*மனம் இலகுவானவர்கள் படிப்பதை தவிர்க்கவும்.(டீட்டெயில் நான் எழுதலை. இருந்தாலும் போட்டு வைப்போம்)
அத்தியாயம்-46
சத்ரியனோ அனலாக “என்னை பார்த்தா எப்படி தெரியுது. பிடிக்காத பொண்ணை தொடவே யோசிக்கறவன் நான். குழந்தையை கடத்தறதா பழி போடற. திஸ் இஸ் யுவர் லிமிட் ஷ்ரத்தா.” என்றான்.
ஷ்ரத்தாவோ “என்னால உன்னை புரிந்துக்க முடியலை சத்ரியா. கப்பல்ல இருந்தவரை கணிவான முகம் காதலோட பேசிட்டுயிருந்த. இங்க வந்ததும் முகம் இறுகி பேசற. உதாசினப்படுத்தறியே” என்றாள்.
சத்ரியனோ “ஆமாடி… நான் பாட்டுக்கு ரூம்ல இருந்தேன். உன்னை காணோம்னு தேடினா.. நீ வாசல்ல கதவு பக்கம் நின்று யாரோ ஒரு லேடியிடம் பேசற. அங்க எதிரி யாராவது வந்து அழிக்க வருவாங்கனு ஓடோடி வந்து தவிச்சேன் பாரு. என்னையே சந்தேகப்பட்டு இதுவும் பேசுவ. இன்னமும் பேசுவ” என்றான்.
சத்ரியன் பதட்டமாக வந்து அவளை அவன் பக்கம் இழுத்து பேசியது உதிக்க, “இதே பயம் தான் அந்தம்மாவுக்கும் இருக்கும் சத்ரியா. நீ எப்படி கோழிகுஞ்சை அடைக்காத்திடும் வேகத்துல என்னை பாதுகாப்பா நிறுத்தணும்னு நினைச்சி தவிச்சியோ, அவங்க குழந்தையை காணோம்னா உன்னிடம் சொல்லறாங்க.” என்று வலிகளை ஒப்புமைப்படுத்தினாள்.
சத்ரியன் ஒருநிமிடம் அமைதியாக நின்றான். அங்கும் இங்கும் நடந்தவன், லாயர் திவாகரை கொன்றவரை சொன்னது ஸ்டெல்லா தான். அதனால் தான் ஆதிகேசவ் நிர்மலை அறிந்து,
கொன்று, ஷ்ரத்தாவை பாதுகாக்க முடிந்தது. பதிலுக்கு பணத்தை தந்த பொழுது கூட ஸ்டெல்லா மறுத்துவிட்டதாக யோகேஷ் உரைத்தான். இன்று ஒரு உதவி என்று வந்து நிற்க உதவும் மனபான்மையுடன் இமை மூடினான்.
தனக்கு பழக்கமில்லாத உதவும் எண்ணத்துடன் ஷ்ரத்தா பக்கம் வர, அவளோ முகம் திருப்பினாள்.
சத்ரியனோ போனை எடுத்து யோகேஷுக்கு அழைத்தான்.
“சொல்லுங்க பாஸ்… ஆன்திவேல இருக்கேன்.” என்று பணிந்து கேட்க, “ஒரு குழந்தையோட பிக்சரை செண்ட் பண்ணறேன். அந்த குழந்தையை காணோமாம். ஸ்டேஷன்ல எப்ஐஆர் எல்லாம் பண்ணியதா அவங்க அம்மா சென்னாங்க. அந்த குழந்தையை யார் கடத்தினா என்னனு உடனடியா மேலிடத்துல கேட்டு தெரிந்தாகணும். அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ஏதோ கோ-ஆப்ரேட் பண்ணலையாம். நீ கமிஷனரிடம் பேசி என்னனு பார்த்து முழுசா பொண்ணை கொண்டுவந்து முன்ன நிறுத்து.” என்று முடித்தான்.
“ஓகே பாஸ்” என்று யோகேஷ் குரல் கொடுக்கவும் கத்தரித்து ஷ்ரத்தாவை திரும்பி பார்த்தான்.
ஷ்ரத்தா அப்பொழுது தான் நிம்மதி பெருமூச்சை வெளியிட்டாள்.
“இதான் லாஸ்ட் என் விஷயத்துல தலையிடாத. யாருக்கும் உதவுவதா வாக்கும் தந்துடாத. என்னை புரிதா? அப்பறம் குழந்தையை வச்சோ பொண்ணுங்களை வச்சோ பிசினஸ் பண்ணறவன் நான் இல்லை. காட் இட்.” என்றான்.
ஷ்ரத்தா தலையாட்டி அவனது கரத்தினுள் கரம் கோர்த்துக் கொண்டாள்.
இரவு யோகேஷ் வந்தப் பொழுது “என்னாச்சு யோகேஷ்.. அந்த குழந்தையை ஸ்டெல்லாவிடம் ஒப்படைச்சிட்டியா?” என்று கேட்க ஷ்ரத்தா யோகேஷ் பதிலுக்காக காத்திருந்தான்.
யோகேஷ் தயக்கத்துடன் “பாஸ் கமிஷ்னர் நெல்சனிடம் பேசினேன். அந்த… பொண்ணு கடத்தினவங்களை பத்தி சொன்னார்” என்று தயங்கினான்.
“என்னடா ரொம்ப தயங்கற?” என்று கேட்டான் சத்ரியன்.
யோகேஷ் ஷ்ரத்தாவை பார்த்து, எச்சி விழுங்கி, “பாஸ் உங்களுக்கு கீழே இருக்கற எந்த ஆட்களும் அந்த குழந்தையை கடத்தலை. நம்மோட டீலிங் இருக்கறவங்க யாருக்கும் அந்த மாதிரி செய்ய மாட்டாங்க. இந்த… குழந்தையை கடத்தியது வேற கும்பல் பாஸ்.” என்றான்.
“சோ வாட்…?” என்று கேட்க, “தென்கிழக்கு ஆசிய கடற்பகுதியிலுள்ள தீவை சார்ந்த ஆட்கள் குழந்தையை கடத்தியதா கமிஷ்னர் நெல்சன் சொன்னார் பாஸ்” என்றதும், சத்ரியன் பார்வை ஒரு நொடி அதிர்ச்சியானது.
சத்ரியன் தலையில் கைவைத்து இமை மூட, “எ..என்னாச்சு விடுவிக்க மாட்டாங்களா?” என்று கேட்டாள்.
“விளக்கமா புரியவை என்னிடம் அடுத்து நச்சரிக்க கூடாது.” என்று சத்ரியன் மது பாட்டிலை கையிலெடுத்தான்.
சத்ரியனை யோகேஷ் கூற கூறவும் ஷ்ரத்தாவிடம் “மேம்.. தென்கிழக்கு ஆசிய கடற்பகுதியில் உள்ள பதிவு செய்யப்படாத தனித்தீவு சிலது இருக்கு மேம். அதுல சில பிரபலமான விஐபி, டாப் பணக்காரர்கள் அங்க கேளிக்கைகளுக்கும், போவது வழக்கம். அங்க பாஸை போல நிறைய ஆட்கள் டச் இருக்கும். அங்க எது நடந்தாலும் அரசாங்கம் தலையிட மாட்டாங்க. ஏன்னா… அந்தளவு முக்கியமான விஐபி செலிபிரெட்டி அரசாங்க ஆட்கள் அதிகாரிகளே தவறு செய்யவே, உருவாக்கப்பட்ட தீவு அது. அதுல இது போல குழந்தைகளை கடத்துவது சாதாரணம்.
அவங்க எல்லாம் இந்த மாதிரி தொழில் செய்யறவங்க. குழந்தைகளை கடத்தி ஒருமுறை கன்டெயினர்ல ஏத்திட்டா… அதுக்கு பிறகு குழந்தையை மீட்க முடியாது. ஏன்னா.. இங்க நம்ம பாஸ் சத்ரியனுக்கு கீழே நிறைய பேர் இருப்பது போல அங்கயும் சில சின்டிகேட் ஆட்கள் உண்டு. அவங்களும் கொலை செய்ய அஞ்சமாட்டாங்க. அத்தோட.. குழந்தையா குமரியா கிழவியானும் பார்க்க மாட்டாங்க மேம்” என்று கூறினான்.
ஏதோ திகிலை வாறியிறைத்து கூறுவது போல யோகேஷ் கூற, அதிர்ச்சியாக கேட்டாள்.
“சின்ன சின்ன குழந்+தைகளோட மட்டுமே பிசி-கல் ரிலேஷன்ஷிப் வச்சிக்கற அரக்க கூட்டம் அங்க அதிகம். குழந்தைகளை எல்லாத்துக்கும் உபயோகப்படுத்துவாங்க.” என்று நிறுத்தினான்.
“நாம இப்ப ஒரு குழந்தைக்காக அங்க போனா சிரிப்பாங்க. அப்பறம் திரும்ப அனுப்பறது எல்லாம் நடக்காத காரியம்.” என்று கூறினான்.
அனைத்தையும் கேட்டு ஷ்ரத்தா சத்ரியன் முன்னால் வந்தாள். “உன்னால காப்பாத்த முடியுமா முடியாதா?” என்றாள்.
“மேம்..” என்று யோகேஷ் ஏதோ சொல்ல, “ப்ளீஸ் அண்ணா.. இவர் பேசட்டும்” என்று கேட்டாள்.
வினோத்துக்கு அடுத்ததாக தன்னை அண்ணா என்றதும் யோகேஷ் வாயை மூடிவிட்டான்.
“இப்ப அவன் சொன்னது புரியலையா. என்னை மிருகம்னு சொல்வியே.. அங்க மனுஷக்கறியை திங்கற மக்கள் இருக்காங்க. போறியா.. குழந்தையை எல்லாம்.. ” என்றவன் சொல்ல தயங்கி பல்லைக் கடித்தான்.
சத்ரியனால் வார்த்தை கோர்த்து அதை கூறவும் முடிவில்லை. “இங்க பாரு” என்று கணினியில் சில ஸ்டீபன் பைல் பெயரை போட்டு தட்டச்சு செய்து நீட்டினான். (சித்தரிக்கப்பட்டு பெயர் மாற்றம் இடம் மாற்றம் செய்யப்பட்டு எழுதப்பட்டது.)
அதில் இது போன்ற தனி தீவில், பல பணக்கார முதலைகள், பதவியில் வகிப்பவர்கள், நாட்டின் முக்கிய பிரமுகர்கள் என்று வந்து தங்கி இளைப்பாற பலவிதமான வசதி வாய்ப்பை காட்டியது அதில் சின்னஞ்சிறு சிறுமிகள் பிகினி உடையணிந்து, வயதானவர்கள், பதவியில் இருப்பவர்கள் மீது இணக்கமாக இருப்பது போலவும், சின்னஞ்சிறு குழந்தையை கட்டி வைத்து பாலியல் கொடுமையை செய்வது போலவும், சிலதில் குழந்தை மாமிசத்தை சுவைப்பதாக மேஜையில் அலங்கரிக்கப்படவும், ஷ்ரத்தா பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து மயங்கி சரிந்தாள்.
சத்ரியனோ “ஷ்ரத்தா.. ஏ.” என்று அள்ளி துக்கி அறைக்கு சென்றான்.
சில நிமிடம் தண்ணீர் தெளித்து விழித்திறந்ததும் ஷ்ரத்தா நெஞ்சில் கைவைத்து, “சத்ரியா… இதென்ன கொடுமையா இருக்கு” என்று அழுதாள்.
அவனோ “சாதாரணமா ஒரு மனுஷனை சில பல விஷயத்திற்காக பெர்சனல் வெஜன்ஸுக்காக கொன்று தீர்க்கற பிரச்சனையையும், பணமாற்று ரியல் எஸ்டேட் விவகாரம் அரசியல் தலையீடல், இப்படி ரத்தம் சொட்ட பார்த்தல்ல… இது அதை விட கொடூரம்.
அங்கயிருந்தவங்களை பார்த்தல்ல.. சாதாரணமா இருக்கற ஆட்களிடம் எந்தளவு கொடூர புத்தி இருக்குனு. பதினெட்டு வயசு பொண்ணை விலைமகளா மாத்தி ஏலத்துல விட்டு சம்பாதிப்பது கூட ஏத்துக்கலாம். ஏன்னா அந்த பொண்ணு மறுத்தா தான் அவளுக்கு கஷ்டம். மறுக்காம கஸ்டமரை ஏற்றுக்கிட்ட அது இஷ்டமா போகும். மேபீ சில சைக்கோ ஆட்கள் அப்பவும் கொடுமை பண்ணுவாங்க.
பட்.. இங்க அப்படியில்லை. வயசுக்கு வராத, சின்ன சிறு மொட்டுக்களை கூட விட்டு வைக்க மாட்டாங்க. பிறந்ததிலருந்து.. இல்ல.. விவரம் தெரிந்ததிலருந்து இந்த மாதிரி உலகத்துல இருக்கற குழந்தைகளுக்கு இது வேதனையோட உச்சம். இதெல்லாம் கட்டுப்படுத்தற தலைமை நடத்தற குரூப் சிலது உண்டு. அவங்களிடம் நம்மாள நெருங்க முடியாது. கசப்பான உண்மைன்னா… இந்த சின்டிகேட்டை தாண்டி நான் அங்க மூக்கை நுழைக்க கூடாது. அவன் என் வேலையில் மூக்கை நுழைக்க மாட்டான்.
அதை மீறி நான் என் ஹீரோயிஸத்தை காட்டினா… உங்கப்பா போன இடத்துக்கு போக வாய்ப்புண்டு. ஏன்னா.. டிரக்ஸ் கஞ்சா, பணப்பட்டுவாடா, தங்ககட்டி கடத்தல் போன்ற போதையை விட அதுக்கு போதை அதிகமா இருக்கு. அங்க இருக்கற ஆட்கள் அவங்க பெயரை கூட வெளியே தெரியாம பார்த்துக்கற அளவுக்கு பவர் இருக்கு. இந்தியா மட்டும் என்றால் இதை ஊதி தள்ளலாம். இது உலகத்தோட மொத்த நெட்வொர்க்கோட கூட்டம்.” என்றான்.
“ஸ்டெல்லாவுக்கு குழந்தை திரும்ப கிடைக்காதா?” என்று கேட்க, சத்ரியன் அவளை பார்வையிட்டு கையாளாகாத நிலையில் மறுபக்கம் நின்றான்.
“நான் உன்னிடம் உதவின்னு கேட்ட முதலும் கடைசியுமான விஷயம். இதுக்கு மேல எந்த உதவியும் கேட்க மாட்டேன்னு சொன்னா… அப்பவும் காப்பாத்த முடியாதா சத்ரியா?” என்று அழுதாள்.
அவள் அழவும் பல்லை கடித்து சத்ரியன் நின்றான்.
“ஏன் சத்ரியா… நமக்கு ஒரு பெண் குழந்தை இருந்து, அந்த குழந்தை.. இப்படி ஒரு கூட்டத்துக்குள் சிக்கிட்டா… நீ இதே போல இப்படி தான் கையை கட்டிட்டு வியாக்கானம் பேசுவியா?” என்று கேட்டாள்.
“மேம்…. ப்ளீஸ்… ஏதும் இப்படி பேசாதிங்க” என்று யோகேஷ் தான் தடுத்தான். ஏதாவது உசுப்பேற்றி விடும் பேச்சால் சத்ரியன் அரக்கனாக மாறிடுவானே. இந்த ஷ்ரத்தாவுக்கு தேவையற்ற விஷயமல்லவா?!
“இல்லை அண்ணா.. எனக்கு புரியலை. நிஜமாவே அப்படி நடந்தா உங்க பாஸ் கை கட்டி இப்படி தான் விரப்பா நிற்பாறா?” என்று கேட்க, இதுவரை ஹனிமூனுக்கு சென்ற காதல் பறவையாக இருந்த, இந்த ஜோடி ஒரே வினாடியில் முகம் தெரியாதவர் போல பேசிக்கொண்டனர்.
“நான் அந்த ஸ்டெல்லாவுக்கு என்ன சொல்வேன்? என் சத்ரியன் அந்த குழந்தையை திரும்ப கூட்டிட்டு வருவான்னு சொல்லிட்டேன். அப்ப.. இது சத்ரியனால முடியாதா?” என்று மண்டியிட்டு அழுதாள்.
ஷ்ரத்தா பார்த்த புகைப்படங்கள் அவளது கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.
அதிலிருந்த பிஞ்சு முகங்கள் அவளது கண்முன் வந்து நெஞ்சை பிசைந்தது.
“ரியாலிட்டினு ஒன்னு இருக்கு மேம். சாதாரணமா வீட்ல சண்டை போடறவன், தெருவுல சண்டை போடறவனிடம் அடங்கிடுவான். தெருவுல சண்டை போடறவன் அந்த ஏரியா ரவுடியிடம் அடங்கிடுவான்.
ரவுடி போலீஸிடம் அடங்குவான். போலீஸ்.. அவருக்கு மேல இருக்கற அதிகாரியிடம் அடங்குவாங்க.
அதிகாரிகள் பணபலத்தில இருக்கறவங்க பேச்சுக்கு அடங்குவாங்க. பணப்பலம் இருக்கறவங்க.. ஆள்பலம் இருக்கறவர்களிடம் அடங்குவாங்க.
பணபலமும் ஆள்பலமும் இருக்கறவங்க கூட அதிகார பலத்திடம் உள்ளவங்களிடம் கட்டுப்படுவாங்க.
இங்க நம்ம பாஸிடம் எல்லா பலமும் இருந்தும், நாம இந்திய அளவுல இருந்தா.. நமக்கு மேல உலகளவில கிங்பிங் கூட்டம் இருக்கு. அதெல்லாம் வெவ்வேறு சின்டிகேட் தலைவன் பெறுப்பில கட்டுப்பட்டு நடப்பாங்க. இங்க நாமளும் ஒரு சிண்டிகேட்ல இருக்கோம். நாம நம்ம வரைமுறையை தாண்டி எதுவும் செய்ய முடியாது. அடங்கி தான் போகணும்.
இப்ப சாதாரணமா இதயத்துக்கு மருத்துவம் பார்க்கற டாக்டர். கண் மருத்துவத்தை பார்க்க வைக்க முடியாதே. அது போல தான்” என்று வார்த்தையை விட்டான்.
“ஓ.. அடங்கி போகணுமா.. உங்க சத்ரியன் அடங்காத திமிர் அரசன். அது தெரியுமா? அவருக்கே தெரியாம இருக்கலாம். ஏன் உங்களுக்கு தெரியாம இருக்கலாம். எனக்கு தெரியும். அவர் யாருக்கும் அடங்காத திமிர் அரசன்.
ஐ நோ… சத்ரியன் எனக்காக அந்த ஐரினை காப்பாத்துவார். நான் ஸ்டெல்லாவிடம் அப்படி தான் நம்பிக்கையா சொல்லப் போறேன். எப்படியாவது சத்ரியன் அவங்க குழந்தையை மீட்டு எடுப்பார்” என்று மூக்குறிந்து சென்றாள்.
யோகேஷோ ”பாஸ் அவங்க எமோஷனல்லா பேசறாங்க. ஐரினை.. ஸ்டெல்லா குழந்தை இந்நேரம் கன்டெயினரில் ஏத்தியிருப்பாங்க பாஸ்.” என்றான்.
சத்ரியன் புகைப்பதில் தீ பரவியது. அவன் இதயமும் சொற்கள் என்னும் தீயால் ஷ்ரத்தா பரப்பி விட்டாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
கதை எப்படி போகுதுனு சொல்லுங்க.
புது தளத்தில்
மையலிட்ட சிற்பமே
நின் பிரேமம் என் சிநேகம்
முதலாம் சந்திப்பில்
அயலா அயலா நான்கு கதை முடிவுற்றதாக பதிவுப்பண்ணிருக்கேன். கீப் சப்போர்டிங்

இந்த ஷ்ரத்தா சத்ரியன் உயிர் போராட்டம் படும் போது தான் புரியும் போல
Super sis nice epi 👍👌😍 shratha vera evana usupethi vitita eppo evan andha kootathula poi maatipaano🙄🤔🧐
Omg what a cruel? So sad. But chatriyian will recover irean for his sharadha. Story going very well sis. Each and every epidose has twist and turns. Fantastic narration sis. Eagerly waiting for next episode sis.
தீ லீடர்…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 46)
அடி உங்கக்கா மொக்கா ! அவன் தான் படிச்சு படிச்சு சொல்றானே, அது வேற உலகம், இது வேற உலகம்ன்னு. அப்பக்கூட யாரோ ஒரு ஸ்டெல்லாவோட குழந்தைக்காக அவனை ரிஸ்க்ல மாட்டிவிட்டு நாளைக்கு அவன் உயிருக்கு ஆப்பு வந்துச்சுன்னா இந்த ஷ்ரத்தா என்ன பண்ணுவாளாம்…? ஒருவேளை, அவ கிங்க்பிங் ஆகிடுவாளோ ?
😴😴😴
CRVS (or) CRVS2797
Waiting for nxt epi
😥😞😞 interesting