Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 4

பூவிதழில் பூத்த புன்னகையே 4

பார்வதி தீரன் இருவரது வாழ்க்கையும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது அப்பொழுது தான் அவர்களது வாழ்வில் முதல் அடி இறங்க ஆரம்பித்தது…பார்வதி கோவில் சென்று வருவதாக சொல்லிவிட்டு கோவிலுக்கு சென்று இருந்தார் “அவர் கோவிலுக்கு சென்று இருந்த நேரம் அவரது கல்லூரி தோழிகள் அனைவரும் கோவிலுக்கு வந்திருந்தார்கள்” ..அதில் அரசியும் இருக்க செய்தார் அனைவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் பார்வதி கோவிலுக்குள் வந்தார் …வந்தவர் தனது கல்லூரி தோழிகளை பார்த்துவிட்டு அவர்களிடம் சென்றார் அப்பொழுது அனைவரும் அவரை முறைத்துப் பார்த்துவிட்டு நீ எல்லாம் ஒரு பெண்ணா டி “நீ காதலித்தவரையே இவளும் காதலித்தால் என்றால் அவள் ஒன்றும் நீ கதலிப்பவரை வேண்டும் என்று தெரிந்து காதலிக்கவில்லையே”..அவள் மேல் என்னடி தவறு நீ இவளிடம் அவரை  விரும்புகிறாய் என்று சொல்லி இருந்தால் கூட போதும் ஆனால் அதை விட்டுவிட்டு பச்சை துரோகம்  செய்து இருகிறாய் “அவள் விரும்பிய வரை நீ விரும்புகிறேன் என்றால் கூட தவறில்லை”…ஆனால்” அவள் உன்னிடம் வந்து தீரனை விரும்புகிறேன் என்று சொன்ன மறுநாளே நீ அவரை திருமணம் செய்து கொண்டு இருகிறாய்” பார்த்தாயா …உன்னை  போல் ஒரு ஜென்மத்தை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை என்றார்கள் அப்போது அரசி வேண்டாம் வாருங்கள் நாம் கிளம்பலாம் என்றார் ..பார்த்தாயா இதுதான் இவளுடைய குணம்” உன்னை பிடிக்கவில்லை என்றாலும் உன்னை விட்டு ஒதுங்க தான் நினைக்கிறாளே தவிர உன்னை சீண்டி விளையாடவில்லை”..ஆனால் நீ என்ன செய்திருக்கிறாய் என்றார் பார்வதி தன் பக்க நியாத்தை சொல்வதற்கு வரும் வேளையில் “இவளை இப்படி அழ வைத்துவிட்டு நீ செய்த பாவம் துரோகம் தான் இப்பொழுது உன்னை சுற்றிக் கொண்டிருக்கிறது” என்றார் …பார்வதிக்கு இவர்கள் என்ன நம்மை இப்படி சொல்கிறார்கள் என்று நிமிர்ந்து பார்த்தார் என்ன சொல்கிறோம் என்று புரியவில்லையா “உனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது இதுவரை உனக்கு குழந்தை என்று ஏதாவது இருக்கிறதா” ஏற்கனவே இருவருமே ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள்…இப்போது உங்களுக்கு என்று எந்த துணையும் இல்லை தானே என்றவுடன் அரசிக்கு கோபம் வந்து அவ்வாறு பேசிய தோழி அடித்து விட்டார்.. என்ன பேச்சு இதெல்லாம் இப்படி எல்லாம் பேசுவார்களா என்று விட்டு அவர்கள் பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று “கையெடுத்து பார்வதியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தனது தோழிகளையும் அழைத்துக் கொண்டு நகர்ந்து விட்டார்” …பார்வதிக்கு கஷ்டமாகி போனது வீட்டில் வந்து அழுது கொண்டிருந்தார் தீரன் என்ன என்று கேட்டதற்கு அனைத்தையும் சொல்லிவிட்டு ஒரு இரண்டு நாட்கள் தீரனிடம் அவ்வளவாக பேசவில்லை …தீரனுக்கு ஒன்றுமே புரியவும் இல்லை இவள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்றும் தெரியவில்லை இரு நாட்களுக்குப் பிறகு “பார்வதி தீரனிடம் வந்து நாம் நம் வாழ்க்கை தொடங்கலாம் “என்று சொன்னார்…அதற்கு தீரன் “பார்வதியிடம் நீ நமக்காகவோ இல்லை நீ விருப்பப்பட்டோ நம் வாழ்க்கையை தொடங்கலாம் என்று சொன்னால் பரவாயில்லை “உனது தோழிகள் சொன்னார்கள் என்பதற்காக இவ்வாறு பேசுகிறாயா என்றார்…எனக்கு அவர்கள் சொன்னார்கள் என்பதற்காக என்று இல்லை எனக்கும் விருப்பம் இருக்கிறது உங்களுக்கு விருப்பம் இல்லையா அப்போது” என் மேல் விருப்பம் இல்லாமல் தான் என்னை திருமணம் செய்து கொண்டீர்களா” என்று ஏதேதோ பேசப்போய் தீரன் அவரை அடிக்க கைக்கு ஓங்கிக்கொண்டு வந்தார் …தீரன் பிறகு கையை கீழே போட்டுவிட்டு பார்வதியை முறைத்துவிட்டு நகர்ந்து விட்டார் தீரன் அதன் பிறகு பாருவிடம் பேசவில்லை அப்படி பேச செய்தாலும் அவர் கேட்கும் ஒரே விஷயம் நம் வாழ்க்கையை தொடங்கலாம் என்று மட்டுமாக  தான் இருந்தது…இருவரும் கொஞ்ச நாட்கள் போகட்டும் என்று எண்ணி அமைதி காத்தார்கள்.. “தீரன் பார்வதி இருவரும் இத்தனை நாட்களாக தங்களது வாழ்க்கையை தொடங்காமல் காதல் கணவன் மனைவியாக மட்டும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்”…உடல் அளவில் கணவன் மனைவியாக இதுவரை அவர்கள் இருவரும் வாழவில்லை இப்பொழுது தீரனுக்கு எப்படி இதை சமாளிப்பது என்று புரியவில்லை..தனது காதல் மனைவி எப்படி இருப்பதும் அவருக்கு பிடிக்கவில்லை பிறகு சரி நாம் வாழ்க்கை தொடங்கலாம் என்று பாரு விடம் சென்று தனது விருப்பத்தை சொன்னார் அதன் பிறகு இருவரும் கணவன் மனைவியாக உடல் அளவிலும் தங்களது வாழ்க்கையை தொடங்கினார்கள்…இப்படியே ஒரு மாத காலம் ஓடியது அந்த மாதத்தில் பாரு தலை குளித்தவுடன் தீரனிடம் தலை குளித்து விட்டேன் என்றார் அதனால் என்ன மா என்று கேட்டதற்கு நமக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று கேட்க ஆரம்பித்தார் …தீரனுக்கு கஷ்டமாகி போனது இவள் ஏன் இவ்வாறு எல்லாம்  பேசுகிறாள் “உடல் அளவில் கணவன் மனைவியாக வாழ்ந்த அடுத்த மாதமே குழந்தை பிறக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு இல்லையா”…”குழந்தை என்பது இறைவன் அருளால் கிடைப்பது அல்லவா” இவள் ஏன் இப்படி எண்ணிக் கொண்டிருக்கிறாள் யாரோ ஏதோ பேசுகிறார்கள் என்பதற்காக அவளையும் வருத்திக்கொண்டு என்னையும் வருந்த செய்கிறாளே என்று வருந்தினார்…பார்வதி அந்த மாதம் முழுவதும் அப்படியே தினமும் தீரனிடம் சண்டை இட்டு கொண்டு இருந்தார் தீரனுக்கு பார்வதியை இப்படி பார்க்கவும் கஷ்டமாக இருந்தது …அவரை திட்டவோ அடிக்கவோமே தோன்றவில்லை அப்படி கோவத்தில் அடித்தால் திட்டினால் கூட பிறந்த வீடு என்று சொல்லி போவதற்கு எங்கும் இல்லையே ஆசிரமத்தில் ஒன்று இரண்டு நாட்கள் தாங்க விடுவார்கள் …அதற்கு மேல் என்று  எண்ணி அஞ்சினார் பார்வதி குழந்தை வேண்டும் என்று ரொம்பவே வருந்தி உடல் மெலிந்தார் இரண்டு மாதங்கள் இப்படியே போனது அடுத்த மூன்றாவது மாதம் பார்வதி கர்ப்பமானார்…தீரன் பார்வதியை தாங்கினார் பார்வதியும் சந்தோஷமாக இருந்தார் கோவில் சென்று இருவரும் சாமிய தரிசனம் செய்துவிட்டு வந்தார்கள் இருவரும் சாமியை தரிசனம் செய்துவிட்டு வருவதை அரசி தூரத்தில் இருந்து பார்த்தார் ..இருவரும் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணினார் தான் நேசித்தவரும் தன்னுடைய உயிர்த் தோழியும் அவர்களது வாழ்க்கை சந்தோஷமாக வாழ வேண்டும் என்னுடைய காதல் தான் நிலைக்கவில்லை…அவர்களது காதலாவது நிலைக்க வேண்டும் என்று அரசி எண்ணினார் அவர்கள் இருவரும் சென்ற பிறகு கோவிலுக்கு சென்று சாமியையும் அவ்வாறு தரிசனம் செய்து விட்டு வந்தார் இப்படியே மாதங்கள் உருண்டோடியது…தீரன் ஆசிரமத்தில் வைத்து வளைகாப்பு செய்தார்  பார்வதிக்கு 9 ஆவது மாத இறுதியில் வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தார்…ஆசிரமத்தில் இருந்த பெரியவர்கள் அனைவரும் உடன் இருந்தார்கள் தீரனின் நண்பனின் வீட்டில் உள்ளவர்களும் உடன் இருந்தார்கள் “பார்வதி ஒன்பதாவது மாத இறுதியில் அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அதுதான் நம் கதையின் நாயகன் தேவமித்ரன்”…அவர் குழந்தையை பெற்றெடுத்த கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு வலிப்பு வர ஆரம்பித்தது டாக்டர்கள் அனைவரும் பதறி விட்டு குழந்தையை இன்குபேட்டரில்  வைக்க சொல்லிவிட்டு பார்வதிக்கு  மேற்கொண்டு வைத்தியம் பார்த்தார்கள் …சிறிது நேரம் கழித்து பார்வதிக்கு நன்றாக இருக்கிறது என்று வெளியில் வந்து தீரனிடம் அனைத்தையும் சொன்னார்கள் பார்வதி மனதில் அனைத்தும் போட்டு குழப்பிக் கொண்டு இருந்ததால் அவரது உடல் பின்னோக்கி சென்றது அதை தீரன் உணர்ந்துதான் இருந்தார்…முடிந்த அளவிற்கு அவரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள விரும்பினார் இப்படி நான்கு மாதங்கள் கடந்தது தேவாவிற்கு நான்கு மாதம் இருக்கும் வேலையில் பார்வதிக்கு ரொம்ப உடம்பு முடியில்லாமல் போய் அதன் தேவா பிறந்ததிலிருந்து அடிக்கடி வலிப்பு வந்து கொண்டிருந்தது …பார்வதிக்கு தீரனும் எவ்வளவு வைத்தியம் பார்த்து விட்டார் தன்னுடைய வேலையையும் விட்டு விட்டார் குழந்தையும் பார்த்துக் கொண்டு பார்வதியும் பார்க்க ஆளில்லாத காரணத்தினால் தீரன் தன் வேலையை விட்டுவிட்டு பார்வதியும் குழந்தையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார் …குழந்தை பிறந்த செய்தி கேட்டு பார்வதியை பார்க்க அரசி வந்தார் ஆனால் அங்கு பார்வதி நான் அரசியை பார்க்க வேண்டும் என்று சொன்னதற்கு தீரன் எல்லாம் உன்னுடைய நட்பால் வந்த விளைவுதான் போதும் உனக்கு நட்பு வேண்டும் என்று எண்ணி நீ இப்பொழுது வலிப்பு வந்து இருக்கிறாய் .உன்னுடைய உடல்நிலை பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது ஒரு குழந்தையும் நீ ஆசைப்பட்டது போல் பெற்றுக் கொண்டாய் “நீ ஆசைப்பட்டது போல் என்பதைவிட உனது தோழிகள் சொன்னார்கள் என்பதற்காக தான் இவ்வளவும் செய்தாய் “..இதற்கு மேல் ஏதாவது பேசினால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று திட்டி விட்டு நகர்ந்தார் அதை  பார்வதியை பார்க்க வந்த அரசி கேட்க நேரிட்டது அரசி பார்வதியையும் பார்க்காமல் தீரன் பேசிய அனைத்தும் சரிதானே யாரோ பேசினார்கள் என்று இவள் ஏன் இவளது வாழ்க்கை கெடுத்துக் கொள்ள வேண்டும்…இப்படிப்பட்ட நல்ல மனிதனுக்கு ஏன் வலி உண்டாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு குழந்தையும் பார்வதியும்  நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு அவரது வீடு நோக்கி சென்றுவிட்டார் …பார்வதியை பரிசோதித்த டாக்டர் நான்கு மாதங்களுக்கு பிறகு இதற்கு மேல் இவரது உடல்நிலை அவ்வளவாக இல்லை இனி மேல் இவரை காப்பாற்றுவது கடினம் என்றவுடன் தீரன் உடைந்து விட்டார்…தான் காதலித்து கரம் பிடித்த மனைவி யாரோ சொன்னார்கள் என்பதற்காக தன்னுடைய வாழ்க்கையை அழித்தது மட்டுமில்லாமல் இப்பொழுது பச்சிளம் குழந்தையாக இருக்கும் தேவாவை விட்டு செல்ல போகிறாள் என்று வருந்தினார்…  அப்பொழுது பார்வதி அடம் பிடிக்க செய்தார் நான் அரசியை பார்த்தாக வேண்டும் என்று தீரன் முறைத்துவிட்டு வேறு ஒருவரின் மூலமாக அரசியை வர வைத்திருந்தார் …அரிசி வந்து பார்க்கும்போது அரசியின் கைய பிடித்துக் கொண்டு நான் உனக்கு செய்த பாவமோ என்னவோ என்னுடைய நிலை இப்படி இருக்கிறது நான் இந்த உலகத்தை விட்டு செல்வதை விட என்னை நம்பி அவரது வாழ்க்கையை ஒப்படைத்த தீரனையும் என் வயிற்றில் பிறந்த தேவாவையும் இப்படியே விட்டு செல்ல எனக்கு கஷ்டமாக இருக்கிறது …நான் சென்ற பிறகு இவர்கள் இருவருக்கும் துணை என்று யாரும் இல்லை என்னை மன்னித்து விடு எனக்காக என்று கூட நான் கேட்க விரும்பவில்லை நீ காதலித்தவருக்காகவும் என்னுடைய குழந்தைக்காகவும் கொஞ்சம் யோசி …நான் இன்னும் எத்தனை நாட்கள் இருப்பேன் என்று தெரியாது எனக்காக நீ தீரனை திருமணம் செய்து கொள் என்றார் அரசி,தீரன் இருவரும் வேகமாக ஒரே வார்த்தையாக பாரு என்று கத்தினார்கள் ..பார்வதி இருவரையும் பார்த்து சிரித்து விட்டு அரசி உனக்கு இப்பொது  வரை இவரை  பிடிக்கும் என்று எனக்கு தெரியும் இப்போதும் நீ இவரை நினைத்துக் கொண்டிருக்கிறாய் இவர் உன்னுடைய முதல் காதல் அதற்காக உன்னை நான் தவறான எண்ணத்தில் இவரை நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று சொல்லவில்லை …ஆனால் உன்னுடைய காதல் உண்மை என்பதற்காகவும் என்னுடைய குழந்தைக்காகவும் இவரை திருமணம் செய்து கொள்ளலாமே இவருக்காக இல்லை என்றாலும் எனது குழந்தைக்கு ஒரு அம்மா வேண்டும் என்பதற்காகவே என்று காலில் விழ சென்றார் அரசி நகர்ந்து விட்டார்…அரசி எவ்வளவு சொல்லிப் பாரு நீ இவரை திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்றார் அரசி வேறு எதுவும் பேசாமல் சென்று விட்டார் …இப்படி ஒரு ஐந்தாறு நாட்கள் சென்றது ஆறாவது நாள் இறுதியில் பார்வதியின் உடல்நிலை ரொம்ப மோசம் ஆகிவிட்டதால் தீரனே சென்று அரசியை அழைத்துக் கொண்டு வந்தார் அதன் பிறகு பார்வதி தனது கடைசி ஆசை என்றும் எனது குழந்தைக்கு தாய் வேண்டும் நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்வது உங்களது விருப்பம் ..நீங்கள் இருவரும் என்னை மனதில் வைத்து கணவன் மனைவியாக வாழவில்லை என்றாலும் பரவாயில்லை எனக்கு பிறகு என் குழந்தைக்கு அம்மா வேண்டும் என்பதற்காகவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்..அதன் பிறகு பார்வதியின் முன்னிலையில் அரசி தீரன் திருமணம் நடந்தேறியது …தீரன் அரசியின் கழுத்தில் தாலி கட்டிய அடுத்த நொடி பார்வதியின் உடல் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகத்திற்கு சென்றது ..தேவா வீரிட்டு அழ செய்தான் தீரன் பார்வதியை கட்டிக்கொண்டு அழுதார் அரசி வேகமாக தேவாவை தூக்கிக்கொண்டு அவனை சமாதானம் செய்தார் ..அன்று முதல் தேவாவை தான் பெறாத மகனாக தூக்கி பாலூட்டி சீராட்டி வளர்க்க செய்தார் அரசி இப்படி அவனை தான் பெற்ற மகனாக வளர்த்து வந்த அரசி எப்பொழுது இப்படி கொடுமைக்கார சித்தியாக மாறினார் என்று நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..அன்புடன் ❣️தனிமையின் காதலி ❣️

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 4”

  1. அரசி நல்லது தான் செய்திருக்கா.. அப்புறம் ஏன் இப்படி சண்டைக்காரியா மாறிட்டான்னு தெரியலையே.

  2. Kalidevi

    Friend kaga arasi nallathu pani iruka apram yen ipo avanuku chithi ah mari kodumai panra . Avalukunu oru kulanthai vanthathala panranglo

  3. அரசிக்கு மனதில் முதலில் இருந்து வனமம் இருந்த இருக்கலாம் … அப்படி இல்லை என்றால் தீரனின் நடவடிக்கைனால இப்படி மாறியிருக்க வாய்ப்பு இருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *