Skip to content
Home » 04.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

04.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

“கலை நில்லு கூப்பிட கூப்பிட இப்போ எதுக்கு இப்படி ஓடுற நில்லுடி…”

“நீ போ நான் உன்கூட பேசுறதா இல்லை நான் அவ்ளோ சொல்லியும் என் பேரை குடுத்து இருக்க நான் தான் என்னாலே முடியாதுனு சொன்னேன்ல அதுக்கு அப்பறமும் ஏன் இப்படி பண்ணிட்டு இருக்க ஸ்ரீ…”

“எல்லாம் காரணமா தான் படிப்பை தாண்டி நமக்குள்ள ஒளிஞ்சு இருக்கிற டேலன்டை கொண்டு வர தான் இது மாதிரி விழா எல்லாம் ஏற்பாடு பண்ணுறாங்க அதை தகுந்த மாதிரி நாமளும் அமைச்சுக்கிறதுல என்ன தப்பு உன்னாலே நல்லா டான்ஸ் ஆட முடியும் சும்மா சும்மா கலரு, அசிங்கம்னு திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருந்தே வாயை உடைச்சிருவேன் ஒழுங்கா இந்த ட்ரெஸ்யை போட்டு வர அவ்ளோ தான் டாட்…” என்றவளிடம் பேசி ஜெயிக்க முடியாத இயலாமையுடன் சோர்வாக பார்த்தவள் அவள் கொடுத்த உடையை வாங்கிக்கொண்டு சென்றாள் பாவம் ஸ்ரீயிற்கு முன்கூட்டியே இந்த விழா கலைச்செல்வியின் வாழ்க்கையை அப்படியே புரட்டி போட போகிறது என்பது தெரிந்து இருந்தால் வற்புறுத்தி இருக்க மாட்டாளோ என்னவோ?…

தயங்கி தயங்கி உடைமாற்றி வெளியே வந்தாள் கலைச்செல்வி ஏனோ அவளுக்கு விவரம் அறிந்த நாளில் இருந்து கருப்புநிற உடையை தவிர வேறு எந்த நிறத்தையும் தன் மேனியை அலங்கரிக்க விட்டதில்லை ஏனோ இன்று ஒருவித கூச்சத்துடன் நெளிந்து கொண்டே இருந்தாள்.

“எல்லாம் உனக்கு அளவு எடுத்து தான் தைத்து இருக்கு அந்த கையை எடு பாவாடை கலண்டு விழப்போற மாதிரி இப்படி பிடிச்சிட்டு நிக்கிற சாதாரணமா தான் இரேன்…” என்றபடி கூந்தலை சரி செய்து விட்டு அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றாள்.

இந்த விழாவில் தங்கள் திறமையை காட்டுவதற்காக பல மாணவர்கள் பங்கு பற்றி இருந்தனர் அதனால் ப்ராக்டிஸுகாக அவர்களுக்கென்று ஒரு இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டு இருந்தது அதில் தான் இவர்களுடைய டீமும் இருந்தது.

“எவ்வளவு நேரம் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிறது நேரமா வரணும்னு தெரியாதா…”

“சீனியர் அது வந்து சாரி…” என மன்னிப்பு கேட்ட ஸ்ரீ “அப்பறம் என் க்ளாஸ்ல என்கூட ஒரு பொண்ணு வரான்னு சொன்னேன்ல அது இந்த பொண்ணு தான் பேரு கலைச்செல்வி…” என அறிமுகப்படுத்தி வைத்தாள் கூடவே இருந்த ஒரு பெண் கலைச்செல்வியை பார்த்து வாயைப்பொற்றி சிரித்தாள்.

“இவளா நம்ம டீம்ல ஆட வரா இவளோட சைஸுக்கு இவ உடம்பை அசைச்சு ஆடிருவாளா? அப்படியே ஆடினாலும் ஸ்டேஜ் தான் தாங்குமா?..” என நக்கலாக கேட்டாள்.

“ச்சூ ப்ரீதி கொஞ்சம் உன் வாயை மூடிட்டு நிக்கிறியா என்று விட்டு கலை மற்றும் ஸ்ரீயின் பக்கம் திரும்பினாள் சாங்ஸ் எல்லாம் கேட்டிட்டு ஒழுங்கா ப்ராக்டிஸ் பண்ணுங்க…” என்றவள் அவளோடு இருந்த ஒரு பெண்ணுக்கு கண்ணை காட்ட அவர்கள் இருவரையும் அழைத்து சென்று அனைத்தையும் சொல்லி காட்டினாள் அந்த பெண்.

சொல்லி கொடுக்க கொடுக்க அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்தவளும் சிறிது நேரத்திலே தன்னை மறந்து அதில் ஒன்றி விட்டாள் அவளையே கவனித்துக் கொண்டு இருந்த தலைவி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பொசிசனில் நிற்க வைத்து விட்டு கலைச்செல்வியை தனி ஒருத்தியாக பின்னால் நிற்க வைத்தவள்.

“எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க பாட்டு இதுதான்னு‌ தனி பாட்டு இல்லை எல்லாம் மிக்ஸ் ஆகி தான் வரும் கடைசி ஸ்டெப் நீதான் பண்ணனும் கலைச்செல்வி உன்கிட்ட இயல்பாவே ஒரு வேகம் இருக்கு கடைசியா விடாம எட்டு நிமிஷத்துக்கு ஆடி டான்ஸை முடிச்சு வைக்கனும் அதனாலே தான் உன்னை லாஸ்டா நிக்க வைக்கிறேன் உன்னோட பர்பாமென்ஸ் பார்த்து ஆடியன்ஸ்கிட்டயும் அந்த வேகமும் எனர்ஜியும் தூள் பறக்கனும் ஓகே சொதப்பகூடாது புரிஞ்சதா?..” என்றவளிடம் உற்சாகமாக தலையசைத்தாள் பின்பு சிறிதுநேரம் அதை பற்றிய டிஸ்கஷன் போய் கொண்டு இருந்தது அனைத்தையும் பேசி ஒரு முடிவுக்கு வந்து விட்டு நாளை சந்திக்கலாம் என்று களைந்து சென்றனர்.

“என்ன கலை அமைதியாவே வர‌ என்னாச்சு…”

“இல்லை ஒரு வேகத்துல சரின்னு சொல்லிட்டேன் இங்கே நாலுபேர் முன்னாடி எப்படியோ ஆடி முடிச்சிட்டு போயிடலாம் ஆனா ஸ்டேஜ் காலேஜ் ஸ்டூடன்ட் முன்னாடி பண்ணுறதை நினைக்கிறப்போ பயமா இருக்கு ஸ்ரீ…”

“அடடா இதை தான் யோசிச்சிட்டு இருந்தியா விடு பயப்புடாம தைரியமா ஆடு அப்பறம் தெரியும் கலைச்செல்வின்னா யாருன்னு உன்னை ஒதுக்கி வெச்சு கேவலமா பேசி கிண்டல் பண்ண கூட்டம் எல்லாம் அதிர்ச்சியிலே வாயை பிளந்துக்கிட்டு நிக்கனும் அடி தூள் பறக்க விடனும் பிகிலு…”

“ம்ம் இப்படியே பேசிட்டு நின்னா உன் பஸ்ஸு போயிடும் பிகிலு பரவாயில்லையா? சீக்கிரம் நட…” என ஸ்ரீயை இழுத்துக்கொண்டு உடன் நடந்தாள் கலை அவளை தன் கார் அருகில் நின்று புன்னகை மாறாத முகத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தான் யாதவ்.

கலைச்செல்வி வீட்டில் தன் பெற்றோர்களிடம் இனி சற்று நேரம் சென்று தான் வீடு வருவேன் என்றும் கலைநிகழ்ச்சிகள் பற்றியும் கூறி இருந்தாள் அதை கேட்டு முதலில் ஆச்சிரியம் அடைந்தவர்கள் அதே நேரம் மிகவும் சந்தோஷப்பட்டார்கள் தனக்கு என ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள் தான் உண்டு தன் தனிமை உண்டு என இருந்தவளிடம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது மகள் இப்படியே சந்தோஷமாக இருந்திட வேண்டும் என அவசரமாக வேண்டுதல் ஒன்றையும் வைத்தார் கல்யாணி.

ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது காலேஜ் சென்று படிப்பு, ஸ்ரீயுடனான நட்பு அதன் பின்னர் இருவரும் சேர்ந்து நடனப்பயிற்சியில் ஈடுபடுவது என நாட்கள் சென்றாலும் ஒருபக்கம் அவளின் தோற்றம் மற்றும் நிறம் வைத்து கேலி, கிண்டல் என பல விமர்சனங்கள் பின்தொடர்ந்தாலும்‌ முன் போல் அதையே நினைத்து ஓரிடத்தில் முடங்கி கிடப்பதில்லை பெருமூச்சுடன் அமைதியாக கடந்து விட்டு அடுத்த வேலைகளைப் பார்க்கிறாள்.

இன்னும் இரண்டு நாட்களே இருக்க கடுமையான ப்ராக்டிஸில் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்தனர் கடைசியாக கலைச்செல்வி எப்படி ஆட வேண்டும் என்று அந்த குழுவின் தலைவி கூறினாளோ அதே போல் ஆடி முடிய விசில் சத்தம் காதை பிளந்தது யார் விசில்‌ அடிப்பது என திரும்பி பார்க்க அங்கு யாதவ்‌ நின்று கொண்டு இருந்தான் அவனை கண்டதும் சீனியர் பெண்கள் ஏன்‌ அங்கு இவர்களுடைய குழுவை போல் சில நிகழ்ச்சிகளை அரங்கேற்ற ப்ராக்டிஸ் செய்து கொண்டு இருந்தவர்கள் எல்லாம் அவனையும் கலையும் மாறி மாறி அதிர்ச்சியாக பார்த்தனர்.

“ரொம்ப நல்லா ஆடுற செல்வி…” என வந்தவனை கண்டு லேசாக வெட்கமும் அதே நேரம் அனைவரது பார்வையும் தன்னில் பதிவதை கண்டு பீதியாகி போனாள் “இன்னைக்கு ஓவர் நாளைக்கு பார்க்கலாம்…” என்ற தலைவியிடம் சரியென தலையசைத்து வெளியே வந்தனர் இருவரும் அவளை பின்தொடர்ந்து வந்தவன் “கலை ஒரு கப் காபி சாப்பிடலாமா?..” என கேட்க ஷாக் அடித்தது போல் அங்கயே நின்று விட்டாள்.

“இல்ல… அது.. லேட்டாகிடுச்சு கிளம்பனும்..”

“ம்ம் அப்படியா சரி நாளைக்கு பேசலாம் ஆனா சூப்பரா டான்ஸ் பண்ணுற…” என பாராட்டினான் “நன்றி ஓகே வரேன் சீனியர்…” என திரும்பி நடந்தவள் என்ன நினைத்தாளோ “உங்க பேர்‌ என்ன? சாரி காப்பாத்தின உங்க பேரை கூட தெரிஞ்சு வைக்கலே நான்…”

“இட்ஸ் ஓகே இதுலே‌ என்ன இருக்கு இப்போ தெரிஞ்சுக்கோ என் பேரு யாதவ்…” என்று கூறி புன்னகைக்க அவனின் வசீகர புன்னகைக்கு பதில் புன்னகை புரிந்தவள் அமைதியாக ஸ்ரீயுடன் நடந்தாள்.

“கால் கை எல்லாம் ரொம்ப வலிக்குது ஸ்ரீ அம்மாகிட்ட போய் முதல் வேலையா தைலம் பூசி விட சொல்லனும்…”

“ஆமா கலை உடம்பு எல்லாம் வலிக்குது…” என பேசியபடி ஆட்டோ பிடித்து வீட்டுக்கு சென்றனர் அவள் வீடு போய் சேருவதற்குள் காலேஜ் க்ரூப்யில் விஷயம்‌ கசிந்து மொத்த காலேஜிற்கும் யாதவ் மற்றும் கலைச்செல்வி விடயம் பரவியது வந்ததும் களைப்பில் உறங்கி போனவளுக்கு இரவு ஸ்ரீ அழைத்ததோ போனில் வந்த மெஸேஜ்களோ எதுவும் தெரியவில்லை.

காலையில் வழக்கமாக காலேஜ் வருவது போல் வந்தவளுக்கு அனைவரது பார்வையும் தன்னில் பதிவது போல உள்ளுணர்வு கூற நிமிர்ந்து பார்த்தாள் அனைவரும் இவளை தான் பார்த்தனர் இவர்கள் எதற்காக தன்னை பார்க்கிறார்கள் என்ற யோசனையுடன் தன்னை குனிந்து ஒரு தரம் பார்த்துக்கொண்டாள் உடைகளில் தான் ஏதாவது குறைகள் இருக்கிறதோ என்று அவசரமாக வகுப்பறைக்குள் வர அங்கு ஸ்ரீ தலையை பிடித்தப்படி அமர்ந்து இருந்தாள்.

“ஹேய் ஸ்ரீ என்னாச்சு உடம்பேதும் சரியில்லையா? தலையை பிடிச்சுக்கிட்டு இருக்கிற…” என்றபடி அருகில் வந்து அமர்ந்தவளிடம் “உன் ஃபோன் எங்க கலை…”

“இதோ பேங்க்ல தான் இருக்குடி நேத்து போய் சைலண்ட்ல போட்டது இன்னும் எடுத்து பார்க்கலே…” என்றவள் போனை எடுத்து ஆன் பண்ணவும் ஒரு கூட்டம் அந்த வகுப்பறையிற்குள் வரவும் சரியாக இருந்தது அது அத்தனை பேரும் பெண்கள் கூட்டம் அனைவரும் சேர்ந்து வந்து நின்றது என்னவோ இவள் முன்பு தான்.

“உனக்கு யாதவ் யாரு?..” என்ற கேள்வியில் இவள் புரியாமல் பார்க்க “ஏய் காக்கா உன்னை தான் கேக்குறோம் காது கேக்கல சொல்லு யாதவ் உனக்கு யாரு உன் சொந்தமா?..”

“இல்..ல அவரு ஆபத்தான நேரத்துல எனக்கு உதவி‌ பண்ணாரு அப்போ தான் தெரியும் சீனியர்…” என அவள் சொல்லி முடிப்பதற்குள் திக்கி திணறி ஒரு வழியாகி விட்டாள்.

“எங்ககிட்ட பொய் சொல்ல நினைக்கிறியா? தோலை உரிச்சிடுவேன் உண்மையை சொல்லு இந்த அப்பாவி மாதிரி நடிக்கிற வேலை எங்ககிட்ட வேணாம் யாதவ் இதுநாள் வரை எந்த பொண்ணுக்கிட்டயும் பேசினது கூட இல்லை ஏன் அவனை சுத்தி வர எங்களை கால் தூசுக்கு கூட கண்டுக்க மாட்டான் அப்படி இருக்கிறப்போ‌ அதெப்படி உன்கிட்ட மட்டும் சிரிச்சு பேசுறான் அப்போ உங்களுக்குள்ள ஏதோ இருக்கு மரியாதையா சொல்லு உன்னை இன்னைக்கு நாங்க விடுறதா இல்லை…” என கலைச்செல்வியை சுற்றி நின்று முறைத்துக்கொண்டு இருக்க அவர்களின் நடுவே பயந்து நடுங்கிக் கொண்டு இருந்தாள் கலைச்செல்வி.

12 thoughts on “04.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்”

  1. CRVS 2797

    அட… அப்படியே யாதவ் கலையை சுத்தி வந்தா இவளுங்களுக்கு என்ன வந்ததாம்..?

  2. Apsareez Beena loganathan

    அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ பெண்ணிலவுக்கு உன் வண்ணங்கள் தந்து
    பொன்நிலவாய் மாற்றிடச் செய்வாயோ….

    கருமையான உன் துறு துறு கண்களும்
    கோவைப்பழ நிற செவ்விதழும்
    பாசமாய் அரவணைக்கும் உன் பசுமை கைகளும்
    வெண்ணிற அன்பும் கொண்ட பெண்ணே…
    அழகிற்கு ஏதடி வர்ணங்கள்…..

    1. Fajeeha Mumthaj

      அழகா இருக்கு இந்த வரிகள் ரொம்ப ரொம்ப நன்றி மா தொடர்ந்து என் கதைக்கு ஆதரவு கொடுங்க மா 🤩🥰♥️♥️

  3. அட இவளோட பேசுனா இவங்களுக்கு எல்லாம் என்ன???… இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு அந்த புள்ளையை மிரட்டனுமா இவங்க!!… என்ன செய்ய போறாளோ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *