The leader-33
அத்தியாயம்-33
சத்ரியன் அவளை தன்னருகே இழுத்தபோது, ஷ்ரத்தாவுக்கு இன்னும் மூச்சு சீராகவில்லை.
அவனது மார்பில் கைகள் பதிந்தபடி நின்றவள், விலக வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் விலகாமல் நின்றுவிட்டாள்.
சத்ரியன் அவள் முகத்தை பார்த்து முத்தங்களை மென்மையாக விதைக்க, ஷ்ரத்தா சர்க்கரை பாகு போல கரைந்தாள்.
“இவ்வளவு பயப்படற.. ஆனா என்னை விட்டு இன்னும் ஓடலையே?” என்று மெதுவாக செவியில் கிசுகிசுப்பாய் கேட்டான்.
ஷ்ரத்தா இமை திறந்தவள், அதன் பின்னரே அவன் இதழை விடுவித்ததை உணர்ந்து நின்றாள்.
சத்ரியன் அடிக்கடி தன்னை கேட்டு நின்றதில் தான் சம்மதித்ததும், சூறாவளியாக இழுத்து கொள்வான் என்று எண்ணியதற்கு மாறாக, மயிலிறகான முத்தங்கள் ஒற்றியெடுத்து நிற்கின்றான் என்ற ஆச்சரியம் உண்டானது.
அறையில் ஏசியின் சப்தம் மட்டும்.
வெளியில் இரவு படர்ந்து அமைதி நிலவுவதை உணர முடிந்தது. இங்கே இரண்டு பேரின் மூச்சு பேரிரைச்சலாக மாற தயாராகியிருந்தது.
சத்ரியன் அவளது கீறிய கையை மெதுவாக பார்த்தான். அந்த பேண்டேஜை மெதுவாக வருடினான். “வலிக்குதா?” என்றான்.
அவள் உடனே குழந்தைத்தனமாக “நீ தானே கீறின இப்ப கேட்கற.. வலிக்காம இருக்குமா.” என்று கோபமாக சொன்னாள்.
“ம்ம்ம்…” என்று தலையசைத்தவன், “வலிக்குனு தெரியுது… அதான் இன்னும் கை நடுங்குதே” என்றான்.
அப்போதுதான் ஷ்ரத்தா கவனித்தாள். உண்மையிலேயே அவளது விரல்கள் சிறிது நடுங்கின. சத்ரியன் அவள் கையை விடாமல் பிடித்தான்.
“ஷ்ரத்தா…” என்று தேனை குழைத்தது போல அழைத்தான்.
“ம்ம்” என்றவள் மந்திரத்திற்குள் புதைந்தவள் போல ஏறிட்டாள். இவனை எந்த ரகத்தில் சேர்ப்பதென்ற மாயத்தில் திளைத்தாள். ”நீ என்னை புரிஞ்சிக்க முயற்சி பண்ணாத.” என்றான். தான் சற்று முன் மனதில் நினைப்பதை கூறுகின்றானே என்று கண்கள் விரிந்தது.
“நானே என்னை முழுசா புரிஞ்சிக்கலை. அப்படியிருக்க நீ என்னை புரிந்துக்க முயற்சிக்கும் போது, நான் என்னை மறந்துடுவேனோனா இருக்கு” என்றதும் அந்த பதிலில் ஷ்ரத்தா சற்று தடுமாறி நின்றாள்.
இத்தனை நேரம் அவனை மிருகமாக நினைத்தவள். அந்த நொடியில் அவனுக்குள் வேறு ஏதோ இருப்பது போல தோன்றியது.
சத்ரியன் அவளது முகத்திற்கு அருகே வந்தான்.
மிக அருகே வந்தவனுக்குள் இப்பொழுதும், இந்த முறையும் அவசரம் இல்லை. அதிகாரம் இல்லை. ஒருவிதமான ஆராய்ச்சியே நிகழ்த்தினான்.
“இப்பவும் அழுவியா?” என்று கேட்டான். ஷ்ரத்தா மறுப்பாக தலையசைத்தாள்.
ஷ்ரத்தா அவனையே இமைக்காது பார்த்தாள். இந்த சத்ரியன் எப்பொழுது என்ன பேசுவான் என்று தெரியவில்லை.
அதுதான் பிரச்சனையும்.
அதுதான் ஆபத்தும். சத்ரியன் அவளது சிகைக்கற்றை முகத்தில் விழுந்திருந்த ஒரு சின்ன கூந்தலை காதோரமாக ஒதுக்கினான். அந்த தீண்டல் கூட ஷ்ரத்தாவுக்கு புதிது. அதிலும் இதமான தீண்டல் பிடித்திருந்தது.
அகத்தின் அழகு முகத்தில் தெரிய, அவள் உடனே பார்வையை திருப்பிக் கொண்டாள். அப்படியிருந்தும் கள்வன் கண்டுக் கொண்டான். அதை உதட்டில் குறுஞ்சிரிப்பில் வெளிப்படுத்தினான்.
“என்னை பார்க்காத…” என்றாள் மெதுவாக. “ஏன்? அப்படி பார்த்தா… என்ன ஆகும்?” என்று கேட்க, ஷ்ரத்தாவால் பதில் சொல்ல முடியவில்லை.
சத்ரியன் தற்போது வெளிப்படையாக முறுவலிட்டான்.
பிறகு அவளை மெத்தையின் ஓரத்தில் அமர வைத்தான்.
தானும் அருகே அமர்ந்தான்.
இருவருக்கும் நடுவில் இன்னும் சிறிய இடைவெளி இருந்தது.
ஆனால் அந்த இடைவெளி கூட நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
சத்ரியன் மெதுவாக சாய்ந்து,
“இப்ப இது போதும்.” என்றான்.
ஷ்ரத்தா புரியாமல் பார்த்தாள்.
‘என்ன போதுமா?’ என்று தான் அவளது பார்வை ஏமாற்றத்தை தாங்கியது.
“பின்ன.. காலையில இருந்து இப்பவரை அதிகப்படியான அதிர்ச்சியை, நீ அனுபவித்து இருக்கலாம். அதனால இன்னிக்கு இது போதும். நீ நான் இங்கதானே இருப்போம். மீதியை எனக்கு தேவை ஏற்படும் போது தீர்த்துப்பேன்.
இந்த பசியோட இருக்கறவனுக்கு முன்ன சடனா எல்லா வகையான உணவும் வரிசையா திறந்து வச்சா, அவனால எல்லாத்தையும் சாப்பிட முடியும் தான். ஆனா எனக்கு பிடிச்சதை மட்டும் எடுத்துட்டு விட்டுவிடுவது தான் என்னோட பாலிசி.
இந்த சாப்பாடு தயார் நிலையில இருக்கு என்றதே இப்ப போதும்.” என்றான்.
அந்த வார்த்தையோடு அவன் ஜன்னல் பக்கம் நடந்தான்.
ஷ்ரத்தா அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு இன்னும் சத்ரியன் எப்பேற்பட்ட ஒருவனென்று புரியவில்லை. ஆனால்… முன்பு இருந்த பயத்தோடு சேர்ந்து,
இப்போது வேறொரு உணர்வு மெதுவாக உள்ளே நுழைந்தது.
அதற்கு பெயர் வைக்க அவளால் இன்னும் முடியவில்லை.
ஆனாலும் தானே தன்னை அவனிடம் இழக்க தயாராகி நின்ற கோலத்தை எண்ணி வெட்கம் கெட்டு போய் தலைக்குனிந்தாள்.
தந்தையை யார் கொன்றது என்று அறியாததால் “அப்பாவை” என்று ஆரம்பித்திட, அவனோ புகைத்திருந்தவன் திரும்ப அவள் முகத்தில் புகை ஊதப்பட்டது. அதை அவன் பொருட்டாக எண்ணாமல், “லாயர் திவாகரை கொன்றவன் உன்னை கொல்ல துடிக்கறவன் இரண்டு பேரையும் யோகேஷ் அள்ளிட்டு வர போயிருக்கான். அவன் முன்ன நிறுத்தியதும் தெரிந்துக்கோ. அனேகமா நாளைக்கு தான் இங்க வரமுடியும். பிகாஸ்… அந்த பரதேசிங்க ஊர்ல இல்லை.
சோ.. இங்கயே தூங்கி ரெஸ்ட் எடு.” என்றான்.
ஷ்ரத்தாவுக்கு தனது அறைக்கு கூட செல்ல விடமாட்டானென அதன்பிறகே புரிந்தது.
அமைதியாக படுத்துக் கொண்டவளுக்கு உறக்கம் வரவில்லை. வேட்டையாடப்படும் மானை சிங்கத்தின் குகையில் வைத்துவிட்டு உறங்க கூறினால் எப்படி இருக்கும் அப்படி தான் ஷ்ரத்தா நிலை. அதற்காக தப்பிக்க நினைக்கும் மனநிலையிலும் ஷ்ரத்தா இல்லை.
அவள் ஒரு கட்டத்திற்கு வந்துவிட்டாள். முன்பு பழகமற்ற இந்த கூட்டத்தில் இன்று பழகிக்கொண்டு இருக்கின்றாள். சொல்லப்போனால் அவன் தீண்டாமல் தவிர்த்தது ஏமாற்றத்தை தருவித்தது.
ரத்தமும் சதையும் மருத்துவ படிப்பில் மட்டும் காண்போமென்ற எண்ணத்தை தூளாக்கிவிட்டு, சத்ரியன் போன்ற ராஜாங்கத்தை கட்டி ஆளும் ஆட்கள் ரத்தத்தை உறைய வைத்த காட்டிவிட, முற்றிலும் இந்த உலகத்திற்கு தன்னை பழகிக் கொண்டுயிருக்கின்றாள். அதை மீறி அவனோடு இணைய அவள் தயாராக தான் இருந்தாள்.
ஏதேதோ நினைவுகள் அலைக்கழிக்க, இரண்டு நாட்கள் விழித்திருந்ததற்கு ஏதுவாக உறக்கம் வந்ததும் உறங்கிவிட்டாள்.
இது சத்ரியனின் அறை என்றோ, அல்லது அவளது டாப் மட்டும் களையப்பட்டு வெறும் பெட்டிக்கோட் பாலஸோ பேண்ட் அணிந்திருக்கின்றோமென்ற எண்ணம் கூட புத்திக்கு உரைக்காமல் உறங்கியிருந்தாள்.
சத்ரியன் இரண்டு மூன்று புகையை இழுத்து ஊதி, அறைக்கு வந்த நேரம், அவன் எண்ணியது போலவே ஷ்ரத்தா உறங்கியதை கண்டான்.
இதுவரை தன் மெத்தையில் ஒரு பெண் படுத்திருந்தால், போர்வையை இழுத்து, அப்பொழுது இருந்த பெண்களை புணர்ந்த நொடிக்கு பதிலாக, முதல் முறையாக போர்வையை ஷ்ரத்தா மீது போர்த்திவிட்டான்.
அவளது டாப் அங்கே கேட்பாரற்று கிடக்க, அதை எடுத்து நுகர்ந்தான்.
புசிக்காமலே போதையை உணர்ந்தவனாக, இமை மூடியவனுக்கு உடலெங்கும் ரத்த நாளங்கள் அதிர்ந்தது.
தன்னை கட்டுப்படுத்தியவனாக அவளுடன் உறங்கும் வழியும் அறியாது அவளையே வெறித்தான்.
இவளால் தான் என்னயென்ன மடத்தனம் செய்து கொண்டிருக்கின்றோம் என்று அறிந்தும் மடத்தனத்திலிருந்து மீளாது இருந்தான்.
தேவையற்று சில எதிரியை மேலும் சம்பாதிக்க போகின்றான். வினோத் கொல்ல துடிக்கின்றான் என்று தெரிந்தும், ஷ்ரத்தா அவனை எவ்வகையில் காண்கின்றாள் அல்லது உதவுகின்றாளா, என்றெல்லாம் அறியும் மிதப்பு கூடுதலாக இருந்தது.
அப்படியென்ன இவளை பற்றி ஆராய்ந்து என்ன செய்ய போகின்றாய்? எப்படியும் அவளை ஆக்கிரமித்து அடைந்து அடுத்த வேலையை தானே பார்க்க போகின்றாய் என்றது மனம்.
ஆனால் ஏதோ புதிதாக உள்ளத்தில் கரை புரண்டது.
வினோத்திற்கோ ‘யோகேஷ் ஊரில் இல்லை என்றது தகவலானது. இந்த நேரம் ஷ்ரத்தாவிடம் நெருங்கி உதவ கோரி முனைந்திட நினைத்தான். ஆனால் அவள் சத்ரியன் அறையில் சிறையாக அடைப்பட்டதும், அஞ்சினான்.
ஒன்று அவளுக்கு ஏதேனும் ஆகிடுமோ என்ற நலன் விரும்பியாக. இரண்டு அவள் ஏதாவது சத்ரியனிடம் கூறிவிட்டால் தனது உயிர் தன்னிடம் இருக்காது.
வினோத்திற்கு பொட்டு உறக்கமின்றி நின்றான். வீட்டை விட்டு ஒளிந்துக் கொள்ள, சத்ரியனை காணாத தூரம் ஓடிவிட நினைத்தான். ஆனால் முடியாது. சத்ரியனிடம் வந்து சேரும் யாராகயிருந்தாலும் புலி வாலை பிடித்த கதை.
இப்படியாக செல்ல, நள்ளிரவு தாண்டி யோகேஷ் ஷ்ரத்தாவை கொல்ல துடித்த பதர்களை பிடித்து விட்டதாகவும், தங்களது காரில் கட்டி போட்டு கொண்டு வருவதாக தெரிவித்தான்.
மணி இரண்டு தாண்டியிருக்க சந்தோஷப்பட்டவனுக்கு, எதில் தனது இன்பத்தை பகிர்வதென்று தெரியாமல் அருகில் உள்ளவளை தான் கண்டான்.
தன் மெத்தையில் ஒருக்களித்து படுத்திருந்தவளின் மேனியை, அள்ளிக் கொள்ள நினைத்தவனாக, உறங்கியிருந்தவளை நெருங்கி, உறக்கத்திலிருந்தவளுக்கு கண், காது, மூக்கு, உதடு, கழுத்து, என்று முத்தங்களை வழங்கினான்.
அரை உறக்கத்தில் கைகளை மாலையாக கோர்த்த ஷ்ரத்தாவுக்கு தன்னை சத்ரியன் ஆள நினைப்பது தெரியாமல் இதழை தந்தவளாக இமை மூடியிருக்க, சத்ரியனின் கைகள் தானாக அவள் மேனியில் ஊர்ந்திடவும் தான் பட்டென இமைத்திறந்தாள்.
பேயை பார்த்தது போல, மிரண்டவளிடம், “எந்திரிச்சிட்டியா? ஐ நீட் யூ ஷ்ரத்தா” என்று முத்தத்தையே சுனாமி போல சூறையாடினான்.
கத்தவோ அழவோ கூடாதென்ற விதிமுறை வேறு நினைப்பில் வந்து தொலைக்க, தானாக வந்து நின்ற கோலமும் அவளை கொஞ்சம் நிதானமாக்கியது.
‘எல்லாம் எதிர்பார்த்தவையே, பயந்துவிடாதே ஷ்ரத்தா.. இதை ஏற்று வாழ பழகு’ என்று மனதிடம் கூறியவளுக்கு, மென்மையும் வன்மையும் தந்தவனாக ஷ்ரத்தாவுக்குள் புது பூகம்பத்தை நிகழ்த்தினான்.
மனமெங்கும் எந்த நொடி, எல்லாவிதமான எண்ணத்தை மறந்து அவனுடன் இணைந்தாலென்று அவளுக்கே தெரியாது. ஆனால் சத்ரியனோடு இரண்டற கலந்து, வாடி வதங்காத குறையுடன் மீண்டும் உறக்கத்திற்கே தள்ளியிருந்தான்.
அவளை ஒரு பொம்மை போல கட்டியணைத்து உறங்கவும் தான் சத்ரியனுக்கு இதுவரை இல்லாத உறக்கம் வந்தது. எத்தனை பேரை கூடி புணர்ந்து இருக்க, இன்றோ அதெல்லாம் தாண்டி ஒரு திருப்தி உண்டானது. அதை எண்ணி மகிழ்ந்தான்.
– தொடரும்
Today 34 episodes posted. Check it. And read it.

Omg. Intresting sid
Shratha konjam avasara patutalo yosichi panniyirundhurkalam🙄
ATHU THAN LOVE CHATHRIYAN UNAKUM ONUM ROMBA VAYASU AGALAYE APO ANTHA FEELINGS UNAKULLAUM IRUKUME ENA THA NIRAYA MODELLINGS KITTA KITTA NEE IRUNTHALUM SHRATHA VA PORUMAIYA THA HANDLE PANITU IRUKA ELLA VISHAYATHULAUM AVA UNA ATHI THERINJITA VANTHUTA VERA VALIUM ILLA IPO AVALUKU
தீ லீடர்…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 33)
போச்சு போ..! நல்லவன் மாதிரி இப்ப எதுவும் வேணாம்ன்னு சொன்னவுடனே, கொஞ்சம் சந்தோஷப்பட்டேன், ஆனால், அந்த சந்தோஷத்திற்கு ஆயுள் ரொம்ப குறைவுன்னு இதோ காட்டிட்டான் இல்ல. நினைச்சதை நடத்தி முடிச்சிட்டான். இனி இவ எங்கயிருந்து டாக்டருக்கு படிச்சு பட்டம் வாங்குறது, இல்ல அவன் தான் படிக்க விட்டுடுவானா ?
😴😴😴
CRVS (or) CRVS2797
Interesting ❤️❤️❤️