அத்தியாயம் -4
ஆர்யன் அண்ணன் வந்த பிறகும் வெளியே செல்ல துளிருக்கு தைரியமில்லை. நிச்சயம் ஊர்லயிருந்து அண்ணன் வந்தும் எங்க போற? மாமா விட்ல இருந்து நாளை மறுநாள் வருவாங்க. அதுகுள்ள என்ன அவசரம் என்ற வினா பிறந்திடும்.
கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து பெறுமூச்சு விட்டாள்.
பார்த்து பார்த்து அலங்காரம் செய்தது எல்லாம் வீண்.
அக்கணம் தான் ‘நாம ஏன் அவன் வாங்கி கொடுத்த உடையை அணிந்துள்ளோம் என்று மனசாட்சி கேட்க, திடுகிட்டு போனாள்.
திமிர் பிடித்தவன் ஆயிரம் முறை உரைத்தான். ‘நீயும் என்னை விரும்புகிறாய்’ என்று அப்பொழுது எல்லாம் மறுத்திருக்க இன்று மனசாட்சி துளைத்துவிட்டது.
மெத்தையில் தொப்பென்று அமர்ந்து பேயறைந்தது போல காணப்பட்டாள்.
கண்களில் அருவி உடைபெடுத்தது உடல் குலுங்க இதுவரை விளையாட்டு தனம் நிறைந்த துளிருக்கு ஞானம் பிறந்தது.
கண்களை அழுத்தமாய் துடைத்து முடித்து உடையை கழட்டி மடித்து வைத்தாள். எப்படி பார்சல் வந்ததோ அப்படியே மீண்டும் பேக் செய்து முடித்து அதனை திருப்பி தரும் முடிவையும் எடுத்தாள்.
திருப்பி கொடுக்கும் போது இதுவரை பேசாதவனிடம் மொத்தமாய் பேசி இதுபோன்ற விளையாட்டை நிறுத்த கூறிடவும் முடிவெடுத்தாள்.
அதனை செயல்படுத்தும் முன்னரே லேசான வருத்தம் சூழவும் ஆர்யன் அண்ணனை தேடி ஓடினாள். அவன் அறைக்கு செல்பவள் கூடவே அண்ணனிடம் பேச்சை ஆரம்பிக்க, அண்ணியாக தேர்ந்தெடுக்கும் பெண்களின் புகைப்படத்தையும் எடுத்துச் சென்றாள்.
மெத்தையில் இமை மூடி பல்வேறு சிந்தனையில் மூழ்கியிருந்தவன் கதவு திறக்கவும் எழுந்தமர்ந்தான்.
”அட குள்ள கத்திரிக்கா இங்க என்ன வந்துட்ட? என்னாச்சு டிரஸ் மாத்திட்ட? அந்த டிரஸ் அழகாயிருந்ததே” என்று தங்கை வரவும் மற்றதை மறந்து கேட்டான்.
“என் பிரெண்ட் அனுப்பின டிரஸை போட்டுட்டு, போட்டோ எடுத்து அனுப்பிட்டேன் அண்ணா. சோ இனி அந்த டிரஸ் போடணும்னு அவசியமில்லை. எனக்கு நீ வாங்கி தந்தது தான் அண்ணா எப்பவும் ஸ்பெஷல்.” என்று அண்ணன் அருகே வந்தமர்ந்தாள்.
துளிர் பேச அவன் உதட்டிலும் சிறு துளிர் புன்னகை உருவானது.
“இந்த போட்டோ எல்லாம் பாரு.” என்று சட்டமாய் கூறினாள்.
“துளிர், அம்மா ஐயாவிடம் பொறுப்பை ஒப்படைச்சிருக்கு என்னிடம் கருத்து கேட்கிற, நாட் இன்ட்ரஸ்ட்” என்றான் ஆர்யன்.
“அதெப்படி ஆர்வமில்லாம போகும். எனக்கே எங்க அண்ணி எப்படியெல்லாம் இருக்கணும்னு ஒரு கற்பனை இருக்கு. உனகில்லையா?” என்று தன் மனதை மாற்றிட விளையாட்டாய் அண்ணனை உருட்ட ஆரம்பித்தாள்.
”உனக்கு என் கூட சண்டை போட்டு போரடிச்சிருக்கும். அதனால் புது முகம் தேடற. எனக்கு அம்மாவோட இருக்கற வாய்ப்பே படிச்சி முடிச்சி தான் கிடைக்குது. அதனால் எனக்கானவளை பொறுமையா தேடிக்கறேனே” என்றான்.
“அதெல்லாம் தெரியாது இப்ப வரிசையா காட்டுவேன் உன் ஒப்பீனியன் சொல்லுண்ணா” என்று கூற, சர்வேஷும் “ஏ நானும் வந்துட்டேன்” என்று ஆர்யனின் மறு பக்கம் ஓடி வந்தமர்ந்தான்.
ஒருபக்கம் தம்பி ஒரு பக்கம் தங்கை என்று இருவருக்கும் இடையே ஆர்யனோ, “அண்ணி ஒருத்தி வந்துட்டா இந்த மாதிரி என் பக்கத்துல கூட உட்கார விடமாட்டா. பரவாயில்லையா?” என்றான்.
“ஏதாவது சொல்லி டிமிக்கி தராதா” என்று துளிர் கூற, கையில் கவரை வைத்து வரிசையாக பெண்களின் புகைப்படத்தை உற்று நோக்கினான்.
ஆர்யன் வாய் திறக்கும் நேரம் சர்வேஷும் துளிருமே கண் காது மூக்கு என்று ஒவ்வொன்றாய் அவரவர் விருப்பம் கூறி நிராகரித்தார்கள்.
“இந்த பொண்ணுக்கு ஏற்கனவே குட்டி கண் சொல்லி ரிஜக்ட் பண்ணியது. திரும்ப யார் வச்சா?” என்று துளிர் சிடுசிடுக்க, “உனக்கு பிடிக்கலை அண்ணாவுக்கு பிடிக்குமேனு வச்சேன்” என்று சர்வேஷ் கூறினான்.
“இன்னொரு முறை இப்படி பண்ணின உதைப்பேன். பெரிய அண்ணிக்கு பெரிய கண்கள், அண்ணனை எதிர்த்து பேச குட்டி வாய், இடுப்பு அளவுக்கு முடி இதெல்லாம் இருக்கணும்” என்று அடுக்கினாள்.
ஆர்யனோ “குட்டிக்கத்திரிக்கா, என்னதிது, அழகு முக்கியமான தான் அதுக்குன்னு இப்படியா? நாளைக்கு என் தங்கையை பொண்ணு பார்க்க வர்றவன் குள்ளமா இருக்கனு உன்னை ரிஜெக்ட் செய்தா எப்படியிருக்கும். சின்ன கண்ணு பெரிய மூக்குனு.” என்று கூற, “யாரு குட்டிகத்திரிக்கா. இந்த வீட்ல உங்க கூட மொத்தமா நின்றா நான் குட்டியா கியூட்டா இருக்கேன். மத்தபடி நானும் உசரம் தான். என்னை விட்டு தள்ளு. நீ செலக்ட் பண்ணு” என்றதற்கு, “எனக்கு ஐயா அம்மா பொண்ணு பார்க்கட்டும். நீ இந்த போட்டோ எல்லாம் கொடு. உங்களை நம்பி வாழ்க்கையை கொடுத்தேன் அம்புட்டு தான்” என்று கவர்களை பிடுங்கினான்.
“அண்ணா” என்று கோரஸாக சர்வேஷ், துளிர் கத்த, “நோ நோ, பைனல்.” என்று பிடுங்கிக்கொண்டு ஓரமாய் வைத்து, “வந்ததும் ஜாலியா ரவுண்ட்ஸ் போகலாம். இந்த பொறுப்பு எல்லாம் ஐயா பார்க்கட்டும். எங்க அம்மாவையே தேர்ந்தெடுத்தவருக்கு எனக்கு என்ன செய்யணும்னு தெரியும். என்னோட ஊர் சுத்த வாங்க” என்று தங்கையை அழைத்தான்.
தாய் தந்தை ஆச்சி தாத்தாவிடம் இரவு வருவதாக கூறிவிட்டு சர்வேஷ் ஒரு வண்டியிலும், ஆர்யன் துளிர் ஒரு வண்டியிலும் கிளம்பினார்கள்.
துளிரோ அண்ணன் தோளை பிடிமானத்திற்கு பிடித்து கொண்டாள்.
போகும் வழியெல்லாம் “என்ன பெரியவனே பொங்கலுக்கு வந்திருக்கிங்களா?” “சௌவுக்கியமா?”
“படிப்பு முடிஞ்சிடுச்சா?”
வீட்டுக்கு வாங்க, டாக்டருக்கு பொண்ணு பார்த்தாச்சா?” என்று கேட்க, எல்லாவற்றிற்கும் நின்று பதிலுரைத்து புன்னகையாக மொழிந்தான்.
”பார்த்தியா சர்வேஷ் அண்ணா, நாம இந்த ஊர்லயே இருக்கோம். நம்மளை விட பெரிய அண்ணாவை தான் நலம் விசாரிக்கறாங்க.” என்று துளிர் கதை அளந்தாள்.
சர்வேஷோ “நானும் அப்ப மேற்படிப்புக்கு வெளியூர் போறேன். இல்லை இல்லை வெளிநாடு போறேன்.” என்றதும் துளிரோ இடக்காய் சிரித்து “நீ அம்மாவை விட்டுட்டு போகமாட்ட, நான் ஐயாவை விட்டுட்டு போக மாட்டேன். அப்பறம் எப்படி? வெளிநாடு நாம வெளியூரையே தாண்ட மாட்டோம்” என்று துளிர் நகைத்தபடி இயல்பாய் கூறவும், ஆர்யன் முகம் இறுகியது.
‘நான் மட்டும் ஐயா அம்மாவை விட்டு எப்படி போனேன். அழாத குறையா என்னை துரத்திட வச்சிட்டா அவ.’ என்று ஆர்யன் பாறையாய் வண்டியை இயக்கினான்.
அவன் படிக்க அனுப்பியதே ஒரு கதை அல்லவா?!
“அண்ணா அண்ணா சுமன் மாமா கையை காட்டினார் பார்க்கலையா?” என்று துளிர் தோளைத்தட்டி கேட்டதும் வேகத்தை குறைத்து வண்டியை திருப்பினான்.
சுமன் தந்தை நிபுணனின் தோழர்கள். அதனால் மாமா என்று அழைத்தே பழக்கம். சுமன் மனைவி நதியாவை அத்தை என்பார்கள்.
இவர்டளுக்கு இரண்டு பசங்கள் விக்ரம்-சூர்யா.
“என்ன மாப்பிள்ளை எப்படியிருக்க? என்ன வண்டி இம்புட்டு வேகமெடுக்குது.” என்று கேட்டார் சுமன். அதற்குள் சர்வேஷ் நின்று பேசியிருந்தான்.
“நல்லாயிருக்கேன் மாமா. மன்னிச்சிடுங்க மாமா கவனிக்கலை. ரோட்டை பார்த்துட்டே இருந்துட்டேன்.” என்று சங்கடமாய் தவித்தான் ஆர்யன்.
“வண்டியோட்டறப்ப கவனம் ரோட்டுல தான் மாப்பிள்ளை இருக்கணும். நீ சரியா தான் மாப்பிள்றை இருக்க” என்று மனதை குளிர்வித்தார்.
“அத்தை கூட வந்திங்களா மாமா?” என்று சர்வேஷ் கேட்டார்.
“பின்ன உன்ற அத்தை இங்க போனோம் அங்க போனோம் பட்டியல் போட்டு நம்மளை டிரைவரா உருட்டறா. பையனோட போடின்னா அவன் வீட்லயே தங்கலை. அவன் பிரெண்ட் கூட சுத்தறான். பொண்ணு கூடவும் ஒதஆதஉவர மாட்டேங்குது” என்று அலுத்து கொண்டார்.
“நல்லது தானே மாமா. உங்களுக்கும் அத்தைக்கும் பிரைவேஸியா இருக்கும்.” என்று சர்வேஷ் கேலியில் பேசினான்.
“என் என்னத்த பிரைவேஸி. தனியாயகருந்தா ஜம்முனு இருந்திருக்கும்.” என்றதும் சர்வேஷ் நகைத்தான்.
“போங்க மாமா ஆர்யன் அண்ணாவுக்கு தேடி அலுத்துட்டு இருக்கோம். எனக்கு பிடிச்சா இவனுக்கு பிடிக்கலை.
இவனுக்கு பிடிச்சா எனக்கு பிடிக்கலை.” என்று சோகத்தோடு உரைத்தாள்.
“அட சட்டுனு எப்படி முடியும். ஆர்யன் குணம் படிப்பு தகுதி இப்படி எல்லாத்திலும் சமமா இருக்கணும்.” என்று புகழ, ஆர்யனோ சிறு புன்னகையோடு நின்றான்.
“சரி மாப்பிள்ளை நீங்க கிளம்புங்க. நதியா வர அரைமணி நேரமாகும்” என்று அனுப்ப தலையாட்டி பொங்கல் வாழ்த்து கூறி கிளம்பினார்கள்.
துளிர், ஆர்யன் வண்டியில் ஏறும் கணம், அவளுக்கு பனீட்சயமான ஹாரன் சத்தம் அதீதமாக துளிர் காதில் கேட்டது.
துளிர் அவன் தானா? என்று திரும்ப, அந்த திமிரரசன் பைக்கில் ‘நானே தான்’ என்பதாக குறுக்கீடாக சென்றான்.
துளிரின் முகம் படபடப்பாய் திருட்டு விழியில் அவனை தரிசிக்க, ரசிக்க, துளிரை ரசிக்க வந்த, அந்த கண்களோ லேசான அதிருப்தியாக பாவித்தது.
நான் வாங்கி தந்தது உடுத்தலையா? என்ற பார்வையை வீசினான்.
துளிரோ அவன் உரிமையாக தீண்டும் பார்வைக்கு அர்த்தம் புரிய, கோபமாய் முகத்தை தூக்கி திரும்பினாள்.
“கொழுந்துக்கு கொழுப்பு பார்த்தியா” என்று மிதப்பாய் கூறினான் தன் தோழனிடம்.
“நேத்து ஆர்யன் அண்ண வந்தப்ப நீ கொடுத்த டிரஸ் தான் மாப்பிள்ளை போட்டுச்சு. இன்னிக்கு உன்னை பார்த்து முகத்தை திருப்புது.” என்று ஏற்றிவிட, திமிர் பிடித்தவனோ, “அவன் அண்ணன் ஆர்யன் இருந்தா கொழுந்துக்கு கண்ணு தெரியாது.
அவர் இல்லைனா தைரியம் துளிர் விட்டுடும். காலேஜ் வருவா தானே அப்ப கவனிச்சிக்கறேன்.” என்று வேண்டுமென்றே ஆர்யனை தாண்டியும், ஒட்டியும் பைக்கில் முன்ன பின்ன என்று மாறிமாறி துளிருக்கு பிபி ஏற்றினான்.
ஆர்யனோ ஒரு கட்டத்தில் துளிருக்கு பிடித்த சிற்றுண்டி கடைக்கு செல்லும் பாதைக்கு போகவும், சர்வேஷ் பின் தொடர, துளிரை காண வந்த காளை அவனோ, அவளெதிரில் வேறு பாதைக்கு சென்று பின் தொடர்வதை நிறுத்தம் கொண்டதாக தெரிவித்து முடித்தான்.
துளிரோ எச்சிலை கூட்டி முழுகி சோகமானாள்.
ஆர்யன் முதுகில் முகத்தை தாங்கிட, “என்னாச்சு துளிர்” என்று வண்டியை நிறுத்தி கேட்டான்.
“ஒன்னுமில்லை அண்ணா. குளிர்ந்த காத்து ஒரு மாதிரி இருக்கு” என்று பொய்யுரைத்தாள்.
“உனக்கு பிடிச்ச கருப்பட்டி குழல் சாப்பிட்டு பேசிட்டு போகலாம்னா குளிருதுனு சொல்லற. அப்ப வீட்டுக்கு போயிடலாமா?” என்று கேட்டான்.
“இல்லைனா ஈவினிங் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு பொறுமையா போகலாம்.” என்றாள்.
ஆர்யன் சற்று பெரியவனாக வளர்ந்ததும் சர்வேஷ் ஆர்யன் கூடவே சுற்றுவான். துளிரோ சிறு பெண் என்று தவிர்க்க, அவளோ ஆர்யன் அண்ணனிடம் அழுதுபுரண்டு வண்டியில் ஐக்கியம் ஆகிடுவாள். அதனால் மூன்று பேரும் ஊர்சுற்றுவது வாடிக்கை. ஆர்யன் படிக்க சென்ற காலத்தில் இப்படி மூவரும் செல்வது குறைந்துவிட்டது.
அதனால் எப்பொழுது வந்தாலும் முதலில் பைக்கில் ஊர்சுற்றி முடித்தால் தான் திருப்தியாகும்.
இன்றும் அப்படியே ஊர்சுற்றி வந்தார்கள்.
ஆர்யன் கண்ணில் துளிரை அடிக்கடி காணும் ஆடவன் பதிவாகவில்லை. ஆர்யன் மனம் முன்பு போல சென்னைக்கு திரும்ப வேண்டியதில்லை என்ற எண்ணவோட்டமே நிறைந்திருந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

Cute 3 perum nibuna pasanga alagau tha othe orrumai irukanum epovum
Waiting for the next UD sister.
அட.. அந்த திமிர் பிடிச்சவன் யாரோட பையன்னு இன்னும் சொல்லாமலே இருக்கிங்களே.
அது சரி ! இந்த ஆர்யன் முகம் இறுகி போகிற அளவுக்கு அவனைசென்னைக்கு விரட்டினவ…எவ அவ…?????
Dei Aryan ne Chennai la poi padichadhukku andha sirpi pulla tan karanama …. ungalukkulla enna tan pirachanai….indha ma thulir pulla ne andha thimirasan pathi Aryan kita sollalam ila … super super ka…. waiting for next ud …..
ஆரியனை சென்னை அனுப்பியது சிற்பிகாவோ🤔
அந்த திமிரரசன் யாருன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங் கா!!… ஆர்யனுக்கு என்ன கதைன்னு தெரியலையே!… சூப்பர் எபி கா😍
Super sister ama yaru avan
Sirpika tan aaryan ah chennai ku anupunatho🤔🤔🤔🤔🤔 brothers sister bonding so lovely🥰🥰🥰🥰🥰
அருமை அருமை அருமை அருமை👌👌👌👌👌👌 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️
Sumanukku ponnu thana sis…. En kadhal kalvettil epilogue solli irupinga….
No sis. Muthuvelan ku ragavi sumanuku marriage anatha matum katirupen
Sumanku oru ponnu nu Solli irukeenga sis…
Age attend panna functionku pathirika vaika poi irukaradha solli irundheenga
Super sis semma epi 👌👍😍 aryan ku appdi enna nadandhirukum sirpika dhan karanam ah parpom 🤔
Intresting sis… Thimir arasan yaru athu…. Waiting for upcoming episodes….😍😍😍🥰🥰💕💕💕👌👌👌👌
Super. Excellent affection bond. Interesting sis.
Nice epi sis
அப்போ அப்பா அம்மா விட இன்னொருதி அழுகைக்காக வெளியூர் போய் படிச்சுருக்க 🤨🤨🤨🤨🤨 இரண்டு அண்ணணுங்க கூட வரும் போது இந்த ஆட்டமா 🧐 யாருடா அது 🫣
Super super sis
Hi mam please update the story regularly…it’s quite interesting
Love to read ur stories always mam specially this sequel 🌹🌹🌹
Nice
Nice going sister first epati comment potarathunu theriyala ipathan therijithu 4 ud super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤩
Super Veena nice
Aariyan sollura andha ponnu yaru indha thulir oda andha thimir arasan yaru nu ippo varaikum sollamalae maintain panrigalae
Nice one. Interesting its so happy to ride with brothers…super cool good goings-on
சகோதரர்களின் பாச பிணைப்பு அருமை அக்கா….👌👌👌👌👌…. அந்த திமிர் பிடித்தவன் எப்படி ஆர்யன் கண்ணில் இருந்து தப்பித்து விட்டான்….🤔🤔🤔🤔… இனி என்ன ஆகுமோ….🤔🤔🤔
சூப்பர். .
Super aaryan is in different mood so he find the difference in thulir.
Yenga yarunga andha thimirarasan…. Apo sirpidha karanama aara chennai poga…. 🧐🧐🧐🧐… Annas kuda bike ride poradhey jollydha la❤❤❤adhellam romba miss panra…. Super sis…. Good going 🥰🥰🌹🌹🌹💐💐💐
Appo Aaryana Chennai ku anupunadhu sirpikava dhan irukkum…………..indha Thulir pullaya Evan follow pannitirukkan🤔🤔🤔🤔🤔🤔…….👌👌👌👌👌👌👌💖💞💞💕💕💞💖💓💗💗💗💓💖💞💕💓💗💗💗
ஆரியன் ஹாஸ்டல் போய் படிக்கிறதுக்கு காரணமான இந்த பொண்ணு யாரு??
❤️❤️❤️❤️❤️🫰
Super super super super
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Superb… interesting 😘🎉💯🤩❤️💙💙