ரித்தீஷ் அதிகாலையில் எழுந்து குழப்பதோடு யுகனுக்கு போன் செய்து விளக்க, யுகனோ “நான் அங்க தான் வர்றேன் டா இரு நேரில் பேசறேன்” என்று வைத்து விட்டான்.
ரித்தீஷ் மனதில் யுகன் தன்னை இவர்களுக்கு இருக்கும் வசதிக்கு வெளியே வேலைக்கு போகாதே என்றே ஏதேனும் சொல்லி விடுவானோ என யோசித்தான்.
தணிகாசலம் அக்கா கணவர், அவரிடம் அவனே உங்க வீட்டில் இருக்க மாட்டேன், தனியா சுயகாலில் நிற்பேன் என்று திடமா பேசினான். தணிகாசலம் இவனின் பிடிவாத முடிவில் விட்டுவிட்டார். இங்கு ஸ்ரீநிவாசன் அப்படி இல்லாமல் பேசிவிட்டால் என்ன செய்ய?
ஆனாலும் இவனின் முடிவில் மாற்றம் இல்லை தான்.
உணவு மேஜயில் ரித்தீஷ் ஐஸூ உண்ண செய்ய ஸ்ரீநிவாசன் மகளுக்காக முன்பு அவளுக்கு பிடித்த உணவுமுறைகளை பட்டியல் போட்டு வைக்க சொல்லிட ஐஸூ நன்றாக உணவினை விழுங்கினாள். ஸ்ரீநிவாசன் ரித்தீஷ் தான் ஏதோ சங்கடத்தில் இருக்க மாறி மாறி பார்வை பரிமாற்றத்தில் சங்கடமாக உணர்ந்தார்கள்.
யுகனும் வந்து நிற்க அவனும் எதுவும் பேசாமல் ரித்திஷை பார்க்க, ரித்தீஷ் சொல்லிவிட்டாயா? நாங்க கிளம்பலாமா? என்ற பார்வை பார்க்க ‘இரு டா இன்னும் சொல்லலை’ என்றான்.
”பெரிப்பா ரித்தீஷ் இண்டெர்வியூ அட்டேன் பண்ணி இருந்தான்… அதுக்கு ரிசல்ட் வந்துடுச்சு….” என சொல்ல ஸ்ரீநிவாசன் ரித்திஷை பார்த்து
”நல்லது மாப்பிள்ளை… சந்தோஷம்” என்று சொன்னவர் பார்வையோ அம்புவிடமே இருக்க
”நாங்க இன்னிக்கே கிளம்பறோம்” என்று ரித்தீஷ் சொல்லிட ஸ்ரீநிவாசன் அம்புவை பார்க்க அவளோ
”மாமு நாம அப்போ நம்ம வீட்டுக்கு போவோமா?” என்று மகிழ்ச்சியோடு கேட்க அவளின் மகிழ்வில் புரிந்தது அம்புக்கு இங்கே இருக்க ஏதோவொன்று தடை.
”எப்போ ஜாயின் பண்ணனும்?” என்றார்.
”நாளைக்கு…. நாளைக்கு போகணும் அதனால…… இன்னிக்கே கிளம்பறோம்.”
”போயிட்டுவாங்க மாப்பிள்ளை… அடிக்கடி வாங்க.. எனக்கு அம்பு தான் மகள் என்று ஆனா பிறகு அதை வைத்து தங்க கூண்டியில் போட எல்லாம் விருப்பம் இல்லை… உங்க நார்மல் வாழ்க்கை என்னால பாதிப்படையாது… ஆனா அம்பு அடிக்கடி இங்க வந்து பார்த்து தங்கினா சந்தோஷப்படுவேன்….என்னோட வாழ்க்கையில் உயிர் வாழ ஒரு அர்த்தம் இருக்கும்” என்றதும் ரித்தீஷ் நிம்மதி அடைந்தான்.
”என்ன ரித்தீஷ் பெரியப்பா உனக்கு சாதகமா சொல்லிட்டார் பார்த்தியா? நீ தான் அவரை மாமாவா இன்னும் நினைக்கலை… ”
”எனக்கும் மனிதாபிமானம் இருக்கு அதனால தான் நீ சொன்னதும் என் ரியாவை இங்க உங்க அம்புவா கூட்டிட்டு வந்தேன்” என்று கையை கழுவி எழுந்துகொண்டான்.
ரீயா அவனின் பின்னால் உடனே எழுந்து கொள்ள யுகனோ அவளின் கையை பற்றி நிறுத்தினான்.
”அவன் சாபிட்டான்.. .எழுந்துக்கிட்டான் உனக்கு என்ன குட்டி சாத்தான்… ஒழுங்கா தட்டில் இருப்பதை வேஸ்ட் பண்ணாம சாப்பிடு…” என்றதும்
”விடு…. நீ சொல்லி எல்லாம் கேட்க முடியாது” என்றாள்.
”உனக்கு ரொம்ப திமிரு அண்ணன் சொல்றானே கொஞ்சமாவது கேட்போம் நினைக்கிறியா?” என்று யுகன் சொல்ல, ரியா ரித்தீஷ் பார்வையில் சாப்பிடு என்றதும் அமர்ந்தாள். இதனை கண்ட யுகனோ
”பார்டா புருஷன் சொல்றதை அப்படியே கேட்கற.. அவளோ நல்லவாளா நீ… எனக்கு என்னவோ என் ஃப்ரெண்ட்டை பார்த்தா பாவமா இருக்கு. என்னை அடிச்சியே டம்ளர் விசிறி அப்படி அடிச்சிடுவியோ பயந்து அவன் உன் விருப்பம் போல இரும்மா சொல்லற மாதிரி தெரியுது”
”இதுவரை ரித்தீஷ் மாமு அடிவாங்கலை… ஆனா இனி உன்னோட சேர்ந்தா நிச்சயம் அடி கிடைக்கும்” என்று பேச ஸ்ரீநிவாசன் மகள் உண்ணும் அழகை ரசிக்க அவரின் கண்களுக்கு மனையாள் இப்படி தான் எதிர்தெதிர்த்து பேசும் குணத்தை கண்டார்.
”நாளைக்கு காலேஜ் வருவியா இல்லை லீவு சொல்லி நல்லா வீட்ல தின்பியா?” என்று அவளின் தட்டில் இருக்கும் ஸ்வீட் எடுத்து உண்ண அதனை பார்த்தாலும் ரியா கண்டு கொள்ளாமல்
”எல்லாரையும் பாட்டு பாடி தூங்க வைக்க நீயே வருவ… அப்படி இருக்க தூங்கறத்துக்கு நான் வராமலையா? வருவேன் அறுவை வாத்தியார்” என்றதும் ஸ்ரீநிவாசன் மெல்ல சிரிக்க
”என்ன பெரிப்பா பொண்ணு கூட சேர்த்து சிரிக்கறிங்க?” என்றான் யுகன்.
”சந்தர் என்ன தான் வாயாடினாலும் உன்னை சீண்ட மாட்டான். துர்கா அதிகமா பேச மாட்டா…. நம்ம வீட்ல வேற எல்லாரும் ஒரே பசங்களா போயிட்டிங்க…. இப்போ அம்புஜம் உன்னோட சேர்ந்து உன்னை கேலி செய்யறதை பார்க்க நல்லாயிருக்கு” என்றதும் ஐஸூ கையை அலம்பி அறைக்கு சென்றாள்.
மகளுக்கு இன்னும் தன்னோடு பேசிட தயக்கம் இருக்க கண்டு ஸ்ரீநிவாசன் அதனை ஏற்றுக்க தான் செய்தார். மகள் இல்லாமல் எண்ணி வாழ்ந்தவருக்கு அவள் உயிரோடு இருக்கின்றாள், அதுவும் மணம் முடித்து சந்தோஷ மனநிலையில் பூரித்து இருக்க மகள் மருமகன் மட்டும் இன்னும் தன்னோடு இயல்பாக பேசவில்லையே என்ற தவிப்பு அப்பட்டமாக தெரிந்தது.
அதே தவிப்போடு தான் மாலை ரித்தீஷ் ரியா இருவருக்கும் வழி அனுப்பிட நின்றார். தங்கள் உடமை எடுத்து ரித்தீஷ் ஏறி ”கிளம்பறேன் சார்” என்று தான் சொன்னான். அதற்கு ஸ்ரீநிவாசன் ”சரிங்க மாப்பிள்ளை” என்றதும் யுகனோ இவனே சார் சொல்றான் எப்படியும் இந்த அம்பு பேசாம கிளம்பும் என்றே வருந்தி
”சரி பெரிப்பா நானும் கிளம்பறேன்….” என்றதும் ஸ்ரீநிவாசன் மகளை பார்த்தவர் திரும்பி “சரி யுகந்திரா பார்த்து போ” என்று சொல்லும் இடைவெளியில் ரியா ஸ்ரீநிவாசத்திடம் ”கிளம்பறேன் பெரிப்பா” என்றே சொல்லி ரித்தீஷ் பைக் ஏறிட செய்ய யுகனும் ஸ்ரீநிவாசத்துக்கும் ஒரே அதிர்ச்சி தான்.
அம்பு தான் சொன்னாளா?’ என்று பார்க்க ரித்திஷும் அதிர்ந்து பார்க்கும் நிலையை கண்டே அவள் தான் சொல்லி இருக்கின்றாள் என உணர்ந்தார்கள்.
”போயிட்டு வா டா கண்ணா” என்று சொல்வதற்குள் அவருக்கு கண்ணீர் வழிந்தது அவரை அறியாமல்… யுகனுக்கு தான் எடுத்த முயற்சி வீண் போகவில்லை என்றுசந்தோஷம் கொண்டான்.
ரித்தீஷ் பாதி தூரம் எதுவும் பேசவில்லை…. ரியா தான். அந்த அமைதியை கலைத்தாள்.
”ஏன் மாமா நான் பெரிப்பா சொன்னது தப்பா?” என்று கேட்க கண்ணாடியில் அவள் முகம் கண்டு
”நீ அப்பா என்று கண்டிப்பா சொல்ல மாட்டேனு எனக்கு தோணுச்சு அதனால என்ன சொல்லி பேசுவனு யோசிச்சேன், இங்க இருந்த வரை அவரை நேரிடையாய பார்க்க பேச தவிர்த்த, அதுவும் தெரிந்தது. அதனால அப்படியே வந்துடுவ என்று தான் நினைச்சேன் ரியா ஆனா அன் எக்ஸ்பெக்டட் தான்” என்றான்.
”நான் காணாமல் போனது அவர் தப்பில்லையே மாமா…. ஆனா அவரோட இயல்பா பழகிட்டா அப்பா அம்மாவுக்கு பயமா இருக்கும்… எண்ணலையும் உடனே பேசிட பழக முடியலை… ஏதோ ஒரு கேப் இருக்கு…பேசாமல் வரவும் முடியலை நீ சாரு சொல்லிட்டு வந்துட்டா… யுகன் அண்ணா பெரிப்பா சொன்னதும் எனக்கும் பெரிப்பா சொல்ல தோணுச்சு அதான் உடனே அவர் பார்க்காத நேரம் சொல்லிட்டேன்”
”தப்பில்லை ரியா… என்று புன்னகைக்க அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
ரித்தீஷ் பைக் வாங்கிய முழுமையை அவளின் ஆறுதலாக அவன் முதுகில் முகம் சாய்த்து இருக்க அதனை ரசித்து வந்தான்.
வீட்டுக்கு வந்ததும் இருவரும் கொஞ்ச நேரம் பாடலை கேட்டு கொண்டும் ஒருவரின் அணைப்பில் இருந்து கொண்டு கேட்க ரியா அவனின் மீசை இழுக்க கன்னம் கிள்ள என்று சேட்டை செய்ய அவனோ கையை பற்றினான்.
”சும்மா இரு ஐசு நைட் என்ன சமைக்க?” என்றான் அவன்.
”நீ ஸ்டீல் பாப்பா டி.. எதுக்கு சமைக்கணும் யாராவது ஒருத்தர் சமைச்சா போதும்” என கழுத்திலே ஊர்வலம் செலுத்த
”போ மாமா.. நீ இப்படி பண்ணின நான் சமைக்கவே மாட்டேன் என்று தோணுது” என சலுகையாக உரைத்தாள்.
”ஹ்ம் பரவாயில்லை… எழுந்துக்கோ” என அவளை நிறுத்தி முட்டை வதக்கி சாதம் வைத்தவன் எக் ஃப்ரைடு ரைஸ் செய்து கொடுக்க வாங்கி சுவைத்தாள்.
அடுத்த நாள் காலையில் கிளம்பும் ரித்திஷ் ஷர்ட் ஷூ அணிந்து அலைப்பாயும் கேசதோடு கிளம்ப, இமை கொட்டாமல் பார்த்தாள்.
”மாமு ஹண்ட்ஸம்மா இருக்க டா… யாராவது சைட் அடிப்பாங்களோ பயமா இருக்கு… ”
”நீ வேணுமின்னா கூடவே வா” என்று இறைனின் படம் அருகே வேண்டினான்.
ஐஸூவை வண்டியில் அமர்த்தி காலேஜ் விட்டுவிட்டு மாலையில் ‘நீயே வந்துடு ரியா’ என்று சொல்ல அவளோ அவன் எதிர்பாரா வண்ணம் கன்னத்தில் இதழ் ஒற்றி எடுத்து ”சரி மாமு” என்றே சொல்ல ரித்தீஷ் சுற்றி முற்றி பார்க்க யாரும் அவர்களை பார்க்கவில்லை என்றாலும் இவனுக்கோ சிலர் தன்னை பார்ப்பது போலவே தோன்றியது.
”ஐஸூ என்ன செய்யற?” என அதட்ட
”கன்னத்தில தானே கொடுத்தேன் லிப்ல இல்லையே ரித்தீஷ்” என்றதும்
”உன்னை.. வாலு.. பை” என கிளம்பினான்.
நேராக அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் வந்த அலுவலகம் செல்ல, அங்கே அவன் அலுவலகத்தில் நுழைய கண்ட வெங்கட், ஏளன புன்னகையோடு அவனும் அந்த அலுவலகம் நுழைந்தான்.
அங்கிருந்த செக்யூரிட்டி சல்யூட் அடிக்க வெங்கட் என்றும் அவனை அலட்சியப்படுத்தி நடக்கும் தினுசுடன் நடக்க செய்பவன் இன்றோ சிரிப்புடன் நடந்தான்.
நேராக தனக்கு இன்டர்வியூ எடுத்த அறைக்கு வெங்கட் செல்ல கண்ட ரித்தீஷ் மனம் என்னவோ சரியில்லை என்று அங்கிருக்கும் ஒரு ரிசப்ஷன் பெண்ணிடம் யார் என விசாரித்தான்.
”இந்த ஆஃபிஸ் நிர்வாகம் செய்யற மகேஷ்வரன் ஐயாவோட இரேண்டாவது பையன்.” என்று சொன்னதும் கிளம்ப ஆயத்தமானன்.
ரித்தீஷ் அவன் என்ன செய்வான் என்றறிந்து பார்க்காமல் கீழே போக இருந்தான் எப்படியும் காலேஜ் வாசலில் ரியா முன் பேசிட செய்வான் அதற்கு இதே இப்பவே பேசிடுவது நலம் என்று வெங்கட் சென்ற அறைக்கு போனான்.
