Skip to content

தாரமே தாரமே வா-37

59 / 100 SEO Score

அத்தியாயம்-37

கண்கள் சொருக இமை திறக்க கடினபட்டு ரித்தீஷ் இருந்தாலும் தனது தாரம் என்ன நிலையில் இருக்கின்றாள் என்ற எண்ணமே அவனின் இமையை திறக்க செய்ய, அங்கே ரியா கண்கள் மூடியபடி நெற்றியில் ரத்தம் சொட்ட ஆட்டோவில் ஒடுங்கி இருந்தாள். ஒரு பக்கம் ஆட்டோ நசுங்கி இருக்க மற்றொரு பக்கம் ரியா இருக்க கண்டவன் எழப்போராடினான்.

அங்கே அவனுக்கு எழ முடியாது போக தன்னவளின் நிலை கண்டு ஒரு வித வலிகளை தாங்கி வெளியே வந்தான்.

நிற்கவே முடியாது தான் தவித்தான். அவனின் கால்கள் முன்னால் இருந்த கண்ணாடி சில்லால் குத்தி ரத்தம் வழியா வெளியே யாரேனும் வருகின்றார்களா என்று பார்க்க அங்கே சரிந்து போனான்.

அதற்குள் இவனின் ஆட்டோவின் எண்ணை கண்டு அங்கு வந்தான் ஷங்கர். இரண்டு முறை ரித்தீஷ் ரியாவால் புருஷன் பொண்டாட்டி என்ற பேச்சால் தலைத்தெறிக்க ஓடியவன். ரித்தீஷ் ரியாவை கண்டு உடனே அம்புலன்ஸ் அழைத்தான்.

அங்கே ரித்திஷை தூக்க அவனோ ஷங்கரை அடையாளம் கண்டு கொண்டு, ”அண்ணா முதலில் என் மனைவியை பாருங்க. அவள் கர்ப்பமா இருக்கா….” என்றதும் ஷங்கரோ ரியாவை தூக்கி வெளியே இழுக்கவும் சரியாய் இருந்தது.

ஆம்புலன்ஸ் ரியாவை ஏற்றிக்கொண்டு செல்ல ஷங்கர் அவனின் ஆட்டோவில் ரித்திஷை ஏற்றிக்கொண்டான்.

அங்கே இருந்தவர்களோ, ”ஆட்டோ என்றதால இப்படி இருக்காங்க.. பைக் என்றால் வண்டி வந்த வேகத்துக்கு விசிறி அடிச்சு இருக்கோம். ஆனாலும் ஆட்டோவில் பின்னாடி இருந்த பொண்ணுக்கு ரத்தம் அதிகமா போச்சு…உயிர் பிழைக்குமோ என்னவோ?” என்ற பேச்சு சத்தம் கேட்க ரித்தீஷ் மயக்கத்தில் இருந்தாலும் கண்ணீரை பொழிந்தது.

ஷங்கர் இருமுறை பார்க்கும் பொழுது எல்லாம் இந்த ஜோடிகளின் காதல் சேட்டையில் பார்த்தது தான். அதற்கே அவனுக்கு கண்கள் கலங்கியது.

மானசீகமாக கடவுளிடம் இந்த காதல் தம்பதியருக்காக உயிர் பிழைக்க வேண்டுதல் வைத்தான்.

ரியா சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் அதே மருத்துவமனையில் ரித்தீஷ் சிகிச்சையில் சேர்ந்தான்.

இவர்கள் இருவரும் வராததை கண்டு யுகன் ஐஸூவுக்கு போன் செய்ய ஷங்கர் கையில் இருக்கும் போன் சிணுங்கியது.

எடுத்தவன் நடந்தவைகளை சொல்ல யுகனுக்கு அதிர்ச்சியே தாக்கியது. பெரிப்பாவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தவன் அங்கு உடனே சென்று பார்த்து பின்னர் பெரிப்பாவிடம் சொல்ல முடிவெடுத்தான். என்ன நினைத்தானோ திரும்ப யோசித்தவன் ஸ்ரீநிவாசையும் அழைத்து சென்றான்.

செல்லும் பொழுதே ரித்தீஷ் மாமா அக்காவின் வீட்டுக்கு போன் செய்து அவர்களுக்கும் தகவல் தந்தான். தணிகாசலம் வேகமாக வந்து சேர்ந்திட அங்கே தணிகாசலம் வைதேகி ஸ்ரீநிவாசன் யுகன் இருந்தார்கள். வைதேகி தான் ஓயாமல் அழுதுக்கரைந்தார்.

என் தம்பி ரித்திஷை மாமா சொல்ல மாட்டேன் என்று என்னிடம் எப்படி எல்லாம் அலப்பறை செய்த ஐசஸூ. கல்யாணம் ஆனா பிறகு அவனை நீ மட்டும் தான் பார்க்கணும் என்னை கூட பார்க்க கூடாது என்று கண்டிஷன் எல்லாம் போட்டியே டி. அவன் மேல அப்படி அன்பு செலுத்தினியே இப்போ இரண்டு பேருமா இப்படி மருத்துவமனைக்கு வந்து கிடக்குறிங்களே…. அவனுக்கு பால் பணியாரம் பிடிக்கும் சொல்லி தா என்று படுத்தி எடுத்தியே டி… இப்படி கிடக்கவா ஐந்து வயதில் எங்க கைக்கு தங்க பெட்டகமா வந்து கிடைச்ச…. ” என்று வைதேகி பேசிபேசி மயங்கினார்.

யுகன் தான் அங்கிருக்கும் வார்டியில் படுக்க வைத்து கொஞ்ச நேரம் ஊசி மூலமாக உறங்க வைத்தான். தணிகாசலம் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

ஸ்ரீநிவாசன் அருகே சென்று தணிகாசலத்திடம் தோள் தொட ”பாருங்க ஐயா உங்க மகள் என்று உரிமை கொண்டாட செய்திங்களே… இப்போ யாருக்கு மகளா இல்லாமல், இங்க வந்து நம்மளை தவிக்க விடறா” என்று தலையில் அடிக்க ஸ்ரீநிவாசனோ ”அவளுக்கு ஒண்ணும் ஆகாது தணிகாசலம் சார்… பாருங்க” என்று குரல் ஓடிந்தே தேற்றினார்.

யுகனுக்கு இடி விழுந்த நிலை… கண் எதிரே பல காலம் தேடி கிடைத்த ஐஸூ அவளிடம் தங்கை உறவு கொண்டாடி கிடைத்த கொஞ்ச நாளில், இப்படி ஒரு அதிர்ச்சி என்று அவனுள் ஆட்டி படைத்தது.

அங்கு ரித்தீஷ் எந்த நிலையில் இருக்கின்றான் என்றறியாது இருக்க, ரியா நிலையில் 24 மணியில் அவள் தன்னுனர்வு வரனும் இல்ல ஆபத்து என்று கூறினார்கள்.

ஷங்கர் ஓடி வந்து டாக்டர் அம்மா அந்த தங்கச்சி கர்ப்பமா இருக்கு என்று அவர் வீட்டுக்காரர் சொன்னார்” என்று கூறி முடிக்க தணிகாசலம் ஸ்ரீ நிவாசன் யுகன் அதை கேட்டு அதிர்ந்தாலும், இந்த ஷங்கர் சொன்ன செய்தியில் சிறிது மகிழ்வு தலைசாய்த்து மருத்துவரின் பதிலை கேட்க ஆவலாக பார்த்தார்கள்.

”அவங்க கருக்கு ஆபத்து இல்லை… ஆனா அந்த பொண்ணு கண்ணு முழிக்கணும்” என்று சொல்ல, ரித்தீஷின் நிலை கேட்க, அவனுக்கு சிகிச்சை முடிவடைந்தது கண் திறப்பான் என்றார்கள்.

ரியாவை ஒவ்வொருத்தராக வந்து பார்க்க, வைதேகி தணிகாசலம் தான் முதலில் பார்க்க அனுப்பினான் யுகன்.

என்ன என்னவோ சொல்லி பேசி ஐஸூவின் பழைய சேட்டை சொல்லி பேச அவளோ ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தாள்.

உன்னை பெற்ற அப்பா வந்தும் போக மாட்டேனு எங்களோட இருந்தியே மா… இப்போ மட்டும் எதுக்கு எங்களை விட்டு போக தவிக்கற…” என்று தணிகாசலம் பேச, வைதேகியோ பேசும் சக்தி மொத்தமும் போனது போல இடிந்தமர்ந்தார்.

ஸ்ரீநிவாசன் யுகன் வந்து அடுத்து பார்த்தார்கள்.

”இங்க பாரு குட்டி சாத்தான்… உன்னையும் பெரிப்பாவையும் சேர்க்க நான் எத்தனை முறை போலீஸ் ஸ்டேஷன் போய் பேசியிருக்கேன் தெரியுமா? இப்படி உன்னை கண்டுப்பிடிச்சு முன்ன நிறுத்தி அவரிடம் பேசவைத்தேன்.

இங்க வரும் பொழுது என்ன சொன்ன? நீ பார்த்து வைக்கின்ற பெண்ணை கட்டிக்கிட்டா பெரிப்பாவிடம் நல்லா பேசுவேணு சொன்ன… நான் நீ சொல்ற பொண்ணை கூட கட்டிக்குறேன் மா… நீ ரித்தீஷ் சேர்ந்து எங்களுக்கு வேணும்…” என்று சொல்ல ரித்தீஷ் பெயரில் ஒரு கணம் துடித்த கண்கள் அறியாத யுகனோ கண்ணீரோடு நர்ஸ் சொல்படி வெளியே வந்தான்.

அதற்குள் ரித்தீஷ் கையில் கட்டோடு கொஞ்சம் மயக்கதோடு வந்து நின்றான்.

”சார் உங்களுக்கு இன்னும் சரியாகலை. மயக்கத்துல தான் இருக்கிங்க உள்ள வாங்க” என்று நர்ஸ் குரல் கொடுத்து தடுக்க, அவனோ தள்ளாடி ரியா அறைக்கு சென்றான். யுகன் பின் தொடர அங்கே ரியா அருகே ஒரு சேர் போட்டு அமர வைத்தான்.

நர்ஸ் தான் ”டாக்டர் பார்த்த எங்களை திட்டுவாங்க அவரை அவர் வார்டுக்கு போக சொல்லுங்க” என்று கூறினார்.

கொஞ்சம் ஒரு பத்து நிமிஷம் பேசட்டும் என்று யுகன் சொல்ல ரித்தீஷ் மயக்கத்தில் இமை திறந்தவனுக்குள் நிழல் போல தான் ரியா உருவம் தெரிந்தது.

”எனக்கு அப்பா அம்மா எப்பவோ விவரம் தெரியும் வயசில் போயிட்டாங்க டி.. அக்கா மாமா என்று அன்பா வளர்ந்தாலும் எனக்கு அந்த வயசில் இருந்தே சுயகௌரவம் தான்.. எனக்கு தேவையானதை நானே பார்த்துப்பேன்… ஆனா நீ என் லைஃப்ல வந்த பிறகு எல்லாம் நான் சந்தோஷமா இருக்கேன். நீ இல்லாமல் வாழணுமா? சத்தியமா என்னால முடியாது. வாழ்ந்தா சேர்ந்து வாழ்வோம் இல்லையா சேர்ந்து செத்து போவோம்.” என்று கண்ணீர் கோடுகள் அவள் கையில் வடிய நிமிர்ந்தவன்,

”நம்ம குழந்தை…? அதுவும் நம்மளோடவா? வேணாம் ரியா… அந்த குழந்தை கூட நாம வாழனும்…. நீ அம்மா ஆனா பின்ன, என்ன என்ன செய்வ என்று பார்க்க ஆசையா இருக்கு டி… என்னை பொறுத்தவரை நீயே ஒரு குழந்தை உனக்கு ஒரு குழந்தை என்றால் அதை நீ எப்படி பார்த்துப்ப? அதோட ஐஸ்க்ரீம்கு சண்டை போடுவியா?” என்று முறுவல் செய்தவன் தலை சாய்ந்து அவள் கைகளில் விழ, யுகன் தான் பயந்து போனான்.

”ரித்தீஷ் டேய் ரித்தீஷ்…” என்று தோளை தொட ரித்தீஷ் அலைப்பேசியில்

”வேறதுவும் தேவையில்லை

நீ மட்டும் போதும்

கண்ணில் வைத்து காத்திருப்பேன்

என்னவானாலும்

உன் எதிரில் நான் இருக்கும்

ஒவ்வொரு நாளும்

உச்சி முதல் பாதம் வரை

வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை

பார்த்து முடித்தாலும்

இன்னும் பார்த்திட சொல்லி

பாழும் மனம் ஏங்கும்

தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தானே

தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா……..” என்ற பாடல் வரிகள் கேட்க அதில் இலா அழைப்பு தொடுத்திருந்தாள்.

அது மீண்டும் மீண்டும் அலைப்பேசியில் அடிக்க கேட்டு, ரியா கைகள் ரித்திஷின் கன்னம் இருக்கும் கைகள் மெல்ல தடுமாற ரித்தீஷ் மெல்ல எழுந்து இமை சொருக,

”நீ கை அசைத்தியா ரியா?” என்று கேட்க அங்கு நிழலில் இருக்கும் ரியா மெல்ல தலையை ஆட்டுவதாக தோன்ற ரித்தீஷ் மருந்தின் வீரியத்தில் அப்படியே சரிந்தான்.

 

ஒரு வாரம் கடக்க……………………

 

ரித்தீஷ் வீட்டில் ரியா கட்டிலில் இருந்து கீழே கால் வைக்காமல் ரித்தீஷ் பார்த்தபடி சமைத்து கொண்டிருந்தான். ரியாவோ அவன் பிரித்து வைத்த மாதுளை பழத்தை எடுத்து ஸ்பூனில் சுவைத்தாள்.

அவனோடு ”இந்த யுகனை பார்த்தியா ரித்தீஷ் அவன் காதலை மறந்துட்டு என்கிட்ட அத்தை பொண்ணை கட்டிக்கறேன் சொல்லிட்டான்.. அந்த அறுவைக்கு என் மேல எம்புட்டு பாசம்.” என்று சொல்ல அங்கே யுகனோ

”குட்டி சாத்தான்… நிஜமாவே நீ சின்ன பிள்ளையா இருக்கும் பொழுதே எனக்கு உன் மேல அம்புட்டு பாசம் தான். அதான் உன்னை தேட முயன்றேன். வீட்ல கூட ஐந்து வயசில் தொலைத்த பெண் எப்படியும் கிடைக்க மாட்டானு சொன்னாங்க தேடி கண்டுப்பிடிச்சேன்ல” என்றான்.

அங்கே வைதேகி ரியா ரித்திஷ் உடைகளை உலர்த்தி கொண்டு இருந்தார்கள். தணிகாசலம் ஸ்ரீநிவாசன் பேசியபடி மகிழ,

”பெரிப்பா அப்பா செம டெர்ரர் பீஸ் என்னை ரித்தீஷ்க்கு கட்டி கொடுத்துட்டார். அந்த கதை எல்லாம் தெரியுமா?” என்று தணிகாசலத்தினை மாட்ட, அடுத்து ரித்தீஷ் என்னை அடிச்சுட்டான் என்பது வரை சொல்லி முடித்தாள்.

ரித்தீஷோ ”அது… அது.. ரியா அப்ப… இரண்டு மாமனார் ஒரு மச்சான் கூட கோர்த்து விடறியே?” என்று கொஞ்சம் நிலமையை எப்படி புரிய வைக்க என்று தெளிவாக்க முனைந்தான். அங்கு யாரும் அவனை உடனே காரணம் கேட்கவில்லை. அதோடு ரியா முகமெல்லாம் மலர்ந்து ரித்திஷை காதலிப்பதும் அறிந்தவர்களே.

வைதேகியோ ”எதுக்கு டா முழிக்கிற… அவள் மேல எங்களுக்கு இருக்கற உரிமை விட இவருக்கு இருக்கும் உரிமை விட… ” ஸ்ரீநிவாசனை கை காட்டி விடுத்து ரித்திஷிடம் திரும்பி ”இப்போ உனக்கு இருக்கும் உரிமை தான் அதிகம்… நீ அவ மேல வச்சிருக்கற அன்பு தான் அவளை திரும்ப கொண்டு வந்திருக்கு ஈஸ்வர்” என்றதும் ரியா கண்ணில் பார்வை பதித்தவன்

பூர்வீ ரியாவை பார்க்க வர, அவளை வரவேற்க யுகனும் யாவரும் சென்றதும்

”ரியா எனக்கு எப்பவும் உன் மேல முதல் உரிமை தானே?” என்று அவன் கேட்க அவளோ வயிற்றில் கையை வைத்து

”ரித்தீஷ் உன் அன்பு எனக்கு தானே முதலில்” என்று கேட்க

”நீ என் தாரம் டி உனக்கு தான் முதல் உரிமை” என்று நெற்றியில் அன்பின் ஆழத்தோடு அழுத்த முத்தமிட்டான்.

சில வருடங்களுக்கு பிறகு… 

மேடிட்ட வயிற்றோடு எல்.கே.ஜி வகுப்பிற்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா.

அங்கே கொட்டாவி விட்டபடி ஒரு சிறுவன் இருந்தான்.

அவனிடம் ஒரு சிறுமி, “உனக்கு புரிந்ததா ஷாம்?” என்று விந்தியா கேட்டாள்.

புரியற மாதிரி இந்த மிஸ்ஸுக்கு சொல்லி தர தெரியாது சும்மாவே சீன் போடுவாங்க” என்றான்.

ஐஸ்வர்யா முதல் பெஞ்சிலிருந்து தன்னை சொல்லும் அவனை முறைத்தவள் “ஏய் எப்பாரு பேச்சு. கெட் அவுட்” என்றாள்.

“இந்த கிளாஸ் இன்னும் 10 மினிட்ஸ்ல முடிஞ்சிடும் மிஸ். நீங்க கெட்அவுட் ஆகிடுவிங்க. அதனால நான் இங்க தான் இருப்பேன் மேம்” என்று ஷ்யாம் சொல்ல, அவனிடம் எதுவோ பேச வந்த ஐஸு வெளியே அவர்கள் பள்ளி நிர்வாகி வரவும் அவரைப் பார்த்து பேச சென்றாள்.

“நாளிலிருந்து லீவு எடுக்க போறதா சொல்லிருந்திந்த. உங்களோட வேலையை வினிதாவிடம் சொல்லிடுங்கம்மா” என்றதும் “சரி மேம்” என்றதும் ஐஸ்வர்யா தலையாட்ட, மதிய உணவு நேரம் மணி அடிக்க, ரியா தான் கெட்அவுட் ஆனாள்.

மதிய நேரம் உணவு அருந்தும் நேரம், “உருளை வறுவளா? டேய் ஷ்யாம் எனக்கு கொடுடா” என்று விந்தியா கேட்க, அதற்கு ஷ்யாம் “இது எங்க அப்பா எனக்காக செய்தது தரமாட்டேன்” என்று மறைத்தான்.

“நான் உன் பிரெண்ட். நம்ம ரிலேட்டிவ் வேற, கொஞ்சம் கொடுடா.” என்று கேட்டதும் ஷ்யாம் பகிர்ந்தான்.

கொஞ்ச நேரம், விளையாட நேரம் கழிந்தது. வீட்டுக்கு செல்லும் நேரம் மணியடித்தது. சிறுவர் சிறுமியர்கள் பட்டாம்பூச்சியாக பறந்தனர்.

அங்கே வெள்ளை நிற காரில் ரித்திஷ் வந்திருந்தான்.

ஷ்யாம் “அப்பா” என்று ஓட அவனைத் தூக்கிக் கொண்டான்.

மகனை தூக்கிக்கொண்டு, “எங்கடா உங்க மிஸ்?” என்றவாறு கண்களை சுழல விட்டான்.

“நீங்க எங்க மிஸ்ஸை சைட் அடிக்கறிங்க. இது நல்லதுக்கு இல்லை” என்றதும் மகன் பேச்சில் ரித்தீஷ் சிரித்தபடி தன்னவளை தேடினான்.

தூரத்தில் அவனது ரியா தோளில் கைப்பையை போட்டுக் கொண்டு நடந்திட, அவளின் ஏழு மாதம் வயிற்றோடு நடந்து வந்தவளை ரசிக்க, அவளோ முகம் திருப்பிக் கொண்டு காரில் அமர்ந்தாலள்.

“டேய் அம்மா கோபமா இருக்காளா? இன்னைக்கு என்ன பண்ணி வச்சடா” என்று ரித்திஷ் கேட்டான்.

“பெரிய பிரச்சினை எல்லாம் இல்லப்பா. போற வழியில சொல்றேன்” என்று அவன் முன் பக்கம் அமர்ந்து கொள்ள, பின்னிருக்கையில் ஐஸ்வர்யா அமர்ந்தாள்.

” ஸ்கூல்ல என்ன இன்ஸல் பண்றான் ரித்திஷ் சொல்லி வை. உன் பையன் தோலை உரிச்சிடுவேன்.” என்றாள் ரியா.

“முதலில் அப்பா செய்யற உருளைக்கிழங்கு வறுவலுக்கு தோல் உரிக்க கற்றுக்கொள்ளுங்க. அப்புறம் என் தோலை உரிக்கலாம்” என்று ஷ்யாம் சொல்ல ரித்திஷ் தன்னை மறந்து சிரித்தான்.

“அவன் பேசறான். நீ சிரிக்கற இல்லை. என்கிட்ட நீயும் பேசாத” என்று ரியா கோபித்தாள்.

“இல்லடி அவன் பேசியதும் சிரிப்பா இருந்துச்சு சிரிச்சிட்டேன். சாரி… டேய் ஷ்யாம் சும்மா இருக்க மாட்ட” என்று எப்போதும் போல அதட்டி, கண்ணடிக்க ஷ்யாமோ “நீ வேஸ்ட் பா நான் யுகேன் மாமாகிட்ட சொல்றேன் அவர்தான் எனக்கு கம்பெனி கொடுத்து கலாய்ப்பார்.

நான் சொல்ல வேண்டியதே இல்லை. விந்தியா இந்நேரம் வேன்ல அவ வீட்டுக்கு ரீச்சாகி சொல்லிருப்பா” என்றான்‌ஷ்யாம்.

‘அவன் வேற சேர்ந்து கலாய்ப்பானே’ என்றபடி ஐஸு என்ன செய்ய என்று யோசித்தாள்.

ரித்தீஷ் வண்டியோ அவன் வீட்டை தாண்டி ஸ்ரீனிவாசன் வீட்டை அடைந்தது.

ஐஸ்வர்யா இறங்கி நடக்க ஷ்யாம் வேகமாக ஓடினான். “இங்க எதுக்குடா? இன்னைக்கு புதன் இல்லையே?” என்றாள்.

எப்பொழுதும் புதன் ஸ்ரீனிவாசன் வீடு, திங்கள் தணிகாசலம் வீடு என்று செல்வது வழக்கம்.

ரித்திஷோ, ”திலீப் வந்திருக்கான் ரியா. அவன் கூட லாஸ்ட் மந்த் மேரேஜ் பண்ணின எமி வந்திருக்கா” என்று உள்ள செல்ல அங்கே யுகேந்திரன் பூர்வி சிரித்தபடி வரவேற்றனர்.

“விந்தியா பள்ளியில் நடந்தவை சொல்லியது புரியுது ரித்திஷ் அவனை சிரிக்க வேண்டாம்னு சொல்லு” என்றாள் ரியா.

“அது எப்படி நான் அறுவை வாத்தியார். இப்ப நீ மட்டும் என்னவாம்?” என்று குலுங்கி குலுங்கி சிரித்தான்.

“உன் பொண்ணு சொன்னாளா?” என்று விந்தியாவை தேடினாள்.

“இல்ல என் பாட்னர் ஷ்யாம் சொன்னான்.” என்று சிரித்தான்.

திலீப் எமி வரவும், பரிசு பொருட்களை கொண்டு வந்தார்கள். இது ஷ்யாமிற்காக இது விந்தியாவுக்கு என்று கொடுக்க வாங்கிக் கொண்டார்கள்.

 

“தேங்க்ஸ்” என்று கன்னத்தில் ஷ்யாமும் எமி கன்னத்தில் விந்தியாவும் முத்தமிட்டு சென்றனர்.‌

பூர்விகா-யுகேன் மாறாத புன்னகையுடன் இருந்தார்கள். திலீபிடம் அடிக்கடி இயல்பாக பேசி முன்பிருந்த சூழலை எண்ணாமல் காலம் மாற்றி இருந்தது.

அடுத்த நாள் ரித்தீஷ் எஸ்.எஸ்.ஷோரூம் திறப்பு விழா என்பதால் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு கிளம்பினார்கள். அதற்குள் ஷ்யாம் பெரியதாத்தா ஸ்ரீநிவாசனிடம் அன்னை பாடம் நடத்தும் விதம் பற்றி புட்டு புட்டு வைத்திருந்தார்.

நாளையிலிருந்து “எங்க மிஸ் வரமாட்டாங்க ஜாலி. நாளைக்கு லீவு வேற” என்று அவனும் மாறி மாறி சொன்னான்.

நாளை திறப்பு விழாவுக்கு முன்னே இந்த சண்டையை கைவிடுங்க’ என்று சொல்ல மூவரும் கிளம்பினார்கள்.

யுகேனும் பூர்வியும் அம்புஜம்

ஷ்யாம் கூட ஒரே சண்டை. “இந்த ரித்திஷ் அம்புஜத்தை எப்படி தான் சமாளிக்கறானோ தெரியலை” என்றார்கள்.

ரியா கருவுற்ற நாலாவது மாதத்தில் யுகேன்-பூர்வி திருமணம் ஆன அடுத்த மாதத்தில் கருவுற்றிட ஐசு மகன் கூடவே அவனின் மகள் வித்தியாவும் பயில இவர்கள் குறும்பு தினமும் வழக்கில் இருக்கும்.

ரித்திஷ் ஒரு ஃபேமிலி ஐஸ்க்ரீம் வாங்கி வந்து, மகன் வழக்கை முடித்திவான்.

அடுத்த நாள் பைக் ஷோரூம் திறப்பு விழா கிளம்பி இருந்தார்கள் அங்கே தணிக்காச்சலம் கையால் ரிப்பன் துண்டித்து திறப்புவிழாவை ஆரம்பித்தார். வைதேகி ரியா கூடவே இருந்தார்.

பரத் துர்கா திருமணம் பேசி முடிக்க அவர்கள் இருவரும், கடை திறப்பு விழாவில் கடலை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இலா மஸ்தான் கையில் ‘ஷாஜி’ இருக்க விழாவில் இலாவின் சேலை தடுக்க ஐசு தான் தாங்கினாள்.

ஆட்டோ ஒட்டும் ஷங்கரும் அவன் குடும்பமத்தையும் அழைத்து வந்திருந்தான். இவர்கள் நட்பும் ரித்தீஷ் மருத்துவமனையில் இருந்து தொடங்குகிறது.

ரித்திஷின் உழைப்பில் வளர்ந்து இங்கு வந்தது அவனின் மகிழ்ச்சியை விட ரியா தான் அதிகம் மகிழ்ந்தாள்‌

இன்று முதல் வரும் மாதம் எல்லாம் ஆசிரியர் பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே அவன் கணவன் கையில் ருசித்து சாப்பிட அடுத்த மகப்பேறு நாட்களுக்காக காத்திருக்கின்றாள்.

ரித்தீஷ் தனது கையால் இன்று வரை நேரம் இருக்கும் வரை உணவு செய்து கொடுப்பது. யாரின் உறவையும் மறுக்காமல் சீனிவாசன் பெரியப்பா என்று சொல்லி பெரிய தாத்தா என்று குழந்தைகளுக்குப் பழகினான்.

தணிகாசலம் சின்ன தாத்தா என்று கூறி வளர்த்தான்.

அந்த வீட்டில் இன்னொரு தம்பியாக நடத்தப்பட்டார் தணிகாசலம்.

இருமாதம் கழுத்து ஷ்யாம் சண்டையிட அல்லது பாசம் வைக்க ஒரு தங்கையை எதிர்பார்க்கலாம்.

ஆம் ஐஸ்வர்யா-ரித்தீஷ்வரனுக்கு பெண் குழந்தை பிறக்கும்.

ரித்திஷ் என்றும் போல் அந்த ஜீவனுக்கு நடுவில் ஷ்யாமுடனும் ரியாவுடனும் மாட்டிக் கொண்டு முழிப்பான்.

அழகான குடும்பமாய் வாழ வாழ்த்தி விடைப்பெறுவோம்.

 

~சுபம்~

-பிரவீணா தங்க

ராஜ்.

 

 

 

 

 

💍 —————-சுபம்……………. 💍

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!