தாரமே தாரமே வா-33
அத்தியாயம்-33
சந்தர் எப்பொழுதும் இங்கே மற்றவர்களோடு சிறிது பேசி அரட்டையடித்து இருப்பான். இங்கு வரும் முன் கூட ‘உங்க அம்புஜம் எப்படி என்கிட்ட பேசுவாளா? இல்லை வெட்கபட்டு பேச மாட்டாளா? என் கிளாஸ் சொல்லறிங்க என் கிளாஸ்ல அம்புஜம் யாருமே இல்லை’ என்று பேசிக்கொண்டே வந்தவன் சிலையாக நிற்க கண்ட செல்வா
”டேய் திலீப். அம்பு பார்த்து இப்ப நீ தான் டா உறைந்து இருக்க?” என்று உலுக்க திலீப் சந்தர் ஐஸூவை கண்டு பார்வை திருப்பி செல்வாவை பார்த்து கடினபட்டு புன்னகை உதிர்த்தான்.
ரித்தீஷ் தன்னையே துளைப்பது போல பார்வை பார்க்க கண்டு அந்த பக்கம் திரும்பாமல் இருந்தான்.
”ஏய் குட்டி சாத்தான்…. என்ன எங்களை எல்லாம் பிடிச்சிருக்கா?” என யுகன் ஒரு வித ஆர்வத்தில் ஐஸூ மனதில் இருப்பதை அறிய கேட்டான்.
”ஹ்ம் உன்னை மாதிரி இருக்கறவங்களை தவிர்த்து எல்லாருமே நல்ல மனிதர்களா தான் இருக்காங்க” என்றாள்.
பெரியவர்கள் சுகன்யா, செல்வா, தர்மதுரை என ஸ்ரீ நிவாஸோடு ஐஸூவிடம் கொஞ்ச நேரம் பேசிட பின்னர் ஆண்கள் தம் தமது பணிகளை செய்ய பெண்கள் தங்கள் கைகளால் அம்புஜதிற்கு சமைக்க செல்ல சிறியவர்களான யுகன் ரித்தீஷ் ஐஸூ துர்கா திலீப் சந்தர் என்றிருக்க என்ன பேச என்று புரியாது இருந்தாலும், யுகன் ஐஸூ சின்ன சின்ன அண்ணன் தங்கை சண்டைகள் போட்ட வண்ணம் இருந்தார்கள்.
இதில் ரித்தீஷ் யுகனுக்கு தோழன் என்றறிய திலீப் வாயை திறக்கவே இல்லை.
இதுவரை ஐஸூ ரித்தீஷ் தன்னை பற்றியோ அல்லது வெங்கட் பிரபு பற்றியோ அன்று தங்கள் அப்படி நடக்க முற்பட்ட நிகழ்வை சொல்லாது இருக்க அவனும் அமைதி காத்தான்.
யுகனுக்கு அந்த நேரம் போன் வர, எக்ஸ்க்யூஸ் கேட்டுவிட்டு செல்ல, ரித்தீஷ் உன் ஃப்ரெண்ட் என்பதால் இந்த வீட்டு பெண்ணை அவர்களோட அனுப்பி வைப்பியா? என கேட்க வாயை எடுக்க ஆனாலும் கேட்க செய்தால் தன்னால் பிரச்சனை வருமோ என அமைதி அடைந்தான்.
‘நீங்க எல்லாரும் அமைதியோ அமைதி என்று சின்சான் போல சொல்லி கொள்ளுங்கள் ஆனா எனக்கு அமைதிக்கும் தூரமென ஐஸூ பேசினாள்.
”ஏன் டா நான் தான் அடுத்த வீட்டு பெண்… ஏதோ என்னை அடைய யோசிச்சு கேவலமா டிராமா பண்ணி தொலைச்சிங்க… இவ உன் வீட்டு பொண்ணு தானே? இவள் உனக்கு தங்கை உறவு தானே? அப்பறம் எப்படி டா அந்த கேவலமான மனுஷங்களோட இவளை ஸ்னோ வேர்ல்டு அனுப்பின? இவளை அனுப்பிட்டு நீ எங்க போன?” என்று கேட்டதும் திலிப்பிற்கு ஒன்றும் புரியாமல் திகைத்தான்.
முதலில் தன்னை துர்கா எதிரில் திட்ட வந்த ஐசுவை கோவமாக கண்டவன் அடுத்து துர்கா வைத்து பேசியதும் குழம்பி போனான். ஏன் என்றால் பிரபு, வெங்கட் இருவருக்கும் துர்கா ஒரே ஒரு முறை தான் அறிமுகம் செய்து வைத்தான். அது கூட துர்கா பள்ளிக்கு ஒரு முறை பைக் கொண்டு சென்று விடும் பொழுது எதிரில் பிரபு வந்து பேசிட ,அறிமுகம் செய்து வைத்தான். அவ்வளவே… அப்படி இருக்க அவர்களோடு துர்கா சென்றதை அறியாமல் துர்காவை பார்க்க
”அண்ணா அது… அவர் பிரபு.. நல்லவர்… லவ் பண்றேன்..” என திக்கி பேச திலீப் பளார் என அறைந்து இருந்தான்.
”அவன் நல்லவன் உனக்கு தெரியுமா? லவ் அது இது என்று பேசின கொன்றுடுவேன். ஏய் அவனை ஒரு முறை தானே பார்த்து பேசினேன் ஏதோ அப்போ எதிரில் வந்து நின்றான் இண்ட்ரோ கொடுத்தேன். உன்கிட்ட நல்லவன் சொன்னேனா?” என்றே சீற்றதுடன் பாய்ந்தான்.
”உன் பெஸ்ட் ஃப்ரெண்ட் நல்லவன் தானே. நல்லவன் என்றதால தானே அவனோட பழகுற?” என துர்கா கேட்க அதற்கு பதிலளிக்காமல் இருந்தான்.
”அவன் நல்லவன் இல்லை துர்கா அவனோட தனியா எல்லாம் போகாதே பேசாதே… அவன் கெட்டவன் டா…” என்று திலிபிற்கு தான் என்றோ செய்த தவறு எல்லாம் தங்கை ரூபத்தில் தனது வீட்டுக்கு அடியெடுத்து வந்திருக்க கண்டு பயந்தான்.
ஐசு உடனே ”பலே திலீப் அவன் கெட்டவன் என்றால் நீ? உனக்கு வந்தா ரத்தம் மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னி அப்படி தானே?” என்றதும் ஐசுவை பார்க்க முடியாது தலைக்கவிழ்ந்தான்.
”சாரி…….. அம்பு இதை தவிர என்னால உனக்கு வேற என்ன சொல்லனு தெரிலை….” என கூனிக்குறுகி போக ஆக்ரோஷத்தோடு பிரபு வெங்கட் இருக்கும் இடம் நோக்கி ஆவேசத்தோடு கிளம்பினான்.
துர்காவுக்கு ஐஸூ வெங்கட், பிரபு, திலீப் பற்றி அவளுக்கு புரியும் படி சொன்னவள் திலீப் தற்பொழுது பேசி சென்றதை பார்த்தால் ஓரளவு மனம் மாறி திருந்தி இருக்க வாய்ப்பு இருக்கு என்றே சொல்லி பெரியம்மா மகனான திலீபை துர்கா பற்றியும் சொல்லி புரியவைக்க துர்காவுக்கு தான் எத்தகைய ஆபத்தில் இருந்து காப்பாற்றபட்டு இருக்கின்றோம் என்பதை உணர்ந்தாள்.
அரை மணி நேரம் கழித்து வந்த யுகனுக்கு துர்கா ஐஸூ சிறிது பேச கண்டவன் மனம் நிறைய, கொஞ்ச நேரத்தில் திலீப் தலையில் கொஞ்சம் ரத்தமும் கையில் சிராய்பு கொண்டு வந்தான்.
ஐசு ரித்தீஷூக்கு சொல்லாமலே புரிந்தது.
ரித்தீஷ் தான் அவனுக்கு அருகே வந்து நின்று ரத்தம் துடைத்து முதலுதவி செய்தான்.
”அன்னிக்கு நான் உங்களை எல்லாம் அடிச்சப்ப எனக்கு இதே கோவம் தான் இருந்தது. அப்போ மட்டும் உனக்கு நீ செய்தது தவறு இல்லை என்ற ரீதியில் இருந்த, இப்ப உனக்கு தங்கை முறை என்றதும் ரத்தம் கொதிக்குதே.
எனக்கு ஐஸூ பொண்டாட்டி… அவளை உன்னோட சேர்த்து வைத்து வெங்கட் வர்ற வரனிடம் எல்லாம் தப்பா பேசி இருந்தான். எனக்கு எப்படி இருக்கும்? அப்போ அடிச்சப்ப போலீஸ் காம்ப்ளண்ட் கொடுக்கணும் போனை எடுத்த? துர்கா விஷயத்தில நீ என்ன செய்திருக்க?’ என மருந்திட்டு கொண்டே கேட்டான்.
”அண்ணா சத்தியமா இனி எந்த பொண்ணையும் போதையா நினைக்கமாட்டேன் அண்ணா…” என்று கூறியதும் அவனை சிகையை கலைத்து விட்டு
”இது போதும் டா…” என்றான். இங்கு நல்லவன் தீயவர் என்றதே பிறக்கும் பொழுது உருவாகுவதில்லை. அதனால் மன்னித்து மறந்தான்.
ரித்தீஷ் கையை பற்றி ”அண்ணா அன்னிக்கு நீங்க ஒரு ஆள் மூனு பேரை அடிச்சிங்க, ஒரு அடி கூட உங்க மேல நாங்க அடிக்க விடாம பார்த்துக்கிட்டிங்க அதே போல எங்களுக்கு அதிகமா ஆபத்து இல்லாமல் அடிச்சு துவைச்சிங்க. எப்படி?” என்றான்.
”நீங்க எண்ண கிளாஸ் போனாலும் இயல்பா வருகின்ற ரௌத்திரம் தனி” என சொல்ல ஐஸூ பண்ட்எயிட் போட்டு விட்டாள்.
”மன்னிச்சுடு ஐஸூ.. ஒரு நண்பனா என்னால இருக்க முடியலை…. ஆனா ஒரு உறவு முறையில் அத்தை பையன் முறையில் மீண்டும் வருகின்றேன்.. உறவாக ஏற்றுபியா அம்பு?” என்று கேட்க அவனை மேலும் கீழும் பார்த்து முறைத்தபடி அவள் சென்றாள்.
அவளுக்கு பூர்வீயை காதல் என்று ஏமாற்றியது வருத்தம் கொடுத்தது. பூர்வீ இவனை மன்னித்தால் பார்போம் என்பதே ஐசுவின் எண்ணமாக உதித்தது.
மதியம் உணவு பரிமாறுகின்றேன் என்று அன்பில் எல்லாரும் வைக்க ஐசு அங்கே அம்மா அப்பா சாப்பிட்டாங்களா என யோசித்தாள்.
ரித்தீஷ் தான் அவள் தோளை தொட்டு மாமா அக்கா சாப்பிட்டு முடிச்சிட்டாங்க சாப்பிடு என்றதும் மலர்ந்து உண்ண ஆரம்பித்தாள்.
மாலையில் சிற்றுண்டி என்று கழிய எல்லோரும் அவரவர்கள் வீட்டுக்கு சென்றார்கள்.
ஸ்ரீநிவாசன் ரித்தீஷ் ஐஸூ மூவருமே இருந்தார்கள். யுகன் கூட கிளம்பி இருந்தான்.
ரித்தீஷ் ஐஸூ இருவரும் தங்களுக்கு கொடுத்த அறையில் உறங்க போனார்கள். வீடியோ காலில் ஐஸூ அப்பா அம்மாவிடம், இன்று நடந்தவைகளில் மேலோட்டமாக சொல்ல தணிகாசலம் மற்றவர்கள் தங்களை பற்றி அதிகமாக கேட்டு விடவில்லை குறையும் சொல்லவில்லை என்று நிம்மதி அடைந்தார்.
வைதேகி தான் முன்பு போல ஐசுவை அதட்ட கூட யோசித்தார். முன்பு சொந்த மகள் என்ற உரிமை அவரின் பேச்சில் இருக்கும் ஆனால் இன்றோ அப்படி பேசினால் ஐஸூ ஏதேனும் யோசிப்பாளா என்றஞ்சி கொண்டார்கள்.
இரவில் ஐஸூ உறங்க வர ரித்தீஷ் மஞ்சத்தில் உறங்க எதையோ யோசித்தவன் ரியாவை அருகே இருப்பதை மறந்தான்.
ரியாவோ பால் பல்லில் அவன் கன்னத்தை கடித்து வைக்க
”ஏய் என்னடி பண்ற மதியம் எல்லா கறியும் தின்ன தானே செய்த?”
”ஹ்ம்” என முறைத்தவள் ”எதுக்கு டா வெங்கட், பிரபுவையும் அடிக்க போன?” என்று கேட்டாள்.
”ஏன் போனா என்ன?” என்றான்.
”திலீப் மாதிரி ஆகிருந்தா என்னாவாயிருக்கும்”
”அப்படி எல்லாம் ஆகாது… ஆனா அவன் செய்த வேலயிலும் ஒரு பெனிபிட் நீ எனக்கு கிடைச்சது ரியா..”
”எனக்கும் தான் அதனாலயோ என்னவோ அவனை பார்க்கும் பொழுது என் கோவம் கொஞ்சம் குறையுது.”
அடுத்து என்ன என ரியா பார்வை ரித்திஷை தழுவ, அவனோ அவளின் இமையை முத்தமிட்டு இருந்தான்.
ரியாவோ இங்க என்று கன்னத்தை காட்ட அங்கே இதழ் படிக்க அடுத்து மூக்கு என கைவிரலில் சுட்டி காட்ட, இதழில் வைக்க அதன் பின் தொடர்ந்த முத்தங்கள் சத்தமின்றி சங்கீதம் இசைத்தது.
இரவு உறக்கம் கலைந்த ரித்தீஷ் ரியாவை பார்த்து, நாளை மறுநாள் அலுவலகம் செல்லனும் என்றான். இங்க இருந்து போறது அவனுக்கு உடந்தை இல்லை… தனது இல்லத்தில் இருந்து கிளம்ப எண்ணினான். இதை யுகனிடம் சொல்லனும்.. அவன் ஸ்ரீநிவாசனிடம் சொல்லி தன்னை அனுப்பி வைக்க செய்வாரா? அப்படியே செய்தாலும் ஐசுவையும் அனுப்ப வேண்டும்.
ரியா இவன் கூப்பிட்டால் வரும் நிலையில் இருந்தாலும்
இவனுக்கு யுகன் ஏதேனும் சொல்வானோ என தயங்கினான்.
