அத்தியாயம்-11
கடை வியாபாரம் பார்த்தவனை பலசரக்கு வியாபாரம் வாங்க வந்தவர்களில் பாதிக்கு மேலாக, "என்ன அர்ஜுனே ஆரணிக்கு போகலையா. இன்னிக்கு என்ன நேத்து காய்கறியா இருக்கு." என்று மாற்றி மாற்றி கேட்க, "எக்கா, காய்கறி பெட்டி வந்துட்டு இருக்கு. நீ சமைக்கறதுக்குள்ள வந்துடும். போய் உன் புள்ளைக்கு ஆய் கழுவுற வேலையை பாரு. நாத்தம் இங்க வரை வருது" என்று விரட்டினான்.
‘மத்த நாளெல்லாம் அப்படியே காய்கறி பெட்டி வந்ததும் வாங்கிட மாதிரி பேசுது. ஆடி அசைந்து வந்து வாங்கும். இன்னிக்குன்னு வந்து ரோதனையை கிளப்புது” என்று முனங்கினான்.
கதவுக்கு மறுபுறம் சிரிக்கும் சப்தம் கேட்க, வந்த கோபத்திற்கு புருவம் உயர்த்தி புயலாய் வந்தான்.
அமிழ்தினியின் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து மெதுவாய் ஏறிடவும், “என்ன இளிப்பு?” என்றான்.
ஒன்றுமில்லை என தலையாட்ட, அதது அன்னைக்கே நாள் குறிச்சப்ப நடந்திருக்கணும். அப்படி நடந்திருந்தா இந்த பதட்டம் எனக்கு வந்தகருக்காது” என்றான்.
அமிழ்தினியோ அமைதியாக மாற, அர்ஜுன் போன் அடித்தது.
“ஏலேய் அன்மருதை கிராமத்தை தாண்டறேன். நீ விரசா ஆவணியாபுரம் மெயின் ரோடு வந்தா காய்கறி பெட்டி வாங்கிக்கோ” என்றதும், “வர்றேன் வர்றேன்” என்று சிடுசிடுத்தான்.
”அம்மா… அம்மா” என்றான்.
“அத்தை குளிக்க போயிருக்காங்க” என்றாள்.
”கொஞ்ச நேரம் கடையில உட்காரு வந்துடறேன்” என்று சட்டை மாற்றி பட்டன் போட்டான்.
“என்னங்க… ஏங்க..” என்று திணறும் முன் தலையை கோதி டிவிஎஸ் எடுத்து கிளம்பியிருந்தான்.
வேறு வழியின்றி கடைக்குள் கால் வைத்து உள்நுழைந்தாள்.
கடைக்குள் இங்கு வந்ததிலிருந்து டா கொடுக்க, கஞ்சி கொடுக்க, சர்க்கரை எடுக்க ஷேம்பு எடுக்க, கருவேப்பிலை தக்காளி என்று இத்யாதி பொருட்களை எடுக்க வந்ததுண்டு.
ஆனால் தனியாக இந்த கடைக்குள் நின்று நிதானமாக வருவது இதுவே முதல் முறை.
சிமெண்ட் தரையில் கால் பிசுபிசுவென இருந்தது. நேற்று தக்காளி பெட்டி சாய்ந்தாடு ஒன்று நசுங்கி இருந்ததில் காலை வைத்திருப்பாள் போல, முகம் மாறுதலடைந்தது.
பாதிக்கு மேலாக கோணிப்பையை தரையில் இருக்க அதில் துடைத்தாள்.
தக்காளி பிசுபிசுப்பு போனது. ஆனால் கோணிப்பையில் கால் ஊன்ற ஒரு மாதிரி இருந்தது.
அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். மளிகைக் கடை எப்படியிருக்கும் அப்படியிருந்தது. சோப்பு, ஷாம்பு, டீத்தூள் என்று சரங்கள் தொங்கியது.
பருப்பு வகைகள் டின்னில் கொட்டி மூடிப் போட்டிருந்தது. எண்ணெய் எல்லாம் ஒரு பக்கம் லூசில் டின்னில் வைத்திருந்தான். தலை சாய்த்து பார்க்க, அவளிருந்த நாற்காலி ஆட்டம் காட்டியது.
‘அம்மாடி’ என்று சுதாரித்து அமர, கால் லேசாய் ஆடியபடி இருந்தது.
கன்னத்தில் கைவைத்து வேடிக்கை பார்க்க, தேன் மிட்டாயை பாட்டில் அவளை இழுத்தது. ஆசையாய் தேன் மிட்டாய் எடுத்து சுவைத்தாள்.
மூன்றை எடுத்தவள் ஒன்றை வாயில் அதக்கினாள்.
அடுத்து சுவைக்கும் முன் கடைக்கு கூட்டம் வந்தது. ‘என்ன புதுப்பொண்ணு, அர்ஜுன் இல்லையா?’ என்று ஒரு பெண் வர, அவர் அவசரமா காய்கறி வாங்க போயிருக்கார்” என்று மட்டும் பதில் தந்தாள்.
”சீரகம் நூறும், இஞ்சி இரண்டு ரூபாய் கொடு” என்றதும் அமிழ்தினி விழித்தாள்.
அவள் திணறவும், இந்தா இருக்கு பாரு இஞ்சி.” என்று சுட்டிக்காட்ட, எடுத்து சுற்றி பார்த்து, வீட்டுக்குள் எட்டி பார்த்தாள்.
“சாரிக்கா இரண்டு ரூபாய்க்கு எவ்ளோ தரணும்? சீரகம் எங்கிருக்குன்னு தெரியலை. அத்தை குளிச்சிட்டு இருக்காங்க” என்று பதில் தந்தாள்.
அது சரி உங்க மாமியார் குளிச்சி முடிச்சி எப்ப வந்து தர்றது? நான் சமைக்க வேண்டாம்” என்று அடுத்த கடைக்கு செல்ல எட்டு வைக்க இன்னொரு கடை கஷ்டமரோ, “ஏதே நில்லும்மா.” என்று அவர்களை நிறுத்தி, “தங்கச்சி இந்தளவு தான் இரண்டு ரூபாய்கு அர்ஜுன் தருவான். அந்த டப்பால சீரகம் இருக்கும். இந்தி இருக்கு ஐம்பது கிராம் கல்லு எடுத்து வச்சி அளந்து போட்டு கொடு” என்றதும் அமிழ்தினி சேலையை தூக்கி சொறுகி அளந்து கொடுத்தாள்.
“சீரகம் எவ்ளோனு விலை தெரியாதே” என்று கூற, காசு இருக்கிறதை வாங்கிவை அப்பறம் அர்ஜுனிடம் வனஜாக்கா வாங்கிட்டு போனதா சொல்லிடு” என்று கூற சரியென்று அளந்தாள்.
நிறுத்தி கொடுக்கவும் பெற்றுக்கொள்ள, "எனக்கு இரண்டு கிலோ அரிசி மட்டும் கொடு. இந்தா அந்த மஞ்சள் வீடு. காசு அப்பறம் தர்றேன். கீதாக்கா கடன் வாங்கியிருங்குன்னு சொல்லிடு" என்றதும் திகைத்தாலும் இரண்டு கிலோ கல்லை எடுத்து வைத்து அளந்தாள்.
அமிழ்தினி எடைப்போடும் நேரம், “எங்க அர்ஜுன் நல்லா பார்த்துக்கறானா? திருவண்ணாமலைனு சொன்னாங்க. படிப்பு என்ன படிச்சிருக்க?” என்றார் அந்த முப்பதை தாண்டியவள்.
“பிளஸ் டூ முடிச்சிருக்கேன்” என்றாள்.
”ஆஹஆஹ் உன்னை பார்க்கவும் படிச்ச பிள்ளையாட்டும் இருக்கு.” என்று சென்றதும் அமிழ்தினி அங்கிருந்த சிறு கண்ணாடியில் முகத்தை கவனித்தாள்.
இந்த முகம் பிளஸ் டூ இல்லையா?’ என்று பார்த்தாள்.
அர்ஜுனோ அவளை வேற விட்டுட்டு வந்தேன். இப்ப என்ன பண்ணினறாளோ? அம்மா வந்திருப்பாங்க.’ என்று ஆவணியாபுரம் பேருந்து நிலையம் அருகே நின்றான்.
அவன் கூறிய தோழன் வந்தான்.
எப்பொழுதும் பைக்கிலேயே சென்று வாங்கிடும் அவனோ, அர்ஜுன் முன் வந்து வண்டியை நிறுத்தினான்.
“நல்லாயிருக்கியா கல்யாணமாகிடுச்சு எப்படி போகுது வாழ்க்கை?.” என்றதும் அர்ஜுன் தன் காய்கறி பெட்டி எதுவென்று எடுத்து வைத்தவன், “பத்திரிக்கை வச்சா கல்யாணத்துக்கு வரலை கேள்வியால கேட்குற” என்று பாய்ந்தான்.
“என்னடா மாப்பிள்ளை மளிகை கடை வச்சிட்டு லீவு போட முடியுதா. அன்னைக்கு பார்த்து தான் கடைக்கு வர்ற ஆளுங்க கூட்டம் வரும். நாம கடை அடைச்சிட்டா அடுத்த கடைக்காரன் வியாபாரம் பார்த்து ஆட்களை இழுத்துக்கறான். நமக்கு எங்கிருந்து லீவு எடுக்கறது” என்றதும் நிதர்சனம் அது தான் என்பதால் அர்ஜுன் தன் காய்கறி பெட்டியை எடுத்து தன் தோழன் சுரேஷை அனுப்பினான்.
‘அவளை விட்டுட்டு வந்தேன் என்ன பண்ணறாளோ அம்மா வரலையா? இன்னிக்கு என்ன கூட்டம் இப்படியிருக்கு?’ என்றவன் பார்வையில், “ப்ளீஸ் ஒருத்தர் ஒருத்தரா சொல்லுங்க.” என்று அமிழ்தினி தடுமாற்றம் திணறல் அறிந்து கடைக்குள் வந்தான்.
என்ன வேண்டும் எதுயன்று கேட்டு மடமடவெஎன பொட்டலம் மடித்து கொடுத்தான்.
இரண்டு வாடிக்கையாளர் இருக்க, "கீதாக்கா இரண்டு கிலோ அரிசி வாங்கியிருக்காங்க. ஆனா காசு தரலை. கடன் என்று உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க" என்றதும் மிளகாய் வத்தலை எடுத்து எடைப்போட்டவன், நழுவ விட்டான்.
“அறிவிருக்கா உனக்கு கடன் கேட்டா ஏன்கொடுத்த. முதல் நாளே கடன் கொடுக்குற. இனி நீ இருந்தா கடன் வாங்கிடலாம்னு அது திட்டம் போடும்.
ஆளில்லை நீங்க யாருனு தெரியாது கடனெல்லாம் அவரிடம் வாங்கிக்கோங்கனு சொல்ல தெரியாது. இது கூட தெரியாமா என்னத்த வளர்ந்தியோ” என்றதும் அமிழ்தினி கண்கள் கலங்கியது.
திட்டு வாங்காமல் வளர்ந்தவள் அல்ல அமிழ்தினி. தந்தை தாய் திட்டுவார்கள். ஆனால் இங்கு இது முதல் அனுபவம். புதுமண தம்பதிகள் இப்படி அர்ஜுன் இரண்டு பேர் எதிரே கத்தவும் கலங்கியபடி வீட்டுக்குள் நுழைந்தாள்.
“என்னம்மா அர்ஜுன் வந்துட்டான்? துவைச்சி குளிக்க லேட்டாகிடுஞ்சு. அவன் உன்னை விட்டுட்டு போவான்னு நினைக்கலை.” என்றீ இளவழகி பேச மூக்குறிந்து கிடந்தாள் அமிழ்தினி.
“அர்ஜுனே அந்த பிள்ளை அழுவுதுயா. என்ன பேசின? ஏன் அழுவுது.” என்றதும் மிளாகயை கையால் எடுத்து போட்டவன், அழுவறாளா?’ என்றவன், இருந்த இரண்டு வாடிக்கையாளரையும் அனுப்பவிட்டு, “கடையை பார்த்துக்க என்னனு கேட்கறேன்” என்று சென்றான்.
இளவழகியோ கடையில் சாமி போட்டோவை வணங்கி, “என்ன சாமி இது கல்யாணம் பண்ணகனப்பிறகாவது முகத்துல சிரிப்பு இருக்கும்னு பார்த்தா அதே தாடி வச்சிட்டு திரியறான் சிரிக்கறானா? முறைக்கறானா தெரியலையே? என்று கவலையாக இருந்தார்.
அமிழ்தினி கண்ணீரை துடைத்தபடி அவனை ஏறிட, அர்ஜுனோ “இப்ப என்ன சொல்லிட்டேன். பொசுக்குன்னு அழற. யார் கேட்டாலும் கடன் கொடீத்திடுவியானு மெதுவா அதட்டினேன்.” என்றவன் அவளருகே வர, கண்மை கண்கள் கண்ணீரால் நனைந்து களைந்து, கலைந்தோவியமான முகத்தோடு நின்றாள்.
அவளை கண்டு "இதுக்கெல்லாம அழறது" என்று கண்ணீரை துடைத்தான் அவளது கண்ணீர் உதட்டருகே வந்து நின்றிட அதை துடைத்தான்.
அடுத்த நொடி, அய்யோ கண்எரியுது. ஆஹ்.. உதடு எரியுது” என்று முகத்தை அங்கும் இங்கும் திருப்பினாள். கூடுதலாக மிளகாய் பொடி வேறு தும்பலை தந்தது.
தன் கையில் மிளகாய் எடுத்து போட்டது நினைவு வர, “இந்தா கத்தாத. அம்மா என்னவோ அடிச்சிட்டேன்னு வந்துடும். நான் என்னவோ முரடன்னு ஊர் உலகத்துல சொல்லிடுவாங்க.” என்று அமைதி காக்கா வேண்டினான்.
அவ்ளோ அய்யோ காரமா இருக்கு. கண்எரியுது” என்று கத்த, கதவை சாற்றி அவளை முற்றுகையிட்டு முத்தமிட்டான்.
இதழ் அவனிடம் வசமாய் சிக்கி கொள்ள, கண்கள் எரிந்தாலும் அவனே தான் படபடத்து ஏறிட்டாள். இருட்டில் அவன் செய்த விளையாட்டெல்லாம் முகம் கருத்து இருக்க பாராதவள், தற்போது தன்னேயே விழுங்கி இதழை கொய்பவனை அரண்டு நின்று வெறித்தாள்.
-தொடரும்.
_பிரவீணா தங்கராஜ்.

Super super super super super super super super super super super super 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Ai na tha 1st ahh… Spruuuu
Waiting for nxt ud sis😍😍😍😍😍
Adapaavi dei unaku manasatchi iruka da avalukku kadaila endha porul enna vilai nu epadi theriyum ne Edhum sollama avala pudichi thitituruka….yen da dei milakaya eduthutu kaiya kazhuvama poi kanna thodachi adventure pannitu iruka😂😂….dei Arjun ne panra adventure enakae vekka vekkama 🙈🙈varudhu da
Nice
Super sis
அருமை. அருமை
மளிகை கடைக்காரர்களின் வாழ்வியல் எதார்த்தத்தை உணர முடிந்தது அவர்கள் பக்கத்து மளிகை கடைக்காரர்கள் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆகியவர்களோடு போட்டி போட்டு அவர்களுடைய வாழ்வாதாரத்தின் நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள் தங்களது வாழ்வின் சின்ன சின்ன சந்தோசங்களை கூட விட்டுக் கொடுத்து வியாபாரம் செய்ய வேண்டி உள்ளது
அமிழ்தினியும் கூடிய விரைவில் முழு மளிகை கிடைக்காத ஓனரம்மாவாக மாறிவிடுவாள்
Super sis semma epi 👍👌😍 ada paavi milagai kaiya vechi eppdi andha pillaiya azha vidriye da unaku eppo anba pazhaga varumo kadavuley 🙄
நல்லா வருவடா
Ssuper super
Super
அடேய் கண்ணு எரியுதுன்னு அந்த புள்ள கண்ண கசக்குனா நீ என்னடா நா உதடுக்கு மருந்து போடுறியே .
உங்க அம்மா வேற வெளில புலம்பிட்டு கிடக்காங்க
Wow super. Intresting sis.
Super super parrda arjun kovama kathitu pinnadiye vanthu samadhanam panra romance panra but konjam face ah mathu pa ellam athiradiya iruke
Arjun ithu enna da thititu samadhanam panra nu ipadi molaga aaruthal ah solli tu ippo aduthu romance mode ah adei andha ponnu unna parthu ore nall la meranduda pora da
Very nice epi sis😀
அட பரவாயில்லையே….! புதரு மூஞ்சிக்காரனுக்கு ரொமான்ஸ் பண்ண கூட தெரியுதே….!
Ipti thaan thittu , vatham ellam varum 🤦 yanga vittuliym kadai than nanga chinnatha irrukum poothu Yan Amma pavam kadaikum vittukum, nadula nadula yangalium kilapi vittu school ku cook pani ……😤😤😤😤😤😤😤😤😤 Aladiruvanga ., apti irrunthum Market poittu vantha appa ta yathukkathu thittu vanguvanga 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
Maligai kadai , hotel kadai karanga polpu lam ipti thaan 😤😤😤😤😤😤😤😤😤😤
🫂🫂
Dai. … Ennada thitura ….paavam… Nee 👊👊👊👊
Super
சூப்பர். .. அடபாவிகளா மிளகாய் காரத்த கண்ணுல போட்டு ரொமான்ஸ் பண்ற
sema
Super super
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமையான பதிவு