கயல் நான் பந்தக்கால் நடும் வரை அமைதியாக இருந்துவிட்டு அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டால் வீட்டில் உள்ளவர்கள் உனக்கு மகாவை திருமணம் செய்து வைப்பார்கள் என்று எண்ணினேன் அதேபோல் இப்பொழுது அம்மாவும் முடிவு செய்துவிட்டார் அதனால் தான் நான் பந்த கால் நடும் வரை அமைதியாக இருந்தேன் என்றவுடன் மகிழ் கயலை அடிக்க கை ஓங்கினான்
அப்பொழுது மகா வேகமாக வந்து மகிழனின் கையை பிடித்தால் தனது கையை மகா பிடித்து இருக்கிறாள் என்று உடன் கையை கீழே உதிரினான் மகா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் பின் கயலிடம் ஏன் கயல் இப்படி செய்தாய் என்றால் கயல் சிரித்துக் கொண்டே நீ மகிழ் மாமாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதனால் தான் என்றவுடன் மகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது
மகா அதிர்ச்சியாகி கயலையே பார்த்தால் நீ மகிழ் மாமாவை விரும்புகிறாய் என்றும் நீங்கள் இருவருமே விரும்புகிறீர்கள் என்றும் எனக்கு தெரியும் என்றால் அவள் பார்த்துக் கொண்டிருந்தவுடன் அம்மா எங்களது கல்யாண பேச்சு எடுக்கும் போது தான் நான் தெரிந்து கொண்டேன் அப்பொழுது நான் என்னுடைய விருப்பத்தை சொல்லலாம் என்று உன்னிடமும் மாமாவிடம் வந்தேன் அப்பொழுதுதான் மாமா உன்னை விரும்புகிறார்
நீயும் அவரை விரும்புகிறாய் என்று தெரிந்து கொண்டேன் அதனால்தான் உங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக தான் நான் பந்த கால் நடும் வரை அமைதியாக இருந்தேன் என்றவுடன் மகா எதுவும் பேசாமல் தலையை கீழே குனிந்து கொண்டாள் அப்போது உதிரன் தான் இவளுக்கு இங்கு என்ன வேலை இவளிடம் எதற்கு நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான்
மகா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் அப்போது மகிழ் தான் உதிரனிடம் கயல் மேல் எந்த தவறும் இல்லை என்று கயல் சொன்ன அனைத்தையும் சொன்னான் உதிரனுக்கு கயல் மேல் சிறிது நல்லெண்ணம் வந்தது ஆனால் எதுவும் பேசவில்லை இவர்களுக்காக கயல் இவ்வாறு செய்தது அவனுக்கு விருப்பமில்லை பிடிக்கவும் இல்லை என்ன இருந்தாலும் வீட்டில் உள்ள யாரிடமாவது சொல்லி இருக்கலாமே
இவர்களது காதல் எனக்கு தெரியும் என்றுதான் இவளுக்கு தெரிந்திருக்கிறது அல்லவா அப்போது என்னிடமாவது சொல்லி இருக்கலாமே எதற்காக இப்படி யாரும் இல்லாத அனாதை போல் தனது தங்கை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா என்று நீ வருந்தினான் அப்பொழுது காவேரி தான் அவளிடம் என்னடா பேச்சு அவளை துரத்தி விட்டு நீங்கள் வீட்டிற்குள் வாருங்கள்
இனிமேல் அவள் இந்த வீட்டிற்குள் வரக்கூடாது அப்படி அவள் வர வேண்டும் என்றால் நான் இருக்க மாட்டேன் என்றார் அத்தை ஒரு நிமிடம் அமைதியாக இருங்கள் என்று விட்டு சரி கயல் நீ போ நான் உனக்கு போன் செய்கிறேன் பாஸ் உங்க போன் நம்பர் கொஞ்சம் தாருங்கள் என்றான் என்னுடைய பெயர் அன்பழகன் நான் கயல் வேலை செய்யும் அதே கம்பெனியில் மேனேஜராக இருக்கிறேன்
மகிழன் கயல் கணவனை பற்றி அனைத்தையும் அன்புவிடம் கேட்டு தெரிந்து கொண்டான் பாஸ் உங்கள் பெயர் என்ன நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்று அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டான் அன்பும் அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னான் பிறகு கயல் தன்னிடம் தன்னுடைய போன் இல்லை என்று சொன்னவுடன் நிலா என்று வேகமாக அழைத்தான் நிலா அங்கிருந்து கொண்டே என்ன என்று பார்த்தால்
மகிழ் ஃபோன் எடுத்துக் கொண்டு வா என்றான் அப்பொழுது அவனது பாக்கெட்டில் அவனது போன் இருந்த உடன் கயல் உடைய போன் எடுத்துக் கொண்டு வர சொல்கிறார் தன்னுடைய மாமா என்று எண்ணி நிலா கயல் அறைக்குச் சென்று கயலுடைய போனை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால் நிலா போன் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்த உடனே நிலா என்று கயல் அழைத்தாள் ஆனால் நிலா எதுவும் பேசாமல் கயலை முறைத்துவிட்டு தனது குடும்பத்தினருடன் போய் நின்று கொண்டாள்
உதிரனும் எதுவும் பேசாமல் வீட்டில் உள்ளவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டான் மகாவும் உதிரன் உடனே சென்று விட்டாள் மகிழ் தான் கயலிடம் ஃபோனை கொடுத்துவிட்டு அவனது பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்தான் இல்லை மாமா வேண்டாம் என்றால் அப்பொழுது அன்புவும் வேண்டாம் பாஸ் நான் தான் இருக்கிறேனே நான் வைத்திருக்கிறேன் என்றான்
பாஸ் நீங்கள் இருக்கிறீர்கள் தான் நான் இல்லை என்று சொல்லவில்லை அன்பு இருந்தாலும் அவள் கையில் என்று கொஞ்சம் பணம் இருக்க வேண்டும் அது எப்போதுமே அவளுக்கு உதவும் என்று கூறிக் கொடுத்தான் கயல் எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டால் பிறகு அவனது பாக்கெட்டில் இருந்து எடுத்து அவனது ஏடிஎம் கார்டு கொடுத்தான் மாமா அதான் பணம் கொடுத்து இருக்கியே அப்புறம் என்ன என்றால்
இல்ல கயல் அமைதியாக பிடி உனக்கு உதவும் இல்லை மாமா எனக்கு வேண்டாம் என்றால் வேற எதுவும் பேசாமல் அமைதியாக புடி என்றவுடன் கயலும் வாங்கிக் கொண்டாள் அப்பொழுது காவேரி திரும்பவும் கத்தினார் பாஸ் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றான் அப்போது அன்பு எங்கள் வீட்டிலும் எங்கள் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டு தான் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் எனது அப்பா அம்மாவும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள்
நானும் நன்றாக பார்த்துக் கொள்வேன் நீங்கள் இனி கயலை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை நாங்கள் அனைவரும் நன்றாக பார்த்துக் கொள்வோம் என்றான் சரி பாஸ் உங்க அட்ரஸ் எனக்கு பிறகு வாட்ஸ் அப்பில் மெசேஜ் பண்ணிடுங்க என்றான் அன்பும் சரி என்று விட்டு கயலை அழைத்துக் கொண்டு அவனது வீட்டிற்கு சென்று விட்டான் பிறகு மகிழ் தனது வீட்டில் உள்ளவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான்
அனைவரும் அமைதியாக இருந்தார்கள் மகிழ் ஏன் கயலிடம் சென்று இவ்வளவு நேரம் பேசி இருந்து விட்டு வந்தான் என்று யாரும் கேட்கவில்லை கயல் மேல் வீட்டில் உள்ள அனைவருக்கும் வருத்தம் இருக்கிறது தான் அதற்காக அவளை முழுவதாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்று யாரும் எண்ணவில்லை இப்போது தாங்கள் பேசினால் காவேரி வருந்துவார் என்பதற்காக மட்டும்தான் வீட்டில் உள்ளவர்கள் பேசவில்லை
மற்றபடி அனைவருமே பேசி இருப்பார்கள் அப்பொழுது திரும்பவும் காவேரி தான் மகிழ் இன்று உனக்கு திருமணத்திற்கு பந்தக்கால் நட வேண்டும் உனக்கு ஏற்கனவே குறித்து தேதியில் மகாவுடன் திருமண நடக்க வேண்டும் என்றார் மகிழ் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றான் நீ மகாவை திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் எனக்காக இந்த குடும்பத்திற்காக என்றார்
அப்பொழுது மகா தான் வேகமாக கத்தினாள் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றாள் மகா ஏன் இவ்வாறு சொல்கிறாள் என்று வீட்டில் உள்ள யாருக்குமே புரியவில்லை அதிலும் உதிரனுக்கு மகா மேல் கோபமாக வந்தது இப்போது அம்மாவாகவே அவளுக்கு ஒரு சான்ஸ் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் போது எதற்கு மகிழனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறாள் என்று எண்ணினான்
காவேரியும் எப்படி எப்படியோ கெஞ்சினார் ஆனால் அவன் ஒத்துக் கொள்வதாக இல்லை அப்பொழுது இனி தான் தனது அண்ணனிடம் வந்து பேசினாள் அண்ணா நீ மகாவை திருமணம் செய்து கொள் உன்னுடைய திருமணம் இப்படி நிற்க கூடாது என்றால் பரவாயில்லை எனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாம் என்றான்
இனி மகாவிடம் போய் நின்றாள் ஏன் மகா உனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாம் என் அண்ணனையும் திருமணம் செய்து கொள்ள மாட்டாய் என்கிறாய் என்றால் மகா எதுவும் பேசாமல் இனியை பார்த்துவிட்டு எனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாம் எனக்கு இந்த திருமணத்திலும் சம்மதம் இல்லை என்றால்
மகிழ் தான் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு எனக்கு திருமணம் வேண்டாம் நீங்கள் வேண்டுமானால் மகாவிற்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வையுங்கள் என்றான் மகிழ் இவ்வாறு சொல்வான் என்று வீட்டில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கவில்லை மகா நிமிர்ந்து தனது மாமாவை பார்த்தால்
வேறு எதுவும் பேசாமல் அவளது அறைக்கு சென்று விட்டாள் அப்போது இனி தான் தனது அண்ணனிடம் வந்து நின்றால் அண்ணா என்ன பேசுகிறாய் ஏன் உனக்கு மகாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை உன்னுடைய திருமணம் இப்படி கல்யாண பத்திரிக்கை வைத்து மணமேடை வரை வந்து நிற்க வேண்டுமா நீ மகாவை திருமணம் செய்து கொள் என்றால் எனக்கு வேண்டாம் என்றான்
உனக்கு திருமணம் வேண்டாம் என்றால் நானும் ஒரு முடிவெடுக்க வேண்டி வரும் என்றால் என்ன மிரட்ட போகிறாயா என்றான் நான் எதுவும் உன்னை மிரட்டு போவதாக இல்லை உண்மையை தான் சொல்ல போகிறேன் என்றால் வீட்டில் உள்ள அனைவரும் இவள் என்ன சொல்ல போகிறார்கள் என்று பார்த்தார்கள் நீ அப்படி மகாவை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் உதிரன் மாமாவுடன் இனியும் வாழ மாட்டேன் என்று விட்டு உதிரனை திரும்பிப் பார்த்தால்
உதிரன் எதுவும் பேசாமல் அமைதியாக தான் நின்று கொண்டிருந்தான் மகிழ் உதிரனை பார்த்தான் அவன் அமைதியாக இருந்த உடன் அவனுக்கு கோபம் அதிகாக வந்தது மகிழ் இனி என்று சொல்லிக்கொண்டே அவளை கை ஓங்கினான் அப்போது காவேரி தான் மகிழ் கையை பிடித்தார் தனது அத்தை தனது கையைப் பிடித்துடன் கையை கீழே உதரினான் என்ன விளையாடுகிறாயா என்னை மிரட்டி பார்க்கலாம் என்று பார்க்கிறாயா என்றான் அதுவும் வயிற்றில் குழந்தை வைத்துக் கொண்டு என்ன பேச்சு பேசுகிறாய் என்றான்
நான் உன்னை மிரட்டவில்லை மிரட்டுவதற்காகவும் சொல்லவில்லை அப்படி நான் மிரட்டினாலும் நீ பயந்து விடுவாயா? நான் உண்மையை தான் சொல்கிறேன் நான் சொல்வதை செய்வேன் என்று உனக்கே தெரியும் நீ இப்பொழுது மகா கழுத்தில் தாலி கட்டவில்லை என்றால் உன்னுடைய தங்கை உன்னுடைய தங்கையாகவே வாழாவெட்டியாக வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு உன்னுடன் இருப்பாள்
உனக்கு அதற்கு சம்மதமா என்றாள் வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு இந்த பேச்சு பேசுகிறாய் என்று உதிரனை பார்த்தான் அவன் அப்பொழுதும் அமைதியாகவே தான் இருந்தான் அப்பொழுது இனி தான் நீ வீட்டில் உள்ள அனைவரையும் நினைத்துப் பார்த்தாயா இல்லை அல்லவா எனக்கும் எதைப் பற்றிய கவலையும் இல்லை
நீ மகாவின் கழுத்தில் தாலி கட்டுவாய் என்றால் நான் உதிரன் மாமாவுடன் வாழ்வேன். இல்லை உனக்கு மகா வேண்டாம் என்றால் நானும் உதிரன் மாமாவை விட்டுவிட்டு வயிற்றில் பிள்ளையோடு வாழா வெட்டியாக உன்னுடைய தங்கையாக தான் வாழ்நாள் முழுவதும் வாழ்வேன் என்றால் மகிழன் உதிரனையும் முறைத்துக் கொண்டே நின்றான்
உதிரன் ஏன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறான் என்று எண்ணினான் தனது தங்கையை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான் இவள் தன்னுடைய தங்கை அவள் சொல்வதை செய்வாள் என்று எண்ணினான் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் உள்ள அனைவரையும் சுற்றி பார்த்து கொண்டிருந்தான் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக இருந்தார்கள்
பிறகு தனது தங்கை சொன்னது செய்வாள் என்பதால் எதையோ செய்யுங்கள் ஆனால் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று விட்டு அமைதியாக நின்றான்..
மகிழன் மகா கழுத்தில் தாலி கட்டுவானா
மகா இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்வாளா..
அப்படியே இருவருக்கும் திருமணம் நடந்தாலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வார்களா ..
என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..
அன்புடன்
❣️ தனிமையின் காதலி❣️
கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் போரடிக்கிறேனா இல்லை கதை நன்றாக செய்கிறதா என்றும் சொல்லுங்கள் நிறை குறைகள் இருந்தாலும் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்
சைலன்ட் லீடர்ஸ் ப்ளீஸ் படிச்சிட்டு கதை எப்படி இருக்குன்னு உங்களோட விமர்சனத்தை கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும் இப்படி நீங்க அமைதியா கதை படிக்கிறதால என்னோட கதை எப்படி போதுனு கூட எனக்கு தெரியல நல்லா இருக்கா இல்லையான்னு கொஞ்சம் கஷ்டமா இருக்கு படிச்சிட்டு உங்களோட விமர்சனத்தை எனக்காக தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
மிக்க நன்றி 🙏
Kadhai nalla poitu irunthuchi but konjam elukura mari iruku alaga sweet ah ena kadhai kondu vanga puriuthu but elukuthu.
Sorry
Sorry எதுக்கு பா இது completed story pa naan இதை இங்க rerun panren இது competition story paa 60 epi kku Mela இருக்கணும் சோ நான் கூட்டு குடும்பமாக யாருக்கும் மனம் வருத்தம் உண்டாகாமல் இருக்கும் படியாக என்ன செய்ய வேண்டுமோ இல்லை இந்த கூட்டு குடும்பம் உடையாமல் இருப்பதற்கு குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்ப எழுதி இருக்கிறேன் ..அது உங்களுக்கு இழுவை போல் இருக்கிறது நீங்கள் கேட்பது என்ன விஷயமோ அதை இரண்டு வரிகளில் முடிக்க சொல்லி கேட்கிறீர்கள் அதை நான் ஒரு ஐந்து வரி அளவிற்கு இழுத்துக் கொண்டு இருக்கிறேன் அது போல இருக்கிறது இது காம்பெடிஷன் ஸ்டோரி ஆகையால் தான் இவ்வாறு இருக்கிறது கொஞ்சம் மன்னித்துக் கொள்ளுங்கள்..
கதை நல்லாத்தான் போகுது. ஆனா, வீட்டுல அத்தனை பொறுப்புள்ளவனும், வயதில் மூத்தவனுமான மகிழனோட விருப்பத்தை கேட்டு கல்யாணம் பண்றதுல என்ன பிரச்சினை..?
அவனுக்கு மகாவைத்தான் பிடிக்கும்ன்னா… அதை தைரியமா சொல்லி இருக்கலாம் தானே.
தவிர, அவன் மகா கிட்ட ஓவரா உரிமை எடுத்துக்கிறதை வீட்ல
உள்ளவங்க எல்லாருமே பார்த்திருக்காங்க தானே..?
தவிர, தாத்தா பாட்டிக்கு இல்லாத மரியாதையையா காவேரி வார்த்தைக்கு கொடுப்பாங்க… ? தாத்தா பாட்டி ஒரு வார்த்தை மகிழன் மகாவைத்தான் கட்டிக்கணும்ன்னு சொல்லியிருந்தா யாரு தடுத்திருக்கப் போறாங்க…?
அவனிடம் அவனது விருப்பத்தைக் கேட்டார்கள் ஆனால் அவன் தான் மகாவின் மீது இருக்கும் விருப்பத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லவில்லை. அதற்கு காரணம் தான் சொல்லி தன்னுடைய பெரிய அத்தை மனம் வருத்தம் கொள்வார்களோ அதனால் தன்னுடைய குடும்பம் உடைந்து விடுமோ என்று எண்ணுகிறான் ..
ஒரு பக்கம் இன்னொரு பக்கம் தான் உயிராக நேசித்த மகா தன்னுடைய விருப்பத்தை சொல்லவில்லையே என்று ஒரு பக்கமாக யோசிக்கிறான் அவன் அவனுடைய விருப்பத்தை அவனும் சொல்லவில்லை என்பதை அங்கு மறந்து விட்டான் இது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ப இருக்கும் விஷயங்களை எடுத்துரைக்கிறேன் இது என்னுடைய கருத்து என்னுடைய இடத்தில் இருந்து உங்களுடைய கருத்து மாறுபடும் அல்லவா..
இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பி இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதையின் ஓட்டத்தில் இருக்கிறது
கதையின் நகர்வு அருமை. .. மகா மகிழன் இரண்டு பேரும் மனசக்குள்ள காதல வச்சிட்டு வெளில ஏன் இப்படி கல்யாணம் வேண்டாம் என்று சொல்லறது தான் புரியல
Kathai super…but narration konjam improve pannanum sis….otherwise kathaikkaru nalla iruku
திருத்திக் கொள்ள கொஞ்சம் முயற்சி பண்ணுகிறேன் நான் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்துக்களை சரி செய்ய முயல்கிறேன் ஆரம்பத்தில் எழுதிய கதைகளில் நிறையவே எழுத்து பிழை இருக்கிறது எழுத எழுத கொஞ்சம் கொஞ்சமாக பிழைகளை திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன் முடிந்த அளவிற்கு நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்கிறேன்.