Skip to content
59 / 100 SEO Score

அத்தியாயம்–34

 

அதிகாலை பங்களாவின் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் வழியே சூரிய ஒளி மெதுவாக உள்ளே பரவ ஆரம்பித்திருந்தது.

 

வெளியே தோட்டத்தில் வேலைக்காரர்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர்.

 

ஆனால் அந்த பெரிய பங்களாவுக்குள் மட்டும் விசித்திரமான அமைதி.

 

சத்ரியன் அப்பொழுது தான் போதை தொளிந்து எழுந்தான். எழுந்ததும் முதல் வேலையாக மதுவை கண்ணாடி கிளாஸில் சரித்து மெதுவாக சுழற்றிக் கொண்டிருந்தான்.

 

ஷ்ரத்தா முனங்கலுடன் விழித்திறப்பதை கவனித்தான்.

சில நொடிகள் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை. பிறகே அருகிலிருந்த சுவர்கள், பெரிய அறை, அந்த பரந்த கட்டில், மெல்ல புகை மணம் வீசும் ஏசி அறை எல்லாம் கண்களில் பதிந்தது. தன்னை சுற்றி போர்வை இருப்பதையும் கவனித்தாள்.

சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தவளுக்கு நேற்றிரவு நடந்த அனைத்தும் நினைவுக்கு வந்தது.

 

முதலில் ‘தூங்கு’ என்று நல்லவனாக கூறிவிட்டு, பின்னர் ஆளை விழுங்கும் நாகம் போல தன்னை மொத்தமாய் ஆட்டி படைத்தவனை எண்ணினாள்.

 

ஒரிரு சமயம் அவனது முத்தங்கள் இனித்தது. பல்தடம் மேனியில் பதியும் போது சுகமாய் இருந்தது. அதெல்லாம் ரசித்து ஏற்றதாலோ என்னவோ அவனது மூர்க்கத்தனமான விளையாட்டில் அவனை சாடி எதுவும் பேசவில்லை.

குற்றம் சுமத்தவோ, அழவோ கூடாது. அப்படியிருந்தால் என் அருகே வராதே என்று தானே எச்சரித்தான்.

என்ன உடலெல்லாம் வலி வாட்டியது. மெதுவாக பல்லை கடித்து எழுந்து குளிக்க சென்றாள்.

 

அவனது பாத்டப்பில் சூடான வெந்நீரை வெதுவெதுப்பாக கலந்து இளைப்பாறினாள்.

 

ஒரு இருபது நிமிடம் நன்றாக குளித்து முடித்து கதவை தட்டி, “எனக்கு டிரஸ்” என்று கேட்கும் நேரம், “ஆல்ரெடி மெத்தையில இருக்கு. அங்கிருக்கற பாத்ரோப் போட்டுட்டு வெளியே வந்து மாத்து” என்றான்.‌

 

அவள் சுற்றும் முற்றும் பார்த்து குளித்ததும் ஈரத்தை உறிஞ்சும் உடையை அணிந்து வர கூறியதும் அதை எடுத்து அணிந்தாள்.

 

வெள்ளை நிறத்தில் பாத்ரோம் இடுப்பில் கட்டி முடிச்சிட்டு வெளியே வர, அங்கே வொய்ட் ஸ்கர்ட் பிங்க் டாப் உள்ளாடையுடன் இருந்தது.

 

உடை மாற்ற ஒரு தடுப்பு கொண்ட அறையும் அங்கே இருக்க மடமடவென மாற்றினாள்.

 

சத்ரியனும் அடுத்து குளிக்க சென்றான். அவனுமே இருபது நிமிடம் எடுத்துக் கொண்டான். பாத்டப்பில் இருந்த நேரம், அவன் மனம் ஷ்ரத்தாவையே எண்ணியது. நேற்றெல்லாம் அவன் எங்கு தீண்டினாலும் நெளிந்துக் கொண்டே மறுத்தபடி, நழுவ பார்த்தாள். ஆனால் தனது பிடி இரும்பாக இருக்க, ஒத்துழைப்பை நல்கினாள்‌.

 

அதுவே சத்ரியனுக்கு ஆச்சரியம். அடுத்து என்ன அவளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென எண்ணினான்.

 

தலையை துடைத்தபடி வெளியே வந்தவன் உடையை பகிரங்கமாக உடுத்தினான்.  ஷ்ரத்தா தான் மறுபுறம் திரும்பி கண்களை இறுக மூடினாள்.

 

உடை மாற்றியவன் அவளது அருகே வந்திருப்பதை அவனது நறுமணம் உணர வைக்க, “ரொம்ப நாளாச்சு வேட்டை ஆடி. பலவிதமான காயம் இருந்ததா.. சாரி. இந்த சங்கமத்தில் காயமில்லாம போகாது‌.” என்று சிரித்தவன், “உனக்கு போய் விவரிக்கறேன் பாரு. நீ டாக்டர் உனக்கு இதெல்லாம் பாடமா படிச்சிருக்கலாம்” என்று அவளை கூர்ந்தான்.

 

அவன் பேசியதற்கு எந்தவிதத்திலும் தடை பிறக்காமல், முன்னே வந்த ஷ்ரத்தாவோ “இன்னும் என்னை என்னிடம் எதிர்பார்த்து இருக்க? எங்கப்பாவை கொன்றவன் யாரு? சொல்லு…” என்று கண்ணீரை மறைத்து பதிலை எதிர்பார்த்து கேட்டாள்.

 

சத்ரியன் சிரிக்கவில்லை.

“இப்ப நான் சொன்னா… நீ என்ன செய்யப் போற?” என்றான்.

 

“என்னால முடிஞ்சதை செய்வேன். ஏன் என்னால எங்கப்பாவை கொன்றவங்களை அழிக்க முடியாதா?” என்றாள்‌.

 

“அதான் பிரச்சனை… பணப்பலத்தால் உன்னை விட பெரிய ஆளா இருந்தா?” என்று மெதுவாக முணுமுணுத்தவன் மீண்டும் மதுவை பருகினான்.

 

ஷ்ரத்தாவுக்கு கோபம் வந்தது.

“எல்லாத்தையும் பாதியில் சொல்லிட்டு சஸ்பென்ஸ் போடறது உனக்கு ஹாபியா?” சத்ரியன் அவளை பார்த்தான்.

 

“இல்ல… எதுவும் பாதியில் வச்சிக்கற பழக்கம் இல்லை.” என்றான். அவள் புரியாமல் பார்த்தாள். அவன் விளக்கவில்லை.

 

அங்கும் இங்கும் நடந்தவனிடம், “எனக்கு ஏதாவதுன்னா நீ இருக்கியே. அப்படியிருக்கும் உன் துணையோடு, நான் எங்கப்பாவை கொன்றவனை கொல்ல முடியாதா?” என்றாள்.

 

சத்ரியன் புருவம் உயர்ந்தது. “உனக்கு ஏதாவது என்றால் நான் பார்த்துப்பேன்னு, மனக்கோட்டை கட்டாத. எனக்கு தேவையான போதையை நான் ரொம்ப நாளுக்கு பிறகு அடைந்த சந்தோஷத்தில மட்டும் தான் இருக்கேன். மத்தபடி உனக்கு பேவரா ஏதாவது செய்வேன்னு கனவிலையும் நினைக்காத” என்றான்.

 

ஷ்ரத்தா அந்த ஏமாற்றத்தை தாங்கியவளாக, “ஓகே… நீ கேட்டது போல நான் என்னை உனக்கு தந்துட்டேன். அதுவும் நீ கேட்ட மாதிரி அழுது அடம் பிடிக்காம, உனக்கு கோ-அப்ரேட் பண்ணி. இப்ப அப்பாவை கொன்றது யார்னு சொல்லு.” என்றாள்.

 

அவனுக்கு மதுவை தொண்டையில் தணித்தவன், அவளுக்கு அதற்கு பதிலாக காபி கோப்பையை வரவழைத்தான். அதை எடுத்து பருகிய படி சூடாக குடித்தாள்.

 

அவளுக்கு வயிறும் காய்ந்திருந்தது. இரவில் அவனது வேட்டைக்கு இரையாகியதால் அதீத பசி அவளுக்கும் இருந்தது.

 

சத்ரியனை சுற்றி பாடிகார்ட்ஸ் கூடவே யோகேஷ் அங்கேயே நின்றிருந்தான்.

 

யோகேஷ் வந்துட்டதா இருந்தா அப்ப அப்பாவை கொன்றவனும் வந்திருக்கணுமே. இல்லை கொண்ணுட்டியா?” என்று கேட்டாள்.

 

“ஏன் எதுக்குன்னு உனக்கு அவன் வாயால சொல்லாவச்சி நீ அதை கேட்காம எப்படி கொல்வேன். உனக்கு காரணம் தெரியணுமே” என்று ஹாலில் நடந்து கீழே வந்தார்கள்.

சத்ரியன் கைகாட்ட, ஷ்ரத்தா பார்வை அங்கே திரும்பியது.

உள்ளே யோகேஷின் ஆட்கள் வந்தனர். அவர்கள் இரண்டு மனிதர்களை பிடித்து இழுத்து வந்தார்கள்.

ஒருவன் நடுத்தர வயது.

சட்டை கசங்கி இருந்தது.

முகத்தில் வீக்கம்.

மற்றொருவன் இளைஞன்.

கைகள் கட்டப்பட்டிருந்தது.

 

முகத்தில் காயங்கள் இருக்க,

அவர்களை பார்த்த ஷ்ரத்தா முதலில் புரியாமல் நின்றாள்.

 

அடுத்த நொடி கண்கள் பெரிதானது. “சார்.?” என்று அவளது உதடு தானாக அசைந்தது.

“ஆதிகேசவ் சார்…?” என்று அவளால் நம்ப முடியவில்லை.

 

ஆதிகேசவ் மெடிக்கல் காலேஜில், ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேட்டர்.

பலமுறை பார்த்திருக்கின்றாள்.

பலமுறை பேசியிருக்கின்றாள்.

அவரேதான். ஷ்ரத்தா அதிர்ச்சியில் இரண்டு அடி முன்னே வந்தாள்.

 

“இ…இவரா?” அவள் சத்ரியனை நம்பாதவகையில் பார்த்தாள்.

 

“இவர் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேட் ஆச்சே…” குரல் உடைந்தது “இவர் ஏன் எங்கப்பாவை கொல்லணும்? ஒருவேளை என்னை கொல்ல விஷம் வச்சி நிரோஷ் பாதிக்கப்பட்டானே.. அதுக்கு உதவியவரா” என்று சத்ரியனை கேட்க, “அடிங்க.. உங்கப்பனை கொன்னவன்னு நிறுத்தறேன். உன்னை கொல்ல முயன்றவனுக்கு உதவியவனானு கேட்கற‌” என்று அதட்டினான்.

 

அவளது பார்வை நம்பாமல் மற்றொரு பையன் மீதும் விழுந்தது.

ஷ்ரத்தா மூச்சு வாங்கினாள். “எதுக்காக எங்கப்பாவையும் என்னையும் கொல்ல முயற்சி பண்ணினிங்க. எனக்கு புரியலை சொல்லுங்க” என்று அழுதாள்.

 

ஆதிகேசவனிடம் இருந்து பதில் வரவில்லை. ‘தடாக்’ யோகேஷின் காலடி நேராக ஆதிகேசவின் முழங்காலில் இறங்கியது.

ஆதிகேசவ் வலியோடு கீழே விழுந்தான்.

“பாஸ் முன்னாடி சும்மா நிற்காத கேட்கறாங்கள்ல சொல்லு.” என்றான்.‌

 

ஆதிகேசவ் எச்சியை விழுங்கினான். “நா… நான் வேண்டும்னு சத்ரியன் சார்” என்று பொய்யாய் பயப்பட, யோகேஷ் மீண்டும் முன்னே வந்தான்.

“உண்மையை சொல்லு. உன் நாடகத்தை பார்க்க சத்ரியன் பாஸ் இங்க உட்காரலை.” என்று தலையில் தட்டினான்.

 

“மெ..மெடிக்கல் சீட்… அதுக்காக தான் கொன்றேன்” என்றார்.

 

ஷ்ரத்தா புருவம் சுருங்கியது.

ஆதிகேசவ் நடுங்கினான்.

 

“என் உறவுக்கார பையன் நிர்மலுக்கு.” என்று ஆரம்பித்து அருகே இருந்த இளைஞனை காட்டினார். “சீட் வாங்கித் தருவதாக சொல்லி… பணம் வாங்கினேன்.” என்றார்.

 

சத்ரியனோ கால் மேல் கால் போட்டு “எவ்வளவு?” என்று இந்த முறை கேட்டான்.

 

ஆதிகேசவ் கீழே பார்த்தான்.

“ஒரு கோடியே இருபது லட்சம்…” என்றதும் ஷ்ரத்தா அதிர்ச்சியில் நின்றாள்.

 

ஆதிகேசவ் தொடர்ந்தான். “எப்பவுமே மெடிக்கல் காலேஜ் என்றால் மெடிக்கல் சீட்டுக்கு மதிப்பெண்ணை வச்சி வர்ற அட்மிஷனை விட, அட்மிஷனுக்கு மேனேஜ்மென்ட் கோட்டால சீட் அலார்ட் செய்து ஒவ்வொரு சீட்டையும் பலமடங்கு பணம் தந்து தான் விற்பாங்க.

நான் ஒரு ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேட்டர் என்பதால் என் உறவுக்கார பையனான நிர்மலுக்கு சீட் கன்பார்ம் செய்தேன். உறவுக்கார பையனாவே இருந்தாலும், ஒரு கோடியே இருபது லட்சம் பணத்துல முக்கால்வாசி வாங்கிட்டு சீட்டை தர எல்லாம் தயாரா இருந்தது. ஆனா லாஸ்ட் மோமெண்ட்ல, உங்க பேரு வந்தது… அதுவும் சத்ரியன் என்ற பெயரில் ஆள்பலம் அதிகார பலத்துக்கும்  மட்டுமே இந்த சீட்  கொடுக்கப்பட்டது. ஆல்ரெடி விஐபி சீட்டா மேனேஜ்மெண்ட் ஒதுக்கியதில் சீட் வந்தப்பின் உன்னோட பெயர் வந்ததும் நிர்மல் பெயரை அப்படியே நிறுத்தி வச்சிட்டாங்க.

(ஹாஸ்பிடல் அட்மினிஸ்ரேட்) என்னோட சேர்ந்து அட்மினிஸ்ரேட் ஆபிஸர், சீஃப் அட்மினிஸ்ரேட், அட்மிஷன் ஆபிஸர், டேரக்ட் அட்மிஷன் ப்ராஸஸ் ஆபிஸர், அக்கடமிக் கோ-ஆர்டினேட்டர் எல்லாரும் உன் பெயரை கேட்டதும், நிர்மல் எவ்ளோ படத்தை தந்தாலும் ரிட்டர்ன் தந்துடுங்க, சத்ரியன் மாதிரி கிங்பின் கூட்டத்துடன் மோதல்கள் வேண்டாம்னு சொன்னாங்க.

எனக்கு மனசு கேட்கலை. நான் நிர்மலிடம் பணத்தை வாங்கியதும் இல்லாம அதை பீச்ஹவுஸ் வாங்க கொடுத்துட்டேன். என்னால பணத்தை புரட்ட முடியலை. இதுல லாயர் திவாகர் ஷ்ரத்தா டாக்குமெண்ட்ஸ் எல்லாம் தந்து, சீட் எல்லாம் பிக்ஸ் பண்ணிட்டார்.  என்னால எதுவும் செய்ய முடியலை…” என்றார்.

 

ஷ்ரத்தாவுக்கு மூச்சு முட்டியது. “அதுக்காக.. எங்கப்பாவை கொன்னியா?” ஆதிகேசவ் கண்களை மூடினான்.

 

“ஆமா… லாயர் திவாகர் தனியாள். நீதி நேர்மைனு பேசுபவர்னு கேள்விப்பட்டேன். அப்படியிருந்தும், அந்த நேரம் சத்ரியன் கேஸை வாதாடி சத்ரியனை வெளியே எடுத்தவர்.  லாயர் திவாகரை சாகடிச்சா அந்த பழி சத்ரியனையும் அவனை சார்ந்த எதிரிகளை சேரும்னு நினைச்சேன். அதனால ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸ் வண்டியை வச்சி தான் திவாகரை மோத வச்சி அவரை பாலத்தில இருந்து கீழே வீழ்ந்து இடித்து, அவரை சாகடிச்சேன். அவர் இறந்துட்டா ஷ்ரத்தா வீட்டோட ஒடிந்து போய் மூலையில் இருப்பா. எப்படியும் சீட் காலியானதும் நிர்மலை எல்லா டாக்குமெண்ட்ஸை தந்து உள்ள நுழைச்சிடலாம்னு இருந்தேன்.

ஆனா திவாகர் இறந்தப்பிறகும் நீ காலேஜிக்கு அடியெடுத்து வச்சிட்ட.” என்றார்.

ஷ்ர்ததா சில விநாடிகள் பேசவில்லை. இத்தனை நாள் சத்ரியனால் தான் தந்தை உயிரிழந்திருக்க கூடுமென அவனை மூக்கு முட்ட முறைத்து, சாபம் தந்து, அவனை ஏகப்பட்ட வார்த்தையால் திட்டியிருக்கின்றாள். இன்று தந்தை இறப்பு தனக்காக நிகழ்ந்தது என்றதும் உடைந்துவிட்டாள். அவள் மருத்துவராக ஆசைப்பட்டது குற்றமா? அந்த சீட் வாங்கியதற்கு தந்தையை உயிரோடு மாய்த்திட வைத்துவிட்டதே என்று துவண்டாள்.

 

“அழறதை நிறுத்தறியா? யோகேஷ் மெத்தமா பேசவை” என்று மதுவை குடித்து முடிக்க, பிறகு மெதுவாக,

“உன்னை கொல்ல ரிதுராஜ் என்றவனோடு பேரம் பேச போனேன். ஆனா அவன் ஏற்கனவே சத்ரியன் அந்த பொண்ணை ரசித்து பார்க்கறான். அவன் ஆசைப்பட்ட பொண்ணு இருக்க கூடாது சாகடிங்கனு உன் போட்டோவை தான் அங்கிருந்த ஆட்களுக்கு வீசியெறிந்தான்.

 

உன் போட்டோ பார்த்ததும் நான் அப்படியே பயத்துல திரும்பி வந்ததா நடிச்சிட்டு வந்துட்டேன். உன் வீட்டுக்கு பாலோவ் பண்ணிட்டு வாசலில் இருந்தேன். ரிதுராஜ் ஆட்கள் உன்னை கொல்ல வந்தாங்க. ஆனா நீ ஓடின. உனக்கிருந்த ஒரே அப்பாவையுமா இழந்துட்டு எங்க போறானு பார்த்தா நிஜமாவே சத்ரியன் இருக்குமிடம் போனதும் பயம் வந்துடுச்சு‌.

அதனால உன்னை கொல்ல முயற்சி செய்யலை. அதோட உன்னை கொன்றா யார் கொன்றா என்ற தகவலும் கொன்றவனை சத்ரியன் சாகடிப்பான்னு தெரியவும் நிதானமானன்.” என்று பேசவும், ஷ்ரத்தா மனதில், வினோத் அண்ணா மட்டும் அப்ப சத்ரியன் இருப்பிடம் சொல்லாம இருந்தா நான் அன்னிக்கே இறந்திருப்பேன். வினோத் அண்ணா அவருக்காக ஏதோ செய்தார் என்றாலும் என் உயிர் அந்த நிமிடம் சத்ரியன் இருப்பிடம் போனதுக்கு அவர் காரணம். அந்த நேரம் என் உயிரை காப்பாற்றியதில் வினோத் அண்ணாவுக்கும் பங்கு இருக்கு.’ என்று புரிந்தது‌.

 

இந்த முறை அருகே இருந்த இளைஞன் நிர்மல் பேசினான்.

“ஆதிகேசவ் மாமா சும்மா விட்டதுல எனக்கு கோபமாச்சு. ஏன்னா.. எங்களோட பணமும் திரும்ப வரலை. மெடிக்கல் சீட்டும் வரலை.” அவன் கண்களில் இன்னமும் அந்த கோபம் மின்னியது.

 

“அதனால எனக்கு கிடைக்காத சீட்ல… நீ உயிரோட இருக்க கூடாதுனு தோணிச்சு.” ஷ்ரத்தா உறைந்தாள் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள். தனக்கு கிடைக்காதவை மற்றவருக்கு கிடைத்தால் இப்படியா கொடிய எண்ணத்துடன் சுத்துவது.

 

நிர்மல் தொடர்ந்தான். “முதல் தடவை முடியலைனு ஆதிகேசவ் மாமா சொன்னப்பிறகு நீ பாட்டுக்கு காலேஜ் வந்த, அந்த நேரம் ஜான் கூட ராகிங் நடந்தது. அப்ப தான் ஜானை அடிச்சு துவைச்சி சத்ரியன் சார் வந்தார். ஆதிகேசவ் சார் மொத்தமா என்னை காலேஜ் கேம்பஸுக்குள்ள கூட வராதனு சொல்லிட்டார். பணத்தை எப்படியாவது புரட்டறேன்னு என்னை தணிக்க முயன்றார்.

என்னால முடியலை… சாதாரண லாயர் பொண்ணு, ஆப்ட்ரால் அவனோட படுத்து இந்த சீட்டை வாங்கி, இப்ப சத்ரியனோட ஆசை நாயகியா இருக்க. உன்னோட வசதி பார்த்து எரிச்சலானது.

எப்ப பார்த்தாலும் உன்னை சுற்றி ஆளுங்க. அதுக்கு மேல… விட மனசில்லை. அதனால நானோ கன்னை கொண்டு வந்து உன்னை சுட நினைச்சேன். நான் கன் ஃபயர் பண்ண அப்ப தான் கிளாஸுக்கு போயிட்டு இருந்த சமயம்.

நீ அன்னிக்கு ஓட்டு போட்டுட்டு கையில மையை ரசிச்சிட்டு நடந்து போன. அந்த நேரம் தூப்பாக்கியை எடுத்து சுட முயன்றேன். சத்ரியன் சார் உனக்காக உன்னை காப்பாத்தவும், அவர் தனியா வந்தது போல தோன்றவும், அவரை சூட் பண்ணிட்டேன். உனக்கு வச்ச குறி தான் தவறி சத்ரியனை சுட்டு முடிச்சேன்.” என்றதும், ஷ்ரத்தா சத்ரியன் வயிற்றை கவனித்தாள். இன்றும் மேலாடை இன்றி கவர்ச்சிகரமாக தான் நின்றியிருந்தான்.

துப்பாக்கி இறங்கிய இடம் இன்னமும் பளிச்சிட்டு தெரிய ‘நான் உன் மேனியை துளையிட வந்தேன். இந்த சத்ரியன் உன்னை காப்பாற்றிவிட்டான்’ என்று அந்த துப்பாக்கியால் உண்டான காயம் கூட கூறியது போல தோன்றியது.

 

“சத்ரியன் சார் அதற்கு பிறகு வேட்டையாட ஆரம்பிச்சதும் பயந்துட்டோம். அவர் கூட இருந்தவங்களில் அவர் கவனம் போச்சே தவிர, மெடிக்கல் சீட் இஸ்ஸுவால உனக்கு குறிவைக்கின்ற மரணம்னு அவர் யோசிக்கலை.

ஆனா அவரோட எதிரிகளில் யாரோ ஒருத்தர் உன்னை டார்கெட் பண்ணுவதா நினைச்சார். உன்னை பாதுகாத்தார்.

அதோட ஆதிகேசவ் மாமாவும் என்னை மறந்துட்டார். என்னிடம் வாங்கிய பணத்தை நான் மறக்க முடியுமா? அதனால தினம் தினம் தொல்லை செய்தேன். அவர் அந்த நேரம் கையில இருந்த லட்சத்தை தருவதா சொல்வார். அந்த ரீஸனை வச்சி காலேஜிக்கு வருவேன்.

 

அப்ப தான் காலேஜிக்கு கூட உன்னை விடலை. அப்பறம் நீயா வரவும், உன் பின்னால இவரும்(யோகேஷ்) இன்னும் சில பாடிகாட்ஸும் வருவிங்க.

 

நீ கேன்டீன்ல அடிக்கடி என்ன சாப்பிடுவனு பார்த்தேன். ஆதிகேசவ் மாமா என்பதால் கேன்டீன்ல நுழைந்து, அதுல பாய்ஸன் கலந்தேன். நீ பாடிகார்ட் சாப்பிட்ட பிறகு நீ சாப்பிடுவதை பிடிக்காம உன் பிரெண்ட் கனியிடம் அன்னிக்கு புட் ஆர்டர் செய்து மாத்திக்கலாம்னு பேசியதை கேட்டு நீ சாப்பிட ரெடியானதில் கலந்தேன். அந்த நேரம் நீ சடனா போனதும் ஆர்டர் கேன்சல் ஆக, அந்த நிரோஷ் பைத்தியம் நீ ஆர்டர் தந்ததுனு வாங்கி சாப்பிட்டான். அப்ப தான் அகைன் உன்னை கொல்ல முயற்சி நடப்பதை நீயா உணர ஆரம்பிச்ச. சத்ரியன் சார் சொல்லுக்கு பயந்து காலேஜ் வரலை. நானும் கொஞ்ச நாள் காத்திருக்க முடிவெடுத்தேன். ஆனா என்னை இப்ப கண்டுப்பிடிச்சிட்டாங்க. மாட்டிக்கிட்டேன்.” என்று அழுதான்.

 

ஆதிகேசவோ “நீ மாட்டி என்னையும் மாட்டிட்ட. இடியட்.” என்று அவனை திட்டினார்.

 

ஷ்ரத்தா மெதுவாக சத்ரியனை திரும்பி பார்த்தாள். சத்ரியன் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

இத்தனை நாள் இவன் தன் வாழ்வில் வந்ததால் தான் தனக்கு இத்தனை அபத்தம் நிகழ்வதாக எண்ணி இவனை எத்தனை முறை திட்டி தீர்த்து, கொல்ல நினைத்தாள்.

 

ஆனால் தனது மருத்துவம் படிக்கும் ஆசையும், தந்தை தனக்கு அதை வாங்கி தந்த நொடியிலிருந்து தான் மரணம் அவரை வேட்டையாடி உள்ளது. அத்துடன் தன்னையும் துரத்தியிருக்கின்றது. எத்தனையே படத்தில் கேபிடேஷன் ஃபீ (Capitation Fee),  சீட் புரோக்கரேஜ் / சீட் டீலிங், சீட் பிளாக்கிங் (Seat Blocking),

பேக்டோர் அட்மிஷன் (Backdoor Admission), விதிமுறைக்கு வெளியே admission‌ NRI Quota Scam என்றெல்லாம் கேள்விப்பட்டு பார்த்திருக்க, தானே அது போல ஒன்றில் உயிரை பணயம் வைத்ததை கண்டு செய்வதறியாது நின்றாள்.

 

சத்ரியன் இதில் தன்னை பாதுக்காத்தவனே. அதில் இம்மியும் சந்தேகமின்றி போனது‌.

 

சில விநாடிகள் கழித்து  எழுந்தான்.

மெதுவாக ஷ்ரத்தா அருகே வந்தான். “இப்ப தெரிஞ்சுதா?” என்றான். ஷ்ரத்தாவால் பதில் சொல்ல முடியவில்லை.

அவள் கண்கள் மட்டும் நிரம்ப ஆரம்பித்தது. அந்த கண்ணீரை பார்த்த சத்ரியன் புருவம் சுருக்கினான்.

 

“ஏய்.” என்று அழைத்ததும், அவள் தலையை உயர்த்தினாள்.

“அழாத.” அவன் குரல் வழக்கத்தை விட மெதுவாக இருந்தது. “நீ கேட்ட உண்மை கிடைச்சிருச்சு.” என்றான்.‌

 

அதற்குள் ஆதிகேசவ் கால்கள் நடுங்க ஆரம்

பித்தது. ஏனெனில்…

இப்போதுதான் ஷ்ரத்தாவுக்கு உண்மை தெரிந்தது. சத்ரியன் இன்னும் அவர்களை என்ன செய்யப் போகிறான் என்ற அச்சம் உண்டல்லவா?!

 

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்.

 

5 thoughts on “The leader-34”

  1. Super sis nice epi 👍👌😍 atlast unmai therinjiduchu oru seat kaga evlo pannuvaangala😳🙄 shratha eppo eppdi eruka pora parpom 🤔🧐

  2. SUPER CHATHRIYAN IRUNTHAEDATHULA irunthe eppadi endu peraium laga kandu pidichita oru seat kaga evlo panam athu kedaikalanu ippadi kolla thudikiranga ithuku chathriyane paravala polaye aduthu shratha and chathriyan seruvangala avan romba porumaiya irukane

  3. தீ லீடர்…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 34)

    அடப்பாவிங்களா…! இந்த காலேஜ் சீட்டுக்காக என்னென்ன கோல்மால், எத்தனையெத்தனை பெரிய பெரிய ஸ்கேம் எல்லாம் பண்ணியிருக்காங்க. நேர்மையா கிடைச்சா அதோட வால்யூவே தனித்தான். பட்.. இப்படி அடுத்தவங்களோட சின்சியாரிட்டில, நேர்மையா படிச்ச படிப்புல கையை வைச்சா, இப்படித்தான் உயிர் பலி வாங்கும் போல.

    😴😴😴
    CRVS (or) CRVS2797

  4. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super interesting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!