அத்தியாயம்-38
வினோத் அந்த நாள் வழக்கத்தை விட தாமதமாக திரும்பினான். அவன் உள்ளே நுழைந்ததும், சத்ரியன் சோபாவில் சாய்ந்தபடி புகையை இழுத்துக் கொண்டிருந்தான்.
“பாஸ்…” என்று யோகேஷ் கூப்பிட வழக்கம் போல் தலையசைத்தான்.
“இன்று தொழில் விஷயமா வெளியே போன வினோத் லேட்டா வர்றார்.” என்று கவனித்ததை தலைமையில் இருப்பவனிடம் தெரிவிக்க, “ம்ம்ம்.. கவனிச்சேன்.” என்றான் சத்ரியன். அவன் கிளாஸை சுழற்றியபடி யோகேஷை பார்த்து “எதிரிக்கு எதிரி நண்பன்னு ஒரு பார்முலா இருக்குல, வினோத் அதையே யூஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கான். ரிதுராஜுடன் நேரம் செலவழிச்சிருக்கான்.” என்று கூறினான் சத்ரியன்.
யோகேஷின் இதயம் ஒரு நொடி நின்றது. சத்ரியன் இங்கிருந்தபடி அனைத்தையும் அறிவதை வியந்தான். ‘ஆமா.. எங்க இருந்தாலும் அங்க நேரடி தொலைக்காட்சி பாஸ் ரூமுக்கே வந்து சேரும்.’ என்று தேற்றிக் கொண்டான்.
வினோத் வருவதை பார்த்தபடி, சத்ரியன் புகையை வெளியேற்றினான். “இவன் ஏன் என்னை கொல்ல நெருங்கறான்னு தான் இன்னும் புரியலை.” அவனது பார்வை ஒரு நொடி ஷ்ரத்தாவை தொட்டது. ”இவளும் இன்னமும் எதுவும் சொல்லலை.” என்று மெதுவாக சிரித்தவன், வினோத் பின்னால் புதிய முகத்தை கண்டு, “பரவாயில்ல ஆட்டம் நெருக்கத்துல வந்தா அதிரடியா மாறலாம்.” என்றவன் அவர்களை பார்த்ததும் சத்ரியனின் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது.
சத்ரியனுக்கு ‘ஒன்று கொல்ல முயற்சி செய். இல்லை என்னை விட்டு ஓடிசெல்.’ என்ற ரீதியில் இருந்தான். அதனால் வினோத்தின் இந்த புதிய ஆட்களுடன், வருகையை எதிர்பார்த்தான்.
வினோத் வந்ததும் தொழில் ரீதியாக யாரை பார்த்தான் பேசினான் என்ற விவரத்தை எல்லாம் ஒன்று விடாமல் ஒப்பித்தான்.
யோகேஷ் வினோத்திடம் “ஒன்ஹவர் உன்னை ஆளைக்காணோம் வினோத்” என்றதும், “ரிதுராஜ் கூட தான் பேசினேன். ஏதோ புது டீலிங்ல அதிகப்படியா விசாரணை போகுதுனு சத்ரியன் பாஸிடம் உதவி கேட்டார்” என்று கூறினான். எப்படியும் சத்ரியனுக்கு பி.ஏ போல இருந்ததால் சத்ரியன் கணிப்பதற்கு ஏற்ப உண்மையையும் உரைத்தான். அவன் உதவி கேட்டானா இல்லை நீயா என்றது போல பார்த்து பெரிதுப்படுத்தவில்லை
தன் இடத்தில் புதிதாக மூவர் வினோத் மூலமாக வந்திருக்க, எப்பொழுது வேண்டுமென்றாலும் புயல் வீச துவங்குமென காத்திருக்க, அடுத்த சில நாட்களில் ஷ்ரத்தாவே மாற ஆரம்பித்தாள்.
காலையில் அவனுக்கு பிடித்த உணவை தனியாக பார்த்து பார்த்து அவள் கையால் சமைத்தாள். சத்ரியன் சாப்பிடாமல் விட்டால் உரிமையாக கோபப்பட்டாள்.
தற்போது துப்பாக்கி தோட்டா எல்லாம் சரியானதால் அவனை கட்டிக் கொண்டு சாப்பிட வற்புறுத்தினாள்.
இரவு தாமதமாக வந்தால் காத்திருந்தாள். இதுவரை அவனை தவிர்த்து நின்ற பெண், இப்போது அவனை சுத்திசுத்தி கவனிக்க ஆரம்பித்திருந்தாள்.
அது சாதாரண மனிதனுக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கும். ஆனால் சத்ரியன் சாதாரண மனிதன் இல்லையே. அவனுக்கு ஒவ்வொரு மாற்றமும் சந்தேகத்தை கொடுத்தது.
ரிதுராஜ் கூறிய சந்தேக விதை. மெதுவாக வளருமென்று காத்திருக்க, சத்ரியனுக்கு அந்த துளி சந்தேகமே உள்ளிருக்கும் மிருகக்தை தட்டி எழுப்பியது.
ஒருபக்கம் வினோத் புதிய முகங்களை கூட்டி வருகிறான்.
மறுபக்கம் ஷ்ரத்தா புதிதாக நெருங்குகிறாள். இரண்டையும் அவன் அமைதியாக மனதில் பதிவு செய்து கொண்டிருந்தான்.
ஒரு வாரம் தாண்டியிருக்க, ஷ்ரத்தா அவனது மார்பில் தலையை வைத்திருந்தாள்.
சத்ரியன் அமைதியாக இருந்தான். அவளோ அவனது கன்னத்தை தொட்டு, “என்ன யோசிக்கற?” என்றாள் சிறுப்பிள்ளையாய்.
இப்பொழுது எல்லாம் சத்ரியனிடம் குழந்தை போல கொஞ்சி பேசி உரிமை கொள்வது ஷ்ரத்தா இயல்பாக மாறியிருந்தது.
சத்ரியனிடம் பதில் இல்லை.
“என்னை பாரு…” என்றவள் அவனது முகத்தை திருப்பினாள். அவனோ ‘பச்’ என்று ‘தான் எண்ணுவது சரியா தவறா?’ என்று ஆராய்வதில் மூழ்கியிருந்தான்.
ஷ்ரத்தாவோ நேர காலம் புரியாமல் “இன்னிக்கு முழுக்க என்னை அவாய்ட் பண்ணிட்டே இருக்க சத்ரியா” என்று ஒன்றினாள்.
அவன் இன்னும் அமைதியாக இருந்தான். அருகே விலகி விடவும், ஷ்ரத்தா சிரித்தாள்.
“ஓ… கோபமா இருக்கியா?” என்று கேட்டபடி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். “இங்க ஒன்னு…” மறுபக்கம் முத்தமிட்டாள்.
“இங்க தரல.” என்று நெற்றியை காட்ட கூறி குழந்தை போல உதட்டை பிதுக்கினாள்.
சத்ரியன் அவளை பார்த்தான்.
அந்த பார்வையில் காதல் இல்லை. ஆராய்ச்சி மட்டுமே அதிகப்பட்சமாக இருந்தது. ஷ்ரத்தா சற்று தடுமாறினாள்.
“என்ன?” என்று கேட்டாள்.
சத்ரியன் ஒன்றுமில்லை என்று தலையாட்டிவிட்டு, கொஞ்ச
நேரத்தில் திடீரென எழுந்து அமர்ந்தான். புகைப்பெட்டியை எடுத்து ஒன்றை பற்றவைத்தான். ஒரு நீண்ட இழுப்பு பிறகு அவளை பார்த்தான். அவனால் அவள் மீது சந்தேகத்துடன் நேசம் வைக்க முடியவில்லை. அதனால்.. “ஏன்டி நடிக்கற?” என்றான்.
ஷ்ரத்தாவின் முகம் உறைந்தது.
“என்ன?” என்று புரியாமல் நின்றாள். “ஏன் நடிக்கறனு கேட்டேன்.” அவள் மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.
“நான் நடிக்கலையே” என்றவள், தனக்கென இனி யாருமில்லாத உண்மை ஏற்று சத்ரியனை விரும்பியவள், இவனது நேசத்தை பெற பூனைக்குட்டி போலசுற்றி வர, இவனுக்கு தன் நேசம் நடிப்பாக தெரிகின்றதா என்று துவண்டாள். “பொய்.” சத்ரியனின் குரல் அனல் அடித்தது. “முன்னாடி என்னை பார்க்கவே வெறுத்த. இப்ப திடீர்னு அக்கறை. அன்னிக்கு கேட்டதுக்கு உங்கப்பாவை நான் கொல்லலை என்றதாலையும், உன்னை காப்பாற்றியதாலையும் கோபம் வெறுப்பு போயிடுச்சுனு சொன்ன.
ஆனா சமீபகாலமா திடீர்னு திடீர்னு உரிமையா பேசற. முத்தம் வைக்கற, கையை பிடிக்கற கட்டி பிடிக்கற. என்னை முட்டாள்னு நினைச்சியா? இங்க வந்தப்ப ஹாஸ்டல் போறேன், என் வீட்டுக்கு போறேன்னு பிதற்றுவ.” என்று கர்ஜித்தான்.
“சத்ரியன்…” என்று மெதுவாக உச்சரித்தாள். “யாரை காப்பாத்தடி இதெல்லாம்?” அவன் குரல் கூர்மையானது.
“யாருக்காக என்னோட க்ளோஸா மூவ் ஆகற? படுக்கையை பகிருற… என் எதிரியோட கைகோர்த்திருக்கியா? இல்லை துரோகியோட கைகோர்த்து இருக்கியா சொல்லுடி.” என்றதும் ஷ்ரத்தாவின் கண்கள் அதிர்ந்தது.
“நான் உன்னிடம் தான் கைகோர்க்க ஆசைப்பட்டேன். எஸ் உன்னோட படுக்கையை பகிருறேன். அதுக்காக உன்னோட எதிரி, துரோகி யாருனே எனக்கு தெரியாது அப்படியிருக்க கைகோர்க்க எனக்கு அவசியமில்லை” என்று வெடித்து அழுதாள்.
சத்ரியன் அவள் விழியை நேரிடையாக பார்த்து, “அப்படின்னா.. நட்பா இருக்கியா? சொல்லு என்னை கொல்ல யாராவது முயற்சி செய்தா அவங்களோட நீ நட்பா இருப்ப தானே” என்றான்.
ஷ்ரத்தாவின் உதடுகள் திறந்தது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை. அவளது அமைதியே பதிலாக மாறியது. ஏற்கனவே வினோத் சத்ரியனின் துரோகியா மாறி சத்ரியனை கொல்ல முற்படுவதை, அறிந்தும் சத்ரியனிடம் கூறாமல் இன்னமும் நட்பாக அல்லவா இருக்கின்றாள். அது சத்ரியனுக்கு எப்படியோ தெரிந்திருக்குமோ? சத்ரியன் நின்றயிடத்தில் எதிரியை வெட்ட காய் நகர்த்தும் பண்புக் கொண்டவன். அதனால் கூடவே இருக்கும் வினோத் காய் நகர்த்துவதை அறியாதவனா?
சத்ரியன் சிரித்தான். அந்த சிரிப்பில் வலி இருந்தது. “தட்ஸ் இட்… தட்ஸ் இட்..” என்றவன் மெதுவாக தலையசைத்தான். இனி எதுவும் கேட்க வேண்டியதில்லை என்பது போல திரும்பினான்.
“சத்ரியன்…” ஷ்ரத்தா அழைத்தாள். அவன் நிற்கவில்லை. “சத்ரியன்… நான் சொல்றதை கேளு…” என்று
அவன் கதவை திறந்தான்.
“சத்ரியன்..” என்று பின்னாலே வந்தவளிடம், “என் உடல் தேவைக்கு.. இன்னிக்கு நீ வேண்டாம்.” அவ்வளவுதான் சொன்னான்.
அடுத்த நொடி கதவு மூடியது.
ஷ்ரத்தா தனியாக அவள் அறையில் நின்றாள். சத்ரியன் அவனது அறைக்கு சென்று தன்னை தணிக்க இயலாத வகையில் சினத்தை கொண்டான். எங்கே அங்கிருந்தால் ஷ்ரத்தாவை தன் கையால் கொன்று தீர்த்திடுவோமோ என்று கூட தோன்றியது. அதனாலேயே அவனது அறைக்கு வந்துவிட்டான்.
ஷ்ர்ததா அறை முழுக்க அமைதி. சில நிமிடங்களுக்கு முன்பு வரை அவனது வாசம் நிரம்பியிருந்த அறை… இப்போது வெறுமையாக தோன்றியது. முதல் முறையாக… சத்ரியன் தன்னை விட்டு விலகிப் போய்விட்டானோ என்ற பயம் அவள் மனதில் எழுந்தது. இதில் அவனது உடல் தேவைக்கு வேண்டாமென்று கூறியும், வெட்கம் கெட்டு, நொடியும் தாமதிக்காமல் கண்ணீருடன் ஸ்கர்ட் தடுக்கவும் பொருட்படுத்தாது, அவனது அறைக்கு ஓடினாள்.
அவன் இரும்பு மரமாக நிற்க, அவனை கட்டியணைத்து, “ஏன் என்னை இப்படி காயப்படுத்தற சத்ரியா…. எ..எ..எனக்கு நடிக்க தெரியாது. உன்னை பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லற தைரியம் எனக்கு இருக்கு.
உன்னை கொல்லணும்னா அதையும் வெளிப்படையா பேச என்னால முடியும். அப்படியிருக்க உன்னை கொல்ல நான் யாரோட கூட்டு முயற்சி செய்வேன்னு நினைக்கற?
நீ எனக்கு தனியிடம் தந்திருப்பதா நினைச்சேன். அப்படியில்லையா? என்னை உன்னிடம் தினம் தினம் இழக்கறேன். ஒரு பொண்ணு விருப்பமில்லாம இழக்க முடியுமா சத்ரியன். என்னை கீழ்த்தரமா உடல் தேவைக்கு யூஸ் பண்ணுவதா சொல்லற. அப்ப அந்த சொல்லப்படாத உணர்வு இல்லையா?” என்று கண்ணீர் மல்க கேட்டாள். ஒரு நல்ல பெண் தன்னை தொடர்ந்து ஒருவனுக்கு மனதார இழக்க சம்மதிக்கின்றாளென்றால், அவன் நல்லவன் கெட்டவன் என்றதை தாண்டி, அவள் மனதில் இடம் பிடித்திருக்கின்றான் என்றல்லவா அர்த்தம். ஷ்ரத்தா மனதில் சத்ரியன் இடம் பிடித்திருந்தான்.
“நீ வினோத் தான் எக்ஸ் என்றதை இதுவரை சொல்லலையே. அவன் என்னை கொல்ல துடிப்பதை செல்லலையே ” என்று தள்ளி நிறுத்த முயன்றான்.
ஷ்ரத்தாவோ அவனை போலவே, “உனக்கு தெரியாதது உன்னை சுற்றி நடக்காது சத்ரியா. அப்படியிருக்க… நான் எக்ஸ் பத்தி சந்தேகம் வந்தப்ப உன்னிடம் சொன்னேன்.
அந்த எக்ஸ் டாபிக்கை நீ அதுக்கு பிறகு எடுக்கலையே… ஏன்.? ஏன்னா.. உனக்கு எக்ஸ் வினோத் அண்ணானு தெரிந்துடுச்சு. உனக்கு தெரிந்த விஷயத்தை நீ அதுக்கு பிறகு கேட்கவேயில்லை. அப்படியிருக்க நான் ஏன் நானா சொல்லணும்னு நினைக்கற.” என்றாள்.
“எனக்கு வினோத் தான் எக்ஸ்னு தெரிந்த விஷயம். உனக்கு எப்படி தெரியும்” என்றான்.
“இந்த வீட்ல நான் மூச்சு விட்டா கூட உனக்கு தெரியும். அப்படியிருக்க நேத்து வந்த என்னை பத்தி துல்லியமா தெரியறப்ப, உன் கூட இருக்கற உன்னோட நண்பர்கள், பாடிகாட்ஸ், எதிரி, துரோகி, தொழில் முறை பாட்னர்ஸ் அவங்களை பத்தி ஏ டூ இஸட் தெரியாம இருப்பியா?” என்றாள்.
சத்ரியன் “அப்ப வினோத் என்னை கொல்ல முயற்சிப்பது தெரிந்தும், அவன் உன்னிடம் உதவி கேட்டு நின்றப்பிறகும், எப்படி என்னிடம் சொல்லலை.” என்றான் நேரிடையாக.
“உன்னை சந்திக்கற வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் வினோத் அண்ணா. அந்த நன்றியுணர்ச்சி. அதுக்காக நீ சாக துணைக்கு போவேனா? அவர் உன்னை கொல்ல முயன்றால் நீ அவரை பார்த்துப்பனு தெரியும். நானா சொல்லாததுக்கு காரணம் அவர் இறப்பை நான் பிள்ளையார் சுழி போட எண்ணமில்லை. அவரை இங்கிருந்து உயிர் தப்பிச்சி போங்கனு பலமுறை சொல்லிட்டேன். அவர் போகவும் இல்லை.” என்றாள்.
ஆக தன் மேல் நம்பிக்கை வைத்து வினோத்தை பற்றி நானே கண்டறிந்து தண்டிப்பேன் என்று என்னை போலவே வேடிக்கை பார்த்திருக்கின்றாள்.
”உன்னை கொல்ல நான் நினைக்கலை. உன்னோட வாழதான் ஆசைப்படறேன்.” என்றாள். ஷ்ரத்தாவின் மனம் புரிந்ததும், சத்ரியன் நிதானமானன்.
வினோத் ஏன் கொல்ல துடிக்கறான்னு தெரியுமா?” என்றதற்கு “இதுவரை சொல்ல மாட்டேங்கறார். சிலநேரம் நான் உங்களிடம் அவரை பத்தி சொல்லிடுவேன்னு பயப்படறார், கெஞ்சறார். இதுல அவரை பார்க்க பாவமா இருக்கே தவிர, வேற யோசிக்கலை.” என்றாள்.
சத்ரியன் மனதில் கொதித்திருந்த அனல் கொஞ்சம் கொஞ்சமாய் தணிய, அவளை இழுத்து இதழை கொய்தான். இத்தனை நேரம் அவளை சந்தேகி
த்து விலக நினைத்து, கோபம் கெண்ட மனம் முத்தத்தால் சாந்தப்படுத்தினான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Brilliant chatriyan Sharadha u too smart. Vinoth count your days. Very intresting sis.
Interesting waiting for nxt epi
Super sis nice epi 👍👌 shratha eppo muzhusa chathriyan mela paasam vechita edhu enga poi mudiyumo🙄😕
Super super super super super super super super super super super super interesting ❣️❣️❣️
shratha puthisali than avana mariye pesi kovatha pokita apo intha raja kum ava mela kadhal iruku athan ava pesinathum kovam koranjiduchi, apo next move vinoth ah nalla close ah watch panitu irukan chathriyan
தீ லீடர்…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 38)
அடப்பாவி ! இம்புட்டு நேரம் அந்த காயு காய்ஞ்சான், இப்ப என்னடான்னா கூல் ஆகிட்டான்.
எது எப்படியோ சத்ரியன் வினோத்தை கொல்லாமல் இருக்கப் போறதில்லை, ஆனா அது என்னைக்குன்னுத்தான் இன்னும் தெரியலை.
அதே மாதிரி இந்த ஷ்ரத்தாவும் இனி டாக்டர் பாடம் படிக்கப் போறதில்லை, பட்டமும் வாங்கப் போறதில்லை. அவ தான் இப்ப வேற பாடம் படிச்சிட்டிருக்காளே.
ஆனால் பாவம் வக்கில் திவாகர், அவரோட உயிர் தியாகம் இப்படி வேஸ்ட்டா போயிருக்க வேண்டாம் போங்க.
😴😴😴
CRVS (or) CRVS2797