புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -27

அத்தியாயம்-27

    ஆர்யன் விடிந்தும் கீழே வராதது ஆச்சரியமாக இருந்தது. அதற்காக அவனை எழுப்பிவிடாமல் அவர்களாக வரட்டுமென்று‌ காத்திருந்தாள்.

   ஆம்… சிற்பிகாவும் கீழே வரவில்லை.‌ நிபுணனிடம் “என்னாச்சுங்க? எப்பவும் நேரத்துக்கு எழுந்துடுவான். டீ ஏதாவதுனா கீழே வந்து குடிச்சிட்டு துளிரோட இரண்டு வார்த்தை பேசிட்டு போவான். பிறகு டூயூட்டிக்கு கிளம்பி வந்து சாப்பிட்டு அப்படியே ஹாஸ்பிடல் போவான். இப்ப வரை டீ குடிக்க வரலை” என்று கவலைப்பட்டாள்.

“ஏனுங்க அம்மினி நீயும் நானும் லேட்டா வந்தா என்ற ஐயா இப்படியெல்லாம் கேட்டாரா? நீங்க ஏனுங்க அம்மினி டீப்பா திங்க் பண்ணறிங்க?” என்று மேலே பார்த்து பார்த்து பேசிய மனைவியிடம், மாட்டிற்கு தண்ணீர் காட்டி தடவியபடி நிபுணன் அதன் கொம்பில் கிடந்த வைக்கோலை எடுத்தார்.

   “பச் ஏதாவது பிரச்சனைனா?” என்று ஆதிரா‌ தவிக்க, “ம்கும் அதெல்லாம் சம்ளிக்குற திடம் அவருக்கு(ஆர்யனுக்கு) இருக்கு.
  நீங்க இப்படி கண்காணிச்சிட்டே இருக்காதிங்க. யார் கண்டா நம்ம பிள்ஷ்பேக்ல இப்படி சண்டைப்போட்டு பருத்தி மில்லுல உருண்டு‌ மூனு மணி நேரமா குளிச்சது போல சீன் மாறியிருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.

  ஐயாவுக்கு நம்மளை விட பொறுப்பு அதிகம். என்‌ மாமனார் வீட்ல இருந்து படிச்சார்‌ இல்லையா” என்று‌ கூற ஆதிராவோ ‘ஸப்பா இந்த மனுஷன் இருக்காறே. காலத்துக்கும் கிண்டல் பண்ணிட்டு.’ என்று முனங்கி அவ்விடம் விட்டு களைந்தாள்.
  லேசான‌ முறுவல் உதட்டில் பூக்க, உள்ளே வந்தவரிடம், “அண்ணா இன்னிக்கு டூயூட்டிக்கு போகலையாம்மா” என்று டீயை உறிந்தவளிடம், “கிளம்புவார்… நீ காலேஜிக்கு கிளம்புற வழியை பாரு” என்றதும் தலையாட்டினாள்.

    சர்வேஷோ அண்ணனுக்கு கால் பண்ணிப் பார்ப்போமா?’ என்று எண்ணினான்.
   ஆனால் அடுத்த நிமிடமே வேண்டாமென்று நகர்ந்துவிட்டான்.‌

ஆர்யனாக எழுந்தப்போது சிற்பிகா குழந்தை போல சுருண்டு படுத்திருந்தாள்.

நேரத்தை பார்த்து அவனாக குளியலறைக்கு சென்றுவிட்டான். 

நேராக மருத்துவமனை செல்லும் முடிவோடு, உடையை அணிந்து தலைவாறினான்.‌

‌ அவனது உடலில் வாசனை திரவியத்தை அடிக்க, அதன் மணத்தால் எழுந்தாள்.

“குட் மார்னிங்” என்றான்.‌ அந்த குரலில் லேசான வலியை பூசி மறைத்து கூறினான்.

"டைம் ஆகிடுச்சா? அச்சோ... சாரி... நீங்க எழுந்ததே தெரியலை." என்று பதறினாள்.

”நானுமே இப்ப தான் எழுந்தேன்.” என்றதும் “ரொம்ப பேசி போரடிச்சிட்டேனா?” என்றாள்.

"நோ நோ அப்படியெல்லாம் இல்லை. ஆக்சுவலி நீ ரிலாக்ஸா தூங்கியது எனக்கு சந்தோஷம்" என்றவன், ஸ்டெதஸ்கோப்போ எடுக்க போக அவசரமாய் எடுத்து நீட்டினாள். 

சிறு புன்னகையுடன் பெற்றுக்கொண்டவன் கீழே செல்வதாக போகவும், மடமவென ப்ரஷ் செய்து முகம் அலம்பி லேசாக சிக்கு எடுத்து க்ளிப் மட்டும் போட்டாள்.

நேற்று அணிந்த சேலை இன்னமும் களையாத கோலமாக இருக்க, இதே வழியனுப்ப போதுமென்று ஓடினாள்.

"துளிர் கேட்டாளா அம்மா. சர்வேஷ் கிளம்பிட்டானா? ஐயா என்னை கேட்டாரா?" என்று ஆதிராவிடம் கேட்டான்.‌

‌‌. “முதல்ல சாப்பிடு” என்று வடையை வைக்கவும் சாம்பார்ல ஊற வச்சி பேக் பண்ணிடுங்கம்மா.‌ அங்க பிரேக் டைம்ல சாப்பிடுக்கறேன்.” என்று எழுந்தான்.

ராணி ஆச்சியின் கையால் காபி நீட்டவும் சிற்பிகா வாங்கினாள். 

ஏதோ ஒரு உணர்வு, நேற்று முழுக்க தன் கடந்த காலத்தை தாலி கட்டியவனிடம் உரைத்தது எல்லாம், அவள் மனதை இலகுவாக்கியிருக்க வேண்டும். அதோடு ஆர்யன் செல்லும் போது வாசலில் வந்து நிற்க உந்துதல் உண்டானது சிற்பிகாவிற்கு. 

ஆர்யனோ ‘இவ கடந்த காலத்துல, சின்ன வயசுல ஒருத்தனை விரும்பியிருக்கா. பட் அது க்ரஷா இருக்கும். ஆனா அந்த எண்ணத்தை இப்பவரை காதல் என்று மனசுல வச்சி பூஜிட்டு இருந்தா என்ன செய்ய? நேத்து தான் பேசவே செய்திருக்கா, இந்த நிலையில ஏதாவது கேட்கப்போய், இதுக்கு தான் நான் எதுவும் சொல்லாம இருந்தேன் என்று எண்ணினாலும் தப்பு. அப்படியில்லாம, அவனை இன்னமும் விரும்பறேன் என்று சந்தோஷமா சொல்லி என் மனசை உடைச்சாலும் எனக்கு கஷ்டம். எதுக்கும் இப்பயென்று எதுவும் பேசாமல் சிறு முறுவலோடு கிளம்புவதாக தலையாட்டினான்.

சிற்பிகாவோ காபியை குடித்து முடித்து, "ரொம்ப நேரம் தூங்கிட்டேன்ம்மா. மில்லுக்கு வேற கிளம்பணும். குளிச்சிட்டு வர்றேன்‌அம்மா என்று ஆதிராவிடம் உரைத்து ஓடினாள். 

ராணியோ, இப்ப தான் தம்பி அந்த பிள்ளையிடம் லேசா சிரிச்சி பேசிட்டு போயிருக்கு.‌ கூடிய சீக்கிரம் நிபுணன் தம்பி மாதிரி அது அவங்க பொஞ்சாதியை நல்லா பார்த்துக்கோம்மா” என்று ஆருடம் உரைத்தார்.

“உங்க வாக்கு பலிக்கட்டும் அக்கா” என்று ஆதிரா பூரித்தார்.

“சரிம்மா நீயும் கிளம்பு. சிற்பிகாவை சாப்பிட வச்சி நான்‌ பார்த்துக்கறேன். ஆண்டு விழாவுல இன்னும் நாலு நாள் இருக்கும் இல்லையா?” என்றதும் ஆம் என்றார்.

‌ பிறகு ஆதிரா கிளம்பவும் சிற்பிகா வர, “அம்மா கிளம்பிட்டாங்களா ஆச்சி?” என்று வந்தாள்.

“ஆமாடா கண்ணு.” என்று பரிமாற, “அவர் ஒழுங்கா சாப்பிட்டாரா ஆச்சி.” என்று அக்கறையாய் விசாரித்தாள்.

நேற்று கடந்த காலத்தை பகிர்ந்ததால் ஆர்யன் சாப்பாட்டை ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பாரோ என்ற பயம்.
தன்னை நம்பாமல் பத்தினியா என்ற உறுத்தல் இருந்தால்….

"அதெல்லாம் சாம்பார்ல வடை ஊறப்போட்டு கொண்டு போயிருக்கு நல்லா சாப்பிடும் தம்பி. நீ ஒரு நாள் உன் கைபக்குவத்துல சமைச்சி கொடு. மத்த ஆம்பளைங்களை போல கமுக்கமா குறைச்சொல்லி சாப்பிடாது. நல்லாயிருந்தா மனசாற பாராட்டும்." என்று கூறவும், 'என்னை விட என் சமையலை தான் முதல்ல டேஸ்ட் பார்த்திருக்கார்.' என்று‌ மகிழ, என்னது உன்னை டேஸ்ட் பார்க்கணுமா? நீ என்ன சாப்பிடற வகையறையா?' என்றது மனசாட்சி. 

சிற்பிகாவோ 'அச்சோ என்ன இப்படியெல்லாம் அசிங்கமா மனசு பேசுது.' என்று வேலைக்கு ஓட்டமெடுத்தாள்.

துளிரை நிற்க வைத்து, “இப்ப எதுக்கு என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி இருக்க கொழுந்து? ஆசை ஆசையா உன்னை பார்க்க உங்க அண்ணா கல்யாணத்துக்கு வந்தேன். அங்க கூட நல்லா தானே இருந்த? இப்ப ஏன்‌ முகம் தூக்கிட்டு போற? ஏய் உன்னை தான் கேட்கறேன்” என்று விதார்த் துளிரை உலுக்காத குறையாக கேட்டான்.‌

அண்ணனின் ரிசப்ஷன் திருமணம் என்று விதார்த்தை கண்டவள், அதன் பின் அவனை காணவில்லை. அவன் சித்தப்பா ஆத்விக்கின் பையன் வசீகரன் வரவும் அவனோடு ஊர்சுற்றி இத்தனை நாள் துளிரை காணாது விடுமுறை எடுத்திருந்தான் விதார்த்.

“போன் பண்ணினா எடுக்கலை, மெஸேஜுக்கு ரிப்ளையும் இல்லை.” என்றதும் துளிரோ “தொட்டு தொட்டு பேசற வேலை வச்சிக்காதிங்க” என்று கத்தினாள்.‌

இரு‌மாணவ மாணவிகள் திரும்பி பார்த்து கடக்க, தனுஜாவோ “துளிர் எல்லாரும் உன்னை பார்க்கறாங்க.” என்று செவியருகே சுட்டி காட்டினாள்.

“தனுஜா என்னம்மா ஆச்சு இவளுக்கு?” என்று துளிர் தோழியிடம் கேட்டான்.

“தெரியலை அண்ணா. ஏதாவதுன்னா சொல்வா. உங்களை பத்தி மட்டும்னா எதுவும் சொல்ல மாட்டா.” என்றதும் துளிர் தோழியை பொசுக்கும் விதமாக பார்த்தாள்.

“சரிம்மா நீ கிளம்பு. இவளிடம் நான் பேசிக்கறேன்.” என்று‌‌ அனுப்பினான்.

துளிரிடம், “எங்கப்பா உங்கப்பா பிரெண்ட்ஸ் தெரியுமா?” என்று கேட்டான்.‌

‌‌ “தெரியும்.” என்று‌ கோபத்திலேயே மொழிந்தாள்.

“நாம பிரெண்டா இருக்க வேண்டாம். லவ் பண்ணலாம்” என்றதும் “மண்ணாங்கட்டி” என்று கூறிவிட்டு கடந்தாள்.‌

‌‌ விதார்த்திற்கு ஏனோ அவள் முகத்திருப்புதல் விளையாட்டாய் தோணவில்லை.‌ அவளை மேலும் நிறுத்தி பேசலாமென்றால் வகுப்பிற்குள் அடைந்துக் கொண்டாள்.

தனக்கும் வகுப்பு ஆரம்பிக்கும். இங்கேயே இருக்க இயலாது என்று பிறகு மாலை சந்திப்போமன நகர்ந்தான்.‌

‌—

ஆர்யனுக்கு காலையிலிருந்து ஒரே எண்ணம், எல்லாம் சிற்பிகாவை பற்றி மட்டுமே.

முன்னயும் இவ மேல கோபத்தோட இவளையே நினைப்பேன். இப்ப இவளை கல்யாணம் செய்தும் இவளோட காதல் எனக்கில்லையா இருக்கான்னு குழம்பறேன்.‌

ஆக்சீவலி இவளுக்கு என்‌மேல என்ன அபிப்ராயம் இருக்கும்?’ இதே சிந்தனையில் தவிக்க, இவன் நேரமோ என்னவோ பேஷன்ட்டும் இல்லை என்றதால், தன்‌சக மருத்துவரிடம் விடுமுறையை கூறினான்.‌

பெரும்பாலும் ஒரு‌டாக்டர் இருந்தால் மட்டுமே விடுமுறை எடுக்க முடியும்‌. யாருமில்லாது சென்றிட இயலாதே.‌ அதனால் உடல்நிலை சரியில்லை என்று எழுதி கொடுத்து சென்றான்.

அங்கிருந்த டாக்டரோ “என்ன ஆர்யன் பேசாம கொஞ்ச நாள் லீவ் எடுத்து ஹனிமூன் போங்க. இல்லைனா இப்படி தான் வீட்டம்மா நினைப்பு துரத்தும்” என்று கேலி செய்ய, முறுவலை பதில் தந்து கிளம்பினான்.

இரண்டு மணி நேரம் தான் ஆகியிருக்கும். அதள்குள் ஆர்யன் திருநிறையகம் திரும்ப வீட்டில் ராணி ஆச்சி மட்டும் கோழிக்கு தானியத்தை போட்டு தண்ணீரை சிறு கிண்ணத்தில் வைக்க, ஆர்யன்‌ பைக் சப்தம் கேட்டு, ஓடி வந்து, “என்னங்கயா மேலுக்கு முடியலையா?” என்று தொட்டு பார்க்க, “ஆச்சி அதெல்லாம் இல்லை. வீட்டுக்கு வரணும்னு தோணுச்சு வந்துட்டேன்” என்று மாடிக்கு சென்றான்.‌

‌ “டிபன்‌ பாக்ஸ் வெயிட் அப்படியே இருக்கே தம்பி சாப்பிடலையா?” என்று ராணி ஆச்சி கவலையாய் கேட்டார்.

அவரை பொறுத்தவரை நன்றாக விரும்பி சாப்பிடும்‌ ஆட்கள் மனம் நிறைவாக இருக்கும்.

ஆர்யன்‌ சாப்பிடவில்லை யென்றால்? என்று யோசிக்க, “ஆச்சி ஆஹ்… அ..அவ.அவங்க இருக்காங்களா?” என்று சிற்பிகாவை கேட்டான்.‌

இதென்ன பொஞ்சாதியை அவங்க என்று விளிப்பது? என்று திடுக்கிட ஆர்யனோ ஆச்சி கையிலிருந்த டிபன் பாக்ஸை கண்டு, “சாரி ஆச்சி சாப்பிட மறந்துட்டேன்.” என்று உரைத்தார்.
அதனை அப்படியே வைத்துவிட்டு “ஏன் ராசா பொஞ்சாதியை அவங்கன்னு கூப்பிடற?” என்று கேட்டதும் ஆர்யனோ சமாளிக்கும் விதமாக, “அது வந்து ஆச்சி ஐயா அம்மாவை அப்படி தானே நிறைய முறை கூப்பிடுவாரு.‌ அதே பழக்கம்” என்றான்.‌

நம்புவதாக இல்லையென்றாலும், அந்த பிள்ளை மில்லுக்கு கிளம்பி போயிடுச்சு ராசா" என்றதும் சரி ஆச்சி என்று அறைக்குள் சென்றான். 

தன் மேல் சட்டையை கழட்டி விட்டு, முகம் கைகால் கழுவி மெத்தையில் முதுகுக்கு சாய்வுக் கொடுத்து போனை எடுத்தான். 

திருமணத்தன்று துளிர் இவனின் போனில் புகைப்படமாக எடுத்து தள்ளியதில், ஆர்யன் சிற்பிகா காலில் மெட்டி அணிவித்ததும் இருந்தது.

அதனை எடுத்து பார்த்தான்‌. மருதாணி கால்களில் வெள்ளி கொலுசும், மெட்டியும் போட்டதன் நினைவோடு, அன்றைய இரவு காலில் அணிந்த ஓவியம் வேறு அவன் நினைவுக்குள் வந்தது.

வாழைத்தண்டு கால்கள் அவன் மனதில் வதனமாய் பதிந்திருந்தது.

‌மனதோடு அவள் பாதமருகே வீற்றுக்கொண்டு, அவளை ஏறிட, இம்முறை அவள் உதடு‌,கண்கள் எல்லாம்‌ சிரிப்புடன் அவன் மனதில் உறவாடியது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

29 thoughts on “என் நேச அதிபதியே -27”

  1. ரொம்பரொம்பசூப்பரா போகுது கதை ஆர்யனின் மனகுழப்பத்தை தீர்பாளா சிற்பி மறுபடியும் முதலில் இருந்து வருவார்கள் போல வாழ்த்துகள்

  2. Ava manasula irukuratha open ah solita aarya una virubuva eni tha vera entha ennam ipo avaluku illa . Nee kolapikatha pesu un manasula irukuratha ketudu

  3. Kavalapadadha Arya sirpi kandipa unmela love varum….unakum ava Mela love varum…

    Payapulla oru flashback kae hspl la iruka mudiyama avala paarka leave pottu vandhutan…ini ava love panran nu sonna payapulla hspl lae pogamattan Polayae 🙈🙈 veena akka…

  4. Super sis nice epi 👍👌😍 Ava manasu baratha yerakki vechita eppo evanuku baaram yeriduchi🙄 mehendi design semma sis👌

  5. Wow super ariyan. Ariyan romance started. Sirpu get ready for ariyan. Awesome narration sis. Eagerly waiting for next episode sis.

  6. Sema pa sirpika manasula yarum ilanu sollunga ana avale sollita thana virumbinen nu ana parunga namaku pidithavanga sollum pothu koncham purinchuka matom

  7. Super sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  8. அச்சோ….! சொந்த கதையை சொல்லி இப்படி அவனை புலம்ப வைச்சிட்டாளே…!

  9. அதான் ஃப்ளாஷ் பேக் எல்லாம் சொல்லி முடிச்சிட்டாளே இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை இரண்டு பேரும் சந்தோஷமா அவங்க குடும்ப வாழ்க்கையை பார்ப்பாங்கன்னு பார்த்தா , பழைய பிரச்சனையை பேசி முடிக்கும்போதே புது பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டு வச்சிருக்காங்களே

  10. ஆர்யன் மனதில் இப்போது தான் காதல் துளிர் விட ஆரம்பித்து இருக்கிறது….. அவனின் குழப்பத்தை சிற்பிகா சரி செய்வாளா….🤔🤔🤔🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!