Skip to content

தாரமே தாரமே வா-32

54 / 100 SEO Score

தாரமே தாரமே வா-32

அத்தியாயம்-32

யுகன் முகமெங்கும் மலர்ந்து அழைத்து வந்தான். “இந்த அறைக்கு போங்க… இன்னிக்கு தங்குங்க நாளைக்கு காலையில் பதினொன்றுக்கு எல்லாரும் வருவாங்க” என்றே சென்றான்.

ஸ்ரீநிவாசன் அறைக்கு சென்று “அம்புஜம் வந்துட்டா பெரிப்பா நாளைக்கு அம்மா அப்பா.. பெரிய அத்தை, சின்ன அத்தை வர சொல்லிட்டேன். இனி உங்களுக்கு கவலையில்லை தானே…” என்றான். இனிமேலாவது உடலை கவனிக்க பெரிப்பா” என்றதும் அவரும் உறங்க சென்றார்.

ஐஸூவோ உறக்கம் வராமல் ரித்திஷை போட்டு வதைக்க, அவனோ “ரியா காலையில் இருந்து செம தலைவலி டி… தூக்கம் வருது” என்றான்.

”மாமா… எனக்கு தூக்கமே வரலை… நீ இப்படி சொல்ற? ஏதாவது பண்ணு தூக்கம் வர” என கத்த

”ரியா….” என்று முறைக்க அவனின் பார்வையில் கொஞ்சம் அமைதியாக மாறினாள். அவளை இழுத்து நெஞ்சில் சாய்த்து படுக்க வைக்க அவளோ அவனின் நெஞ்சில் சாய்ந்த அடுத்த பத்து நிமிடத்திலே உறங்கிட ரித்தீஷ் மனம் புன்னகை உதிர்த்தது.

அவளின் தலையை கோதி விட்டு கொண்டே இமை மூட அவனும் உறங்கினான்.

காலையில் எழுந்து பல் விளக்க கூட ரித்தீஷ் பேஸ்ட் பிரஷ் என்று நீட்ட வேண்டாவெறுப்பாக வாங்கியவள் குளிக்க சென்றாள்.

ரித்தீஷ் வெளியே இருக்கும் யுகனிடம் பேசியபடி இன்னொரு கப் காபி தயாரிக்க போனான்.

யுகனோ ”எதுக்கு டா?’ என்று கேட்க,

”ரியாவுக்கு டா.. அவ எழுந்ததும் குடிக்க ஆசைப்படுவா… ஆன பிரஷ் பண்ணியதும் கொடுக்கணும்” என்று காபி கலக்க ரித்தீஷ் எடுத்து செல்ல கண்டான். பின்னாலே வந்தவன் ரித்தீஷ் செய்கையை பார்க்க அவன் சொல்லியது போலவே ஐஸூ காபி வாங்கி ஆர்வமாக பருகினாள்.

”மாமா சக்கரை கம்மியா இருக்கு” என்று நொட்டை சொல்ல

”அதுக்கு நீ எழுந்து காப்பி போட்டு குடிக்கணும்” என்றான் யுகன். ‘காலையிலே இவன் முகமா சுத்தம்” என்றே ரியா முனங்க

”எனக்கும் ஆசையா என்ன? இவன் தான் ரொம்ப பண்றான்.. ஈஸ்வர் இவளை எல்லாம் சோறு தண்ணீர் இல்லாமல் விட்டுட்டு போகணும் டா அப்போ தான் அதுவா எழுந்து சமைக்க செய்யும்” என்றதும் தூரத்திலே காபி பருகிய ஐஸூ குடித்த டம்பளர் வீச, அது யுகனின் நெற்றியில் பட்டு தெறித்தது.

”ஏய் ரியா என்ன செய்யற?” என்று ரித்தீஷ் அதட்டினான்.

யுகனை காண யுகனோ நெற்றியில் சிறிதாய் துளிர்த்த ரத்தம் தொட்டு பார்த்து”அம்புக்கு சின்ன வயசுலயே, அவளை தாங்கியே பேசணும் அப்படி இல்லை என்றால் இப்படி தான் கையில் இருக்கறதை வீசிடுவா.. ரொம்ப வருஷம் கழிச்சு அம்புகிட்ட இருந்து இந்த ப்ரெசெண்ட் கிடைச்சுயிருக்கு ஈஸ்வர்” என்று ஆனந்த கண்ணீரோடு யுகன் உரைத்தான்.

ஐஸூவோ யுகனின் செய்கையில் தான் ஐந்து வயதில் இப்படி தான் இருந்து இருப்போமா என எண்ண துவங்கினாள்.

ரித்தீஷூம் இவன் ஐஸூவை தவறாக எண்ணவில்லை என்பதிலே நிம்மதியுற்றான்.

காலையில் பூரி சுட்டு பாலக் பன்னீர் செய்து வைக்க ஐஸூ வேகமாக வந்து பூரியில் இருக்கும் உப்பசத்திலே சுட்டு விரலால் ஒரு குத்து விட பூரியில் இருந்து ஆவி வெளியே வர கண்டவள் முகம் மலர்ந்தது.

யுகனும் ஸ்ரீநிவாசன் இருவரும் ‘அம்பு இது’ என்ற பார்வை பதிந்து பார்த்து கொள்ள ரித்தீஷ் மனம் இவளின் சேட்டை கூட தந்தையாக இவர் பார்த்து ரசிக்க வளர இவருக்கு கொடுப்பினை இல்லாமல் போனதை எண்ணி வருந்தினான்.

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கஷ்டம். இவருக்கு இப்படி என உண்ண செய்தான். ஐஸூ தான் ஸ்ரீநிவாசன் தன்னை பார்க்கின்றார் என்பது அறிந்தும் அந்தபக்கம் திரும்பவில்லை. ரித்தீஷ் கவனித்து கொண்டிருந்தாள்.

ரித்தீஷ் மெல்ல அவரை காண அவரோ மாப்பிள்ளை பார்க்கவும் உண்ண ஆரம்பித்தார்.

யுகனோ ”சாந்திக்கா இன்னும் கொஞ்சம் பூரி எடுத்துட்டு வாங்க.. குட்டி சாத்தனுக்கு பத்தாது போல” என்று ஐஸூவை சீண்டினான்.

‘அவனை என்ன செய்ய?’ என்றே யோசித்தவள் அவனின் தட்டில் மேலும் சில பூரியை வைத்து கிழங்கை ஊற்றினாள்.

”எனக்கு போதும்னு எழுந்துக்க பார்த்தேன் இப்படி என் தட்டில் அள்ளி வச்சி இருக்க, அண்ணா சாப்பிடணும் என்று அவ்ளோ அக்கறையா அம்பு” என்று யுகன் அவளை வம்பு இழுத்தான்.

”அண்ணா வா சீ வாந்தி வரும். உன்னை எல்லாம் அப்படி கூப்பிட மாட்டேன்” என்று உண்ண, ஈஸ்வர் யுகனிடம் மன்னிப்பு வேண்ட திரும்பினான். நிச்சயம் தன் மனைவி இங்கே இப்படி அழுச்சாட்டியம் செய்வதை தடுக்க முடியாது என்று.

”நீ பயபடாதே டா.. அவ என்ன பேசினாலும் எனக்கு கஷ்டம் இல்லை” என்ற வார்த்தை யுகன் சொல்லியதும் தான் ரித்திஷிற்கும் ஒரு நிம்மதி கிட்டியது.

நேரம் கூட கூட யுகனிடம் வாயாடி சண்டை பிடித்தபடி இருந்த அம்புவை ஸ்ரீநிவாசன் இமைக்காமல் பார்த்து ரசித்தார். ஐஸூ தான் அவரை அறவே பார்ப்பதை தவிர்த்தாள். ரித்தீஷ் அடிக்கடி இவரை பார்த்தான்.

மணி பதினொன்று ஆக யுகன் அம்மா அப்பா வந்து சேர, அவர்களை அறிமுகப்படுத்தினான்.

”இவங்க என் அப்பா தர்மதுரை குட்டி சாத்தான் உங்க காலேஜ் பிசிக்ஸ் hod அப்பறம் அம்மா சௌபாக்கியா… அவங்க ஒரே பையன் யுகேந்திரன் நான்” என்று சொல்ல ரித்தீஷ் முறுவலித்து ‘வணக்கம் சார்’ என்று மரியாதை நிமித்தமாக உரைக்க, ரியாவும் “குட் மார்னிங் சார்” என்று நடுங்கி கூறினாள்.

”என்னது சாரா? ரித்தீஷ் உனக்கு மாமா அத்தை, அம்புஜம் உனக்கு பெரிப்பா பெரிம்மா” என்று தர்மா சொல்ல ஐஸூ தலையை மட்டும் ஆட்டினாள்.

இவர்கள் பேசியபடி இருக்க சுகன்யா அத்தை அவங்க கணவர் தியாகராஜன்.. அவங்க பொண்ணு துர்கா… என்று அறிமுகபடுத்தினான்.

துர்காவோ ஐஸூவை அதிர்ந்து பார்க்க ஐஸூவுக்கு இவளை எங்கோ பார்த்து இருக்கேன் எங்கே என்றே யோசனையில் சென்றாள்.

“துர்கா டிவெல்த் படிக்கிறா” என்று சொல்ல அவளோ இன்னும் ஒதுங்கி நின்றாள். புது மனிதர் அதனால் வந்த ஒடுக்கம் என்றெண்ணி கொண்டாள்.

சுகன்யா தான் ”இவ எங்க அண்ணி மாதிரி தான் இருக்கா.. அப்படியே… யுகன் நீ சொன்ன அப்போ என்னால நம்ப முடியலை இப்போ நம்பறேன் டா… இவ இந்த வீட்டு பொண்ணு தான்” என்று சொல்ல தியாகராஜன் பார்வை ‘ஆம்’ என்பதாய் உணர்த்தியது.

பேசி கொண்டிருக்கும் பார்வை பெரிய அக்கா வந்துட்டா போல…. என்று சுகன்யா சொல்ல, செல்வா ஓடி வந்து கொண்டிருக்க கூடவே ராஜேந்திரன் வரவும் பார்வை திரும்பினாள்.

”அம்மாடி ராஜாத்தி அம்பு…. எப்படி டா இருக்க? எனக்கு அப்போவே தெரியும்.. அண்ணிக்கிட்ட சொல்லிட்டே இருந்தேன் அவங்க தான் உன்னை பார்க்க கொடுத்து வைக்கலை.. ” என்று உச்சி முகர அதன் அன்பில் உண்மை உணர்ந்த பின் அமைதியாக பதிலுக்கு முறுவல் செய்து முடித்தாள்.

யுகனுக்கு அதுவே நிறைவை கொடுத்தது. அவன் எதிர்பார்த்ததும் அதுவே.. கொஞ்சி பேசி உரிமை கொண்டாடும் ஐஸூவாக நிச்சயமாக முடியாதவொன்று ஆனால பேசினால் கொஞ்சம் முகம் திருப்பாமல் பேசும் அம்புவை தான் எதிர்ப்பார்த்து இருந்தான் அது கிடைத்த நிம்மதி பூரித்தான்.

”அக்கா உனக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்தா சந்தருக்கு கட்டி கொடுக்கணும் சொல்லிட்டே இருந்தா.” என்று சுகன்யா சொல்லி முடிக்க ஐஸூ ரித்திஷை தான் பார்வையில் தழுவினாள்.

அதனை புரிந்த செல்வா ”அது ஒன்னுமில்லை டா அம்பு உன் அம்மா நானும் நல்ல சிநேகிதி அதான் அப்படி ஒரு ஆசை… ஆனா சந்தரை விட ரித்தீஷ் உனக்கு நல்ல பொருத்தம்.. சந்தர் எல்லாம் கொஞ்சம் சோம்பேறி… அவனுக்கு நிதானம் இல்லை.. எப்ப பாரு ஒரு புது உலகத்திலே இருப்பான் இப்ப கூட வர்ற வழியிலே காரை வேகமா ஒட்டி இடிக்க போனான்.” என்று யாரையோ கூறினார்கள்.

”சந்தர் எங்கே?” என ஸ்ரீநிவாசன் கேட்க,

”வண்டியை நிறுத்திட்டு வர்ற இருந்தான்” என வாசலை பார்க்க அங்கே சந்தர் கண்ணாடியில் இருமுறை தன்னை பார்த்து கொண்டு வந்திருந்தான். பெரிய மாமா பெண் தன்னை கண்டு ‘சே நல்ல அத்தை பையனை மிஸ் பண்ணிட்டோம்னு பீல் பண்ணனும்’ என்ற மிடுக்கோடு நடந்து வந்தான்.

ஆனால் ஐஸ்வர்யாவை பார்த்தநொடி கண்கள் செருக்கை இழந்து தானாக இமைகள் தாழ்ந்து பதட்டம் கொண்டான்.

வியர்வை சுரக்க நின்றவன் பக்கத்திலே ரித்திஷை கண்டு இன்னும் மயக்கம் வாராத குறை தான்…. கர்சீப் கொண்டு துடைக்க ரித்தீஷ் இவனா? என்று ஐஸூவை பார்க்க, ஐஸூவும் அதே போல தான் பார்த்து முடித்தாள்.

”இவனும் உன் காலேஜ் தான்…. உங்க டிபார்ட்மெண்ட் தான்” என தர்மா சொல்லி முடித்தார்.

”பார்த்து இருக்கேன் சித்தப்பா” என்று சந்தரை பார்த்து ‘பார்த்து மட்டுமில்லை பழகியும் இருக்கேன்… ரொம்ப வோர்ஸ்ட் கேரக்டர்’ என்று மனதில் சொல்லிக் கொண்டாள்.

”இவன் கிளஸ்ல முதலில்ல இருப்பானா? யுகன்கிட்ட கேட்டா ஒழுங்கா பதில் சொல்லாமல் ஓடறான்… நீ கிளாஸ் மேட் தானே சொல்லு” என்று செல்வா கேட்க அவர்களிடம் என்ன வென்று சொல்ல புரியாமல் தவித்து போனாள்.

ரித்தீஷோ ஐஸூ ஏதேனும் சொல்ல, இன்றே உறவில் விரிசல் ஏற்படுத்தி விடுவாளோ என்று அஞ்சினான்.

யுகனுக்கோ ‘இவளாவது அவனை பற்றி ஏதேனும் சொன்னா நாம அம்புக்கு ஆதரவா இருக்கணும் கொஞ்சம் சரியா தோணலை’ என்று நின்றான்.

ஐசுவோ எதுவும் பேசாமல் ”நல்லவன் தான் பெரியத்தை… ஆனா கொஞ்சம் படிப்பில் பெருசா சொல்ற மாதிரி ஒன்றும் இல்லை… நடுவில் கொஞ்சம் அதிகமா ஊர் சுற்றுவான்… இப்போ இந்த காலம் கொஞ்சம் ஃபன் அண்ட் ஜாலி இருக்கறவங்க தானே அத்தை” என்றே சந்தரை பார்த்தபடி சொல்ல அவனுக்கோ திருட்டு முழியில் எல்லோரையும் பார்க்க வேர்வை பூத்து கொண்டிருந்த அவனின் முகம் தெளிவின்றி இருக்க ராஜேந்திரன் அவனை உற்று நோக்க சந்தர் ரித்தீஷ் ஐஸூவை ஒரு நொடிக்குள் சினத்தோடு கண்டு திரும்ப கண்டார்.

ஐஸூ சந்தர் பார்வை ரித்தீஷ் பார்க்காமல் இல்லை…….

சந்தர் இங்கு வராமல் இருந்து இருக்கலாம் என்று அக்கணம் எண்ணினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!