Skip to content
64 / 100 SEO Score

அத்தியாயம்-44

The leader-44

கடலின் நடுவே மிதந்து கொண்டிருந்த அந்த பிரம்மாண்ட கப்பல். கரையிலிருந்து பல மைல்களை தாண்டி தான் பயணித்தது

நாட்கள் நகர நகர, ஷ்ரத்தாவின் மனதிலிருந்த பாரமும் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது.

 

காலை எழுந்தவுடன் பால்கனியில் நின்று கடலை ரசிப்பது அவளது முதல் வேலையாக மாறியது.

அந்த நாளும் அப்படித்தான்.

மென்மையான வெள்ளை உடையில் காற்றை ரசித்தபடி நின்றிருந்தாள். பின்னால் வந்து நின்ற சத்ரியன், “இங்க வந்ததிலருந்து காலைல எழுந்த உடனே கடலை பார்க்க வந்துடற. இதை பார்க்கலைன்னா உனக்கு நாள் தொடங்காதா?” என்று கேட்டான்.

 

ஷ்ரத்தாவோ “பின்ன… அமைதியான நடுக்கடல்.. அதுல ஆர்ப்பாட்டம் இரைச்சல் கொண்ட புயலுக்குரியவனா நீயும் அமைதியா தெரியற. இது ரொம்ப அழகா இருக்கு.” என்று அவனையும் ரசித்து அனைத்திட, புருவத்தை உயர்த்தினான்.

 

“ஓகே… ஸ்விம்பிங் தெரியுமா?” என்று கேட்க ஷ்ரத்தா விழித்தாள்‌. “தெரியலைன்னாலும் வா. நான் ஒன்னும் உன்னை கடல்ல தள்ளி ஸ்விம் பண்ண சொல்லலை. கப்பல்ல இருக்கற ஸ்விம்மிங்புல் பிளேஸ்ல, அங்க ஆழமில்லாத இடத்துல நின்றுக்கோ. அங்க ஸ்விமிங் சூட் இருக்கு” என்று அழைத்து சென்றான்.‌

 

“ஸ்விமிங் சூட் எல்லாம் போடமுடியாது.” என்று மறுத்தவளிடம், “பட்டு சேலை எடுத்து தர்றேன் கட்டிட்டு வர்றியா?” என்று கேட்க, “பட்டுல… சாப்டா சில்க் சேரி வாங்கி தா. நான் இதுவரை சேரியே கட்டியது இல்லை.” என்று அவளும் கூற, “கொழுப்பா.. இப்ப ஸ்விம்மிங் சூட் போடலை. நானே இந்த நைட் சூட்டை கழட்டிட்டு போட்டு விடுவேன்” என்று மிரட்டினான்.‌

 

“யாராவது இருப்பாங்க முடியாது.” என்றாள்.

 

“எவனும் உன்னை உத்து பார்க்க மாட்டாங்க. பார்த்தா கண்ணை நொண்டி சுறாக்கு போட்டுடுவேன். அது அவனவனுக்கு தெரியும். அதுவுமில்லாம ஸ்விம்மிங் சூட் போடறது காமன் டி” என்றான்‌.

 

ஷ்ரத்தா இந்த அடச்காதவனிடம் தப்பிக்க வழியின்றி சிந்திக்க, “ஆமா… இந்த பெரிய மனுஷி ஆனா சோலை எல்லாம் கட்டுவாங்களே. நீ கட்டலை‌ உங்கப்பா சேரி வாங்கி தரலை?” என்று கேட்டான்.‌

 

“அம்மா அப்பா லவ் மேரேஜ். அதுல அம்மா சொந்தம் டோட்டலா உறவை துண்டிச்சிட்டாங்க. அப்பறம் ஏது தாய்மாமா சீரு. அதுவுமில்லாம அப்பா ஹாப்சேரி வாங்கி தந்து அக்கம் பக்கத்துல செலிபரேட் பண்ணினோம். இதுவரை எனக்கு அப்பா சேலை வாங்கி தந்தது இல்லை. சேரியே கட்டியது இல்லை” என்றாள்.

 

“ஓ… லாயர் திவாகர் லவ் மேரேஜ் என்றால் நம்ப முடியலை‌” என்றான்.‌

 

‘ம்கூம்.. லாயர் திவாகராம். உனக்கு மாமனார் டா.’ என்று ஷ்ரத்தா மனதில் கூறிக் கொண்டாள்.

 

ஒருவழியாக அவளுக்கு குட்டி பாப்பாவுக்கு உடுத்தும் கவுன் போன்ற ஸ்விம்மிங் சூட்டுடன் நடக்க, ‘பிகினி எல்லாம் போடறதுயில்லை’ என்று சிரித்து அவளோடு சேர்ந்து நடந்தான். சத்ரியனும் ஸ்விம் ட்ரங்ஸ் அணிந்து நடக்க, “வயிற்றுல அந்த புல்லட் தழும்பு மாதிரி ஆகிடுச்சு.” என்று அவனது தழும்பை பார்த்து கூறினாள்.

 

“உனக்காக வாங்கிய மெடல்” என்று கூறிட, “என்ன அடிக்கடி சைட் அடிக்கற நீ” என்றான்.

 

தன் கள்ளத்தனம் அறிந்தததும், “உங்களை யாரு இப்படி நிற்க சொல்வது. நான் பார்த்தவரை பெரும்பாலும் இப்படி தான் சுத்தறிங்க. முன்ன போதையில எவளோடவாது இருந்து வெளியே வந்து நின்றிங்க. நடுவுல புல்லட் பட்டு ஷர்ட் போடாம. இப்ப என் கூட இருக்கறப்ப எல்லாம்.” என்றவளுக்கு கோபம் தான் தெரிந்தது.

 

“மேடம் எனக்கு திரும்ப அழகிகளை என் பக்கத்துல வச்சிக்கணும்னு ஆசையா இருக்கு” என்றான்

“ஜல சமாதி கேள்விப் பட்டிருக்கிங்களா. தண்ணில முக்கி கொன்னுடுவேன்” என்று மிரட்டினாள்.

 

“என்னையே மிரட்டற?” என்று கேலியுடன் சில்மிஷம் செய்து, அன்றைய நாள் முழுவதும் நீச்சல் குளத்திலேயே கழிந்தது.

 

பெரிய நீலநிற குளம், மெல்லிய இசை, கடற்காற்று, ஷ்ரத்தா கால்களை மட்டும் தண்ணீரில் வைத்தபடி அமர்ந்திருந்தாள்.

 

நிறைய பேசினார்கள்.. சத்ரியன் பெற்றவர்களை பற்றி கேட்டாள். பெருமூச்சொன்றை விடுத்து, “நான் பிறந்து விவரம் தெரிந்ததிலருந்தே… அப்பா இந்த கூட்டத்தில ஒருத்தர். அதனால எப்படி இந்த இடத்துல வந்தார்னு வரலாறு தெரிந்துக்கலை. நான் படிச்சது பேட்சுலர் டிகிரி அமெரிக்கா மாஸ்டர் டிகிரி லண்டன்னு, பாடிகார்ட்ஸ் கூடவே தான் வருவாங்க போவாங்க.

நான் காலேஜ் பேட்சுலர் படிச்சு முடிச்சப்ப… அம்மாவுக்கு அப்பாவோட வாழற வாழ்க்கை போரடிக்கவும் டிவோர்ஸ் பண்ணிட்டு போயிட்டாங்க. தாத்தாவோட தனியா வாழ்ந்தாங்க‌. அப்பாவோட நிழல் போல நான் இருந்ததாலையோ, இல்லை அப்பா தான் ஹீரோனு எல்லா பையன் மாதிரி நினைச்சிட்டதாலையோ இந்த கூட்டத்துல எனக்கு நியாயம் அநியாயம் பிரித்தரிய தோணலை.

 

இந்த வாழ்க்கைக்கு நான் ஈஸியா அடாப் ஆகிட்டேன். அதோட… அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அப்பாவோட வழில நானும் அப்பா மாதிரி ஒரு கூட்டத்துக்கு லீடரா இருக்கவே லைக் பண்ணினேன். அப்பா இறந்ததும் நெப்போடிஸம் மூலமா இந்த இடத்துக்கு வந்தாலும், அந்த ஆளுமை இருப்பதா அப்பா கூடயிருப்பவங்க சொல்வாங்க.

 

சக்திபாலன் டாக்டர் அப்பாவோட கிளாஸ்மெட். எனக்கு ஏதாவதுன்னா‌.‌.. அவரிடம் தான் ஹெல்த் இஸ்ஸு கேட்டுப்பேன்.

அம்மா அப்பா இறந்து கொஞ்ச நாளில் அப்பறம் இறந்துட்டாங்க. சிங்கிள் சைல்ட் என்பதால் தனி ராஜா‌” என்று சிரித்தான்.

 

“நீ என்ன படிச்ச? அமெரிக்கா லண்டன்ல ஸ்டடிஸ்னா… அந்த திருக்குறள் எப்படி சொன்ன?” என்றாள்.‌

 

“திருக்குறளா? ஓ.. அந்த இதழ்முத்தம் பருகினப்ப சொன்னதா? அம்மாவோட டிரைனிங். திருக்குறள், இதிகாசம், மகாபாரதம் ராமாயணம் ப்ளா ப்ளா.. அம்மா கதை சொல்வாங்க. அம்மா அப்பாவை டிவோர்ஸ் பண்ணிட்டதா சொன்னேனே..  அவங்க இது போல புக்ஸா பிறந்த நாளுக்கு படிக்க கிப்ட் தருவாங்க. அம்மா தந்த கிப்ட் உயிரோட இருந்தப்ப மூட்டை கட்டி வச்சது. அவங்க இறந்தப்பிறகு அவங்க தந்த புக் எல்லாம் வாசித்தேன்.” என்று தோளைக் குலுக்கினான்.

 

“அட்லீஸ்ட்… அத்தை கூட நீ வாழ்ந்திருக்கலாம். நான் சாதாரணமா உன்னை சந்திச்சு இருக்கலாம். இந்த மேஜிக் லவ் நமக்குள்ள நிகழ்ந்து சேர்ந்திருக்கலாம்” என்றாள்.

 

“இப்ப மட்டும் நீயும் நானும் சேரலையா?” என்றான்.

 

ஷ்ரத்தாவோ “பச்.. என்னயிருந்தாலும் உன் பேக் ரவுண்ட் என்னை நிம்மதியா காதலிக்க விடலை. சொல்லப்போனா உன்னை விரோதியா தானே சந்திச்சேன்.

இப்பவும் உன்னால தாலி கட்டி என்னை பகிரங்கப்படுத்த முடியாதே” என்றாள்.

 

சத்ரியன் திடீரென்று ஷ்ரத்தாவை தண்ணீரில் தள்ளிவிட்டான்.

 

“எனாஃப்” என்று கத்தியவன் தன்னை நிதானப்படுத்தி, “நடக்காததையோ… நடந்து முடிந்ததையோ.. பேசி ஒரு பிரோஜனம் இல்லை ஷ்ரத்தா. சில பேச்சை முதல்லயே அவாய்ட் பண்ணிடு. நம்ம வாழ்க்கைக்கு அதான் பெஸ்ட்” என்றான்.‌

 

கொஞ்ச நேரம் உம்மென்று ஷ்ரத்தா நின்றாள். பிறகு, “இங்க வந்தது ரிலாக்ஸ் பண்ணினேன். என்னை ஏன்டி கொல்லற. எனக்கு மிடில் கிளாஸ் போல யோசிக்க கூட வராது. எதுக்கும் அழுது பீல் பண்ண டைமில்லை. இங்க வந்தது சந்தோஷமா இருக்க.” என்று நினைவுப்படுத்தினான்.

 

ஷ்ரத்தா மெதுவாக மற்றதை புறம் தள்ளி, அவனோடு தண்ணீரில் நின்றாள்.

 

“நிஜமாவே ஸ்விம் பண்ண தெரியாதா?” என்று கேட்க உதடு பிதுக்கினாள். சத்ரியன் சிரித்துவிட்டு, அவளை தன்னருகே இழுத்து, இருவரும் சிறுபிள்ளைகளைப் போல விளையாட ஆரம்பித்து விட்டனர்.

 

சில விஷயங்களை பேசிய பிறகு ஷ்ரத்தாவின் மனதிலிருந்து நடப்பை ஏற்றாள்.

 

அதை பார்த்த சத்ரியனின் முகத்திலும் தெரியாமல் புன்னகை வந்தது. அதன்பின் விடிய விடிய பொழுதை தும்பல் வரும் வரை நீரில் கொட்டமடித்தனர்.

 

மறுநாள் கப்பலின் விளையாட்டு தளத்தில் கூட, “எனக்கு இது வராது.” என்று பூப்பந்து மட்டையை பார்த்தபடி கூறினாள்.

 

“அதான் எல்லாத்தையும் சொல்லித் தரப்போறேன்.” என்றான் சத்ரியன்.

“நீங்களா?”

”ம்ம்” என்றான்.‌

 

“உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லையா?” என்று கேட்க, மந்தகாசமான புன்னகையை வீசினான்.

 

முதல் பத்து நிமிடம்… ஷ்ரத்தா அடித்த ஷட்டில் எல்லாம் வேறு திசையில் பறந்தது. சத்ரியனோ பொறுமையாக நின்றான். “கையை இப்படி வைடி.” என்று அவள் பின்னால் நின்று மட்டையை பிடிக்க வைத்தான். ஷ்ரத்தாவின் இதயம் வேகமாக துடித்தது. அவன் குரல் காதருகே கேட்கவும்… அவளால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை.

 

“ஷ்ரத்தா.” என்று கிசுகிசுக்க,

“ம்ம்ம்…” என்றவளிடம், “ஷட்டில் அங்க போயிடுச்சு.” என்று சிரித்தான்.

 

“நீ பக்கத்துல வந்தாலே நான் ஃப்ரிஸ் ஆகறேன்.” என்று கூறி பேசினாள். நாளெல்லாம் ஈரூடல் ஒருயிராய் இருந்தனர்.

 

நாட்கள் நகர்ந்தன. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது. ஒரு நாள் அங்கிருந்த தியேட்டரில் ரிலீஸ் ஆகாத புதுப்படம் ஒளிப்பரப்பி பார்த்தார்கள்.

 

“நான் எல்லாம் திருட்டு சிடில படம் பார்க்காதவ. டவுண்லோட் பண்ணி படம் பார்க்கலாம்னு

மனிஷா கேட்டா கூட அச்சோ தப்புனு சொல்வேன். ஆனா எனக்கு பிடிச்ச ஆக்டர் படம், ரிலீஸ் ஆகாம பார்க்கறேன்.” என்று கவலை தோய்ந்த குரலில் கூறினாள்.‌

 

“போதும் டி நியாயவாதி. இப்ப நீ லாயர் திவாகரோட பொண்ணு இல்லை‌. சத்ரியனின் பொண்டாட்டி.” என்று மோதிரத்தை வருடி முத்தமிட்டான்.

 

ஷ்ரத்தாவோ “சத்ரியன்.. இந்த மோதிரம் அப்ப தாலிக்கு நிகரா போட்டிருக்கியா?” என்று கண்கலங்க கேட்டாள்.

 

“இன்னுமா புரியலை? சில விஷயம் எக்ஸ்பிளைன் பண்ணாமலே நீ புரிந்துப்பனு நினைச்சேன்” என்று கேட்டு அவளை பார்த்து சிரித்தான்.

 

சத்ரியன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.

 

இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு விஷயத்தில் பூரித்துக் கொண்டாள். அவனை பற்றி அறிந்துக் கொண்டாள். அது சரியான பக்கமோ தப்பான பக்கமோ ஏற்க பழகினாள்.

 

மறுநாள் இசை நிகழ்ச்சி என்று தனித்து ஆடினார்கள். கடலை பார்த்தபடி இரவு உணவு. சூரிய உதயத்தை ரசித்தபடி காலை உணவு. ஷ்ரத்தாவிற்கு மிகவும் பிடித்தது உணவகங்கள் என்று ரசித்தாள்.

 

“இவ்வளவு சாப்பாடு யாரு சாப்பிடுவாங்க?” என்று வியந்தாள். உலகத்தின் பல நாடுகளிலிருந்து வந்த உணவுகள். இத்தாலிய பாஸ்தா, மெக்சிகன் உணவுகள், அரேபிய இனிப்புகள், ஜப்பானிய உணவுகள் எல்லாமே அவளுக்கு புதிதாக சுட்டிக்காட்டி சுவைக்க வைத்தான்.

 

இரவு நேரங்கள் இன்னும் அழகாக இருந்தன. கப்பலின் மேல்தளத்தில் நின்று நட்சத்திரங்களை பார்ப்பதும், கடலின் சத்தத்தை கேட்பது, அமைதியாக பேசி பேசியே கூடலில் ஊடலில் நேரங்கள் கரைவது தித்திப்பாய் இருந்தது.

 

சில நேரங்களில் பேசாமலே நிற்பது… இருவருக்கும் பிடித்த தருணமாக மாறியது.

 

ஷ்ரத்தா திடீரென்று கேட்டாள். “உனக்கு இந்த மாதிரி வாழ்க்கை பிடிக்குமா? நாம இப்படியே வாழலாமா?” என்று கேட்டாள்.

 

“எது இங்கயேவா?” என்று கேட்க

“ம்ம்ம். எந்த டீலிங் எதுவும் இல்லாம அமைதியா இருக்கறது.” என்றதும் சத்ரியன் சிரித்தான்.

 

“ஒரு வாரம் பிடிக்கும். அப்புறம்? வயலன்ஸ் தேட ஆரம்பிச்சிடுவேன். எனக்கு அட்வென்ஞர் முக்கியம் ஷ்ர்த்தா. உனக்கெப்படி நான் நல்லவன் கெட்டவன் என்றாலும் வேற வழியில்லாம வாழ பழகி அதுக்கு மைண்டை ரெடி பண்ணறியோ, அது போல எனக்கு இந்த கிங்பின் லைப் ஸ்டையில் தான் பழகியிருக்கேன். இதுல டீலிங் விடமுடியாது. எனக்கு கீழே தான் பலரும் இருப்பாங்க என்றதே போதை. எந்தளவு மரணம் துரத்துதோ, அதேஅளவு இந்த வாழ்க்கையில நான் தான் முதல் என்பதும்.” என்றான்.

 

ஷ்ரத்தா அவனை முறைத்தாள்.

“சீரியஸா கேட்கிறேன்.” சத்ரியன் கடலை பார்த்தான்.

 

“எனக்கு இது பிடிக்கும். ஆனா… நான் வாழ்ற வாழ்க்கை வேற.” என்றான்.

 

“அப்படின்னா ஒரு நாள் இதெல்லாம் மொத்தமா விட்டுட்டு வரலாமா?” என்று கேட்டாள். இத்தனை நாள் ஆசைக்கு… பிடிச்சிருக்கு.. என்று கூறியதால் உரிமையாக கேள்வியிடாமல் இருந்தாள். மோதிரத்தை தாலிக்கு நிகராக கூறியதும் அந்த மனைவிக்கு உண்டான ஏக்கத்துடன் கேள்வி கணைகளை துளைத்தாள்.

 

சத்ரியன் அவளை பார்த்தான்.

“நாம அடுத்து நம்ம வாழற பிளேஸுக்கு போகணும். காலேஜும் திறக்க போறாங்கள்ல? மேடம் டாக்டர் ஆகணும் என்ற எண்ணத்தையே மறந்துட்டிங்க” என்றான்.

 

அவன் மெதுவாக அவளது கையை பிடித்தான்.

 

ஷ்ரத்தா எப்படி மறந்தேன். தந்தை டாக்டர் சீட் வாங்கி தந்து இருக்க, படிக்காமல் இங்கே இருக்க முடியாதென்ற உண்மை சுட்டது. வாழ்க்கை சிலருக்கு புரட்டி போட்டது என்பார்களே. அப்த இடத்தில் தான் ஷ்ரத்தா நிற்பது.

 

அவள் விரல்கள் மட்டும் அவனது விரல்களை இறுகப் பற்றின.

 

விடுமுறையின் ஒவ்வொரு நாளும்… அவள் மனதில் இருந்த காயங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றியது.

 

சத்ரியனும் வழக்கத்தை விட அமைதியாக இருந்தான்.

தொலைபேசி அழைப்புகள் குறைந்தன. தொழில் பேச்சுக்கள் குறைந்தன. இங்கிருந்த வரை சத்ரியன் கிங்பிங் இல்லை. அவள் கைப்பிடித்து நடக்கும் ஒரு சாதாரண மனிதன் மட்டும். கடலின் நடுவே இருந்த அந்த அமைதி… கரையை அடைந்ததும் அப்படியே தொடருமா? கரையில் காத்திருக்கும் புதிய பு

யல் இருவரின் வாழ்க்கையையும் மீண்டும் மாற்றுமா?

 

கடல் மட்டும் அதற்கான பதிலை அமைதியாக மறைத்து வைத்திருந்தது.

 

– தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்

என்னப்பா புது தளத்தில் மூன்று நான்கு கதை போட்டும் காத்தாடுது. ரெஜிஸ்டர் லாகின் பண்ணி வாசிக்க சிரமமா எல்லாம் இருக்காது. இந்த தளத்தில் எப்படி வந்து இணைந்தீர்களோ அதே மெத்தட் தான். பிறகு ஏன்.. ஆதரவு வரலை.

வருத்தமா இருக்கு

1-மையலிட்ட சிற்பமே

2-நின் பிரேமம் என் சிநேகம்

3-அயலா அயலா மூன்று புதுகதை போட்டிருக்கேன். இதுல மதுர ஜில்லா மச்சானே கதை புதுகதை தான்.

🥺🥺🥺

 

9 thoughts on “The leader-44”

  1. Shratha antha ring avan potatha nee purinjikalaya intha life nalla irukum than avanukum aasai thana aana athulaye vazha mudiyathu illaya nee doctor aganumnu maranthuta paru

  2. லீடர்…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 44)

    இந்த டீலிங் உலகத்தை சத்ரியனே விட நினைச்சாலும் இனி விட முடியாது. ஏன்னா, அது புலி வாலை பிடிச்ச மாதிரி. வாலை விட்டால் புலியே நம்மளை கொன்னு முழுங்கிடும். இது தெரியாமல் விட்டுடுன்னு ரொம்ப சுலபமா  சொல்றா. 

    தவிர, இனி அவளோட பொழைப்பும் அப்படித்தான் இருக்கப் போகுது. பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் இந்த மரத்துக்கும், அந்த மரத்துக்கும் அலைஞ்சிக்கிட்டே இருக்க வேண்டியது தான். சத்ரியனுக்கு வாழ்க்கைப்பட்டால் இனி கொலையையும், கொள்ளையையும் அவளும் சகிச்சுக்க வேண்டியது தான்,
    இது தான் நிதர்சனம்.

    (நான் ரெண்டு கதை முடிச்சு ரிவ்யூ கூட போட்டுட்டேன், இன்னும் நின் ப்ரேமம் மட்டும் முடிக்கணும்.
    பதினாலு அத்தியாயம் முடிச்சிருக்கேன், சீக்கிரம் முடிச்சிட்டு ரிவ்யூ போட வாரேன்).

    😴😴😴
    CRVS (or) CRVS2797

  3. Wow super super. Wonderful nature of nature and ship. Awesome narration sis. Don’t chatriyian fell in love with sharadha. Fantastic. Love makes magic like this only.

  4. Priyadharshini Panneer Chelvam

    Enala login eh pana mudiyala sister 🙁🙁🙁🙁🙁☹️☹️☹️☹️🙁☹️🙁☹️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!