அத்தியாயம்-27
ஐஸ்வர்யா ஏதோ முனங்ககண்டான். ‘போச்சு மாமா இருக்கும் பொழுது ஏதாவது க்ரீன் ஆஹ் பேச போறா ரித்தீஷ் அதுக்குள்ள அவளை தனியா கூட்டிட்டு போய் வார்ன் பண்ணிடு’ என்று அலாரம் அடிக்க “ரியா.. கிளாஸ் எடுத்து வை” என்று பணிவோடு கொஞ்சம் கெஞ்சி. வைதேகி தணிகாசலம் பார்க்காத அளவுக்கு கூற எடுத்து சென்றாள்.
அதிசயமாக கழுவ வேறு செய்ய, வைதேகி ஆச்சரியமாக பார்த்து கணவரிடம் சொல்லி மகிழ, அவரும் என்னவோ இது செய்யறதே அதிகமமென பார்த்து பார்வை திருப்பினார்.
அங்கிருந்த கத்தி எடுத்து இருவர் பார்க்காமல் ரித்தீஷ் நெஞ்சில் வைத்து ”மாமா சொல்லிட்டார் அக்கா சொல்லிட்டாங்க என்று என்னை அங்க போக சொன்ன, மவனே ஒரே குத்து குத்திடுவேன். உன் ரியா அங்க எல்லாம் வர முடியாது சொல்லு… உன்கிட்ட பேசி எனக்கு இன்னும் கணக்கு முடியலை… அதுக்குள்ள எல்……லாம் முடிச்சுட்டு நிற்கற. போ ரியா வரமாட்டா எங்களுக்கு ஆடியும் வேணாம் ஆவனியும் வேணாம். நாங்களே இப்ப தான் ஒன்னுசேர்ந்தோம்னு சொல்லு” என்று மிரட்ட ரித்தீஷ் நிலை கவலைக்கிடமானது.
இப்போ நான் அக்கா மாமாவுக்கு சாதகமா பேசுவேனா? இல்லை ரியாவுக்கு சாதகமா பேசுவேனா? என்று நொந்தான்.
தணிகாசலம் அங்கே மூலையில் பறக்கும் பேப்பர் எடுத்து படித்தார். அது அப்பாய்ன்மெண்ட் லெட்டர் என்றறிந்து ரித்திஷை பார்க்க அவனோ குனிந்து பொறுமையாக வாங்கினான்.
”நான் என் மகளை கூட்டிட்டு போறேன்… நீங்க அடிக்கடி பார்க்கணும் என்றாலும் வந்துட்டு போங்க” என்றார் தணிகாசலம்.
”சரிங்க மாமா…” என்று சொல்ல ரித்தீஷ் தான் ரியாவை பார்க்காமல் தவிர்த்தான்.
வைதேகி அவளின் படிப்பு புத்தகம் மட்டும் எடுத்து கொண்டு கிளம்ப ரியாவோ மிளகாய் வற்றல் போல சூடானாள்.
தணிகாசலம் வைதேகியிடம் மகள் மருமகனை பார்த்து, கண் அசைக்க, வைதேகி அதனை உணர்ந்து “ஈஸ்வரனிடம் சொல்லிட்டு வா… நாங்க கீழே காரில் வெயிட் பண்றோம்” என்று தனிமை தந்து கிளம்பினார்கள்.
ரித்தீஷ் தான் போகும் அக்காவை ‘வேணாம் அக்கா போகாத கூடவே கூட்டிட்டு போ’. என மனதில் அலற, அவர்கள் படியில் இறங்கினார்கள்.
”இந்த குட்டி சாத்தனை கூடவே கூட்டிட்டு போ தானே சொல்ற?” என்று ரியா இடையில் கை வைத்து கேட்க,
”இல்லை ரியா… அவங்க இப்படி பொசுக்குனு ஆடி மாசம் காரணம் சொல்வாங்கனு தெரியாது” என்றான்.
”உனக்கு ஆடி தெரியாது தான்… ஆனா உன் பிறந்த நாளை எனக்கு சொல்லணும் என்றாவது தெரிந்து இருக்கணுமே… சொல்லி இருந்தா கோவிலுக்கு சேர்ந்து போயிருக்கலாம்ல.” என்று பிறந்தநாளை கூட சொல்லவில்லை என்று கோபித்தாள்.
”நிஜமா உன்கிட்ட சொல்லணும் ஆனா சர்ப்ரைஸ் சொல்ல இருந்தேன்.. எங்கயாவது வெளியே கூட்டிட்டு போய், என் காதலை சொல்லணும் தான் இருந்தேன் ரியா… ஆனா அதுகுள்ள நமக்குள்ள..” என்று திக்க அங்கிருந்த கரண்டியால் அவன் கையிலே அடித்தாள்.
”ஏய் ரியா வலிக்குது டி… அது கரண்டி டி…” என்று அடிகளை வாங்கி கொண்டே பேசினான்.
”கிளாஸ் கழுவும் பொழுது என்ன சொன்னேன்? என்னை அவங்களோட அனுப்பாத டா சொன்னேன்னா இல்லையா? ” என்று மிரட்டினாள்.
ரித்தீஷோ ”ரியா இது எல்லாம் பிரோசீஜர் டி…” என்றான் கையில் இருந்த கத்தியை வாங்கினான்.
”நான் உன் மேல லவ் இல்லாமல் இனக்கவர்ச்சியில் தானே நெருங்கினேன்… இப்போ நான் மறுக்கமா இருந்தேன் அப்போ..” என்று அவள் வாயில் கைவைத்து தடுத்து நிமிர்ந்து அதே சமயம் முன்பு அவளிடம் பயந்த ரித்தீஷ் மறைந்து குரலில் கடுமையோடு
”நான் ஒரு முறை சொன்னேன்.. தப்பு தான்.. ரியா பற்றி தெரிந்தும் பேசியது.. அப்போ இலா ஒரு மாற்று திறனாளி அவளை முகம் சுழித்து தள்ளி விட்ட என்ற கோவம் தான் என்னை மிருகமா நடக்க வச்சிடுச்சு.. நான் அடிச்சதை கூட மறந்து தானே பேசற… பேசியதும் மறந்துடு… ப்ளீஸ்.. .கொஞ்சம் கஷ்டம் தான் ஆனா அது உன் ரித்தீஷ் மாமா மங்குனி மாமாவா இருந்த பொழுது பேசிட்டேன் போதுமா… லாட்ஸ் ஆஃப் சாரி… இன்னிக்கு என் பர்த்டே டி” என கையில் இதழ் பதித்து காதலோடு மன்னிக்க வேண்டி நிற்க ரியா மனம் கொஞ்சம் அசைந்தது.
”எதுக்கு உன் பெர்த்டே மறைச்ச?” என்றாள்.
”சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்போம்”
”உனக்கு கிஃப்ட் வாங்கி வந்திருப்பேன்… கோவிலுக்கு போயிருக்கலாம்” என கவலையானாள்.
”எனக்கு அக்கா மாமா தான் கடவுள் அவங்களே நேரில் வந்துட்டாங்க… நீ தான் கிஃப்ட் கொடுத்துட்டியே….” என்றான் குறும்போடு
”நான் எங்க கொடுத்தேன்… இலா வீட்டுக்கு போயிட்டேன் காலையிலே இங்க எப்படி வந்தேன் கூட தெரியாது… நல்லா மீனை தின்று… ” என்ற பேச்சு அப்படியே நின்றது.
ரித்தீஷ் ரியா காதில் ”என் கிஃப்ட் நானே எடுத்துக்கிட்டேன்…” என்று கண் சிமிட்ட ரியா அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவனின் ஷர்ட்டை கொண்டு முகம் மறைத்தவள்.
”ரித்தீஷ் மாமா… எனக்கு என்ன புதுசா உன் முகம் எல்லாம் பார்க்க வெட்கமா ஆகுது” என்றாள்.
”வெட்கமா” என அதற்கும் நெற்றியில் முத்தமிட… ரித்தீஷ் போன் சத்தமிட்டது.
”அச்சச்சோ அக்கா மாமா கார்ல இருக்காங்க”
”நான் போக மாட்டேன்.. கீழே போய், அவங்ககிட்ட அவளுக்கு வர விருப்பம் இல்லையாம் என் கூட இருக்க போறாளாம் சொல்லிட்டு அவங்களை அப்படியே அனுப்பு” என்று ஆணையிட்டாள்.
”அடியே… அவங்களிடம் என்னால பேச முடியாது.. அப்படியே பழகிட்டேன்”
”என்கிட்ட மட்டும் திடீர் என்று மாறியிருக்க…”
”நாம வேற அவங்க வேற… அவங்களிடம் மதிப்பு வச்சே பழகிட்டேன்… என்னால எதிர்த்து எல்லாம் பேச முடியாது… ப்ளீஸ் போலாம் அவங்க காத்திட்டு இருப்பாங்க… ஆல்ரெடி லேட் அதுக்கே ஏதாவது சொல்லணும்.. அப்பறம் மாமா வேலை கிடைச்சதில இப்படி லேட் பண்றான் அப்படினு அக்காவிடம் சொல்வார் ப்ளீஸ் டி போகலாம்” என்று கிட்டதட்ட கெஞ்சினான்.
“பவுடர் பொட்டு வச்சிட்டு வர்றேன் இரு” என்று கண்ணாடி முன் வந்தவள் உதட்டு சாயம் கொஞ்சம் போல பூசி முடித்து கிளம்பினாள். ஒரு முறை அந்த போட்டோ பார்த்து அதை தனது போனில் கிளிக் செய்து கொண்டாள்.
கொஞ்சம் நின்று ஏதோ யோசிக்க ”இன்னும் என்ன ரியா?” என்று ரித்தீஷ் கேட்க, அடுத்த நொடி அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள். அவனோ அவளின் விளையாட்டாய் புரியாது இதழியில் முற்றுகையிட்டான்.
ரியா அதன் பிறகு கதவுப்பூட்டி வெளியே வர இலா வீட்டில் யாருமில்லை கார் வெளியே இருக்க, தணிகாசலம் வைதேகி இருவரும் ரித்தீஷ் முகம் பார்த்து அதிர்ந்தார்கள். தணிகாசலம் டிரைவர் பக்கம் திரும்பியவர் வைதேகியிடம் கண்ணில் ரித்தீஷ் கன்னத்தை சுட்டி காட்ட வைதேகி பார்த்து
”டேய் இங்க வா..” என்றதும் அருகே வர ஆட்டோ கண்ணாடியில் முகத்தை பாரு” என்று சொல்ல கண்ணாடியில் பார்த்தவன் ”ரியா.. வெள்ளை பூனை” என்று உதடு உச்சரித்தாலும் மாமா அக்கா ஏன் லேட் கேட்காம பண்ணிட்டாளே என்று அவளை தான் பார்த்தான்.
அவளோ அங்கே கண் சிமிட்ட தணிகாசலம் என்ன நினைத்தாரோ… மணியை பார்த்து ரித்திஷை பார்த்தவர் “மணி பதினொன்று தானே ஆகுது நாங்க வேணுமின்ன சாயந்தரம் ஐந்து மணிக்கு வந்து கூட்டிட்டு போறோம் இன்னிக்கு உனக்கு பிறந்த நாள் எங்கயாவது போக பிளான் போட்டுயிருந்தா போயிட்டுவாங்க” என்றார். ரித்தீஷ் ஆச்சரியத்தில் நின்றான்.
”மக்கு மாமா ஹ்ம் சொல்லுதா பாரு” என்றாள் முனங்களாக.
”நீ கீழே இறங்கு அவன் எதுவும் வாயை திறந்து கேட்க மாட்டான்.. அப்பா தான் ஐந்து மணிக்கு வர்றோம் சொல்றார்ல போ” என்றார் வைதேகி.
ரியா புத்தக மூட்டையோடு இறங்க பார்க்க
”புக் எதுக்கு கார்ல வச்சிட்டு போ” என்றதும் ரியா இறங்க தணிகாசலம் கார் கிளம்பியது.
”மக்கு மாமா.. அதான் அப்பாவே கேட்கறார் ஓகே விடுங்க நானே கூட்டிட்டு கூட விடறேன் சொல்லறியா?” என்றாள்.
”நீ பண்ணி வச்சியிருக்கற வேலையில் மாமா தானா அப்படி சொல்லிட்டு போறார்”
”நான் என்ன பண்ணேன் மாமா?” என்றாள் அப்பாவியாக.
”நீயா… என் உதட்டில் எப்படி டி லிப்ஸ்டிக் வந்துச்சு….?” என்று கேட்டுக்கொண்டே படிகளில் ஏறினான்.
”மக்கு மாமா நான் கன்னத்தில தான் கொடுத்தேன்… நீ தான் லிப்ல கிஸ் பண்ணின…” என்றதும் கதவை திறந்தவன்
”சே நான் தானா? ஆனா நீ லிப்ஸ்டிக் போட்டு இப்படி மாட்டி விட தானே?” என்று கேட்க ஆம் என்பது போல கிலுக்கி சிரித்தாள்.
மீண்டும் அங்கே ஒரு இனிய அவஸ்தைகுள் ரியா திளைக்க ரித்தீஷ் அவளின் மனம் சந்தோஷமாக வேண்டுமென்று பிறந்த நாள் வேண்டுதலாக வேண்டினான்.
மதியம் பருப்பு ஊற்றி மீனை வைத்து சாப்பிட்டவள் ”வெளியே எங்கயாவது போகலாமா ரித்தீஷ்” என்று அவன் மீதே சாய்ந்து கேட்டாள்.
”போலாம் எங்கேனு நீயே சொல்லு… அக்கா மாமாவும் வீட்டுக்கு போனதும் கேட்பாங்க எங்க போனிங்கனு…” என்றான்.
”நீ பொய் பேசியது இல்லையா ரித்தீஷ் மாமா?” என அதிசயமாக கேட்டாள்.
”பேசியது இல்லை ஆனா உண்மையை மறைச்சிருக்கேன்.”
”அது எப்படி?”
”ஹ்ம்ம… நான் படிச்சதே அக்காவிடம் சொல்லலை… அப்போ அது உண்மையை மறைக்கற மாதிரி தானே”
”நீ படிச்சது எப்படி? எனக்கு எல்லாம் புக் எடுத்தாலே தூக்கம் வருது மாமா… சிலது புரியாமா அப்படியே விட்டுடறேன்”
”இனி நான் சொல்லி தர்றேன்” என்றான்.
”ஹ்ம்ம சொல்லி தா சொல்லி தா… இப்ப கிளம்பலாம்” என்று அவனை எழுப்ப
”எங்க சொல்லு?”
”ஸ்னோ வோர்டுக்கு…” என்றதும் அவனும் தலையை ஆட்டி ஐஸூக்கு ஐஸா….” என கிளம்பினான்.
ஆட்டோவில் வந்தது தான் அவனுக்கு கொஞ்சம் உறுத்தியது… முதலில் பைக் வேணும்… என்ற முடிவுடன் செல்ல அவளோ அவனின் கையை பிடித்தபடி வந்தாள்.
அதிகமான குளிர்…. பனிக்கட்டி கரடி செய்து வைத்தார்கள்… ஸ்னோவில் செய்த பென்குயின் என்றிருக்க சிறுமிகள் சிறுவர்கள் ஏராளம். ஸ்னோ எடுத்து அடித்து விளையாட இவள் ரித்தீஷை பார்க்க அவனோ “நோ ரியா நாம சைல்ட் இல்லை சும்மா இரு.” என்று சொல்ல சொல்ல அவளோ அவனின் மேல சில பணிகட்டிகளை தூக்கி எறிந்து இருந்தாள்.
இளம் ஜோடிகள் சிலர் இவளின் சேட்டை பார்த்து சிரிக்க அவனோ இடையில் கையை வைத்து “சும்மா இரு.. ரியா…” என அவனின் தீண்டலில் அமைதியானவள் “குளிருது ரித்தீஷ்” என்றதில், அவனது பார்வை எங்கோ சென்று இருந்தது.
அங்கே வெங்கட், பிரபு லேகா கூட இன்னொரு பெண் இருக்க கண்டு அமைதியானான்.
ஐஸூ தான் இங்கே இவர்களை வரவழைத்து இருப்போம் என மாமா தவறாக எண்ணிடுவாரோ என பயந்து “மாமா போகலாம்” என்று உலுக்கினாள். அவளின் பயந்த பார்வயில் அவளை கண்டவன் உன்னை சந்தேகிக்க மாட்டேன் என்பது போல தலையாட்டி, “பரவாயில்லை இருப்போம்” என்றான்.
”இல்லை மாமா அம்மா ஆறு ஆகறதுக்குள்ள வர சொன்னாங்க கிளம்புவோம்” என்றாள். இனி அவள் சந்தோஷம் இங்கே சங்கடமாக போகுமென்று தவிர்க்கும் எண்ணத்தோடு புறப்பட்டான்.
தொடரும்
