“தேவா அவனது வீட்டில் இருந்து வெளியில் வந்து தனது பைக் நிறுத்தி இருக்கும் இடம் நோக்கி சென்றான்”.
“தேவா வீட்டை விட்டு வெளியே வந்து ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டு தனது சுதந்திர காற்றை சுவாசித்து விட்டு மூச்சை ஆழ்ந்து இழுத்து விட்டான்” .
பிறகு “தனது தலையை கோதிக் கொண்டே தனது வண்டியின் சாவியை கையில் சுற்றிக் கொண்டு நடந்து வந்தான்”.
பிறகு தனது பைக் நிற்குமிடம் வந்தவுடன் சாவியை பைக்கில் போட்டுவிட்டு “தனது தலையை கண்ணாடியில் குனிந்து லேசாக சரி செய்துவிட்டு “நீ அழகன்டா தேவ்” என்று சொல்லிக்கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு அவனது அலுவலகம் நோக்கி கிளம்பினான்…
அவன் அவனது அலுவலகம் நோக்கி போகட்டும் நாம் அவனைப் பற்றி பார்க்கலாம்.
” தேவ மித்ரன் 28 வயது கட்டிலும் காளை பார்க்கும் பெண்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அழகு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது”
நம்ம ஊரு கலருதாங்க கருப்பும் இல்லாமல் மாநிறமும் இல்லாமல் கொஞ்சம் கலவையான நிறம் .
28 வயது ஆண் மகன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐடி கம்பெனியில் மேனேஜராக வேலை செய்து கொண்டிருக்கிறான்..
அவனுக்கு தனது தம்பி ஆதர்ஷ் என்றால் பிரியும் உயிர் என்று சொல்லலாம் இந்த உலகத்தில் அவனுக்கு ரொம்ப பிடித்தவர்கள் யார் என்று கேட்டால்…
” அவனது பட்டியலில் இருக்கும் முதல் நபர் அவன் தம்பி ஆதர்ஷ்” அவனின் பாசமிகு ஆதுவாக தான் இருப்பான் “ஒரு சில மாதங்கள் இருளாக இருந்த அவனது வாழ்க்கையை வசந்தமாக்க வந்தவன் தனது தம்பி ஆது “என்று அவன் எப்பொழுதும் சொல்லவும் செய்வான்…
“அரசி ஆரம்பத்தில் இருந்து கெட்டவர் ஒன்றும் இல்லை அவரை இவ்வாறு பேச செய்ததும் அவரது செய்கையை முழுவதுமாக மாற்றுவதற்கு காரணமும் தீரன் என்று தான் சொல்ல வேண்டும் “..
அது என்ன என்று பார்க்கலாம் “தீரன் பார்வதி இருவரும் காதல் திருமணம் இருவருக்கும் பெற்றவர்கள் என்று யாரும் இல்லை இருவரும் ஒரே ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள் “.
பள்ளி காலத்தில் இருந்தே பார்வதி அரசி இருவரும் நெருங்கிய நண்பர்கள் “பார்வதியை ஆசிரமத்திற்கு பார்க்க வந்த வேலையில் தான் அரசிக்கு தீரனை தெரியும்” பார்த்த மாத்திரத்தில் இருந்து அரசிக்கு தீரனை பிடித்திருந்தது..
பள்ளி காலம் வரை இது அஃபெக்ஷனாக கூட இருக்கலாம் என்று எண்ணி அமைதி காத்தவர் கல்லூரியில் அடியெடுத்து வைத்த உடன் தனது காதலை தீரனிடம் சொல்ல செய்தார்…
தீரன் தான் எனக்கு உன் மேல் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் அவர் சொன்னது ” எனக்கு பெற்றவர்கள் என்று யாரும் இல்லை நீ குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்” .
“இனியும் ஒரு குடும்பத்தில் நன்றாக வாழ செய் அதை தான் உனது பெற்றவர்களும் விரும்புவார்கள் அதுதான் உனது எதிர்காலத்திற்கும் நல்லது” என்று சொல்லிவிட்டார் ..
அவர் எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி இருந்தால் கூட அரசி விலகி இருப்பாரோ என்னவோ அவர் இவ்வாறு சொன்னவுடன் தனது நன்மைக்காக தான் சொல்கிறார் என்று எண்ணி அவர் மேல் இன்னும் காதலை வளர்த்துக் கொண்டார் …
ஆனால் அவர் அரசிடம் வேண்டாம் என்று சொல்வதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது “தீரன் பார்வதியை பள்ளிக்காலத்தில் இருந்து விரும்பி கொண்டிருக்கிறார்”..
“பள்ளி படிக்கும் பெண்ணிடம் தன் விருப்பத்தை சொல்ல கூடாது என்பதற்காக அரசி தனது காதலை சொல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் பார்வதியிடம் சென்று தனது காதலை சொன்னார் “
பார்வதியும் தீரனை ஏற்கனவே விரும்பி கொண்டிருந்ததால் தீரன் வந்து சொன்னவுடன் தனது காதலையும் ஒத்துக்கொண்டு தீரனின் காதலையும் ஏற்றுக்கொண்டார்..
இருவருக்கும் யாரும் இல்லாததால் ஆசிரமத்தில் இருக்கும் பெரியவர்களிடம் சொல்லி திருமணம் செய்து கொள்ளலாம் இப்பொழுது “இருவருக்குமே படித்து கொண்டு இருக்கிறோம் என்பதால் அமைதி காத்தார்கள்”…
அப்படியே தங்களது காதலையும் வளர்த்துக் கொண்டார்கள் அரசி பார்வதியின் தோழி என்பதால் பார்வதி, அரசி நன்றாக பேசிக்கொள்வார் ..
பார்வதி தன்னுடைய காதலை சொல்லவில்லை போல அதனால் தான் இந்த பெண் தன்னிடம் வந்து காதலை சொல்கிறாள் இப்பொழுது நாம் சொன்னால் “பார்வதிக்கும் அரசிக்கும் இடையில் இருக்கும் நட்பில் பிளவு ஏற்படும் என்று எண்ணி தனது காதலை மறைத்தார்”
ஆனால் “இவர் மறைத்த விஷயமே பின்னாலில் இருவரது நட்பிலும் பிளவு ஏற்படும் என்று அவர் அப்போது நினைத்திருக்கவில்லை”
அப்படி நினைத்திருந்தால் அரசி வந்து தனது விருப்பத்தை சொல்லும் பொழுது நான் பார்வதியை விரும்புகிறேன் என்று சொல்லி இருப்பாரோ என்னவோ அப்படியே நாட்கள் வருடங்களாக ஓடியது…
“அரசியின் காதல் தீரனின் மேல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது” இங்கு “தீரன் பார்வதி இருவரது காதலும் ஆசிரமத்தில் தினமும் வளர்ந்து கொண்டு இருந்தது” …
இப்படியே நாட்கள் உருண்டோடியது தீரனுக்கு ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது அவன் ஆதிரமத்தில் தனக்கு வேலை கிடைத்த செய்தியை சொன்னவுடன் அவனை பாராட்டினார்கள்…
தீரன் ஆசிரமத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது இதற்கு மேல் தீரன் அங்கு இருக்க அவருக்கு அனுமதி இல்லை “படித்து முடித்து ஒரு வேலைக்குச் சென்றவுடன் தனியே வீடு பார்த்து அவர்களது வாழ்க்கையை இனி அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசிரமத்தின் நியதி” ..
அதன்படி தீரன் அந்த ஆசிரமத்தில் இருந்து வெளியே வந்தார் அப்பொழுது பார்வதியும் அரசியும் கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தார்கள் ..
அரசி தீரனிடம் வந்து “எனது காதல் உண்மையே நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன் ப்ளீஸ் எனது காதலை ஏற்றுக் கொள்ளுங்கள் “.
நான் எனது பெற்றவர்களிடமும் பேசுகிறேன் அவர்கள் ஒத்துக் கொள்வார்கள் எனக்காக என்று வந்து கேட்டார் “தீரனுக்கு இதை எப்படி சரி செய்வது என்று புரியவில்லை” அமைதியாக நகர்ந்து விட்டார்..
நாளுக்கு நாள் அரசியின் காதல் அவருக்கு தொல்லையாகத் தெரிய ஆரம்பித்தது அப்பொழுது “பார்வதி அரசியின் காதலை தெரிந்து கொண்டு வந்து தீரனிடம் கேட்டார்”.
உங்களிடம் “அரிசி வந்து அவளுடைய விருப்பத்தை சொன்னாளா நீங்கள் இதுவரை என்னிடம் சொல்லவில்லையே” என்று கேட்டார் ..
ஏன்” நீ உன்னுடைய விருப்பத்தை உனது தோழியிடம் சொல்ல வில்லை” என்றார் நாம் தான் ஏற்கனவே சொல்லி இருந்தோமே என்ன என்று கேட்டார் ..
நீங்கள் ஒரு நல்ல நிலைமையில் வந்த பிறகு தான் நான் எனது தோழியிடம் சொல்லலாம் என்று இருந்தேன் இப்பொழுது எனது விருப்பத்தை அவளிடம் சொல்லலாம் என்று போகும் போது தான் “அவளும் நான் உன்னுடைய ஆசிரமத்தில் வளர்ந்த தீரனை விரும்புகிறேன்” என்று சொல்கிறாள் ..
எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது என்றார் ஏன் ” நீ உன்னுடைய விருப்பத்தை சொல்லி இருக்க வேண்டியதுதானே” என்று கேட்டார் பார்வதி அவள் அவ்வாறு சொன்னவுடன் எப்படி ‘நான் உங்களை விரும்புகிறேன்” என்று சொல்வது என்றார்…
தீரன் முறைத்துக்கொண்டே ஏன் சொன்னால் என்ன நாம் இருவரும் தானே விரும்புகிறோம் உன்னுடைய தோழி என்னை விரும்புகிறார் என்பதற்காக நான் ஒன்றும் பண்ண முடியாது ..
“எனக்கு உனது தோழியின் மீது விருப்பமில்லை “என்பதையும் நான் உன்னுடைய தோழியிடம் சொல்லி விட்டேன் என்றார் ப்ளீஸ் “நீங்கள் அவளை திருமணம் செய்து கொண்டு அவளுடன் குடும்பமாக வாழ பாருங்கள்” என்றார் பார்வதி ..
தீரனுக்கு கோபம் வந்துவிட்டது இப்படி “தன்னுடைய காதலையே தோழிக்காக வேண்டாமென்று சொல்கிறாளே” இப்பொழுது தோழிக்காக தன்னுடைய காதலை வேண்டாம் என்று சொன்னால் “நாளை முழுவதுமாக என்னையே என்னுடைய பாரு வேண்டாம் என்று சொல்வதற்கு கூட தயங்க மாட்டாள் “என்று எண்ணினார்”..
மறுநாள் காலையில் பாரு விடம் கோவிலுக்கு வருமாறு மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார் எதற்கு என்று தெரியாமல் பார்வதியும் கோவிலுக்கு சென்றார் “பார்வதி சாமியை தரிசனம் செய்து கொண்டிருக்கும் வேளையில் தீரன் பார்வதி இடமே சொல்லாமல் கொள்ளாமல் பார்வதியின் கழுத்தில் மூன்று முடிச்சு இட்டார்”.
இதுதான் அவர் செய்த இரண்டாவது தவறு “அவர் செய்த இந்த தவறுதான் பின்னாலில் அவரது வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப் போட்டது”.
. ×××××
வரு(வருணிகா) தனது தாயிடம் பழுப்பு காண்பித்து விட்டு அவளது ஆபீஸ் நோக்கி செல்வதற்கு நேரமாகியதால் வேகமாக அவர்கள் வீட்டில் இருந்து வெளியில் வந்து தனது ஸ்கூட்டியில் உட்கார்ந்து கொண்டு “டேய் உன்னை விட்டு விடுவேனா” இன்று முழுவதும் நீ என்னுடன் தான் இருந்தாக வேண்டும்..
முக்கியமான மீட்டிங் இருப்பதால் நீயும் நானும் ஒன்றாக தான் இன்று முழுவதும் இருப்போம் உன்னை அப்படியே விட்டு விடுவேனா “என்னை டார்ச்சல் தொல்லை என்று எத்தனை நாட்கள் சொல்லியிருக்கிறாய்”
இன்று “எனது தொல்லையாலும் டார்ச்சலாலும் தான் இன்று முழு நாளும் உனக்கு முடிய போகிறது” உன்னை வந்து வைத்துக் கொள்கிறேன் என்று தேவாவை எண்ணி சிரித்துக் கொண்டே அவளது அலுவலகம் நோக்கி வண்டியை விட்டாள்…
வரு (வருணிகா) தந்தை மாணிக்கம் தாய் கலைமணி இருவரது திருமணம் பெற்றவர்கள் பார்த்து வைத்த திருமணம் ..
திருமணத்திற்கு பிறகு கலைமணி மாணிக்கம் இருவருக்கும் “ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தவம் இருந்து பெத்த பிள்ளை தான் வருணிகா”.
ஒற்றை பிள்ளை இருவருக்கும் வரு என்றால் உயிர் என்று சொல்லலாம் “வருவுக்கும் தனது தாய் தந்தை தான் உலகம்” “அவளுக்கு இப்பொழுது இரண்டு வருடங்களாக இன்னொருவனும் அவளது உலகத்தில் சேர்ந்திருக்கிறான்”
அவன் தான் “நம் கதையின் நாயகன் தேவமித்ரன்”
நம் “வரு வாள் மித்து என்று செல்லமாக அழைக்கப்படுபவன்.”.
அவ்வப்போது அவனை சீண்டுவதற்காக என்று அவனை “ஹான்ட்சம் பாய்” என்று அழைப்பாள் மற்றவர்களிடம் அலுவலகத்தில் தேவா என்றும் வீட்டில் தனது மனசாட்சியிடம் பேசும்போது மித்து என்றும் செல்லமாக வரு வாள் அழைக்கப்படுவான் ..
அவனது நினைவிலேயே வரு தனது அலுவலகத்தை நோக்கி வண்டியை விட்டாள் இதுவரை “மாணிக்கம் கலைமணி தம்பதியினர் தனது மகளிடம் எந்த ஒரு சிறு விஷயத்தை கூட மறைத்ததில்லை “.
வருவும் அதேபோல்தான் ஆனால் “அவள் இரண்டு வருடங்களாக ஒரு விஷயத்தை தனது தாய் தந்தையிடம் மறைத்துக் கொண்டிருக்கிறாள் ” அது அவளது மனதை அடிக்கடி புண்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது…
நம்மிடம் உண்மையாக இருக்கும் தாய் தந்தையிடம் நாம் உண்மையாக இல்லையோ “நமது வாழ்க்கையில் பெரும் அங்கத்தை மறைக்கிறோமோ என்று எத்தனையோ இரவுகளில் எண்ணி அழுது இருக்கிறாள்”.
ஆனால் அவள் வேண்டும் என்று சொல்லாமல் இல்லை “அவளும் இரண்டு வருடங்களாக தேவாவிடம் மன்றாடிக் கொண்டுதான் இருக்கிறாள் தனது காதலுக்காக” என்னென்ன செய்ய முடியுமோ அனைத்து செய்து கொண்டு இருக்கிறாள்..
ஆனால் “அவனது குடும்ப சூழ்நிலை இவளது காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” அவள் காதலை சொல்லும்போது எனக்கு உன் மேல் எந்த விருப்பமும் இல்லை உன் மேல் மட்டும் அல்ல “எனக்கு காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இல்லை “என்னை விட்டுவிட்டு நீ எதற்காக இங்கு வந்தாயோ அந்த வேலையை பார்க்க செய் என்றான் ..
நான் அந்த வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றால் சிரித்துக் கொண்டே ” என்னை நீ காதலிப்பது தான் உன்னுடைய வேலையை அதற்காகத்தான் நீ இந்த அலுவலகத்திற்கு வந்திருக்கிறாயா” என்று கேட்டுவிட்டு அவளை முறைத்தான் தேவா …
நீ முறைத்துவிட்டால் நான் பயந்து விடுவேனா என்பது போல் இருந்தது வருவின் எதிர்பார்வை இப்படி தன்னுடைய காதலை வரு அவனிடம் சொல்லியும் “எனக்கு உன்மேலும் விருப்பமில்லை காதலிக்கும் எண்ணமும் இல்லை “என்று சொல்லியவனை “வரு எப்படி சரிகட்டி தனது காதலில் விழ செய்து அவனை கரம் பிடிப்பாளா”என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..
அன்புடன்
❣️ தனிமையின் காதலி❣️
மித்து & வரு… இவங்க ரெண்டு பேரும் சேர என்ன தடை…?
இரண்டு பேரும் சூப்பர் ஜோடி
Good epi