The leader-39
அத்தியாயம்-39
இரவு வீடு முழுவதும் அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதிக்குள் ஏதோ தவறாக இருப்பதை வினோத் உணர்ந்தான்.
சத்ரியன் கோபத்துடன் ஷ்ரத்தா அறையிலிருந்து விலகிச் சென்றதும், ஷ்ரத்தா அழுதபடி சத்ரியன் அறைக்குள் ஓடியதும், அங்கே ஏதோ வெடித்திருப்பது புரிந்தது.
அவன் மெதுவாக சுற்றி பார்த்தான். அடுத்த சில மணி நேரங்களில் அவன் அம்முடிவை எடுத்தான்.
முதலில் பழைய பாடிகார்ட்ஸை ஒவ்வொருவராக வேறு வேறு வேலைகளுக்கு ஏவி அனுப்பிவிட்டான்.
காரணம் கேட்டு நின்றவனிடம் “பாஸ் ஆர்டர்.” என்ற ஒரே காரணம் போதுமானதாக இருந்தது.
அதற்கு பதிலாக ரிதுராஜ் அனுப்பிய புதிய ஆட்கள் மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தனர்.
யோகேஷ் அதை கவனித்தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால்.. பாஸ் சத்ரியனும் கவனித்திருந்தார். கூடுதலாக எது நடந்தாலும் வேடிக்கை பார். நானா சொல்லும் பொழுது இறங்கு’ என்றதால் தான் யோகேஷின் இதயம் இன்னும் அதிகமாக துடித்தது.
நள்ளிரவு தாண்டவும், பங்களா முழுவதும் நிசப்தமிருந்தது. சத்ரியன் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வினோத் தான் கதவை தள்ளி உள்ளே வந்தான். அடுத்த நொடி அவனது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. அறைக்குள் இருந்த புதிய பாடிகார்ட்ஸ் எல்லோரும் தரையில் விழுந்துக் கிடந்தனர. சிலர் மயக்கத்தில், சிலர் இரத்தத்துடன். இன்னும் சிலர் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தபடி குப்பை மூட்டையைப் போல குவிந்திருந்தனர்.
அவர்களின் ஆயுதங்கள் எல்லாம் தூரமாக வீசப்பட்டிருந்தது. அறையின் நடுவில் சத்ரியன் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தான். சத்ரியன் கையில் இன்னும் பாதி எரிந்த சிகரெட் புகைந்துக் கொண்டிருந்தது.
“வா வினோத்.” என்றவன் சிரித்தான். “நீ வர்றதுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.” வினோத்தின் முதுகில் வியர்வை வழிந்தது.
“பாஸ்…” அந்த ஒரு வார்த்தை அறை முழுவதும் எதிரொலித்தது.
“ஆட்டத்தை முடிச்சிடலாம் வினோத். எதுக்கு என்னை கொல்ல துடிக்கற?” வினோத் பதில் சொல்லவில்லை.
இந்த முறை “வினோத் சாகறதுக்கு முன்ன காரணத்தை சொல்லிடு.” என்று கர்ஜனையாக உதிர்க்க, வினோத்தின் கண்கள் சிவந்தது. “இ..இவ சொன்னாளா?” என்று கேட்க, ஷ்ரத்தா அப்பொழுது தான் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தாள்.
“ஏன்டா.. என் கூட வேலை பார்த்தியே.. நான் என்னை மீறி யாரையும் உள்ள நுழைய விடமாட்டேன்னு உனக்கு தெரியாது. இவ எதுக்கு என்னிடம் சொல்லணும். இந்த சத்ரியனுக்கு நாலா பக்கமும் கண்ணிருக்கு. இல்லைன்னா உன்னை மாதிரி துரோகிகளிடம் வாழ முடியுமா?” என்றான் நாயகன்.
சில மாதங்களாக உள்ளே புதைத்து வைத்திருந்த கோபம் வெடித்தது.
“ஓ… அப்ப நான் எப்ப அழிக்க வருவேன்னு தயாரா தான் இருந்திருக்க?’ என்று துப்பாக்கி ஏந்தியும் நடுங்கி நின்றான்.
சத்ரியன் அதை பார்த்து, “குறி வைக்கும் போது கை நடுங்க கூடாது வினோத். அப்படி நடுங்கினா இரைக்குரிய குறி தப்பிடும். என்னட என்கூட வேலை செய்தும் தத்தியா தெரியற. இல்லை.. தப்பு.. ரீசண்டா நீ மனக்குழப்பத்துல இருக்க.
ஆமா.. எதுக்குடா கொல்ல துடிக்கற? நான் உனக்கு சகல வசதியோட பார்த்துக்கறேன். நல்ல சம்பளம் போடறேன். அப்பறமும் ஏன்” என்று கேட்டு புகையை இழுக்க, “வினோத் அண்ணா… ஏன் இப்படி கடைசில கொல்ல துணியறிங்க. நான் சாகடிக்கற எண்ணத்தை புதைச்சிட்டு சத்ரியனோட இருங்கனு சொன்னேனே” என்றாள்.
“ஹரிணிக்காக நான் கொல்லலைன்னா.. என் மனசு என்னை ஆம்பளைன்னு ஏற்றுக்காது ஷ்ரத்தா. என்ன பாஸ்… ஹரிணி பெயர் நினைவிருக்கா? பெயர் தான் அவ சொல்லியிருக்க மாட்டாளே. பெயரே கூட சொல்ல தெரியாத ஒரு ஊமை பொண்ணை சிதைச்சிங்களே நினைவிருக்கா? ” என்றதும் சத்ரியனின் முகம் அப்படியே உறைந்தது.
அறைக்குள் இருந்த காற்றே நின்றது போல இருந்தது. யோகேஷ் திடுக்கிட்டு சத்ரியனை பார்த்தான்.
இரண்டு வருடங்களாக யாரும் சொல்லாத பெயர். ஒரு ஊமையின் அழுகுரல். இன்று அவளது பெயர் ஒலித்தது. ஊமைப்பெண் நினைவிருக்க, அவள் பெயர் ஹரிணி என்று சத்ரியனுக்கே இன்று தான் தெரிய வந்தது.
சத்ரியனின் விரல்கள் மெதுவாக இறுகின. ஆனால் அவன் இன்னும் அமைதியாக இருந்தான்.
வினோத் கண்களில் கண்ணீர் இருந்தது. “ஷ்ரத்தா… அந்த ஹரிணி யாருனு கேளு அவனிடம்.” என்றான். ஷ்ரத்தா குழப்பமாக சத்ரியனை பார்த்தாள்.
பிறகு வினோத்தை பார்த்தாள்.
“யார் அண்ணா ஹரிணி?” என்றாள் ஷ்ர்த்தா. வினோத்தின் உதடுகள் நடுங்கின.
“என் காதலி.” அந்த வார்த்தை அறைக்குள் விழுந்தது. சத்ரியன் இன்னும் எதுவும் பேசவில்லை. அதுதான் ஷ்ரத்தாவை அதிகமாக பயமுறுத்தியது.
“உங்க காதலியை அவர் என்ன செய்தார்?” என்று மீண்டும் கேட்டாள். ஒருவேளை கொன்றுவிட்டானா? என்ற கலக்கம். சத்ரியனுக்கு கை வந்த கலை அது தானே?!
வினோத்தின் கண்களில் கண்ணீர் வழிந்தது. “வாய் பேச முடியாத ஊமைப் பெண். நான் உயிருக்கு உயிரா காதலிச்ச பெண். என் வாழ்க்கையே அவ தான்னு இருந்தேன்.” என்று சத்ரியனை நேராக பார்த்தான்.
“அவ வாழ்க்கையை அழிச்சவன் இவன்” என்று சத்ரியனை கைநீட்டி குற்றம் சுமத்த, ஷ்ரத்தா அதிர்ச்சியில் சத்ரியனை திரும்பிப் பார்த்தாள்.
சத்ரியன் இன்னும் அமைதியாகவே நின்றான். அந்த அமைதியே பயங்கரமாக இருந்தது. இதில் தலைகுனிந்து சிந்திப்பதை பார்க்க ஷ்ரத்தாவுக்கு அச்சம் உண்டானது.
வினோத் கத்தினான். “இப்ப சொல்லுங்க பாஸ்! ஹரிணியை நினைவிருக்கா இல்லையா?”
சத்ரியன் மெதுவாக கண்களை மூடினான்.
இரண்டு வருடங்களுக்கு முன் புதைத்து வைத்திருந்த ஒரு நினைவு… மீண்டும் கதவை தட்டத் தொடங்கியது.
வினோத் உடைந்தவனாக, “நான் உன்னை எவ்ளோ மதிப்பும் மரியாதையுமா வச்சிருந்தேன் தெரியுமா.?
சத்ரியன் என்ற பெயருக்கு இருக்கற பவர்.
சத்ரியனுக்கு கீழே வேலை செய்யற பெருமை, நான் சத்ரியன் செய்ய நினைக்கற காரியத்தை கூட கண்ணால் ஒரு பார்வை பார்த்தாலே எனக்கு புரிந்து நான் அதை செய்வேன் என்ற கெத்தோட பலரும் சத்ரியன் ஆட்கள் வர்றாங்களானு எனக்கு தர்ற மரியாதை. இதெல்லாம் பார்த்து சத்ரியன் என்ற மகுடத்தில, உன்மேல கண்மூடித்தனமான நம்பிக்கை பற்று வச்சேன்.
அப்படி இருந்த சமயம் காதலிச்ச பொண்ணை, கல்யாணம் செய்ய போறவளை, பாஸிடம் காட்டி ஆசிர்வாதம் வாங்க துடிச்சு, கூட்டிட்டு வந்தேன்.” என்றான்.
சத்ரியனுக்கு ஊமைப்பெண் ஹரிணி பெயரை கேட்டதும் லேசாக ஸ்தம்பித்த வகையில் இருக்க, நடந்தவை வேறு நினைத்து பார்த்தவன், தவறு செய்தவனாக தான் நின்றான்.
ஷ்ரத்தா இருவருக்குள் நடுவே நின்று, வினோத்தை சத்ரியன் அழித்திடாமல் காத்திட முனைந்தாள்.
“நாங்க உனக்கு என்னடா துரோகம் பண்ணினோம். அவ என்னடா பாவம் பண்ணினா?.” என்று மரியாதை தரையிறங்கியது.
ஷ்ர்த்தா வினோத் கையை பற்றி ஆறுதலுக்கு தீண்டினாள். வினோத்தோ தனது வலியை உடைக்கும் அம்பாக தன் காதல் கதையை உரைத்தான்.
“ஷ்ரத்தா… நான் முதல் முதல்லா ஹரிணியை டிரெண்டிங் பெயிண்டிங் வரையற ஸ்பாட்ல பார்த்தேன்.
நம்ம சத்ரியன் பாஸுக்கு தான் பெயிண்டிங் மேல ஆர்வமாச்சே. வீடு முழுக்க ஏதாவது கலைநயத்தோட விலையுயர்ந்த பெயிண்டிங்கை மாட்டி தொங்க விடுபவராயிற்றே.
அதனால பெயிண்டிங் கண்காட்சில போறப்ப, வாய் பேச முடியாத ஊமை பெண்ணா தான் ஹரிணியை நான் சந்திச்சேன். அவளிடம் பேச முயன்றப்ப ஊமைனு தெரியவும், போன்ல வாய்ஸ் அசிஸ்டென்ட் மூலமா அவ டைப் பண்ணியதை ஆடியோவா கேட்டு பேசி பழக ஆரம்பிச்சேன்.
காதலிக்க ஆரம்பிச்சேன். ஹரிணி வாய் பேச முடியாது என்ற குறையை தவிர அவளிடம் வேற குறையே பார்க்க முடியாது. சொல்ல போனா என்னை மாதிரி ஆட்களுக்கு அவ ஊமையா தெரியலாம். அவளுக்கு அதுவும் அழகா இருந்தது. அவளுக்கு அது அப்பவும் குறையா பார்க்காம கண்களால் நிறைய பேசினா.
சாவுக்கும் வாழ்வுக்கும் இருக்கற கேப்ல எனக்கும் காதல் வந்தது. அவளும் காதலிச்சா. அன்னிக்கு சத்ரியனிடம் காட்டி அறிமுகப்படுத்த வந்தேன்.
அன்னிக்கு பார்த்து கன்டெயினர் சிலது ஹார்பர்ல ஸ்டக் ஆகறதா நியூஸ் வந்துச்சு. எல்லாமே ஸ்மக்லிங் பொருள். ஹரிணியை சேஃபா இங்க தான் விட்டுட்டு போனேன். நான் வந்துடுவேன்… தைரியமா இரு. சத்ரியன் பாஸ் வந்து யாரு என்னனு கேட்டா என்னோட ஐடி காட்டுனு கொடுத்துட்டு போனேன். சந்தோஷமா சிரிச்சு அனுப்பினா..
ஆனா இதோ இங்க நிற்கற சத்ரியன் என்ன செய்தார் தெரியுமா? என் ஹரிணியை கற்பழிச்சு சிதைச்சிருக்கான்.” என்று துடிக்க, ஷ்ரத்தாவுக்கு பேரதிர்ச்சி.
இதுவரை சத்ரியன் கொலை செய்தான், இல்லீகல் வேலைக்கு கூட தலைமை பண்பு நடத்துபவன், கெட்டவன் தான். அதற்காக ஒரு பெண்ணை கற்பழித்தானா என்ற கண்ணோட்டத்தில் காண அவளால் முடியவில்லை.
தன்னை தொட்டு தீண்டும் பொழுது மென்மையின் மன்னவனாக இருப்பவன், ஒரு பெண்ணை மூர்க்கத்தனமான முறையில் கற்பழித்திருப்பானா? நினைத்து பார்க்கவே உடலும் மனமும் துடித்தது.
அதுவும் தனக்கு கீழே உள்ளவர்களுக்கு இவன் கடவுளாக இருக்க, வினோத் அண்ணா விரும்பிய பெண்ணை அடைய எப்படி மனம் வரும்’ என்று சத்ரியனை பார்வையிட்டாள்.
“இதெல்லாம் பொய்யா இருக்கும் அண்ணா” என்று சத்ரியன் இதுபோல காரியத்தை செய்ய மாட்டான் என்று வாதாட முயன்றாள்.
சத்ரியன் பழைய செருக்கை மீட்டவனாக, “சோ… அதுக்கு தான் ரிவேன்ஜ். வினோத்… ஒன்னை மறந்துட்டு பேசற.
நான் தினம் ஒருத்தியோட உல்லாசமா இருக்க, எனக்கு எந்த நாட்ல, எந்த அழகி சரியானவளா இருப்பானு, தினம் ஒரு நாட்டு பெண்ணை என் மெத்தை அலங்கரிக்க, தேர்வு செய்ததும், அவங்களை அழைச்சிட்டு வர்ற பொறுப்புல இருந்தது நீ தான். அப்படியிருக்க.. அன்னிக்கு நடந்தது அப்படிப்பட்ட பெண்ணாக தான் நினைச்சேன். அதுவும் நீ முட்டாள்தனமா அங்க உட்கார வச்சிட்டு போன பொண்ணு, என் ரூம்ல வந்து நின்றா, நான் என்னனு எடுத்துக்கணும்?
என் பங்களாவில்… என்னோட அறையில.. என் உடல் தேவையை தீர்க்க வந்த பெண்கள் இருக்கற நேரத்துல, உன் காதலி இருந்தா அதுக்கு நான் என்ன செய்வது? அவளை ஆக்கிரமிச்சேன். ஊமைனு பிறகு தான் தெரியும். இருட்டில முனங்கற சத்தம் ஆபத்துக்கு கத்தறாளா, இல்லை ஆசைக்கு கத்தறாளானு போதையில இருக்கற நான் கவனிக்கலை.
அத்தோட அழுதா… இல்லைனு சொல்லலை. முதல் முறை கூடலில் அழுகை வந்ததா நான் நினைச்சேன்.
எல்லாத்தையும் முடிச்சி பார்த்தா அரை பிணமா இருக்கா. உடனடியா டாக்டரை அனுப்பி பார்த்து அவளை பிழைக்க வச்சேன். ஆனா அவ யாருனு தெரியலை. ஹாஸ்பிடல்ல மயக்கம் தெளிந்துவுடனே ஆளைக்காணோம். ஒரு வேளை அங்கயே இருந்தா விம் போட்டு விளக்கியிருப்பேன். சோ சேட்… அவளை மொத்தமா காணோம்.
“யூ இடியட்… என்னிடமே இப்படி சொல்லற.” என்று சத்ரியனை நெருங்க வர, வினோத்தின் துப்பாக்கியை தட்டி விட்டு, சத்ரியன் மறைத்து வைத்த துப்பாக்கியால் வினோத் முட்டியை குறிப்பார்த்து அழுத்தினான் சத்ரியன்.
வினோத்தால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது தடுமாறினான். “வினோத் அண்ணா… அச்சோ.. சத்ரியன் ஏன் சுட்டிங்க” என்று அனலாய் கேட்டாள்.
“அவன் என் காலரை பிடிக்க வந்தான். எனக்கு டிஸ்காஸ்டிங்கா இருக்குமில்லையா சுட்டுட்டேன்.” என்றான்.
“அண்ணா… ஹரிணிக்கு என்னாச்சு? உங்களுக்கு அப்பவே தெரியலையா. அப்பவே கொன்றுயிருக்கலாமே. இரண்டு வருடம் என்ன செய்திங்க? நான் வந்தப்பிறகு தான் இந்த மாதிரி நீங்க கொல்ல துணியனுமா?” என்று சத்ரியன் செய்கையை தாளாமல் நின்றாள்.
வினோத் வலியுடன், “அன்னிக்கு அவசரம்னு போ..போயிட்டேன். வந்து பார்த்தப்ப விலையுயர்ந்த டைமண்ட் காணோம்னு சொன்னாங்க. ஹரிணினு என் கேர்ள் பிரெண்ட் வந்தானு சொல்ல தயங்கினேன். அதோட ஹரிணியை நான் பார்க்கலை. அதனால டைமைண்ட் எடுத்துட்டு போனதா ஒரு சந்தேகத்துல விழுந்துட்டா. ஒரு வேளை, அவ என்னை விட்டு அந்த வைர மோதிரத்தை எடுத்துட்டு கிளம்பிட்டா போலனு தப்பா நினைச்சேன். எந்தவிதத்திலையும் ஹரிணியை பார்க்க முடியலையே!
இப்ப ரீசண்டா தான், சத்ரியன் பாஸ் வெளிவந்த சமயம், ஹரிணியை பார்த்தேன். அவ நடந்ததை சொன்னா. கற்பு போனப்பிறகு என்னை பார்க்க பிடிக்காம மலேசியா போயிட்டதா ஊமை பாஷையில் சொன்னா.
இப்படி ஒரு இடத்துல, வேலையில் இருப்பதை.. என்னோட பழகியதை, நினைச்சா வெட்கமாயிருக்குனு சொல்லிட்டு என்னை பார்க்க வராதனு போயிட்டா.
ஒரு ஆம்பளையா அந்த இடத்துல எனக்கு அளவுக்கதிகமா கோபம் வந்தது. நேரா சத்ரியனை பார்த்து சுட்டு தள்ளி என் கோபத்தை தீர்த்துக்கணும். ஆனா அவனை நெருங்கவே முடியாது. நான் கன் எடுத்து சுட நினைச்சாலே என்னை மற்ற பாடிகார்ட்ஸ் கொன்னுடுவாங்க. ஏன் சத்ரியன் கையில சிக்கினா குடலை உருவிடுவான்னு பயந்தேன்.
நான் என்னை மறைச்சிக்கிட்டு யாரோட உதவியால் கொல்ல நினைச்சேன். யாரை நம்பறது?
அந்த சமயம் பார்த்துட்டு இருந்தேன். நீ உங்க அப்பா இறப்பில சத்ரியன் வராததால் வந்தவங்களிடம் எல்லாம், சத்ரியனை பத்தி கேட்டு திட்டி விட்டதை கேள்விப்பட்டேன்.
ஒரு பொண்ணை வச்சி கொல்ல தோணுச்சு. சத்ரியனுக்கு தான் பெண்களை பிடிக்குமே. அதான்… உன்னை அவன் கண்முன்ன நிறுத்தினேன். என் கணிப்பு பொய்யாகலை. உன்னை அவன் ஆராய ஆரம்பிச்சான்.
உன்னை காப்பாத்தினான், பாதுகாத்தான், உன்னை அடைய துடிச்சான். மெத்தையில சல்லாபிக்கும் போது உன் கையால சாகடிக்க வைப்பேன்னு திட்டம் போட்டேன். ஆனா நீ அவன் மேல மயக்கத்துல விழுந்துட்ட.
அவனுக்கு தண்டனை கொடுக்கணும். அவன் சாகணும்” என்று துப்பாக்கி தட்டி விடப்பட்டதால், மறைத்திருந்த கத்தியை எடுத்து, ஷ்ரத்தா கழுத்தில் அழுத்தினான்.
சத்ரியனோ “வினோத்… நீ இப்ப தான் தப்பு பண்ணற. ஷ்ரத்தாவை விடு” என்றான்.
“முடியாது… உன்னை நீயே சுட்டுக்கோ. நான் இவளை விடறேன்.” என்று மிரட்டினான் வினோத்.
-தொடரும்.

இப்போவாவது யாரு நல்லவங்க கெட்டவங்க என்று தெரியட்டும் ஷ்ரத்தாவுக்கு வினோத் இப்போ கூட உன்ன சுட்டத்துக்கு உனக்காக துடிச்ச ஷ்ரத்தா கழுத்துலையே கத்தி வைத்து நீ துரோகி என்று சொல்லாம சொல்லிட்டு உனக்கு சத்ரியன் தான் சரி
Wow sema twist. Vinoth really sad for your love. But now you are doing wrong. Chatriyan what will do now? Very intresting sis.
Acho endha Vinoth avanuku support panna shratha mela en kaiya vekiran paavam endha ponnu evangaluku nadula maattikichu🙄😕
vinoth shratha unna anna sollitu iruka una shoot panathuku varuthapadura aana nee tak nu ava kaluthulaye kathiya vaikira paru thuroki ya nikura ne intha edathula ithuku chathriyane paravala pola avanuku therinjathum antha nimishame konnuduvan