புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -6

அத்தியாயம்-6

   ஆர்யன் பருத்தி மில்லில் வேலை பார்க்கும் ஆட்களில் பாதி பேரை  ஆராய்ந்து மருந்து மாத்திரை என்று கொடுக்கவே மதிய உணவு உண்ணும் நேரத்தை அடைந்தது. அதனால் உணவு இடைவேளையில் சாப்பிட்டு வந்து பார்க்க தந்தை நிபுணன் உரைத்திட, “சரிங்க ஐயா” என்று எழுந்து கொண்டான்.

   நிபுணன் தோட்டம் வரை சென்று விட்டு வந்து விடுவதாக கூறி போகும் போது அலுவலக அறைக்கு பக்கத்தில் உணவு பை இருப்பதாக கூறிவிட்டு சென்றார்.

   ஆர்யனும் தலையசைத்து அலுவலக அறைக்கு நடந்தான்.

   கண்ணில் எதிர்பட்டவர் எல்லாரிடமும் புன்னகை தழுவவிட்டவன் அழகாக வடிவமைக்கப்பட்ட கேபினில் லஞ்ச் பை இருக்கவும் கவனித்தான்.

  தந்தை அறைக்கு வந்து பார்த்திட லஞ்ச் பை எதுவுமில்லை என்றதும் ஒரு வேளை மாத்தி வச்சிருப்பாங்க என்று அந்த கேபினில் இருந்த உணவுப்பையை எடுத்து தந்தையின் அறைக்குள் நுழைந்தான்.
  உணவு பையை எடுத்து பார்க்க சின்ன டிபன் பாக்ஸில் ப்ரிஞ்ச் சாதமும், வாழைக்காய் வறுவலும் இருந்தது.
  ‘என்ன இது அம்மா துளிருக்கு கட்டி கொடுத்த பாக்ஸா. இவ்ளோ குட்டியா இருக்கு. நான் வந்தாலே அம்மா நாலுவகை பொரியல் வறுவல்னு செய்வாங்க. இதுல ஆச்சி வேற இருக்காங்க. குட்டியுண்டான பாக்ஸ்ல எனக்கு இருக்குமா? இல்லை மாத்தி எடுத்துட்டு வந்துட்டேனா?’ என்று அந்த கேபினை எட்டி பார்த்தான். அந்த இடத்தில் யாருமில்லை என்றதும், ப்ரிஞ்சு சாதத்தின் வாசம் வேறு அவன் நாசியில்  இழுக்க, ‘யாருடையதாக இருந்தாலும் பார்த்துக்கொள்வோமென்ற மிதப்பில் ப்ரிஞ்ச் சாதம் எடுத்து விழுங்கினான்.

   இரண்டு மூன்று விள்ளலை விழுங்கியதும், உணவின் ருசி கட்டிப்போட மடமடவென வயிற்றுக்கு தள்ளினான்.

     அப்பொழுது நிபுணன் வரவும் “என்னய்யா சாப்பிடாம அப்படியே வச்சிருக்கிங்க?” என்று கப்போர்டை திறந்து காட்ட, அங்கே ஒரு பையில், பெரிய பெரிய கேரியரில் அன்னை அனுப்பிய உணவுகள் இருந்தது.

   “இங்க கவனிக்கலை ஐயா. இது இருந்தது சாப்பிட்டுட்டேன்” என்று சின்ன லஞ்ச் பாக்ஸை சுட்டிகாட்டினான்.

   “அது சிற்பிகாவுடையது. அந்த புள்ள வயிற்றுவலினு வீட்டுக்கு போயிடுச்சு. டிபன்பாக்ஸை மறந்துடுச்சு போல” என்றார் அவர்.

  “அச்சோ” என்று ஆர்யன் உச்சுக்கொட்ட, “பரவாயில்லை அவங்க ஆச்சி சாப்பிட வச்சிடும். நீங்க இதையும் ஒரு கை பார்ப்போம் வாங்க” என்று மைந்தனை கூட அமர்த்தி சாப்பிட அழைக்க, ஆர்யனின் வயிற்றுக்கு சிற்பிகா டிபன் பாக்ஸ் உணவு போதவில்லை என்று அன்னை அனுப்பி வைத்ததையும் தந்தையோடு சேர்ந்து ருசித்தான்.

  உணவு முடிந்ததும் மீதி பேருக்கு செக்கப் ஆரம்பிக்க, நிபுணனோ “நாளை காலையில பாருங்க ஐயா. இப்ப கொஞ்சம் போய் உறங்குங்க. ஆஸ்பிட்டல் போயிட்டா இப்படி நடுவுல உறங்க முடியாது” என்று அனுப்ப தந்தை சொல் தட்டாமல் தலையாட்டிக் கொண்டான்.

  அவனுக்கும் பருத்திமில்லில் தன்னால் முழு நேரம் வேலை தடைப்படக் கூடாதென்ற எண்ணம்.

   ஆர்யன் நாளை பார்ப்போமென்று கிளம்பிவிட்டான்.

   தங்கை துளிர் வரும் நேரம் அவளோடு கதை அளக்க சென்றான் ஆர்யன்.

  ஆனால் துளிரோ கண்ணீரை அடக்கியவளாக காரில் பயணித்தாள். வரும்பொழுது எல்லாம் விதார்த் பேசியதே நெஞ்சில் வந்து தாக்கியது.

  ‘விதார்த்’ வேறுயாருமில்லை. துளிரிடம் கொரியரில் உடையை பார்ஸலை அனுப்பி அவளிடம் போனில் விளையாடும் அழகன்.
   ஒரே கல்லூரி துளிருக்கு சீனியர். தற்போது இந்த அறிமுகமே போதுமானது. அவனிடம் கொரியரில் வந்த ஆடையை திருப்பி தர சென்று அவன் கையில் கொடுக்கும் திரணியின்றி, அவன் பார்க்க அவன் முன் வைத்து ஓடப்பார்த்தாள்.

   அந்த திமிர் பிடித்த இளங்காளையோ, துளிரை வழிமறித்து, “இந்த பார்ஸலை பிரிச்சி டிரஸை பார்த்து, பிடிச்சி போட்டு பார்த்துட்டு, உங்க நொண்ணன் வரவும் அவன் வாங்கியதை போட்டுட்டு, இப்ப பிரிக்காத மாதிரி எதுக்கு இங்க கொண்டு வைக்கிற?” என்றான்.
   அந்த கேள்வியே துளிருக்கு ஆட்டத்தை கொடுத்தது.

   தான் பிரித்து பார்த்து அணிந்ததை யாரோ சொல்லியிருக்க தொண்டை அடைத்தது.

  “இங்க பாரு கொழுந்து. எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு உனக்கு தெரியும் தானே? உனக்கும் என்னை பிடிச்சி தானே நேத்து இந்த டிரஸ் போட்டு உங்க சர்வேஷ் அண்ணா கூட டவுனுக்கு போக வாசல் வரை வந்த, உங்க பெரியண்ணா பார்த்ததும் அப்படியே மாறிட்ட. ஏன்டி அவன் பார்த்ததுக்கே என்னை உதறிடுவ போல. பிறகு எப்படி என்னை விரும்பறதை சொல்வ?” என்று மென்மையாக தான் ஆரம்பித்தான்.

  “நான் ஒன்னும் உங்களை விரும்பலை” என்ற அடுத்த நொடி ஆங்காரமாய் அவதாரம் எடுத்தான்.

   “பிடிக்காம தான் டிரஸ் போட்டியா?” என்று கேள்வியே நெஞ்சை உலுக்கியது.

   “நான் புது டிரஸ் என்ற ஆர்வத்துல போட்டுட்டேன்” என்றாள் துளிர்.

  திமிருக்கு பிறந்த விதார்த்திற்கு இந்த பதில் சலங்கை கட்டிவிட்டது.

  “ஓ உனக்கு புது டிரஸே இல்லை. நான் வாங்கி தந்த புது டிரஸ் மேல மேடத்துக்கு ஆர்வம் வந்துடுச்சு. அறைஞ்சேன் பல்லு சிதறு தேங்காயா பொலபொலனு உதிரும்.

   மாசம் மாசம் புது டிசைன்ல எந்த டிரஸ் வந்தாலும் உங்க வீட்டுக்கு வந்துடும். இதுல நான் எடுத்து கொடுத்தது மட்டும் ஆர்வம். உனக்கு என் மேல ஆர்வம்” என்றான்.

  “இங்க பாருங்க எனக்கு எந்த பீலிங்கும் இல்லை. ஐ மீன் காதல் இல்லை. என்றாள்.

   “ஒரு பீலிங்கும் இல்லைனா உங்கப்பாவிடம் கொரியர் வந்ததும் மாட்டிவிட வேண்டியது தானே. தனுஜா கொடுக்கலை. ஒருத்தன் இப்படி அனுப்பியிருக்கான்னு மாட்டிவிட வேண்டியது தானே.” என்று எகிறினான் விதார்த்.

  “எங்கப்பா கோபத்துல உன்னை வெட்டிடுவார்” என்று இறுமாப்பாய் உரைத்தாள். ஏதோ உன் உயிருக்காக பார்த்தேன் என்ற பொருளோடு. அப்படியில்லை என்றால் தந்தையிடம் மாட்டிவிடுவதாக மறைபொருளாய் உரைத்தாள்.

  “பார்டா… பயந்துட்டேன். உங்கப்பா வெட்டி வீழ்த்திடுவார். அதனால சொல்லலை. உங்க நொண்ணன் ஆர்யன் வந்திருக்கார் தானே அவனிடம் சொல்ல வேண்டியது தானே. அவன் தான் உனக்கு இன்னொரு அப்பாவா தூண் மாதிரி இருப்பானே” என்று எகத்தாளமாய் கிண்டலடித்தான் விதார்த்.

   துளிரோ “எங்கப்பாவாது வெட்டி போடுவார். எங்கண்ணாவுக்கு தெரிந்தா உங்களை போஸ்ட்மார்ட்டம் பண்ணிடுவார்.” என்று பெருமை பேசியவளிடம், கோபத்தை அடக்கமாட்டாமல், அவள் வைத்த சுடிதாரை தூக்கி விசிறியடித்து “இந்தளவு பேசிட்டல்ல. இனி முகத்துல முழிக்காத. நானா விரும்பறேன்னு மிதப்புல தானே திரியற. இனி நான் விரும்பலை. என் வழியை நான் பார்த்துக்கறேன். போடி” என்று தள்ளிவிட்டான். அதில் மண்ணில் விழுந்து கை உரசி லேசாய் சிராய்ப்பு வந்தது.
  லேசான கண்ணீர் வழிய விதார்த் திரும்பி பாராது சென்றுவிட்டான்.

  துளிரை அவள் தோழி தனுஜா தூக்கிவிட, தள்ளாடி எழுந்தாள்.

    “நான் அப்பவே சொன்னேன். அந்த அண்ணா யாருக்கும் பயப்படாது. அதுக்கிட்ட போய் இப்படி விளையாடியிருக்க. இப்ப பாரு எங்க வந்து நிற்குது.
   சரி விடு. நீ தான் விரும்பலையே. இதோட தலைமுழுகிட்டு வேலையை பாரு” என்று இழுத்து செல்ல, விதார்த் வாங்கி தந்த உடை கேட்பாரற்று கிடந்தது. அதனை எடுக்கவும் துணிவின்றி அப்படியே போட்டு நடந்தாள்.

    துளிர் அழுதபடி அன்றைய நாட்கள் முழுக்க இருந்தாள்.

  வீட்டிற்கு வந்ததும் ஆர்யன் அண்ணன் கையை கவனித்து மருந்திட்டு தங்கையை கடிந்தான். தங்கைக்கு ஏன் அடிப்பட்டிருந்தது என்று தெரிந்தால் தள்ளிவிட்டவன் மண்டையை பிளந்திருப்பான். துளிர் தான் கமுக்கமாய் மறைத்துவிட்டாள். அவள் விதார்த்தை விரும்பியதை போலவே யாரால் அடிப்பட்டதையும் மறைத்துவிட்டாள்.

  வீடே பாசமழையால் மூழ்கியது.

  தங்கலட்சுமி ஆதிரா இருவரும் மகளை கவனித்து கொள்ள நிபுணன் ‘பார்த்து நடந்திருக்க கூடாதாடா’ என்று ரத்த கண்ணீர் வராத குறையாக நின்றார்.

  ஒவ்வொருத்தருக்காய் பதில் தந்து சின்ன அடி என்று விவரித்து அதன் பின் தங்கலட்சுமி கையால் உணவு ஊட்டிப் பெற்று உறங்கினாள்.

அடுத்த நாள் கல்லூரிக்கு கிளம்பும் போது விதார்த் ஒதுங்கிவிட்டால் இனி அவனை சீண்டிவிடாமல் தானும் ஒதுங்கிடும் முடிவோடு புத்தகப்பையை எடுத்தாள்.

    நிபுணன் பருத்தி மில்லில் நேற்று போலவே ஆர்யன் சிகிச்சை பார்க்கும் அழகை, ஆசையாக காண வந்தார். நிபுணனுக்கு மருத்துவம் படிக்க ஆசை. சூழ்நிலை அப்படி அமைத்திடவில்லை. வேறு டிகிரி முடிக்கும் இக்கட்டு மட்டுமே. அதனால் மகனாவது டாக்டர் பட்டம் பெற்று மக்களுக்கு சிகிச்சை அளிப்பதை மனதார ரசித்தார்.

     அப்பொழுது தான் ஒவ்வொன்றிற்கு அங்கு வேலை பார்த்த பெண் கலா, நிபுணனிடம் வந்து சந்தேகத்தை கேட்டு துளைக்க, பொறுக்க மாட்டாமல் “சிற்பிகா வரலையாம்மா?” என்று கேட்டார்.

   “இல்லைங்க ஐயா. அவங்க பாட்டிக்கு உடம்பு சரியில்லைனு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்காங்களாம். உங்களுக்கு தொல்லை பண்ண வேண்டாம்னு என்னிடம் போன்ல சொல்லிட்டாங்க. ஆதிரா அம்மாவிடம் போன்ல சொல்லிட்டாங்களாம்” என்று சிற்பிகா தகவல் அளித்ததை உரைத்தாள்.

  நிபுணனுக்கோ என்னவோ இடிக்க மைந்தனை அளவெடுத்தான்.
  
   ‘ஆர்யன் வந்ததால சிற்பிகா ஓடிட்டாளா?’ என்று முதல் ஐயம் வந்தது.

  ஆதிராவுக்கு போன் செய்து சிற்பிகாவை பற்றி நிபுணன் கேட்க, “நானும் அந்த பொண்ணு இரண்டாவது நாளும் லீவு எடுக்கவும் அப்படி தான் நினைச்சேங்க. ஆனா நான் போன் பேசறப்ப டோக்கன் நம்பர் சொல்லி அவங்க பாட்டிக்கு பெயரை கூப்பிட்டதும் போன்ல கேட்டுச்சு. அதனால விட்டுட்டேன். எதுக்கும் நேர்ல ஒருவாட்டி பார்க்கலாம்னு ஈவினிங் போறேன்.” என்றார் ஆதிரா.

   நிபுணன் அதற்கு “நல்லது அம்மினி. அப்படியே உடம்பு முடியலைனா நம்ம ஆர்யனை வேண்டுமின்னா பார்க்க சொல்லறேன். எதுக்கோ சாயந்திரம் என்னனு பாரு.

  இன்னமும் பழசை மறக்காம இருக்க போறா.” என்று கூறவும், “சரிங்க.” என்று முடித்து கொண்டார்.

     நிஜமாகவே சிற்பிகா ஆர்யன் எந்த நிகழ்வையும் மறக்காமல் தான் கண்ணாமூச்சி ஆடுகின்றனர்.

  என்ன இதில் சிற்பிகாவிற்கு ஆர்யனின் முழு உருவம் அவன் தான் இவன், அவனுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்ற அனைத்தும் ஆதிரா மூலமாக அத்துபடி.

  ஆர்யனுக்கு தான் சிற்பிகாவின் பெயரும் தெரியாது. ஏன் அவனை படிக்க சென்னைக்கு பெட்டி படுக்கையை கட்டவைத்தவளின்  முழுவுருவம் நேரில் தரிசித்தது இல்லை. ஏதோ பதினாறு வயதில் பார்த்த முகம். அந்த முகத்தை தவிர்த்து சிற்பிகாவின் வரலாறோ, வளர்ந்த விதமோ, தற்போதைய உருவம், அவள் தன் அன்னைக்கு கீழ் பணிப்புரிவதையோ, தன் தந்தை பருத்திமில்லில் கம்பியூட்டர் பிரிவில் ஏற்றுமதி இறக்குமதி விவரத்தை கணிணியில் சரிபார்த்து வேலை செய்வதையும் அவன் அறிந்ததில்லை.

     ஆதிரா மாலையில் சிற்பிகாவை காண வந்தாள். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டு பாட்டி ரங்கநாயகி கயிற்று கட்டிலில் தன் தேகத்தை சரித்துயிருந்தார்.

    ஆதிரா வரவும் சிற்பிகா கிச்சனில் கஞ்சி காய்த்து ஆற்றியபடி வந்தாள்.

   “என்ன சிற்பிகா ஆச்சிக்கு என்னாச்சு?” என்று ரங்கநாயகி அருகே அமர்ந்து கேட்க, “நேத்து காலையில வயிற்றுவலினு வீட்டுக்கு வந்துட்டேன் அம்மா. வந்து பார்க்கறப்ப கிணற்று பக்கம் கீழே விழுந்து கிடக்காங்க. நான் தூக்கி வந்து படுக்க வச்சி டாக்டரை அழைச்சேன். அவங்க டவுனுக்கு கூட்டிட்டு போக சொன்னாங்க. நேத்து போனப்பவே அட்மிட் பண்ண சொன்னாங்க. ஆச்சி எங்க சொல் பேச்சு கேட்டுச்சு. என் பேத்திக்கு கஷ்டம் தனியா இருப்பானு என் கூடவே வந்துடுச்சு.

   இன்னிக்கு மறுபடியும் போகவேண்டியதா நிலைமை. நேத்தை விட இன்னிக்கு ரொம்ப சோர்வா தெரியறாங்க. கீழே விழுந்தது மட்டுமில்லாம வயசான காலத்துல நடக்க முடியலை. நேத்து கஷ்டப்பட்டு தான் நடந்து வந்திருக்காங்க. இன்னிக்கு முடியலை படுத்தபடுக்கையா மாறிட்டாங்க.” என்றாள்.

   வாய் பதில் அளித்தாளும் கைகள் அவள் பாட்டிக்கு உணவை ஊட்டி வாய் துடைத்தது.

   _தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

32 thoughts on “என் நேச அதிபதியே -6”

  1. Sirpika eppadi connect agura. துளிர் என்ன வம்பு இழுத்து வைக்க போறாங்க???

  2. இந்த சிற்பிகா பேர் கேள்விபட்ருக்கேன்.. பட் யாரோட பொண்ணு னே தான் நியாபகம் வர மாட்டேங்குது 🤔🤔🤔🤔🤔🤔 ப்ளூ ப்ளீஸ் 😊😊😊😊

  3. இந்த சிற்பிகா பேர் கேள்விபட்ருக்கேன்.. பட் யாரோட பொண்ணு னு தான் நியாபகம் வர மாட்டேங்குது 🤔🤔🤔🤔🤔🤔 க்ளு ப்ளீஸ் 😊😊😊😊

  4. தற்போது இந்த அறிமுகமே போதுமானதுன்னா…. அப்ப விதார்த் ஒரு பெரிய கையோட புள்ளையாத்தான்
    இருக்கணும். செக் அங்க வைச்சிருக்கிங்கன்னு நினைக்கிறேன்.

    அது சரி , இந்த சிற்பிகா & ஆர்யன் கதை என்னன்னு இன்னும் தெரியலையே…
    ஒரே புதிரால்ல இருக்குது.

  5. Aariyan ku Sirpika mela innum kobam iruku aana aval ah pathi ethuvum theriyathu aana Sirpika ku avan ah full details theriyum nama aathira moolama so ivanga panchayathu nibu aathira rendu perukumae therinchi iruku aana atha avanga rendu perum innum manasula vachikitu irukaga nu mattum.theriyala
    Thimir arasan oda per vitharth nu mattum intro panni irukiga

  6. Nice alaga poitu iruku story . Ithula aaryan Kum sirpika Kum ena nadanthuchi 🤔 sikram konajm theriya paduthunga sisy ivaluku theriuthu aana avanuku therila

  7. அருமையான கதை நகர்வு அக்கா….👌👌👌👌👌…. இந்த விதார்த் யாரின் பிள்ளை ஆக இருக்க வேண்டும்….🤔🤔🤔🤔🤔…. ஆர்யன் – சிற்பிகா இடையில் உள்ள பிரச்சினை எப்போது தெரிய வருமோ….🤔🤔🤔🤔

  8. விதார்த்!!!… இவனுக்கு என்ன இவ்வளவு கோவம் வருது!!… யாரா இருக்கும்??…. சிற்பிகா, ஆர்யன் மீட்டிங்க்கு வெயிட்டிங் கா!!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!