அத்தியாயம்-28
சொன்ன நேரத்தினை விட மிக தாமதமாக தான் வந்து சேர்ந்தார்கள். வழியில் ‘குல்பி… மில்க் ஷேக்… ஐஸ் கேக்… பிஷ் பிரியாணி’ என்று சாப்பிட்டு வேண்டுமென்றே ரியா தாமதப்படுத்த ரித்தீஷ் அவள் வேண்டுமின்றே செய்தாலும் அவனும் விட்டுவிட்டு வாங்கி கொடுத்து நின்றான்.
அவளின் சேட்டையென புரிந்தாலும் மாமா காலையில் இவர்களுக்காக யோசித்து போக சொன்னதால் இந்த முறையும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என நினைத்தான்.
ஆட்டோ இவர்கள் வீட்டுக்கு வந்து சேரும் நேரம் ஐஸூ ஆட்டோவில் உறங்கி கொண்டிருந்தாள்.
”என்னடா இது மணி எட்டு ஆகுது ஆறு மணிக்கு வர்ற சொன்னேன்” என்று வைதேகி வாசலில் வந்தார்.
”ஐயோ அக்கா எல்லாம் உன் மகள் செய்த வேலை…” என்று இறங்கியவன் வைதேகி ஐஸூவை எழுப்ப கண்டு
”இரு அக்கா நான் தூக்கிட்டு வந்துடறேன்.. அவ ஃபிஷ் பிரியாணி சாப்பிட்டா தூங்கட்டும்” என்று அலுங்காமல் தூக்கினான்.
வைதேகி தனது தம்பியை வைத்த கண்ணெடுக்காமல் பார்த்தார். மகள் ஐஸூ அவனின் மார்பில் ஒடுங்கி அவனின் கழுத்தை கையில் சுற்றி கொண்டு உறக்கத்தில் இருக்க கண்டு மனதில் நிம்மதி பதிந்தது.
அறைக்குள் வந்தவன் அவளை கட்டிலில் படுக்க வைத்து நிமிர அவளின் சேலை முந்தானை ஒழுங்கு படுத்தி போர்வை போர்த்தி நெற்றியில் இதழ் பதித்து வெளியேறினான்.
”அக்கா நான் கிளம்பறேன்” என்று ரித்தீஷ் கிளம்ப
”டேய் காலையில் போ..”
”இல்லை அக்கா அது மாமா.. ” என திணறி இழுக்க
”உங்க மாமா தான் சொன்னார் இவ்ளோ நேரம் கழிச்சு அவன் மறுபடியும் வீட்டுக்கு போய் தூங்கணும் அதுக்கு இங்க இருக்க சொல்லு. அசதி தானே சொன்னார்” என சொல்ல சிறிது நேரம் யோசித்தவன் அவுட் ஹவுஸ் சாவி எடுத்து பெட்ஷிட் தலகாணி எடுத்து சென்றான்.
”இங்கே தூங்கலாம்ல? ” என்றார் வைதேகி.
”இல்லை கா கொஞ்சம் அங்க தனியா இருக்கேன்..” என உரைக்க
”என்னவோ போ” என்று உறங்க சென்றார்.
அவுட் ஹவுஸ் சென்று படுத்தவன் இன்றைய ஆனந்தத்தில் மனம் நிறைந்து உறங்கினான்.
அடுத்த நாள் எழுந்த ஐஸூவுக்கு தனது அறையில் இருக்க போனை எடுத்து முதலில் ரித்தீஷூக்கு போன் செய்தாள்.
”குட் மார்னிங் ரியா”
”பேட் மார்னிங்… போ… எழுந்துட்டியா… ஐ மிஸ் யூ மாமு” என்று உலரியவளிடம்
”எல்லாம் குட் மார்னிங் தான் அவுட் ஹவுஸ்ல இருக்கேன்” என்றான்.
அடுத்த நொடி பெட்டில் இருந்து கீழே இறங்கி கதவை திறக்கும் நேரம்
”ஏய் ரியா… அப்படியே ஓடி வந்துடாதே… முகம் அலம்பி பிரஷ் பண்ணி பொறுமையா வா.. எங்கயும் போகலை இங்க தான் இருக்கேன்” என்றான்.
ஐஸூவோ ஒன் செகண்ட்’ என்று மடமடவென பிரஷ் செய்து முகம் அலம்பி வந்தவள் கண்ணாடியில் நின்றால் தலையை வாரி விரித்து விட்டு பொட்டு மட்டும் வைத்து கதவைத்திறக்க வைதேகி காபியை அவள் முன் நீட்டினார். அவளோ காபி எடுத்துகொண்டு வெளியே போக
”ஈஸ்வருக்கு காபி கொடுதுட்டேன் டி” என மகள் அவனுக்கு தான் எடுத்து செல்கின்றாள் என்று எண்ணி பதிலுரைத்தார்.
”உன் தம்பிக்கு காபி எல்லாம் இல்லை இது எனக்கு தான்.. நான் உன் தம்பியை சைட் அடிக்க போறேன்” என்று ஓட வைதேகி வாயை பிளந்து
‘பார்த்தியா கழுதைக்கு பேச்சை… காபி கொடுக்க மாட்டாலாம் ஆனா என் தம்பியை சைட் அடிப்பாளாம்’ என மகிழ்ச்சியாக சமைக்க சென்றார்.
காபியை ஒரு திண்டில் வைத்து ரித்தீஷ் இருக்கும் இடம் வந்து அவனை பின்னால் இருந்து அணைக்க
”ரியா…” என்ற காதலோடு அவளை முன்னே இழுத்து நெஞ்சில் சாய்ந்து கொண்டு ஜன்னலை பார்த்தான்.
”நான் தான் வர்றேனு தெரியுமா?” என நிமிர்ந்து கேட்க
”உன் கொலுசு சத்தம், வளையல் சத்தம் எல்லாம் தெரியும் டா” என்று உச்சி முகர அவன் ஜன்னலில் வெளியே பார்வை பதிக்க கண்டவள் எங்கோ ஒரு வீட்டில் ஒரு பெண் இருக்க கண்டு,
”என்னை விட்டு யாரையோ சைட் அடிக்கறியா” என்றாள்.
”ஏய் லூசு.. உனக்கு ஐஸூ பேரு வச்சதுக்கு பதிலா லூசு வச்சி இருக்கலாம்… அங்க இருக்கற பொண்ணு கண்ணுக்கு தெரியுதா… ஜன்னலில் வெளியே காட்டி அங்க பாரு என்று சொல்ல அங்கே பட்ரோஸ் எல்லாம் வெள்ளை, இளஞ்சிவப்பு என்றிருக்க கண்டாள்.
”ஐ மாமா எவ்ளோ அழகா இருக்கு. தென் இங்க காற்று சில்லுனு விசுது” என தென்றலை இதமாக உணர செய்ய அடுத்த நொடி ரித்தீஷ் கைகள் அவளின் வெற்றிடையில் தவழ அதில் நாணம் கொண்டாள்.
”ரியா உனக்கு உங்க வீட்டில இங்க பூ இருக்கறதே தெரியாதா?” என்று கேட்க இல்லை என்றே தலை அசைத்தாள்.
”மாமா இது மாதிரி சில்லுனு காத்து வீசும் என்று கூட தெரியாது.” என்று அவன் மேலே சாய்ந்தவளை விலகி நிறுத்திட, புரியாமல் குழம்பி பார்க்க வைதேகி வந்து நின்றார்.
”ஏன் டா அவ தான் இப்ப எழுந்தா நீ அப்பவே எழுந்துட்டா பசிக்கலையா வா வந்து சாப்பிடு” என அதட்டி அழைத்தார்.
”மாமா நான் குளிச்சுட்டு வரும் வரை நீ சாப்பிடக்கூடாது சொல்லிட்டேன்… ” என்று சிட்டாக பறந்து சென்றாள்.
இப்போ இது வேற நான் சமாளிக்கனுமா என மெல்ல நடந்து வந்தான். இவனுக்காக அங்கே தணிகாசலம் காத்திருக்க, இறைவனை எல்லாம் வேண்டி கொண்டு வந்து அமர்ந்தான்.
பொங்கல் தாளிக்க நேரம் எடுக்க அதற்குள் ஷவரில் குளித்து வந்து நின்றாள் ஐஸ்வர்யா. அவள் இவனை காத்திருக்க வைக்க கூடாதென்று உணவு உண்ணுவதற்காக தான் வேகமாக குளித்து வந்தது. இருந்தும் அவன் அமர்ந்து விட்டானென ஒரு பார்வை பார்க்க ரித்தீஷ் கண்களில் ‘மாமா இருக்கார் டி ப்ளீஸ்…’ என கெஞ்ச கண்டவள் அவனுக்கு பரிமாற எண்ணி வந்தவள் அவன் அருகே அமர்ந்து கொண்டாள்.
வேண்டுமின்றே அவனை பார்க்காமல் தவிர்த்தாள்.
பொங்கல் சாம்பார் சட்னி என்று வைத்து உண்ண ரித்தீஷ் தன்னிடம் இருக்கும் முந்திரி திராட்சை எல்லாம் தனியாக எடுத்து வைக்க தணிகாசலம் நீர் அருந்த செய்யும் கேப்பில் ரியா தட்டுக்குள் இருக்க தணிகாசலம் விரைவாக சாப்பிட்டு எழுந்து கொண்டார்.
பரத் ஏற்கனவே பள்ளிக்கு சென்றதால் அவன் இல்லாமல் வைதேகி சாப்பிட்டு முடிக்க ரித்தீஷ் இன்னும் பொறுமையாக சாப்பிட்டு முடித்தான்.
அவன் அப்படி சாப்பிட செய்தான் என்பதே உண்மை. ஐஸூவின் கை அவனின் கைகளை கிள்ளி கொண்டு இருக்க அவன் அமைதியாக இருந்தான்.
வைதேகி கிளம்பிட ”ஐஸூ கை வலிக்குது விடு” என்று சொல்ல ”என்ன சொன்ன?” என்று மேலும் கிள்ளினாள்.
”ரியா கை வலிக்குது டி விடு” என்றதும் விடுவித்தாள்.
“அது எப்படி டா அக்கா மாமா என்றாலே இப்படி பயந்து சாகற.. நான் அவ்ளோ சொல்லிட்டு வேகமா வந்தா சாரு சாப்பிட உட்கார்ந்தாச்சு?”
”அதுக்கு இப்படியா டி… நான் செய்யற வேலை எல்லாம் நீ செய்யற… நான் கிளம்பறேன்..” என்றதும் அவள் முகம் வாடியது.
”இங்க பாரு அடுத்த வாரம் ஜாப் சேரணும். அதுவரை மணி இயர்ன் பண்ண வேண்டாமா” என்றதும் தலையில் முட்ட ஐஸூவும் விடுவித்தாள்.
அவன் சென்றதும் அறையில் முடங்காமல், அவள் அன்னை என்ன செய்கின்றார் என்று கிச்சன் பக்கம் பாட்டு கேட்பது போல நின்று அவள் அன்னையின் பார்வையில் கவனிக்காமல் இருபது போல காட்டி கொண்டு சமைப்பதை கவனமாக பார்த்தாள்.
மாலை ஆனதும் வீட்டுக்கு போக பிடிக்காது ரித்தீஷ் வெளியே சுற்ற இவனை பார்க்காமல் இவன் வரும் நேரம் காத்திருந்த ரியா முகம் என்னவோ போல மாறியது.
தணிகாசலம் வைதேகி மகளின் முகம் காணாமல் இல்லை ஏதோ வருத்ததில் இருப்பது புரிய அவள் இஷ்டம் போல இருக்க விட்டுவிட சொன்னார். அவள் தான் டிவி வேணாம், பாட்டு வேணாம், நெட் வேணாம், புக் வேணாம் என்று சுவரில் சாய்ந்தும் கட்டிலில் உறங்க முயலுவதும் இருக்க நேரம் கடத்தினாள்.
அடுத்த நாள் போனில் ரித்தீஷ் பேசி முடித்ததும் கல்லூரி கிளம்பினாள். அதுவும் அவளின் அப்பா காரில் டிரைவர் அழைத்து செல்ல கதவை திறந்து இறங்க கண்டான் யுகேந்திரன்.
இங்கே பலர் படிக்கும் மாணவர்கள் காரில் வருவது அறிந்தவன் தான் ஆனால் இவள் வருவதை பார்த்தான்.
அவளை பற்றி டீடெயில்ஸ் பார்க்க, அதில் ஐஸ்வர்யா தணிகாசலம் என்றிருக்க போனில் போட்டோ எடுத்தான்.
பாடம் நடத்தும் நேரம் ஐஸூ என்னவோ யோசனையில் இருக்க கண்டான். அவனுக்குமே என்னவோ போல படம் நடத்தி அவளிடம் பேச வருகையில் ரித்தீஷ் இருக்க கண்டான்.
ரித்தீஷ் ஐஸூவிடம் கெஞ்சி பேசி தலையில் கொட்டா ரித்தீஷ் அதனை இனிதாய் ஏற்று ஆட்டோவில் ஏறி செல்ல கண்டான்.
அவனுக்குள் குழப்பம் அதிகமாகியது.
ரித்தீஷ் போன் எண் வாங்காமல் போனது இன்று தான் தோன்றியது.
ஐஸூவை விட சென்றவன் “கொஞ்ச நேரம் இரு வந்துடறேன்” என்ற சொல்லி ரெஃப்ரெஷ் ஆக செல்ல ,அவனோ போனை எடுத்து டேபிளில் வைத்து பேப்பர் படிக்க செய்தான்.
போன் ரிங் ஆக பரத் தான் ”மா இங்க பார்றேன் வீட்டுக்குள்ள இருந்தே ஐஸூ கால் பன்றா?” என்றான் .
ரித்தீஷ் அதனை எடுக்க போக வைதேகி வந்து ஆன் செய்து ஸ்பீக்கர் போட்டு ரித்திஷை அதட்டினார்.
ரித்தீஷ் தடுமாறி பேசினான்.
”ரித்தீஷ்… போன் செய்தா உடனே எடுக்க மாட்டியா மங்குனி மாமா.” என்று பேச ஆரம்பிக்க தணிகாசலம் அதே நேரம் உள்ளே வந்தவர் பரத் சிரிக்க கையால் அவனை விரட்ட அவனும் சிரித்தபடி வெளியே செல்ல ஷூ அணிந்தான்.
”ரித்தீஷ் மாமா உங்க மாமனார் சொன்னார் அக்கா சொன்னாங்க அப்படினு வீட்டுக்கு கிளம்பிடாதே… உன்கிட்ட பேசணும்…” என்று ஆரம்பித்தாள்.
”ரியா…அப்பறம் பேசலாம் சிக்னல்” என்றதும் வைதேகி மிரட்ட அமைதியானன்.
”போ மாமா.. நீ மோசம்… நீ என்ன சொன்ன அடிக்கடி காலேஜ் லீவு போட்டுட்டா அப்படி செய்யாதே.. பாடம் புரியல என்றால் நான் உனக்கு சொல்லி தர்றேன் சொன்ன. இப்ப பாரு எத்தனை லீவு.. பாடமும் புரியலை… ஆடி ஆவணி என்று இங்க இருக்க சொல்ற… யாரு எனக்கு பாடம் சொல்லி தர்றது… அப்பறம் அப்பா என்ன சொல்லுவார் தெரியுமா? என்னவோ நான் படிக்க சோம்பேறி ஆகிட்டேன் படிப்பில ஆர்வம் இல்லை சொல்லி திட்டுவார். மரியாதையா டுடே சாப்டர் சொல்லி கொடு” என்று போனை வைக்க ரித்தீஷ் அக்காவை பார்த்தான். தணிகாசலம் அறைக்குள் யோசனையோடு போனார்.
மணி ஏழுக்கு ரித்தீஷ் புக் பேனா வைத்து ரியாவை முறைக்க, அவளோ கண் அடித்து “சொல்லி கொடு மாமு” என்றாள்.
”உனக்கு போன் ஸ்பீக்கர்ல இருக்கு தெரிந்து தானே இப்படி பேசியிருக்க?” என்று கதை திருக.
”ஆமா ஆமா” என சிரித்து ”போன் பேசிய கொஞ்ச நேரத்திலே அந்த பரத் லூசு சிரிச்சுது… நீ பேச யோசித்து இழுத்த அதே புரிஞ்சுடுச்சு. அதான் நம்ம டிராமா எப்படி?” என்று சுடிதார் தோளில் இருக்கும் துப்பட்டாவை இழத்து விட அவனோ அவளை அதட்டி உண்மையிலே பாடம் சொல்லி தர ஆரம்பித்தான்.
”மாமா போதும் தூக்கம் வருது” என்று சொல்லியும் அவன் விடாமல் படிப்பில் கொட்டி சொல்லி கொடுக்க முணங்கியபடி படிக்க ஆரம்பித்தாள்.
தொடரும்
