அத்தியாயம்-31
ஐஸ்வர்யா முதலில் சுற்றிமுற்றி பார்த்து, ரித்தீஷ் அருகே வந்து, அவனை உலுக்கி ”மாமா மாமா அப்பாவை பார்க்கணும்.. அப்பாவை பார்க்கணும்…” என கதறி துடித்தாள்.
”போகலாம் ரியா” என ரித்தீஷ் சொல்ல அதே நேரம் யுகனோ
”அம்பு இது தான் உங்க அப்பா” என ஸ்ரீநீவாசனை கை காட்டி நிறுத்தினான்.
”இல்லை இல்லை… இவர் இல்லை…” என ரித்தீஷ் பக்கம் திரும்பி
”போகலாம் மாமா அங்க அப்பா பாவம் அழுது துவண்டு இருந்தார் இப்பவே போய் பார்க்கணும் என்றாள்.
”சரி போகலாம்” என அழைத்து வெளியேற முயல, யுகன் முன் வந்து
”ரித்திஷ் அவள் அப்பா… இங்க இருக்கார்” என்று மல்லுக்கு நின்றான்.
ஸ்ரீநிவாசன் இடை புகுந்து ”யுகன் விடு அவங்க போகட்டும்… அவரும் அங்க மனசில் ஒடிந்து தான் இருப்பார் பார்க்க போகட்டும்” என்று கூறி வழிவிட்டார். யுகன் கொஞ்சம் சினத்தோடு அங்கிருக்கும் ஒரு அறைக்கு சென்று கதவை சாற்றி கொள்ள, ரித்தீஷ் புறப்ட்டு இருந்தான்.
தங்கள் வீட்டிற்கு வந்து சேர, ஐஸ்வர்யா மாடி படியில் ஏறி தந்தையை காண ஓடினாள். அவளின் ஒட்டமே மெத்தையில் படுத்து இருந்தவர் எழ செய்தது.
”அப்பா… அப்பா…” என கதறி அவரை அணைத்து கொள்ள தணிகாசலம் போன உயிர் திரும்ப பெற்ற உணர்வில் இருந்தார்.
”நீ வருவேணு தெரியும் டா ராஜாத்தி… அப்பா மேல உனக்கு ஏதாவது கோவமா இருந்தா மன்னிச்சிடு டா” என மன்னிப்பு கேட்டு அழுதார்.
”இல்லை அப்பா நீங்க என்னை எப்படி வளர்திங்க என்று புரியாமல் இல்லை….”
” இல்லை டா கல்யாண விஷயத்தில அப்பா உன்னிடம் கொஞ்சம் அதிகமா கட்டாயப்படுத்திட்டேன். இப்போ அது உனக்கு என் மேல கோவம மாறுமோ நினைச்சலே, அப்பாவுக்கு கவலையாயிருக்கு” என்று பயந்தவராய் சொல்ல
”இல்லை ப்பா அதான் இப்போ நல்லது… எனக்கு ரித்தீஷ் மாமா பிடிக்காமல் இல்லை.. என்னதான் அவங்க உங்களை என் அப்பா இல்லை என்றாலும் நான் இப்போ ரித்தீஷ் மனைவி அப்பா. அதனாலே அவர்களால் ஒண்ணும் செய்ய முடியாது” என்றாள். வழியில் ரித்தீஷ் மகள் காணாமல் சென்று அவளை தணிகாசலம் திருடி வளர்ப்பதாக கூறினால் என்ன செய்ய எடுத்துரைத்தானே.
”உங்களை விட்டு எப்பவும் போகமாட்டேன் அப்பா” என்றருகே இருந்த அம்மாவை சேர்த்தே அணைத்துக்கொண்டாள்.
ரித்தீஷ் நிலையில் வேறு யாரோ மாப்பிள்ளை என்று இருந்திருந்தால் அவர்கள் பேச்சுக்கு இசைந்திட வாய்ப்பு இருக்கு ஆனா இப்போ ரித்தீஷோ இருக்கறதால தான் என்னவோ மகளை பிரியாமல் இருக்க கிடைத்த வாய்ப்பு என்று வைதேகி தணிகாசலம் உணர்ந்தார்கள்.
நெடுநேரம் ஐஸூ தனது அப்பாவின் அருகே அமர்ந்து மடியில் படுத்து இருக்க அவளாக கேட்கவில்லை என தணிகாசலம் பேசினார்.
”உனக்கு அப்பாவிடம் எதுவும் கேட்க தோணலையா டா…. ஐஸூ… ” என கேட்டார்.
” இல்லை அப்பா உங்களுக்கு சொல்லணும் என்றால் மட்டும் சொல்லுங்க கேட்டுக்கறேன் என்ன காரணம் என்றாலும் நான் உங்க பொண்ணு தான்” என்றாள்.
ரித்தீஷ் ”எனக்கு ஒரு பிறந்த நாள் அப்போவே தெரியும் மாமா நீங்க அக்கா பேசிக்கிட்டதை கேட்டுயிருக்கேன் ஆனா அந்த உண்மை என்னோட மட்டும் தான் இன்னும் இருக்கு” சொல்லிட தணிகாசலம் சொல்ல ஆரம்பித்தார்
”நானும் வைதேகியும் ஐந்து வயது கொண்ட ஐசுவை கூட்டிட்டு குலதெய்வ கோவிலுக்கும் அப்படியே ராமேஸ்வரம் போய் அங்கயிருந்து ஊட்டி போனோம். ஒரு மாத லீவை கொண்டாட, ஆனா போன இடத்தில் ஐஸூவுக்கு மஞ்சள் காமாலை…
எங்களுக்கு அது தெரியாம போச்சு, ஐந்து நாள் ஜூரத்துக்கு மாத்திரையை கொடுத்தோம் ஆனா அடுத்த ஐந்து நாளிலே அவளுக்கு நோய் அதிகமாகி எங்களை விட்டு போயிட்டா எங்களுக்கு என்ன செய்ய என்று தெரிலை… ஊருல யாரிடமும் சொல்ல முடியலை..
அந்த அளவுக்கு துக்கம்.
அப்போ தான் அங்க இருந்தவங்க ரமேஸ்வரத்திலே தகனம் செய்து அஸ்தி கரைக்க சொன்னாங்க செய்தோம்.
அன்னிக்கு செய்து முடிச்சு அழுகையோட கரையில் முங்கி குளிச்சு வந்தோம் அப்போ தான் நீ கரையில் வெளியே அழுதுக்கிட்டே இருந்த.. உன் காது கழுத்தில, காலுல ஒரு பொட்டு நகை இல்லை
ஆனா நீ உடுத்தி இருந்த ஆடை விலையுயர்ந்து. உனக்கும் ஐசுவுக்கும் முகம் ஒரே மாதிரி எல்லாம் இல்லை கொஞ்சம் வேற்றுமை இருக்கும் ஆனா அவளும் உன் கலர் தான் கொஞ்சம் உன் முக சாயல் தான்.
அதனால எங்களுக்கு உன்னை பார்த்ததும் தூக்கிட்டோம். அங்க போலீஸ்ல போய் கம்ப்ளைன் கொடுத்தோம். அவங்களும் காணாமல் போன லிஸ்ட்ல யாரும் உன் வயசில் கொடுக்கலை என்றதும் ஆசிரமம் விட போனாங்க.
அந்த போலீஸ்காரரிடம் நாங்க எங்கள் நிலமை சொல்லி உன்னை வளரக்க வாங்கிட்டோம்
ஒரே வயசு ஒரே கலர்னு நீ இருந்தாலும் அப்படியே வீட்டுக்கு போனா ஈஸ்வர் கூட நீ யாருனு கேட்டுடுவான் என்று தான் அப்படியே வெஸ்ட் பெங்கால் போனோம் கையில் இருந்த காசு மொத்தம் வச்சி 2 வருஷம் வாழ்ந்தோம்.
உன் முகமும் கொஞ்சம் மாற எங்களையும் நீ அப்பா அம்மா சொல்லி தான் கூப்பிட்ட, அதனால 2 வருஷம் திரும்ப இங்க வந்தோம்.
பார்க்கறவங்களுக்கு சந்தேகமே வரலை… அப்பவும் சிலர் கேட்டா முகம் என்ன அப்படியேவா இருக்கும் என வைதேகி தைரியமா சொல்வா.
அன்னிக்கு உனக்கு பிறந்த நாள், ஒருத்தங்க மூனு வருஷம் முன்ன இருந்த முகமே இல்லை மாறி போயிருக்கா என்று விளையாட்டா தான் சொல்லிட்டு போனாங்க. ஆனால் தப்பு செய்த எங்களுக்கு ரொம்ப உறுத்துச்சு
அதனால வைதேகியிடம் பேசினேன். யாருமே தேடி வரலை… அதனால இனியும் வரமாட்டாங்க என்றிருந்தேன் இதோ இப்ப வரை அப்படியே நம்பினேன்…. ஆனா.. வந்துட்டாங்க என்னோட ஐஸூவை அழைச்சுட்டு போக என்று அழுகையின் உச்சத்தில் தணிகாசலம் துடித்தார்.
” இல்லைப்பா நான் அவங்க என்ன பேசினாலும் போக மாட்டேன். எனக்கு நீங்க தான் அப்பா வைதேகி தான் அம்மா போதுமா…” என்றாள்.
ரித்தீஷோ “முதலில் இதை சாப்பிடுங்க மூனு நாளா நீங்க எதுவும் சாப்பிடமா இருக்கற மாதிரி தெரியுது” என ஜூஸ் கொடுத்தான்.
”ரித்தீஷ் அவங்க என்ன சொன்னாங்க? ஊர் அறிய ஐசுவை அவங்க பொண்ணு என்று சொல்லுவாங்களா?” என்றார்.
”இல்லை மாமா அவங்களுக்கு அப்படி உங்களை வருத்தம் செய்யற அளவுக்கு நடந்துக்க மாட்டாங்க.. அவர்களுக்கு அதுல உடன்பாடு இல்லை..
அவங்களுக்கு ஐஸூக்கு மட்டும் தெரிந்தா போதும் இருந்தாங்க…
ஆனா யுகனுக்கு அதுல உடன்பாடு இல்லை ஊருக்கு சொல்லலை என்றாலும் பரவாயில்லை அவங்க சொந்தம் சிலருக்கு அறிமுகப்படுத்தணும் அவர்களுக்கு மட்டும் ஐஸூவை காண்பிக்கணும் தெளிவா சொல்றான்… அவனோட அப்பா அம்மா கூட ஐஸூவை பார்க்கலை..
அதுக்கு பிறகு யுகனுக்கு இரண்டு அத்தை இருக்காங்க . அவர்களுக்கு ஐஸூவை காட்டனும் அவங்க அடுத்த தலைமுறையும் பார்க்கணும் சொல்றான்…” என்று ரித்தீஷிக்கு அவன் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியை காட்டினான்.
ஊருக்கு தெரியப்படுத்தி தனது மகளின் நிலையை விட இவர்களின் உறவுகள் வரை சொல்வது தனிக்காசலத்திற்கும் ஒருவித நிம்மதி தான். தணிகாசலம் ரித்தீஷ் தனியாக பேசிட போனார்கள்.
இங்கு வைதேகி மகளிடம் ”ஐஸூ அம்மா சூடுவச்சது எல்லாம் நீ தப்பா எடுதுக்கலையே.” என்று கன்னம் ஏந்தி கேட்டார்.
”ஐயோ அம்மா அது ரித்தீஷ் மாமாவை அப்படி மொட்டையா கூப்பிட்டேன் அது தப்பு தான் அது மட்டுமா? ரித்தீஷ் மாமா மேல ஐஸ்க்ரீம் தூக்கி எறிந்து போடானு வேற சொன்னேன்… காலேஜ் படிக்கும் வயசு இருக்கற மாமாவை அப்படி சொன்னது தப்பு தானே.. அப்போ எனக்கு பெரிய வயசும் இல்லை…
நான் அப்ப சொன்னதுக்கு தானே சூடு வைச்ச பரவாயில்லை.” என மடியில் தலை சாய்ந்தாள்.
”அப்பா உன் கல்யாணத்துக்கு தான் பெரிய பணக்காரண தான் பார்த்தார்… எங்க சொந்த பொண்ணு என்றால் வசதியா செய்து கொடுத்திருப்போம் ஒரு மனசு குத்தி காட்ட கூடாதேனு. ஆனா உன்கூட படிச்ச வெங்கட் என்ற பையன் நாங்க பார்க்கின்ற சம்பந்தம் எல்லாத்துலயும் நீ இன்னொரு பையன் சேர்ந்து ஹோட்டலுக்கு வந்ததை வரன் பார்க்கின்ற வீட்டுக்கு எல்லாம் போட்டோ அனுப்பி இருந்தான். அதான் உங்க அப்பா கோவத்திலே என்ன முடிவு எடுக்க தெரியாம ரித்திஷை கேட்டார்.
என்னவோ அவனும் சரி சொல்ல வைத்து உன்னையும் சரிசொல்ல வைத்து கல்யாணம் முடிச்சிட்டோம்” என்றதும் ஐசுவுக்கு வெங்கட் இப்படி செய்வான் என அறியாது திகைத்தாள். மாமா எதற்கு அவனை அடித்து இருப்பார் என்று இப்பொழுது புரிந்தது.
ஊரில் இவனால் தானே என் பெயரை கேவலமாக பேச வைத்து இருப்பான் ரித்தீஷ் மாமா அடிச்சிருப்பார்.
”என் தம்பி உன்னை நல்லா பார்த்துக்கறானா ஐஸூ. ” என்று கேட்ட நொடி
”ஐயோ அம்மா ரித்தீஷ் மாமா மேல எனக்கு எவ்ளோ காதல் இருக்கு, உனக்கு இன்னும் புரியலையா… நிஜமா அவர் தான் எனக்கு கிடைச்ச கிஃப்ட்… எனக்காக எவ்ளோ செய்யறார் தெரியுமா? பேச்சுக்கு பைக் கேட்டேன் இப்போ உன் தம்பி பைக் வாங்கிடுச்சு” என்றாள்.
வைதேகி “நிஜமா அவனை உனக்கு பிடிச்சு இருக்கு தானே?” என்று கேட்க அங்கிருந்த புகைப்படத்தை எடுத்து அவர்களிடம் காட்டி,
”நீ இந்த புகைப்படத்தை பாரு, மாமா எவ்ளோ கியூட், நான் தான் மாமா ஹைட் அளவுக்கு இல்லை, மாமா எவ்ளோ மிடுக்கா இருக்கு பாரு. கம்பீரம நான் தான் ஓல்லியா இருக்கேன்” என்று வார்த்தைக்கு வார்த்தை அவள் மாமா மாமா என்று உரிமை கொண்டாடுவது வைதேகிக்கு இனிமையாக இருந்தது.
ரித்தீஷ் தணிகாசலம் இருவரும் ஐஸூ பேசுவதை கண்டு ரித்தீஷ் அவளை ‘வெள்ளை பூனை சும்மா இருக்க மாட்ட’ என புகைபடத்தை எடுத்து சுவற்றில் மாட்ட போக தணிகாசலம் அதனை வாங்கி பார்த்து ரித்திஷை பார்த்தார்.
”நீ என் மகளுக்கு கிடைச்ச பொக்கிஷம் பா.. இனி எனக்கு ஐஸூவை பத்திய கவலை எதுவுமில்லை. இனி ஐஸூ அப்பா வந்து பேசினாலும் நான் தைரியமா இருப்பேன்” என்றார்.
”ஐஸூ அப்பா அவர் இல்லை நீங்க தான். எங்களை பொறுத்தவரை அதான்.” என்று ரித்தீஷ் செய்த காய்கறி சாதத்தை ஐஸ்வர்யா பரிமாற தணிகாசலம் வியந்து போனார்.
”அருமையா இருக்கு ஈஸ்வர்….”
”டேய் இப்படி சமைச்சா அவ பிறகு எப்படி டா சமைக்க கத்துப்பா… நீ வகையா செய்து போட அவ ஜோராயிருக்கறா” என்று வைதேகி தம்பிக்காக கவலையும் பட்டார்.
”அதெல்லாம் ரித்தீஷ் எனக்கு சொல்லி தரும் கற்றுப்பேன்” என்றவள், அவனின் தட்டில் எடுத்து உண்ண அவனும் இம்முறை அக்கா மாமா என்று ராகம் படிக்காமல் அமைதியாக இருந்தான்.
இந்த அழகான கூட்டை கலைக்கவே யுகன் வந்து நின்றான்.
பெரிப்பா உடல்நிலை சரியில்லை ஹாஸ்பிடல் கூப்பிட்டாலும் வீட்டிலே இருக்கார் ஐஸூவை வர சொல்லு ரித்தீஷ்’ ‘என்றான் யுகன்.
ரித்தீஷோ “யுகன் நீ அதிகமா பேசற.. அவளுக்கு தான் அங்க வர பிடிக்கலையே பின்ன என்ன?” என்றான்.
”இப்போ வேண்டாத உறவு இருக்கலாம் ஆனா என்ன இருந்தாலும் ரத்த சொந்தம் நாங்க தான். அவளை நாளைக்கு காலையில் அழைச்சிட்டு நீயும் அவளும் வரணும்.. பெரிப்பா வீட்டில் இருக்கற எல்லாரையும் கூப்பிட சொல்லிட்டேன்.. .அவங்க இவளை பார்க்க விருப்பப்படறாங்க” என்றான் யுகன்.
“அவள் என்ன மனநிலையில் இருக்கா என்று தெரியாம பேசாதே..” என்றான் ரித்தீஷ்.
அதெல்லாம் உன் ஒய்ப் வாய் காது வரை இருக்கு எல்லா உண்மையும் ஜீரணமாகியிருக்கும்” என்று ஐசுவை பார்த்து சொன்னான்.
”ரத்த சொந்தம் விட இந்த சொந்தம் ஒண்ணு போதும்” என்று ரித்திஷின் கையினை பற்றி கொண்டு கூறினாள்.
”ஏய் குட்டி சாத்தான்…. அங்க பெரிப்பா உயிருக்கு போராடி எப்படி வந்தார் தெரியுமா? ஒரு ஒரு வாரம் அங்க வந்து இருக்க உனக்கு என்ன?” என்று நேரிடையாக கேட்டான்.
” குட்டி சாத்தான் சொன்ன கொன்றுவேன். அறுவ… அறுவ. யாரு டா நீ.. உன்னை பார்த்ததிலருந்து தான் எனக்கு தலைவலி. அப்படியே ஓடிடு.. இல்லை மண்டையை ஓடச்சிடுவேன்” என்றாள் ஐசு.
”வாயை பாரு குட்டி சாத்தான் அப்படி தான் சொல்வேன்.. உன்னை போய் பெரிப்பா பார்க்க இப்படி ஆசைப்படறார் பாரு அவரை சொல்லணும்..” என்று யுகனும் பேச ரித்தீஷ் தலையில் கைவைத்து அழுத்த கோதினான்.
”டேய் நிறுத்தறிங்களா ஐஸூ போயிட்டு வரலாம்” என்று யோசனையோடு சொன்னான்.
”என்னோட அப்பா அம்மா இவங்க தான். விட்டுட்டு போகமாட்டேன்” என்று சொல்ல யுகனோ ரித்திஷின் பதிலுக்காக பார்த்தான்.
”இங்க பாரு ரியா…மாமா மேல கேஸ் போட செய்யலாம்… அக்கா மேல கூட அதுக்காகவாது போகணும்.. வேற வழி இல்லை” என்று தீர்மானமாக சொல்ல ரியா கோவமாக அமர ரித்திஷே அவளின் துணிகளை பெட்டியில் வைக்க அமைதியாக முறைத்து பார்த்தாள்.
யுகனோ ஒரு ஏகதாள பார்வை பார்த்து முறைக்க அவளும் முறைக்க ரித்தீஷ் கிளம்பி சென்றார்கள்.
தணிகாசலம் வைதேகி கூட ரித்தீஷ் பொறுப்பில் இனி எல்லாம் சரியாக பார்த்து கொள்வான். நம்ம மகள் நம்மை விட்டு கொடுக்க மாட்டாள் என்று நம்பினார்கள்
