உதிரன் இனி திருமணம் முடிந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அவர்களது வேலையை பார்க்கத் தொடங்கி விட்டார்கள் அவர்களது தினசரி வேலைகளை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இப்படியே இரண்டு நாட்கள் சென்றது அப்பொழுது வீட்டில் உள்ள மூன்று பெண்களும் அன்று பேசியது போல் வீட்டில் உள்ள கருப்பையா தாத்தாவிடம் பேசினார்கள்
கருப்பையா தாத்தாவும் மகிழனை கூப்பிட்டு உனக்கு திருமணம் செய்யலாம் என்று இருக்கிறோம் என்று சொன்னார் தாத்தா எனக்கு எதுக்கு இப்போது என்றான் டே பேராண்டி உனக்கும் வயதாகிறது அதை மறந்து விடாதே என்றார் எனக்கும் புரிகிறது தத்தா எனக்கு வயதாகிறது என்று ஆனால் கயல்விழி இருக்கிறாள் அல்லவா அவளுக்கு முதலில் திருமணம் முடிந்தால் அவளது திருமணம் முடிந்த பிறகு நான் செய்து கொள்கிறேன்
இப்போது எனக்கு திருமணம் வேண்டாம் என்று தான் சொல்கிறேன் திருமணமே வேண்டாம் என்று சொல்லவில்லை கயலின் திருமணம் முடிந்த பிறகு நான் திருமணம் செய்து கொள்கிறேன் வீட்டில் பெண் பிள்ளை வைத்துக் கொண்டு நான் எப்படி திருமணம் செய்து கொள்வது என்றான் அவன் அவ்வாறு கூறியவுடன் வீட்டில் உள்ள அனைவரும் கயல்விழிக்கு முதலில் திருமணம் செய்து வைக்கலாம் என்று எண்ணினார்கள்
கருப்பையா தாத்தா மகிழனிடம் மட்டும் தான் இதைக் கேட்டார் வீட்டில் உள்ள அனைத்து இளவட்டங்களையும் அழைத்துக் கொண்டு இதை கேட்கவில்லை அதனால் வீட்டில் உள்ள யாருக்கும் வீட்டில் என்ன நடந்தது என்று எல்லாம் தெரியாது பெரியவர்கள் தங்களுக்குள்ளே கயலுக்கு முதலில் திருமணம் பண்ணலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள் அதேபோல் புரோக்கர் இடமும் சொல்லி வைக்கலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்
இப்படியே மூன்று மாதங்கள் ஓடியது அந்த வேலையில் காவேரி தனது அப்பா அம்மாவிடம் வந்து நின்றார் அப்பா அம்மா நான் உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என்று கேட்டார் பிறகு என்னமா என்று கேட்டதற்கு வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிடுங்கள் என்றார் அப்போது வீட்டில் உள்ள அனைவரும் என்ன என்று தெரியாதால் வந்து நின்றார்கள் அப்போது வீட்டில் உதிரன் மகா மகிழன் மூவரும் இல்லை
மூவரும் வெளியே ஒரு வேலையாக சென்று இருந்தார்கள் மற்றவர்கள் அனைவரும் இருந்தார்கள் எல்லோரும் வந்து விட்டார்கள் என்று சொல்லுமா என்று கேட்டவுடன் காவேரி சுற்றி முற்றி பார்த்தார் அவர்கள் மூவரும் வெளியே ஒரு வேலையாக சென்று இருக்கிறார்கள் என்று சுந்தரி சொன்னார் பிறகு தனது தம்பியையும் தம்பி மனைவியும் பார்த்துக் கொண்டே காவேரி தன் மனதில் இருக்கும் ஆசையை கூற ஆரம்பித்தார்
நீங்கள் அனைவரும் என்னை தவறாக எண்ணிவிடாதீர்கள் கயலை வேறு எங்கோ கட்டிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை அது மட்டும் இல்லாமல் எனது மருமகனுக்கு முதலில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணினேன் நமக்காக இப்படி ஓடி ஓடி உழைக்கும் அவனுக்காக ஒரு நல்ல பெண் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன் அப்போது நான் உங்களிடம் சொல்லும் பொழுது எனது மகள் கயல்விழியை கட்டி வைக்க வேண்டும் என்று எண்ணவில்லை
ஆனால் நீங்கள் அனைவரும் முதலில் கயலுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணும்பொழுது தான் என் மனதில் இப்படி ஒரு எண்ணம் தோன்றியது என்னை தவறாக எண்ணி விடாதீர்கள் எனது மகள் கயல்விழியை மகிழனுக்கு கட்டி வைத்தால் கயல் மகிழனயை நன்றாக பார்த்துக் கொள்வாள் என்ற எண்ணம் எனக்கு தோன்றுகின்றது வீட்டில் உள்ள அனைவருக்கும் விருப்பம் என்றால் கயல்விழியை மகிழ்க்கு கட்டி வையுங்கள் என்று கேட்டார்
அவர் அவ்வாறு கேட்டவுடன் அங்கு நான்கு உள்ளங்கள் அதிர்ச்சியாக காவேரியை பார்த்தார்கள் அது வேறு யாருமில்லை தாத்தாவும் பாட்டியும் தங்கள் மனதிற்குள் மகாவுக்கும் மகிழனுக்கும் திருமணம் செய்து வைக்கலாமென்று எண்ணி இருந்தார்கள் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியதால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து வைக்கலாம் என்று எண்ணி இருந்தார்கள்
இப்போது தனது பெரிய மகள் காவேரி இவ்வாறு கேட்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டு நின்றார்கள் அப்பொழுது கருப்பாயை தாத்தா தான் மகிழ் இடம் அவனது விருப்பத்தை கேட்க வேண்டும் அல்லவா அதேபோல் கயலிடமும் கேட்க வேண்டும் அல்லவா என்றார் அப்பா கயல் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறாள் அவளுக்கு மகிமை பற்றி எல்லாம் தெரியுமே என்று என்று கூறிக்கொண்டே கயலை பார்த்தார்
கயல் தனது தாயே பார்த்துக் கொண்டு நின்றாள் அவளால் இந்த திருமணம் வேண்டாம் என்று எல்லாம் சொல்ல முடியவில்லை ஆனால் அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை தன்னுடனே வளர்ந்த தன்னுடைய மகிழ் மாமாவை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று எண்ணினால் ஏனென்றால் அவள் மகிழை இதுவரை கணவன் என்ற முறையில் எப்போதுமே பார்த்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும்
இன்னொரு உள்ளமும் அவ்வாறே நினைத்தது அது வேறு யாரும் இல்லை இனி தான் இனி தனது அண்ணனுக்கு கயல் என்று என்றுமே யோசித்ததில்லை அப்படி இருக்கும்பொழுது இன்று தனக்கு கயல் தான் அண்ணி என்று யோசித்தால் அவளால் அதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை அவளுக்கு கயலை பிடிக்காது என்றெல்லாம் இல்லை ஆனால் அவள் கயலை இதுவரை தனது அண்ணியாக யோசித்ததில்லை அதனால் அமைதியாக இருந்தால்
அது மட்டும் காரணம் அல்ல அன்று மகிழனும் மகாவும் மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டு கட்டியணைத்துக் கொண்டு இருந்ததை பார்த்து இரண்டு உருவத்தில் ஒரு உருவம் இனி தான் அதனால் தன் அண்ணனுக்கும் மகாவுக்கும் இடையில் ஏதாவது இருக்குமோ என்று எண்ணினால் அதனால் இப்பொழுது எப்படி என்று என்னை அமைதியாக இருந்தால்
ஆனால் இதை நாம் பேச முடியாதே தனது அண்ணனோ இல்ல மகாவோ பேச வேண்டும் என்று எண்ணி அமைதியாக இருந்தால் அவர்கள் இருவரும் மொட்டை மாடியில் ஒன்றாக கட்டியணைத்துக் கொண்டு இருப்பதை பார்த்த இன்னொரு உருவம் உதிரன் அதேபோல் இப்பொழுது வீட்டில் உள்ளவர்கள் கயலுக்கும் மகிழுக்கும் திருமணம் செய்யலாம் என்று பேசிக்கொண்டு இருப்பதை உதிரன் கேட்டால் உதிரனின் மனநிலை என்னவாக இருக்கும்
அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது எதுவும் வீட்டில் உள்ள அனைவரும் சரி என்று விட்டு மகிழன் வந்தவுடன் அவனிடம் கேட்டுவிட்டு எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கலாம் என்று பாண்டியம்மா பாட்டி சொன்னதால் அமைதியாக காத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் அனைவரும் வரவேற்பறையில் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுதே உதிரன் மகா மகிழன் முவரும் வந்தார்கள்
என்ன எல்லோருமே ஒரே இடத்தில் கூடி இருக்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே மகா வந்தால் என்ன கயல் ஒரு மாதிரி இருக்க என்று கேட்டுக்கொண்டே கயல் அருகில் போய் நின்றால் மகா கயல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் உதிரனும் என்ன கயல் என்று கேட்டுக் கொண்டே மகாவின் அருகில் கயலுக்கு பக்கத்தில் போய் நின்றான் அப்போது மகிழனும் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்தான்
அனைவரும் ஒன்றாக இருப்பதால் அவர்களின் முக வாட்டமும் ஒரு போல் இருப்பதால் என்ன என்று தெரியாமல் அமைதியாக இருந்தான் அப்போது காவேரி தான் தனது மருமகன் மகிழனிடம் சென்று மகிழ் உன்னிடம் ஒன்று கேட்பேன் அதற்கு உன்னுடைய விருப்பத்தை சொல்ல வேண்டும் என்றார் எண்ண என்று சொல்லுங்கள் அத்தை இதற்கு எதற்காக என் என் விருப்பத்தை சொல் என்று சொல்கிறீர்கள் நீங்கள் செய் என்றால் நான் செய்யப் போகிறேன் என்றான்
மத்த விடயமாக இருந்தால் நான் உன்னிடம் கேட்க மாட்டேன் ஆனால் இது உன் வாழ்க்கை உன்னிடம் கேட்காமல் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார் மகிழ் வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு முறை பார்த்தான் என்னுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்டதா என்று எண்ணிவிட்டு அமைதியாக இருந்தான் பிறகு நான் தான் இப்போது எனக்கு திருமணம் வேண்டாம் முதலில் கயலுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று சொல்லி இருந்தேனே என்றான்
அப்போது காவேரியும் சிரித்துக் கொண்டே அதுதான் டா நானும் பேச போகிறேன் எனக்கு கயலை உனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது என்றார் காவேரி அவ்வாறு ஒரு எண்ணத்துடன் இருப்பார் என்று உதிரன் மகிழ் மகா மூவரும் எண்ணவில்லை இவ்வாறு காவேரி கேட்டவுடன் மகிழனுக்கு அதிர்ச்சியாக இருந்தது மகிழன் மகா இருவரை விட உதிரன் தான் அதிர்ச்சியாகி இருவரையும் பார்த்தான்
பிறகு தனது அம்மாவிடம் பேசலாம் என்று எண்ணினான் அப்போது மகிழன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் உன்னிடம் தான் மகிழ் கேட்கிறேன் உனக்கு கயலை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டார் மகிழும் எதுவும் பேசாமல் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்தான் பிறகு தனது தாத்தா பாட்டியை பார்த்தான் அவர்கள் இருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்பதையும் பார்த்தான்
இந்த வேலையில் அவர்கள் எது பேசினாலும் தவறாகி விடும் மகனுக்காக பேசுகிறார் மகன் வயிற்று பேரனுக்காக பேசுகிறார் என்று தனது பெரிய மகள் எண்ணி விடுவார்களோ என்று எண்ணுகிறார்கள் என்பதை உணர்ந்து மகாவை பார்த்தான் ஆனால் மகா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் அவள் ஏதாவது பேசுவாள் என்று எண்ணி மகிழன் பார்த்தான் ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது மட்டுமில்லாமல் உதிரன் தனது தாயிடம் மகிழனும் மகாவும் விரும்புகிறார்கள் என்று கூறலாம் என்று வந்தான்
அப்போது மகா வேகமாக தனது அண்ணன் உதிரனின் கையை பிடித்து வேண்டாம் என்பது போல் மண்டை ஆட்டினாள் அதை மகிழனும் பார்த்தான் அந்த நிமிடமே அவனது இதயம் சுக்கு நூறாக உடைந்தது மகா தன் குடும்பத்திற்காக தனது காதலையையே இழக்க துணிந்து விட்டால் என்று தான் சொல்ல வேண்டும் தனது பெரியம்மா இப்பொழுது கயலுக்கும் மகிழுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணியிருக்கும் நிலையில் தான் காதலிக்கிறேன் என்று சொன்னால்
எங்கு வீட்டில் உள்ள அனைவருக்கும் வருத்தம் ஏற்படுமோ இல்லை பிரிந்து விடுவார்களோ என்று எண்ணி பயந்தால் அதனால் தங்களது காதலை கூற சென்ற உதிரனையும் தடுத்தாள்
மகா செய்வது சரியா மகிழனை உயிருக்கு உயிராக விரும்பி விட்டு இப்போது தனது குடும்பத்துக்காக தனது காதலை விட்டுக் கொடுப்பது சரியா …
அவளும் சொல்லாமல் சொல்ல வந்த உதிரனையும் தடுத்து இருக்கிறாள் இதனால் மகிழனின் மனம் எந்தளவுக்கு புண்படும் என்று யோசித்தாளா …
இதன் பிறகு மகிழனின் நிலை என்ன …
மகாவும் மகிழனும் சேர்வார்களா …இல்லை குடும்பத்திற்காக மகிழனுக்கும் கயல்விழிக்கும் திரு
மிக்க நன்றி🙏
ஏன் இதை மகிழனே சொல்லி இருக்கலாமே…தான் மகாவைத்தான் விரும்புவதாக..?
அவனும் தானே அவளை விரும்பினான், அடிக்கடி உரிமை எடுத்து பழகவும் செய்தான்.
இது கூட்டு குடும்பம் அல்லவா? குடும்பத்திற்காக பார்கிறான் போல..
Waitinga for next epi. Maha va purinjikittu magizh tha nalla mudivu edukanum maha vitratha magizh .
Thank sagi
Interesting