Skip to content
62 / 100 SEO Score

அத்தியாயம்-40

The leader-40

வினோத் கத்தியை ஷ்ரத்தா கழுத்தில் வைக்கவும், ஷ்ரத்தா பயந்து நின்றாள்‌.

“வினோத் அண்ணா..” என்று என்னை கொல்ல துணிகின்றீரா’ என்று ஆச்சர்யமாய் அதிர்ச்சியாய் பார்த்தாள்.

 

வினோத் சத்ரியனை கொல்ல வந்தவன் என்று தெரிந்தும் இத்தனை நாட்களாக சத்ரியனிடம் காட்டி கொடுக்காமல் இருந்தவளுக்கே இந்த நிலைமையா? என்பது போல பார்த்தாள்.

 

அங்கிருந்த யோகேஷ் மற்றும் சில பாடிகார்ட்ஸ் பதறினார்கள். பதற வேண்டிய சத்ரியனோ சிகரெட்டை அணைத்துவிட்டு அமைதியாக, “நீ தப்பான காயை நகர்த்திட்ட வினோத்.” என்று சிரித்தான்.

 

அதே வேட்டையாடும் குரூர சிரிப்பு.  வினோத் வலியுடன் ”இப்பவும் உனக்கு திமிர் குறையலையா?”

என்று கேட்டான்.‌

 

“பிறந்ததிலருந்து கூடவே இருந்தது திமிர் தான். அதனால எப்பவும் திமிருக்கு குறைவிருக்காது.

என்ன சொன்ன.. என்னை நானே சுட்டு செத்துடணுமா?” என்று சிரித்து, சத்ரியன் மெதுவா அருகே முன்னோக்கி நடந்தான்.

 

“நீ என்னை சுட்டா, வெட்டினா நான் சாவேன். ஆனா ஷ்ரத்தாவை வச்சி மிரட்டுற அளவுக்கு நீ இறங்கிட்டன்னா… நீ ஏற்கனவே தோத்துட்ட. உன்னால என்னை சாகடிக்க முடியாது.” என்றான்.

 

“கிட்ட வராத ஷ்ரத்தாவை குத்திடுவேன்.” என்று வினோத் பயந்தபடி யாரையும் நெருங்க விடாத அளவிற்கு வாசல் புறம் செல்ல முயன்றான்.

 

“இப்ப நீ கத்தியை அவ கழுத்துல அழுத்து. ஷ்ரத்தா சாகட்டும். அடுத்த நிமிஷம் உன் உடம்புல எத்தனை எலும்பு இருக்குன்னு எண்ண முடியாத மாதிரி உடைப்பேன். அதை விட்டு அவளுக்காக கையை கட்டி வேடிக்கை பார்த்து பயப்பட ரகம் நான் இல்லை வினோத். என்னை கொல்ல வந்தவனை ஒரு பெண்ணுக்காக சும்மா விடுவேன்னு எப்படி நினைச்ச?” என்றான்.

 

வெளியில் பார்ப்பவர்களுக்கு சத்ரியன் கல்லு மாதிரி தெரியலாம். ஷ்ரத்தா மட்டும் சத்ரியனை உன்னிப்பாக கவனித்தாள். சத்ரியன் கை முறுக்கேறியது. அவன் தாடை இறுகியது. அவன் கண்களில் இருக்கும் பதற்றத்தை மறைத்து, அவன் வார்த்தையில் பயம் இல்லாது நடித்தான்.

 

“இல்லை… நீ ஷ்ரத்தா என்றால் யோசிப்ப. அவளை நீ விரும்பற” என்றான் வினோத்.

 

சத்ரியன் அவ்வறை அதிர சிரித்து, “ஏன்டா…‌ உனக்கே தெரியும் நான் மாடலிங் பொண்ணுங்களில் இருந்து, உலக அழகி, சினிமா நடிகை என்று எல்லா டைப்  பெண்களையும் பார்த்திருக்கேன். ஆப்ட்ரால் இவளை வச்சி என்னை பிடிக்க எவன்டா ஐடியா தந்தது.

இவ லாயர் திவாகரோட பொண்ணு. நீயே பார்த்தல்ல எவ்ளோ வாய். என்னை எப்படி எல்லாம் பேசினா. அதனால தான் அவளை தூக்கிட்டு வந்து ஆசைக்கு இந்த அறையில் வச்சி அனுபவிக்கறேன். இவளுக்காக நான் சாக தயாராவேன்னு நீ எப்படி நினைச்ச?

இதுல நான் அவளை விரும்பறேன்னா? காமடி பண்ணற. உதைக்க போறேன் பாரு” என்றான்.

 

ஷ்ரத்தாவுக்கு சத்ரியன் இப்படி பேசவும் தன்னிலையை கண்டு வருந்தினாள்.

 

“இங்க பாரு நீ இன்னும் என்னை புரிஞ்சிக்கலை வினோத். ஒரு கிங்பிங்கை மிரட்ட வர்றவன் முதல்ல ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கணும்.” அவன் ஒரு அடி முன்னே வந்தான்.

 

“நான் பயப்பட மாட்டேன்.”

வினோத் கத்தியை இன்னும் அழுத்தினான். “இன்னொரு அடி வந்தா இவ செத்துடுவாளா? சாவட்டும் கொல்லுடா… கொன்னுட்டு அடுத்து ஒன்னும் பண்ண முடியாம இங்க தான் நிற்ப” என்றதும் அந்த ஒரு வார்த்தையில் ஷ்ரத்தாவே உறைந்தாள். வினோத்தும் அதிர்ந்தான்.

 

சத்ரியன் கண்களில் எந்த பதற்றமும் இல்லை.

“என்னோட எதிரிகள் எல்லாரும் இதே தப்பை… ஏன் தான் பண்ணறிங்க. நான் யாருக்காகவும் என் முடிவை மாத்துவேன்னும், எமோஷனல் ஸ்டக் ஆவேன்னோ நினைக்கறிங்க.

நான் சத்ரியன் டா. என் முன்னாடி நின்னு பேரம் பேசற தகுதி யாருக்கும் கிடையாது. நான் எந்த எமோஷனலுக்கும் அடிப்பணியறவன் இல்லை. எவளுக்காகவும் சாகவும் தயாராயில்லை” என்றதும் வினோத்தின் கைகள் லேசாக நடுங்கின.

 

அதைத்தான் சத்ரியன் எதிர்பார்த்தான். “நீ என்னை கொல்லணும்னு நினைச்சிருந்தா நேரா வந்திருக்கணும். ஒரு பொண்ணுக்கு பின்னாடி ஒளிஞ்சு நிக்கற. உன்னைப் பார்த்தா ஹரிணியோட காதலுக்காக போராடற ஹீரோவா தெரியலை. பயந்து ஒளிஞ்சிருக்கற கோழையா தான் தெரியற.” அந்த வார்த்தை நேராக வினோத்தின் நெஞ்சில் இறங்கியது.

 

“ஷட் அப்.” என்றான் வினோத்.

 

“உண்மை கசக்குதா?”

 

“ஹரிணிக்கு நீதி வாங்க வரல நீ. உன்னோட இயலாமையை மறைக்க வந்திருக்க.” சத்ரியன் உடைவதற்கு மாறாக வினோத்தின் மனநிலையை உடைய ஆரம்பித்தது. அதுதான் கிங்பின் தலைமையில் வழிநடத்தும் சத்ரியன் குணம். மிக நேக்காக சூழலை கையாள தெரிந்தவனாக நின்றான்.

 

அங்கே குப்பையாக குவிந்திருந்த ரிதுராஜின் ஆட்கள் ரத்த வெள்ளத்தில் தான் கிடந்தனர்.

சத்ரியன் தனியாளாக தான் இவர்களை அழித்திருக்கின்றான். தற்போது பாடிகார்ட்ஸ் வேறு சுற்றி சூழ்ந்திருக்க, தனக்கு சத்ரியனை கொல்லும் தைரியம் நிஜமாகவே இல்லை என்று முடிவுக் கட்டினான்.

 

இது அவநம்பிக்கையில் எடுக்கின்ற செயல் அல்ல. சத்ரியனை நிழல் போல கவனித்து, அவனது வேலையினை குறைக்கும் பி.ஏவின் மூளை சொன்னது.

உன்னால் சத்ரியனின் ஒரு மயிறையும் பிடிங்க இயலாதென்று.

 

வினோத் கையிலிருந்த கத்தி கை நழுவியது. சத்ரியன் அவசரம் காட்டாமல் யோகேஷிற்கு சமிக்ஜை புரிய, அவனும் தயாராக நின்றான்.

 

சத்ரியன் மெதுவாக ஷ்ரத்தாவை பிடித்து, “தள்ளிப்போறியா… அப்பறம் உன்னோட இறப்புக்கு நான் காரணம்னு வரலாறு சொல்லப்போகுது. நான் என் விசுவாசி வினோத்திடம் பேசணும்.” என்றான். ஷ்ரத்தாவோ ‘வினோத்தை கொல்லும் வெறியில் இருப்பவன் என்ன பேசப் போகின்றான்?’ என்று அவனையே இமைக்க மறந்தாள்.

 

சத்ரியன் அவளை இளக்காரமாக பார்த்து “ஆமா.. என்ன… அண்ணா அண்ணானு கூப்பிட்டும் உன் கழுத்துல சட்டுனு கத்தி வச்சிட்டான். இந்த லட்சணத்துல தான் இவனோட மனிதநேயம். இவனுக்காக நீ என்னிடம் அவனை பத்தி சொல்லாம கடத்தின. உனக்கு இருக்கற பாசம் இருக்கே… இருக்கட்டும் வந்து பேசிக்கறேன்.” என்றான்.

 

வினோத்திற்கு அவனது குற்றச்சாடல் குத்தியது. உண்மையில் அண்ணா’ என்று வினோத்தை ஷ்ரத்தா அழைக்கும் பொழுது அவளை இங்கே இவனிடம் மாட்டி விட்டுவிட்டோமே என்ற குற்றவுணர்வு வாட்டியது.

 

கண்ணீருடன் செல்லும் ஷ்ரத்தாவை பார்த்து, “என்னை மன்னிச்சிடு ஷ்ரத்தா. உன்னை இவன் கண் முன்ன நிறுத்தி தப்பு பண்ணிட்டேன்.

ஒரு பொண்ணால இவன் படுக்கயறை வரை போக முடியும். அந்த நேரம் சாகடிக்க ஈஸியா இருக்கும்னு தான் கோர்த்துவிட்டேன். ஆனா பெரிய தப்பு அது. உன் சாதாரண வாழ்வியல் இதனால பாதிப்படைஞ்சிட்ட.

ஹரிணி அவளது கற்பை தாண்டி இலகுவா மூவ் ஆன் பண்ணி துணிவா மலேசியால இருக்கா. ஆனா நான் தான் சத்ரியனிடம் வேலைக்கு இருக்கவும் முடியாம, வேலை விட்டு போனா காரணம் இல்லாம போறதுக்கும் சந்தேகப்படுவான்னு இரண்டு மனநிலையா தடுமாறிட்டேன்.

 

ஐ அம் சாரி. இரண்டு பெண்களேட வாழ்க்கை என் ஒருத்தனால தான் அழிவுல அமைஞ்சிடுச்சு” என்று கையெடுத்து கும்பிட்டான்.

 

ஷ்ரத்தாவோ வினோத் பேசுவதை கேட்டு இந்த நொடியும் வினோத்தை காப்பாற்ற தான் யோசித்தாள்.

 

சத்ரியனோ “இப்ப சொல்லறியே இது கரெக்ட். இரண்டு பொண்ணோட வாழ்க்கையை ஸ்பாயில் பண்ணியது நீ தான்‌. நான் இல்லை.

 

ஏன்னா… என் அறையில் இருந்த பெண் எனக்கு சொந்தமாக வந்ததா நினைச்சேன்.‌ அதுல என் தப்பு இல்லை‌.

அண்ட்… இவ… இவளா தான் வாய் கொழுப்புல பேசினா. என் கட்டிலை அலங்கரிக்க பணத்தேவை உள்ளவளுங்க தான் வருவாங்க அதுயிதுனு. நான் அப்ப இவளை ரேப் பண்ணலையே.

பட் இவ… குடும்ப பெண் தானே. கற்புக்கரசி..  திவாகர் இறப்பை தெரியப்படுத்தினா இழக்க தயார்னு இவளா தான் வந்தா.

ஆக எந்த பெண் வாழ்வும் என்னால பாதிக்கலை.” என்று மிதப்பாய் பேசினான்.

 

ஷ்ரத்தாவுக்கு அடிவயிறு காந்தியது. அகமும் உடலும் வலியில் அலறியது. ஆனால் பல்லை கடித்து நின்றவள்.

 

சத்ரியன் புறம் திருப்பி, “ப்ளீஸ் வினோத் அண்ணாவை விட்டுடு. அவரை கொண்ணுடாத. ஏற்கனவே ஹரிணி இல்லாத வேதனை இருக்கு. இப்ப… காலை வேற சூட் பண்ணிருக்க. போதும்.. விட்டுடு” என்றாள்.‌

 

“எனக்கும் விட்டுட தான் ஆசை ஷ்ரத்தா. ஆனா இங்க உயிர் பிழைக்க விட்டா நாளைக்கு மறுபடியும் வருவான். இவன் வரலை என்றாலும், இவனை போல ஆட்கள் சத்ரியன் தானே… பாவமன்னிப்பு தர்ற தியாகி ரேஞ்சுல வருவாங்க.

நெவர்… அழிக்க வந்தா அழிவை சந்திச்சுட்டு தான் போகணும் இல்லையா வினோத்” என்று கேட்க, தலைகுனிந்தான். அவனுக்கு தெரியாத விஷயமா? மன்னித்து விடுவிப்பதாக இருந்தால் டிரைவர் பைரவனையே விட்டு வைத்திருப்பானே. கைதிகளோடு கைதியாக டிரைவர் பைரவ் வாழ்ந்திருப்பாரே. துரோகம் செய்யவோ அல்லது தன்னை அழிக்க நினைத்தால் கூட முந்திக்கொண்டு அழிப்பது தான் சிறந்தது. இங்கே எல்லோரும் சுயநலவாதிகள் மட்டுமே. சற்று முன்னர் கூட அண்ணன் என்று அழைத்த ஷ்ரத்தாவையே கத்தியால் குத்துவதற்கு தயங்காமல் பிடித்து வைத்தது இதே வினோத் தானே. அப்படியிருக்க சத்ரியனுக்கு மட்டும் மனிதநேயம் மலருமா என்ன?

 

“யோகேஷ் வினோத்தை இங்க கொல்ல வேண்டாம். அவனை நம்ம பார்ல போய் தீர்த்திடு. பாவம் ஒருத்தி அண்ணா அண்ணானு பழகிட்டா. அப்பறம் ரிதுராஜையும்… முடிச்சி விடு. மல்கோத்ராவை சாகடிச்சப்பவே முடிச்சி விட்டுயிருக்கணும். வினோத் கூட அப்ப கேட்டான். ம்மம்… இப்ப  என்னை அழிக்க ஆட்களை அனுப்பறான். அதுவும் வினோத்.. நீ உதவி கேட்டு, அவனும் உதவற மாதிரி அவன் காரியத்தை சாதிக்க வந்துட்டான் பாரு. அவனாவது யோசிச்சிருக்கணும். பாவம்… அவனுக்கு ஏற்கனவே ஆதாரம் இல்லாம உயிரோட இருக்கட்டும்னு விட்டிருந்தேன்.

 

அந்த மாடலிங் பொண்ணு, யாமினி, மைக்கேல் போன இடத்துக்கே ரிதுராஜ் போய் சேரணும்.  வினோத்… ரிதுராஜ் இறப்பு கூட உன் பாவகணக்கில் தான் சேரும். ஏன்னா யாமினி மைக்கேல் இறந்தப்ப கூட அவன் பெயர் என் செவியில் விழலை. இப்ப இத்தனை பாடிகார்ட்ஸை வரவழைச்சி நீ தான் ஆதாரத்தை தந்துட்ட. அதுக்கு உனக்கு நன்றி தெரிவிக்கலாம்.” என்று கூறினான்.

 

சத்ரியன் பேசி முடித்ததும் குண்டுக்கட்டாக வினோத்தை யோகேஷும் அவனுக்கு கீழேயுள்ள பாடிகார்ட்ஸும் தூக்கி சென்றனர்.

 

அறை முழுவதும் அமைதி சூழ்ந்தது. சில நொடிகள் அசையாமல் நின்ற சத்ரியன், பிறகு பார்வையை ஷ்ரத்தா நின்றிருந்த இடத்துக்கு திருப்பினான்.

 

“ஷ்ரத்தா.” என்றதும் அவ்விடம் அவள் இல்லை. புருவம் சுருக்கியவன் ஒரு அடி முன்னே வந்தான். பால்கனி தரையில் சிவப்பு நிறம் பரவியிருப்பதை பார்த்ததும் அவனது விழிகள் சுருங்கின.

 

பால்கனி அருகே உடல் சுருண்டு கிடந்தாள் ஷ்ரத்தா.

அவளிருந்த இடமெல்லாம் குருதி கசியத் தொடங்கியிருந்தது.

 

சத்ரியனின் முகத்தில் எந்த பதற்றமும் தோன்றவில்லை.

ஆனால் அவன் நடந்த வேகம் மட்டும் அதிகரித்தது. அருகே மண்டியிட்டு அமர்ந்தவன், அவளது நாடித்துடிப்பை பரிசோதித்தான்.

 

“ஷ்ரத்தா…” என்று கன்னத்தை தட்டினான். அவள் கண்களை திறக்கவில்லை. அந்த நொடி அவனது தாடை இறுகியது.

 

“டேம் இட்…” என்று பற்களுக்குள் உறுமியவன் உடனே அலைபேசியை எடுத்தான்.

 

‘டாக்டர் சக்திபாலன்.’ என்ற அழைப்பு இணைந்ததும், “டாக்டர் சக்திபாலன்… ஐந்து நிமிஷத்துல இங்க இருக்கணும்.” அவ்வளவுதான் சொன்னான்.

மறுபக்கம் என்ன பதில் வந்ததென்று கூட கேட்காமல் அழைப்பை துண்டித்தான்.

 

ஷ்ரத்தாவை தூக்கி சோபாவில் படுக்க வைத்தவன்.

 

‘உனக்கும் ஒன்னும் ஆகாது.’ என்றவனின் மனக்குரலை கேட்டிருந்தால் யாருக்கும் புரிந்திருக்கும். இந்த உலகத்தில்

சத்ரியன் இழக்க விரும்பாதவளாக ஷ்ரத்தா ஒருத்தி இருக்கின்றாளென்று.

 

-தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

4 thoughts on “The leader-40”

  1. Acho shratha ku enna Achu sis😳🤔 chathriyan romba samarthiyama pesi Vinoth a eppdiyo samalichitan eppo enna nadakumo parpom 🧐🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!