூத்துகள் நிகழ்ந்தது.
இதில் யோகேஷ் கூட அவளை நிழலை போல தொடரவும் இல்லை.
ஒருவேளை சத்ரியனுக்கு என் பிறந்த நாள்னு தெரியாதோ? வினோத் அண்ணாவிடம் எப்பவாது சொல்லி வச்சியிருப்பார். அதனால அந்த அண்ணா தான் இதெல்லாம் நினைவு வச்சி அனுப்பியிருக்கலாம்.
என்னவோ இன்னிக்கு ஜாலியா இருக்கேன் அவனை ஏன் நினைக்கணும்? என்று மகிழ்ந்தாள்.
கனிமொழி ஷ்ரத்தாவை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு, கோவிலுக்கு சென்றாள். பிறந்த நாள் அதுவுமா கோவிலுக்கு வரமாட்டேன்னு அழுச்சாட்டியம் பண்ணற.’ என்று.
அங்கே கோவிலுக்குள் எல்லாம் வெறுமெனே சென்றவள், வெளியே இருந்து பிச்சை எடுத்தவர்களுக்கு பக்கத்தில் உள்ள ஹோட்டலில் பார்சல் வாங்கி தந்தாள் ஷ்ரத்தா.
“என்னடி பிறந்தநாள் அதுவுமா அன்னதானமா? பெரிய ஆளு தான்” என்றாள் கனிமொழி.
“பணம் இருக்குனு பண்ணலை கனிமொழி. யாருமில்லைனு பண்ணறேன். இருந்த உறவான அப்பாவையும் பறிச்சிக்கிட்ட சாமியிடம் யாருக்காக வேண்ட? இந்த நிமிஷம் கண் முன் இருக்கறவங்க பிச்சை கேட்டாங்க. சாப்பாடு வாங்கி தந்தேன். அவ்ளோ தான்.” என்றாள்.
கனிமொழிக்கு ஷ்ரத்தாவின் பிறந்தநாள் அதுவும் கேலி கிண்டல் செய்யாமல் தவிர்க்கலாமென தாமதமாக புரிப்தது.
அடுத்து ஒரு ஹோட்டலில் மனிஷாவையும் வரச்சொல்லிவிட்டு சாப்பிடலாம் என்று காத்திருந்தனர்
இன்று அவர்களோடு சாப்பிட ஆசை முளைத்தது. யாருமில்லாதவளாக பிறந்தநாள் கொண்டாட்டம் எதற்கு?
மனிஷாவோ கேக் வாங்கிக் கொண்டு மூச்சிரைக்க வந்தாள்.
“சாரி டி சாரிடி. ரொம்ப நேரம் வெயிட் பண்ணறியா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஓகே தான்
நீ வந்ததே போதும்.” என்றாள் ஷ்ரத்தா.
“ஹாய்.. மனிஷா” என்றாள் கனிமொழி.
“ஹாய்பா.. உங்களை பத்தி ஷ்ரத்தா நிறைய சொல்லியிருக்கா. உங்களோட நட்பு தான் அவளை கொஞ்சம் இயல்பாக்கியிருக்கு” என்று புன்னகத்து நட்புறவு கொண்டனர்.
“நீங்க இரண்டு பேரும் இல்லைன்னா லேசா துவண்டிருப்பேன். ஆனா தெம்பா இருக்கேன்னா நீங்க தான் காரணம்” என்று இருவரையும் கட்டியணைத்தாள்.
ஷ்ரத்தா அழ முற்படுவதை கண்டு மனிஷா, “முதல்ல கேக் கட் பண்ணு” என்றாள்.
மேஜையில் கேக் துண்டித்து முடித்து பாட்டு பாட, பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் கூட பாடி கைத்தட்டினார்கள்.
ஷ்ரத்தாவுக்கு இந்த சூழல் புன்னகை அரும்ப, கேக் வெட்டினாள்.
“ஏ.. கேக் வெட்டி இங்கயே மத்தவங்களுக்கு தந்திடலாம்” என்றாள் மனிஷா.
“பெஸ்ட்” என்றாள் கனிமொழி.
உடனடியாக ஷ்ரத்தா தோழி இருவருக்கும் ஊட்டி விட்டு சிறுதுண்டாக மற்றவை போட்டு தந்தாள். அங்கே ஒரு இருபது நபர்கள் இருக்க, கேக் எல்லாம் தரவும் வாழ்த்து கூறி வாங்கினார்கள்.
மனிஷா விளையாட்டிற்கு முகத்தில் கேக் பூசிவிட, ஷ்ரத்தாவோ “மனிஷா… உன்னை கொல்ல போறேன் பாரு” என்று செல்லமாய் கோபித்து முகம் அலம்ப ரெஸ்ட்ரூம் சென்றாள்
முகம் அலம்பி டிசு பேப்பரால் துடைத்துவிட்டு வர, ஹோட்டல் காலியாக அமைதியாக இருந்தது.
“என்ன எல்லாரும் ஒரு செகண்ட்ல காணேம்பா” என்று ஷ்ரத்தா வந்து தோழிகளை கேட்க தோழிகள் வழிவிட அங்கே இவளது பங்கான கேக் துண்டை சத்ரியன் சுவைத்தபடி “Happy to be turning Eighteen Dear ஷ்ரத்தா” என்றான்.
ஷ்ரத்தாவுக்கு இருந்த மகிழ்ச்சி எல்லாம் துணிகொண்டு துடைத்ததாக மாறியது. இவன் காலையிலேயே வந்து கதிகலங்க வைப்பானென பயந்து பயந்து இருந்தவள், அவன் வரவில்லை என்றதும் மெய்மறந்து இவனை மறந்து போனாள். ஆனால் மணி ஆறு முப்பதுக்கு வந்து நிற்கின்றான்.
அச்சத்தில் சிலையாக, “நீ இன்னிக்கு ஈவினிங் சிக்ஸ் தேர்டிக்கு பிறந்ததா கேள்விப்பட்டேன். அதான் அப்பவே சந்திக்கலாம்னு வந்தேன். பெர்த்டே எல்லாம் பலமா செலிபரேட் பண்ணற போல. கோவிலுக்கு போய், பிச்சைக்காரங்களுக்கு புட் கொடுத்து, இங்க கேக் வெட்டி, இங்கிருந்த டேபிளில் இருந்தவங்களுக்கு தந்து, பிரெண்ட்ஸ் முகத்துல எல்லாம் கேக் பூசி விளையாடி ஹாப்பியா இருக்க போல?” என்றான்.
தாடையில் சிறு கேக்க்ரீம் சரியாக நீரில் கழுவாமல் முகத்தில் ஒட்டியிருக்க, அதை ஆள்காட்டி விரலால் தொட்டு எடுத்தவன், உள்நாக்கில் வைத்து சப்பி சுவைத்தவாறு, “எக்ஸ்ட்ராடினெரி டேஸ்ட்” என்றான்.
சத்ரியன் தீண்டவும் தான் சிலையாக ஸ்தம்பித்தவள் “உன்னை யாரு என்னை தேடி வரச்சொன்னது. உனக்கு வேற வேலையில்லை.
பெரிய தொழிலதிபர், இல்லீகல் வேலையை செய்யற டான், இங்க என்ன பண்ணற?” என்றாள் நக்கலாக.
“பிஸிமேன் தான்… பிசினஸ் மேன் தான். உன் பாஷையில் தி லீடர் தான். பட் அதெல்லாம் வினோத் வச்சி ஒரு பக்கம் பார்த்துட்டு தான் இங்க வந்திருக்கேன். உனக்கு பதினெட்டு ஆனதும், எனக்கு அது ஸ்பெஷல் ஆச்சே.” என்றான் அடங்காத திமிர் அரசன்.
“முட்டாளிடம் என்னால பேச முடியாது. மனிஷா கனிமொழி நாம நமக்கு வந்த உணவை சாப்பிடலாம்” என்று கூற உணவில் நடுக்கத்துடன் கை வைத்தார்கள்.
ஷ்ரத்தா ஸ்பூனால் உணவை எடுத்து விழுங்கினாள்.
அவசரம் அவசரமாக விழுங்க, “பார்த்து பிரைட் ரைஸ் ஆல்ரெடி ஹாப் பேக்ட். இதுல என்மேல இருக்கற கோபத்துல நீயும், என் மேல இருக்கற பயத்துல உன் பிரெண்ட்ஸும் அள்ளி அள்ளி சாப்பிட்டு விக்கிக்க போகுது” என்று கேலி செய்தான்.
மனிஷாவோ “ஷ்ரத்தா… எனக்கு போதும்.” என்றாள். கனிமொழியும் “எஸ் எனக்கும் போதும். வீட்ல அப்பா கால் பண்ணுவார்.” என்று கூறினாள்.
“ஓகே… நீங்க போங்க” என்று அவளும் எழுந்தாள். தன்னால் அவர்களும் இது போன்ற கிறுக்கனிடம் மாட்ட வேண்டாம். அவர்களின் நலன் கருதி அனுப்பி வைத்தாள்.
யோகேஷ் ஷ்ரத்தாவை மட்டும் தடுத்து நிறுத்தியவன், மற்ற இருவரை போக கூறினான்.
மனிஷா கனிமொழி தயங்க, யோகேஷை மீறி “மனிஷா கனிமொழி… நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க. நானுமே கார்ல ஏறிடுவேன். இவனால ஒரு ஹேரையும் பிடுங்க முடியாது.” என்று ஜம்பமாய் பேசினாள்.
அடுத்த நிமிடம் மனிஷா கனிமொழி வெளியே சென்றிட ஏற்பாடு நடக்க, சத்ரியனுக்கான உணவு வகைகள் அவ்விடத்தை ஆக்கிரமித்தது.
நான்வெஜ்ஜில் அனைத்து ரகங்களும் அந்த டேபிளில் வந்து சேர்ந்தது. சத்ரியன் பொறுமையாக ஷ்ரத்தாவை எதிரே அமர வைத்து சுவைத்தான்.
சத்ரியன் எதுவும் பேசவில்லை. ஷ்ரத்தாவும் கோபத்தில் வாய்சவடால் விடவில்லை. ஏதேனும் பேசி தானே விபரீதத்தை இழுக்க அவளுக்கென்ன பைத்தியமா?
ஆனால் சத்ரியன் “என் வீட்ல, என் தனிப்பட்ட பார்ல, என் தொழில் துறை ஆட்களோட, என் வெல்வெஷர், என் எதிரிகள் என்று எல்லாருக்கும் நீ நல்லாவே அறிமுகமாகி இருக்க.
சத்ரியன் என்றாலே மரணபயத்துல இருந்தவங்க, என் பெயரை கேட்டாலே கதிகலங்கி போனவங்க எல்லாம், இப்ப என் பெயர் அடிப்படுதுன்னா, அடுத்து கொசுரு பெயரா உன்னை பத்தி தான் பேசறாங்க.
பெயர் ஷ்ரத்தா, திவாகர் பொண்ணு, திவாகர் வக்கீல் சத்ரியனை கேஸிலிருந்து காப்பாற்றி ஒரு விபத்துல இறந்துட்டார். அதுலயிருந்து ஷ்ரத்தாவுக்கு நான் தான் கார்டியன். வெல்வெஷர்.
உன்னை முதல்ல வீட்ல வச்சி ஒன்நைட் ஸ்டான்டர்ட் யூஸ் பண்ணி, நீ என் தனிப்பஞ்ட பிரைவேஸி பார் வரை வந்து என் முன்ன பேசற அளவுக்கு உரிமையும் தைரியமும் தந்திருக்கேனாம்.
நான் உன்னை ஆசைப்படறேனாம், விரும்பறேனாம், உனக்குன்னா துடிக்கிறேனாம், உன்னை நிழல் போல சுத்தறேனாம்.
உன்னை தான்… க.. கல்.. காதலிக்கறேனாம். ப்ளா ப்ளா ப்ளா..” என்று கல்யாணம் செய்ய போவதாக கூற வந்தவன் மாற்றினான்.
ஷ்ரத்தா… “முட்டாள் பசங்க. உன்னை கொல்ல வந்தவனு சொன்னா சரியா இருக்கும்.” என்று கூற, சத்ரியன் “கொல்லவா… இந்தா கொல்லு. இது என்னோட கன். உன் பிறந்த நாளுக்கு ஆபரா என் உயிரை தர்றேன். நீயா எடுத்துக்கோ” என்று துப்பாக்கியை தூக்கி ஷ்ரத்தா முன் போட்டான்.
ஷ்ரத்தா துப்பாக்கியையும் அவனையும் மாறிமாறி பார்த்து துப்பாக்கியை எடுத்து அவனை சுட்டு முடித்தாள்.
-தொடரும்.
