புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே-16

அத்தியாயம்-16

  ஆர்யன் தன் பேஷண்டை கவனித்துக் கொண்டே 'இவளுக்கு தைரியம் ஜாஸ்தி என்னிடம் அடி வாங்கியும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாளே.' என்று பேனாவை எடுத்த இடத்தில் வைத்து "நெக்ஸ்ட் பேஷண்ட் வரச் சொல்லுங்க" என்று பேஷண்டை கவனிக்கும் அந்த இடைவெளியிலும் இதே நினைப்பு.

‌ நேற்று இரவு துளிர் மட்டும் தான் துள்ளி குதித்தாள். சர்வேஷ் அண்ணனை தனியாக தள்ளிக்கொண்டு வந்து ”அண்ணா உனக்கு இந்த கல்யாணம் சம்மதமா?” என்று‌ கேட்டான்.‌

அதே நேரம் ஆர்யனுக்கு தங்கலட்சுமியிடமிருந்து போன் போடவும், “ஆச்சி பேசுறாங்க” என்று தம்பியிடம் ஒருநிமிடம் என்றுரைத்தான்.

“சொல்லுங்க ஆச்சி” என்று பேச, “ஆர்யன்‌ உங்கம்மா பொண்ணு‌ பார்த்திருப்பதா சொன்னா, அந்த பொண்ணை பார்த்தியா?” என்றதும் ஆர்யன் நகைத்தான்.‌

‌”ஏன் ஆச்சி என்னிடம் கேட்காம எங்க ஐயா அம்மா முடிவெடுப்பாங்களா? அதுவும்‌ என் கல்யாண விஷயம் என் முழு சம்மதம் கேட்டு தான் முடிவெடுத்தாங்க” என்றான்.‌

தங்கலட்சமியோ ”ஆர்யா அம்மாவுக்காக சம்மதிச்சியா” என்றதும் நொடியும் தாமதிக்காமல் “ஏன் ஆச்சி பதினேழு வயசுல மன்னிப்பு கேட்க முடியவே முடியாதுனு நேரா அங்க வந்து படிச்சவன்.‌ இப்ப நான் டாக்டர், கல்யாணம் பிடிக்கலைனா பண்ணிக்க முடியாதுனு சொல்ல தெரியாதா?” என்று பதில் தந்து பேசவும் சர்வேஷ் ஆச்சி அண்ணன் உரையாடலை வேடிக்கையாக பார்த்தவன் தான் கேட்க வேண்டியதற்கான பதிலை அண்ணன் வழங்கவும் நிதானமாக கேட்டுக் கொண்டான்.

”அதெல்லாம் ஐயா செய்தா சரியா வரும்னு தாத்தா அடிக்கடி சொல்வாரே அதே தான். ஐயாவுக்கு தெரியாதா எனக்கு எது நல்லதுனு” என்று கூறுவதை கேட்ட சர்வேஷோ அண்ணன் தோளை சுரண்டினான்‌.‌

''ஆச்சி அப்பறம் பேசறேன் சர்வேஷ் கூப்பிடறான்" என்று அணைத்து விட்டு "என்னல சுரண்டிட்டே இருக்க. தூங்கலையா நீ" என்று கேட்டதும் "இதோ போறேன் அண்ண" என்றவன் அண்ணா உனக்கு அண்ணியை பிடிக்கும் தானே" என்று மீண்டுமொரு முறை கேட்டான்‌. 

"கல்யாணம் முடிஞ்சாலும் கேட்பியாடா. ஆகற வேலையை கவனி" என்று அனுப்பினானே தவிர பிடிக்கும் என்ற வார்த்தையை கூட விடவில்லை.

‌‌ அவன் வாயிலிருந்து சிற்பிகா என்றோ கூட இன்னமும் உதிரவில்லை. அதை யார் அங்கே ஆராய்வது?

சர்வேஷ் அதன் பின் என்ன கேட்பது? ஆர்யனோ இப்பொழுது சிந்தனை செய்ததை தான் அப்பொழுதும் நினைத்தான். ‘இவளுக்கு தைரியம் ஜாஸ்தி என்னிடம் அடி வாங்கியும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாளே.’ என்று அவள் சம்மதிக்கா விட்டாள் அதற்கும் அன்னை சொல் கேளாமல் திரிவாளா என விறப்பாய் நினைத்ததை மறந்தான்.

   சிற்பிகாவிடம் பேச வேண்டுமென்ற ஆவல் துளியும் ஆர்யனுக்கு வரவில்லை.‌ அதே போல சிற்பிகாவும் இவன் போனுக்கு தவம் கிடக்கவில்லையென்றதே நிஜம். 

இங்கு சிற்பிகாவோ நிபுணன்-ஆதிரா அருகே நின்றிருந்தாள்.‌ அவர்களுக்கு எதிரே நரேந்திரன் வீற்றிருந்தான்.

சிற்பிகாவின் தந்தை நரேந்திரன் ஆச்சி இறந்ததற்கு கூறவில்லை என்றது பெரிதாக கவலைப்படவில்லை. மகள் தன்னிடம் பேச கூப்பிடவும் வந்தார்.
‌‌ நிபுணன் ஆதிராவை வைத்து அழைத்து போக வேண்டுமா இதுவொரு தலைவிதி என கடுப்பில் வந்தார்.
அவர் மணமுடித்த பெண்ணோடு சௌவுகரியமாக வாழ்கின்றாரே. மகளை வேறு தன்னிடம் அழைத்து செல்ல மனமில்லை. பின்னர் அவரது தனிமை என்னாவது?

“நீங்க கொடுக்கற தைரியம் தான் எம்மவ என்னிடம் அந்த கிழவி செத்ததை கூட சொல்லலை. இதுவரை கிழவி இருந்தது ஏதோ பொம்பளயாட்களோட வாழ்ந்தா சரின்னு இருந்தேன்.‌

இப்ப வந்து என் மகளை உங்க பையனுக்கு கேட்டா என்ன அர்த்தம். என்ற உறவே வேண்டாம்னு முறுக்கிப்பா.

இப்ப கல்யாணம் எல்லாம் கட்டி தர முடியாது” என்று மகளின் வருவாய் இனிமேலாவது வருமென்று சிரத்தையாக பேசியவரை பொருட்டாக மதிக்காமல், ஆதிராவோ இடைப்புகுந்தாள்‌

“ஐயா அம்மா நீங்க கல்யாணத்துக்கு நாளை பாருங்க.‌ எவன் குறுக்கே வந்தாலும் மசிறா மதிச்சிடுவேன். நீங்க யாரிடமும் கேட்டுட்டு நிற்காதிங்க. உங்க கௌவுரம் குறைஞ்சிடும். எனக்காக நீங்க உங்க தரத்தை குறைச்சிட்டு யாரிடமும் கேட்க வேண்டாம்.” பெத்தவருக்கு இந்த தகவல் போதுமென்றதும் நரேந்திரன் வாயை பிளந்து நின்றார்.

மகள் இப்படி பேசுவாளென்று அறிந்தவரே. ஆனாலும் நூல் விட்டு பார்த்தார்.‌ சிற்பிகாவே இந்த பேச்சை அறுத்தெரிய “உங்கஷ்டம் போல பண்ணுங்க. இந்த ஊர்ல நீங்க வச்சது தானே சட்டம்” என்று நரேந்திரன் முடித்திட, நிபுணனோ “கண்டிப்பா நாங்க வச்சது தான் சட்டம். இருந்தாலும் பெண்ணை பெத்தவருக்கு தெரியாம நாங்களா முடிவெடுப்பது பெரியவர்களுக்கு அழகில்லை பாருங்க. இந்தா இப்ப நீங்களே மகளை கட்டித்தர போறிங்க அப்பறம் என்னங்க ரொம்ப சந்தோஷம். நீங்க உங்க நேரத்தை ஒதுக்கி வச்சி வந்ததுக்கு மகிழ்ச்சி வேலையிருந்தா கிளம்புங்க” என்று நரேந்திரனை எழ வைத்தார்.
சிற்பிகாவோடு பிறகு சணடையிடுவாரென்று கிளம்பிவிட்டார். நரேந்திரன் மகளை முறைத்துக் கொண்டு வெளியேறினார்.

ஆதிராவோ மருமகளை உச்சி முகர்ந்து மற்ற விஷயம் முடிவெடுக்க ஆயத்தமானார். 

ஏற்கனவே பத்து பைசா பெண்ணிற்கு தர மாட்டார். கல்யாணத்துக்கு மட்டும் வாறி வழங்குவாரா? எல்லாம் நீ மட்டும் வந்தா போதுமென்ற வசனம் கேள்விப்பட்டிருப்போம். பெரும்பாலும் அப்படி தான் சிற்பிகா நிலை. சேமித்து வைத்த பணம் எல்லாம் வீடு கட்டியதில் உள்ளது
அது கூட இன்னமும் மூன்று லட்சம் கடன் உண்டு. கடன் இருப்பதோ நிபுணனிடம் தான்.

 கழுத்தில் சின்ன செயின், கையில் இரண்டு மோதிரம் காதில் சிறு தோடு,  வளையல் மட்டும் இறந்த ஆச்சி அணிவித்தது. 

மற்றபடி தங்கம் என்பது இம்மியும் இல்லை. 


அதன் பொருட்டு பேச வாயெடுத்தவளிடம் ஆதிராவோ கையை கட்டி “மருமகளா வர்றகங்களாக்கும்” என்று கேலியாக ஆரம்பிக்க, மகளாவே இதே போல இருக்கேன் அம்மா” என்று அணைத்து கொண்டாள் சிற்பிகா.

ஆதிரா அவளை அணைத்து நிபுணனை காண அவரோ, பிறகென்ன முப்பது முடிய நல்ல நாளை ஆராய்வதில் தீவிரமானார்.

ஆர்யன் சிவனேயென்று டூயூட்டிக்கு கிளம்ப, சிற்பிகாவோ இன்னமும் நிபுணன் மருமகளென்ற செய்தி பரவாததால் நிம்மதியாக அவளுமே பருத்திமில்லில் வேலை பார்த்தாள். 

  இந்த துளிர் தான் இத்தனை நாள் அமைதியாக வலம் வந்தவள் அண்ணன் திருமணம் என்றதும் குதுகலமானாள். திருமணம் ஆகப்போகும் ஜோடிக்கூட இருக்குமிடம் தெரியாமல் இருக்க, தன் தோழியை அழைத்து எங்கண்ணனாவுக்கு மேரேஜ் முடிவாகியிருக்கு எங்க வீட்டுக்கு அண்ணி வரப்போறாங்க' என்று விதார்த் காதுபட கத்தினாள்.

அவனோ இடக்காய் அவளருகே வந்து “இத்தனை நாள் அப்பாவை விட அண்ணன் தான் உசத்தின்னு ஒருத்தியா சுத்தினா.‌ அடுத்து வர்ற கேரக்டர் உங்க வீட்டுக்கு வந்ததும் தங்கச்சியாவது தம்பியாவதுனு உங்கண்ணஆ பெரியண்ணா சொல்லறப்ப, உனக்கு அப்ப அறிவு வரும். உன்னை நேசிக்கறவனை உன்னை மட்டும் நேசிக்கற, என்னை மதிக்காம பண்ணிட்டோமேனு என் நினைப்பு வரும்‌” என்றவன் மேலும் கீழும் பார்த்தாள்.‌

‌ மூஞ்சை பாரு முள்ளம்பன்றிக்கு என்னை காயப்படுத்தற மாதிரி பேசறது. பிறகு காதலிக்க மாட்டியானு மிரட்டது. உன்‌திமிர் குறையா தப்ப என்‌திமிரும் குறையாது டா” என்று கடந்தாள்.

திருமணம் பற்றி நரேந்திரனிடம் பேசி ஒரு வாரம் கடந்திருக்க, நடுரோட்டில் சிற்பிகாவோடு‌ அறைவிடுத்து கத்தினார்.

“நானும் பார்க்குறேன் கூட ஆளிருக்கற தைரியம் என்ன பேச்சு பேசற? செய்முறை என்றாலும் சபையில அப்பான்ற முறைக்கும் நான் வந்து நிற்கணும் செத்துப்போன உங்கம்மா வரமாட்டா. நீ பிறந்ததும் நிம்மதியா மேல போயிட்டா. நீ பண்ணின வேலைக்கு நான் உன்னை தலையில தூக்கணுமா?” என்றதும் வழியில் சென்றவனோ ”என்னம்மா ஏதாவது பிரச்சனையா?” என்றதும் “யோவ் இவளை பெத்தவன்” என்று கூற சிற்பிகா அமைதியாக, வழிப்போக்கன் சென்றுவிட்டான்.

அக்கணம் ஆர்யன் பைக்கில் வரவும் தூரத்திலேயே சிற்பிகா என்றதும் வேகமாய் கடந்திட எண்ணினான்.‌

ஆனால் அவன் பார்வைக்குள், அவளது அழுத கண்களும், லேசான கன்ன சிவப்பும் மருத்துவன் அவனுக்கு புலப்பட, அவளைக் கடந்து வந்தவன் வளைவில் சென்றதும் வண்டியை நிறுத்தினான்.‌

அவன் வரவும் ஆர்யனை ஏறிட்டாள். இவனுக்கும் எனக்கும் தான் திருமணம் ஆனால் யாரோயொருத்தி என்று கடந்திடுபவனை கண்டு தன்னிலை நொந்து அவனை இரண்டு நொடிக்கு மேலாக பார்த்துவிட்டாள்.

நரேந்திரனோ “ஓ.. போறவர்றவனே இப்படி பார்த்து பார்த்து நிற்க வைக்கறியா? எவனாவது உன் அழகை கண்டு இங்க வருவான் அப்படி தானே.” என்று பேச, ஆர்யன் பைக் அவளருகே திரும்பி வந்தது.

‌‌”இங்க எதுக்கு அழுதுட்டு நிற்கற?” என்றான்‌‌ அவளிடம்.

அவனாக திரும்பி வந்ததும் வாய் திறக்கும் சமயம், “எத்தனை பேருடி? அங்க வீட்டுக்கு வந்து ஒருத்தன் அவன் புள்ளைக்கு பொண்ணு கேட்கறான். இங்க ஒருத்தன் நீ பார்க்கவும் வண்டியை திரும்பிட்டு வர்றான்.‌ கண்ணுல போறவர்றவனை மயக்கறியோ” என்றதும் ஆர்யன் நெற்றி சுருக்கி, “எதுக்கு அழறேன்னு கேட்டேன்” என்றதும் “ஒன்னுமில்லை ” என்று உரைத்தாள்.
‌‌
“ஒன்னுமில்லாம தான் கன்னுல சிவந்திருக்கா?” என்றவன் நரேந்திரனை ஏறிட, “ஓ கட்டிக்க அந்த பருத்திமில் ஓனர் நிபுணனோட புள்ள, இவன் யாரு சைட்ல வச்சிக்க வா?” என்றதும் பளீரென்ற அறைந்திருந்தான்.‌

முன்பு சிற்பிகாவுக்கு வழங்கப்பட்ட நங்கூரமான அடி அவள் தகப்பனையும் தாக்கினான்.‌

“ஏய் நான் இவன் அப்பா” என்று தடுமாறினார். சிற்பிகாவை என்ன?’ என்று பார்க்க, “ம்ம்..அப்பா, அம்மா நான் பிறந்தப்பவே பிரசவத்துல இறந்துட்டாங்க. இவர் இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்கார். என்னைக்காவது பார்க்க வருவார்” என்று ரத்தின சுருக்கமாய் அறிமுகப்படுத்தினாள்.‌

ஆர்யனோ ‘ஓ அம்மா வழி பாட்டியோடு வாழ்ந்திருப்பாள் தந்தை பிடிக்காது போல’ என யூகித்தான். அவன் யூகம் அனைத்தும் சரி ஆனால் சின்ன மாற்றம் இருந்தது அவன் அறிந்ததில்லை. தந்தையை அடித்தும் சிலை போல இருந்தவளை வைத்து அவள் தந்தைக்கும் அவளுக்கான உறவுமுறை பழக்கம் புரிந்தவனாக, நிதானமானான்.

“நான் நிபுணன் ஐயாவோட பையன். இப்ப புரிதா. வார்த்தை ஒழுங்கில்லை அதோட நீங்க சரியில்லை. எதுனாலும் வீட்ல பேசுங்க. நீ கிளம்பு” என்று அவளையும் போக கூற, ஆர்யனையும் தந்தையையும் ஏறிட்டாள்.

சிற்பிகா யாரென்று அறிமுகப்படுத்தியும் ஆர்யனால் குடிக்காரனோடு நின்று நிதானமாக பேச விருப்பமின்றி சிற்பிகாவை பின்‌தொடர்ந்து சென்றான்.

 ஸ்கூட்டி கண்ணாடி வழியே ஆர்யன் தன் பின்னால் வரவும் அவளுக்கு சிறு இதம் வந்திருக்க வேண்டும்‌. 

ஆர்யனுக்கு இவயென்ன தினமும் அப்பா மில்லுக்கு போயிட்டு இதே வழில திரும்பறதால பார்க்கறோமோ?

‌‌நேரத்தை மாத்திக்கணும் இவ வர்ற நேரம் நான் பின்னால வர்றது நல்லதாபடலை’ என்று நினைத்தான்.‌

தனக்கு மணக்க பார்த்த பெண்ணின் தந்தையை அடித்திருக்கின்றோம்.‌ இதனால் திருமணம் தடையாகுமா என்ற எந்த யோசனையும் அவனுக்குள் தோன்றவில்லை. அப்படியே திருமணம் நின்றாலும் நல்லதென முடிவு கட்டுபவனே.

சிற்பிகா அவள் வீட்டிற்கு வேறு பக்கம் பாதையில் போக, ஆர்யன்‌ தன் வீட்டுக்கு‌ வேகத்தை கூட்டினான்.

வீட்டுக்கு வந்ததும் அந்த பொண்ணோட அப்பாவை அடிச்சிட்டேன் என்று கூற வந்தான்.‌ ஆனால் தானாக சிற்பிகாவை வைத்து பகிர் பிடிக்காமல் தாய் தந்தையாக அவங்க அப்பாவை அடிச்சியா என்று‌ கேட்டால் அப்பொழுது பார்ப்போமென்ற ரீதியில் உலாத்தினான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

31 thoughts on “என் நேச அதிபதியே-16”

  1. Nee adichathu crt aaryan entha appa vathu ponna ippadi vitu irupangala ipovum panam tharuva nu tha apdi pesuran ponnu life mukiyam illa avanuku

    1. அடேய் ஆர்யா…! ஆனாலும் உனக்கு இம்புட்டு தைரியம் இருக்கத் தேவையில்லை.
      ஆன்னா…
      ஊன்னா… கையை நீட்டிடறது.

  2. Ivan lam oru appan 😡 na santhosama irrukanumnu innor kalyanam kattittu , ivlonal antha piliya vaiyasana Patti kitta enna pathugappu irrukumnu vittrunthan ?
    Ipa mattum vanttanalkum 😏 kalyanathukku urimai kondada “appanu “😏😏😏😏😏😏😏

  3. ஆர்யன் அடிக்கர வரை சிற்பி ஏன் காத்திருந்தால் அவளே அடி வெளுத்திருக்க வேண்டாமா கதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு மா வாழ்த்துகள்

  4. இந்த நரேந்திரன் எல்லாம் தந்தை என்று கூற தகுதியே இல்லாத ஆள்…. அதான் மகள் வேண்டாம் என்று ஆகிவிட்டது ‌…. பிறகு அவள் யாரிடம் பேசினால் என்ன…. ஆர்யன் தந்த அடி சரிதான்…. இன்னும் கூட தந்து இருக்க வேண்டும்….

  5. இன்னும் ரெண்டு நல்லா கொடுத்திருக்கனும் அவள் அப்பாவுக்கு!!!… பார்க்கலாம் எத்தனை நாள் இப்படி கண்டுக்காம இருக்காங்கன்னு!???..

  6. கல்யாணத்துக்கு அப்புறம் சிற்பிக்காவோட அப்பா வீட்டுக்கு வந்தா இதே மாதிரி நாலு அரை அரஞ்சா போதும் அந்த பக்கமே தலை வைத்து படுக்க மாட்டார்

  7. Enna aara posukunu mariyadha ilama adichita… Inum rendu serthu vitrukanum…. Ivan la oru appa… Ponnu munadiye indha varthaiya pesakudathu… Idhula andha ponnaiye apdi kekran… Ineram nibu irundha naalu midhi midhichirpan😅😅😅😅😅

  8. Wow semma semma semma semma semma semma semma semma semma semma semma 👌👌👌👌👌👌👌👌👌ipdi rendu perum yaaromaadhiri nadandhukkuranga ……..ivanga rendu perum eppo love panna aarambipanganu aarvama irukku😍😍😍😍😍😍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!