Skip to content

தாரமே தாரமே வா-25

57 / 100 SEO Score

அத்தியாயம்-25

 

நேரம் நகர ஐஸூவுக்கு இருக்கும் பயம் கூடியது… கீழே இலா யாருக்கோ பை சொல்வதை கேட்க எட்டி பார்த்தாள். அங்கே சண்முகம் மகாலட்சுமி இருவரும் செல்ல இலா பை சொல்லி வழி அனுப்பி திரும்ப கண்டாள்.

”ஹாய் வாலு என்ன பண்ற அங்க?” என்று இலா கேட்க படியில் இறங்கியபடி அவங்க எங்க போறாங்க? என்று ஐசு கேட்டாள்.

”திருப்பதி மா… எனக்கு கல்யாணம் ஆனா திருப்பதி சாமிக்கு நடந்தே வந்து அப்பா முடி காணிக்கை தந்து வெள்ளியில் சங்கு வாங்கி உண்டியலில் போடறதா வேண்டியிருந்தாங்க அதான். மஸ்தானுக்கும் பாத்திமாவுக்கும் டிவோஸ் முடிஞ்சது அவங்க ஊரில் வைத்து பெரியவங்க பேசிட்டாங்க.. மஸ்தானுக்கு எனக்கும் மேரேஜ் தேதி குறிச்சு வருவாங்க…” என வெட்கம் படர கூறினாள்.

”அப்போ இன்னிக்கு தனியாவா இருப்பிங்க?” என ஐஸ்வர்யா கேட்க

”ஆமா…” என்று சொன்னவள் இன்னும் கொஞ்ச நேரம் பேசி மேலே வந்தாள்.

ரித்தீஷ் வரும் நேரம் வேகமாக வெளியேற போக அவனோ அதே வேகதோடு முன் வந்து நின்றான்.

அவனின் மூச்சு காற்றில் அனைத்தும் மறந்தவள். கருவிழிகள் உருள அவனிடம் இருந்து விலக பார்க்க அவனோ

”பார்டா அதுக்குள்ள தூங்க எல்லாம் ரெடி பண்ணி வச்சி இருக்க?” என்று கைகளை புல் ஷர்ட் மடித்து விட்டு அவளின் முன் நடக்க அவளோ இரண்டு அடி பின் நகர்ந்தாள்.

”காலையில் முறைச்ச… இப்போ முறை..” என்று அவளின் மேலே மெல்ல விழிகளை பார்த்து முன்னேற அவளின் முகம் வேர்த்து விட்டது. அதனை அவள் வலது கையால் துடைக்க அவனோ அவளின் இதழில் முற்றுகையிட…

”ஹலோ… எதுக்கு கிட்ட வர்றிங்க… தள்… தள்ள்…ளுங்க..” என்று தைரியம் கொண்டு பேச

”அப்படி தான் வருவேன்… இலாகிட்ட என்னை விரும்பறதா சொல்லி இருக்க…அதுவும் ரொம்ப… பிடிக்கும் என்று அப்போ… என் கிஸ் பிடிக்கும் தானே?” எனறு இன்னும் நெருங்க அவளோ குழைந்து போனாள். தன் மொத்த சக்தியும் இழந்தவளாய்

ரித்தீஷ் இன்னும் காற்று கூட புகாத நூலிடை இடைவெளியில் இதழை முற்றுகையிட தன்னவளின் நெஞ்சு கூடு வேகம் கண்டு புன்னகைக்க, அதில் சுதாரித்தவள் அவனை கைகளால் தள்ளி விட்டவள், கீழே ஓட முயல அவளின் ஜடையில் கையை பற்றி இழுத்தவன்

”எங்க ஓடறிங்க மேடம்…” என்று அவனை நோக்கி இழுக்க அவளோ பூக்குவியலாக அவனின் மீதே விழ, இதற்கு முன் இருந்த தூரம் எல்லாம் எங்கோ தூரமாக போனது. அவன் பார்வை, அவன் வாசம், அவன் புன்சிரிப்பு என தன்னை மறந்தவள் கொஞ்சம் அவள் இருக்கும் நிலை எண்ணி தவித்தவள் இவனிடம் நெருங்கினாலே நான் மறந்துடறேன் என்று மீண்டும் விடுவித்து கொள்ளும் விதமாக,

”தள்ளு அதன் என் காதல் உடல் மேல இருக்கற கவர்ச்சியில் வந்துச்சுனு சொன்ன… இப்ப என்ன? உனக்கும் அதே போல தான் வந்துச்சா? விடு என்னை” என்று தனது சிகையினை இழுத்து கொண்டு கீழே ஓடினாள்.

ஒரு கணம் ரித்தீஷ் அவளின் பேச்சில் சிலையாக மாறிவிட்டான். தான் பேசிய பேச்சின் வீரியம் அந்த நொடி தான் உணர்ந்தான்.

அழகாக எதை பற்றியும் யோசிக்காமல் நினைத்ததை பேசி மனதில் கள்ளமின்றி சந்தோஷமாக இருந்த கல்லூரி பெண்ணை திருமணம் ஆனதும் அவளின் மனம் தேடிய ஏதோ ஒன்று தன்னிடம் அவளை ஈர்க்க அது உடற்கவர்ச்சி என்றல்லவா எண்ணி கத்தி விட்டோம்.

நிச்சயம் அவளுக்கு தன்னிடம் ஈர்த்தது.. எனது பொறுமை… எனது புரிதல் அன்பு என்று அல்லவா இலாவிடம் அவள் கூறியிருக்க தான் வெறும் சதையோடு காதலை ஒப்புமையிட்டு அவள் மனதை உடைத்து இருக்கின்றோம் என புரிந்தது.

முகம் அலம்பி என்னவோ போல கொஞ்சம் நேரம் அமர்ந்தவன் அவள் அருகே தான் சென்றதும் அவளின் பளிங்கு பால் முகம் வெட்கத்தில் சிவந்து இருக்க கண்ட நொடி அவனுள் மின்னலாய் தோன்றியது.

‘ரியாவுக்கு என் மேல கொஞ்சம் கோவம் இருக்கு அதே சமயம் அவளுக்கு என் மேல இருக்கின்ற காதல் குறையலை… அதை நான் திரும்ப கொண்டு வந்து அவளே மறுபடியுமே பேச வைக்கணும்… என்னோட ரித்தீஷ் மாமா மங்குனி மாமா என்று அவள் கிண்டல் செய்து என்னை அவள் ஏற்றுக்கணும்… அதுக்கு முதலில் அவளிடம் இன்னிக்கே தான் அவளிடம் பேசியது தவறு என்று சொல்ல வேண்டும் முதலில் அவளை இங்கே அழைத்து வரணும் என்று இலாவின் வீட்டுக்கு செல்ல தயாரானன்.

இலா கதவை திறந்து வரவேற்று ”என்னடா வர வர குட்டி போட்ட பூனை போல இங்கயே சுத்துற…”

”உன்னை யாரு சுத்தறா… வழிவிடு…” என்று வீட்டுக்குள் வந்தவன் எல்லா இடமும் தேட,

”இலா எங்க அவ?”

”யாரு டா?” என்று இலா வேண்டுமென்றே சொல்ல

”பச்… விளயாடாதே இலா ரியாவை தான் கேட்கறேன்…”

”அது யாருடா ரியா உனக்கு ஐஸூ என்று தானே அக்கா பொண்ணு இருக்கா?” என்று ஓட்டினாள்.

”உன்கிட்ட கேட்டேன் பாரு…” என இலா அறையில் தேட அதன் பின் அவர்கள் பெற்றோர் அறையில் தேடியவன் கெஸ்ட் அறையிலும் ரியா இல்லாமல் போக ஹாலில் சுற்றி தேடியவன் கொஞ்சம் தள்ளி இருந்த கிச்சனில் ரியா சுடிதார் ஷால் அசைய கண்டு அங்கே போக செய்ய இலா தடுத்தாள்.

”ஆளில்லாத வீட்டில் எதுக்கு வீட்டை சுற்றி சுற்றி வர” என்றதும்,

”உங்க வீட்டில் கிச்சனில் ஒரு வெள்ளை பூனை உருட்டிட்டு இருக்கு அதை பார்க்க போறேன்.. முடிஞ்சா தூக்கிட்டு போவேன்” என்று ஒய்யாரமாக, நடக்க இலா அங்கிருந்த சிப்ஸ் எடுத்து சாப்பிட்டு கொண்டே அவர்களை பார்த்து அமர்ந்தவள்

”டேய் அவளை அழ வச்ச நான் சும்மா விடமாட்டேன் டா” என்று இலா கூறிவிட்டு, போனில் மஸ்தானுக்கு அழைப்பு விடுத்து பேச ஆரம்பித்தாள்.

ரியாவிடம் வந்த ரித்தீஷ் ”நம்ம வீட்டுக்கு போகலாம் வா” என்று ஆரம்பிக்க

”இன்னிக்கு நான் வருவதாய் இல்லை” என்று அங்கே சுட்டு வைத்த முறுகலான தோசையை காரசட்னி கொண்டு சுவைத்தாள்.

”அது என்ன இன்னிக்கு? அன்னிக்கு விட இன்னிக்கு நான் ஒன்னும் பெரிய தப்பு செயலை… அன்னிக்கு பேசியதை விட இன்னிக்கு நெருங்கி தான் வந்தேன்… ஆமா அங்க தான் சாப்பிட செய்து தர்றேன்ல எதுக்கு இங்க வந்து கிச்சனில் பூனை மாதிரி உருட்டியிருக்க…?”

”அங்க நீ என்னை ஏமாற்றிட்ட.. உங்க அக்கா வைதேகியும் தோசை என்ற பேர்ல கணமா சுட்டு வச்சி கொல்லறிங்க… இங்க பாரு மெலிசா முறுகளா நெய் வாசமா.. பேப்பர் போல இருக்கு இதான் தோசை.. நீ செய்யறது விட இங்க நல்லா இருக்கு” என்று ஒரு வில்லை எடுத்து வாயில் வைத்தாள்.

”நீ ஒரு தோசை இரண்டு தோசை என்று நைசா சாப்பிடமா ஓடிடுவா… அதனால அக்கா உனக்கு பெரியாத கணமா செய்து கொடுக்கும், நானும் அப்படி நினைச்சு தான் சுட்டு தருவேன்… அதான் அப்டி இருக்கும்…” என வந்தது எதற்கென மறந்து பேசினார்கள்.

”ஓஹ் சே தோசை அப்படி கணமா இருக்கறது பார்த்து தான் நான் சாப்பிடமா ஓடறேன் டா மக்கு மாமா” என்று ரியா சொல்ல ரித்தீஷ் வேகமாக அவளின் இதழை முற்றுகையிட்டு இருந்தான்.

ரியா அப்படியே சாப்பிட்டு கொண்டிருந்த கையை, அவனின் சிகையில் அழுத்த கோத.. ரித்தீஷ் அவளை விடுவிக்க மறந்தான்.

மஸ்தானிடம் பேசிக்கொண்டிருந்த இலா நெடுநேரம் சத்தமில்லாமல் போகவும் எட்டி பார்க்க,

”அட பக்கிங்களா… இங்கிலீஷ் மூவியா டா… மஸ்தான் இதுங்க என்ன செய்றாங்க தெரியுமா?” என்ற குரல் கேட்டு ரியா தள்ளிவிட ரித்தீஷ் நகர்ந்து அவனின் பின்னந்தலையை அழுத்த கோதினான்.

”வீட்டுக்கு வா… ரியா” என்றான் கெஞ்சலாக.

”நான் இன்னிக்கு வரலை… நான் இலா அக்காவுக்கு துணையா இங்க தான் இருக்க போறேன். நான் நீ கிட்ட வரும்பொழுதே தள்ளி விட்டு தான் வந்தேன்… இப்ப நீ தான் மறுபடியும் இங்க வந்த… நான் இல்லை” என்று மழலையாய் மொழிய… ரித்தீஷ் கோவமாக எழுந்து கொண்டான்.

இலா ரித்தீஷ் வேகமாக செல்ல, வெட்கம் கொண்டு ஓடி ஒளிகின்றான் என்றெ ண்ணி கொண்டாள்.

ரியா மனம் தான் அதிகமாக அவனை வாட்டி வதைக்கின்றோமோ?அவளின் காதில் ரித்தீஷ் பேசிய பேச்சும் மனத்திரையில் அப்படியே ஓடியது. மறுபக்கம் அவனின் இதழ் முற்றுகை மனதில் வந்து வந்து செல்ல, அவனை மன்னித்து ஏற்றுக்க மனம் சொல்லியது.

ரித்தீஷ் மனம் என்ன செய்து அவளை மனம் மாற வைக்க என்று புரியாது தவித்தது. இலாவிடம் பேசிய பொழுது இலா தான் ‘ஐஸூ உன்னை அவ்ளோ விரும்பறா டா.. நான் ஒருத்தி பேசறேன் என்றதும் என் மேல அவளுக்கு வந்தது பொறாமை டா.. எந்த காதலிக்கும் அந்த பொறாமை இருக்கும்… இருக்கணும்…. அவ உன்னை எப்ப விரும்பினா என்று எல்லாம் அவளுக்கு தெரிலை டா ஆனா இப்போ உன்னை அவ ட்ரூ வா விரும்பறா.

அவளோட அப்பா பேசிய பொழுது வந்த கோவம், நீ பேசியபொழுது கண்ணீரா வந்து கொட்டிடுச்சு அது ஏன் தெரியுமா? அன்புக்கு தான் கண்ணீர் வரும்.. உன் மேல அவ வைத்த அன்பு தான், மாமா கூட நம்பலை பொய் பேசறேன் என்று சொல்லிடுசேனு அழுகையா வருது.

உன் ஐஸூ உன்னை உண்மையா நேசிக்கறா” என்று இலா அன்று சொல்லியது ரித்தீஷ் அவளின் மனதில் எந்த அளவு ஆழமான அன்பை விதைத்து இருக்கின்றோம் என மகிழ்ந்தான்.

 

_தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!