Skip to content
Home » மோதலில் ஒரு காதல்-5

மோதலில் ஒரு காதல்-5

          மோதலில் ஒரு காதல் 💞💞      

      “என்னடா சொல்ற கௌரி?”

ஆமாண்டா அதான் உண்மை.” என கௌரி கூற , அடச்சீயென அந்த இடத்தை விட்டு கழண்டாள் சுமித்ரா.    

                வம்சி,  “அப்ப மகிழ் தான் பாட்டிய காப்பாத்தி இருக்காளா?அப்ப பாட்டிய குத்துவிளக்காள குத்துனது யாருடா?எதுக்கு இப்படி செய்தார்கள்டா?” என கத்த குரல் உச்ச கட்ட அதிர்ச்சியில் தேய்ந்து நொந்து போய் கேட்டுக்கொண்டே கௌரியுடன் அவர்களின் ஹாஸ்டலை நோக்கி சென்றான்.        

          “தெரியலையடா பாட்டி கண் முழித்தா தான் இதுக்கான விடை தெரியுமென கூறி ” சரி எதைப்பற்றியும் யோசிக்காத எல்லாத்தையும் கண்டு பிடித்துவிடலாம் நீ போய் ரெஸ்ட் எடு” என கூறியவனிடம்,  “அப்ப மகிழ் தப்பு செய்யவில்லைதான” என வம்சி பாவமாக கேட்க   “ஆமான்டா அவள் எந்த தவறும் செய்யவில்லை.  அவள் நமக்கு ஒரு  ஹெல்ப் தான் பண்ணிருக்கா” என கௌரி கூறினான்.         

           “அப்படின்னா நான் அவள ரொம்ப கஷ்டப்படுத்திட்டனா மச்சி” என கேட்க, “அதுல என்னடா சந்தேகம்” என வம்சியின் காலை வாரினான் கௌரி.              

     வம்சி முறைத்துவிட்டு “சரி நீ போய் தூங்கு நான் மூன்வாக் போய்டு வரேன்  மச்சி” என கூற,….  “என்ன மச்சி பைத்தியம் எதாவது பிடித்திருக்கா என்ன உனக்கு ? இல்ல தெரியாம தான் கேட்கிற இப்ப டைம்” என புருவத்தை உயர்த்தி கௌரி கேட்க,.           

                 “டூ தேர்ட்டி( 2.30) p.m” என கைக்கடிகாரத்தை பார்த்து  சிரித்துவிட்டு, “அப்ப வா மச்சி சன்வாக் போகலாம்” என கூறிய வம்சியை இவன் சரியில்லையே என மனதில் பேசிக்கொண்டிருந்தான் கௌரி.

_________________&&&&&_____________________            

     காலேஜிலிருந்து வெளிவந்த வம்சி, கௌரியின் கண்ணில் கண்ட காட்சியில் “சாக்கோப்பாரால் பேஷ்வாஸ்  பண்ணி கொண்டி இருந்த மகிழை பார்த்து சிரித்தனர்.                   

  இரண்டு பேரும் அவளிடம் சென்று “தீனிமூட்டை நீ இன்னும் திருந்தவே இல்லையா”..என கேட்ட கௌரியை , “உன்னைமாதிரி தான்டா நானும்” என காலை வாரிவிட்டு சாக்கோபாரை ருசித்தாள் மகிழ்.     

             “போதுமா இல்ல இன்னும் வேணுமா”? என‌ வம்சி குறும்பாக கேட்க , கையிலிருந்த சாக்கோபாரை    

         ” சார் இத கொஞ்சம் பிடிங்க , பட் டோன்ட் டேஸ்ட் இட்” என அவனிடம் கொடுத்து விட்டு அவளது கன்னத்தில் கை வைத்து *போதும் சார் போதும் என் பாடி தாங்காது சார்*” என பாவமாக கூறினாள்.                   

       ‘ அச்சோ சாரி “மகிமா” கொஞ்சம் மிஸ் அண்டர்ஸ்டேன்டிங் ஆகி ஒரு கன்புயூசன்ல உன்ன அடிச்சிட்டேன்” என கூறிய வம்சியை…      ஓ அப்படியா என்ற ரீதியில் கௌரி பார்த்தான்( வம்சி எதற்காகவும் சாரி கேட்க மாட்டானென கௌரி அறிவான்).         

                                “ஐயோ சார் போனப்போகட்டும் விடுங்கள்” என பெருந்தன்மையாக கூறிய மகிழை பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர். உண்மையறிந்த பிரியா “போச்சா போச்சு சார்”..என கத்த மகிழ் பிரியாவின் வாயை மூட, தூத்தூவென எச்சிலை துப்பினாள் பிரியா.       வெப்பன்சை கைல எடுக்க கூடாதுனு தெரியாதா ( இவர்களின் வழக்கம் தான்) என கேட்டு விட்டு கிளீன் செய்ய போனாள்.                 

     வம்சி கிட்ட போய் “சார் இனிமே நீங்க ரொம்ப பாவம் சார். அவள் கோவப்பட்டாக்கூட தாங்கிடலாம் , மன்னிசுட்டானா அவளுடைய இம்சையை சகிக்க முடியாது.  பார்த்து சூதானமாக இருங்க” என சிரித்து கொண்டே கூற “ஆமாஞ்சாமி ஆமா” என ஒரே கோரசாக ஆனந்த், லோகேஷ், கௌரி கூற, இதை நான்‌ ஆமோதிக்கிறேன் என பிரியாவும் மர்ம புன்னைகையுடன் கூறினாள்.        

      “என்னோட சாதனையை சொல்லி ஆஸ்கார் அவார்டு வாங்கிட்டிங்களா?” என நக்கலாக கேட்ட மகிழிடம்,            

      “மகிழ் பல்லு விளக்க வேற மறந்துட்ட டி” என பிரியா கூற , அதென்ன ஒரு பத்து மாசமா மறந்துட்ட போல என மகிழ் கேட்க ,       ஆமாடி எப்டி கண்டு பிடிச்ச என கேட்ட பிரியாவிடம் எல்லாம் இந்த ஸ்மெல்லாலதான் என கையை நுகர்ந்து பார்த்து வாமிட் செய்யும் பாணியில் செய்துகாட்ட கோபமாகிய பிரியா மகிழை அடிக்க, அங்கிருந்த அனைவரும் பெக்கபெக்கவென சிரித்த சிரிப்பில் தங்களை தாமே கலாய்த்து கொண்டதை எண்ணி வெட்கினர்.  காலேஜின் எதிர்ப்புறம் இருந்த ஐஸ்கிரீம் பார்லரில் தான் இந்த சேட்டைகள் நடந்தது.    

          அந்த கேப்பிலும் பிரியாவை சைட் அடித்து கொண்டு ஐஸ்கிரீமை சுவைத்தான் கௌரி. அதில் வெட்கம் கொண்டு தலை குனிந்தாள் பிரியா.  வம்சியும் மகிழின் குறும்பை ரசித்தான்.      

           அன்றைய தினம் காலை யுத்த களமாகவும் , மாலை சத்த களமாகவும் சென்றதை வீட்டிற்கு வந்த பிரியாவும் மகிழும் புட்டு புட்டு வைக்க , எனக்கு எங்கடி சாக்கோபார் என மது சண்டை போட்டாள்.  

___________________&&&&&&______________‌      

   ‘அய்யய்யோ மாட்டிக்கிட்ட  உங்கிட்ட மாட்டிக்கிட்ட வலிக்காம காட்டிக்கிட்ட  கணவெது நிஜமெது தெரியாமல’  என்ற பாடலை ரூமில் ஒலிக்கவிட்டு அவள் சாப்பிட்ட மீதி சாக்கோபரை சாப்பிட்ட கௌரி காதலில் மூழ்கி கொண்டே சமைக்க,       இங்கே வம்சியோ , இனிமே அவள் டார்ச்சர் தாங்க முடியாது என பிரியா சிஸ்டர் வேற சொன்னாங்களே அப்படி என்ன பண்ணுவா இந்த குட்டிசாத்தான்? என யோசித்து கொண்டே சமைத்து சாப்பிட்டனர்.           

     மகிழ் எந்தவித கலக்கமின்றி உறங்க, ஐஸ்கிரீமை பிடிங்கி சாப்பிட்ட கௌரியை  நினைத்து நினைத்து நெகிழ்ந்து கொண்டே உறங்கினாள் பிரியா.      

  _____________________&&&&&__________________          

         அடுத்த இரு நாட்களும்  இனிமையாக கரைய, ஹாஸ்பிடல் டியூட்டி என்பதால் தினமும் சாக்கோபார் சாப்பிடுவதை கேன்சல் செய்து, வீட்டுக்கு போலாம் என கூறிய பிரியாவிடம் கெஞ்சிய மகிழை பார்த்து பரிதாபப்பட்டான் வம்சி.       

       வீட்டிற்கு வந்து இறங்கிய மகிழ் உள்ளே செல்லாமல் , நேராக பாத்ரூமில் நுழைந்து இன்று நடந்ததை நினைத்து புன்னகைக்க, சுவரிடம் ஒன்றே ஒன்று மட்டும் தான் என்று சொல்லி முட்டி கொண்டிருந்தாள் பிரியா.               

        பாத்ரூமில் நுழைந்த மகிழ் வம்சியையும், சுவரில் முட்டிய பிரியா கௌரியின் செயல்களையும் எண்ணி வெட்கினர்.                    

   அதே சமயம் அறையில் நுழைந்த வம்சி மாலையில் நடந்ததை நினைத்து சிரித்து தொண்டிருந்தான். அந்த நினைவான பிரியாவிடம் கெஞ்சிய மகிழிடம் ப்ரபசர் அழைத்தார் என கூற           

                   ” அந்த தீவெட்டி தலையன் எதுக்கு என்னை கூப்பிடுறான் என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு நாம அடக்க ஒடுக்கமாக தான இருந்தோம்” என யோசித்து கொண்டிருந்தவள் மண்டையில்  டங்கென்று கொட்டி “இன்னைக்கு என்னடி பண்ணி தொலைச்ச” என கேட்ட பிரியாவிடம் “நான் ஒன்னும் பண்ணலடி” என பாவமாக கூறி சரி வாடி போலாம் என்ற மகிழை,                      

        ஐயோ,  இவள் நமக்கு வேட்டு வைத்திடுவாள் போல என நினைத்து “இல்லடி எனக்கு டயர்ட்டா இருக்கு.  நீ வம்ஷியோட போய்ட்டு வந்துடு என கூறி ரகசியமாக கௌரியிடம் சக்ஸஸ் என்று கையை காட்டினாள்.   

                                  இதுதான் சமயம் என்று மகிழின் கையை படாரென்று பிடித்து கொண்டு செல்ல, கௌரி பிரியாவை அழைத்து செல்வதை பார்த்து “யூ டூ புருட்டஸ்(Brutus)” என கேட்க, ஆமான்டா நானும் எத்தனை நாள்தான் நல்லவனாகவே இருக்கிறது  என கேட்டுக்கொண்டே ப்ரியாவின் கையை பிடித்து அழைத்து சென்றான்.       

            “என்ன சார் ப்ரபசர் கூப்பிடுறாங்கனு சொன்னிங்க வேற எங்கயோ கூட்டிட்டு போறிங்க” என மகிழ் கேட்க ,                           அட மக்கு இன்னுமா உனக்கு புரியவில்லை என வம்சி கேட்க, என்னது நான் மக்கா என முறைத்தாள்.

                       “சரி சரி வா டார்ச்சர்” அங்க என்ன இருக்குன்னு பாரு” என கையை மட்டும் தான் அசைத்தான்.                            ஓடிச்சென்று பத்து சாகோஃபர் வேண்டுமென ஒரு ஐஸ் டப்பாவில் மொத்தமாக மூட்டைகட்டி இருந்தாள். அதற்கான பில்லை கொடுத்த வம்சி, எனக்கும் வாங்கி இருக்கியா? என ஆசையாக கேட்க,                  

       “இல்ல சார் இதுலாம் எனக்கு மட்டும்தான்” என பாவமாக கூறியவளை முட்டி முறைத்தவனை நினைத்து இல்ல இல்ல இது எனக்கு மட்டும்தான் என பாத்ரூமிற்கு கொண்டு சென்ற ஐஸ் பெட்டியுடன் சத்தமாக கத்த,        

              தனக்குப் பிடித்த குலாப்ஜாமுனை வாங்கி கொடுத்து எனக்கும் ஒரு குலாப் ஜாமுன் கிடைக்குமா? என அவள் இதழையே பார்த்து கூறிய கௌரியை நினைத்து ஒன்றே ஒன்று மட்டும்தான் என ஊட்ட முன் வந்து சுவற்றில் டமார் என இடித்து நிகழ்கால நினைவு வர பேயாக கத்திய மகிழை தேடி ஓடினாள்.                         

     சண்டை மீளும்

கௌசல்யா வேல்முருகன் 💝

2 thoughts on “மோதலில் ஒரு காதல்-5”

  1. CRVS2797

    எனக்கென்னவோ கதையோட கன்ட்டினியூட்டி சரியா வரலையோன்னு தோணுது. ஏதோ, துண்டு துண்டா படிக்கிற மாதிரியே இருக்குது.

    1. ஆமாம் finishing பத்தல….

      கதை நல்லாயிருக்கு எழுத்தாற்றல் போதவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *