Skip to content
Home » காதலின் காலடிச் சுவடுகள்

காதலின் காலடிச் சுவடுகள்

காதலின் காலடிச் சுவடுகள் 2

              என் விதிகளின் தேடல் 
              எதுவென அறிந்தும் . 
              ஏங்கும் என் விழிகளுக்கு 
              இருளை பரிசளிக்கும் இந்த 
              காதல் இன்னும் இன்னும்
               இனிக்கவே  செய்கிறது...

             அன்று அதிகாலை முதலே நேரமே சரியில்லதது போல் இருந்தது மதுவிற்கு.... 

” மது அப்படி என்ன யோசனை ” என்று கவிதா மதுவை பார்த்து கேட்டாள்……

“எதுவும் இல்லை கவி”…. மது

” மது உண்மையை சொல்லு ” எதுவும் இல்லாமல் நீ இப்படி இருக்க மாட்ட … ” என்னனு சொல்லு மது அப்போ தான் எனக்கு டென்ஷன் இல்லாமல் இருக்கும்”…….

” கவி காலையில சித்தி கால் பண்ணுணாங்க”!… மது

” என்னவாம் அவங்களுக்கு ??? நிம்மதியாகவே இருக்க விடமாட்டங்களா???? வீட்டில் தான் நிம்மதி இல்லை!!! இங்க வந்தும் இப்படியா!!? ” என்று பொரிந்து தள்ளிவிட்டாள்…

“சித்தியோட தம்பி வரங்களாம் கவி ” அதான் விஷயம்…. மது

“அவனா”!!!!!! என்றாள் கவி….

“நீ ஏண்டி இவ்ளோ டென்ஷன் ஆகுற”???? மது

“அவனும், அவன் தலையும், அவன பார்த்தாலே செம கடுப்பா ஆகுது”…. கவி

சொல்லிய வுடன் சத்தமாக சிரித்தாள் மது….

” அழகா இருக்க மது” என்று கூறினாள் கவிதா….

” அழகு தான் கவி ஆபத்து ” என்று மது கூறியவுடன் அவளை ஆழ்ந்து பார்த்தாள் கவி….

        அந்த நீளமான காரிடோரில் அவன் ஷூ சத்தம் மட்டுமே எதிரொலித்தது.... அவன் ரிஷி வேந்தன்... ஆறடி ஆண்மகன்.. கூரிய பார்வை பார்த்தே எதிரில் இருப்பவரை குலை நடுங்க வைப்பவன்.... எப்பொழுதும் ஒரு அழுத்தம் சிரிப்பு அவன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே காணும் வாய்ப்பு அதுவும் அரிதாக..... 

காரிடோரில் கடைசி அறையின் கதவை
தட்டியவுடன் திறந்து கொண்டது…

“வா வேந்தா” என்று இவன் வயது இருக்கும் ஒருவன் கதவை திறந்தான்…..

” என்ன அருண் ஏதாவது சொன்னானா???? ” என்று அவனை பார்த்து கேட்டான் வேந்தன்…

” இல்லடா வேந்தா வாயே திறக்கவில்லை எவ்ளோ அடிச்சி பார்த்துட்டோம்.. எதுவுமே சொல்லவில்லை ” ……என்று பதில் கூறினான் வேந்தனால் அருண் என்று அழைக்கப்பட்டவன்…

“இப்படி சொன்னா எப்படி அருண் ” நீங்க எல்லாம் எதுக்கு இருக்கீங்க??? இவன் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வர வைக்க
முடியலன்னு சொல்ல உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்லையா???என்று பச்சை வண்ணங்களால் அனைவரின் காதில் ரத்தம் வரும் வரை திட்டி தீர்த்தான் “வேந்தன்

” வேந்தா கொஞ்சம் அமைதியாக இரு” என்று அவனை அமைதி படுத்த முயன்றான் அருண்…

” இல்லை அருண் இவனால் எவ்ளோ பிரச்சனை தெரியுமா??? இவன் பேச ஆரம்பித்தால் எத்தனை பேர் மாட்டிப்பாங்க தெரியுமா???? எவ்ளோ ஈஸியா வேலை முடியும் தெரியுமா???? ” என்று கோபம் குறையாமல் பேசிக்கொண்டே போனான் வேந்தன்….

“எத்தனை தெரியுமா ” அய்யோ!!! இவனுக்கு பதில் சொல்வதற்குள் நான் ஒரு வழி ஆகிடுவேன் போல இருக்கே “என்று மனதில் நினைத்துக் கொண்டான் அருண்… (பின்ன சத்தமா சொல்லி அவன் கிட்ட யார் அடி வாங்க)

கொஞ்சம் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தான் வேந்தன்…

அய்யயோ!!! இவன் என்ன யோசிக்கறான்னு தெரியலையே!!! என்று அருண் நினைத்து முடிக்கவும் வேந்தன் அவன் வேலையை காட்டவும் சரியாக இருந்தது….

அருண் யோசித்து முடிப்பதற்குள் அங்கு சேரில் கட்டி போட்டு இருந்த ஒருவனை தன் துப்பாக்கி எடுத்து சுட்டு தள்ளியிருந்தான் வேந்தன்….

” டேய் !!! டேய்!!! டேய்!!! என்ன காரியம் டா பண்ணிட்ட??? அவன் ஒரு முக்கியமான ஆளு… இவன பிடிச்சா நிறைய விஷயம் தெரியும் நீ தானடா சொன்ன??? இப்ப இப்படி பண்ணிட்டியே??? என்ற தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் அருண்….

அங்கு இருந்த மீதி ஐந்து பேரும் அதிர்ச்சி விலகாமல் வேந்தனை பார்த்து கொண்டு இருந்தனர்…..

“பின்ன என்னடா??? வாயவே திறக்காம இருக்கிறவன வச்சு தெண்டத்துக்கு சாப்பாடு போட சொல்றியா??? எத்தனை நாள் ஆனாலும் அவன் எதுவும் சொல்ல மாட்டான்… இவன இங்க வைச்சிகிட்டு போலீஸ்ல மாட்டிக்க சொல்றியா”??? ” ஏற்கனவே நம்ம மேல போலீஸ் க்கு சந்தேகம்…. இவன இங்க இருக்க வைச்சு வாண்டடா போய் மாட்டிக்க
சொல்றியா “???? என்று ஏகத்துக்கும் கத்தினான் வேந்தன்…..

” சரி அமைதியாக இரு வேந்தா” இங்க நீ இருக்காத கிளம்பு… நாங்க பார்த்துக் கொள்கிறோம்” என்று அவனை போகச் சொன்னான் அருண்…..

” இல்லை அருண் நான் இங்க இருக்கேன்…. ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்…. நீயும் வா!!!?….. என்றான் வேந்தன்…..

அவன் சொல்லும் இடம் எதுவென்று அருணும் அறிந்ததே… அதனால் எதுவும் பேசாமல் அவன் வேலையை பார்த்தான்.. ( அதான் பா செத்தவன அடக்கம் எப்படி செய்வது?? அந்த வேலை தான்) . . .

“ரிஷி’ என்று அருண் கூப்பிட்டதும் ஏகத்துக்கும் முறைந்தான் வேந்தன்……

அடக்கடவுளே!!! மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு “சாரி வேந்தா!!! சாரி வேந்தா” என்றான்…

” போய் வேலையை பாருடா” என்று கத்தி விட்டு அருகில் இருந்த அறைக்குள் போய்விட்டான்….

அவன் போனதும்…. அப்பாடா!!! தப்பிச்சேன்… இல்லனா எனக்கும் இன்னிக்கு சங்கு ஊதி இருப்பான்…. அந்த பேர சொன்னதுக்கு… என்று நெஞ்சில் கைவைத்து பெருமூச்சு விட்டான் அருண்…….

யார் இந்த ரிஷி வேந்தன், அருண்?? இறந்தவனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்??? எதற்காக கொலை செய்யும் அளவிற்கு சென்றான்..

3 thoughts on “காதலின் காலடிச் சுவடுகள்”

  1. CRVS 2797

    யாரு இந்த மது ?
    யாரு இந்த ரிஷி வேந்தன் ?
    யாரு இந்த கும்பல்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *