புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -25

அத்தியாயம்-25

   ஆர்யன் அதிகாலை எழுந்தால் சோம்பல் முறித்து குளித்து பல்விளக்கி, கடமைக்கு சிற்பிகா நீட்டும் டீயை பருகி, மருத்துவனாக மிடுக்காய் உடையணிந்து, இறுக்கமாய் சாப்பிட்டு கிளம்புவதும், மாலையில் தாமதமாக வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டு மாடிக்கு செல்வது என்று தினசரி வாடிக்கையாக இருந்தான்.‌
‌‌
   துளிர் கூட “அண்ணா தினமும் லேட்டா வருது. முன்ன மாதிரி அவரோட பேசக்கூட முடியலை.” என்று வாய் விட்டு உரைத்தாள். 
  
  சர்வேஷோ ‘இந்த வாழ்க்கை இப்படி தான்‌‌ போகும். இதுக்கு தான்‌ அண்ணாவுக்கு வேற பொண்ணை பார்த்திருக்கலாம்’ என்று மனதில் நினைத்து சிற்பிகாவை கண்டு கோபத்தோடு கடப்பான்.‌

  நிபுணன் ஆதிராவோ இவர்கள் அறைக்குள் நடப்பது நமக்கு என்ன தெரியும்? என்பதால் எதுவும் பையனிடம் கேட்கவில்லை‌.

ஆர்யன் மாற்றம் லேசாய் வெளியே அப்பட்டமாய் தெரிய, “என்னய்யா நேரத்துக்கு ஓடறிங்க. லேட்டா வேற வர்றிங்க. வீட்ல உங்களை நம்பி பொஞ்சாதி இருக்காங்க. தேன்‌நிலவு போகலையா?” என்று நயமாய் கேட்டார் நிபுணன்.
 
   “என் டூயூட்டிக்கு இப்படி தான் இருக்கும் ஐயா. தேன்நிலவு பத்தி இப்ப யோசிக்கலை.” என்று கறாராக பேசினான் ஆர்யன்.‌

   ஆதிராவுக்கே மைந்தன் பேச்சு நெருடியது.

   ஆர்யன்‌ இந்த இரண்டு‌ வாரம் இப்படி தான்‌ திரிகின்றான்.

   காரணம் வேறு‌ யாராகயிருக்கும் சிற்பிகாவை தவிர.

   சிற்பிகாவோ வேலைக்கு கூட போகாமல் தலையணையில் கண்ணீரை நிறைத்தாள்.
 
    அன்று ஆர்யன் சிற்பிகாவை நிறுத்தி, “உனக்கென்ன பிரச்சனை? நீ எதுக்கு சீர்த்திருத்த பள்ளியில் இருந்த? எங்கம்மாவை ஏன் தள்ளிவிட்ட? உன் மனசுக்குள்ள என்ன கவலை.

‌ நான் உன் ஹஸ்பண்ட் அண்ட்  டாக்டர். என்னிடம் நீ ஒளிவுமறைவில்லாம பேசலாம். நீ பேசினா தானே எனக்கு நமக்குள்ள என்ன தடுக்குதுனு யோசிக்க முடியும்.” என்று கேட்க, சிற்பிகா கோபமாய் “ஏன்‌ என்னோட வாழ்க்கையில என்ன நடந்ததுனு ரிஸி மூலம் ஆதிமூலம் தெரிந்து தான் வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு போவீங்களோ?” என்று எரிந்து விழுந்தாள்.

  “நோநோ அம்மாவை தள்ளிவிட்டதுக்கு கூட ஏதாவது காரணம் இருக்கும்னு நம்பறேன்.‌ அதோட உன் அணுகுமுறைக்கு என்ன‌ காரணம் இருக்கும்னு தெரிந்துக்கறேன். உன்னை பத்தி யாரிடமும் கேட்டு‌ குழம்பறதுக்கு உன்னிடமே கேட்பது பெட்டர் இல்லையா?” என்று நியாயமாய் தான் கேட்டான். அவனுக்கிருந்த முதிர்ச்சி பதவிசமாய் கேட்க, எதிராளிக்கு‌ அந்த கணம் பக்குவநிலை காணாமல் போனது.

   சிற்பிகாவுக்கு கோபமும் எரிச்சலும் சூழ, “என்ன காரணம் இருந்து உங்களிடம் சொல்லணும். எனக்கு உங்களிடம் எதையும் ஷேர் பண்ண பிடிக்கலை. ஏதோ கல்யாணத்தை பண்ணிட்டோமேனு இங்க இருக்கேன்.
 
   இப்படி ஒரு சிட்டுவேஷன் கழுத்தை நெருக்கும்னு தெரிந்தா அன்னைக்கே  உங்களை மறுத்திருக்கணும். என்‌தப்பு… என்‌தப்பு… ஆதிரா அம்மா சீர்திருத்த பள்ளில சர்வீஸ் பண்ணறாங்க. நீங்க ஒரு டாக்டர் இரண்டும் தெரிந்து இங்க தலையை கொடுத்துக்கிட்டேன்.

   உதவி செய்து என்னை நன்றி கடன் பட்டவளா உங்களை கல்யாணம் பண்ணிக்கற மாதிரி ஆகிடுச்சு” என்று என்ன பேசுகின்றோமென்று அறியாது கண்மூடித்தனமாக சிற்பிகா பேசினாள்.

  “நிறுத்துடி… என்ன சொன்ன? ‘உதவி செய்து உன்னை நன்றி கடன் பட்டவளா இக்கட்டுள என்னை கல்யாணம் பண்ணிக்கற மாதிரி ஆகிடுச்சா? இப்படி யோசிக்கறவ, எதுக்கு எங்க ஐயாவை ஐயானு கூப்பிடற? எங்கம்மாவை ஆதிராம்மானு அழைக்கற?
 
    இனி உன் வாயால ஐயா அம்மா வரக்கூடாது. எங்கயா என் அம்மா. அதை மீறி கூப்பிட்ட? நரகத்துக்கு அனுப்பிடுவேன். உன் வாழ்க்கையில் என்ன நடந்திருந்தா எனக்கென்ன? இங்க யாரும் என்னோட வாழ்ந்து தான் ஆகணும்னு கட்டாயப்படுத்தலை.‌ பிடிக்கலையா உன் வீட்டுக்கு கிளம்பு‌. சும்மா எங்கம்மா ஐயா அன்பா நேசித்து பழகியதை நன்றி கடன் மூலமா உன்னை இக்கட்டுல தள்ளிட்டாங்கன்னு சொல்லாத” என்று கர்ஜித்தான். 
  
   அதன்‌பின்‌ இரண்டு வாரம் இறுக்கமாய் சிற்பிகாவை தவிர்த்தபடி வலம் வருகின்றான்.‌
  
    ஆதிராவோ இருவரையும் நிறுத்தி ஒரு நாள் பேசலாமா என்று நிபுணனிடம் கேட்க, “அவசரப்படாத ஆதிரா. எதுவும் ஒரு‌மாசமாவது தேவைப்படும். ஆர்யன் மெட்டி அணிவிச்சதை ஆல்பத்துல பார்த்தல, நம்ம புள்ள பொண்டாட்டி காலை பிடிக்கறான்னா அவருக்குள்ள ஈகோ எதுவும் இல்லை. பேசி பழக காலம் எடுக்கும்” என்று நிதானப்படுத்தினார்.

    சிற்பிகாவுக்கு ஆர்யனிடம் பகிர நுனி நாக்கு வரை வரும். ஆனால் அவளால் இயலாது.

   இரவில் வாடிய முகத்தோடு மெத்தையில் படுத்துக்கொள்வாள்.

   அன்று தனக்கு கோபத்தில் வார்த்தை வீசிவிட்டோமென கூட கூற நினைப்பாள்.

  ஆர்யனின் கோபத்தை கண்டப்பின் அவனிடம் சாதாரணமாய் பேசவும் அஞ்சி நின்றாளென்றதே உண்மை.

   அப்படிப்பட்ட ஆக்ரோஷமான முகத்தை அவன் காட்டிவிட்டான்.‌

   வீட்டில் நிபுணனை மாமா என்றும் ஆதிராவை அத்தை என்றும் அழைக்க, இருவரும் சிற்பிகாவை வித்தியாசமாக பார்த்தார்கள்.

ஐந்தாறு வருடம் அம்மா-அப்பா என்று கூப்பிட்டவள் இப்படி அத்தை-மாமா என்றதும் ஆதிரா கைப்பிடித்து நிறுத்தி காரணம் கேட்க, “அவரும் அம்மா ஐயா சொல்லறார். நானும் சொன்னா நல்லாயிருக்காது” என்பாள்.

  அவள் பதிலில் ஆதிராவுக்கு அதிருப்தி தான்.

    ஆனால் வீட்டில் தான் அவ்வாறு அழைப்பாளே தவிர, பருத்தி மில்லில் ஐயா என்று தான் அழைப்பாள்.

   நிபுணனுக்கு மகன் என்னவோ சொல்லிவிட்டானென்ற வரை யூகித்து கொண்டார்.

இப்படி சென்ற நாட்களில்….

  ‌ஆர்யன் மருத்துவமனையில் வீற்றிருக்க, அந்த அரசு மருத்துவமனையில் அவனிடம் தன் உடல்நிலையை காண வந்தவர்கள் வரிசையில் இருந்தார்கள்.
 
   அந்த வரிசையில் தான் அந்த பெண்ணும்‌ வயிற்றை தள்ளியபடி உட்கார்ந்திருந்தாள்.
  
   இன்று மகப்பேற்றில் பெண் மருத்துவர் விடுமுறை எடுத்திருக்க, அந்த டூயூட்டியும் ஆர்யன் மேற்பார்வை பார்க்கும் விதமாக மாறியது.

   வயிற்றை தள்ளிக் கொண்டிருக்கும் பெண்கள் அறைக்குள் வந்ததும் ஆண் மருத்துவனா? என்று திகைக்க, செவிலி தான் “இவரும் பார்ப்பார் மா. உட்காரு” என்று அதட்டி பார்க்க வைத்தார்.

  பெரும்பாலும் அரசு மருத்துவமனையில் கூட்டம் அதிகம். இன்று தாமதித்தால் மீண்டும் வர அலைச்சல் என்பதால் ஸ்கேன் மிஷனில் கூச்சத்தோடு அடிவயிற்றை காட்டி சங்கடமாய் கடந்து சென்ற பெண்களே அதிகமாய் இருந்தனர்.

‌‌ அப்படி செல்லும் பெண்கள் ‘நிபுணன் ஐயா பையனா அது’ என்று அதிசயித்து சென்றனர்.

  காத்திருந்த வரிசையில் இருந்த பெண்ணும் உள்ளே வந்தாள்.

‌பெயரை கவனித்து, எத்தனாவது மாசம்?” என்று கேட்க, விழித்தபடி, ‘எட்டாவது மாசம்’ என்று பதில் தந்தாள்.

  “யாரும் கூட வரலையா?” என்று கரிசணையாக கேட்டான். சிலருக்கு குறைப்பிரசவம் கூட ஆகின்றது. இந்த நேரத்தில் தனியாக நிற்க முடியுமா? என்று மருத்துவனாய் மனிதனாய் அக்கறை.

  “வீட்டுக்காரர் வெளியே தண்ணி பாட்டில் வாங்க போனார்ங்க” என்று கூறினாள்.

‌ கணவர் பெயர்‌ என்ன என்று கேட்டு படுக்க கூற, நரேந்திரன் என்றாள் அப்பெண்.

   “ஓ.” என்றவனுக்குள் இந்த பெயர் சிற்பிகா அப்பாவோடதுல என்ற எண்ணம் வந்தது‌.

   அவசரமாய் என்னவோ மூளைக்குள் உதிக்க அந்த பெண்ணின் பெயரை கவனித்தான். ‘சாந்தி’ என்று அட்டையில் பளிச்சிட்டது.

  ஒரு கணம் திகைத்தவனாக தடுமாற, நரேந்திரன் தண்ணி பாட்டிலை எடுத்து வந்து மூச்சுவாங்க, அறைக்குள் நுழைந்து “சாந்தி கிளம்பு இங்க பார்க்க வேண்டாம்” என்று எழுப்ப கூறினார்.‌

   அப்பொழுது தான் நர்ஸ் வயிற்றில் ஜெல்லை தடவ, நரேந்திரனோ, “எழுந்திரி டி. எழுந்திரினு சொல்லறேன்ல” என்று கையை பிடித்து இழுத்தார்‌.

  “யோவ் பிள்ளைதாச்சியை இப்படி இழுக்கற? ஸ்கேன் பண்ண வேண்டாம்” என்று நர்ஸ் எகிற பேசினார்.

‌‌”நாங்க லேடி டாக்டரிடம் பார்த்துக்கறோம்” என்று நரேந்திரன் கூற, “ராசியான டாக்டர் யா” என்றதற்கு, “வாயை மூடறியா? கழுதை வா” என்று சேலை லேசான தளர்வில் சாந்தியை இழுத்து சென்றார் நரேந்திரன்.

   ஆர்யனோ அரண்டது சில நொடியென்றாலும், இவ்விடத்தில் எதையும் பேச அவனுக்கு விருப்பமில்லை.‌

   தன்‌மாமனாருக்கு இப்படி ஒரு‌மனைவி அவர்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறக்க போவதை எண்ணி தலையை உலுக்கி கொண்டான்.

     தாலிகட்டிய அந்த சிற்பம் நிச்சயம் வாயை திறக்காது.‌ நானா கேட்டா மட்டும் கண்ணீரோட கதறும்.‌ ஆர்யா உனக்கு ஏன்டா இந்த மாதிரி சிட்டுவேஷன் வருது. நல்லவேளை மாமியாருக்கு பிரசவம் பார்க்கலை’ என்று நெஞ்சில் கைவைத்து பெருமூச்சை ஊதி தள்ளினான். கண்ணை கட்டி அடுத்த பேஷண்ட்டை வரவழைத்தான்.

  மாலை வீட்டிற்கு விரைவாக வந்ததும் ‘துளிரோ, அய் அண்ணா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டார்.‌” என்று ஓடி சென்று அணைக்க போக, “துளிர் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்ததும் தொடக்கூடாதுனு சொல்லிருக்கேன்” என்றவன் சிற்பிகாவை பார்த்து மாடிக்கு ஏறினான்.‌

   இந்த இரண்டு வாரம் தன்னை நாசூக்காக தவிர்ப்பவன், இன்று ஏறிடவும் ராணி ஆச்சி கொடுத்த மஞ்சள் பாலை எடுத்து சென்றாள்.

    ஆர்யனுக்கு ஒவ்வொரு நாளும் தினுசான டீ வந்துவிடும். லெமன் டீ செம்பருத்தி டீ, ஏலக்காய் டீ, மஞ்சள் பால், என்று மாறி வரும்.

   அவன் குளியலறை சத்தம் கேட்க அங்கே மேஜையில் வைத்து சென்றாள்.

   ஆர்யன் வெளிவந்த போது ஆடை படிந்த பால் அவனை வரவேற்றது.

   அதை எடுத்து குடித்தபடி படியிறங்கினான்.

    துளிர் சிற்பிகா கூடவே இருக்க, “பாப்பா அரட்டை அடிச்சது போதும். எக்ஸாம் வருதுல, நீ உள்ள போய் படி.”  என்று மனைவியோடு பேசியவளை அனுப்ப, சிற்பிகாவுக்கு கண் கலங்கியது‌.

  துளிரை ஆர்யன் பாப்பா என்று அழைத்து பேசினால் அவ்விடத்தில் அந்த பேச்சில் அவள் குழந்தை என்று சபைக்கு தெரிந்திடும். அதனால் ஆர்யன் அண்ணா பாப்பா என்றாலே வாயாடாமல் அகன்றிடுவாள்.

   வேண்டுமென்றே துளிரை என்னிடமிருந்து தள்ள பார்க்ககறார் என்று ஆர்யன் மீது சினம் துளிர்த்தது சிற்பிகாவுக்கு.

   நிபுணன் ஆதிரா அங்கு தான் இருந்தார்கள். “சீக்கிரம் வந்துட்டிங்கம்மா?” என்று கேட்க, “சில திங்க்ஸ் வாங்க டவுனுக்கு போனேன். வாங்கியதும் நேரா வீட்டுக்கு வந்தாச்சு” என்று சீர்த்திருத்த பள்ளியில் நடக்கும் ஆண்டு விழாவிற்கு பரிசு பொருட்கள் வாங்க சென்றதை கத்தரித்து கூறினார்.

தாய் தந்தை தன் மனையாள் இருக்க,  “இன்னிக்கு ஒரு கர்ப்பிணி பொண்ணை பார்த்தேன் அம்மா. ஸ்கேன் எடுக்கற நேரம், அந்த பொண்ணோட புருஷன் வந்து அந்த பொண்ணை இழுத்துட்டு போயிட்டார்.” என்றான்.

‌‌ அவன் வாய் வார்த்தை அது பாட்டிற்கு வந்தது. ஆனால் பார்வை சிற்பிகாவிடம் நிலைத்திருந்தது. எப்பொழுதும் மருத்துவப்பணியை பற்றி வீட்டிற்கு வந்து பகிராதவன், இன்று துளிரை அனுப்பிவிட்டு பேசவும் நிபுணன் ஆதிரா மாறி மாறி பார்த்து மைந்தனின் கூற்றை கவனித்தார்கள்.

   சிற்பிகாவோ தன்னையே காணும் அவனது பார்வைக்கு பயந்து நகரப்போக, “அந்த லேடி பேரு சாந்தி‌. அந்த புருஷன் பேரு நரேந்திரன்.” என்றதும் சிற்பிகா கால் வேரூன்றியது.

   ஆர்யனை திரும்பி பார்க்க படாதபாடுப்பட்டாள்.‌ நிபுணனே சிற்பிகாவிற்காக, வாய் திறந்தார்.‌

‌‌”ஆமாங்க ஐயா. உங்க கல்யாணத்தப்ப அவங்க சித்தி சபைக்கு வராததுக்கு காரணம் அதுதான். வயிற்றுல பிள்ளையை வச்சிட்டு சிற்பிகா கல்யாணத்துல கலந்துக்க சங்கடம் தானே?!” என்றார்.
எங்களுக்கு இந்த விஷயம் தெரியும் என்று பேசினார்.

    “கரெக்ட்டுங்க ஐயா‌. சபைக்கு வர சங்கடம் தான்‌.

   சபைக்கு வராததுக்கு சித்தி என்ற காரணம் மட்டும்னு நினைச்சேன். ஆனா வேற… சரி காரணம் எதுவாக இருக்கட்டு ஆனா அப்படியொரு அத்தை இருக்கறது இன்னிக்கு தான் எனக்கு தெரியும்‌. ஒவ்வொன்னும் யாராவது வந்து கேட்டு பார்த்து தெரிந்துக்கறேன்.

  இப்ப இதை இங்க சொல்லறது உங்களுக்கு விஷயத்துல காதுல போடத்தான்.” என்று எழுந்துவிட்டான்.‌

     சிற்பிகாவுக்கு ஆர்யனிடம் தான் தானாக எதையும் பகிராதது வருத்தமளிப்பதை புரிந்தது. கையை பிசைந்து நின்றவளை “நீயும் போம்மா‌. உங்கப்பாவிடம் ஆர்யன் ஏதாவது சண்டை இழுத்து வச்சாரானு தெரிந்துக்கோ” என்றதும் மெதுவாக தலையாட்டி மாடிக்கு நடந்தாள்.

    பலதூரம் கடந்து மாடியேறுவது போல அத்தனை பாரம். இத்தனைக்கும் பத்து பத்து படிக்கட்டுகள் மட்டுமே.

   மேலே வரவும் அங்கிருந்த சாய்விருக்கையில் இமை மூடிய இருந்தவன் முன் குற்றவாளியாக நின்றாள்‌.‌

   “நான் முன்னவே சொல்லிருக்கணும்.‌ கல்யாணத்துக்கு அவங்க வராததுக்கு அதான் காரணம்” என்றாள்.

   “நான் இப்ப கல்யாணத்துக்கு ஏன் வரலைனு கேட்கலையே?” என்றான்.

‌ அவள் திடுக்கிட, “உன்கிட்ட கேட்டு‌ நீ என்ன சொல்ல போற? கல்யாணம் பண்ணியதே தேவையற்றதுனு பேசுவ.

   உன்னை மாதிரி கமுக்கமா இருக்க எனக்கு வராது.‌ எங்க‌ அம்மா எப்பவும் சொல்லறது. நம்ம சரிபாதியிடம் தான் எல்லாமே பகிர்வது. அதை தான் நான் செய்தேன்.” என்றான். அவன் வார்த்தையில் இன்னமும் கோபம் எஞ்சியிருக்க கண்டான்.‌

   சிற்பிகாவே “நான் பிறந்தப்பவே அம்மா இறந்துட்டாங்க. அப்பா என்னை வளர்க்க கல்யாணம் பண்ணலை. சில சூழ்நிலையால என் பதினாறு வயசுல சீர்த்திருத்த பள்ளியில் வந்துட்டேன்.‌ அந்த கோபத்துல அப்பா சித்தியை கட்டிக்கிட்டாங்க‌‌.
அவங்களுக்கு முப்பத்தெட்டு வயசு. ஐந்தாறு வருஷமா குழந்தையில்லை. நான் நம்ம கல்யாணத்தை பேச போறப்ப தான் அவங்க முழுகாம இருந்ததை பார்த்தேன். சபையில வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஐயா அம்மா பரவாயில்லைனு விட்டுட்டாங்க‌.” என்று கூறினாள்.

  “நான் உன் சித்தி என்றதால வரலைனு நினைச்சேன். பை திவே இந்த சீர்த்திருத்த பள்ளியில் ஏன் வந்த என்னாச்சுனு நான் கேட்க மாட்டேன். இன்னிக்கு மாதிரி என்னைக்காவது யாராவது வந்து‌ நிற்பாங்க. அப்ப நீயா சொல்வியானு பார்க்கறேன்.

   வாழ்க்கை இப்படியே போகுமா என்ன? யார் மூலமாக எதையாவது தெரிய வரும்” என்றவன் சிற்பிகா நாசூக்காய் தவிர்த்து பேசியதை வைத்து அவனும் பேசி அகன்றான்.

    சிற்பிகாவுக்கு ஆர்யன் ஆதங்கம் அந்த நொடி புரிந்தது. ஆனால் எப்படி கூறுவதென்ற திகில் நெஞ்சை அடைத்தது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
   

27 thoughts on “என் நேச அதிபதியே -25”

  1. ஆர்யன் அவகிட்ட கேட்டது தப்பே இல்ல. சிற்பிய பத்தி வேற யார்கிட்டயாவது கேட்டிருந்தா தான் தப்பு. அதுகூட அவளுக்கு புரியவில்லை.

  2. சூப்பருங்க

    ஆர்யன் சரியாக தான் கேள்வியை கேட்கிறான். சிற்பிகா தான் முரண்டு பிடிக்கிறாள்.

    எப்போது ஆர்யனை புரிந்து கொள்கிறாளென்று பார்க்கலாம்.

    சூப்பராக போகிறது

  3. Nalla velai da Aryan un mamaiyar ku prasavam pakala un nelamaiya nenaichu paaru😂….yenma sirpika un life la apdi enna tan nadandhuthu Aryan kitta solradhuku enna….thevai ilama edhuku kovapattu vaarthaiya vitta….

    Super super ka….

  4. Un manasula irukuratha aaryan kitta sollu sirpika avaan un better half avan kitta sonna unaku oru thelivu kedaikum una manasula iruka baram koraium

  5. Aariyan oda varutham kobam rendu mae niyama ah than iruku avan wife ah pathi math avanga solli theriyaathu ah vida nama la therinchikirathu nallathu nenachi than avan pesunan aana sirpika atha purindhu kama avankita kobam ah pesunathum mattum nibu ah yum.athira ah vum blame panra mathiri pesita ah athu ku avan kobapada than seiyuvan

  6. ரொம்ப ரொம்ப அழகா கொண்டுபோறிங்க கதையை சிற்பியை பற்றி சிற்பியிடம் கேட்டதுதான் சரி இதை ஏன் சிற்பி புரிந்துகொள்ளாமல்
    ஆர்யளை காயபடுத்தினாளோ இவர்கள் ஒருவரையோ ருவர் என்று புரிந்துகொள்வார்களோ வாழ்த்துகள் சகி

  7. ஆர்யன் பாயிண்டா தான் கேள்வி கேட்குறான். ஆனா, இந்த சிற்பிகா ஏன் இப்படி இருக்கிறா பட்டும் படாம, தொட்டும் தொடாம ஏனோ தானோன்னு….. ஏன் இப்படி இருக்கணும். இதுக்கு கல்யாணம் பண்ணாமலேயே இருந்திருக்கலாமே.

  8. ஆர்யன் கேட்டதில் தவறே இல்லை…. இந்த சிற்பிகா சற்று நிதானமாக கையாண்டு இருக்கலாம்…. அவளின் பேச்சு தான் ஆர்யன் கோபத்திற்கு காரணம் ‌…..

  9. A alum sirpika overadha panda…. Aara inum kovamarundha enna panirpa….. Avankita solradhudha better option…. Aara mela thappe ila…. Wife lathi therinjuka nenakiran…
    Akka good going

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!