Skip to content

தாரமே தாரமே வா-30

58 / 100 SEO Score

அத்தியாயம்-30

 

தங்கள் வீட்டினை விட பெரிதாக இருக்கும் இந்த வீட்டை அளவிட்டே வந்து கொண்டிருந்தாள் ரியா. ரித்திஷிற்கோ மாமாவின் குரல் கம்மல் அக்காவின் அழுகை யுகனின் மிடுக்கு எல்லாம் எண்ணியவன் அன்று அக்கா மாமா தனது பதினைந்து வயதில் பேசிக்கொண்ட நிகழ்வில் அதுவாக இருக்குமோ என்ற எண்ணம் ஊடுருவியது.

 

எப்படியும் இங்கு வந்த காரணம் அறியாமல் போகாது… என்று உள்ளே வர உட்காருங்க….” என அமரவைத்தவன்.

 

”பெரிப்பாவை கூட்டிட்டு வர்றேன்” என நகர்ந்தான் யுகன்.

 

”மாமா யாரு இவன்? யாரை கூட்டிட்டு வர போயிருக்கான்… உனக்கும் இவனை தெரியுமா?’ என்று கேட்க

 

”என் டென்த் ப்ரெண்ட்… உன்னை அவன் காலேஜ்ல தான் பார்த்தானா?”

 

”ஹ்ம் எனக்கு பாடம் எடுக்காறான் அது என்னவோ ஒரு சப்ஜெக்ட்.. அவங்க அப்பா பிசிக்ஸ் hod தான் … அவர் பரவாயில்லை..” என்றாள்.

 

படியின் வளைவில் தணிகாசலம் வயதை ஒத்த ஒருவர் வந்து கொண்டிருந்தார் ஆனால் அவரின் தள்ளாட்டம் அவரை இன்னும் மூப்பாக காட்டியது.

 

ஏதோ ஒரு சோகம் அவரின் கண்ணில் தெரிய… யுகன் அழைத்து வர கண்டு ரித்தீஷ் பொறுமையாக பார்க்க, அவரோ ஐஸ்வர்யாவை கண்டு வேகமாக வர செய்து, படியில உருள பார்த்தார்.

 

இவர் இப்படி தான் ஓடி வருவார் என்று யுகன் கையை பிடித்து அழைத்து வந்தான்.

 

”பெரிப்பா… பெரிப்பா… பொறுமை.. இதோ உங்க சீமந்திரமக…” என்று அறிமுகப்படுத்தினான்.

 

”அம்புஜம் தான் இவ, என் மக அம்புஜம் தான்.. யுகன் நீ சொன்னது சாரி என் மனைவியோட உருவம் அப்படியே இருக்கு” என்று ஐஸூவை அவர் தழுவி கன்னம் தாங்கி பேசினார்.

 

அவரின் வயதால் தள்ளி செல்லாமல் அப்படியே நின்று அவர் பேசியதை கேட்டு முடித்தாலும் அவள் ரித்திஷை தான் அதிர்ந்து பார்த்தாள்.

 

ரித்திஷிற்கு அக்கா மாமா அன்று பேசியது தான்… ஐஸூவின் அப்பாவே தான் இவர்.. அதில் சந்தேகமில்லை.. ஐஸூவுக்கு பின்னால் இருக்கும் இவரின் இளம் வயது புகைப்படமும் அதில் ஐஸூ ஜாடையில் இருக்கும் அவரின் தர்மபத்தினியும் இருக்க, அதை கண்டும் ரித்தீஷிற்கு சந்தேகம் கூட தோன்றவில்லை.. தன்னவள் இதனை எப்படி தாங்கி கொள்ள போகின்றாள் என்பதே அவனுள் சுழன்றது.

 

அக்கா மாமாவை என்ன எண்ணி வைப்பாளோ? என ஐசுவை பார்க்க அவளோ ‘ரித்தீஷ் என்ன இது?’ என பார்த்தாள்.

 

”அம்புஜம்… அப்பா டா… யுகன் என்னடா சொல்லையா?” என சொல்லி அழ

 

”பெரிப்பா அவங்க எதுவும் சொல்லலை.. என்ன இருந்தாலும் வளர்த்த பாசம் அவங்க வாயால நாங்க பெற்ற பெண்,  நீ இல்லை பல ஆண்டுகளுக்கு முன் சின்ன வயசில் ராமநாதபுரம் வந்து ஊரை சுற்றி பார்க்கும் பொழுது கிடைச்ச பெண் என்று சொல்ல முடியுமா? நாம தான் நம்ம வீட்டு பெண்ணுக்கு சொல்லணும்” என்றான்.

 

அவரிடம் கூறியதில் ஐஸூ ரித்திஷை தான் நம்பாமல் பார்த்தாள். அவன் அமைதியாக இருக்க, கண்கள் நீரை சுரந்து வழிந்தது.

 

யுகன் தான் ”நீ நம்பலை என்றால் ப்ரூஃப் வேணுமின்னா இந்த டி‌என்‌ஏ டெஸ்ட். நீ அன்னிக்கு கேம்ப்ல ஹெல்த் செக்அப் செய்ய போனப்பா பிளட் எடுத்து இருந்தாங்களா? அதை பெரிப்பா பிளட் ஓட கொடுத்து பார்க்க சொல்லி டி‌என்‌ஏ டெஸ்ட் எடுத்திருந்தேன்… இது உன் காலேஜ் போட்டோ எடுத்தேன் பெரிப்பா வீட்ல பெரிம்மாவோட இருபது வயசு போட்டோவோட கம்பர் பண்ண.”  என எடுத்து முன்னிட்டதை வாங்கி பார்த்தாள்.

 

”உன்னை வளர்ந்த்த அப்பா அம்மாவிடம் அவர்களையே சொல்ல சொல்லி மூனு நாள் முன்ன சொன்னேன் அவங்க உண்மை சொல்லலை… அதான் நானே சொல்ல கூட்டிட்டு வந்தேன்… அதுகூட பெரிப்பாவுக்காக தான்.. அவர் உடல்நிலைக்காக தான்..” என்றான்.

 

”சாகறதுக்குள் உன்னை பார்த்துவிட்டேன் டா.. உன் அம்மா இருந்தவரை நீ திரும்ப வருவ திரும்ப வருவா சொல்லிட்டே இருப்பா… ஆனா என்னை போலவே சுகவீனம் இலலாமா, அதிகமாக உடல் கெட்டு போய் உன்னை பார்க்கமா போய் சேர்ந்துட்டா…” என்று ஐஸூவின் அம்மாவாக அவர் மனைவி வள்ளி புகைப்படம் காட்டி பேசினார்.

 

ஐஸ்வர்யா மயக்கம் போட்டு கீழே விழுந்தாள்.

 

ரித்தீஷ் தாங்கி பிடிக்க “யுகன் என்னாச்சு என் மகளுக்கு?” என ஸ்ரீநிவாசன் கேட்க

 

”ஒண்ணுமில்லை பெரிப்பா கொஞ்சம் உண்மையை ஏற்றுக்க முடியாம தவிச்சு இருப்பா… அவளுக்கு இது அதிர்ச்சி தானே?” என்றான்.

 

ரித்தீஷ் மடியில் கிடந்தவளை நீரை தெளித்து எழுப்ப முயல, எழும்பாமல் போக ”ரித்தீஷ் அந்த ரூம் கூட்டிட்டு போ போன் பண்ணிட்டு வந்து சொல்றேன்” என நகர்ந்தான்.

 

தனது மகளை யார் இவன் தூக்கி செல்கின்றான் என்று இப்பொழுது தான்  ஐஸூவின் கழுத்தில் மாங்கல்யம் இருக்க யுகனை கண்டவர் அவனின் அருகே சென்று நின்றார்.

 

”அம்புஜத்துக்கு கல்யாணாமாகிடுச்சா? அவர் தானா?” என்று யுகனை கேட்டு நிறுத்தி பார்வையை ரித்தீஷ் புறம் திருப்பினார்.

 

”ஆமா பெரிப்பா…  நீங்க சந்தருக்கு அவளை கட்டி வைக்க யோசிச்சு இருக்கலாம்… ஆனா அவளுக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சு. அப்பறம் பெரிப்பா இவளும் சந்தர் கிளாஸ் தான்… அப்பறம் அம்புஜம் கல்யாணம் செய்து இருக்காறே ஈஸ்வர்.. என்னோட 10th கிளாஸ் மேட் ரித்தீஷ்வரன் ரொம்ப நல்லவன் பெரிப்பா.. ரொம்ப நல்லா படிப்பான் இப்போ எம்‌.பி‌.ஏ படிச்சு இருக்கான். ஜாப் சேர்ந்துட்டதா கேள்விப்பட்டேன் இதுக்கு முன்ன ஆட்டோ ஓட்டினான்”

 

”ஆட்டோ வா? என் மகள் கஷ்டபடறாளா?” என்று கேட்டார்.

 

”ஐயோ பெரிப்பா உங்க மகள் அம்புஜத்தை தங்க தட்டில் தங்கறான்.. அவனுக்கு எல்லாமே அக்கா அக்கா பொண்ணு தான் உலகம்.”

 

”அக்கா பொண்ணு என்றால்…?”

 

”அதான் அம்புஜத்தினை வளர்த்தவங்க சொன்னேனே… தணிகாசலம் வைதேகி… வைதேகியோட தம்பி தான் இவன்” என்று முடித்தான்.

 

“‘வாங்க அவன் தனியா அம்புஜம் கூட இருக்கான் அவனுக்கு தெரியுமோ என்னவோ? வந்ததிலருந்து அதிர்ச்சி இல்லாமல் உட்கார்ந்து இருக்கான்” என போன் பேசிவிட்டு வந்தான்.

 

ரித்தீஷ் அருகே செல்ல அப்பொழுது

 

”டாக்டர்?”

 

”அது அவர்கிட்ட சொன்னேன்.. மயக்கம் தான் கொஞ்ச நேரத்தில எழுந்துப்பாங்க சொன்னார்” என்றதும் நிம்மதியடைய

 

”என்ன ரித்தீஷ் இவன் எதுக்கு கூட்டிட்டு வந்தானு இப்ப புரிந்ததா” என்று பேசினான் யுகன்.

 

”எனக்கு அக்கா மாமா கலங்கி அனுப்பும் பொழுதே கொஞ்சம் புரிஞ்சுடுச்சு.. நான் 15 வயசு இருக்கும் பொழுதே அவங்க பேசிட்டு இருந்ததை கேட்டிருக்கேன்… கொஞ்சம் உருவ வித்தியாசம் இருக்கும் ஆனா அப்போ புரியலை இரண்டு வருஷம் நான் ஐஸூவை பார்க்காததால் முகம் கொஞ்சம் மாறியிருக்கும் தோணுச்சு… ஆனா அக்கா மாமா ஒரு முறை ஐஸூ தூங்கும் பொழுது அவங்க அவளை பார்த்து பேசிட்டு இருந்ததை கேட்டுட்டேன். எனக்கு ஐஸ்வர்யா அவங்க பொண்ணு இல்லை என்று தெரிந்துடுச்சு.

 

அக்கா மாமாவோட பொண்ணு உடல்நிலை சரியில்லாமல் பிக்னிக்கில் இறந்துட்டா தெரிந்துடுச்சு.. அங்க தான் இவளை ஐ மீன் அம்புஜம் கிடைச்சு இருக்கணும் அவளை அப்போவே கூட்டிட்டு வந்தா உருவத்தில கண்டுப்பிடிச்சுடுவாங்க என்று 2 வருஷம் வெஸ்ட் பக்கம் போயிட்டாங்க தெரியும்…மாமா அக்கா பேசியது தான்..

 

ஆனா மாமா அவர் பொண்ணு இறந்துட்டா அங்க திதி கொடுக்க போனப்பா கரையில் அழுதுகிட்டு இருந்தவ தான் அம்புஜம்.  கடவுள் மறுபடியும் ஐஸூவா கிடைச்சு இருக்கா சொல்லி மாமா வளர்க்க ஆரம்பிச்சர்.. அப்போ கூட மாமா போலீஸ் ஸ்டேஷன் போய் அங்க கம்ப்ளயின் எல்லாம் இருக்கா எல்லாம் பிரோசீஜர் முடிச்சு யாரும் தேடலை என்றதும் தான்” என நிறுத்தினான்.

 

”நாங்க தொலைச்சது பஸ்ல….. அவ அங்க இருந்து ராமேஸ்வரம் எப்படி போயிருப்பா யோசிக்கலை அதனால நாங்க தொலைத்த இடத்தில தான் காணாமல் போனதா பதிவு செய்தோம் அப்போ கொஞ்சம் மந்தம் தான்… தேடுதலில்… இப்போ மாதிரி காணாமல் போனவர்களை உடனே கண்டறிய அப்போ முடியாது….” என்று கண்ணீர் உகுத்தினார் ஸ்ரீநிவாசன்.

 

”அக்கா மாமா குழந்தையை முழுசா பறிக்கொடுத்துட்டு இருக்கும் பொழுது கிடைச்சாதால் அவளை நல்லா தான் பார்த்து கொண்டார்கள். நிஜமா.. அவளை மாமா எதுக்காகவும் அடிச்சது இல்லை.. பரத் விட ஐஸூ மேல தான் அதிக பாசம் என் அக்காவையும் சும்மா சொல்ல கூடாது தம்பி என்னை விட ஐஸூவை நல்லா தான் பார்த்துகிட்டார்கள். என்ன உங்க வசதிக்கு பார்த்த மாப்பிள்ளை நான் இல்லை” என முடித்தான்.

 

”உன் மனசு எனக்கு தெரியும் டா.. பணம் உங்க மாமா கொடுக்கும் பொழுதே மறுத்துட்டு நீ தனியா நின்று மேல வர விரும்புற அது எல்லாம் பெரிப்பாவுக்கு புடிக்கும்..” என்றான் யுகன்.

 

புகழ் மாலையை புறம் தள்ளி, ”என்ன முடிவில் இருக்கிங்க, ஊரை கூட்டி உங்க பொண்ணு சாகலைனு சொல்ல போறிங்களா… இவ்வளோ நாள் தணிகாசலம் பொண்ண வளர்ந்தவ தான் என் பொண்ணு சொல்லி அவங்களை வருத்தி இவளை பிரிச்சு, நீங்க சந்தோஷமா கொண்டாட போறிங்க” என்று கேட்டான் ரித்தீஷ்.

 

யுகனோ ”ரித்தீஷ் மைண்ட் யுவர் வோர்ட்ஸ்…. எங்க பெரிப்பா இந்நாள் வரை உடல் நிலை சரிந்து இருக்க முக்கிய காரணமே அம்புஜம் இல்லை என்பது தான்.. பெரிம்மா உலகத்தை விட்டு விரைவா போனதுக்கு காரணமும் அம்புஜம் இல்ல என்ற வருத்தம் தான்.. உங்க மாமா அக்கா செய்த தப்பு எங்க வீட்டில கஷ்டப்பட்டது போதும்.. கூட இருந்து பார்த்து இருக்கேன்.. பெரிப்பா எவ்ளோ கஷ்டபட்டார் என்று” என யுகன் ஸ்ரீநிவாஸூக்காக பேசினான்.

 

”நிறுத்து யுகன்… மாப்பிள்ளை சொல்றதில சரி.. நாம எதுக்கு ஊர் கூட்டி சொல்லணும்.. அவ என் பொண்ணு அது போதும் அவளுக்கு தெரிந்தா போதும்… நான் ஊரை கூட்டி சொல்ல மாட்டேன்.. அதுல எனக்கு ஒண்ணும் சந்தோஷம் இல்லை.. உங்க மாமா அக்காவுக்கு வருத்தம் தர மாட்டேன். அவங்க என் மகளை, அன்பா வளர்த்து பார்த்துகிட்டதே போதும்” என்று சொன்னவர் “நீங்க இங்கயே தங்கினா போதும்” என்று ஆசையை கூறினார்.

 

”ஸார் ஒரு விஷயம் மறந்து பேசறிங்க.. இப்போ ஐஸூ என் அக்கா மாமாவோட மகளும் இல்லை.. உங்க அம்புஜமும் இல்லை என்னோட மனைவி ரியா … அவள் அங்கயும் தங்கமாட்டாள் இங்கயும் தங்க மாட்டாள் .. என்னோட என் வீட்டில் தான்.. நீங்க வேண்டுமென்றால் கோர்ட் போனாலும் ஒன்னும் செய்ய முடியாது அதையும் மீறி உங்களுக்கு இன்னும் புரியனும் என்றால் ரியாவிடம் கேளுங்க எங்க தங்க போறேனு..” என முடிக்க ஐசு கண்கள் திறந்து எழ போராட ரித்தீஷ் அவள் அருகே சென்றான்.

 

To be continue

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!