Skip to content

The leader-49

58 / 100 SEO Score

அத்தியாயம்-49

யோகேஷ் பீட்டர் உதவியோடு குழந்தைகள் டிராவல் பஸ்ஸில் பயணிக்க ஏற்பாடு நடந்துக் கொண்டிருக்க, ஷ்ரத்தாவும் மற்ற சிலரும் அங்கே இருந்தனர்.

 

அந்த இரவு வானமே கருப்பாக இருந்தது. மழை வருமா வராதா என்று முடிவு செய்யாமல் திணறும் மேகங்கள் போல… அந்த வீட்டுக்குள்ள இருந்த ஒவ்வொருத்தருக்கும் ஏதோ நடக்கப் போகிறது என்ற உணர்வு மட்டும் இருந்தது.

 

வீட்டை சுற்றி பாதுகாப்பு இருந்தாலும் உள்ளே பதற்றம்.

 

இவையெல்லாம் நடுவிலும் சத்ரியன் மட்டும் வழக்கத்தை விட அமைதியாக இருந்தான். அது ஷ்ரத்தாவுக்கு இன்னும் பயமாயிருந்தது. அவன் அமைதியா இருந்தால் தான் ஆபத்து அதிகம்.

 

அந்த நேரம்… வாசல் திறந்த சத்தம். எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். ஷ்ரத்தா கூட பயத்தில் உறைந்து திரும்பினாள்.  அங்கே வினோத் அதிவேகமாக நுழைந்தான். சத்ரியனால் கொல்ல சொல்லப்பட்டதாக, யோகேஷ் அழைத்து சென்ற வினோத் உயிருடன் வந்தான்.

அவன் அருகில் ஒரு பெண். ஒரு கணம்… ஷ்ரத்தாவுக்கு உலகமே நின்றது.

“சத்ரியன்… அது வினோத்.. வினோத் அண்ணாவா.” என்று வியக்க, சத்ரியனோ ‘ஆமா’ என்றவன் வினோத்தின் தோளில் கைவைத்து, “நான் தான் வரவழைச்சேன்.” என்றான்.

 

வினோத் மெதுவாக ஷ்ரத்தா முன் நடந்து வந்தான். ஒரு வருடம் முன் சத்ரியனை பழிவாங்க எரிந்த கண்கள் இன்று வினோத்திடம் இல்லை.

 

ஷ்ரத்தா தடுமாறி, “அண்ணா…?”

என்றாள். வினோத் அவளை பார்த்து சிரிக்க முயன்றான்.

“நான் சாகலை ஷ்ரத்தா. சத்ரியன் பாஸுக்கு என்னை கொல்ல முடியலை. ஹரிணியிடம் அனுப்பி, உயிர் பிச்சை கொடுத்துட்டார். இவ ஹரிணி.” என்று அறிமுகப்படுத்தினான்.

 

ஷ்ரத்தா புரியாமல் இருவரையும் பார்த்தாள். வினோத் மெதுவாக சொன்னான்.

 

வினோத் ஹரிணியை பார்த்தான். அவள் கையில் இருந்த சிறிய நோட்டை ஷ்ரத்தாவிடம் கொடுத்தான். அதில் எழுதப்பட்டிருந்தது ‘பழி வாங்கினா… நடந்தது அழியாது. ஆனா தவறுக்கு மன்னிப்பு உண்டு’ என்று எழுதியிருக்க, ஷ்ரத்தாவின் கண்கள் ஹரிணி சத்ரியனை மன்னித்ததை எண்ணி நிரம்பியது.

 

வினோத் மெதுவாக சத்ரியனை பார்த்தான். “நான் பாஸை மொத்தமா வெறுத்தேன். ஆனா…  அவர் என்னை கொல்லாம விடவும், அதுக்கு அப்புறம் யோசிச்சேன்.

ஹரிணி உயிரோட இருக்கா. அவளிடம் பேசி காதலை மீட்டெடுக்க சொன்னார். அவளிடம் நான் நடந்ததை விவரிச்சேன். என்னை வெறுத்தா… சத்ரியன் பாஸை வெறுத்தா… அப்பறம் நான் அவளுக்காக கொல்ல முயன்று தோற்று, சத்ரியன் அனுப்பியதா சொல்லவும், நம்பலை. கால்ல புல்லட் பட்டு இப்ப உயிரோட இருப்பதே சத்ரியன் உனக்காக கொல்லாம, உன்னோட வாழ சொன்னார். அவர் தவறுக்கு மன்னிப்பு கேட்டார்னு சொன்னேன்.

பாஸ் என்னை மன்னிச்சார். ஹரிணியிடம் மன்னிப்பு கேட்டுட்டார் என்றதும், ஹரிணி கொஞ்ச நாள் யோசித்தா… பிறகு உன்னை மாதிரி தான் ஹரிணியும் நடந்ததை மறக்க முயற்சி செய்தா. இதுல சத்ரியன் பாஸ் இப்ப ஐரினுக்காக எடுத்த முயற்சி தெரியவும், இப்ப அவளுக்கு நடந்ததை மறந்து, உனக்கு உதவ வந்துட்டா.” என்றான்.

 

ஷ்ரத்தா ஹரிணியை கட்டிப்பிடித்து, அவருக்காக நானும் மன்னிப்பு கேட்கின்றேன் என்று செய்கையில் புரிய வைத்தாள்.

ஹரிணியோ ‘சுற்றி என்ன நடக்கு பாரு. கிளம்பு’ என்பது போல சத்ரியனை பற்றி பேசவிடாமல் தவிர்க்க முனைந்தாள். என்னயிருந்தாலும் சத்ரியனை நேரில் காண ஹரிணி விரும்பவில்லை என்பதே உண்மை.

 

அதற்கேற்றது போல சில வேனில் இருந்து ஆண் பிணங்கள், ஆங்காங்கே போடப்பட்டது. ஷ்ரத்தா புரியாமல் பார்க்க, சத்ரியனோ “இங்க எல்லாரும் சாகப் போறாங்க டி. என்னை தேடி வர்றவங்க இப்ப கேள்வியில்லாம சுடலாம். குழந்தை விஷயம் வெளியேறி போனதால், தடம் தெரியாம அழிக்க வருவாங்க.” என்று கூறினான்.

 

“அப்படின்னா நாம போயிடலாம்” என்றாள் ஷ்ரத்தா. சத்ரியன் சிரித்தான். “எங்க ஓடுவ? இது புலி வாலை பிடிச்ச விஷயம் ஷ்ரத்தா. நான் இறந்து, இந்த குழந்தைகள் என்ன ஆனாங்க என்று தெரியாம போனா மட்டும் தான் மத்தவங்க நிம்மதியாவாங்க.” என்றான்.

 

‘அதற்கு?’ என்பது போல புரியாமல் விழித்தாள்.

“ஒரே ஒரு வழி இருக்கு. நான் சாகணும். அதுவும் நீ என்னை  சாகடிக்கணும்” என்றதும் ஷ்ரத்தா உறைந்தாள்.

 

“முடியாது… நீயும் நானும் எங்கயாவது போயிடலாம்..” என்று மறுத்து கூற, “நான் சொல்வதை கேளு..” என்று அதட்டினான்.

 

ஹரிணியை நான் கற்பழிச்சதால, வினோத்துக்கு எனக்கும் பகை இருக்கு. வினோத்தை கொல்ல நினைச்சப்ப நீ அவனை காப்பாத்திட்ட‌. இப்ப..  என்னை கொல்ல நீயும் அவனும் சேர்ந்து என்னை கொன்னுட்டிங்க. அந்த நேரத்துல இங்கிருக்கற சில கேஸ் வெடிச்சு என் ஆட்களும் இறந்துட்டதாக கணக்கு போகும். ஆனா என் ஆட்கள் யோகேஷ் பீட்டர் மாதிரி சில நம்பிக்கைக்குரியவர்கள் அந்த குழந்தைகளை பாதுகாக்க கூடயிருப்பாங்க. இங்கயிருக்க பிணங்கள் போலீஸோட கணக்குக்கு… என்னை தேடி வர்ற எதிரிகளோட பார்வைக்கு…

இந்த பழியால நான் இறந்தது தெரியும். அப்ப குழந்தைகளை பற்றிய பேச்சு எதுவும் தெரியாம குழம்பி இருப்பாங்க.

வினோத் அதை சரியா கையாளுவான்.

இது தான் அடுத்து செய்தி சேனல்கள், நியூஸ் பேப்பர்ஸ், செலிபிரெட்டி சேனல்ல காட்டப்படுற நியூஸ்.” என்றான்.

 

கூடுதலாக ஷ்ரத்தா முன் மண்டியிட்டு, “நீ என்ன கொன்றதுக்காக ஜெயிலுக்கு போ. நம்ம குழந்தையை இந்த முறையாவது நல்லபடியா பெத்தெடு.” என்று ஷ்ரத்தா வயிற்றை பார்த்து முத்தமிட்டு கூறினான்.

ஷ்ரத்தா நேரம் பார்த்து சொல்ல துடித்த விஷயத்தை சத்ரியன் கூறவும் ஆனந்தமின்றி அழுதாள்.

 

சத்ரியன் ஷ்ரத்தா வயிற்றோடு நெருங்கி கட்டிப்பிடித்து நிற்க,

“நீ என்னை நல்லவனாக்க முயற்சி பண்ணின ஷ்ரத்தா… ஆனா… என்னயிருந்தாலும் நான் கெட்டவன் தான்டி. சாக வேண்டியவன் தான்.” என்றதும், அவள் உடனே தலையசைத்து மறுத்தாள்.

 

“இதுக்கு மேல ஒருத்தன் நல்லவனா மாறியது போதாதா. நான் ஐரினை காப்பாத்த சொன்னேன். ஆனா நீ… உன் கண் எதிர்ல இருக்கற குழந்தைகளை பார்த்து மொத்தமா காப்பாத்தியிருக்க. இதுக்கு மேல வேறென்ன வேண்டும். இது எப்பேற்பட்ட விஷயம். எனக்கு இந்த சத்ரியனே போதும்.. இந்த அடங்காத திமிர் அரசன் என் கூடவே இருக்கட்டும். நீ இதே லீடரா இந்த சாம்ராஜ்ஜியத்துல இரு. நீ கெட்டவனாவே இரு. ஐ டோன் கேர்.” என்று அழுதாள்.

 

அவன் அவளது மேவாயை நிமிர்த்தி, “சொல்லறதை கேளுடி நான் நல்லவனா மாறலை. நீ ஒரு விஷயத்தை ஸ்டெல்லாவுக்காக கேட்ட.. நான் உனக்காக செய்தேன். இதுல நான் எங்க நல்லவானா மாறினேன். இப்பவும் இந்த கை எத்தனை பேரை கொன்றுட்டு, இந்த 126 குழந்தைகளை கூட்டிட்டு வந்திருக்குனு தெரிந்தா.. லாயர் திவாகர் மகளா… நீ என்னை சாகும்வரை தூக்கிலிடுவ” என்று அந்நிலையிலும் கேலி பேசினான்.‌

 

அந்த பேச்சாலும் ஷ்ரத்தா அழுதாள். “நான் லாயர் திவாகர் மகளா இருந்தேன். இப்ப சத்ரியனோட…. ஷ்ரத்தா இல்லையா?” என்று அவன் அணிவித்த மோதிரத்தை காட்டினாள்

 

சத்ரியனோ “எனக்கு உன்னை இழக்க மனசு வரலை ஷ்ரத்தா… அந்த தீவுக்குரிய ஜாம்பி கூட்டம் வந்துட்டா. நான் மட்டுமில்லை நீயும் நம்ம குழந்தையும் அழிஞ்சுடுவாங்க. அதுக்கு தான்.. அவங்களுக்கு நான் ஒரு ஆள் இறந்தா கூட போதும். குழந்தைகளை பற்றி நியூஸ் வெளியே போகாது.” என்றதும் அவள் அழ ஆரம்பித்தாள்.

 

அவன் அவள் கன்னத்தில் இருந்த கண்ணீரை துடைத்தான். “குழந்தையை பெத்துடு. படிச்சு முடிச்சுடு. என்னை மாதிரி ஒருத்தனுக்காக வாழ்க்கையை முடிச்சிடாத. வாழு.. அப்படியும் உன்னை சுகபோகமா விட்டுட்டு போகலைடி. சிறைக்கைதியா தான் இருப்ப. தண்டனை முடிந்து தான் படிக்க முடியும்.” என்று கூற ஷ்ரத்தா அவன் சட்டையை பிடித்தாள்.

 

“முடியாது… முடியாது முடியாது.” என்று கதறினாள். சத்ரியனை முதல் முறையாக சந்தித்த பொழுது எல்லாம் அவனை துளியும் பிடிக்கவில்லை. தந்தை இறப்புக்கு காரணமாக இருப்பானோ என்ற நிலையில் வெறுப்பு ஏற்பட்டது. பழி பாவத்திற்கு அஞ்சாதவனாக கொலைகள் செய்த பொழுதும் பயமும் வெறுப்பும் பெருகியது. இப்பொழுது அதே சத்ரியனுக்கு அழுது துடித்தாள்.

அவனோ இறுக்கமாக அணைத்தான். அவளுக்கு மூச்சு முட்டும் அளவுக்கு அணைத்தான்.

 

அவன் மெதுவா சொன்னான்.

“இந்த பட்டு சேலை.. நான் தேர்ந்தெடுத்தது தானடி? அதையே கட்டிட்டு இருக்க” என்றான்.

 

“கன்சீவா இருப்பதை தெரிவிக்க கட்டினேன் சத்ரியா” என்று அழுதாள்.

 

அவன் அவளது முகமெல்லாம் முத்தமழை தந்து, “நான் உன்னை சுத்தி தான் இருப்பேன்.. எப்பவும்… புரிதா.‌ உன் நிழலா… ” என்று இதழிலும்  முத்தமிட்டான்.

வெளியே பல துப்பாக்கி வெடிப்பு சத்தமிட, இங்கே ஷ்ரத்தா செய்வதறியாது திகைக்க, சத்ரியனே அவளது கையில் துப்பாக்கியை நீட்டி, சுட கூறினான்.

ஷ்ரத்தா மறுக்க, சத்ரியனோ ‘இதை தாண்டி வேற வழியில்லை ஷ்ரத்தா’. நீயும் நம்ம குழந்தையையும் அழிக்க போறியா? என் குழந்தைக்கு உயிர் கொடு டி” என்று கூற, ஷ்ரத்தா அழுகையுடன் நிற்க, சத்ரியன் நாலடி பின் நகர்ந்தான்.

வினோத்தின் போன் மூலமாக வீடியோ எடுக்கப்பட, சத்ரியனை ஷ்ரத்தா சுட்டு முடிக்க, சத்ரியன் ஆங்கார சிரிப்புடன் அங்கிருந்த சோபாவில் வீழ்ந்தான்.

சாம்ராஜியத்தை ஆளப்பிறந்தவன் சோபாவில் இரண்டு கையை நீட்டி சரிந்து கிடந்தான்.

 

தோட்டாவை சத்ரியனை முன் சுட்டு முடித்தவளாக நின்ற ஷ்ரத்தா மண்டியிட்டு அழவும், ஹரிணி அவளை தூக்கி வெளியேறலாமென செய்கையில் கூறினாள்.

 

அதற்குப்பிறகு ஷ்ரத்தாவின் உயிர் போகும் கதறல்கள் கேட்டது.

அவ்விடம் எல்லாம் தீ பரவியது. அந்த தீயில் ஷ்ரத்தாவின் உயிர் காதலும் ஒளிர்ந்தது.

 

வினோத் மற்றும் ஹரிணி ஷ்ரத்தாவை இழுத்து சென்றனர்.

 

ஷ்ரத்தா வரமறுத்தவளாக தீக்குள் செல்லவே துடித்தாள். அவள் அப்படி தான் வரமுயலுவாளென்று தான் சத்ரியன் வினோத்தை வரவழைத்திருந்தான். வினோத்திற்கு ஷ்ரத்தாவை பாதுகாக்க நன்றாகவே தெரியும். தனது கட்டளைப்படி வினோத் நிச்சயம் ஷ்ரத்தாவை வழிநடத்துவான்.

 

அங்கே சில போலீஸ் படைகளும் சூழ்ந்திருந்தது. மீடியா ஆட்களும் குவிந்தனர். அதற்குபின் தென்கிழக்கு ஆசிய கடற்பகுதியில் உள்ள பதிவு செய்யப்படாத தனித்தீவுகளிலிருந்து வந்த மிருகங்கள் கூட, மெது மெதுவாக ஒளிந்துக் கொள்ள துவங்கினார்கள்.

 

போலீஸ் இலக்காவில் இருந்த நெல்சன் வந்திறங்கினார். அவர் சத்ரியனின் கைக்கூலி என்பதால் அங்கிருந்த பிணங்களை எல்லாம் இன்று இறந்த பிணமாக ஊடகத்திற்கு காட்டிட நடித்தார். தீயணைப்பு துறை நீரை பாய்ச்சிட முனைந்தனர்

 

ஊடகங்கள் முன்னே வினோத்தாக முன் வந்து, “என்னோட பாஸ் சத்ரியன் என் காதலியை கற்பழித்தார். அதுக்கு பழிவாங்க ஷ்ரத்தாவிடம் உதவி கேட்டேன். ஷ்ரத்தாவும் சத்ரியனோட ஆசைக்கு கட்டுப்பட்டு கூடவேயிருந்தா..நேரம் பார்த்து, சத்ரியனை போட்டு தள்ளிட நினைச்சா. ஆனா.. ஷ்ரத்தா அவளறியாம கர்ப்பமாகவும், குழந்தையை அழிக்க இக்கட்டை தரவும் கொல்ல துணியவும், தற்காப்புக்காகவும் தன் குழந்தையை பாதுகாக்கவும் கொல்ல துணிந்துட்டா. என்னயிருந்தாலும் அவ டாக்டர் படிக்கிறவ. சத்ரியன் குழந்தையே ஆனாலும் கொல்லாம காப்பாத்தினா. இதுல நடந்த இஸ்ஸுல நிறையபேர் இறந்துட்டாங்க.” என்று வருத்தமாக கூறினான்.

‌ நேரலையாக செய்திகளில் ஷ்ரத்தா அழுகை படம் பிடிக்கப்பட்டது.

 

அமைதியில்லா இருளில் அவளது அழுகை மௌனத்தை தாண்டி ஊடகத்திற்கு தீணியின்றி நெல்சன் ஷ்ரத்தாவை கைது செய்ய அவருக்கு கீழுள்ள ஏசிபிக்கு பணித்தார். சத்ரகயனே இறந்ததை வீடியோவாக காட்சி செல்ல, மற்ற எதிரிகளும் அவ்விடம் விட்டு நழுவினார்கள்.

 

இரவெல்லாம் நகர்ந்து சென்றது. சத்ரியனின் பங்களாவை முழுதாக தீயணைப்பு துறை அணைத்தனர்.

அடுத்த நாள் காலை மலர்ந்தது. நேரிடையாக ஊடகத்தில் ‘பிரபல கிங்பின் சத்ரியன், ஆசைநாயகி ஷ்ரத்தாவின் கையால் முன்னாள் கூட்டாளிகளின் உதவியால், தாக்குதல் நடக்க பெற்று உயிரிழந்தார்’ என்ற செய்தி பரவியது.

 

அன்றைய நாளில் நாடு முழுக்க அந்த செய்தி தான் பரவலாக சென்றது.

 

ஷ்ரத்தா கைதாகி போலீஸ் வண்டியில் ஏறும்போது…

அவள் ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். மீடியாகள் சத்ரியன் இறப்பால், தன்னை புகைப்படம் எடுத்து கொள்வதை கவனித்தாள். சத்ரியனின் பிணம் என்று வெள்ளை துணியால் எடுத்து செல்லப்பட்ட உடலை, மீடியா சூழ்ந்து புகைப்படம் எடுக்க முயன்றது.

 

அவன் இன்னும் எங்கோ நின்று பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது. அவன் கூறியது போல அவளுடன் தான் நிழலாக திரிவதாக நம்பினாள்.

 

கண்ணீரை துடைத்தவள் வயிற்றை பிடித்தாள். இது சத்ரியன் குழந்தை. அவனது வாரிசை நல்லபடியாக பெற்றெடுக்கும் முடிவுடன் வேனில் ஏறினாள்.

 

அவளது வாழ்க்கை முடிந்தது. மருத்துவம் பயில வேண்டுமென்ற ஆசையில் துள்ளி குதித்து திரிந்த மங்கை.. தந்தை இறந்தப்பின், சத்ரியன் கைக்குள் கிடந்தவள், இன்று ஊராரும் ஊடகமும் சொல்லுகின்றது ‘ஷ்ரத்தா சத்ரியனை அழித்தாள்’ என்று பேசவைத்து

விட்டாள்.

 

அடங்காத திமிர் அரசனுக்காக அவன் வார்த்தைக்கு அடங்கிவிட்டாள்.

 

– தொடரும்.

பிரவீணா தங்கராஜ்.

One more episode 10 o clock posted.

ரீடர்ஸ் new site la கமெண்ட்ஸ் பண்ணறவங்க லாகின் செய்து போடுங்க. இல்லைன்னா அனானிமஸ் பெயரா காட்டுது. ப்ளீஸ்.. உங்க பெயர் எனக்கு நினைவில் வரும். நிறைய பேர் முகநூலில் ரெக்வஸ்ட் வந்தா யாருனே தெரியாம இக்னோர் பண்ணறேன். அடிக்கடி கண்ணில் படும் பெயராக இருந்தா தானே நான்  இவஙக  naம்ம ரீடர்னு ரெக்வஸ்ட் அக்சப்ட் பண்ணுவேன். சோ கமெண்ட்ஸ்கு லாகின் பண்ணி பாருங்க.கஷ்டமான வேலை இல்லை. Save password தந்துட்டா லாகின்ல நீங்க கை வச்சாலே ஆட்டோமெடிக்கா யூஸர் நேம் பாஸ்வோர்ட் வந்து அதுவே நிரப்பிடும். க்ளிக் பண்ணி நீங்க கமெண்ட்ஸ் பண்ணலாம்.

3 thoughts on “The leader-49”

  1. Omg i didnt expect chtariyan will due that too in sharadha hands. Sos sad. Now sharadha how will survive without chatriyian. Vinoth come back is happy for this emotional epidose. Very intresting sis.

  2. Super sis nice epi 👍👌 chathriyan eppdi oru mudiva yedupaan nu nenaikave ella🥺🥺🥺 shratha ku kandipa romba pain ah erukum but naan namburen avan kandipa uyiroda dhan erupaan meendum varuvaan😕

  3. Ippadi oru twist vaipinga nu ninaikala nalla ana mari sharadha kaiyalaye sagadika sollitu poitane eni thaniya un kolanthaikaga shradha vazhanum eppadi mudium chathriya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!