Hi New site la register Login செய்து யாரெல்லாம் read பண்றிங்க
Keep supporting guys
After new story new site la தான் வரும்
அத்தியாயம்-41
டாக்டர் சக்திபாலன் ஷ்ரத்தாவை முழுமையாக பரிசோதித்து முடித்தார். அறைக்குள் கனமான அமைதி நிலவியது.
சத்ரியன் சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தான். “சத்ரியன்…” சக்திபாலன் மென்மையாக அழைத்தார். “சொல்லுங்க டாக்டர்.” என்றான். சில நொடிகள் அவரால் பேச முடியவில்லை.
பிறகு ஆழமாக மூச்சை இழுத்து, “ஷ்ரத்தா கர்ப்பமாக இருந்தாங்க.” என்றார். சத்ரியனின் விழிகள் அசையவில்லை. அவனது விரல்கள் மெதுவாக இறுகின.
“இருந்தாங்கன்னா?” என்றான்.
“மிஸ்கேரேஜ் ஆயிடுச்சு.” அந்த நொடி அறைக்குள் இருந்த காற்றே கனத்தது. சக்திபாலன் தொடர்ந்தார். “நீங்க அவங்களை பத்தி சொன்னதை வச்சி பார்த்தா… அதிகப்பட்சமான மனஅழுத்தம்… உடல் சோர்வு… ஷாக்… எல்லாமே சேர்ந்து தாக்கியிருக்கு.” என்றார். சத்ரியன் எதுவும் பேசவில்லை. அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. டாக்டர் இங்கு வரும் முன்னே ஷ்ரத்தா உடையெல்லாம் செங்குருதி வழிந்து தரையில் கிடக்க, அவளை அள்ளி எடுக்கும் போதே இதை யூகித்திருந்தான்.
சக்திபாலன் சத்ரியனை பல வருடங்களாக அறிவார். அதனால் தான் அன்று மைக்கேல் இவரை போல வேடமிட்டு வந்ததும் கண்டறிந்துவிட்டான்.
சத்ரியன் கண்ணில் ஒரு நொடி தோன்றி மறைந்த வெற்றிடத்தை பார்த்துவிட்டார். “சாரி சத்ரியன்” என்றார் மெதுவாக. சத்ரியன் பதில் சொல்லவில்லை. அவன் பார்வை முழுவதும் படுக்கையில் மயங்கி கிடந்த ஷ்ரத்தாவிடமே இருந்தது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடே சிறிய மருத்துவமனையாக மாறியது. ஷ்ரத்தாவுக்கு சிகிச்சைக்கு வேண்டிய கருவிகள், மருந்துகள்… டிரிப்ஸ்… எல்லாமே வந்து சேர்ந்தன. ஷ்ரத்தாவிற்கு உடை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு, நம்பிக்கையான நர்ஸ் ஒருத்தி அழைத்து வரப்பட்டாள்.
எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான் சத்ரியன். சக்திபாலன் கிளம்பும் முன், “அவங்க கண் திறந்ததும் நர்ஸ் பார்த்துப்பாங்க. லேட்டா கண் விழிக்கலாம்.” என்றார். சத்ரியன் அதற்கும் புரிந்தது என்பது போல தலையசைத்தான்.
இரவெல்லாம் தூக்கத்தை பறிக்கொடுத்து நின்றான் நாயகன்.
அடுத்த நாள் விடியலும் வந்தது.
ஆனால் ஷ்ரத்தா கண் திறக்கவில்லை. காலை நேரமே கடந்தது. உணவை கூட மறந்தவனாக நின்றான். மதியம் நெருங்கிய சமயம், அப்போது யோகேஷ் உள்ளே வந்தான்.
“பாஸ்…” என்றதும், சத்ரியன் திரும்பிப் பார்த்தான்.
“வினோத்… அப்பறம் ரிதுராஜனை முடிஞ்சிட்டேன் பாஸ்” அவ்வளவுதான். சத்ரியன் மெதுவாக, “ஓகே.” என்றான். அதற்கு மேல் எந்த எதிர்வினையும் இல்லை. யோகேஷ் கூட சில நொடிகள் அவனை பார்த்து நின்றான். பல வருடங்களாக சத்ரியனை பார்த்தவன். ஆனால் இப்படி அமைதியாக இருப்பதை அரிதாகவே பார்த்திருந்தான்.
மதியமும் கடந்தது. மாலை சூரியன் ஜன்னல் வழியாக உள்ளே விழுந்துக் கொண்டிருந்த நேரம்… ஷ்ரத்தாவின் விரல்கள் மெதுவாக அசைந்து, கண்கள் திறந்தன.
பார்வை மங்கலாக இருந்தது.
சுற்றிலும் பார்த்தாள். அறை முழுவதும் மருத்துவ உபகரணங்கள். டிரிப்ஸில் மருந்து ஏறியது. அருகில் நர்ஸ் இருந்தார்.
இன்னொரு பக்கம்… சத்ரியன் நாற்காலியில் அமர்ந்தபடி அவளை நேராக பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த பார்வை அவளுக்கு புரியவில்லை. கோபமா? வலியா? வெறுப்பா? வெறுமையா? எதுவென்று புரியவில்லை.
“சத்ரியா…” என்று மெதுவாக அழைத்தாள். அவன் எழுந்து அருகே வந்தான். நர்ஸ் நாசூக்காய் வெளியேறினாள். சில நொடிகள் அவளை பார்த்தபடி நின்றவன்,
பிறகு, “நீ கன்சீவா இருந்த தெரியுமா?” என்றான். ஷ்ரத்தா புரியாமல் பார்த்தாள். அவன் பார்வையே அவளுக்கு உண்மை தெரியாததை சொல்லிவிட்டது.
“நடந்த பிரச்சனையில…” அவன் குரல் சற்றே கரகரத்தது. “அபார்ஷன் ஆயிடுச்சு.” என்றான். அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
கதவை அடையும் முன் ஒரு நொடி நின்றான். திரும்பிப் பார்க்கவில்லை ஏதேதோ கூற நினைத்தவன், அடுத்த நொடி வெளியே சென்றுவிட்டான். ஷ்ரத்தா அப்படியே படுத்திருந்தாள்.
கன்சீவா இருந்தேனா? நானா?
என்று அவளது மனம் மீண்டும் மீண்டும் கேட்டது. மெதுவாக தனது வயிற்றை தொட்டாள். அப்போது தான்… நேற்று இரவு ஏற்பட்ட அந்த விசித்திரமான வலி நினைவுக்கு வந்தது.
வினோத்தை சத்ரியன் கொல்ல துடித்தது. ஹரிணியை சத்ரியன் கற்பழித்ததாக வினோத் குற்றம் சாட்டியது. அனைத்தும் கலந்த குழப்பம்… அதற்குள் வயிற்றை பிளந்தது போல வந்த வலி… அதை தாங்கி நின்ற தருணம். பிறகு மயக்கம்… அதற்கு பிறகு எதுவும் நினைவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்தது.
“கு..குழந்தை…” என்று உதடுகள் நடுங்கின. அந்த ஒரு வார்த்தை கூட முழுமையாக வெளிவரவில்லை. ‘சத்ரியன் இதை எப்படி எடுத்திருப்பார்?’ என்ற கேள்வி அவளை வாட்டியது.
தனது வாரிசு போய் விட்டதற்காக கோபமா? இல்லை… ஏன் இவ்வளவு அலட்சியமாக கர்ப்பம் அடையும் அளவிற்கு இருந்தாய் என்று நினைக்கிறாரா? இல்லை… வினோத்தை பற்றி கூறாததால் தன்னை வெறுக்கிறாரா? எதுவும் புரியவில்லை. அவனது முகம் நினைவுக்கு வந்தது. சத்ரியன் கல்லைப் போல இருந்தானே. அதுவே அவளை அதிகமாக பயமுறுத்தியது. எழுந்து அவனை தேடி பேச வேண்டும் என்று முயன்றாள். ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை.
அந்த நேரம் வெளியேறிய நர்ஸ் உள்ளே வந்தாள். “மேம்… எழுந்திருக்காதீங்க.”
என்றாள் மென்மையாக. “ரொம்ப வீக்கா இருக்கிங்க.” ஜூஸ் ஏந்திய கண்ணாடி கோப்பையை நீட்டினாள். “முதல்ல இதை குடிங்க.”
ஷ்ரத்தா அமைதியாக அவளை பார்த்தாள். ஆனால் அவள் பார்வை முழுவதும் கதவிலேயே இருந்தது. சத்ரியன் மீண்டும் உள்ளே வருவானா என்ற எதிர்பார்ப்பில் இருக்க, இந்த பழச்சாறு இவளை பருக வைக்க சத்ரியன் கூறினாரா என்று எண்ணினாள்.
சத்ரியன் தனியாக பால்கனியில் நின்று, பிறக்கவே முடியாமல் போன தன் குழந்தையை நினைத்து முதல் முறையாக உண்மையான குற்றவுணர்வில் திளைத்தான். எந்தவிதமான ராஜாங்கத்தை கட்டி ஆள்பவனுக்கும் தனக்கு பின் தன் வாரிசு என்று தன் உதிரத்தில் பிறந்த குழந்தையை எதிர்பார்க்கும் ஆசை உண்டல்லவா. அது சத்ரியனுக்கும் இருந்தது. எந்த அழகியிடமும் தன் வாரிசை சுமக்க விரும்பாமல் பாதுகாப்பை பயன்படுத்துபவன், ஷ்ரத்தாவிடம் எவ்விதமான தடையுமின்றி தான் உறவாடினான்.
ஷ்ரத்தா இவனை நேசிப்பதாக எடுத்துரைத்தாள். ஆனால் சத்ரியன் எதையும் பகிர முடியாது தன் உதிரம் சென்ற வருத்தத்தில் திளைத்தான்.
ஒரு வாரம் கழிந்தது.
ஒரு வாரமாக சத்ரியன் ஷ்ரத்தாவின் அறைப்பக்கம் கூட செல்லவில்லை. அபார்ஷன் ஆன நாளிலிருந்து அவன் முழுவதுமாக தொழிலில் மூழ்கியிருந்தான்.
ரிதுராஜின் மரணம் சிறிய விஷயம் இல்லையே. கிங்பிங் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதனால் அன்றைய மாலை முக்கியமான பிரமுகர்கள் எல்லாம் அக்கூட்டத்தில் ஒன்று திரட்டியபடி பேச்சு நடைபெற்றது. அங்கு இருந்த பலரும் அமைதியாக இருந்தாலும், சில முகங்களில் அதிருப்தி அப்பட்டமாக தெரிந்தது.
முதலில் ஒருவர் எழுந்தார். “முதல்ல மல்கோத்ரா… இதே பார்ல செத்து நம்ம கண் எதிர்ல இறந்தார்.” என்று கூறினார்.
இன்னொருத்தரோ, “இப்ப ரிதுராஜை கொன்று புதைச்சிட்டிங்க..” என்றார்.
“வர வர நம்ம ஆளுங்களையே நீங்க அழிக்கறதா வெளியில பேச்சு போகுது. இப்படியே போன எப்படி தொழில் செய்வது?” என்று அறைக்குள் சலசலப்பு எழுந்தது.
அதற்குள் யோகேஷ் முன்னே வந்தான். “மல்கோத்ரா என்ன செய்தான்னு எல்லோரும் மறந்துட்டீங்களா?” அனைவரும் அவனை பார்த்தனர்.
“ஓ… தெரியாதா.. இன்ஸ்பெக்டர் ராகவனிடம் சத்ரியன் பாஸை காட்டிக்கொடுத்தது மல்கோத்ரா தானே. இந்த கூட்டத்தையே கட்டி ஆளற சத்ரியனை மாட்டி விட எங்கிருந்து வந்தது தைரியம். அதனால தானே போட்டு தள்ளினார்.” என்று கேட்டதும் அங்கிருந்தவர்கள் அடங்கி அமைதியானார்கள்.
சற்று இடைவெளியிட்டு ரிதுராஜ் இறப்புக்காக பேசியவரை கண்டு “அப்பறம்.. ரிதுராஜ்…” என்ற யோகேஷின் குரல் ஒலித்தது.
“ஒரு தடவை இல்ல. இரண்டு தடவை இல்ல. ஐந்து தடவைக்கு மேல சத்ரியன் பாஸை கொல்ல முயற்சி நடந்துருக்கு. அது தெரியுமா? வரிசையா எத்தனை பேரை வீட்டுக்குள்ள வரை அனுப்பினான்.
சத்ரியன் பாஸை போட்டு தள்ளிட்டு அவரிடத்தில் வர துடிச்சான். இந்த இடத்துக்கு வந்து? பிஷ் மார்க்கெட் போல பேரம் குறைச்சி பேசுவானா?
யோசிச்சு பாருங்க… சின்டிகேட்ல சத்ரியன் பாஸ் வச்சது தான் சட்டம். உங்களுக்கு நீங்க எதிர்பார்த்ததை விட தொழிலில் லாபத்தை தர்றார்ல அப்படியிருக்க என்ன பேசறிங்க?”என்றதும் அறைக்குள் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
யோகேஷ் அதே கோபத்துடன் “சும்மா இருந்த பார்ட்னரை பாஸ் கொல்லலை. பாஸை கொல்ல வந்த பார்ட்னரை தான் கொன்னாரு.” அப்போது வரை அமைதியாக இருந்த சத்ரியன் மெதுவாக எழுந்தான்.
“என் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் நிறைய எதிரிகள் இருப்பது எனக்கு தெரியும். அதுல ரிதுராஜ் என் இடத்துக்கு வர துடிச்சதும் நல்லாவே தெரியும் இத்தனை நாள் விட்டு வச்சதுல தொழில் ரீதியா எந்த தடங்கலும் வந்துடக்கூடாது என்ற காரணத்துக்காக தான். பட்.. ஆதரத்தோட என் வீடு தேடி எத்தனை பேர் என்னை கொல்ல வந்தவங்களை தான் முடிச்சிருக்கேன். ரிதுராஜும் அப்படி தான்.
இங்கிருக்கறவங்களில் அடுத்தவன் யாரையும் நான் கொல்ல வேண்டிய நிலை வராத மாதிரி நீங்க நடந்துக்கோங்க.” என்று எச்சரிக்கையை விடுத்தே சென்றான்
அவன் வெளியே நடந்து சென்றவனை, யாராலும் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
அன்று இரவு.. ஒரு வாரமாக தவிர்த்துக் கொண்டிருந்த அந்த அறை வாசலுக்கு முன் வந்து நின்றான் சத்ரியன்.
சில நொடிகள் கதவை பார்த்தபடி நின்றவன்… மெதுவாக உள்ளே நுழைந்தான். ஷ்ரத்தா ஜன்னல் அருகே அமர்ந்திருந்தாள். உடல் கொஞ்சம் போல தேறியிருந்தது. ஆனால் முகம் இன்னும் வாடியிருந்தது. அவள் அவனை பார்த்தாள்.
ஒரு வாரம் கழித்து முதன்முறையாக. சத்ரியன் அருகே வந்து நின்றான்.
“இன்னும் எவ்வளவு நாள் உம்முனு இருக்க போற?” என்றதற்கு ஷ்ரத்தா பதில் சொல்லவில்லை.
“ஆப்ட்ரால் அபார்ஷன் தானே ஆயிடுச்சு.” என்றவன் தோளைக் குலுக்கினான். ஷ்ரத்தா அவளோ அதிர்ந்து பார்த்தாள்.
சத்ரியனோ “நல்லா ஆனதும் மறுபடியும் குழந்தை பெத்துக்கற ஆசையிருந்தா பெத்துக்கோ.” அந்த வார்த்தை ஷ்ரத்தாவின் உள்ளத்தை கிழித்தது. கண்களில் கண்ணீர் திரண்டது.
“அப்போ உங்களுக்கு எதுவுமே தோணலையா?” என்று மெதுவாக கேட்டாள்.
“எதைப் பத்தி?” என்றான். “நம்ம குழந்தை…” என்று குரல் உடைந்தது. சத்ரியன் முகம் எரிச்சலுடன் “அது உருவம் கூட இல்லாம போயிடுச்சே.” என்றான்.
ஷ்ரத்தாவால் தொடர முடியவில்லை. சத்ரியன் சில நொடிகள் அமைதியாக இருந்தான். பிறகு அவள் முகத்தை பார்த்தான்.
“உங்களால் எப்படி அப்படி நடந்துக்க முடிந்தது?” என்றாள்.
சத்ரியன் புரியாத பார்வை பார்க்க,”ஹ..ஹரி..ஹரிணியை” என்று அந்த பெயரை கேட்டதும் சத்ரியன் அசையாமல் நின்றான்.
ஷ்ரத்தா துவண்டவளாக, “வினோத் அண்ணா சொன்னது… என்னால மறக்க முடியல.” என்று அவள் அழுதாள்.
ஷ்ரத்தா உடல் குலுங்கியது. “ஒரு பொண்ணா… என்னால அதை தாண்டி வர முடியல. அவங்க என்ன தப்பு பண்ணினாங்க? அவங்க வாழ்க்கை ஏன் கெடுத்திங்க?” என்று சட்டையை பிடித்து கேள்விக்கேட்டாள்.
சத்ரியன் சட்டையை பிடித்து ஷ்ரத்தா கேள்விக்கேட்க, ஷ்ரத்தா அழுது தோய்ந்து விடுவித்து நிற்க, சத்ரியன் ஜன்னலை பார்த்தான்.
‘நான் என்னவோ பண்ணினேன். உனக்கு என்ன? உன் லிமிட் தாண்டி கேட்காதே’ என்று கூற முடியாது. சத்ரியனுக்கு ஏனோ ஷ்ரத்தாவிடம் நிலைமை விளக்க வேண்டிய எண்ணம் பிறந்தது.
“அன்னிக்கு நான் குடிச்சிருந்தேன் ஷ்ர்த்தா. அவ என் ரூம்ல இருந்தா. அங்கிருந்த பாடிகார்ட்ஸ் எல்லாரும் நைட்டுக்கு வரவச்ச பெண்ணுனு நினைச்சிருந்தாங்க.
நானும் என் ரூம்ல இருந்தவளை அப்படித்தான் நினைச்சேன்.”
அவன் குரலில் வழக்கமான கர்வம் இல்லை.
ஷ்ர்த்தா கண்களை பார்த்து, “அவளை ஆக்கிரமிச்சது தப்பு தான். அதை நான் மறுக்கலை.
யோசித்து பாரு… உன்னை கூட முதல் முதல்ல வினோத் ரூம்ல இருக்கானு சொன்னதும், அச்சோ திவாகர் பொண்ணையா தொட்டேன்னு துடிச்சேன்.
நீ சொன்னியே.. நான் பணத்தை அள்ளி வீசினா எவளாயிருந்தாலும் வருவா. நீயே பார்த்திருக்க.. நெதர்லாந்து நாட்டு உலக அழகி கூட இங்க வந்திருந்ததை. பிளாக் பாஸ்டர் ஹிட் தந்த படத்துல நடிச்ச நடிகையை கூட இங்க வரவச்சியிருக்கேன். எனக்கு வேண்டுமின்னா… நான் அது போல பொண்ணுங்களை பார்த்துப்பேன். நான் ஏன் இஷ்டமில்லாத பெண்ணை தொடுவேன்.
அன்னிக்கு ஹரிணி… அவ காப்பாத்துங்கன்னு கத்தலை.” என்றதும் ஷ்ரத்தாவின் இதயம் வலித்தது.
ஷ்ரத்தாவோ “அவ தான் ஊமையாச்சே.” என்றாள் வலியுடன்.
சத்ரியனோ ”அது எனக்கு தெரியாதே… யோசித்து பாரு.. என் ரூம்ல அந்த மாதிரி ஒரு பொண்ணு வந்தானு நினைச்சி நான் தொட்டேன். மறுத்து தள்ளறப்ப, புதுசு முரண்டு பிடிக்கறானு நினைச்சேன். பஸ்ட் டைம் பிசிகல் ரிலேஷன்ஷிப்ல பயப்படறானு நினைச்சேன். வலி தாங்காம இருக்கனு…” என்று பால்கனி பிடியை இறுகினான்.
“எல்லாமே தப்பா நினைச்சேன். முடிஞ்ச பிறகு தான் அவ ஏதோ.. ஏதோ சரியில்லனு புரிஞ்சது. அரை பிணமா கிடந்தா. நானா உடனே ஆம்புலன்ஸ் வரவச்சேன். அவளை டாக்டர் சக்திபாலனிடம் அனுப்பினேன்.”
“அப்பவும் அவ யாருனு தெரியாது.” அவன் பார்வை ஷ்ரத்தாவை சந்தித்தது. “பிராமிஸா சொல்றேன். அவ வினோத்தோட காதலி, அவ ஊமைன்னு தெரிஞ்சிருந்தா.. நான் அவளை தொட்டிருக்க மாட்டேன். வினோத் என்னோட விசுவாசி. அவன் வாழ்க்கையை எப்படி கெடுத்திருப்பேன்.
படைச்ச கடவுளே கண்ணை பிடுங்கியதா ஆகாது” என்றதும் அறைக்குள் நீண்ட அமைதி நிலவியது.
ஷ்ரத்தாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. சத்ரியன் சொன்னதில் பொய் இல்லை. தன்னை எல்லாம் கொண்டு போய் தன் வீட்டிலேயே பாதுகாப்பாக இறக்கி விட கூறினான்.
இங்கு வந்தப்பிறகும் தான் அதிகபட்சமாக அவனது ஈகோவை கிளறிய பொழுதும், தன்னை கற்பழிக்க முயற்சிக்கவில்லை.
சத்ரியன் ஹரிணியை கற்பழிக்கும் நோக்கத்தில் நெருங்கவில்லை. ஆனால் ஹரிணியின் வலி இதற்கெல்லாம் காரணம் அடுக்க முடியாதே.
சத்ரியன் அன்றுயிருந்த சூழ்நிலையில் தவறான புரிதலில் அவன் அறையில் இருந்தவளை பணத்திற்காக படுக்க வந்தவளாக நினைத்துவிட்டான்.
போதையின் பிடியிலும், அதிகாரம் செய்து விட்டான்.
எதுவாக இருந்தாலும்… ஒரு பெண்ணின் வாழ்க்கை உடைந்திருந்தது. அதுதான் அவள் மனதை அதிகமாக வலிக்க வைத்தது. சத்ரியன் அதையும் உணர்ந்தான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Chattiyan first time disturbed. But he didnt tell anything open to sharadha. Very intresting sis.
ஹரிணி வாழ்க்கையில் நல்லது நடந்தால் ஷ்ரத்தா மனசு ஆறும்
Waiting for nxt epi
Romba emotional epi sis🥺😕 ulagathuku varathuku munnave andha kuzhandhai poiduchi paavam shratha ennum evlo dhan thaanguvaa😕
nice
itha ethirpakal shradha consive agi ipo abort aeiduchi antha kastam rendu perukume iruku ithula chathriyan porumaiya solran innonu pethukonu sari ok hariniya pathi nadanthathaium explain panrane athisayama avan solrathum crt thane evlo models vanthu pi irukanga antha mari ninachitan athuvm drinks paninathula
தீ லீடர்…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 41)
அடிப்பாவி.. இப்பக்கூட அவனைப் பத்தி தான் யோசிக்கிறாள். அவனுக்கு எதுக்கு கோபம், வலி, வெறுப்பு, வெறுமை..? அதெல்லாம் உனக்குத்தான்டி அவன் மேல இருக்கணும், உன் வாழ்க்கையைத் தான் திசை திருப்பிட்டான், தவிர உன் வாழ்க்கையையும் சேர்த்து அவன் தான் முடிவெடுக்கிறான், வாழ்ந்திட்டும் இருக்கிறான்.
பாருடா, க்ரேட் கிங்பின்னுக்கு வலி தெரியுதாக்கும். இ்த்தனை நாளா எத்தனைப் பேர் உயிரை எடுத்திருப்பான், அப்பவெல்லாம் வலிக்காத சத்திரயனுக்கு இப்ப ஷ்ரத்தாவட கரு கலைஞ்சிடுச்சின்னு தெரிஞ்சவுடனே வலிக்குதோ…! அதாவது தனக்கு வந்தால் ரத்தம், எதிரிக்கு வந்தால் தக்காளிச் சட்னியோ..?
அட லூசே..! வெத்து வேட்டு சாக்கு சொல்றதைப் பாரேன். படுக்கைக்குன்னு வந்துட்டப் பிறகு புதுசு என்ன, பழசு என்ன ? ஆனா ஒரு பொண்ணு முரண்டு பிடிக்கிறான்னா, சம்திங் எல்ஸ்ன்னு புரிஞ்சிக்க வேண்டாமா ? அப்படி புரிஞ்சிக்க முடியாம போனதுக்கு காரணம்
இந்த சத்ரியன் நிதானத்துல இல்லை. அதான் உண்மையான ரீசன். சத்ரியன் செய்த தப்பால வினோத் என்கிற உண்மையான விஸ்வாசியை துரோகியா மாத்தினது மட்டும் இல்லாம,
கடைசியில துரோகத்தின் சம்பளம் மரணம்ன்னு தீர்ப்பு எழுதிடுச்சு.
ஒரு தப்பை தெரியாமல் செய்தான், இன்னொரு தப்பை தெரிஞ்சே செய்தான். முதல் தப்பு ஹரிணியை கெடுத்தது, இரண்டாவது தப்பு வினோத்தை கொன்னது.
ஆக மொத்தம், தப்பை தெரிஞ்சு செய்தாலும், தெரியாமல் செய்தாலும்… தப்பு, தப்புத் தானே ?
😴😴😴
CRVS (or) CRVS2797
Super super super super super super super super super super super super super super super super super super interesting