Skip to content
17 / 100 SEO Score

அத்தியாயம்-48

 

காலம் அது யாருக்காகவும் காத்திருக்கவில்லை. ஐரின் காணாமல் போய் நாட்கள் அல்ல… மாதங்கள் அல்ல.. வருடம் கடக்க போகின்றது.

 

‘இன்னைக்கு ஏதாவது தகவல் கிடைச்சிருக்கும்.’ என்று எதிர்பார்த்த ஷ்ரத்தா, இப்போது அந்த பழக்கத்தையே விட்டிருந்தாள்.

 

ஏனெனில் ஒவ்வொரு நாளும் ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. முதல் வருடம் முடிந்து விடுமுறை சென்ற நாட்களில் தான் ஐரின் காணாமல் போனாள்.

 

அதன் பிறகு கல்லூரி மீண்டும் திறந்தது. இரண்டாம் வருட வகுப்புகள் தொடங்கியது. தேர்வுகள் வந்தது, செமஸ்டர்கள் முடிந்தது, மீண்டும் தேர்வுகள் வந்தது. இப்போது… இரண்டாம் வருடமும் முடிந்து விடுமுறை ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. ஆனால்… ஐரின் மட்டும் திரும்பி வரவில்லை.

 

கல்லூரி வளாகத்தில் மெதுவாக நடந்தாள் ஷ்ரத்தா.

 

மாணவர்கள் அனைவரும் விடுமுறையை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். யாரோ ஊருக்கு போவதாக கூறினர். யாரோ டூர் செல்வதற்கு திட்டமிட்டனர். யாரோ குடும்பத்தோடு வெளியூர் செல்லப் போவதாக உற்சாகப்பட்டனர். ஆனால்… ஷ்ரத்தாவின் மனதில் எதுவுமே பதியவில்லை.

 

அவளது பார்வை வெறுமையாக இருந்தது. “ஹேய்… லீவுக்கு என்ன பிளான்?” என்று கனிமொழி கேட்க,

 

“தெரியலை…” என்று மட்டும் கூறினாள்.

 

“ஏய்… லாஸ்ட் டைம் ஏதோ கப்பல்ல சத்ரியனோட டைம் ஸ்பன் பண்ணி ஜாலியா இருந்ததா சொன்ன. இந்த லீவுக்கும் ஏதாவது பிளானா?” என்று கண்சிமிட்டினாள். முன்பு சின்ன விஷயத்திற்கும் சிரித்தவள். சத்ரியனை பார்த்தாலே அவனை பற்றி பேசினாலே முகம் மலர்ந்தவள்.

 

இப்போது… எப்போதும் யோசனையோடு இருந்தாள். சிரித்தாலும் முழு மனதோடு சிரிக்கவில்லை. “என்னடி ஆச்சு? சத்ரியனை ஏதாவது திட்டிட்டாரா? உங்களுக்குள்ள சண்டையா?” என்று கனிமொழி கேட்டாள்.

 

“ஒன்னுமில்லை…” என்று வழக்கமான பதிலை கூறிவிட்டு சென்றாள். கனிமொழியோ சத்ரியனுக்கும் ஷ்ரத்தாவுக்கும் ஏதாவது சண்டை இருக்கலாம் என்று நினைத்தாள். அதற்கு மேல் நிறுத்தி கேட்க அவளாலும் முடியாது.

 

மாலை வீட்டிற்கு திரும்பியதும் நேராக அறைக்குள் சென்றாள். ஜன்னல் அருகே நின்று வெளியே பார்த்தாள்.

 

தொலைவில் மழை பெய்துக் கொண்டிருந்தது. அவளது கண்களும் அந்த வானத்தை போலவே கனமாக இருந்தது.

 

முதல் நாள் ஸ்டெல்லாவிடம் ‘என் சத்ரியன் அந்த குழந்தையை கூட்டிட்டு வருவார்’ என்று தானே கர்வமாக கூறினாள்.

 

அப்போது அந்த வார்த்தையை நம்பினாள். இப்போது… அதே வார்த்தையை நினைத்தாலே நெஞ்சு வலித்தது.

 

ஒரு வருடம். முழுதாக ஒரு வருடம். இன்னும் அந்த குழந்தை கிடைக்கவில்லை. ‘ஒருவேளை.’ என்று நினைத்ததும் கண்களை இறுக்கமாக மூடினாள்.

 

அதற்கு மேல் யோசிக்க கூட அவளுக்கு பயமாக இருந்தது. கதவு திறக்கும் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தாள்.

 

சத்ரியன் தான். அவன் வழக்கம்போல அமைதியாக உள்ளே வந்தான். கோட்டை கழற்றி நாற்காலியில் போட்டான்.

 

பிறகு அவளை பார்த்தான். ”என்ன?” என்று மட்டும் கேட்டான்.

 

ஷ்ரத்தா சில நொடிகள் அவனை பார்த்தாள். அவன் முகத்தில் சோர்வு இருந்தது.

 

கடந்த ஒரு வருடத்தில் அவனும் மாறியிருந்தான். முன்பை விட அமைதியாக. முன்பை விட சிந்தனையோடு. முன்பை விட அதிகமாக புகை பிடிப்பவனாக.

 

“சத்ரியா…” என்று அவளது குரல் உடைந்தது.

 

“ம்ம்ம்… இரண்டாவது வருஷமும்  முடிஞ்சிடுச்சு… லீவு விட்டுட்டாங்க” என்றதும், சத்ரியன் எதுவும் பேசவில்லை.

 

“பஸ்ட் இயர் முடிஞ்சி லீவு வந்தப்ப தான் ஐரின் காணாம போனா…” என்றவளது பேச்சில், அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். “இப்ப செகண்ட் இயரும் முடிஞ்சிடுச்சு…” அவளது கண்கள் மெதுவாக கலங்கியது. குரல் அடைத்துக் கொண்டது.

 

சத்ரியன் மெதுவாக அருகில் வந்தான். “ஷ்ரத்தா…” என்று உணர்ச்சிகளை துடைத்தவனாக கூப்பிட்டான்.

“இல்ல சத்ரியா.. எதுவும் பேசிடாத… எனக்கு இப்ப பயமா இருக்கு.” என்று தலையசைத்தாள்.

 

சத்ரியனோ நிதானமாக அவளது கரத்தை பற்றி, “இனி தான் நீ பயப்படாம இருக்கணும்.” என்றான் அர்த்தத்துடன்.

 

அந்த வார்த்தையை கூறியதும் பங்களா முழுவதும் வழக்கத்திற்கு மாறாக பதற்றத்தில் மூழ்கியிருப்பதை ஷ்ரத்தா உணர்ந்தாள்.

 

வெளியில் ஆயுதம் தாங்கிய ஆட்கள் பலரும் உள்ளே வந்திருந்தனர்.

இடைவிடாத தொலைபேசி அழைப்புகள் சத்ரியன் எங்கேயிருக்கின்றான் என்று விசாரித்தனர்.

யோகேஷ் முகம் எப்பொழுதும் இருப்பதை காட்டிலும் இறுகியிருந்தது.

 

தனஞ்செயனிடம் கூட தொடர்ந்து தகவல்களை வாங்கிக் கொண்டிருந்தான். ஏதோ பெரிய விஷயம் நடந்திருக்கிறது என்று ஷ்ரத்தாவுக்கு புரிந்தது.

 

சில நிமிடங்கள் கழித்து… “இந்த வீட்டை சல்லடையா துளைக்கப் போறாங்க.” என்றான்.

 

ஷ்ரத்தா அதிர்ந்தாள் “யா..யாரு?” என்றாள்.

சத்ரியன் சிரித்தான் அந்த சிரிப்பில் மகிழ்ச்சி இல்லை. “என்னோட புது எதிரிகள்.” என்றான். “புரியலை.” என்று நடுங்கினாள்.

 

சத்ரியன் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு, “ஸ்டெல்லாவோட குழந்தை ஐரினை மட்டும் இல்ல”

அவன் மெதுவாக திரும்பினான்.

 

“அவளை தேடும்போது இன்னும் நிறைய குழந்தைகள் கிடைச்சாங்க. கண்முன்ன நூற்றுக்கும் மேல குழந்தைகளை காப்பாற்றாம, ஒரு குழந்தையை மட்டும் அழைச்சிட்டு வர மனசில்லை” என்றான்.

 

ஷ்ரத்தாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. சத்ரியன் குளிர்ந்த குரலில் தொடர்ந்தான்.

 

“அங்க சில குழந்தைகளுக்கு உடம்புல சூடு வச்சிருந்தாங்க. சிலருக்கு தங்களோட பேரே மறந்துருந்தது. சிலர் பேசவே பயந்தாங்க.” அவன் குரல் சற்றே தாழ்ந்தது.

 

“அந்த வயசுல குழந்தைகள் சிரிக்கணும் விளையாடணும். ஆனா அழக்கூட தெரியாம இருந்தாங்க.” ஷ்ரத்தாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

அவன் சுவரில் சாய்ந்தான்.

“நான் நிறைய கொலை பண்ணிருக்கேன். கள்ள நோட்டு கைமாத்திருக்கேன். தங்கக்கட்டியை நகர்த்திருக்கேன். ரியல் எஸ்டேட் டீல்ல எவனோட நிலத்தை எவனுக்கோ எழுதி கொடுத்திருக்கேன். சட்டப்படி பார்த்தா நான் நல்லவன் கிடையாது. ஆனாலும் இந்த குழந்தைகளை பார்த்தும்,  என்னால காப்பாற்ற முடியுமென்ற எண்ணமிருக்க விட்டுட்டு வரமுடியலை. மொத்தமா கூட்டிட்டு வந்துட்டேன்” என்று கீழேயிருக்கும் ஹாலுக்கு நடந்து வந்து சேர்ந்தான்.

 

அங்கே நூற்றுக்கு மேலான குழந்தைகளுக்கு உணவும், காயத்திற்கு மருந்தும், பாடிகாட்ஸ் உதவி செய்திருந்தனர்.

 

“அதுக்குத்தான் இப்ப சாவு என்னை தேடி வருது.” அந்த வார்த்தை ஷ்ரத்தாவின் இதயத்தை கிழித்தது.

 

அவள் மெதுவாக அருகில் சென்றாள். ஹாலை நிறைத்திருந்த குழந்தை செல்வங்களை கவனித்தாள். ”நீ… நீயா.. இத்தனை குழந்தைகளை காப்பாத்தினியா?” என்று கேட்க சத்ரியன் தோளை குலுக்கினான்.

 

“காப்பாத்திட்டேன். இப்ப அதுக்கான விலையா என் உயிரை கொடுக்கணும்.” என்றதும் அடுத்த நொடி ஷ்ரத்தா அவனை கட்டிப்பிடித்தாள். அவள் முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள்.

 

ஆனந்த கண்ணீருடன் அங்கிருந்த குழந்தைகளை முதலில் கவனித்தாள். சின்னசிறு குழந்தைகள், பலரும் அங்கே சிறையிலிருந்து மீட்டெடுத்ததில் சந்தோஷமாக உணவை சாப்பிட்டு நிற்பதை கவனித்தாள்.

அந்தநேரம் சத்ரியனை கண்டு, “எல்லாருக்கும் நீ கெட்டவனா தெரியலாம் சத்ரியா… நிறைய பேருக்கு நீ பயமுறுத்துறவனா தெரியலாம். ஆனா… இந்த நிமிஷம்… உன்னை.. உன் கூடவேயிருந்தவளா.. உன்னை புரிந்தவளா.. நான் சொல்லறேன். நீ லீடர்.

உண்மையான லீடர். (டைட்டில் நேம் ஜஸ்டிஃபை)

நூறு பேரை பயமுறுத்தறவன் இல்ல. நூறு குழந்தைகளை உயிரோட காப்பாத்தினவன்.” என்று பெருமையாக உரைத்தாள்.

 

சத்ரியன் கண்களை மூடினான்.

அந்த பாராட்டு அவனுக்கு புதிது. பயம், மரியாதை கீழ்ப்படிதல் இவற்றை ஆயிரம் முறை பார்த்திருக்கிறான்.

 

ஆனால் பெருமைப்பட்டு பார்க்கும் பார்வை? அதுவும் ஷ்ரத்தா குரலில்.. அவன் மெதுவாக அவளது தலைமுடியை வருடினான்.

 

“கெட்டவனா வாழ்ந்தா ஒரு வசதி இருக்கு ஷ்ரத்தா. உயிர் பயம் இருக்காது. ஏன்னா.. எப்ப சாவோம்னு தெரிஞ்சே வாழ்வோம். ஆனா நல்லது செய்ய ஆரம்பிச்சா…

உயிர் மேல ஆசை வந்துடும்.” என்றதும் ஷ்ரத்தா தலைநிமிர்ந்து பார்த்தாள்.

அவன் நேராக அவள் கண்களை பார்த்தான்.

 

“எனக்கு என் உயிர் மேல ஆசை இல்லை. ஆனா..” அவன் குரல் தாழ்ந்தது. “உன் உயிர் மேல இருக்கு.” என்றதும் அந்த வார்த்தை அவளை உறைய வைத்தது.

 

“ஷ்ரத்தா. நீ இங்க இருக்கக்கூடாது. என்னை தேடி வர்றவங்க இப்ப இந்த வீட்டையும் தெரிஞ்சிருப்பாங்க. நாளைக்கு… அல்லது இன்னிக்கு… எதுவும் நடக்கலாம். நீ ஐரினை ஸ்டெல்லாவிடம் விட்டுட்டு போ. ஸ்டெல்லாவை இப்ப வரச்செல்லிருக்கேன்.

 

நான் மத்த குழந்தைகளை எல்லாம் யோகேஷ் மூலமாக யார் கண்ணுக்கும் தெரியாம ஒரு டிரஸ்ட் மூலமா ஆசிரமத்தில வளர்க்க ஏற்பாடு பண்ணிட்டேன்.” என்றான்.

 

அதே நேரம் சத்ரியன் அழைத்து வருவதாக பீட்டர் உரைத்து ஸ்டெல்லா அழைத்துவர உயிர்ப்பின்றி நடந்து வந்தார். முன்பு இருந்ததை விட மெலிந்த தோற்றம். ஹாலில் நிறைய குழந்தையை கண்டதும் நடுங்கியது.

சத்ரியன் அருகே ஒரு சிறுமி நின்றியிருந்தாள்.

அவளை பார்த்தபடி ஸ்டெல்லா வந்தாள்.

அந்த சிறுமியின் கண்கள்… அந்த முகம்… சுருள் முடி… ஸ்டெல்லாவின் கையிலிருந்த புகைப்படத்தோடு அப்படியே ஒத்திருந்தது.

 

ஸ்டெல்லாவின் விரல்கள் நடுங்க ஆரம்பித்தது. புகைப்படம் தரையில் விழுந்தது. “ஐ…” அவரால் முழு பெயரை கூட சொல்ல முடியவில்லை. அந்த குழந்தை திரும்பிப் பார்த்தது.

மறுநொடியே “அம்மா…” என்று கத்தியபடி ஓடிவந்தாள்.

 

அந்த குரல் கேட்ட நொடியே ஸ்டெல்லா சரிந்து விழும் அளவுக்கு தள்ளாடினார்.

 

“ஐரின்…” அடுத்த கணம் குழந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டார். ஒரு வருடமாக அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைந்து வெடித்தது. “ஐரின்… ஐரின்… என் குழந்தை… என்னோட குழந்தை.” அழுகைக்கு நடுவே வார்த்தைகள் சிதறின. குழந்தையும் அழுதது.

“மம்மா… என்னை விட்டுட்டு போகாத மம்மா… நான் இனி அங்க போகமாட்டேன். நான் உன்னோடவே இருக்கேன்மா. அங்க.. அங்க.. நிறைய பேர் என்னென்னவோ இங்கயிங்க தொட்டு தொட்டு பேசறாங்க. இங்க முத்தம் வச்சி கடிச்சிட்டாங்க. யூரின் போனா அந்த இடம் வலிக்கும்மா.. எனக்கு ஏதேதோ ஊசிப்போட்டு என்னை ஏதோ பண்ணறாங்க அம்மா”  என்று கதறினாள்.

 

அங்கே இருந்த பலரின் கண்களும் கலங்கின. ஷ்ரத்தா அப்படியே உறைந்து நின்று பார்த்தாள்.

 

அவளது பார்வை மெதுவாக சத்ரியனை ஏறிட்டது. ஒரு வருட போராட்டத்தின் முடிவு அவன் கண்முன்னே இருந்தது.

 

ஸ்டெல்லா மண்டியிட்டு மகளை உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, “இனி அம்மா உன்னை விட்டு எங்கயும் போகமாட்டேன்டா.‌ எங்கயும் போகமாட்டேன். கர்த்தரே.. இந்த குழந்தைகளை எல்லாம் மீட்டதுக்கு நன்றி ஆண்டவரே” என்று சத்ரியனை வணங்கினாள்.

 

சத்ரியன் ஏதோவொரு நிறைவை பெற்றவனாக புன்னகை பூத்தான். அவனுக்கு ஸ்டெல்லாவிடம் ஒப்படைத்து விட்டோமென்ற நிம்மதி. தன்னவள் வாக்கு தந்த விஷயத்தை நிறைவேற்றிய பெருமை.

ஷ்ரத்தாவின் கண்கள் கலங்கின.

 

சத்ரியனோ “ஓகே.. ஸ்டெல்லா.. குழந்தையை கூட்டிட்டு நீங்க வேறயெங்கயாவது போயிடுங்க. யோகேஷ்.. உனக்கு தந்த பொறுப்பை கவனி. அந்த நூற்றி இருபத்தி ஆறு குழந்தை உன்னோட பராமரிப்பில் உன் நிர்வாகத்துல, டிரஸ்ட் மூலமா தான் பார்த்துக்கணும். நீ நம்ம சர்க்கிளில் யாரையும் சந்திக்க கூடாது.” என்று தூரிதப்படுத்த, ஸ்டெல்லாவை பீட்டர் பொறுப்பில் அழைத்து சென்று விட்டுவிட அனுப்பினான். நின்று நிதானமாக நன்றியை கூட தெரிவிக்கவில்லை. ஸ்டெல்லாவிடம் ‘என்னை பத்தி எந்த நியூஸ் கேள்விப்பட்டாலும் நீங்க பேனிக் ஆக வேண்டாம். உங்க குழந்தை உங்களிடம் வந்தாச்சு. அவளை கவனமா பார்த்து கவுன்சீலிங் கொடுத்து நல்லபடியா வளர்ப்பது மட்டும் உங்க பொறுப்பு.” என்றான்.

சத்ரியன் காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டார்.

 

“நான் உங்க மகளை கொண்டு வர மாட்டேன்னு நினைச்சிட்டிங்கள்ல?” என்றான்.

 

“மன்னிச்சிடுங்க சார்.” என்றார்.

 

“லீவ் இட்… கமான்.. இங்கிருக்கற ஒவ்வொரு நொடியும் ஆபத்து. யோகேஷ்… நீ உன் பொறுப்பை கவனிக்க நம்ம ஆட்களில் உனக்கு தேவையானவங்களை அழைச்சிட்டு போ. இங்க நாலு பஸ் வந்துடும். டிராவல் பஸ். சோ.. சத்தமில்லாம பயணிக்க ஏற்பாடு நடக்கும்.

ஸ்டெல்லா நீங்க உங்க வீட்டுக்கு போய் வேற எங்கயாவது போங்க பீட்டர் உதவுவான். பீட்டர் நீயும் உனக்கு கீழே இருப்பவங்களை உதவிக்கு கூப்பிட்டுட்டு கிளம்பு” என்றார்.‌

ஸ்டெல்லாவோ மற்ற குழந்தையை கவனித்தார். அந்த குழந்தைகளும் ஐரினை போலவே ஏதோ புரியாத காட்டில் இருப்பதை உணர்ந்தார். அப்பா அம்மா எங்கே என்று கூட சொல்ல தெரியாத வயது. தன் மகளை போலவே அன்னை அன்பு தேவை. ஸ்டெல்லா நர்ஸ் என்பதால் ‘சார்.. நானும் இவங்களோட போறேன். இங்க என் மகளுக்கு மட்டும் கவுன்சீலிங் தேவையில்லை. எல்லாருக்கும் தான். நான் ஒரு நர்ஸா எல்லாரையும் வழிநடத்தி பார்த்துக்க துணைக்கு போறேன்” என்றார்.

 

மனிதநேயமிக்க நர்ஸாக முடிவெடுத்தார்.

 

“என்னவோ பண்ணுங்க ஆனா இடத்தை காலி பண்ணுங்க.” என்று யோகேஷிடமே அனுப்பினார்.

ஷ்ரத்தா.. நீ.. இப்ப ” என்று ஆரம்பித்திட, “உன்னை விட்டு நான் எங்கயும் போக மாட்டேன். உன்னை காதலிக்கிறேன். நான் எங்கயும் போக மாட்டேன்.” என்று கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்தது.

 

சத்ரியனோ “நீ சாகுற இடத்துல நான் உயிரோட இருக்க முடியாது ஷ்ரத்தா… நீ வாழ்ற இடத்துல தான் நான் இருப்பேன்.” என்று ‘நீ இருக்குமிடத்தில் என்‌ மனம் ஜனனம் கொள்ளும். இங்கே இருந்தால் உனக்கும் ஆபத்து அப்பொழுது தான் என்னால் வாழ முடியாது இறந்த மனிதனாக நிற்பேன்’ என்று  சத்ரியன் கூறி, முதல் முறையாக… எல்லா எதிரிகளையும் எதிர்கொண்டவன்… ஒரு பெண்ணின் காதலிடம் தோற்க ஆரம்பித்திருந்தான். அவளை அங்கிருந்து செல்ல கட்டாயப்படுத்தினான்.

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்.

New site la New Story *❤️மௌஹபத் முதல் நிக்காஹ் வரை❤️* கதை போட்டிருக்கேன்.

pls support me. Register login செய்து comments பண்ணுங்க.

 

7 thoughts on “The leader-48”

  1. Chathriyan avan uyirey a panaiyam vechi kuzhandhaigala kaapathiyan 🥺🥺🥺 eppo shratha enna Panna pora 🙄🥺

  2. தீ லீடர்…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 48)

    அப்பாடா…! எப்படியோ அடிச்சுப் பிடிச்சு கொடுத்த வாக்கை காப்பாத்தினதோட, குழந்தைகளையும் மீட்டு கொண்டு வந்துட்டான். உண்மையிலயே சாகடிக்கிறது பெரிய விஷயமில்லை, அது அஞ்சு நிமிஷ வேலை, ஆனால் வாழ வைக்கிறது தான் பெரிய விஷயம், மத்தவங்களை சாகடிச்சு, பிணங்களுக்கு தலைவனா இருக்கிறதை விட, மத்தவங்களை வாழ வைச்சு மக்களுக்கு தலைவனாகிறது தான் முக்கியம்.

    சத்ரியன், ஷ்ரத்தாவை எப்படியாவது காப்பாத்திடுவான்னு தெரியும், சத்ரியன்…பிழைப்பானா ?
    ஆனால், உண்மையான சத்ரியனுக்கு சாவே கிடையாதுன்னுத் தானே சொல்வாங்க.

    😴😴😴
    CRVS (or) CRVS2797

  3. 😞😞😞😞😞😔😔😔😥😥😥😥 super super super super super super super super super super super super super

  4. intha situation eppadi una vitu pova shradha athuvum saga pora nu therinji . superb work chathriyan oru ponna kapatha poi 126 children kapathi iruka unakum thoni iruke . sharadha mela ulla kadhalaum mulusa veli paduthita

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!