Skip to content
Home » என் வாசம் நீ உன் சுவாசம் நான் -7

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -7

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

மறு நாள் காலை ஆபிஸிற்கு வந்ததுமே மகேஷ் ஆரம்பித்து விட்டான். “ஹாய் சந்து ! என்ன இன்னிக்கு சுடில வந்துருக்க ? நீ ஸாரிலயே வா ! அதுதான் உனக்குச் சூட் ஆகுது” அவனை முறைத்தவள் தன் வேலையைத் தொடங்கினாள். இது எப்போதுமே நடப்பதுதான். ஏன் இந்தக் கலர்? அந்தக் கலர் போட்டுக்கோ. ஏன் பூ வச்சுக்கலை ? இப்படி சொல்லிக் கொண்டிருந்தவன், இவளின் பிள்ளைபற்றித் தெரிந்ததும், ” ஒரு நாளைக்கு எவ்ளோ வாங்கற? நாள் ரேட்டா இல்ல மணி கணக்கா? முதல் சான்ஸ் எனக்குக் குடுத்துருக்கலாமே ? *********** இப்படி எல்லாம் பேச ஆரம்பித்தான். முதலில் ஸ்ரீதருடன் இணைத்துப் பேச ஆரம்பித்தவன் பிறகு பார்ப்பவர்கள் எல்லோருடனும் இணைத்துப் பேசினான். சிறிது நேரம் கழித்து, “மகேஷ்! விசு சாரோட ப்ரிட்ஜ் வேல செய்யலன்னு சொன்னாரே அத பார்த்துடீங்களா ?” “யாரு சினிமா நடிகர் வீட்டுலையா ? எனக்குத் தெரியாதே ?” நக்கலாகப் பதில் சொன்னான். “ம் !அவரைப் பத்தி எனக்கென்ன ? நான் சொன்னது வளசரவாக்கம் விஸ்வநாதன் சார். நம்மளோட பெரிய டீலர் ” “ப்ச்! அவரைத்தான் நீ செல்லம்மா விசுன்னு சொன்னியா ? ஆமா!ஆமா! பெரிய ஆள்தான். அதனாலதானே செல்லமா சொல்லற” “மகேஷ் அனாவசியமா பேசாதீங்க. அவரோட கம்ப்ளைண்ட் பார்த்தீங்களா? பாக்கலியா ? ” கோபமாகக் கத்தினாள். “அது என் விஷயம். அத நான் பார்த்துக்கறேன். உன் வேலைய மட்டும் நீ பாரு. அதான் உனக்கு ஆபிஸ் விஷயத்தைத் தவிரவும் நிறையா வெளி வேலையும் இருக்குமே? “இரட்டை அர்த்தத்தில் பேசினான். மதியம் உணவு இடைவேளையில், அவளுக்கு மிக அருகில் நின்று கழுத்தில் வாசம் பிடித்தான். “சீ ! அருவருப்பாய் அவனைத் தள்ளி விட்டாள். இதுவே புது பாஸுன்னா தள்ளி விட மாட்ட. பணக்காரன். பாக்க வேற நல்லா இருக்கான். ஆமா ! அவனுக்கும் விசுவுக்கும் ஒரே ரேட்டா ?” என்னதான் ஒதுங்கி ஒதுங்கிப் போனாலும் சிலரின் வார்த்தைகள் நம்மை வேதனைப் படுத்தத்தான் செய்கிறது. அப்போது அங்கு ஆயா வந்து விட்டாள். “சீ ! புள்ள தாச்சி பொண்ணுகிட்ட பேசற பேச்சா இது ? போடா அந்தப்பக்கம். உங்க வீட்டு பொண்ண இருந்தா இப்படி பேசுவியா ?” “ச!ச! எங்க வீட்டுல இருக்கற பொண்ணுங்க ஒழுக்கமான பொண்ணுங்க. அவங்கள இதுக் கூட நினைக்கவே அருவருப்பா இருக்கு”. “அப்ப எதுக்கு இவகிட்ட வர்ற ?” ஆயாவும் விடவில்லை. “ம்ம் காசு குடுத்து*********போகறதில்ல ? “அவங்ககிட்ட போற ஆம்பளைங்களுக்கும் அதுதாண்டா பேரு.போடா ராஸ்கல்” அவனை ஆயா திட்டி விரட்டினாள். அவனின் கூர் வார்த்தைகள் அவளின் மனதை குத்திக் கிழித்தது. அவளைப் பற்றி இத்தனை அசிங்கமாகப் பேசும் அவனா அவளின் கஷ்டங்களைச் சரி செய்வான்? யாரும் மற்றவர்களுக்கு எந்த உதவியும் செய்யப் போவதும் இல்லை. பொறுப்புகளை ஏற்கப் போவதும் இல்லை. பிறகு எதற்கு மற்றவர்களின் சொந்த விஷயத்தில் தலையிடுகிறார்கள்? மனம் வலித்தது. அவளுக்குத் தொண்டைக் குழியில் உணவு இறங்க மறுத்தது. எதைப்பற்றியுமே தெரியாத சூர்யா முக்கியமான ஆர்டிகிள் ஒன்றைப் படித்துக் கொண்டே மதிய உணவை உண்டு முடித்திருந்தான்(அப்படியா) “ஏன் தாயி! உனக்காக இல்லனாலும் குழந்தைக்காகவாவது நீ சாப்பிட வேணாமா?” ஆயா எத்தனையோ சொல்லியும் கெஞ்சியும் பார்த்தாள். “ம் ம்! முடியாது” என்றுவிட்டாள். “சரி! நீ சாப்பிட்டாதான் நான் சாப்பிடுவேன்” என்று இறுதியில் அவள் மிரட்டியதற்காகச் சிறிது உண்டாள். இவளைப் பார்த்த ஆயாவுக்கு மனம் பிசைந்தது. இந்தக் குழந்தை பிறப்பிற்குப் பிறகு இந்த வேலையை விட்டு விடலாம் என்றுதான் சந்திரா நினைத்திருந்தாள். ஸ்ரீதருக்கு அவள் நிலைமை புரிந்திருந்தது. அதனால் எட்டு மாதத்திற்குப் பிறகு விடுமுறை எடுத்துக்கொள். பிறகு உன்னை வேறு இடத்திற்கு மாற்றிக் கொடுக்கிறேன் என்று கூறி இருந்தான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஒரு புறம் மகேஷ் என்றால் இன்னொரு புறம் ராகவின் தொல்லையும் அதிகரித்துக் கொண்டே சென்றது. அதன் முடிவை யார் ஏற்கப் போகிறார்கள்? எந்த விஷயத்தை நினைத்துச் சந்திரா பயந்திருந்தாளோ அது அன்றே வந்துவிட்டது. ஆம்!விஸ்வநாதன் சார் வந்தே விட்டார் கோபக் கனலோடு. அவர் சந்திராவைதான் தேடி வந்தார். அவர் இவர்களுடன் தொழில் செய்ய ஆரம்பித்தபோது சந்திராதான் அனைத்தையும் பார்த்துக் கொண்டாள். அப்போது ஸ்ரீதருக்கு அவள்தான் வலக்கையாகவும் இருந்தாள். அவளுக்குத் தெரியாமல் அலுவகத்தில் எதுவும் இருந்ததில்லை. “என்னம்மா! உங்களுக்கு எங்க நினைவெல்லாம் இருக்கா ?” “வாங்க ஸார்! வாங்க! ” என்று அழைத்தவளின் மேலிட்ட வயிற்றை பார்த்தவர், தனது கோபத்தை எல்லாம் அடக்கிக் கொண்டார். “உங்கள எல்லாம் மறக்க முடியுமா சார். உங்களோட 4 ப்ரிட்ஜ் சரியாய் இல்லன்னு சொன்னீங்களே அத சரி பண்ணிட்டாங்களா சார் ” அவருக்குச் சந்திராவிடம் பிடித்ததே, அவள் எதுவாக இருந்தாலும் நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவாள். “என்னம்மா! ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கற? ” மகேஷ் தன்னிடம் திமிராகப் பேசினாலும் வேலையைச் சரியாகச் செய்து விடுவான் என்றுதான் சந்திரா நினைத்தாள். அவனோ வேண்டும் என்றே வேலையைச் செய்யாமல் இருந்தான். அப்போதுதானே சந்திராவையும் சூர்யாவையும் ஒரே நேரத்தில் அவமானப் படுத்த முடியும்? எதற்கு ? லிப்டில் சந்திராவும் சூர்யாவும் ஒன்று சேர்ந்து வந்த நாள்…… சந்திரா சூர்யாவின் கையை வெளியில் வந்தபோதுதான் விட்டாள். அதைப் பார்த்தவன் மகேஷ். சந்திராவை சூர்யா பார்த்துக் கொண்டு நின்றிருந்ததையும் பார்த்துக்கொண்டிருந்தான். அலுவல் விஷயமாகச் சூர்யாவை மகேஷ் பார்க்கச் சென்றபோது, சந்திராவை இதை முடிக்கச் சொல்லிடுங்க என்றான் சூர்யா. உடனே அதை மாற்றி,

“இல்ல! அவங்களுக்கு நிறைய ப்ரெஷர் குடுக்க வேணாம். நீங்க வீணாகிட்ட இதை முடிக்கச் சொல்லிடுங்க” என்றான். “சார்! நீங்கப் பாவ படர அளவுக்கெல்லாம் அவ ஒர்த் இல்ல சார். அந்தக் குழந்தையே கூட இல்லீகல் ரிலேஷன் ஷிப்ல வந்ததுதான்” சந்திராவை பழி வாங்க என்று அவன் நினைத்துச் சொன்னான். “ஷட் அப்! மகேஷ். உங்களுக்கு அவங்கள பத்தி என்ன தெரியும்? ஏன் நீங்க அந்தக் குழந்தைக்கு இனிஷியல் தரப் போறீங்களா ?” சுருக்கெனக் கேள்வி வந்தது சூர்யாவிடமிருந்து. “போங்க! போய் ஆபிஸ் வேலைய மட்டும் பாருங்க” அதோடு நிற்கவில்லை சூர்யா. “ஆ! மகேஷ் அடுத்தவங்க வீட்டு ஜன்னல்ல நான் எட்டிப் பாக்க மாட்டேன். நீங்க எப்படி ? ” பொறுமையாக நிதானமாக அசிங்கப் படுத்தினான். ஒன்றும் தெரியாதவன் போல விசு சார் இருந்த இடத்திற்கு வந்தான் மகேஷ். “என்னப்பா மகேஷ்! நா யாருன்னு தெரியுதா ?” “ஓ! விசு சார் என்ன சார் எப்படி இருக்கீங்க ? என்ன சார் இந்தப் பக்கம்?” மகேஷை பார்த்துப் பல்லைக் கடித்து முறைத்தாள் சந்திரா. “நீ பேசறதை பார்த்தா உனக்கு என்னோட ப்ரிட்ஜ் ரிபேர் ஆனதே தெரியாது போல இருக்கே?” “எத்தனை பிரிட்ஜ் சார். உடனே ஆள் அனுப்பறேன். கம்பளைண்ட் குடுத்துருக்கீங்களா ? பாருங்க சார் ரெண்டு நாள் நான் ஆஃபீஸுல இல்ல. யாரும் எதையும் சரியா பண்ண மாட்டேங்கறாங்க. ஸ்ரீதர் சாரும் இல்லையா. எல்லாமே நாந்தான் பாக்க வேண்டி இருக்கு”. ஒன்றுமே இல்லாமல் கெத்து காட்டினான். அதற்குள் சத்தம் கேட்டுச் சூர்யா வெளியில் வந்தான். “தம்பி யாரு?”அதிகாரமாகக் கேட்டார் விஸ்வநாதன். “நான்தான் இந்தக் கம்பனியோட புது MD சூர்யா. நீங்க ?” “ஓ! ஸ்ரீதர் இல்லையா? தல சரியா இருந்தாத்தானே மத்ததெல்லாம் சரியா இருக்கும். என்னம்மா சந்திரா ?” பயத்தில் அவளுக்கு உதடு நடுங்கியது. அதே சமயம், சூர்யாவை தப்பாகப் பேசுவதையும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “சார்! நீங்கப் பொறுமையா இருங்க. நான் பார்த்துப் பண்ணித்தரேன்.” “என்ன பொறுமையா இருக்கணும்? 4 ப்ரிட்ஜ் ரிபைர். அதுவும் ஒரு வாரமா! ஒரே ப்ராஞ்சுல. ஒரு நாளைக்கு நஷ்டம் எவ்ளோ தெரியுமா ?இங்க பாரு சந்திரா!ஸ்ரீதரோட அப்பாவுக்காகத்தான் நான் இதை ஆரம்பிச்சது. இப்போ ஸ்ரீதர் இல்லனா எனக்கு உங்க பிஸினஸே தேவை இல்ல. ஒழுங்கு மரியாதையா எனக்கு ஒடனே சரி பண்ணி குடுக்கற வழியா பாருங்க. இல்லன்னா நடக்கறதே வேற”கராறாய் பேசினார். “நான் கொஞ்சம் பேசலாமா ? மிஸ்டர் விஸ்வநாதன்”, மிடுக்காய், அமைதியாய், சூர்யா பேசிய விதத்தில் அவன்மீது அவருக்கு ஒரு வித மரியாதையை தந்தது. “சொல்லுங்க!” “உங்களோட பிரச்னை உனக்குப் புரியுது. நாளைக்கே உங்களுக்கு அந்த நாலுத்தையும் மாத்தி புதுசாவே ரீபிலேஸ் பண்ணிடுவாங்க. ஓகே ! ” மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்தவர்.

“சரி!பார்த்துப் பண்ணுங்க”சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார். போகும்போது சந்திராவிடமும்,

“உடம்ப பாத்துக்க சந்திரா”என்று கூறி விட்டுத்தான் சென்றார். அவர் சென்றதும், மகேஷை உள்ளே அழைத்தவன், மகேஷ் நீங்க வேலைய விட்டுட்டு போகலாம். “சார் என்ன தப்பு பண்ணேன்?” “உங்களால கம்பனிக்கு நஷ்டம். இன்னும் நீங்கச் சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகல. உங்களால் பெரிய டீலர்ஷிப் கை விட்டுப் போய் இருக்கும். நல்ல வேளை நானும் சந்திராவும் எப்படியோ சமாளிச்சுட்டோம். உங்களால எனக்கும் கம்பனிக்கும் அசிங்கம். இதைத் தவிர வேற என்ன? அதே மாதிரிஅந்த நஷ்டத்தை நீங்கதான் குடுக்கணும்” “சார்! அந்த விசுவோட விஷயத்தைப் பாக்கறதே சந்திராதான். அவங்கதான் எங்கிட்ட சொல்லவே இல்ல.அதுக்கு நீங்க அவங்களைத்தானே வேலைய விட்டுத் தூக்கணும்? “

சூர்யாவுக்கே தொழில் கற்றுக் கொடுத்தான். “நீங்க உங்க சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்தையும் இவங்ககிட்ட குடுத்துட்டு போகலாம்” மகேஷ் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் வீணாவை அழைத்திருந்தான். மேற்கொண்டு பேச எதுவும் இல்லை என்பது போல அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கினான் சூர்யா. வீணா வருவதற்குள் இவன் கெஞ்சத் தொடங்கி இருந்தான். “இவருக்கு மூணு மாசத்துக்கு சஸ்பென்ஷன் லெட்டர் ரெடி பண்ணிட்டு இவர்கிட்ர்ந்து எல்லா டீடைல்ஸையும் வாங்கிக்கோங்க” அவன் குரலே மகேசுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்லிற்று. ஒரு வழியாக மகேஷின் தொந்தரவும் தற்சமயத்துக்கு சந்திராவுக்கு இருக்காது. ‘வேலை போகாமல் மூன்று மாதங்களுடன் போயிற்றே என்று மகேஷ் நினைத்தான்’ அவன் செல்லுமுன் சந்திரா, “என்னை அசிங்கப் படுத்த நினச்சியே ? நீ வேல பாக்கற எடத்துக்கு நம்பிக்கையா இருக்கனுன்னு நினைச்சியா ?” மூச்சை இழுத்து விட்டவள், “உன்கிட்ட ஒண்ணே ஒன்னும் மட்டும் சொல்லணும் மகேஷ், தயவுசெய்து எந்தப்பெண்ணையும் பார்வையால, வார்த்தையால வாழ் நாள்ல நோகடிக்காத. தப்பான தொழிளுக்கு யாரும் விரும்பிப் போகறதில்ல. ஒவ்வொருத்தருக்கும் எத்தனையோ மோசமான பின்னணி இருக்கும் தெரியுமா? அவங்களும் நல்லவங்கதான். அவங்களுக்கும் இந்த உலகத்துல வாழ உரிமை இருக்கு” கைக்கூப்பி நின்றவளை பார்த்தவனுக்கு செம்மட்டியால் தலையில் அடித்தது போல இருந்தது. வேகமாகத் தன் இருப்பிடத்திற்குச் சென்றவன், ராஜினாமா எழுதிக் கொடுத்துவிட்டான். சூர்யாவும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டான். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவன் மறுபடியும் வந்து வேலை செய்து கொடுத்துவிட்டு நோட்டீஸ் பீரியடை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன். சந்திரா மகேஷைப் பற்றி விசாரிக்கச் சூர்யாவின் அறைக்குச் சென்றாள். சூர்யா என்ன சொல்லி இருப்பான். யோசியுங்கள் மக்களே ! பூக்கள் பூக்கும்………

6 thoughts on “என் வாசம் நீ உன் சுவாசம் நான் -7”

  1. Kalidevi

    Oru ponna pathi thappa pesa easy ah varuthu athe thrupi ethum thappa ninaikatha life la ena nadanthuchonu sonna mukku mela kovam varum intha aambalaingaluku

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *